Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 3 | SudhaRaviNovels

அத்தியாயம் - 3

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 3

அவனது அழுத்தமான பதிலைக் கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்து போனார் நீரஜ். அவனை எளிதாக பேசி மடக்கி விடலாம் என்கிற எண்ணத்தில் இருந்தவருக்கு அவனது பேச்சு பயத்தை கொடுத்தது.

நீரஜ் வீட்டு திருமணங்கள் எப்போதும் தங்களின் குடும்ப தொழிலை முன்னிறுத்தியே நிச்சயிக்கப்படும். தொழில் முறை ஒப்பந்தம் போன்று தான் அவர்களுக்கு திருமணமும். தங்களின் குடும்ப தொழிலுக்கு ஆதாயம் இருக்கும் வழிமுறைகளை தான் பின்பற்றுவார்கள். அவர்களின் பரம்பரையில் இந்த காதல் கல்யாணத்திற்கு எல்லாம் இடமில்லை.

மகனின் இந்த செயலால் குடும்பத்தில் பெரிய குழப்பம் உண்டாக வாய்ப்பிருப்பதை எண்ணி குழம்பி போனார். அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மகனை எப்படி சமாதானப்படுத்தி இந்த விஷயத்தை கையாள்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்திற்கு அவரின் மனநிலை நன்றாகவே புரிந்தது என்றாலும், எதற்காகவும் தனது காதலை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. யார் எதிர்த்தாலும் வர்ஷினியை கைப் பிடித்தே தீருவேன் என்று உறுதியாக இருந்தான்.

தந்தையை கூர்ந்து பார்த்தவன் “இதற்காகவா என்னை உடனே வரவழைச்சீங்க?”

“ம்ம்...நீ செய்கிற வேலையினால எத்தனை பிரச்சனைகள் வரும்னு தெரியுமா சித்து?”

“பப்பா! ஒரு விஷயம் சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. உங்களைப் போல தாத்தாவை போல எல்லாம் என்னால பிசினெஸ்க்காக கல்யாணம் செய்துக்க முடியாது. என் வாழ்நாள் முழுக்க வரப் போகும் உறவு. என் மனசுக்குப் பிடித்தவளோட வாழ்வதில் தான் என் இஷ்டம்”.

“சித்து! இது நடக்காத விஷயம். நீ அவளை மறந்திட்டு உன் படிப்பை பார்க்கிறதாக இருந்தால் நீ போகலாம். அப்படி உன்னால மறக்க முடியாது என்றால் உன் படிப்பையே நிறுத்துவதை தவிர எனக்கு வேறுவழி கிடையாது”.

அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்தவன் தந்தையின் மிரட்ட்டளைக் கேட்டு நாற்காலியை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு எழுந்தவன் “என்ன பப்பா மிரட்டி பார்க்குறீங்களா?”.

அந்நேரம் நீரஜின் அறைக் கதவை திறந்து கொண்டு இருவர் உள்ளே நுழைந்தனர். ஆஜானுபாகுவாக இருந்த இருவரை பார்த்ததுமே அவர்கள் யாரென்று புரிந்து போனது. தந்தையின் கையாட்களைப் பார்த்ததுமே கோபத்துடன் “தைரியம் இருந்தா மேல கை வச்சு பாருங்க” என்றான் கோபமாக.

மகனை ஆழ்ந்த பார்வை பார்த்து “சித்து! நான் சொல்வதை கேட்டு புத்திசாலித்தனமா இருக்கப் பாரு. என்னை மீறி உன்னால எதுவும் செய்ய முடியாது. நீ இவங்களோட போ. நான் சொல்கிற வரை நீ அங்கே தான் இருக்கணும். எந்த காலத்திலும் நீ அந்த பெண்ணோட சேர முடியாது. உனக்காக கேஷ்வி படேலை பேசப் போறோம். அவளும் இன்னும் படிப்பை முடிக்கல. முடிச்சதும் உங்க ரெண்டு பேருக்கும் திருமணம். இந்த திருமணம் மூலம் நம்ம பிசினெஸ்க்கு பெரிய ஆதாயம். இங்கே நம்மள அசைத்துப் பார்க்க எவனாலயும் முடியாது”.

