Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பெண்மையைப் போன்றே இசையும் தனித்துவமானது!


சங்கீதக் கலாநிதி அருணா சாய்ராம்
குடியரசுத் தலைவர் மாளிகை தொடங்கி இந்தியாவின் பெருமைமிகு சபைகளில் இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கும் அருணா சாய்ராம், இந்தியாவின் இசைத் தூதராக கர்னாடக இசையை லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால், ராயல் ஃபெஸ்டிவல் ஹால், நியூயார்க்கின் கர்னகி ஹால் போன்ற உலகின் பெருமைமிகு இசை மேடைகளிலும் படரவிட்டிருப்பவர்.
சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவராக இருக்கிறார். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் அருணா சாய்ராம் இசை உலகில் பெருமைமிகு விருதான மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீதக் கலாநிதி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அருணா சாய்ராம் 1952-ல் திருச்சியில் ஆர்.சேதுராமன் - ராஜலட்சுமி தம்பதிக்குப் பிறந்தார். இசையின் பாலபாடத்தைத் தன்னுடைய தாய் ராஜலட்சுமியிடமே தொடங்கினார். பத்து வயதிலேயே இசை மேதை டி.பிருந்தாவிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். பிறகு எஸ்.ராமச்சந்திரன், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, ஏ.எஸ்.மணி, கே.எஸ்.நாராயணசுவாமி, டி.ஆர்.சுப்பிரமணியம், நாகசுர வித்வான்களான செம்பனார்கோயில் சகோதரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன் ஆகியோரிடம் தன் இசையை மேம்படுத்திக்கொண்டார்.

பதினான்கு மொழிகளில் பாடுபவர்
மரபார்ந்த இசை, பிரபந்தம், திருவாசகம், ஜாவளி, பதம், தாசர் பதம், அபங் எனப் பல பாணிகளில் இசையின் எல்லைகளை விரித்து இசை வானில் பறந்தவர் அருணா சாய்ராம். பம்பாயில் இருந்தபோது தனது இல்லத்துக்கு வந்த இசை மேதைகள் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி அய்யர், புல்லாங்குழல் மாலி, டி.பாலசரஸ்வதி போன்ற பலரின் ஆசிர்வாதத்தையும் அருணா சாய்ராம் பெற்றிருக்கிறார்.
வருகைதரு பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் பணியாற்றி யிருக்கிறார். பதினான்கு இந்திய மொழிகளில் பாடும் திறமை பெற்றவர் அருணா சாய்ராம். மாண்டலின் யு ஸ்ரீநிவாஸ், உஸ்தாத் ஜாகீர் உசேன் போன்ற புகழ்பெற்ற இந்திய வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி நிகழ்ச்சியையும் மேற்குலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.
பிபிசி பிராம்ஸ் திட்டத்தின்கீழ், இந்திய -பிரெஞ்சு கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின்மூலம் இளம் பிரெஞ்சு இசைக் கலைஞர்களுக்குக் கர்னாடக இசையைக் கற்றுத் தந்திருக்கிறார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் கனடா வின் பான்ஃப் சென்டரிலும் அங்கிருக்கும் மாணவர்களுக்குக் கர்னாடக இசையைக் கற்றுத் தந்திருக்கிறார்.
“அமைதியையும் தெய்வீகத்தையும் இசையின் வழியாக இணைக்கும் பாலம் நான். இந்தப் பணிக்கான அங்கீகாரமாகவே மியூசிக் அகாடமியின் ‘சங்கீதக் கலாநிதி’ விருதைப் பார்க்கிறேன்” என்னும் அருணா சாய்ராம், இதன்மூலம் ரசிகர்களுடனான உறவுப் பாலம் மேலும் பலப்படும் என்று நம்புகிறார். அருணா சாய்ராம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட இசைப் பொழுதிலிருந்து சில துளிகள்.
ஆழ்மனதில் பிரகாசித்த தாரகைகள்
“சிறுவயதிலேயே பெரிய சங்கீத வித்வான்களின் இசையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. சங்கீதத்தின் மீது ஆர்வம் இருந்ததே தவிர, பெரிய மேடைக் கச்சேரி வித்வானாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இசையைப் படிக்கவில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயேதான் வாழ்ந்தேன். சென்னையில் என் அம்மா இசைத் துறையில் கால்பதிக்கவில்லையே தவிர, பம்பாயில் நிகழ்ச்சிகள் செய்துவந்தார்.

