Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் - 2 | SudhaRaviNovels

அத்தியாயம் - 2

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 2

நீரஜ் மல்ஹோத்ரா தன் முன்பு வைக்கப்பட்டிருந்த ரிபோர்ட்சை படிக்க ஆரம்பித்தார். அதை படிக்க- படிக்க அவருக்கு கோபம் எழுந்தது . கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் வரை அமைதியாக இருந்தவன். அதன் பிறகு அந்தப் பெண்ணின் காதலில் விழுந்திருக்கிறான்.

எந்தவித பாரம்பரியமும் இல்லாத குடும்பம். நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களின் பெண்ணையா இவன் காதலித்து தொலைக்க வேண்டும் என்று அவன் மீது கடுப்பானார். இங்கே தன் குடும்பத்தில் பெண் கொடுக்க, பெரும் பணக்காரர்கள் எல்லாம் வரிசை கட்டி நிற்க, இவனோ பஞ்ச பராரியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான். இந்த விஷயம் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியக் கூடாது என எண்ணினார்.

இதை எப்படி முடிக்க வேண்டும் என்று மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டுக் கொண்டார். அதற்கு சித்தார்த் இங்கே வர வேண்டும் என்று எண்ணினார். அதனால் உடனே அவனுக்கான டிக்கெட் போடப்பட்டது.

அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு தனது வேலைகளில் கவனத்தை வைத்தார்.

இது எதையுமே அறியாது சித்துவும், வர்ஷிணியும் தங்களது காதலை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அதிலும் இரு மாதங்கள் பிரிவை அனுபவித்தவர்கள், அந்த பிரிவை ஈடுகட்டும் வகையில் சிறிது நேரம் கிடைத்தாலும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருந்தனர்.

அன்றும் அப்படித்தான் இருவரும் கல்லூரி முடிந்த பின் அருகே இருக்கும் ஒரு பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவனது கண்கள் தன்னவளையே விழுங்கிக் கொண்டிருக்க, அவளோ அவனிடம் சுவாரசியமாக பல கதைகள் பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திற்கு பின்பே அவன் தான் பேசுவதை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து அவன் தோள்களில் ஒரு அடி அடித்து “சித்து! என்ன இது?” என்றாள் வெட்கப் புன்னகையுடன்.

அவளது விரல்களைப் பற்றி ஒவ்வொன்றிலும் முத்தம் வைத்தவன் “என்னன்னு தெரியல மது. உன்னை பார்த்த அந்த நொடியிலிருந்து ஜென்மம் ஜென்மமா உன்னோடு வாழ்ந்த அந்த உணர்வு தோன்றியது. என் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க முடியுமென்றால் அது உன்னால் மட்டுமே முடியும்” என்றான்.

அவனது பேச்சில் அதிர்ந்து “என்ன சித்து இது! நானே மனசுக்குள்ள ஒரு பயத்தோட தான் இருக்கிறேன். நம்ம ரெண்டு பேரையும் சேர விடுவாங்களா? இல்ல இந்த கௌரவ கொலை மாதிரி செஞ்சிடுவாங்களா?” என்றாள் பயத்துடன்.

அவளது தலையில் தட்டி “லூசு மாதிரி பேசாதே மது. நீயும் நானும் நூறு வருஷம் நல்லா வாழ்வோம். எங்க வீட்டில் பிரச்சனை இல்லை. எங்கப்பா எனக்கு எப்பவும் சப்போர்ட்டாக இருப்பாங்க”.

“எனக்கு என்னவோ ரெண்டு நாளா மனசுக்குள்ள பயமா இருக்கு சித்து. உன்னைப் பார்த்தா பணக்காரப் பையனா தெரியுற. உங்க வீட்டில் உள்ளவங்க என்னை ஏற்றுக் கொள்வாங்கலான்னு சந்தேகமா இருக்கு” என்றாள் கலக்கத்துடன்.