முகத்தை அருவெறுப்பாக வைத்துக் கொண்டு “சோ உங்களுடைய வியாபாரத்திற்காக என்னையும் என் காதலையும் பணயம் வைக்கப் போறீங்க?”.

“இங்கே பார் சித்து! கல்யாணம் செய்து சிறிது நாட்கள் வரை நீ அவளுடனான வாழ்க்கையைப் பார். அதன் பின்னர் அந்த பொண்ணு யாரு வர்...வர்ஷினியா? அவளை இங்கே கூட்டிட்டு வந்துடு. கேஷ்வி அதெல்லாம் கண்டுக்க மாட்டா. நம்ம குடும்பங்களில் மனைவியை தவிர இன்னொருத்திக்கு எப்பவும் அனுமதி உண்டு”.

“பப்பா!...வேண்டாம்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. வர்ஷினியைப் பற்றி பேச உங்களுக்கு அனுமதி இல்லை. என்னை என்னன்னு நினைச்சீங்க? நான் மிஸ்டர் நீரஜ் மல்ஹோத்ரா இல்ல. எங்கம்மாவுக்கு துரோகம் பண்ணுகிற மாதிரி என்னையும் பண்ண சொல்றீங்கலா?”

குறுநகை தவழ “மிடில் கிளாஸ் புத்தி உனக்குள்ள வர துவங்கியாச்சு சித்து. நீ பிஸ்னெஸ் குடும்பத்தில் பிறந்தவன். அவளோட பழகிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உனக்குள்ள இப்படியொரு எண்ணம். வேண்டாம்! நீ இவங்களோட போ! மற்றதை நான் பார்த்துக்கிறேன்” என்று முடித்து விட்டார்.

அவனும் முடிவெடுத்து விட்டான். இவரிடம் பேசி சாதிப்பதை விட, வேறுவழியில் தான் முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவர்களுடன் கிளம்பினான். மகனைப் பற்றி அறிந்தவருக்கு நிச்சயம் அவனை அடக்குவது சுலபமில்லை என்பது புரிந்து போனது. அதனால் தனது ஆட்களை அழைத்து அவனை கவனமாக பார்த்துக் கொள்ளும்படி கூறினார். அவர்களிடமிருந்து எளிதாக தப்பிச் சென்று விடுவான் என்று கூறினார்.

அதன்பின்னர் அவனது கல்லூரியிலிருந்து விலகுவதற்கான அனைத்து வேலைகளையும் பார்க்க ஆரம்பித்தார்.

இது எதையுமே அறியாத வர்ஷினி அவன் ஊருக்கு சென்றதிலேயே துயரத்தில் இருந்தாள். அவன் எப்போது திரும்ப வருவான் என்கிற ஆவல் அதிகம் இருந்தது. ஆனால் அவனோ ஊருக்கு சென்ற பின் எந்த தகவலும் கொடுக்கவில்லை. போனை எடுத்து பலமுறை பார்த்த பின்பும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை.

ஹாஸ்டலுக்கு சென்றால் கூட அத்தனை செய்தி அனுப்புவான். ஆனால் இன்றோ ஒரு செய்திக்கு கூட பஞ்சமாகி போனது. சித்தார்த்தும் அங்கே தவித்துக் கொண்டு தான் இருந்தான். அவனது அலைபேசியை கூட அவனுடன் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அன்றைய இரவு இருவருக்கும் உறங்கா இரவாகவே அமைந்தது. அவளது மனமோ சோர்வடைந்திருந்தது. அவன் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் உடல் நலம் சரியில்லையோ? அதனால் தான் அவனால் செய்தி கூட அனுப்ப முடியவில்லை என்கிற முடிவிற்கு வந்திருந்தாள்.

