Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript சினிமா செய்திகள் | SudhaRaviNovels

சினிமா செய்திகள்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
இங்கு சினிமா செய்திகளை நமக்காக பதிவிடுவாங்க செல்வி பாண்டியன் அவர்கள்.
 
  • Like
Reactions: selvipandiyan

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
`என் சப்போர்ட் மகனுக்கா... மருமகளுக்கானு தெரியணுமா?’’ நடிகை பூர்ணிமா பாக்யராஜ்
இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது."



பிரபல நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சின்னத்திரை பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சன் டிவி `கண்மணி' சீரியலில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தன் நடிப்பு, குடும்ப பர்சனல் விஷயங்களை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
``முதல்முறையாக சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறீங்க. இது, எப்படி அமைந்தது?"
``கல்யாணத்துக்குப் பிறகு 29 வருஷம் நடிக்கவேயில்லை. பிறகு, கடந்த அஞ்சு வருஷமா செலக்டிவா நடிச்சுகிட்டு இருக்கிறேன். சின்னத்திரை வாய்ப்புகள் நிறைய வந்தாலும், இப்போதான் அதற்கான சூழல் அமைந்திருக்கு. நல்ல கதை, என் ஃப்ரெண்டு சுஜாதாவின் தயாரிப்பு, சன் டிவினு நிறைய விஷயங்கள் ஒருசேர அமைஞ்சதால, `கண்மணி' சீரியல்ல நடிக்க ஒப்புக்கிட்டேன். இந்தப் பயணம் நல்லா போயிட்டு இருக்கு".



``நடிப்புக்குப் பெரிய இடைவெளி கொடுக்க என்ன காரணம்?"
``1980-களில் ரொம்ப பிஸியா நடிச்சுக்கிட்டு இருந்தப்பயே கல்யாணம் பண்ணிட்டேன். கணவர் சினிமா துறையிலதான் இருக்கார் என்பதால, எனக்கு அப்போ நடிக்காம இருக்கோமேனு வருத்தம் வரலை. குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன். அப்போ நான் மிஸ் பண்ணின நிறைய படங்கள், பெரிய ஹிட்டாச்சு. பையனும் பெரியவனாகிட்டான்; கமிட்மென்ட் அதிகம் இல்லை என்பதால, பிடித்த கேரக்டர்கள்ல நடிக்கலாம்னு முடிவெடுத்தேன். 29 வருட இடைவெளிக்குப் பிறகு, 2013-ம் வருஷம் `ஆதலால் காதல் செய்வீர்' படத்துல நடிச்சேன். சில மாதங்களுக்கு முன் வெளியான `மோகினி' படத்தில் நடிச்சேன். இப்போ ஜோதிகாவுடன் ஒரு படம் உட்பட சில படங்களில் நடிக்கவிருக்கிறேன். முன்பு, ஃபேஷன் டிசைனிங் பிசினஸ் பண்ணிட்டிருந்தேன். இப்போ பிசினஸ்லேருந்து விலகிட்டேன். ஃபேஷன் டிசைனிங் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, எங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருக்கு மட்டும் செலக்டிவா டிசைனிங் செய்துகொடுக்கிறேன்".
`மகனும், மருமகளும் டான்ஸர். உங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பாங்களா?"

``1980-களில், டான்ஸ்ல அதிக ஆர்வத்துடன் இருந்தேன். பிறகு, டான்ஸ்ல டச் இல்லாம போச்சு. பையன் சாந்தனு மற்றும் மருமகள் கீர்த்தி ரெண்டு பேரும் சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அவங்கதான் நான் தொடர்ந்து நடிக்க உத்வேகப்படுத்துறாங்க. கீர்த்தி, புது டான்ஸ் இன்ஸ்டிட்யூட்டை விஜயதசமியின்போது தொடங்கினாங்க. அப்போ நான், குஷ்பு உள்ளிட்ட ஃப்ரெண்ட்ஸ் பலரும் அந்த இன்ஸ்டிட்யூட்ல, `சின்ன மச்சான்' பாட்டுக்கு டான்ஸ் ஆடினோம். அந்த வீடியோ வைரல் ஆச்சு. ரொம்ப நாள் கழிச்சு, நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினது மகிழ்ச்சியா இருந்துச்சு. ஓய்வுநேரம் கிடைச்சா, நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன். குறிப்பா, `உனக்கு எதுக்குமா டான்ஸ்?'னு பையன் விளையாட்டா சொல்ல வாய்ப்பிருக்கு. அதனால, மருமகள் கீர்த்திகிட்ட நிச்சயம் டான்ஸ் கத்துப்பேன்".