அவளது பயம் கண்டு தன் தொகளில் சாய்த்துக் கொண்டவன் “கண்ணமா! எதுக்கு இந்த தேவையில்லாத பயம். அதை விடு நான் ஊரிலிருந்து வரும் போது உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கிறேன்” என்றான் கண்சிமிட்டி.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் “எனக்கு எதுவும் வேண்டாம் சித்து. உன்னோட வாழ்நாள் முழுவதும் வாழும் வாழ்க்கை போதும்”.

அவளது இடையைப் பற்றி லேசாக அணைத்து விடுவித்தவன் “போதும் மது...இருக்கிற கொஞ்ச நேரத்தில் பிரிவை பற்றியே பேச வேண்டாம். நீ கண்ணை மூடு நான் உனக்கு வாங்கிட்டு வந்ததை தரேன்” என்றான் மென்சிரிப்புடன்.

அவளும் அதுவரை இருந்த சோர்வு நீங்க கண்களை மூடிக் கொண்டு கையை நீட்ட அவளது கைகளில் வந்து விழுந்தது ஒரு ஜோடி கொலுசு.

அதை தடவி பார்த்து “கொலுசா” என்று கண்களை திறந்தவள் அவனது பார்வை தனது கால்களின் மீது இருப்பதை கண்டதும் கோபமாக “அடிக்கடி நீங்க என் பாதங்களையே எதுக்கு பார்க்குறீங்க?” என்றாள் கோபமாக.

மென் சிரிப்புடன் அவளின் புறம் திரும்பியவன் “பாயல்! எல்லா பாதங்களுக்கும் அது பொருந்துவது இல்லை. உன்னுடைய பாதம் பாயல் இல்லாமல் நன்றாகவே இருக்காது சோட்டி” என்றான் கனிந்த குரலில்.

அவனது குரலில் தெரிந்த நெகிழ்வு கண்டு “ஐயா ரொமாண்டிக் மூடுக்கு போயிட்டார் போலேயே” என்று கேலி பண்ணி சிரித்தாள்.

அவளது சிரிப்பில் மயங்கிப் போனவன் அவள் கையிலிருந்த கொலுசை வாங்கி “நானே போட்டுவிடவா சோட்டி” என்றான் கெஞ்சலாக.

அவனை முறைத்தவள் “நானே உள்ளுக்குள்ள பயந்துகிட்டு இருக்கேன் சித்து...எங்க வீட்டு ஆட்களுக்கு தெரிஞ்சா என்னவாகும்னு. நீங்க என்னடான்னா பார்க்கில் உட்கார்ந்து கொலுசு போடவான்னு கேட்குறீங்க?”.

அவனோ விடாது”ப்ளீஸ் சோட்டி! எனக்கொரு வாய்ப்பு கொடு” என்றான் கெஞ்சலாக.

அவன் தோளில் சாய்ந்து கொண்டு “நம்ம கல்யாணம் முடிந்த பிறகு நீங்க தான் எப்பவும் கொலுசு போட்டு விடனும்”.

அவள் சொல்லியதில் கோபத்தோடு முகத்தை திருப்பியவனிடம் “புரிஞ்சுகோங்க சித்து” என்றாள் பாவமாக.

அவளது நிலையை உணர்ந்தவனும் மெல்ல இறங்கி வந்து “ம்ம்...சரி! இந்த கொலுசை நீயே வச்சுக்கோ. உனக்கு முதன்முதலாக நான் வாங்கி வந்தது” என்று அவள் கையில் திணித்தான்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
தன் கையிலிருந்த கொலுசு தான் தங்களின் காதலின் அடையாளம் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. அனைத்திற்குமான சாட்சியாக இருக்கப் போவது அது மட்டுமே.

மகிழ்ச்சியுடன் அதை வாங்கி முத்தமிட்டு தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளை பொறாமையாக பார்த்தவன் “அந்த கொலுசுக்கு கிடைக்கிறது எனக்கு எதுவும் கிடைக்கல” என்றான் பெருமூச்சுடன்.

அவனது கரங்களில் லேசாகத் தட்டி “சித்து!” என்றாள் சிணுங்கலாக.