இரு நாட்களுக்கு சோர்ந்த முகத்துடனும், அவனை விழிகள் தேடவும் அலைபாயும் மனதுடனும் சென்று வந்தாள். அவளால் எதிலும் கவனம் வைக்க முடியவில்லை. அவன் எங்கு சென்றான் என்ன ஆனான் என்று எந்த தகவலும் இல்லை. அவனது நண்பர்களிடம் விசாரித்தாள். அவர்களுக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. இப்படியே ஒரு வாரம் கடந்தது. அன்று கல்லூரிக்கு கிளம்பும் போதே மனம் ஏனோ பாரமாக இருந்தது.

தேவேந்திரன் கூட அவளின் சோர்வை கண்டு விடுப்பு எடுக்குமாறு கூறினார். குடும்பத்தினர் அனைவரும் தனது மாற்றத்தை கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் வலுக்கட்டாயமாக தன்னை மாற்றிக் கொண்டாள்.

வழக்கம் போல கல்லூரிக்கு சென்று கண்களாலேயே அவனை தேடி ஏமாந்து விட்டு வகுப்பிற்கு சென்று விட்டாள். முதல் வகுப்பு முடிந்து வெளியே வரும் நேரம் சித்தார்த்தின் நண்பர் கூட்டம் அவளை தேடி வந்தது. அவர்களை கண்டதும் அவனிடமிருந்து எதுவும் செய்தி வந்திருக்கிறது என்று எண்ணி வேகமாக அவர்களிடம் சென்றாள்.

சரவணனுக்கு அவளிடம் விஷயத்தை எப்படி சொல்வது என்று புரியாமல் வியர்த்து வடிந்தது. அங்கேயே வைத்து சொல்ல வேண்டாம் என்று எண்ணி அவளை அழைத்துக் கொண்டு விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.

“அவர் எதுவும் செய்தி அனுப்பி இருக்காரா அண்ணா?” என்றாள் தவிப்புடன்.

அவர்கள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு “இல்லம்மா...அது வந்து...” என்று இழுத்தான் சரவணன்.

அவனது அந்த பதட்டம் அவளுக்கு எதையோ உணர்த்த சற்றே இறுகி போன குரலில் “சொல்லுங்க அண்ணா? என்ன விஷயம்?” என்றாள்.

ஒருவித நடுக்கத்துடன் “சித்து இந்த காலேஜிலிருந்து போயாச்சு. அவன் பேமிலியை சேர்ந்தவங்க வந்து எழுதி கொடுத்திட்டு போய் இருக்காங்க” என்று விட்டான்.

“என்ன!” என்றவள் அதிர்ந்து அங்கிருந்த கல்லில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

அதிர்ச்சியில் இருந்த அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் பார்த்திருந்தனர் அவர்கள்.

கண்களில் கண்ணீருடன் “என்ன பிரச்சனைன்னு தெரியுமா? அவர் ஏன் வரல? நிச்சயம் எதுவோ இருக்கு” என்றாள் தவிப்புடன்.

அவளின் நிலையைக் கண்டு பாவமாக உணர்ந்தவர்கள் “ஏதாவது அவசரமாக இருக்கலாம்மா. ஆனா நம்ம யாருக்கும் அவன் எந்த நியுசம் கொடுக்கல. அதோட அவன் குடும்பம் குஜராத்தில் பெரிய பணக்கார குடும்பம்மா” என்றான் சரவணன்.

“என்ன அண்ணா சொல்றீங்க?” என்றாள் உதடு கடித்து அழுகையை அடக்கியபடி.

“ஆமாம்மா! நீ தைரியமா இரு. நிச்சயம் அவன் உன்னை ஏமாத்த மாட்டான். அவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கும்”.

