வேடதாரி - முழுக் கதை

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம்- 5


மதியம் சற்று ஓய்வாகப் படுத்திருந்த பரிமளத்தின் கவனத்தை கலைத்தது தொலைப்பேசி. மெல்ல எழுந்து சென்று எடுத்து சொல்லு ஹேமாஎன்றார்.


சாரி மா! நீயே கொஞ்ச நேரம் தான் படுப்ப...அந்த நேரத்தில் போன் பண்ணி உன்னை எழுப்பிட்டேனாஎன்றாள் சிறு தவிப்புடன்.


அவரோ அதனால என்ன ஹேமா...அப்புறம் மாப்பிள்ளை, பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றார்.


எல்லோரும் நல்லா இருக்காங்கம்மா. ஒரு முக்கியமான விஷயமா தான் இந்த நேரத்துக்கு போன் பண்ணினேன்என்றாள்.


என்ன விஷயம் ஹேமா? கெட்டது எதுவும் இல்லையே?” என்றார் பரிதவிப்புடன்.


மச்..அதெல்லாம் இல்லம்மா. நம்ம ரகுவுக்கு என் சின்ன மாமியார் பொண்ணோட நாத்தனாரை பேசலாமான்னு கேட்டாங்க...நான் உங்க கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன்என்றாள்.


அதை கேட்டதும் சந்தோஷத்துடன் நேத்து தான் அப்பா கிட்ட சொல்லிட்டு இருந்தேன் ஹேமா. ரகுவுக்கு வயசாச்சு அவனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கனும்-னுஎன்றார்.


ஆமாம்மா! ரகுவுக்கு முடிச்சிட்டு அடுத்து பிரகாசத்துக்கும் பண்ணிடனும்”.

பொண்ணு எப்படி ஹேமா? நீ பார்த்திருக்கியா?”


ரொம்ப வசதியான குடும்பம் எல்லாம் இல்லம்மா. ரெண்டு பொண்ணுங்க. மூத்த பொண்ணை விருதுநகர்ல கட்டி கொடுத்திருக்காங்க. பெருசா எதுவும் செய்ய மாட்டாங்க ஆனா பொண்ணு குணம் பத்தரை மாத்து தங்கம். அமைதியான பொண்ணு. ரகுவோட குணத்துக்கு பொருத்தமா இருப்பா”.வசதி என்ன பெரிய வசதி...நாம மட்டும் என்ன பெரிய பணக்காரங்களா! என்ன...குடும்பத்துக்கு ஒத்து போனா போதும் ஹேமாஎன்றார்.


ம்ம்..சரிம்மா...நீங்க பேசிட்டு சொல்லுங்க...அதுக்கு பிறகு அவங்க கிட்ட நாம பேசலாம்...பத்மா கிட்டேயும் கேட்டுகங்கம்மா...இல்லேன்னா என்னை கேட்காம நீங்களா முடிவு பண்ணிட்டீங்கன்னு ஆடுவாஎன்றாள் பயத்துடன்.


அதை நான் பார்த்துக்கிறேன். பத்மா, பிரகாசம் ரெண்டு பேர் கிட்டேயும் ஓரளவு முடிச்சிட்டே சொல்லுவோம். இல்லேன்னா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழப்பி விட்டுடுவாங்க. உங்க அக்கா ஆட்டத்துக்கு எல்லாம் பயந்தா ஆகாதுஎன்றார்.


ம்ம்...ரகு கிட்டேயும் கேட்டுக்குங்க. அவனுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்...சரிம்மா மீனு வந்திடுவா...நான் அப்புறம் பேசுறேன்என்று கூறி வைத்தாள்.


மீண்டும் வந்து படுக்கையில் அமர்ந்தவரின் எண்ணங்கள் ஹேமா சொன்ன விஷயங்களையே சுற்றி சுழன்றது. அவ சொல்றான்னா நிச்சயமா நல்ல பொண்ணா தான் இருக்கனும். இடமும் நல்லதா தான் இருக்கும். ரகுவோட மனசுக்கு நல்லது தான் நடக்கும். அவனா எதுவும் தனக்குன்னு கேட்டதே இல்லை. இந்த குடும்பத்தில் ஹேமாவும், அவனும் தான் பொறுப்பா இருக்காங்க. அவனுக்கு வருகிற மனைவியும் அப்படி அமைஞ்சிட்டா காவ்யாவை பத்தி நான் கவலைப்படமாட்டேன். பிரகாசத்தை நம்பவே கூடாது. தான் தன் சுயநலம்னு இருக்கிறவன். கண்டிப்பா காவ்யா பொறுப்பை அவன் கையிலெடுத்துக்க மாட்டான். அதனால ரகுவுக்கு வருகிற பொண்டாட்டி தான் இந்த குடும்பத்தை தாங்குகிற வேராக இருக்கனும் என்று நினைத்துக் கொண்டார்.


இப்படியே நான்கு மணி வரை யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தவர்...கடிகாரம் நான்கு முறை அடித்ததை கண்டு எழுந்து வரவேற்பறைக்கு சென்றார்.


அங்கே அமர்ந்திருந்த நாகராஜனின் எதிரில் அமர்ந்து ஹேமாவிடம் இருந்து வந்த போனை பற்றி கூறினார். அனைத்தையும் கேட்டு முடித்தவர் இந்த வாரம் பத்மா வரட்டும் பரி. எல்லோருமா சேர்ந்து பேசி முடிச்சிடுவோம். பெரியவனுங்க ரெண்டு பேர் கிட்டேயும் கேட்டுகிட்டு முடிவெடுக்கலாம்என்றார்.


அதை கேட்டு கடுப்பாகி ஏன் உங்க பொண்ணு அப்படியே குளுகுளுன்னு ஒத்துக்குவாளா? ஒரு சின்ன சாமான் வாங்கினாலே ஆயிரெத்தெட்டு நொட்டு சொல்லுவா...இதில ஒரு நல்லது ஆரம்பிக்கும் போதே அவ கிட்ட சொன்னா முடிச்சு வச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பா மகராசிஎன்றார் கோபமாக.


முகம் சுருங்க இதென்ன பரி! உனக்கு எப்பவும் ஹேமா தான் உசத்தி. பாவம் பத்மா! பிள்ளைகளுக்கிடையில் நீ ரொம்ப தான் பாரபட்சமா நடந்துக்கறஎன்று குற்றம் சாட்டினார்.


அவர் சொன்னதில் கண்கள் சிவக்க கோபத்துடன் புரிஞ்சு தான் பேசுறீங்களா? எனக்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னு தான். பெரியவனுங்க ரெண்டு பேரும் தங்களோட வாழ்க்கை தான் முக்கியம்னு நம்மை விட்டு போயிட்டானுங்க. அதை கூட பொறுத்துக்கலாம். பத்மாவும், பிரகாசமும் அப்படி இல்லைங்க. அவங்களோட சுயநலத்தோட மட்டும் இருந்திருந்தா பரவாயில்லை. அடுத்தவங்களுக்கு எதுவும் நல்லது நடக்க கூடாதுன்னு நினைக்கிற குணம் அவங்களுக்கு. அது தான் எனக்கு பிடிக்கல. நீங்க சுயநலமா இருங்க, உங்க வாழ்க்கையை பாருங்க. தப்பில்லை! ஆனா, அடுத்தவனை கெடுக்கனும்னு நினைக்கிறது என்ன குணம்என்று படபடவென்று பொரிந்தார்.


அவரது கோபத்தை கண்டு தன்னை நிதானித்துக் கொண்டவர் சரி..சரி விடு! நம்ம பசங்க அவ்வளவு கெட்டவங்க இல்ல பரி! நீ தேவையில்லாம பத்மாவையும், பிரகாசத்தை பத்தியும் தப்பா நினைக்கிற. நம்ம வளர்ப்பு எப்பவும் தப்பா போகாதுஎன்றார்.


சற்று கோபம் தணிந்து அதெல்லாம் இருக்கட்டும்...இப்போ ஹேமா போன் பண்ணின விஷயம் பத்மாவுக்கோ, பிரகாசத்துக்கோ தெரிய வேண்டாம். நான் முதல்ல ரகு கிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குறேன்என்றார் உறுதியாக.


சமாதானம் ஆகாத முகத்துடன் உன்னிஷ்டம்...பத்மாவுக்கு தெரிஞ்சா கோச்சுக்குவாஎன்றார்.


எழுந்து சமையலறைக்கு சென்று கொண்டிருந்தவர் அதை நான் பார்த்துக்கிறேன். நீங்க வாயை திறக்காமல் இருந்தாலே போதும்என்று கூறிவிட்டு சென்றார்.


அன்று பிரகாசம் தன்னுடன் பணி புரியும் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுவிட, இரவு உணவுக்கு நால்வர் மட்டுமே இருந்தனர். காவ்யா சீக்கிரமே உணவருந்திவிட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று கதைவை அடைத்துக் கொண்டாள்.


பிரகாசம் இல்லை என்றதும் பரிமளம் ரகுவிடம் விஷயத்தை கூறினார். அதை மௌனமாக கேட்டுக் கொண்டவன் எனக்கென்ன அவசரம்மா இப்போ...கொஞ்ச நாள் போகட்டுமேஎன்றான்.


அவன் அருகில் அமர்ந்து கொண்டவர் அப்படி இல்லை ரகு...எல்லாம் காலாகாலத்தில் நடந்தா தான் நல்லது. உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. இப்போவே இருபத்தி ஒன்பதாச்சு. இன்னும் லேட் பண்றது நல்லதில்லைஎன்றார்.


அவனோ சற்று தயக்கத்துடன் அதில்லம்மா...எனக்கு சம்பளம் கம்மி. வரவ நிறைய கற்பனைகளோட வந்தா என்னால் அதையெல்லாம் நிறைவேத்தி கொடுக்க முடியாது. அதுக்கு தான் சொன்னேன்என்றான்.


அவன் கைகளில் கையை வைத்து அழுத்தம் கொடுத்தவர் இதோ பார் ரகு! நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதே. எல்லாம் நல்லதே நடக்கும்என்று ஆதரவாகப் பேசினார்.


அவன் மனதிலிருந்த குழப்பம் முகத்தில் தெரிய இல்லம்மா இன்னொரு ஆள் இந்த குடும்பத்துக்கு வந்தா அந்த செலவை எப்படி சமாளிக்கிறது. அதை தான் யோசிச்சேன்என்றான்.


அவன் கையை தட்டிக் கொடுத்தவர் அதை நீ தான் யோசிக்கனும் ரகு. அதுக்காக கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்றது வாழ்க்கையை கண்டு பயப்படுற மாதிரி இருக்குஎன்றார்.


யோசனையுடன் ம்ம்...சரிம்மாஎன்றவனை எங்களுடைய தவறான வாழ்க்கையால பிள்ளைங்க உங்களை எல்லாம் கஷ்டப்பட வைக்கிறோம். நீங்களாவது புத்திசாலித்தனமா பொழைச்சுக்கோங்கஎன்று கூறி எழுந்து சென்றார்.


அவர் சென்றதும் மொட்டை மாடிக்கு சென்றவன்...வெறும் தரையில் மல்லாக்க படுத்து கைகளால் தலையை தாங்கிக் கொண்டு ஆகாயத்தை ஆராய தொடங்கினான்.


மனமோ அம்மா சொன்னவற்றை அசை போட்டது. திருமணம் என்று சொன்னதும் மனதில் எந்த தாக்கமோ, ஆசையோ எழவில்லை. அதன் பின்னே உள்ள வாழ்க்கை அவனை அரட்டியது. வாங்கும் சம்பளம் முழுவதும் குடும்பத்துக்கு செலவு செய்து கொண்டிருக்கிறான். இதுவரை சேமிப்பு என்று ஒன்று இருந்ததில்லை. இதில் எதை கொண்டு திருமணம் செய்து கொள்வது. குடும்பத்துக்காக அவ்வப்போது வாங்கிய கடன் மட்டும் தான் உயர்ந்திருந்தது. அதை அடைக்கவே வழியில்லாது விழி பிதுங்கி அமர்ந்திருப்பவனுக்கு திருமணம் அவசியமா என்றே தோன்றியது.


கணவனை மட்டுமே நம்பி வரும் பெண்ணுக்கு அவளது சிறிய ஆசைகளை கூட நிறைவேற்ற வழியில்லாமல் இருப்பவனை எப்படி விரும்புவாள். இதில் காவ்யாவின் பொறுப்பும் இருக்கிறது. என்ன தான் அண்ணன்கள் ஓரளவிற்கு தங்கள் பங்குக்கு உதவி செய்தாலுமே திருமணம் என்று வரும்போது கையை மீறி தான் செல்லும். அதற்கான தேவைகளை இப்போதிருந்தே சேமிக்க வேண்டும். இதில் என்னை திருமணம் செய்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பலி கொடுப்பது போல் தான். வேண்டாம்! எனக்கு திருமணம் வேண்டாம்! என் குடும்பத்திற்காக என் வாழ்க்கையை நான் விட்டுக் கொடுக்க வேண்டும். இனி, பொறுப்பாக என் சம்பாத்தியத்தை அதிகரிக்கும் வழியை காண வேண்டும். காவ்யாவை நன்றாகப் படிக்க வைத்து, அவள் விரும்பிய வாழ்க்கையை அமைத்து தர வேண்டும். இதில் எனக்கு எந்த வருத்தமோ, மனகிலேசமோ இல்லை. என் முடிவை நாளை அம்மாவிடமும், அப்பாவிடமும் தெரிவித்து விட வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.


அம்மா கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார். எப்படியாவது என்னை சம்மதிக்க வைக்க வேண்டும் என்றே நினைப்பார். நிச்சயமாக இதை நாம் ஒத்துக் கொள்ள கூடாது. நான் தனி மரமாக நின்றால் இந்த குடுப்பம் தழைக்கும். காவ்யாவின் வாழ்க்கை நன்றாக அமையும். அதை விட்டுவிட்டு திருமணம் செய்து பிள்ளை குட்டிகளை பெற்று கொண்டால், நான், என் மனைவி, என் குழந்தைகள் என்று சுயநலமாக யோசித்து நடந்து கொண்டால் அமைதி பறி போகும் என்று நினைத்து தலையை உலுக்கிக் கொண்டான்.