எங்களது வீட்டில் வானத்து நட்சத்திரங்களை எனக்குக் காட்டியதைவிட, இசைவானில் பிரகாசித்த தாரகைகளான எம்.எஸ். அம்மாவையும் டி.கே.பட்டம்மாளையும் எம்.எல். வசந்தகுமாரியையும் தண்டபாணி தேசிகரையும்தான் காட்டினர். அதுதான் என் ஆழ்மனத்தில் உறைந்திருந்தது. காலப்போக்கில் இறையருளால்தான் அது வெளிப்பட்டது.
நன்றாகப் படித்தேன். இசையையும் கற்றுக் கொண்டேன். திருமணம் முடிந்து, குழந்தைகள் பிறந்து அதன்பிறகுதான் முழுமூச்சாகக் கச்சேரி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது. தொடக்கத்தில் பம்பாயில் மட்டும் சில நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தேன். வெளிநாடுகளில் சில நிகழ்ச்சிகள் நடத்திவந்தேன். 1990-களில்தான் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினேன். 2002-ல் சென்னைக்கு வந்த பிறகு பரவலாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன்.
குருவருளின் பெருமை
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் இசை மேதை பிருந்தாம்மாவிடம் இசை கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. சென்னையில் முதல் நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் நடத்துவதற்கு வாய்ப்பு பெற்றுத் தந்தவர் என்னுடைய குரு. அந்நாளில் ஜூனியர் கான்சர்ட் எனப்படுவது பகல் 12 மணிக்குத் தொடங்கும். மியூசிக் அகாடமியில் என்னுடைய முதல் நிகழ்ச்சி குருவின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. நிறையப் பேர் பாராட்டினார்கள்.
எனக்குக் குருவின் பாராட்டுதானே முக்கியம்? நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து வழக்கம்போல் ஒரு ‘ஹும்’ வெளிப்பட்டது. குருவிடமிருந்து கிடைக்கும் வெளிப்படையான பாராட்டு ஒருவேளை சிஷ்யர்களின் இசை முயற்சியை முடக்கிவிடும் என்று நினைத்ததாலோ என்னவோ, பிருந்தாம்மா கடைசிவரை அவரது பாராட்டை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார் என்று தோன்றுகிறது.
வித்வத்தும் முக்கியம் பாட்டும் முக்கியம்
பிருந்தாம்மாவுக்குப் பிறகு பல இசை மேதைகளிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இதில் நாகசுர வித்வான் எஸ்.ஆர்.டி. பெரிய மேதை. நாகசுர வித்வான்கள் இசையை அணுகும் விதமே வேறு மாதிரியாக இருக்கும். அந்த நுணுக்கத்தை அவரிடம் தெரிந்துகொண்டேன். ராகம், தானம், பல்லவியின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்றால் லய வின்யாசங்கள், சங்கீத வின்யாசங்களோடு சாகித்ய பலமும் இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நானாகவே ஒரு ராகம், தானம், பல்லவியை உருவாக்கிப் பாடுவேன்.
இசைக் கொடை
எங்களின் ‘நாத யோகம்’ அறக்கட்டளை சார்பாகப் பல கிராமங்களைச் சேர்ந்த இசைக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வாத்தியங்களைக்கூட வாங்கமுடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாத்தியங்களை வாங்கித் தருகிறோம். புற்றுநோய் சிகிச்சைக்கான அறக்கட்டளை நிதிகளை உருவாக்கித் தருகிறோம். மூத்த கலைஞர்களை இன்றைய தலைமுறை கலைஞர்களுடன் சந்திக்கவைக்கும் நிகழ்ச்சிகளை ஓர் உறவுப் பாலமாக நடத்திவருகிறோம்.

