Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 9 | SudhaRaviNovels

அத்தியாயம் - 9

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 9

சித்தார்த்தின் நேரம் களவாடப்பட்டுக் கொண்டிருந்தது. அவனால் தனது சொந்த வேலைகளை சிந்திக்க கூட இயலாமல் ஓடிக் கொண்டே இருந்தான். அதே சமயம் தந்தை கோமாவில் விழும் முன் சொன்ன வார்த்தைகள் யாவும் மனதில் சுழன்று கொண்டே இருந்தது. தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

தனது நண்பர்களுக்கோ, வர்ஷிணிக்கோ அழைத்து பேச முயற்சிக்கவில்லை. தன் முதுகின் மீது எப்போதும் ஒரு பார்வை இருந்து கொண்டே இருப்பதை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்தான். அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்ள முடியவில்லை எந்த தகவலும் வரவில்லை. தானாக முயற்ச்சித்து பெற முடியாமல் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை. தனது செயலால் அவளுக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் ஏதும் ஆபத்து வந்து விடுமோ என்று பயந்தான்.

ஏற்கனவே எல்லாம் நடந்து முடித்து அவளுக்கு தான் வில்லனாக இருக்கிறோம் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை. அவனது சூழ்நிலை அவனை சுற்றி உள்ளவர்களே தவறாக எண்ணும் நிலையிலேயே இருந்தான். தனது சூழ்நிலையை உணர்ந்திருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தான்.

தந்தையின் மூலம் ஓரளவிற்கு விஷயம் புரிந்திருந்தாலும், தன் பின்னே இருக்கும் எதிரி யார் என்று புரியாமல் இருந்தான். ஒவ்வொரு நாளின் முடிவிலும் வர்ஷினி அவன் முன்னே வந்து நின்று என்னை கை விட்டு விட்டாயே என்று கேட்டு நிற்பாள். உறக்கம் மறந்து ஒருவித தவிப்புடனே நாட்களை கடத்தினான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சோதனை. இன்று அவளைத் தேடிச் சென்று விடலாம் நாளை சென்று விடலாம் என்று நினைப்பான். ஆனால் அது நடக்காமலே போய் கொண்டிருந்தது.

வர்ஷினியும் மிகவும் கஷ்டப்பட்டு அவனது நினைவுகளை மறந்து தனது அன்றாடங்களை செய்து கொண்டிருந்தாள். தான்யாவும் இயல்புக்கு வந்திருந்தாள். சகோதரிகள் இருவருக்கும் தாய் தந்தையின் இழப்பும், சித்தார்த்தின் வரவால் குடும்பத்தின் நடந்த அனர்த்தங்களை இருவரும் மறக்க முடியவில்லை. வர்ஷினி அவனை முற்றிலுமாக வெறுத்தாள். இனி, எக்காலத்திலும் அவனை சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

அவள் என்னதான் மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளது கல்லூரியிலும் அவர்களது காதலைப் பற்றிய பேச்சு அவ்வப்போது எழுந்து கொண்டு தான் இருந்தது. அவளை பார்த்ததும் தங்களுக்குள் பேசிக் கொள்கிறவர்களும் இருந்தார்கள். அதே சமயம் முகத்திற்கு நேராகவும் கேட்கவும் செய்கிறவர்கள் இருந்தார்கள்.

அதிலும் லோகேஷ்சிறகு சித்தார்த்தின் மீது பகை இருந்த காரணத்தினால் அவளை அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தான். அதிலும் செயற்கை கால் அவளுக்கு பலவிதமான சோதனைகளை கொடுத்தது. ஒவ்வொரு நாளும் நரகம் தான். அன்றும் அப்படிப்பட்ட ஒரு நாள்.