எனது குடும்பத்தின் நலன் தான் முக்கியம். எனது தனிப்பட்ட வாழ்க்கையல்ல என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


அவன் படுத்திருந்த இடத்திற்கு நேர் கீழே உள்ள அறையில் பஞ்சு மெத்தையில் படுத்திருந்தவனோ அப்பாவோட ஸ்கூட்டர் ரொம்ப நாளா சும்மா தானே இருக்கு...அதை வித்தா எப்படியும் ஒரு ஏழாயிரம், எட்டாயிரமாவது தேறும். சீக்கிரம் அதை அப்பா கிட்ட பேசி வித்து காசாக்கிடனும். அதை இவங்க கையில கொடுத்தா மளிகை சாமான் வாங்கியே ஒழிச்சிடுவாங்க. எப்படியாவது வித்து காசை நாம அமுக்கிடனும்என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தான் பிரகாசம்
.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம்-6


மறுநாள் காலை அன்னைக்கு உதவியபடி “அம்மா! எனக்கு கல்யாணத்தில இன்ட்ரெஸ்ட் இல்லம்மா...அதனால நீங்க பிரகாசத்துக்கு வேணா பொண்ணு பாருங்க” என்றான் ரகு.


அவன் சொன்னதைக் கேட்டு கோபத்துடன் திரும்பி அவனை பார்த்தவர் “நீ எதுக்கு இப்படி சொல்றேன்னு கூடவா தெரியாது எனக்கு. ஆனா, உனக்கு வருகிற மனைவி தான் இந்த வீட்டுக்கு எல்லாமுமா இருப்பா ரகு...அதனால நீ கல்யாணம் வேண்டாம்னு சொல்ல கூடாது சொல்லிட்டேன்” என்றார் பரிமளம்.


அவனோ அன்னையை பரிதாபமாக பார்த்து “அம்மா! எனக்கு சரியா வருமானம் இல்லை. நம்ம குடும்ப நிலைமையும் உங்களுக்கு தெரியும், காவ்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற பொறுப்பு இருக்கு...இதுக்கெல்லாம் நான் கல்யாணம் பண்ணிகிட்டா சரியா வருமா சொல்லுங்க?” என்றான்.


அவனை கனிவுடன் பார்த்து “நீயும் என் மகன் தான் ரகு. உனக்குன்னு ஒரு வாழ்க்கை அவசியம். நாங்க பண்ணின தப்புக்கு நீ ஏன் உன் வாழ்க்கையை தியாகம் பண்ணனும் சொல்லு?”


“நானும் கஷ்டப்பட்டு, நீங்களும் கஷ்டப்பட்டு இதில் புதுசா வரப் பெண்ணும் என்னை கட்டிகிறதினால அவஸ்தைபடனுமா?”


அவனை தவிப்புடன் பார்த்து “நீ கல்யாணம் பண்ணிக்காம இருந்தா நாங்க குற்ற உணர்ச்சியிலையே உடைஞ்சு போய்டுவோம் ரகு” என்றார்.


அதுவரை இழுபறி நிலையில் இருந்தவனுக்கு அதை கேட்டதும், பதறி போய் “அம்மா! என்ன வார்த்தை சொல்றீங்க? நம்ம குடும்பத்துக்காக தான் யோசிச்சேன் மா...இப்போ என்ன நான் சம்மதிக்கனும் அவ்வளோ தானே...உங்க விருப்பம் போல ஏற்பாடு பண்ணுங்க “ என்று கூறி மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தான்.


அவனது சம்மதத்தை கேட்டு அவனது முகவாயை தடவி நெட்டி முறித்து “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும் ரகு...இப்படி சிரிச்சிட்டே இருந்தா எவ்வளவு அழகா இருக்கே” என்றார் பரிமளம் கலங்கிய கண்களுடன்.


அவனோ அதற்கு “காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சும்மா” என்று நக்கலடித்து விட்டு வெளியேறினான்.


அப்போது தனதறையில் இருந்து வெளியே வந்த பிரகாசம், அன்னையைப் பார்த்து சிரித்துக் கொண்டே செல்லும் ரகுவைப் பார்த்து வயிறெரிந்தான். அந்த பிள்ளை கிட்ட மட்டும் நல்லா சிரிச்சு-சிரிச்சு பேச வேண்டியது. என்னை கண்டா காசு பணத்தை மட்டும் கேட்பாங்க...இந்த காலத்தில தாயன்பில் கூட கலப்படம் தான் என்று மனதிற்குள் புழுங்கிக் கொண்டே சென்று டைனிங்கில் அமர்ந்தான்.


அப்போது அங்கே வந்த காவ்யா அன்னையிடம் சென்று “அம்மா! இன்னைக்காவது நான் கேட்டதை வாங்கித் தர முடியுமா?” என்றாள் பாவமாக.


சட்னிக்கு தாளித்துக் கொண்டிருந்தவர் “ஒரு ரெண்டு நாள் பொறுத்துகோடா...ரகுவுக்கு சம்பளம் வந்தததும் வாங்கி தர சொல்றேன்” என்றார்.


“ராத்திரி எல்லாம் கால் ரொம்ப வலிக்குதும்மா...சீக்கிரம் வாங்கித் தர சொல்லுங்க” என்று கூறி கொண்டே வெளியில் வந்தாள்.


டைனிங்கில் அமர்ந்திருந்த பிரகாசம் “என்ன வேணும் காவ்யா? என்கிட்டே கேட்க மாட்டியா” என்றான்.


அவன் அப்படி கேட்டதும் அதிசயமாக பார்த்து, அம்மாவை ஒரு தரம் திரும்பி பார்த்து விட்டு “கால் வெடிப்பு இருக்குன்னா...க்ரீம் வாங்கனும்...அதுதான் கேட்டுட்டு இருந்தேன்” என்றாள்.


“பேரை எழுதி கொடு நான் வாங்கிட்டு வரேன்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்து வைத்தாள்.


“நீங்க வாங்கிட்டு வரீங்களா?”


“ம்ம்..ஏன் நானும் உனக்கு அண்ணன் தானே...நான் வாங்கி தர மாட்டேனா” .


உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பரிமளமோ “சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே...இவன் என்ன திடீர்ன்னு தங்கை மேல பாசத்தை காட்டுறான்” என்று யோசனையுடன் பார்த்தார்.


காவ்யா ஒரு பேப்பரில் க்ரீமின் பெயரை எழுதி கொடுத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.


அனைவரும் கிளம்பிய பின்னர் வேலைகளை முடித்து விட்டு வந்தமர்ந்த பரிமளம் ஹேமாவிற்கு அழைத்து அந்த பெண்ணை பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.


“நல்ல பொண்ணும்மா...எங்க நாத்தானார் வீட்டு பங்க்ஷன்ல எல்லாம் பார்த்திருக்கேன். ரொம்ப அமைதியா அது பாட்டுக்கு வேலை செஞ்சிட்டு இருக்கும்...நான் இன்னைக்கே அவங்க கிட்ட பேசி ஜாதகமும், போட்டோவையும் வாங்கி அனுப்புறேன்” என்றாள்.


“ம்ம்..சரி வாங்கி அனுப்பிடு. நான் நம்ம ஜோசியர் கிட்ட காட்டி பொருத்தம் பார்த்த பிறகு பத்மா கிட்டயும், பிரகசத்துக்கும் சொல்றேன்” என்றார்.