அவளால் பேசவும் முடியவில்லை, தொண்டை வறண்டு போனது. தன்னிடம் அப்படி காதல் சொல்லியவன் எங்கே சென்றான்? இந்த கல்லூரியை விட்டு சென்று விட்டான் என்றால் மொத்தமாக தன்னை விட்டுச் சென்று விட்டானா? ஏன்? ஏமாற்றிச் செல்பவனின் கண்களில் அத்தனை காதல் பொங்கி வழியுமா? ஹையோ இதை எதிர்பார்க்கவில்லையே...பணக்காரன் என்று வேறு சொல்கிறார்கள். டைம் பாசிற்கு தன்னை பயன்படுத்திக் கொண்டானா? என்று நெஞ்சம் பலவாறு யோசித்து. உடலோ நடுங்க ஆரம்பித்திருந்தது.

அவளது நிலையை உணர்ந்தவர்கள் “வர்ஷினி! மனசை விட்டுடாதே. நிச்சயமா அவன் உன்னைத் தேடி வருவான். தைரியமா இரு. கிளாசுக்கு நேரமாச்சும்மா” என்று அவளை கிளப்பி விட முயன்றனர்.

அப்போது அந்தப் பக்கம் வந்த லோகேஷ் அவளை பார்த்து இளக்காரமாக “என்ன வர்..ஷினி! சேட்டு ஓடி போயிட்டான் போல? இதுக்கு தாண்டி உள்ளூர்காரனை நம்பனும்” என்று கை கொட்டி சிரித்தான்.

அவன் சொன்னதும் அழுகை பொங்கி வெடிக்க முகம் மூடி அழத் தொடங்கினாள். அதைக் கண்டு சித்துவின் நண்பர்கள் அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவளை என்ன சமாதானப்படுத்தியும் முடியாமல் அங்கேயே விட்டுவிட்டு தங்களின் கிளாசுக்கு சென்றார்கள்.

எத்தனை நேரம் வெற்று மைதானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாலோ, மனமோ அவனுடன் கண்ட கனவுகளை எல்லாம் அசைபோட்டபடி இருந்தது. கண்ணீர் அதுபாட்டிற்கு கன்னங்களில் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

மதியம் வரை அப்படியே இருந்தவள் அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் வீட்டிற்கு சென்று விடலாம் என்று எண்ணி தோழிகளிடம் சொல்லிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தாள். அழுதழுது முகமும் கண்களும் சோர்ந்திருந்தது. தள்ளாடிய நடையுடன் பேருந்து நிலையத்திற்கு சென்றவளின் அருகே படகு போன்ற கார் ஒன்று வந்து நின்றது.

அதிர்வுடன் அந்த காரை பார்த்து விட்டு நகர இருந்தவளை காரின் கண்ணாடி இறக்கப்பட்டு அதிலிருந்த நபர் பேர் சொல்லி அழைக்கவும் திகைத்து நின்றாள். அவளை அருகே வர சொன்ன நபர் ஒரு சில விஷயங்களை கேட்கவும் அவளது கண்களில் கண்ணீர்.

அவர் என்னென்னவோ பேச அதைக் கேட்டு தலையாட்டியவள் காரின் கதவு திறக்கவும் அதில் ஏறி அமர்ந்தாள். அவளை ஏற்றிக் கொண்டு அந்தக் கார் கல்லூரி வாசலை விட்டு நகர்ந்தது.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Yaaru athu avan appa va.... Enna sonnaga ஏன் அப்படி azhuvura.... எங்க kutikitu poraanga avala..... College la வலக vechitaanga avana...... Ava kita ஒண்ணுமே sollala...... அவன் அப்பா thirmaanama irukaaru ava vendaam nu.... Super Super maa
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Yaaru athu avan appa va.... Enna sonnaga ஏன் அப்படி azhuvura.... எங்க kutikitu poraanga avala..... College la வலக vechitaanga avana...... Ava kita ஒண்ணுமே sollala...... அவன் அப்பா thirmaanama irukaaru ava vendaam nu.... Super Super maa
Thankyou Chitra........................................
 
  • Love
Reactions: Chitra Balaji