தங்கையுடன் கல்லூரிக்கு வந்து இறங்கியவளை புண்படுத்தவென்று காத்திருந்தது விதி. பெற்றவர்களை இழந்து நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில், கல்லூரி ஒன்றே அவளுக்கு இளைப்பாறும் இடமாக இருந்தது. நல்லபடியாக படிப்பை முடித்து வேலையில் அமர்ந்து விடவேண்டும் என்கிற எண்ணத்துடன் படிப்பு ஒன்றே குறிக்கோளாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் சரவணன் அவசரமாக பேசுவதற்கு வந்து நின்றான். சித்தார்த்தின் நண்பனான அவனைக் காணக் கூட பிடிப்பதில்லை அவளுக்கு. ஆனால் அன்று உதவியது முழுவதும் அவர்கள் தான் என்பதால் மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஒருவித தயக்கத்துடன் “எப்படி இருக்க வர்ஷினி?” என்றான்.

“நல்லா இருக்கேன்...நீங்க?”

“உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்” என்றான் தயக்கத்துடன்.

அதுவரை இயல்பாக நின்று கொண்டிருந்தவளின் உடல் விரைக்க “உங்க பிரெண்ட் பத்தி பேசுவதாக இருந்தா வேண்டாம்” என்று கூறிவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்தவன் “உன் மனசுல உள்ள காதல் உண்மையாக இருந்தா எது நடந்தாலும் அவனை தவறாக நினைக்காதே வர்ஷினி. நிச்சயம் அவனுக்கு ஒரு காரணம் இருக்கும்” என்றான்.

சடாரென்று நின்று அவனை உறுத்து விழித்தவள் “எது? நான் எல்லாத்தையும் இழந்து இன்னைக்கு அனாதையா நிற்கவும் அவன் கிட்ட காரணம் இருக்குமா?”.

“நடந்தது நிச்சயம் பெரிய இழப்பு தான். ஆனால் அவனுடைய மனசை தெரிந்ததனால தான் சொல்றேன் வர்ஷினி”.

அவனை முறைத்து “நான் ஒன்று கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே? நாலு மாசம் ஆச்சு. அன்னைக்கு என்னை அம்போன்னு விட்டுட்டு போனவன் நான் இருக்கேன்னா செத்தேனான்னு கூட விசாரிக்கல. அவனுக்கு என்னவேனா சூழ்நிலை இருக்கட்டும். ஒரு போன் பண்ண கூட முடியாத சூழ்நிலைன்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு. வேண்டாம்! தயவு செய்து இதைப் பற்றி என்கிட்டே பேசாதீங்க” என்று அவள் நகரும் முன் அங்கு வந்து சேர்ந்தான் லோகேஷ்.

இருவரையும் கிண்டலாகப் பார்த்து “அட்ரா! அட்ரா! அவன் போனவுடனே இவனை பிடிச்சிட்டியா? அதுவும் லவ் பண்ணினவனோட பிரெண்ட்டையே” என்று கேட்டு முடிக்கும் முன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

அதற்குள் ஆங்காங்கே கடந்து போய் கொண்டிருந்தவர்கள் அங்கு குழுமிவிட சரவணனுக்கு கோபமும், ஆத்திரமும் ஒருங்கே எழ தன்னால் தானே அவள் அவமானப்பட நேர்ந்தது என்கிற எண்ணத்தில் அவனை போட்டு புரட்டி எடுத்தான்.

அதற்குள் பிரின்சிபால் அறையிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வர, முகக் கன்றலுடன் சரவணனை முறைத்து விட்டு பிரின்சிபால் அறைக்குச் சென்றாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“நீங்கல்லாம் இங்கே படிக்க வரீங்களா இல்ல ரவுடியிசம் பண்ண வரீங்களா?” என்று கடுமையாக முறைத்தார்.

லோகேஷோ “என் மேல தப்பில்லை சார். இவங்க ரெண்டு பேரும் பேசுவதை பார்த்திட்டு நான் போய் பேசினேன். இவன் தான் பிரச்சனை பண்ணிட்டான்” என்று அவசரமாக கூறினான்.

அவரோ வர்ஷினியின் பக்கம் திரும்பி “என்னம்மா இது? உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை. உன்னுடைய சூழ்நிலையை மனசில் வைத்து இது மாதிரி சம்பவங்களில் உன் பேர் வராம பார்த்துக்கோ” என்றார்.