“நீ சொல்லாம விட்டதுக்கு என்னை போட்டு மெல்ல போறா பாருங்க...பேசாம சொல்லிடுங்கம்மா” என்றாள் பயத்துடன்.


“வேண்டாம் ஹேமா! அது ரெண்டும் சேர்ந்து அவனுக்கு கல்யாணம் பண்ண விடாதுங்க. நான் பார்த்துகிறேன் விடு” என்று கூறி வைத்தார்.


ஆபிஸ் காண்டீனில் அமர்ந்திருந்த பிரகாசத்தின் எதிரில் அமர்ந்திருந்தாள் அவனுடன் வேலை பார்க்கும் மதியழகி.


“என்கிட்டே என்ன பேசனும் மதி மேடம்?”


“என் தங்கச்சி விஷயமா தான் சார் பேசனும்... அவளுக்கு இப்போ மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம் சார்” என்றாள்.


அதை கேட்டு யோசனையுடன் “அதை ஏன் என்கிட்டே சொல்றீங்க?” என்று கேட்டான்.


“அவ யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேன்றா சார்” என்றாள் தயங்கியபடி.


சற்று கோபத்துடன் கடிகாரத்தை பார்த்துவிட்டு “உங்க வீட்டு விவகாரத்தை எதுக்கு என்கிட்டே சொல்லி என் நேரத்தை வேஸ்ட் பண்றீங்கன்னு புரியல” என்றான்.


அவனை நிமிர்ந்து பார்த்து “அவ உங்களை நம்ம ஆபிஸ் டூர் அப்போ பார்த்திருக்கா...அதனால கட்டினா உங்களை தான் கட்டுவேன்னு சொல்றா சார்” என்று கூறி பயத்துடன் அவள் முகத்தை பார்த்தான்.


இதை சற்றும் எதிர்பார்க்காதவன் “வாட்? என்ன சொல்றீங்க?” என்றான் கோபத்துடன்.


“ஆமாம் சார்! நாங்க பார்க்கிற மாப்பிள்ளை யாரையும் ஒத்துக்க மாட்டேன்றா” என்றாள்.


அவள் சொன்னதை கேட்டு யோசிக்க ஆரம்பித்தான். இவளே எனக்கு கீழ வொர்க் பண்றவ...இவ வாங்குற சம்பளத்தை வச்சு தான் குடும்ப வண்டியே ஓடுது. இவ தங்கையை கட்டிகிட்டா என்ன கிடைக்கும். நான் இருக்கிற பொஷிஷனுக்கு அம்மா பொண்ணு பார்த்தா நிறைய செய்யுற இடமா பார்த்து கட்டிக்கலாம்...ஒண்ணுமில்லாத இடத்தில் போய் மாட்டிக்க கூடாது என்று யோசித்து முடிவெடுத்துக் கொண்டான்.


அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருத்த மதி “சார்! நாங்க வசதி இல்லாதவங்க தான். ஆனா,என் தங்கை நீங்க வாங்குற சம்பளத்துகுள்ள அழகா மிச்சம் பிடிச்சு குடும்பம் பண்ணுவா. கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க சார்” என்றாள்.


வேகமாக மறுத்து “இதோ பாருங்க மதி மேடம்...என் ரேஞ்சுக்கு உங்க கிட்ட பேசுறதே அதிகம். இதுல உங்க வீட்டுக்கு மாப்பிள்ளையா வரணுமா? போய் உங்க தங்கச்சியை உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி எவனுக்காவது கட்டி கொடுங்க” என்று கூறியபடி எழுந்து சென்றான்.


அவன் முறைத்துக் கொண்டு போவதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளின் முன்னே வந்து அமர்ந்தாள் அமுதா.


“ஏன்டி! உனக்கென்ன கூறு கெட்டு போச்சா? போயும்-போயும் இவனை போய் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளையா செலக்ட் பண்ற?” என்றாள் எரிச்சலுடன்.


அவளோ யோசனையுடன் “இவன் தான் என் தங்கச்சிக்கு ஏத்தவன் அமுதா. இதுக ரெண்டும் சேர்ந்தா தான் நல்லது. ஆனா, இவன் பிடி கொடுக்க மாட்டேன்றானே” என்றாள்.


“நிச்சயமா உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. இவனை கட்டிகிட்டா உன் தங்கச்சியை பட்டினி போட்டே கொன்னுடுவான்” என்றாள்.


அவளை யோசனையுடன் பார்த்து “நீ ஏதாவது ஐடியா கொடு-டி...எப்படியாவது இவன் தலையில் கிரிஜாவை கட்டி வச்சிட்டா நிம்மதியா இருக்கும்” என்றாள்.


அவள் சொன்னதும் கொலைவெறியாகி “அடியே! நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசுற...எதையாவது செஞ்சு தொலை” என்று கூறிவிட்டு கடுப்புடன் எழுந்து சென்றாள்.


மாலை வீடு திரும்பு முன் தங்கை கேட்ட க்ரீமை வாங்கிக் கொண்டே வீட்டிற்கு சென்றான் பிரகாசம்.


காப்பி, டிபனை முடித்துக் கொண்டு தன்னறைக் சென்றவன் காவ்யாவை அழைத்து “இது தான் நீ கேட்ட க்ரீமா?” என்று அவள் கையில் கொடுத்தான்.


அவன் வாங்கி வந்ததை நம்ப முடியாமல் பார்த்தவள் “ஆமாம் அண்ணா” என்றவள் “ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்று கூறி அதை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.


அப்போது “ஏய் நில்லு! அதை இப்படி கொண்டா...அது என்கிட்டேயே இருக்கட்டும்” என்றான்.


ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்து “ஆனா, நீங்க வச்சுகிட்டா நான் எப்படி யூஸ் பண்ணுவேன்” என்றாள் குழப்பத்துடன்.


அவனோ அவளது கேள்வியை காதில் வாங்காமல் தனது சாக்ஸ், கைக்குட்டைகள் சிலவற்றை எடுத்து வந்து அவள் கையில் திணித்து “இதை துவைச்சு கொண்டு வா” என்றான்.


“நீங்க தான் வாஷிங் மெஷின் வச்சிருக்கீங்களே...அதில் போட வேண்டியது தானே” என்றாள்.


அவனோ மந்தகாசமாய் சிரித்து “உனக்கு க்ரீம் வேணும்ன்னா தினமும் இதை எல்லாம் துவைச்சு கொடுக்கனும்” என்றான்.


அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து போனவள், அடுத்த நிமிஷம் அட அல்பமே இதுக்காக தான் இப்படி சீன் போட்டியா என்று நினைத்துக் கொண்டு அவற்றை வாங்கிக் கொண்டு சென்றாள்.


மகளுக்கும், பிரகாசத்துக்கும் நடந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டிருந்த பரிமளம் தலையில் அடித்துக் கொண்டார். என்ன பிறவியோ இவன்! தங்கச்சிக்கு ஒரு க்ரீமை வாங்கி கொடுத்திட்டு அதுக்கும் வேலை வாங்குறான் என்று நினைத்து அருவெறுப்பு அடைந்தார்.


பிரகாசத்தை மனதில் தாளித்துக் கொண்டே துவைத்து காய போட்டு விட்டு வந்தவள் அவனிடமிருந்து க்ரீம் டியுபை வாங்க சென்றாள்.


