அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

பாதாம் ஹல்வா - சுதா ரவி

sudharavi

Administrator
Staff member
#1
பாதாம் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பாதாம் - 250 கிராம்
சர்க்கரை - பாதாம் அரைத்த விழுதின் அளவிற்கு சம அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள் நிற கலர்
நெய்- இரண்டு மேஜை கரண்டி


செய்முறை

பாதாம் பருப்பை வெந்நீரை கொதிக்க வைத்து அதில் போட்டு வைக்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு தண்ணீரை வடித்து விட்டு தோல் நீக்கவும். பின்னர் மிக்ஸ்யில் பாதாம் பருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பால் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும். விழுதின் அளவிற்கு சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அரைத்த விழுதை போட்டு நன்றாக கிளறவும். சிறிது நேரம் கிளறி மாவு வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மிதமான தீயில் கிளற வேண்டும். மஞ்சள் கலர் பொடியும், சிறிது நெய்யும் சேர்க்க வேண்டும். பாதாம் விழுது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வர வேண்டும். மற்றொரு கரண்டி நெய்யும் சேர்த்து கிளற வேண்டும். கையில் எடுத்து பார்க்கும் போது உருட்டும் பதம் வர வேண்டும். அடுப்பை அனைத்து பாதாம் ஹல்வாவை வேறொரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அருமையான பாதாம் ஹல்வா தயார்.....

IMG_20181024_142019.jpg
 
Last edited: