Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 6 | SudhaRaviNovels

அத்தியாயம் - 6

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 6

திருமணம் முடிந்து மகிழ்வானதொரு மனதோடு அனைவரும் அவர்கள் இருவரையும் வாழத்த, சித்துவிற்கு தந்தையின் கண்களிலிருந்து மறைத்து நடத்தி முடித்து விட்டோம் என்கிற திருப்தி எழுந்தது. வர்ஷுவோ பெற்றவர்களுக்கு தெரியாமல் வாழ்க்கையின் மிகப் பெரிய முடிவை எடுத்திருக்கிரோமே என்கிற நெருடல் எழுந்தாலும் அதையும் மீறி சித்து என் கணவன் என்கிற உரிமையும் சந்தோஷமும் உண்டானது.

கோவிலில் இருந்து கிளம்பி கெஸ்ட் ஹவுசிற்கு வந்த பின்னர் சரவணன் அனைவருக்குமான உணவை தருவிக்க, உற்சாகமான மனதுடன் அனைவரும் கல்யாண விருந்தை ரசித்தனர். தங்களுக்கு இருந்த எதிர்ப்பை மீறி திருமணம் முடிந்ததை எண்ணி இருவரும் மெல்ல இயல்பிற்கு திரும்பி இருந்தனர். சித்துவின் பார்வை அடிக்கடி வர்ஷூவை தொட்டு மீண்டது.

உரிமையுடன் அவளிடம் நெருங்க மனம் தவித்தது. அவனது பார்வைகளை உணர்ந்த வர்ஷூவிற்கோ உள்ளுக்குள் நடுக்கம் எழ ஆரம்பித்தது. நண்பர்கள் அனைவரும் இருவருக்கும் தங்களது வாழத்தை சொல்லிவிட்டு அடுத்து சித்துவின் ப்ளான் என்ன? எங்கே செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் தான் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்த கொண்ட வர்ஷுவின் மனம் படபடவென்று அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. நண்பர்கள் இருந்த போதே அவனது பார்வை தன்னை தீண்டிச் செல்வதை உணர்ந்தவள், இப்போது அவன் உரிமையுடன் நெருங்கி விடுவானோ என்று பயந்தாள்.

அந்தக் குளிர் பிரதேசத்திலும் உடல் வியர்த்து வழிய ஆரம்பித்திருந்தது. நண்பர்களை அனுப்பி விட்டு உள்ளே வந்தவனோ அவளை தேட, தனதறையில் ஒருவித நடுக்கத்துடன் உறைந்த நிலையில் நின்றிருந்தவளை கண்டதும் உதட்டில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி அருகே நெருங்கினான்.

அவன் வந்தது நின்றது எல்லாவற்றையும் உணர்ந்திருந்தாலும் திரும்பாமலே உடல் இறுக நின்றிருந்தாள். பின்னிருந்து இரு கரங்கள் அவளது இடையை வளைக்க குனிந்து அவள் காதோரம் “என்ன மிஸ்ஸஸ் சித்தார்த்? எப்படி இருக்கு இந்த பீல்?” என்றான் காதோரம் கிசுகிசுப்பாக.

அவனது கரங்கள் வெற்றிடையில் பதிந்தது ஒருபுறம் காதோரம் அவனது இதழ்கள் உரசி செல்வது ஒருபுறம் என்று அவளது மேனி சிலிர்க்க “ம்ம்..” என்று மெல்லிய முனகல் மட்டுமே வந்தது.

மெல்ல அவளை தன் பக்கம் திருப்பியவன் “நான் எதிர்பார்க்கவே இல்லை சோட்டி. இத்தனை சீக்கிரம் நம்ம திருமணம் நடக்கும் என்று” என்றவனது விரல்கள் அவளது கன்னத்தில் கோலமிட்டது.