அவளை பார்த்ததும் “என்ன துவைச்சிட்டியா?” என்றான்.


அவளோ கடுப்புடன் “ம்ம்...காய போட்டுட்டேன். சரி கொடுங்க” என்று கூறி கையை நீட்டினாள்.


டேபிள் மேல் இருந்த டியுபை எடுத்து வந்தவன் மூடியை திறந்து சிறிதளவு பிதுக்கி அவள் விரலை பிடித்து அதில் வைத்தான்.


காவ்யா ஒன்றும் புரியாமல் அவனைப் பார்க்க “ரெண்டு காலுக்கும் இவ்வளவு போதுமில்ல...தினமும் துணியை துவைச்சு போட்டுட்டு வந்து வாங்கிக்க” என்று கூறிவிட்டு அறைக் கதவை சாத்திக் கொண்டான்.


இப்படியொரு வேலையை அவன் செய்வான் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். சிறிது நேரத்தில் அதிலிருந்து தெளிந்தவள் அந்த க்ரீமை வெறித்து பார்த்துக் கொண்டே அன்னையிடம் சென்றாள்.


“அம்மா! உங்க சீமந்த புத்திரன் எனக்கு காலுக்கு க்ரீம் கொடுத்திருக்கிற அழகை பாருங்க” என்றாள் கோபத்துடன்.


அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரகுவும் அவள் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்தவன், அவள் கையிலிருந்த க்ரீமை பார்த்து தாங்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.


மகன் சிரிப்பதை பார்த்த பரிமளதிர்க்கும் சிரிப்பை அடக்க முடியாமல் போக, அவரும் அவனுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்.


காவ்யாவோ மிகுந்த கடுப்பில் “நானே அசிங்கப்பட்டு நிற்கிறேன்...உங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பா இருக்கா?” என்றாள் ஆத்திரத்துடன்.


இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளைப் பார்க்க, அவளோ இருவரையும் முறைத்தாள்.


அவள் தலையைப் பிடித்து ஆட்டிய ரகு தனது பையிலிருந்து அவள் கேட்ட க்ரீமை எடுத்து கொடுத்தான்.


அதை வாங்கிக் கொண்டு கண்கள் கலங்க “தேங்க்ஸ் அண்ணா...நான் கேட்காமலே வாங்கிக் கொடுக்கிற நீங்க எங்கே...வாங்கிக் கொடுத்திட்டு வேலை வாங்குற அவங்க எங்கே” என்றாள் கடுப்புடன்.


“அவன் அப்படி தான்-டா...விடு!” என்றபடி மகனுக்கு காப்பியை கலக்க ஆரம்பித்தார் பரிமளம்.


பிரகாசமோ தனதறையில் அமர்ந்து அன்று மதியழகி சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தான். நமக்கு வர பொண்ணு நிறைய சம்பாதிக்கனும். நல்லா பணக்கார வீட்டு பொண்ணா இருந்தா மாமனார் வீட்டில் அடிக்கடி டேரா போட்டு வேண்டியதை செஞ்சுக்கலாம்...அதை விட்டுட்டு இப்படி பஞ்ச பரதேசியை கல்யாணம் பண்ணிகிட்டா மறுபடியும் நம்ம வீட்டு நிலைமை தான். அதனால நல்ல பணக்கார வீட்டு பெண்ணாக தான் கட்டனும் என்று பல்வேறு கனவுகளில் மூழ்கி இருந்தான்.


நாட்கள் விரைந்தோடியது...ஹேமாவிடம் பேசி ஒருவாரம் கடந்த நிலையில் பெண் வீட்டிலிருந்து ஜாதகமும், பெண்ணின் புகைப்படமும் வந்திருந்தது. பெண்ணின் படத்தை பார்த்து திருப்தியாக புன்னகைத்துக் கொண்டவர் கணவரை அழைத்துக் கொண்டு உடனே ஜோசியரிடம் சென்று பொருத்தம் பார்த்து விட்டு வந்தார்.


பத்தில் ஒன்பது பொருத்தம் பொருந்தி இருக்க, அதை கேட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்கு திரும்பினர்.


“பத்மாக்கும்,பிரகாசத்துக்கும் சொல்லாம நீ தப்பு பண்ணிட்ட பரி. பிள்ளைங்களுக்குள்ள நீ ரொம்ப பேதம் பார்க்கிற” என்றார் நாகராஜன்.


அதை கேட்டு கொண்டே கையிலிருந்த காப்பியை அவரிடம் கொடுத்துவிட்டு “ரகுவுக்கு பொண்ணு பார்கிறதை முன்னாடியே சொல்லி இருந்தா இந்நேரம் பத்மாவும், பிரகாசமும் சேர்ந்து அதை நடக்க விடாம கூத்தடிச்சியிருப்பாங்க” என்றார் எரிச்சலுடன்.


அவரை கோபமாக பார்த்து “அவங்களுக்கும் கூட பிறந்தவனுக்கு நல்ல இடமா அமையனும்னு ஆசை இருக்காதா? அதை போய் தப்பா சொல்றியே” என்றார்.


“யாரு? அவங்க ரெண்டு பேருக்குமா? ரெண்டு சுயநலம் பிடிச்சதுங்க. அதுல எதுவும் ஆதாயம் இருக்குமான்னு தான் பார்ப்பாங்க” என்றார்.


“உனக்கு அவங்க ரெண்டு பேரை கண்டா இளக்காரம்” என்று முணுமுணுத்துக் கொண்டே எழுந்து சென்றார்.


அவரை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு “இத்தனை வருஷம் ஆச்சு உலகத்தையும் புரிஞ்சுக்கல, குடும்பத்தையும் புரிஞ்சுக்கல” என்று கடிந்து கொண்டே சென்றார்.


மாலை பிரகாசம் வரும் முன்பு பத்மாவிற்கு போன் செய்தார் பரிமளம்.


“என்னமா அதிசயமா இருக்கு? நீயா போன் பண்ணி இருக்க?” என்றாள் நக்கலுடன் கூடிய குரலில்.


“ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்னு தான் பண்ணினேன் பத்மா” என்றார்.


அவர் சொன்னதுமே என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே “சொல்லும்மா” என்றாள்.


“நம்ம ரகுவுக்கு ஒரு பொண்ணோட ஜாதகம் வந்திருக்கு...நல்ல குடும்பமா இருக்கு. ஜாதகமும் பொருந்தி இருக்கு” என்றார்.


அதைக் கேட்டதுமே “என்ன! ஜாதகம் வந்திருக்கா? பொருத்தமும் பார்த்தாச்சா? ஏம்மா ஜாதகம் வந்தவுடனே என்கிட்டே சொல்ல மாட்டியா? எல்லாம் முடிஞ்ச பின்னாடி தான் சொல்வியா?” என்று தன் ஆட்டத்தை தொடங்கினாள்.


பரிமளமோ கொஞ்சமும் அசராது “எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கனும்னு அவசியமில்லை பத்மா. ஒவ்வொன்னுக்கும் உனக்கு போன் பண்ணி சொல்லிகிட்டா இருக்க முடியும்” என்றார் கடுப்புடன்.