இசையும் பெண்மையும்
சங்கீதமே ஒரு தெய்வத்தன்மை வாய்ந்தது. தனிப்பட்ட எந்தக் கடவுளையும் நான் இங்கே குறிப்பிடவில்லை. தெய்வீகம் என்பதை எதனோடும் நம்மால் தொடர்புபடுத்த முடியும். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். கடவுள் மறுப்பாளர்களாலும் மறுக்க முடியாதது இசை. அதோடு பெண்மையைப் போன்றே இசையும் தனித்துவமானது. இசையை ரசிப்பதன் மூலம் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும் என்கின்றன பல ஆராய்ச்சிகள்.
இசையை ரசிக்கப் பழக்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் போன்றவை இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இசையை நம்முடைய பாடத் திட்டத்தில் சேர்ப்பதன்மூலம் இசையை ஊன்றி ரசிப்பதற்கான பயிற்சியை அடுத்த தலைமுறைக்கு நம்மால் ஏற்படுத்த முடியும்”.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கட்டும்
பெண்கள் வெளியே செல்வதால்தான் பாலியல் சீண்டல் உட்படப் பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2016-ல் வெளியிட்டுள்ள தகவலின்படி பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதற்கு முந்தைய ஆண்டைவிட 82 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள், பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார் ஆகியோரால்தான் இந்தக் குற்றங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 76 சதவீத இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் உடல்சார்ந்த வன்முறையையும் பாலியல் வன்முறையையும் வெளியே செல்வதில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணை உடலாக மட்டும் பார்க்காமல் சகமனுஷியாக நடத்துவதும், பாலினப் பாகுபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதுமே இன்றைய தேவை என வலியுறுத்துகிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான பா.ஜீவசுந்தரி. “பெண்கள் மீதான வன்முறையும் பெண் குழந்தைகள் சிதைக்கப்படுவதும் பயங்கரமான மனநிலையின் வெளிப்பாடுகளே.
பெண்ணை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் மனப்பான்மை காலம் காலமாக இருந்தாலும் இன்று அது உச்சத்தை அடைந்திருக்கிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டவருக்கு #மீடூ போன்ற பிரச்சாரங்கள் மூலம் தண்டனை பெற்றுத்தர முடியாது என்றபோதும் ‘எனக்கு இப்படி நடந்தது’ என ஒரு பெண் வெளிப்படையாகச் சொல்வதைக்கூட இந்தச் சமூகம் அனுமதிக்காத போக்குதான் நிலவுகிறது.
பெண்களைப் பாதுகாக்க நம் நாட்டில் இயற்றப்படாத சட்டங்களே இல்லை எனலாம். ஆனால், நடைமுறையில் அந்தச் சட்டங்கள் பெண்ணுக்குப் பயன் தருகின்றனவா? வரதட்சணை வாங்குவதும் கொடுப்பது தண்டனைக்குரிய செயல். ஆனால், இந்தக் காலகட்டத்தில் வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், பணம் என அனைத்தையும் வரதட்சணையாக வாங்கிறார்கள்; கொடுக்கிறார்கள்.
பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து பெண்களுக்கான போராட்டங்களை நடத்திவருகின்றன. குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் நாடிவரும் இடமாக இவையே உள்ளன. ஆனால், பெண்களுக்கான மாற்றம் என்பது சமூக மாற்றத்துடன் ஒன்றிணைந்தது. இதை வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும்.
முன்பெல்லாம் பெண்கள் அமைப்பினர் எங்கே சென்றாலும் ஏணியை எடுத்துச் செல்வோம். எங்கு ஆபாச போஸ்டர்கள் இருந்தாலும் அவற்றைக் கிழித்தெறிவோம். ஆனால், இன்றைக்கு அப்படியான படங்களை செல்போனிலேயே பார்த்துவிட முடிகிறது. பெண்ணுடலை மர்மமான பொருளாக வைத்திருப்பதே இதற்கெல்லாம் காரணம். பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும்.
பெண்ணுடல் குறித்த புரிதலை அறிவியல் துணையுடன் மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். பாலினப் பேதமற்ற வளர்ப்பு முறை, பாலியல் கல்வி இரண்டையும் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையிலாவது பெண்களைச் சமமாக நடத்தும் போக்கு அதிகரிக்கும்” என்கிறார் ஜீவசுந்தரி.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சாதனை முகங்கள் 2018

