Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript திருமணம் - சேரன் அவர்களின் படம் | SudhaRaviNovels

திருமணம் - சேரன் அவர்களின் படம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
திருமணம் – சேரன் அவர்களின் படம்


சேரன் அவர்களின் படம் என்றாலே அதில் ஒரு செய்தி இருக்கும் குடும்ப வேர்களிடையே நடக்கும் உணர்வு போராட்டங்கள் இருக்கும்.



இந்தப் படத்தில் நம் சமூகத்துக்கு தேவையான முக்கிய செய்தி ஒன்றை மிக அழகாக படமாக்கி இருக்கிறார்.

அந்த கால திருமணத்தில் உறவினர்கள் தான் முக்கிய பங்கு வகித்தனர். இன்றைய திருமணங்களில் அடுத்தவரை பார்த்து அவரை விட நாம் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்கிற மனப் போக்கே இருக்கிறது.


இளைய தலைமுறையினரிடமும் திருமணத்தைப் பற்றிய கனவுகள் நிறைய இருக்கிறது. உறவினர்கள் சூழ திருமணம் எதற்கு செய்யப்படுகிறது? தம்பதியர் இருவருக்கும் அனைவரின் ஆசிர்வாதமும் வேண்டும் என்பதற்கு தானே?



அந்த ஒரு நாளில் செலவு செய்யும் பணம் அவர்களின் வாழ்நாள் முதலீடாக இருந்தால் அவர்களின் வாழக்கை சிறக்காதா? அதை தான் சேரன் திருமணம் மூலம் சொல்லி இருக்கிறார்.



குடும்ப கதை சொல்லும் பாங்கில் சேரனை மிஞ்ச எவருமில்லை. திருமணத்திற்காக செய்யப்படும் செலவுகளை அவர் எடுத்து சொல்லும் போது நம் மனமும் திகைத்துப் போகிறது. இத்தனை செல்வா செய்கிறோம் என்று...

இன்றைக்கு மிகவும் அவசியமான கருத்து! மெல்ல மெல்ல செலவுகளை இழுத்து கடன் வாங்கி செய்தால் என்ன என்கிற நிலை தாண்டி வந்துவிட்டோம்.


தனது கையை மீறி செய்யப்பட்ட எத்தனை திருமணங்கள் அடுத்த ஆறு மாதத்தில் கோர்ட் வாசலை மிதிக்கின்றன?

தங்களின் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் ஆனால் அதற்கும் ஒரு வரைமுறை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அடுத்தவர்கள் செய்கிறார்களே என்று நம் நிலையை மீறி செய்து விட்டு அதற்காக உழைத்து தன் முடிவுவரை போராடுகிற தந்தை என்று ஒரு திருமணத்தால் நிம்மதி இழக்கின்றனர்.



திருமணத்தால் சந்தோஷம் மட்டுமே வர வேண்டுமே தவிர நிம்மதி பறிபோக கூடாது என்பதை அழகாக படமாக்கி இருக்கிறார் சேரன்...



அனைவரும் நிச்சயமாக பார்க்க வேண்டிய படம்..
 
  • Like
Reactions: rajeswari sivakumar
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!