அவனது தீண்டல் உள்ளுக்குள் ஒருவித நடுக்கத்தை கொடுத்தது. உதட்டின் மீது பொட்டு பொட்டாய் வியர்வை துளிகள் பூத்திருக்க, உதடுகளை அழுந்தக் கடித்து தனது உணர்வினை மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

மெல்லிய அரை வெளிச்சத்தில் அந்த வியர்வை துளிகள் வைரமென மின்ன, மேலும் நெருங்கியவன் குனிந்து அந்த வைரத் துளிகளின் மீது முதல் முத்தத்தை வைத்தான். அவனது மூச்சுக் காற்று அவள் முகத்தில் வீச, உதடுகள் லேசாக துடிக்க, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

அந்த ஒற்றை முத்தம் அவனுக்கு போதாது என்று தோன்ற, துடித்த உதடுகளின் மீது தனது இதழ்களை அழுத்தமாக பதித்தான். கரங்களோ வெற்றிடையில் பட்டு, மெல்ல தனது ஆராய்ச்சியை துவங்க, அவனது அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்து போனவள் அப்படியே அவன் கைகளில் உருகி நின்றாள்.

அந்நேரம் எங்கோ மெல்லிய இசையாக பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்

தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ?

பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ?

மலர்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ?

இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமோ?

உணர்வுகளின் பிடியில் நின்றவர்கள் எப்போது இடம் மாறினார்கள் எப்போது பஞ்சணையில் வீழ்ந்தார்கள் என்று அறியாது அவர்களை மன்மதனின் அம்புகள் உணர்வுகளை தூண்டி இருக்க, தங்களின் எல்லையை கடந்திருந்தார்கள்.

சங்கமத்தில் கலைத்து களைந்திருந்த இருவரும் ஒருவித நிறைவான மனநிலைக்கு வந்திருந்தார்கள். இந்தக் காதல் தங்களை பிரித்து விடுமோ என்கிற பயத்தில் இருந்தவர்களுக்கு அனைத்தையும் தாண்டி ஒன்று சேர்ந்த நிம்மதி இருந்தது.

அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த வர்ஷோ மெல்ல நிமிர்ந்து பார்த்து “நாம எங்கே போக போறோம் சித்து? அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்றாள் யோசனையுடன்.

அவளது முகத்தையே பார்த்திருந்தவனின் விழிகளில் மெல்லிய புன்னகை, அவள் மூக்கைப் பிடித்து லேசாக ஆட்டி “எங்க ஊருக்குத் தான் போக போறோம் சோட்டி. பிளைட் டிக்கெட்ஸ் போட்டாச்சு” என்றான் கண்களை சிமிட்டி.

மேலும் நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் உரச படுத்துக் கொண்டவள் “அங்கே உங்க பேரெண்ட்ஸ் நம்மை ஏத்துப்பாங்களா? காதலுக்கே எதிர்ப்பை தெரிவிச்சவங்க நம்ம கல்யாணத்தை எப்படி ஏத்துப்பாங்க?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவளையும் தன்னோடு சேர்த்தனைத்தபடி எழுந்து கொண்டவன் “அதெல்லாம் பார்த்துக்கலாம் சோட்டி. நாம ஏர்போர்ட் போகும் வழியில் உன்னுடைய வீட்டுக்கும் போயிட்டு போவோம்” என்றவுடன் அவளது கண்களில் கலவரம் வந்தமர்ந்து கொண்டது.

அதை உணர்ந்து கொண்டவன் இறுக்கி அணைத்துக் கொண்டு “நான் இருக்கேன்...பயப்படாத சோட்டி” என்றான் அவளது முதுகை வருடிக் கொடுத்து.

அவன் சமாதானம் கூறினாலும் தந்தையின் முகம் வந்து மிரட்டிச் சென்றது. தன் மீது அத்தனை பாசம் வைத்திருந்தவருக்கு தான் செய்திருப்பது என்ன என்கிற கேள்வி எழுந்தது. அவரின் கோபத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று பயந்தாள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் “பயப்படாதே சோட்டி! நல்லதாகவே நடக்கும்” என்றான் ஆதரவாக.

சற்று நேரம் இருவரும் அப்படியே இருக்க, மெல்ல மாலை நெருங்க ஆரம்பித்திருந்தது. அதை உணர்ந்தவன் அவளை விடுவித்து “சோட்டி நமக்கு பத்து மணிக்கு பிளைட். நாம கிளம்பனும்”.