சுயத்திலும் சுற்றத்திலும் மாற்றம் ஏற்படுத்த பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து தடம்பதித்த பெண்கள் பலர். அந்தவகையில் இந்த ஆண்டு சாதனைபடைத்த பெண்களைப் பற்றிய தொகுப்பு இது.
விருதால் கிடைத்த அங்கீகாரம்
மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுப் பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றிருந்தார்கள். பத்ம விருதுகளில் பெண்களுக்கான தனிப் பிரிவுகள் இல்லை என்றபோதும் தங்களுடைய திறமையால் இவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களில் பிஹார் நாட்டுப்புறக் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியை நானம்மாள், நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், 500-க்கும் மேற்பட்ட மூலிகை மருந்துகளைக் கண்டறிந்த கேரளத்தைச் சேர்ந்த மூலிகைப் பாட்டி லட்சுமி குட்டி, கர்நாடக மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தேவதாசிகளைத் தன்னுடைய ‘மாஸ்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் மீட்டெடுத்த சித்தவ்வா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

விருது பெற்றுத்தந்த மயானம்
பெரும்பாலும் ஆண்களே நிறைந்திருக்கும் மயானப் பணிகளில் பெண் ஒருவர் பணியாற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், ‘சவாலான துறையில் சாதித்த முதல் பெண்’ என்ற தேசிய விருது சென்னையைச் சேர்ந்த பிரவீனா சாலமனுக்கு வழங்கப்பட்டது.

அங்கீகாரம்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் ஒப்பந்த முறையில் பணியாற்றிவந்த திருநங்கைகள் நேயா, செல்வி ஆகியோருக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு நிரந்தப் பணி வழங்கியது. அரசு வேலைக்கான வயது வரம்பை இவர்கள் கடந்திருந்தாலும் திருநங்கைகளை ஊக்குவிக்கும்வகையில் இவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது.

‘அழகு’க்கு விருது
சிவங்ககை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகு, மத்திய அரசின் மகிளா கிஸான் விருதுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்வதுடன் மாடு, ஆடு, கடக்நாக் கோழி போன்ற வற்றை வளர்த்தும் வருகிறார். ஆவின் முகவராக இருப்பதுடன் டீக்கடையும் நடத்திவருகிறார்.
முதன்மை அதிகாரி
சென்னையைச் சேர்ந்த திவ்யா சூரியதேவரா அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 110 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பெண் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.
தாய் மண்ணே வணக்கம்
ஏழை மாணவர்களின் கல்விக்காக உலக அளவில் பிரச்சாரம் நடத்திவரும் மலாலா யூசஃப்சாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு முதன்முறையாகச் சென்றார். பாகிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பல்வேறுகட்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்தவர் மலாலா. சிகிச்சைக்குப் பிறகு லண்டனில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்த மலாலா, பாகிஸ்தானுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.


மாற்றத்தின் அடையாளம்
பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்தியஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவுசெய்திருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவுசெய்த இவரைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை விஜியும் பார் கவுன் சிலில் பதிவுசெய்தார்.
செய்திகள் வாசிப்பவர்...
பாகிஸ்தானின் உள்ளூர் செய்தி சேனலான கோஹினூர், மார்வியா மாலிக் என்ற திருநங்கையைச் செய்தி வாசிப்பாளராகப் நியமித்து உள்ளது. அந்நாட்டிலேயே முதன்முறையாகத் திருநங்கை ஒருவரைப் பணியமர்த்திய பெருமை இந்நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. மார்வியா மாலிக், ஊடகவியல் துறையில் பட்டம் பெற்றவர்.


தலைமைப் பொறுப்பு
அரசியல் கட்சிகளில் பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அரிதாகவே உள்ளது. இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது. கட்சியில் பிரேமலதா வகிக்கும் முதல் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பெண்கள்

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசை இந்த ஆண்டு மூன்று பெண்கள் பெற் றுள்ளனர். இயற்பியலுக்கான நோபல் பரிசை கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றிருக்கிறார். 55 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்ற பெண் என்ற அங்கீகாரம் டோனாவுக்குக் கிடைத்துள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்கரான ஃபிரான்செஸ் அர்னால்ட் பெற்றிருக்கிறார். ஈராக் நாட்டில் பெண்கள், குழந்தைகளின் உரிமைக்காகவும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகவும் போராடிவரும் 23 வயதான நாதீயே மூராத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


போர்ப் பறவைகள்
இந்திய போர் விமானத் துறையில் நுழைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவனி சதுர்வேதி. இவர் Mig-21 Bison என்ற போர் விமானத்தைத் தனியாக ஓட்டிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவருடன் மோகனா சிங், பாவனா காந்த் ஆகியோரும் போர் விமானப் படைப் பிரிவில் சேர்ந்துள்ளனர்.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28