``நீங்க வீட்டில் எப்படி, மகன் மற்றும் மருமகளில் யாருக்கு அதிகம் சப்போர்ட் பண்ணுவீங்க?"

``வீட்டில் பொறுப்பான இல்லத்தரசி. மருமகள் கீர்த்தி, என் மகள்போல. டிரஸ் உட்பட, இந்தக் காலத்துக்கு ஏற்ப புது ட்ரெண்ட்டான விஷயங்களைக் கீர்த்திதான் எனக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. கணவர், நான், மகன், மருமகள்னு நாங்க நால்வரும் ஃப்ரெண்ட்ஸ் போலவே பழகுவோம். மகன் மற்றும் மருமகள் ரெண்டு பேரிடமும் எந்த விஷயத்தையும் நாங்க வலியுறுத்த மாட்டோம். அவங்களோட நல்ல பயணத்துக்கு, ஆலோசனை கொடுப்போம்; தப்பு யார் செஞ்சாலும் கண்டிப்போம். இருவருக்கும் ஒரேவிதமான பாசத்தைத்தான் நானும் என் கணவரும் காட்டுவோம்".

``நட்சத்திரத் தம்பதியாக இருக்கும் திருமண பந்தம் பற்றி..."

``இது பலருக்கும் அமையாத மகிழ்ச்சி தருணம். என் கணவருக்கும் எனக்கும் புரிதல் அதிகம் உண்டு. அதனால 34 ஆண்டுகளாக தம்பதியாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். தன் சினிமா பணிகள் பத்தி அவ்வப்போது எங்கிட்ட ஷேர் பண்ணுவார். மத்தபடி அவரின் சினிமா வேலைகள்ல நான் தொந்தரவு செய்ய மாட்டேன்".



``சமீபத்தில் நடந்த 80' s யூனியன் சந்திப்பு பற்றி..."

``1980-களில் நாங்க எல்லோரும் பிஸியா நடிச்சுகிட்டு இருந்தோம். பிறகு கல்யாணம், குடும்பம்னு எல்லோரும் கமிட்டாகிட்டோம். இப்போ, எங்க நட்பு பலமாகியிருக்கு. ஆண்டுதோறும் ஒருநாள் மீட் பண்ணி, அன்பைப் பரிமாறிக்கிறோம். அந்த நாளுக்காக ஆவலோடு காத்திட்டு இருப்போம். இந்த வருடச் சந்திப்பு, கடந்த நவம்பர் 10-ம் தேதி, சென்னையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடந்துச்சு. நானும் என் கணவரும் கலந்துகிட்டோம்; நண்பர்கள் பலரும் கலந்துகிட்டாங்க. சந்தோஷம், நெகிழ்ச்சினு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அடுத்த வருடச் சந்திப்புக்காக இப்போதே எதிர்பார்ப்பு கூடிவிட்டது".
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
இரவு 12 மணிக்குத்தான் உற்சாகத்துடன் பாடுவேன்!" - நினைவுகள் பகிரும் பி.சுசீலா
ந்திய இசையுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, தன் 84-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். நாள்முழுவதும் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தவர், அந்த மகிழ்ச்சித் தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

``ஒவ்வொரு வருஷமும் என் பிறந்த நாளை எளிமையாகத்தான் கொண்டாடுவேன். ஆனால், நேற்று முழுவதும் நேரிலும், போன் வாயிலாகவும் ஏராளமான ரசிகர்கள், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ரசிகர்களின் ஏற்பாட்டால், என் வீட்டில் கேக் வெட்டினேன். எனக்காக ரசிகர்கள் வாங்கிவந்த கேக்கை வெட்டி, அவர்களோடு சாப்பிடும்போது தனி சந்தோஷம்தான் இல்லையா. ரசிகர்கள் என் பாடல்களைப் பாடி என்னை உற்சாகப்படுத்தினார்கள். நானும் அவர்களை மகிழ்விக்கப் பாடினேன். இப்படி நேற்றைய என் பிறந்தநாள் மறக்க முடியாத மகிழ்ச்சித் தருணமாக அமைந்தது.