அதைக் கேட்டவள் கொதித்தெழ “என் தலையெழுத்து இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தது. ஒவ்வொரு வீட்டில் தம்பி கல்யாணத்தில் அக்காவுக்கு எப்படி மரியாதை கொடுக்கிறாங்க. ஆனா, என்னை பெத்த அம்மாவே என்னை மதிக்க மாட்டேங்கறாங்க” என்று சலங்கையை கட்டிக் கொண்டு ஆடினாள்.


“நிறுத்து பத்மா! இப்போ நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லட்டுமா வேண்டாமா?” என்று கோபத்துடன் தான் பத்மாவின் அம்மா என்பதை நிரூபித்தார்.


அவர் கோபப்பட்டதும் படக்கென்று வாயை மூடிக் கொண்டவள், ‘இதென்ன அம்மா கோபப்படுறாங்க. அமைதியாவே போயிடுவோம். அப்புறம் ரகு கல்யாணத்தில் கறக்க வேண்டியதெல்லாம் குறைஞ்சு போச்சுன்னா..வேண்டாம்’ என்று தன்னையே அடக்கிக் கொண்டாள்.


“நம்ம ஹேமாவோட சின்ன மாமியார் பொண்ணு சிந்தாமணி இருக்கா இல்ல... அவளோட நாத்தனார் தான். ரெண்டே பொண்ணுங்க. பெரியவளை விருதுநகர்ல கட்டிக் கொடுத்திருக்காங்க. பொண்ணு பார்க்க பாந்தமா இருக்கா. ஜாதகமும் பொருந்தி இருக்கு” என்றார்.


ஹேமாவுக்கு சொந்தம் என்றதுமே அடங்கி இருந்த குணம் தலை தூக்க “ஒ...உன் பொண்ணு சொன்ன இடமா? உனக்கு எப்பவுமே அவ தானே உசத்தி” என்றாள் இடக்காக.


“ஏன் இவ்வளவு கேலியா பேசுற நீ உன் தம்பிக்கு பொண்ணு பார்த்திருந்தா வேண்டாம்னா சொல்லுவேன். உனக்கு எங்கே அதுக்கெல்லாம் நேரம் இருக்கு” என்றார் ஆத்திரத்துடன் பரிமளம்.


அவளோ அதை காதில் வாங்காமல் “பொண்ணு வீடு வசதி எப்படி?” என்றாள்.


“ரொம்ப வசதியான குடும்பமில்ல பத்மா. அதனால என்ன நமக்கு பொண்ணு தான் முக்கியம்” என்றார்.


“ஆமாம்! இவன் பார்க்கிற வேலைக்கு டாட்டா பிர்லாவா பொண்ணு கொடுப்பாங்க” என்றாள்.


அதுவரை இருந்த பொறுமை பறந்து போக “பத்மா! இதுக்கு மேல அனாவசியமா ஒரு வார்த்தை பேசின...நீ இல்லாமலே கல்யாணத்தை பண்ணிட்டு போயிடுவேன்” என்றார் ஆத்திரத்துடன்.


அவரின் கோபத்தைக் கண்டு வாயை இறுக மூடியவள் “சரிம்மா...மீதியை நான் அங்கு வரும் போது பேசிக்கலாம்” என்றாள் நல்ல பிள்ளையாக.


அவள் போனை வைத்ததும் அதையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். ஒரே வயிற்றில் பிறந்ததுங்க ஏன் இப்படி இருக்காங்க. ச்சே..என்ன குணமோ இது௧, என்று வெறுத்தபடி பெரிய பிள்ளைகள் இருவருக்கும் அழைத்து விஷயத்தை கூறினார்.


அவர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளாமல் ஏதோ மூன்றாவது மனிதர் வீட்டு விசேஷம் போல கேட்டுக் கொண்டனர். மனம் முழுவதும் வெறுப்புடன் மாடிக்கு சென்று அமர்ந்து விட்டார். நான் பெற்ற பிள்ளைகளுகுள்ளேயே எத்தனை பேதங்கள். எல்லோரையும் நான் தான் வளர்த்தேன். ஏன் எல்லோரும் ரகு, ஹேமா மாதிரி இல்லாம போனாங்க? என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தார்.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் – 7

பிரகாசம் வந்தததும் அவனிடம் ரகுவிற்கு பெண் பார்க்கும் விஷயம் சொல்லப்பட, அதை சற்று அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டவன் “பத்மா கிட்ட சொல்லிட்டீங்களா?” என்று கேட்டான்.

அவனது நோக்கத்தை புரிந்து கொண்ட பரிமளம் “எல்லார் கிட்டேயும் சொல்லியாச்சு பா...இனி, அடுத்த வாரம் பொண்ணு பார்க்க திருநெல்வேலி போகலாம்னு இருக்கோம்” என்றார்.

அவன் அதற்கு பதில் கூறாமல் ரகுவின் பக்கம் திரும்பி “நீ பொண்ணு போட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவனோ மெல்ல நிமிர்ந்து பார்த்து “இல்ல பிரகாசு...அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிடிச்சிருந்தா எனக்கு போதும்” என்றான்.

அதைக் கேட்டதும் மனதிற்குள்ளேயே ‘சரியான மண்ணாங்கட்டியா இருக்கான். இவன் இப்படி பழக்கி வச்சு...உலகத்திலேயே என்னவோ அவன் ஒருத்தன் தான் நல்ல பிள்ளை மாதிரி சீனை போடுங்க ரெண்டு கிழமும்’ என்று தாளித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் காவ்யா “அம்மா! பொண்ணு போட்டோ இருக்காம்மா? எனக்கு காண்பிக்கவே இல்லையே...காண்பிங்க-ம்மா” என்றாள்.

பீரோவிலிருந்து போட்டோவை எடுத்து வந்தவர் ரகுவிடம் கொடுக்க “அம்மா! நான் தான் பர்ஸ்ட் அண்ணியை பார்க்கனும்” என்று வம்புக்கு நின்றாள்.

அவளைப் பார்த்து புன்னகைத்த ரகு தன்னிடமிருந்த கவரை அவளிடம் கொடுத்து “பாரு” என்றான்.

கவரை திறந்து பார்த்து “ஹையோ! அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கண்ணா” என்று குதித்தாள்.

அவளிடமிருந்த போட்டோவை பறித்து மகனிடம் கொடுத்து “நீ பார்த்து சொல்லு ரகு” என்றார் பரிமளம்.

எந்த சுவாரசியமும் காட்டாமல் பார்த்து விட்டு “ம்ம்...பிடிச்சிருக்கும்மா” என்று திருப்பிக் கொடுத்தான்.

எல்லோரும் பார்த்து கடைசியாக பிரகாசத்ததிடம் வர, அவனும் பார்த்து விட்டு போட்டோவை அன்னையிடம் கொடுத்தவனின் மனம் ‘இவனுக்கு வந்த வாழ்வை பாரேன்...சரியான வருமானம் இல்லாததுக்கு கல்யாணமே அதிகம். இதில பொண்ணு வேற அழகா இருக்கு’ என்று புழுங்கிக் கொண்டு சென்றான்.

சாப்பிட்டுவிட்டு தனதறைக்குள் நுழைய போனவனை “பிரகாசு பொண்ணு பார்க்க நீ வருவியா?” என்று கேட்டார் நாகராஜன்.

