திருமணப் பரிசு வேண்டாம்; ஆனால்?' - ரன்வீர், தீபிகா ஜோடி விநோத வேண்டுகோள்
ரன்வீர் சிங்- தீபிகா படுகோனுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், `திருமணத்துக்கு வருபவர்கள் பரிசு கொண்டு வரவேண்டாம்' என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர் இந்தக் காதல் ஜோடிகள்.
பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுதொடர்பான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உட்பட பல படங்களில் இவர்கள் இணைந்து நடித்த இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் தங்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி கடந்த மாதம் தங்கள் திருமணப் பத்திரிகையை வெளியிட்டனர். காதலிப்பதைக்கூட உறுதிப்படுத்தாத இவர்கள் திடீரென திருமணப் பத்திரிகையை வெளியிட்டது அவர்களின் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த நிலையில், நாளை இத்தாலியில் திருமணமும் வரும் 28-ம் தேதி மும்பையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கிடையே தங்கள் திருமணத்துக்கு வருபவர்களுக்கு ஓர் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, ‘தங்கள் திருமணத்துக்கு வருபவர்கள் பரிசுப் பொருள்கள் எதுவும் கொண்டு வரவேண்டாம். அப்படி ஏதாவது கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தீபிகா நடத்திவரும் அறக்கட்டளைக்கு உதவித் தொகை வழங்குங்கள்’ எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.