குறிப்பாக, நேற்று ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, என் இளமைக்காலத்தில் பரபரப்பாகப் பாடிக்கொண்டிருந்த தருணங்களை நினைவுகூர்ந்தேன். 1960, 70-களில் பல மொழிகளில் பாடிக்கொண்டிருந்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிகம் பாடினேன். அதனால், இந்தி உட்படப் பல மொழிகளின் பெரிய இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாட நேரமில்லாமல் போய்விடும். அதனால், அவர்களின் செல்லக்கோபத்துக்கு ஆளாவேன். அந்தக் காலங்களில் பகலில் தொடங்கும் பாடல் ரெக்கார்டிங் விடியற்காலைவரைக்கூட நடக்கும். பெரும்பாலும் இரவு 12 மணியளவில்தான் என் குரல் நல்ல இனிமைத்தன்மைக்கு வரும். அப்போது மிகுந்த உற்சாகத்துடன் பாடுவேன். அதனால், மிகக்கடினமான பாடல்களை அப்போதுதான் பதிவுசெய்வார்கள். பிறகு, வீட்டுக்கு வந்து சில மணிநேரம்தான் தூங்குவேன். காலையில் எழுந்து மீண்டும் வேறு இசையமைப்பாளருக்குப் பாடுவதற்கு கிளம்பிவிடுவேன். காரில் பயணித்தபடியேதான் பெரும்பாலும் சாப்பிடுவேன். இப்படியே என் இசை வாழ்விலும், அதனுடன் இணைந்த தனிப்பட்ட வாழ்விலும் இவ்வளவு தூரம் பயணித்துவிட்டேன். இசை மற்றும் என் குடும்பம் தவிர வேறு எதிலும் நான் பெரிதாகக் கவனம் செலுத்தவேயில்லை. தற்போதைய ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கிறேன்" என்று புன்னகைக்கிறார், பி.சுசீலா.

1542284241829.png
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சர்வம் தாள மயத்துக்கு பாலா கொடுத்த ஷாக்... மறக்க முடியலை!’’ - ராஜீவ் மேனன்




``பொதுவாகவே ஒரு மியூசிகல் படம்னா, அந்தப் படத்தில் ஒரு இசைப் போட்டி நடக்கும் அதில் கதா நாயகன் எப்படி வின் பண்றான் என்பதுதான் படமாக இருக்கும். ஆனால், `சர்வம் தாள மயம்’ படத்தில் கர்னாடக இசையில் ஆர்வம் இருக்கிற, அதைக் கத்துக்கணும்னு நினைக்கிற பையன், எப்படித் தடைகளைத் தாண்டி கத்துக்கிறான் என்கிற டிராவலைச் சொல்லியிருக்கிறோம்...’’ என உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன்.
``இந்தப் படத்துக்கு முன்னாடியே இதே கதையை வைத்து ஒரு டாக்குமென்ட்ரி எடுத்தோம். இந்த டாக்குமென்ட்ரி நல்லா வந்ததுனால இதைப் படமாக எடுக்கலாம்னு முடிவு பண்ணினோம். ஏ.ஆர்.ரஹ்மானும் நாங்க எடுத்த டாக்குமென்ட்ரியைப் பார்த்துட்டு, `இதை நான் பண்ணியே ஆகணும்’னு எமோஷனலாய் கனெக்ட்டாகிதான் படத்துக்குள்ள வந்தார். நானும் ஏ.ஆரும் சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பர்கள். நான் அவர்கிட்ட ஜாஸ் மியூசிக் கத்துக்கிட்டேன்; அவர் எங்க வீட்டுல கர்னாட்டிக் கத்துக்கிட்டார். இப்படி எங்க டிராவல்ல நடந்த சில விஷயங்களும் இந்தப் படத்தில் இருக்கும்.’’



ஒரு மியூசிகல் படம் பண்றதில் என்னென்ன சிக்கல்கள் இருந்துச்சு..?
``இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் எழுதுறது ரொம்ப ஈசியா இருந்தது. ஆனால், அதைப் படமாக்குறதுக்கு நிறைய சிரமங்கள் இருந்துச்சு. இந்தப் படம் முழுக்கவே லைவ் சவுண்டு ரெக்கார்டிங்கில் எடுத்தோம். அதுனால படத்தில் பாடகர்களாக, இசைக்கருவி வாசிப்பவர்களாக வேற யாரையும் நடிக்க வைக்க முடியாது. அந்தந்த கலையைத் தெரிந்தவர்களை வைத்துத்தான் எடுக்க முடியும். அதனால்தான் ஒரு இசையமைப்பாளரா இருக்கிற ஜி.வி.பிரகாஷை இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். இசையை மையமா வெச்சு எடுக்கிற படத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்னு ஜி.வி.க்கு நல்லா தெரிந்திருந்தது; அதனாலேயே பல சிரமங்களிலிருந்து தப்பிச்சுக்கிட்டோம்.’’
சமீபத்தில் நடந்த 31வது டோக்கியோ திரைப்பட விழாவுக்கு `சர்வம் தாள மயம்’ தேர்வாகி இருந்தது; அந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்றுவந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க..?