சரவணனோ “வர்ஷினி மேல எந்த தப்பும் இல்ல சார்” என்றான்.

அவனை முறைத்தவர் “உங்களால தான் அவ பேர் கெட்டுப் போகுது” என்றவர் லோகேஷின் பக்கம் திரும்பி “இங்கே படிக்கிற எல்லோரை பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும். சோ நல்லவன் மாதிரி பேசாதே. இது உனக்கு லாஸ்ட் வார்னிங்” என்று கூறி வெளியேற்றினார்.

அனைவரும் வெளியே வரவும் சரவணன் அருகே சென்றவள் “நான் நல்லா இருக்கணும்னு நினைத்தால் இனி என்கிட்டே பேசாதீங்க’ என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

அவளது முகம் இறுகி கிடந்தது. மனமோ உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தது. என்ன மாதிரியான பேச்செல்லாம் கேட்க வேண்டியதாகிற்றே என்று எண்ணி வேதனை அடைந்தாள். பல்லைக் கடித்துக் கொண்டு வகுப்புகளை கவனித்தாள். மாலினிக்கு அவளைப் பார்க்க- பார்க்க வருத்தமாக இருந்தது. அவளது நிலைக்கு தானும் ஒரு காரணம் என்றெண்ணி வருந்தினாள்.

மதியம் வரை தாக்குப் பிடித்தவள் மதியத்திற்கு மேல் ஒதுக்குபுறமாக மைதானத்தில் இருந்த மர நிழலில் சென்றமர்ந்தாள். அவளது மனம் காயங்களை மீண்டும் கூறு போட ஆரம்பித்திருந்தது. அந்நேரம் அவள் அருகே வந்தமர்ந்த மாலினி “சாரி வர்ஷு”என்றாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவள் “நீ எதுக்கு சாரி சொல்ற? நடந்த எதற்கும் அடுத்தவங்க மேல பழியைப் போட விரும்பல. என் புத்தியை புல் மேய விட்டுட்டு இன்னைக்கு எல்லாவற்றையும் இழந்திட்டு நிற்கிறேன்” என்றாள் கலங்கிய கண்களுடன்.

அவளது கரங்களை தன் கைகளுக்குள் எடுத்து வைத்துக் கொண்டவள் “ஒரு பிரெண்டா நான் உனக்கு எடுத்து சொல்லி இருக்கணும். ஆனா உனக்கு உதவி செய்றதா நினைத்து உன்னுடைய இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம் தான்” என்றாள் குற்ற உணர்வுடன் கூடிய குரலில்.

அவளை நிமிர்ந்து பார்த்தவள் “இத்தனை கஷ்டமும் அந்த காதல் ஜெயித்திருந்தால் தெரிந்திருக்காது. ஆனா எல்லாமே பொய்யாய் போய் யார் யாரோ என்னை பேசுகிற நிலைமைக்கு வைத்திருக்கு” என்றாள் சோர்வான குரலில்.

“என்னால இன்னும் சித்து உன்னை ஏமாற்றி இருப்பான்னு நம்ப முடியல வர்ஷு. அவன் கண்ணில் உன் மீதான காதலை நிறைய தரம் பார்த்திருக்கேன். ஆனா எனக்கு..” என்று சொன்னவளை இடைமறித்து “ப்ளீஸ்!...எங்கேயோ ஏதோவொரு இடத்தில் அந்த நம்பிக்கை பொய்த்து போயிருக்கு” என்றாள் கண்ணீருடன்.

அந்நேரம் அவர்களின் தோழி ஒருத்தி கையில் புத்தகம் ஒன்றுடன் வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து முன்னே நின்றாள்.

“மா..மாலினி! இதைப் பார்! நம்ம சித்தார்த் தானே” என்று அந்த புத்தகத்தில் அட்டைப்படத்தில் இருந்தவனை காண்பித்தாள்.