அவர் அப்படி கேட்டதும் கடுப்பான பரிமளம் “அவன் எதுக்கு? பத்மா வரேன்னு சொல்லி இருக்கா...ஹேமாவும் வந்துடுவா...அதனால அவன் நிச்சயத்துக்கு வந்தா போதும்” என்றார்.

அவனும் “ஆமாம்-பா எனக்கும் லீவ் கிடைக்காது. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க” என்று கூறி கதவடைத்துக் கொண்டான்.

அறைக்குள் சென்றவனின் மனம் கணக்கு போட ஆரம்பித்தது. ரகு செய்யுற வேலைக்கு அவனுக்கு இந்த பொண்ணு சரி. ஆனா, அம்மாவை விட்டா பொண்ணு குணம் நல்லா இருக்கனும்ன்னு சொல்லி பஞ்ச பராரியை கட்டி வச்சிட்டா என்ன பண்றது? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த வாரத்தில் அனைவரும் திருநெல்வேலிக்கு கிளம்பினர். பத்மாவும், அவளது குழந்தையும் மட்டும் வர, வீரராகவன் தனக்கு ஆபிஸ் வேலை இருக்கிறது என்று கழண்டு கொண்டார். ரயிலில் இருந்தே பத்மாவின் ஆடம்பரம் ஆரம்பமானது.

“ஏம்மா! பொண்ணு வீட்டை பத்தி சொன்னதை பார்த்தா கல்யாணமாவது நமக்கு தகுந்தார் போல பண்ணுவாங்களா?” என்றாள் நக்கலுடன்.

அவளது கேள்வியில் எரிச்சலடைந்தவர் “நமக்கு தகுந்தார் போலன்னா? நாம என்ன பெரிய பணக்கார குடும்பமா? சொல்லப் போனா அவங்க நம்மளை விட வசதி” என்று கடுப்பாக கூறினார்.

இதில் எதுவுமே கலந்து கொள்ளாது தந்தையுடன் நிம்மதியாக பேசி சிரித்தபடி அமர்ந்திருந்தான் ரகு.

மறுநாள் காலை திருநெல்வேலி சந்திப்பில் இறங்கி ஒரு ஹோட்டலில் அரை எடுத்து தங்கியவர்கள், காலை கோவிலுக்கு சென்று விட்டு வந்து மாலை பெண் பார்க்க கிளம்பினர்.

பெண் வீடு நடுத்தர வர்க்க வீடுகளுக்கு அடையாளமாக இருந்தது. பெண்ணின் சிறிய தந்தையும், அவரது மனைவியும் மட்டுமே இருந்தனர். அதிக உறவினர் கூட்டமில்லாமல் இருந்தது ரகுவிற்கு நிம்மதியை கொடுத்தது.

சீதா காப்பியை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொருவராக கொடுக்க, பரிமளத்திற்கு அவளைப் பார்த்ததும் நிறைவாக இருந்தது. அதிக ஒப்பனை இல்லாது பெரிய உருவமாக இல்லாமல் ‘சித்து’ போல இருப்பவளை பார்த்ததும் ரகுவிற்கு ஏற்ற ஜோடி தான் என்று மகிழ்ச்சி அடைந்தார்.

ரகுவோ பதட்டமடையாமல் அமைதியாக வந்தவளை பார்த்ததும் திருப்தியாக உணர்ந்தான். அதையும் மீறி அவனுக்கு அவளிடம் பேச வேண்டி இருந்தது.

சீதாவை தன்னருகே அமர்த்திக் கொண்ட பரிமளம் அவளிடம் பேச்சுக் கொடுக்க, அவளும் பதறாமல் பதில் கூறிக் கொண்டிருந்தாள். பத்மாவோ அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே இருந்தவள் அன்னையிடம் “என்னம்மா இது! பொண்ணு பார்க்க வந்திருக்கோம்...ஒரு நல்ல டிபணா கொடுக்காம இதென்ன இப்படி கொடுத்திருக்காங்க” என்று காதை கடித்தாள்.

அவளை திரும்பி தீப்பார்வை பார்த்து விட்டு, சீதாவின் அன்னையிடம் பேச ஆரம்பித்தார்.

அதற்கெல்லாம் அசந்தால் அவள் பத்மா அல்லவே. சீதாவிடம் “நீ எப்பவும் இப்படி சாயம் போன கலர்ல தான் புடவை எடுப்பியா?” என்றாள் நக்கலாக.

அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ரகுவிற்கு அவள் என்ன பதில் கூறப் போகிறாள் என்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

பத்மாவை பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவள் “எனக்கு இந்த கலர்ஸ் தான்-கா பிடிக்கும். இந்த கலரை பார்க்கும் போது என் மனசுக்கு இதமா தோணும். உங்களுக்கு இதை பார்க்கும் போது சாயம் போன மாதிரி தோணுது. ஒவ்வொருத்தருடைய விருப்பங்கள் தனி அக்கா” என்றாள்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் மனதில் இளஞ்சாரல் வீசத் தொடங்கியது. என் மனசுக்கு பிடித்த மாதிரி இவள் இருப்பாள் என்று எண்ணிக் கொண்டான்.

பேச வேண்டியவற்றை எல்லாம் பேசி முடித்த பின், பெரியவர்கள் நிச்சயத்துக்கு நாள் குறிப்பதை பற்றி பேச ஆரம்பித்தனர்.

அப்போது ரகு தந்தையிடம் தான் பெண்ணுடன் பேச வேண்டும் என்று கூறினான்.

இரு வீட்டு பெரியவர்களும் சம்மதம் கொடுக்க, சீதா அவனை தோட்டத்து பக்கம் அழைத்துச் சென்றாள்.

அவனை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு சுற்றிலும் உள்ளவற்றை வேடிக்கை பார்ப்பது போல் நின்றாள். ரகுவிற்கும் தான் பேச வந்ததை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சிறிது நேரம் நின்றான்.

பேசித்தான் ஆக வேண்டும் என்கிற எண்ணம் எழ, மெல்ல தொண்டையை செருமியவன் “என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு எல்லாம் கேட்க மாட்டேங்க” என்றான்.

அவன் அப்படி சொன்னதை கேட்டதும் அதிர்ந்து போய் அவன் முகத்தை பார்க்க, அவனோ மெலிதாக புன்னகைத்து “என்னை பற்றி என் குடும்பத்தை பற்றி உங்களுக்கு விபரம் சொல்லி இருப்பாங்க. உங்க வயசில் இருக்கிற பெண்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனா, நான் ரொம்ப சராசரியான ஆள். எனக்கு அதிக வருமானம் இல்லை. ஒரு பொருளை நீங்க ஆசையா விரும்பி கேட்டா கூட என்னால வாங்கிக் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கேன். அதோட எனக்குன்னு சில கடமைகள் இருக்கு. புதுசா திருமணமான மற்ற ஜோடிகள் மாதிரி உங்களை சினிமாவுக்கு, பீச்சுக்கு கூட கூட்டிட்டு போக முடியாத நிலையில் இருப்பவன் நான். என்னோட நிலைமை இது தான்னு தெரிஞ்சு கல்யாணம் பண்ணிக்க மறுத்தேன். ஆனா, பெரியவங்களோட முடிவு இது. என்னால உங்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஒரே விஷயம் என்னோட அன்பு மட்டும் தான். அதுல எந்த குறையும் இருக்காது. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்” என்று கூறியவன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளை பார்த்திருந்தான்.