``டோக்கியோ திரைப்பட விழாவில் அங்கு இருந்த பெரிய ஸ்கிரீனில்தான் `சர்வம் தாள மயம்’ படத்தை திரையிட்டாங்க. படம் பார்த்த எல்லாருமே பல இடங்களில் கைதட்டுனாங்க. படம் முடிந்ததும் நடந்த கலந்துரையாடலில் பல பேர் கேள்வி கேட்கும் போதுதான், எல்லாரும் படத்தை எந்தளவுக்கு உன்னிப்பா கவனிச்சிருக்காங்கனு தெரிஞ்சது. சில பேர் கண் கலங்கிட்டாங்க; சில பேர் மறுபடியும் படத்தைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. ஜாப்பனீஷோட இந்த ரெஸ்பான்ஸைவிட டைரக்டர் பாலா படம் பார்த்துட்டு எமோஷனல் ஆனதுதான் எனக்கு செம ஷாக்கா, வித்தியாசமா இருந்தது. அவர் அவ்வளவு எமோஷனல் ஆவார்னு நான் நினைக்கவே இல்லை.’’






ஜி.வி.பிரகாஷ்தான் இந்தப் படத்துக்கு ஹீரோனு சொன்னதும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்..?

`` `பரவாயில்லையே... ஜி.வி பண்ணுவானா; அவன் அந்த அளவுக்கு சீரியஸா இருக்கானா’னு கேட்டார். ஏன்னா நிறைய படங்கள் மியூசிக் பண்ணிட்டு இருந்த ஜி.வி ஏன் நடிக்கப் போனான்னு அவருக்கு ஒரு டவுட் இருந்தது. அப்பறம், `நீங்க அவனை வெச்சுப் பண்றதா இருந்தா ஓகே’னு சொன்னார்.’’
வினித், டிடி இந்தப் படத்தில் நடிச்சிருக்காங்க; அவங்களுக்கு எந்த மாதிரியான ரோல்..?

``ரெண்டு பேருக்குமே ரொம்ப முக்கியமான ரோல். வினித் ஒரு டான்ஸரா இருக்கிறதால அவருக்கும் சங்கீதம் தெரியும். அதனால இந்தப் படத்தில் அவரை யூஸ் பண்ணிக்கிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோல். டிடியோட ரோலைப் பற்றிச் சொல்லணும்னா, இந்த கேரக்டரை டிடியைத் தவிர வேற யாராலும் பண்ண முடியாது. படத்தில் ஒரு முக்கியமான கட்டத்தில் படத்தை நகர்த்துவதே அவங்களோட கேரக்டர்தான்.''
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
அருமையான குரல்; யாருன்னு தெரியவில்லை!' - ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் புதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் இணையத்தில் பாடிய பாடலை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுப் பாராட்டியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.



சில நாள்களுக்கு முன்னதாக கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் என்பவர் `விஸ்வரூபம்' படத்தில் இடம்பெற்ற `உன்னைக் காணாத...' பாடலைப் பாடியிருந்தார். இவரின் பாடல் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த வீடியோவை பாடகர் சங்கர் மகாதேவன் ட்விட்டரில் வெளியிட்டு, `இவர் யார் என்று தெரியவில்லை. ஆனாலும் இவரின் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார். சங்கர் மகாதேவன் பதிவிட்டதை அடுத்து ராகேஷை தேடும் பணியில் பலர் ஈடுபட்டு இறுதியில் அவரைக் கண்டுபிடித்தனர். இதன் பிறகு ராகேஷை நடிகர் கமல் நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.



இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை வீடியோ பதிவிட்டுள்ளது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் வடிசலேறு பகுதியைச் சேர்ந்த பேபி என்ற பெண் 1994-ம் ஆண்டு பிரபுதேவா நடித்து ரஹ்மான் இசையில் வெளியான `காதலன்' திரைப்படத்திலிருந்து, என்னவளே... என்னவளே... பாடலை (தெலுங்கில்) பாடியிருந்தார். இந்தப் பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் ‘ யார் எனத் தெரியவில்லை. பெயர் தெரியவில்லை. அருமையான குரல்’ எனப் பதிவிட்டுள்ளார். இது ரஹ்மான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பெரும் இசையமைப்பாளராக உள்ளார். அவர் ஒரு ஏழைப் பெண்ணின் குரலைப் பாராட்டி சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.



மேலும் சிலர் அந்தப் பெண்ணுக்கு உங்கள் இசையில் பாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா. வாய்ப்பு தரவேண்டும். அவரின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும் என்பது போன்ற கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.
 
  • Like
Reactions: sudharavi
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!