அதன்பின்னர் இருவரும் கிளம்ப தயாராக, அவளிடம் நல்லதாக ஆடை என்று அதிகம் எதுவுமில்லை. தான் கொண்டு கையில் கிடைத்ததை எடுத்து வந்திருந்தாள். கல்லூரிக்கு செல்லும் அந்த பையிலேயே வந்திருந்தாள். அதை கேட்டவன் சற்று யோசித்து ஏர்போர்ட்டிலிருந்து நேராக தங்களின் இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான். அதனால் முதல் பார்வையிலேயே அவள் மீது நல்ல அபிப்பிராயம் வர வேண்டும் என்று நினைத்தான். அதற்கு அவளது ஆடையும் நல்லதாக இருக்க வேண்டும் என்று யோசித்தான்.

அதனால் அவளிடம் “சோட்டி! நவீ என் பேரெண்ட்சை பார்க்கும் போது பந்தாவாக இருக்கணும். இந்த டிரஸ் சரியா இல்ல. நீ வெயிட் பண்ணு. நான் உனக்கு நல்லதா ஒரு டிரஸ் எடுத்திட்டு வந்துடுறேன். மற்றதை அங்கே போய் பார்த்துக்கலாம்” என்றான்.

அதை கேட்டதும் “நானும் வரேன் சித்து. என்னை இங்கே தனியா விட்டுட்டு போகாதீங்க” என்றாள் பயத்துடன்.

அவளது கன்னத்தை லேசாக தட்டிக் கொடுத்தவன் “இங்கே பக்கத்துல தான் கடை இருக்கு சோட்டி. நானே போய் வாங்கிட்டு ஓடி வந்துடுறேன். நீ வெயிட் பண்ணு” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

அவன் சென்றதும் கதவடைத்து விட்டு அங்கிருந்த சோபாவிலேயே அமர்ந்து விட்டாள். அவளது மனமோ ஏனோ தடுமாற ஆரம்பித்திருந்தது. உள்ளுக்குள் ஒரு அச்சம் அழ ஆரம்பித்திருந்தது. எதுவோ தவறாக நடக்கப் போகிறது என்கிற உணர்வு தலை தூக்கியது.

தன்னை அறியாமல் நகத்தை கடித்தபடி நேரத்தை கடத்த ஆரம்பித்திருந்தாள். வெளியில் சென்றவனோ தான் நினைத்தபடி அவளுக்கான உடை அருகில் இருந்த கடையில் கிடைக்காமல் போக, சற்றே தொலைவில் உள்ள கடையை நோக்கி சென்றான்.

அங்கு அவன் நினைத்தபடி ஆடைகள் கிடைக்க, முதன்முதலாக தன்னவளுக்காக வாங்குகிறோம் என்கிற எண்ணத்துடன் அவளுக்கு நன்றாக இருக்கும் என்று நினைத்ததை எல்லாம் எடுத்து குவித்து விட்டு பில்லை கட்டி அனைத்தையும் கையில் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

அந்நேரம் நீரஜின் ஆட்கள் அவனைத் தேடி ஒரு சிலர் அங்கேயும் வந்திருக்க, அவர்களது கண்களில் அவன் விழுந்தான். எதிர்பார்க்காமல் அவனை அங்கு காணவும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அவர்கள் அவனை சூழ்ந்து விட்டிருந்தனர்.

இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்த்திராதவன் அதிர்ந்து பின் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராட, அத்தனை பேரிடம் போராட முடியாமல் அவர்களால் அங்கிருந்து அப்புறப்படுத்த பட்டான். அவன் வாங்கிய ஆடைகள் அனைத்தும் வீதிகளில் வீழுந்து கிடக்க, வலுகட்டாயமாக ஊசி மூலம் செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் உதவியுடன் சித்தார்த் குஜராத்திற்கு பயணமானான்.