அதைப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியை பிரதிபலிக்க அவசரமாக உள்ளே திறந்து அவனைப் பற்றிய செய்தியை படிக்க ஆரம்பித்தாள். அது இன்னும் அவளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்க, பயத்துடன் திரும்பி வர்ஷினியைப் பார்த்தாள்.

சித்தார்த் என்கிற பெயர் காதில் விழுந்ததுமே தன்னை மீறி ஒரு நிமிடம் இதயம் துடித்தாலும் வேகமாக சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப இருந்தவளை நிறுத்தியது மாலினியின் கைகள்.

அவளின் முன்னே அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தை காண்பித்தாள். அதில் யாரோ ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக அவளது இடையில் கையைப் போட்டுக் கொண்டு விரிந்த சிரிப்புடன் நின்றிருந்தான் சித்தார்த்.

பார்த்தவளின் விழிகளில் அதிர்ச்சி ஒருபுறம், வேதனை ஒருபுறம் என்று பல்வேறு உணர்வுகள் வந்து போனது. மாலினியோ அவனைப் பற்றிய செய்தியை வாசித்துக் காட்டினாள். குஜராத்தின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான சித்தார்த் மல்ஹோத்ராவிற்கும் பிரபல பெண் தொழிலதிபரான கேஷ்வி பட்டேல் என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்தது.

தன் மடியிலிருந்த புத்தக பையைக் கூட மறந்து அப்படியே எழுந்து நின்றாள். கண்கள் கண்ணீரை சிந்த மாலினி கையிலிருந்த அந்த புகைப்படத்தின் மீதே பார்வை பதிந்திருந்தது. பல பிரச்சனைகளை சந்திருந்தாலும் மனதின் ஏதோவொரு ஓரத்தில் சிறு நம்பிக்கை இழையோடிக் கொண்டிருந்தது. அதுவும் இன்று சுக்கல் சுக்கலாக உடைந்து நொறுங்கி இருந்தது. அதிலும் அவன் அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு முகத்தில் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி நின்றது மனதை உறுத்தியது.

அவ்வளவு தான் இவனது காதல். என்னுடன் ஒரு வேளையை கழிப்பதற்கா இந்த நாடகம்? எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன்? ஒரு பெண்ணின் காதல் எளிதாக போய் விட்டதா அவனுக்கு? நான்கு மாதங்களாக எத்தனை துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவனோ என்னைப் பற்றிய கவலை சிறிதுமின்றி திருமண கோலத்தில் இன்னொரு பெண்ணை அணைத்துக் கொண்டு நிற்கிறானே. என் நிலை தான் என்ன? என் காதலுக்கு இவ்வளவு தான் மரியாதையா? என் கழுத்தில் அவன் அணிவித்த தாலிக்கு பெயர் என்ன?

கண்ணீர் நிற்காமல் சிந்த, கால்கள் நடுங்கத் தொடங்கி இருந்தது. எல்லாம் முடிந்தது. எதிர்காலத்தின் மீது துளி அளவேனும் இருந்த நம்பிக்கை மொத்தமாக உடைந்து சிதறி இருந்தது.

அந்தப் பெண்ணை அனுப்பி விட்டு மாலினி தோழியைப் பிடித்துக் கொண்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
“வர்ஷு! அழாத! ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

கோபமும் ஆத்திரமும் ஒருங்கே எழ “என்ன செய்ய சொல்ற மாலினி? என் காதல் பொய்த்து போனதை பார்த்தே இல்ல. எப்படி அழாம இருக்க முடியும்” என்று அவள் தோள் சாய்ந்து கதறினாள்.

அதே நேரம் சரவணனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யோசனையுடன் அதை எடுக்கலாமா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் காலேஜ் முழுவதும் சித்தார்த்திற்கு திருமணம் ஆன செய்தி பரவி இருந்தது.

அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்ததும் சித்தார்த்தின் மீதிருந்த மரியாதை சுத்தமாக உடைந்து போனது. வர்ஷினியை எண்ணி மிகவும் வருந்தினான். சித்தார்த் மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கி விடும் வேகம் அவனுள் இருந்தது. அந்நேரம் விடாது அந்த எண்ணிலிருந்து அழைப்பு வர எரிச்சலுடன் எடுத்து காதில் வைத்தான்.

“சரவணா! நான் சித்தார்த் பேசுறேன்” என்கிற குரல் கேட்டதுமே ஒரு நிமிடம் அதிர்ந்து பின்னர் அழைப்பை கட் செய்து விட்டான்.

மீண்டும்- மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க எரிச்சலுடன் எடுத்தவன் “அவ இன்னும் உயிரோட தான் இருக்காளான்னு தெரிஞ்சுக்க போன் பண்றியா?” என்றான்.

சித்தார்த்தோ “ப்ளீஸ்! சரவணா! இப்போ நான் எதையும் கேட்கும் நிலையிலோ தெரிந்து கொள்ளும் நிலையிலோ இல்லை. ஒன்னு மட்டும் சொல்றேன். நீ கண்ணால் காண்பது காதால் கேட்பது எதையும் நம்பாதே. அவளுக்கு துணையாக நீங்க எல்லோரும் நிற்கணும்” என்றான்.

“இதை சொல்றதுக்கு உனக்கு நாலு மாசம் எடுத்திருக்கு. எப்படி? இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாடியும் நீ சொல்றதை அந்தப் பொண்ணு நம்பனும். வேண்டாம் விட்டுடுடா! பாவம்-டா அது” என்று கெஞ்சலாக முடித்தான்.

“சரவணா! நான் சொல்றதை கேளு. என்னால என் நம்பரிலிருந்து கூட பேச முடியாத நிலைமை. தயவு செய்து அவளை பத்திரமா பார்த்துக்கோ. நான் வேற-வேற நம்பரிலிருந்து தான் கூப்பிடுவேன். இப்போதைக்கு என்னால இதை மட்டும் தான் சொல்ல முடியும்” என்று கூறியவன் சரவணன் பதில் பேசும் முன் போனை வைத்திருந்தான்.

சரவணனுக்கு எதுவுமே புரியவில்லை. புகழ் பெற்ற தொழிலதிபன். ஒரு போன் கூட செய்ய முடியவில்லை என்று கூறுவதை எப்படி நம்பவது. தங்களை இன்னமும் முட்டாள் ஆக்குகிறானா? ஆனால் ஏன் எதற்கு? அவளுடன் அவனுக்கு ஆக வேண்டிய காரியம் தான் என்ன? என்று யோசித்தவனுக்கு புரியவில்லை.

அதே சமயம் அவன் குரலில் தெரிந்த அந்த தவிப்பு சரவணனை யோசிக்க வைத்தது. நிச்சயம் ஏதோ ஒன்று அவனை தடுக்கிறது. சித்தார்த் தவறானவன் இல்லை என்று மனம் அடித்துச் சொல்லியது. ஆனால் இந்த திருமணம்?
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Ennathaanyaa nadakuthu inga அவன் அப்பா appadi என்னதான் sonnaaru யாரு அந்த எதிரி ethuku இவனை target பண்றாங்க..... அந்த எதிரி yaarunu theriyala..... Evvalavu பெரிய Raja பரம்பரை பணக்காரன் அவனால onnum panna முடியலையா... கல்யானம் aaidicha.... ஒண்ணுமே puriyalaye.... Super Super maa... Very very emotional episode maa
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Ennathaanyaa nadakuthu inga அவன் அப்பா appadi என்னதான் sonnaaru யாரு அந்த எதிரி ethuku இவனை target பண்றாங்க..... அந்த எதிரி yaarunu theriyala..... Evvalavu பெரிய Raja பரம்பரை பணக்காரன் அவனால onnum panna முடியலையா... கல்யானம் aaidicha.... ஒண்ணுமே puriyalaye.... Super Super maa... Very very emotional episode maa
Thankyou Chitra........................................
 
  • Love
Reactions: Chitra Balaji