அவனும் அதே போல சிணுங்கி “உன் சித்துவே தான்” என்று நெற்றியில் முட்டினான்.

இவை அனைத்தும் மொபைலில் ரெக்கார்ட் ஆகி கொண்டிருந்தது. நீரஜ் மல்ஹோத்ராவின் ஆள் அவர்களை பின் தொடர்ந்து வந்து அனைத்தையும் படம் பிடித்து அவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.

அதுவரை அவனுடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்தவள் நேரமானதை உணர்ந்து “நேரமாச்சு சித்து! அம்மா தேடுவாங்க” என்று சொல்லி எழுந்து கொண்டாள்.

அவளை விட்டு பிரிய மனமில்லாமல் “ஓகே டா...வீடு வரை நான் வரவா?”

“இல்ல சித்து நானே போயிடுவேன்” என்று பையை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.

இருவரும் ஒன்றாக அந்த பூங்காவிலிருந்து வெளியேற, அவர்களை பின்தொடர்ந்தான் நீராஜின் ஆள். அதே சமயம் அவர்களை மற்றொரு ஆளும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாது இருவரும் தங்களின் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசியபடி சென்றனர். அவளை பஸ் ஏற்றி விட்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான் சித்தார்த்.

அவளுடனான நினைவுகளுடன் தனதறையில் அமர்ந்திருந்தவனை கலைத்தது அலைப்பேசி. அழைத்தது யாரென்று எடுத்துப் பார்க்க, அவனது தந்தை தான் என்று தெரிந்ததும் அவசரமாக எடுத்தவன் “பப்பா சொல்லுங்க?”.

“உனக்கு எட்டு மணி ப்ளைட்டுக்கு டிக்கெட் போட்டிருக்கேன் வந்து சேர்” என்றார்.

அவனோ பதட்டத்துடன் “என்னாச்சு பப்பா? தாதிக்கு எதுவுமில்லையே?” என்றான் பதட்டத்துடன்.

“உன் சைன் வேணும் அதுக்காக தான் வர சொல்றேன்” என்றவர் போனை வைத்திருந்தார்.

ஏனோ அவர் குரலில் எதுவும் சரியாக இல்லாத ஒரு தோற்றத்தை உருவாக்கியது. என்ன எதுவென்று புரியாமல் தந்தை அழைத்ததற்காக கிளம்ப ஆரம்பித்தான்.

குஜராத் சென்றதுமே அவனை வீட்டிற்கு செல்ல விடாமல் அலுவலகத்திற்கு வரவழைத்தார். அங்கே சென்றதும் என்னவென்று அவன் கேட்கும் முன்னே, வர்ஷினியை பற்றியும் அவனை பற்றியும் இருந்த ரிபோர்ட்சை தூக்கி அவன் முன்னே போட்டார்.

“என்ன இது சித்து! உன்கிட்ட இதை எதிர்பார்க்கல” என்றார் கோபமாக.

என்னவென்று புரியாமல் இருந்தவன் அதை எடுத்துப் பார்த்ததும் உடல் இறுக நாற்காலியிலிருந்து எழுந்து கொண்டவன் ‘என்னை வேவு பார்த்தீங்களா?” என்றான் கோபமாக.

“நான் கேட்டதற்கு பதில் சொல்?” என்றார் அழுத்தமாக.

அவனும் கோபத்துடன் “ஆமாம் அவளை லவ் பண்றேன். என் லைபில் அவளை தவிர வேறு எந்த பெண்ணிற்கும் இடமில்லை” என்றான்.
 

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Super Super Super maa.... Semma episode..... Ava பெரிய பணக்காரன் அவன் அப்பா vuku இவங்க காதல் pidikala so பிரிக்க paakuraaru போல...
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
Super Super Super maa.... Semma episode..... Ava பெரிய பணக்காரன் அவன் அப்பா vuku இவங்க காதல் pidikala so பிரிக்க paakuraaru போல...
Thankyou Chitra.................
 
  • Love
Reactions: Chitra Balaji