இங்கோ அவன் வருவான் என்று அவள் காத்துக் கொண்டிருக்க, நேரம் ஆக-ஆக மிகுந்த பதட்டத்திற்கு உள்ளானாள். அவனது எண்ணிற்கு விடாது அழைக்க, அதுவோ சுவிட்ச் ஆப் என்று கூறியது. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருகி ஓட, எங்கே சென்றான் அவன் என்று அறியாமல் அதிர்ந்து நின்றாள்.

மனதில் பல்வேறு எண்ணங்கள் அவளை அலைகிழிக்க ஆரம்பித்திருந்தது. திருமணம் என்கிற சடங்கை சாக்காக வைத்து தனது நெருக்கத்தை அனுபவித்து விட்டு தன்னை விட்டு ஓடி விட்டானோ என்று அவன் மீதும் சந்தேகம் எழுந்தது. மனமோ ‘ஐயோ’ நான் என்ன நிலையில் இருக்கிறேன் என்று கதறி துடித்தது.

யாருமற்ற வனாத்திரத்தில் கண்ணீருடன் காதலனான கணவன் வருவானா மாட்டானா என்கிற பயத்துடன் திகைத்து நின்றாள். அடுத்து என்ன? யாரிடம் போய் கேட்பது? என்று பல கேள்விகள் அவளை மிரட்டியது.

பெற்றவர்களிடம் சரணடைய மனம் துடித்தது. ஆனால் எந்த முகத்தோடு அவர்களிடம் செல்ல முடியும்? தன்னை மீறி பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு அழுது தீர்த்தாள். சத்தியமாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் உடல் வெடுவெடுக்க அமர்ந்திருந்தாள். யாரிடம் சென்று உதவி கேட்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தவளை அலைப்பேசியின் அழைப்பு நிதானத்திற்கு கொண்டு வந்தது.

அழைத்தது வேறு யாருமல்ல அவளது அன்னை தான். அதை பார்த்ததும் வாயை மூடிக் கொண்டு அழுது தீர்த்தாள். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டவள் அன்னையின் அழைப்பை ஏற்க, அவரோ அவள் மாலினி வீட்டில் இருக்கிறாள் என்கிற எண்ணத்தில் பேசிக் கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அனைத்தையும் அன்னையிடம் கொட்டி விட்டாள்.

அந்தப் பக்கம் இருந்தவருக்கோ பேரதிர்ச்சி. இப்படியொன்றை தன் பெண்ணிடம் சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை. மௌனம் மட்டுமே...இவளோ அம்மா அம்மா என்று கத்தி அழைக்க, அவரோ போனை கையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார். தேவேந்திரன் மனைவியின் நிலையைப் பார்த்துவிட்டு அவர் கையிலிருந்த போனை எடுத்து மகளிடம் பேச, அவள் சொன்னதை கேட்டு அவருக்கும் அதிர்ச்சி.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அவளோ “அப்பா நான் தப்பு பண்ணிட்டேன் அப்பா! என்னை மன்னிச்சிடுங்க. ப்ளீஸ்! வாங்கப்பா! எனக்கு இங்கே இருக்க பயமா இருக்கு” என்று கதற ஆரம்பித்தாள்.

தாய், தனத்தை இருவருக்கும் அத்தனை அதிர்ச்சி. தங்கள் வளர்ப்பு எங்கே தவறாக போய் இருக்கிறது என்று புரியாமல் திகைத்து இருந்தனர். இனி, அவளின் எதிர்காலம் தான் என்ன? அடுத்து ஒரு பெண்ணை வைத்திருக்கும் தங்களுக்கு அவளின் வாழ்க்கையும் கேள்விகுறியாகுமே என்கிற கவலை மனதை அரித்தது.

அந்தப் பக்கம் இருந்தவளோ “அப்பா! ப்ளீஸ்! எனக்கு பயமா இருக்கு. சீக்கிரம் என்னை வந்து கூட்டிட்டு போங்க” என்று அழுதாள்.

அதுவரை அதிர்ச்சியில் இருந்தவர் சுதாரித்துக் கொண்டு “பயமா? இவ்வளவு பெரிய காரியத்தை செய்ய துணிஞ்ச உனக்கு பயம் கூட இருக்கா?” என்றார் கடுமையாக.