உதகையில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு
உதகையில் இரண்டாவது நாளாக நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
உதகையில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளான குதிரைப் பந்தய மைதானம், தலை குந்தா, எச்.பி.எப் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் இப்பகுதிகள் வெள்ளைப் போர்வை போல் காட்சியளித்தது.
திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது உறை பனி படர்ந்து காணப்பட்டது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கும். இந்தாண்டு பனிப்பொழிவு வழக்கத்துக்கு மாறாக தாமதமாகும். ஜனவரி முதல் தேதி மற்றும் இரண்டாம் தேதிகளில் காலதாமதமாக உறை பனி தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள், விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

உதகையில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு

மேலும், இந்த உறை பனியினை சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த பனிப்பொழிவு வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதகை தாவரவியல் பூங்காவில் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. தாழ்வான பகுதிகளில் வெட்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
 

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
ஜீரோ டிகிரியைத் தொட்டது... உறைந்தது கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தற்போது காஷ்மீரைப்போல காட்சியளிக்கிறது. இப்போது நீங்கள் கொடைக்கானலுக்குப் போனால் புது வெள்ளை மழை இங்குப் பொழிகின்றது என பாடத் தொடங்கிவிடுவீர்கள். அந்தளவுக்குப் பனிப் பொழிவு இருக்கிறது.


வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு இதே நாளில் 7 டிகிரி வரை வெப்பநிலை குறைந்தது. ஆனால், தற்போது ஜீரோவைத் தொட்டிருக்கிறது.



அப்சர்வேட்டரி பகுதியில் இன்று ஜீரோ டிகிரி பதிவாகியுள்ளது. இன்று இரவு மைனஸ் டிகிரிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. புல்வெளிகள் வெண்மையாகப் பனி படர்ந்து உறைந்து கிடக்கின்றன. கடுமையான குளிர் காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தச் சூழலை மிகவும் ரசிக்கின்றனர். மதியம் 2 மணி வரை வெயில் அடிக்கிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் குளிர் நள்ளிரவில் எலும்புகளை ஊடுருவத் தொடங்கிவிடுகிறது.
இது தொடர்பாகப் பேசிய கொடைக்கானல் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல், ``கடுமையான பனிப்பொழிவு காரணமாகப் பயிர்கள் ரொம்ப பாதிக்கப்படுது. இந்தக் குளிர் தாங்காமல் இலை எல்லாம் கருக ஆரம்பிச்சிருக்கு. இதே நிலை நீடித்தால் விவசாயம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும்.

இப்பவே குளிர் தாங்க முடியல. பாத்திரங்கள்ல பிடிச்சு வெளியில வெச்சா தண்ணி உறைஞ்சுடுது. செடிகள்ல பனிக்கட்டியா நிக்குது. இன்னும் மைனஸ் டிகிரி போச்சுன்னா ரொம்ப கஷ்டம் ஆயிடும். ஜனவரி பாதி வரைக்கும் குளிர் கடுமையாக இருக்கும்" என்றார்.

கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரா, ``போன வருஷம் சரியா மழையில்லை. அதனால பனியும் பெருசா இல்ல. ஆனா, இந்த வருஷம் நல்ல மழை கிடைச்சிருக்கு. அதனால இப்போ பனியும் ஆரம்பிச்சிருக்கு. கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்ன இதேபோல சூழ்நிலை இருந்துச்சு.

இந்த வருஷம் குளிர் ரொம்ப அதிகமா இருக்கு. 5 மணிக்கு மேல வெளியே போக முடியல. நெருப்பைவிட்டு மூன்றடிகூட தள்ளி இருக்க முடியல. இன்னும் போகப் போக குளிர் கடுமையாகும். இதே நிலைமை நீடித்தால் இன்னும் ஓரிரு நாளில் மைனஸ் டிகிரி போனாலும் போய்விடும்" என்றார்
காஷ்மீர், சிம்லா, டார்ஜிலிங் போன்ற இடங்களுக்குச் சென்று உறை பனியை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தாராளமாகக் கொடைக்கானலுக்குச் சென்று வரலாம்.