அதுநாள் வரையில் தந்தையிடம் கடினமான வார்த்தைகளை கேட்டிராதவளுக்கு அவரின் இந்த கேள்வி ஒரு அதிர்வை கொடுத்தது.

“மன்னிச்சிடுங்கபா! நான் தப்பு தான் செஞ்சிட்டேன். ப்ளீஸ்! அப்பா” என்று அழுதாள்.

“ம்ச்...வரேன் கத்தாதே. லொகேஷன் எங்கே இருக்குன்னு அனுப்பு” என்று அவர் எரிச்சலுடன் சொல்ல “சரிப்பா! அம்மா கிட்ட கொடுங்க” என்று அவள் கேட்டு முடிக்கும் முன் போன் வைக்கப்பட்டிருந்தது.

தந்தை தன்னை வெறுத்து விட்டார் என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள். தான் செய்த தவறின் வீரியம் அவளை தாக்கியது. சித்தார்த்தின் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன் இப்படி ஏமாற்றி விட்டானே என்று அவன் மீதும் கோபம் எழுந்தது. காதல் என்கிற ஒற்றை வார்த்தையால் தன் குடும்பத்தின் நம்பிக்கையை இழந்து நிற்பதை அந்த நிமிடம் உணர்ந்து கொண்டாள்.

தன் குடும்பத்தை கூட நம்பாமல் அவனை உயிராக நினைத்ததற்கு நல்ல பரிசை கொடுத்து விட்டான் என்று அவன் மீது வெறுப்பு எழ ஆரம்பித்தது. அவனுக்கு எதுவும் பிரச்சனை வந்திருக்கும் என்று எண்ண விடாமல், அவன் தன்னை தவிர்த்து சென்றதே இதற்காக தான் என்று உறுதியாக நம்பினாள். அவனது வார்த்தைகளே அவனுக்கு எதிராக திரும்பி நின்றது.

இது எதையுமே அறியாத சித்தார்த்த் மயக்கத்திலேயே குஜாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். நீரஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

“அந்த பொண்ணு இருந்தாளா அவன் கூட”

“இல்ல சார். ஆனா அவளும் அங்கே தான் இருந்திருப்பான்னு தோணுது. ஏன்னா சித்தார்த்த் அவளுக்காக உடைகள் வாங்கி இருந்தார்”.


நெற்றியை சுருக்கி யோசித்தவர் “ஒ...ஓகே. அப்போ நான் மற்றதை ஏற்பாடு செய்து விடுகிறேன். நீங்க இவனை பத்திரமா நான் சொல்கிற இடத்துக்கு கொண்டு வந்துடுங்க. அவன் மயங்கி இருப்பது போல இருந்தாலும் கவனம். உங்க கிட்ட இருந்து தப்பிச்சிடுவான்” என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டு போனை வைத்தார்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Adapaavingala அநியாயமா rendu peroda வாழ்க்கை yum பலி aaidiche........ava avana emaathitatha namburaa suzhnilai சந்தர்ப்பம் appadi தானே amanji pochchi..... Enna aaga pooguthoo.... Ava parents yum avala veruthutaanga avanga நம்பிக்கை ah odachitaa la இனிமேல் ava வாழ்க்கை தினம் தினம் romba romba கஷ்டம் தான் vali vethanai oda thaan kadaikanum..... சித்தார்த் enna panna poraanu theriyalaye
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Adapaavingala அநியாயமா rendu peroda வாழ்க்கை yum பலி aaidiche........ava avana emaathitatha namburaa suzhnilai சந்தர்ப்பம் appadi தானே amanji pochchi..... Enna aaga pooguthoo.... Ava parents yum avala veruthutaanga avanga நம்பிக்கை ah odachitaa la இனிமேல் ava வாழ்க்கை தினம் தினம் romba romba கஷ்டம் தான் vali vethanai oda thaan kadaikanum..... சித்தார்த் enna panna poraanu theriyalaye
Thankyou Chitra............................
 
  • Love
Reactions: Chitra Balaji