அந்த நிமிஷம் சீதா ஒன்றை உணர்ந்தாள். ‘எந்த ஆண் தன்னுடைய உண்மை நிலையை மனம் திறந்து ஒப்புக் கொள்வான்? அதிலும் பெண்ணை பார்க்க வந்துவிட்டு அவளிடம் தனது நிலையை எடுத்துக் கூறி, உன் முடிவை உன்னிடமே விடுகிறேன் என்று கூறும் இவன் எத்தனை உயர்வானவன்!’ என்று உள்ளம் நெகிழ்ந்து போனாள்.

நீண்ட பெருமூச்சை வெளியிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் இதழில் புன்னகையுடன் “நானும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து தாங்க வந்திருக்கேன். அதனால குடும்பத்தோட பொறுப்புகள் எல்லாம் என்னன்னு எனக்கும் தெரியும். அதே சமயம் எனக்கு கனவுகள் எல்லாம் இல்லைன்னு சொல்ல மாட்டேன். எனக்கும் கனவுகள் உண்டு. ஆனா, கனவுகளே வாழ்க்கைன்னு நினைக்கிற ஆள் நான் கிடையாது. நிதர்சனத்தை புரிஞ்சுக்கிற தன்மை இருக்கு. எப்போ உங்க மனசைத் திறந்து இதுதான் என் நிலைமைன்னு சொல்லிட்டீங்களோ...அப்போவே என்னுடைய மனசில் இடம் பிடிச்சிட்டீங்க. நானும் உங்க கிட்ட இருந்து வேற எதையும் எதிர்பார்க்கல. நீங்க கொடுக்கிறேன்னு சொன்ன அந்த அன்பு மட்டும் தங்கு தடையில்லாம எனக்கு கிடைச்சா போதும்” என்று சொன்னவள் அவன் விழிகளை பார்க்க தயங்கி தலையை குனிந்து கொண்டாள்.

அதுவரை அவள் என்ன சொல்வாளோ என்று யோசனையுடன் இருந்தவன் அவளை ரசனையுடன் பார்த்து “நிச்சயமா சீதா! என்னை புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி” என்றான் நிம்மதியாக.

அதன் பின்னர் நாட்கள் வேகமாக கடக்க, ரகு, சீதாவின் திருமணம் இனிதாக நடந்து மடிந்தது. ரகுவின் எதிர்பார்ப்பையும், பரிமளத்தின் ஆசையையும் நிறைவேற்றும் மருமகளாக அமைந்தாள் சீதா.

பரிமளத்தோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவள் வந்த பின்னர் அவருக்கு சமையலறையில் இருந்து ஓய்வு கொடுத்து, சின்னஞ்சிறிய உதவியை மட்டும் வாங்கிக் கொண்டு அவருக்கு நிறைவை கொடுத்தாள். காவ்யாவிற்கும் நெருங்கிய தோழியாக மாறிப் போனாள்.

பிரகாசம் வழக்கம் போல தான், தனது என்றே குடும்பத்தோடு ஒட்டாமல் அலைந்து கொண்டிருந்தான். வந்த புதிதில் அவனது செயல்களைக் கண்டு அதிசயித்து தனிமையில் ரகுவிடம் “என்னங்க உங்க தம்பி இப்படி இருக்காங்க...வாஷிங் மெஷினுக்கெல்லாம் கணக்கு பார்த்து தான் மட்டும் யூஸ் பண்றாங்க” என்றாள்.

அவளைப் பார்த்து சிரித்து மெல்ல அவள் இமைகளை வருடிக் கொடுத்தவன் “அவன் அப்படித்தான் சீதா. இதுக்கே அசந்து போனா எப்படி? அவன் பண்ற சில வேலை எல்லாம் ரொம்ப கொடுமையா இருக்கும்” என்றவன் தங்கை க்ரீம் கேட்டதற்கு அவன் செய்ததை எடுத்துக் கூற, முகவாயில் கையை வைத்தபடி “அடகொடுமையே! என்னங்க இது இப்படி கூடவா இருப்பாங்க” என்றாள்.

“அவன் அப்படித்தான்!”

ரகுவின் வாழ்க்கை இனியமையானதொரு பயணமாக மாற, பிரகாசத்திற்கோ வீட்டில் இருந்த அனைவரும் சந்தோஷமாக இருப்பது போல் படவே மிகவும் டென்ஷன் ஆனான்.

ரகுவிற்கு திருமணம் முடிந்து இரு மாதங்கள் கடந்த நிலையில் தீபாவளி பண்டிகை வர, அதை சாக்காக வைத்து தன் ஆட்டத்தை துவங்க எண்ணினான்.

பத்மா கணவனை போட்டு படுத்தி பட்டுப்புடவையும் நகையும் வாங்கிக் கொண்டாள். அதை அறிந்த பிரகாசம் அவளுக்கு போன் செய்து “என்ன பத்மா உன் வீட்டில் தடபுடலா தீபாவளி வந்துடுச்சு போல” என்றான்.

“ஏதோ இந்த வருஷம் தான் உங்க மாமா எனக்கு புடவையும் நகையும் திருப்தியா வாங்கிக் கொடுத்திருக்கார். அது உனக்கு பொறுக்கலையா?” என்றாள்.

அதைக் கேட்டு சத்தமாக சிரித்து “எனக்கு அதைப் பத்தி என்ன கவலை. அதுசரி நீ வாங்கினதை உன் தம்பி பொண்டாட்டி கிட்ட கொண்டு காண்பிக்கலையா?” என்றான்.

“ஏண்டா உனக்கு இந்த வேலை?அதை அவ பார்த்து வயிறு எரியுறதுக்கா?”

“நீ அப்படி நினைச்சிட்டு இருக்கியா? அம்மா அவளுக்கு செஞ்சிருக்கிறதை பார்த்து நீ வயிறு எரியாம இருந்தா சரி தான்” என்று கொளுத்திப் போட்டான்.

“என்னடா சொல்ற?” என்றாள் சந்தேகமாக.

“அம்மாவுக்கு நம்மளை தான் பிடிக்காது பத்மா. ரகுவை ரொம்ப பிடிக்கும் இல்ல. அவங்களோட செல்ல பிள்ளையோட பொண்டாட்டிக்கு பட்டுபுடவை எடுத்துக் கொடுத்து ஒரு சங்கிலி வேற வாங்கி கொடுத்திருக்காங்க தீபாவளிக்கு” என்றான்.

அதைக் கேட்டு அதிர்ந்தவள் “என்னது? பட்டுபுடவை, சங்கிலியா? அம்மாட்ட ஏதுடா இவ்வளவு காசு?”

“ஏதோ தோடு வச்சிருந்தாங்கலாமே? அதை வித்து தான் இதெல்லாம் வாங்கி இருக்காங்க” என்றான்.

“ஐயோ-ஐயோ...நான் கேட்டப்ப எல்லாம் என்கிட்டே ஏது காசு,பணம்ன்னு புலம்பிட்டு இப்போ புது மருமகளுக்கு பட்டுப்புடவையும் நகையும் வாங்கிக் கொடுக்க முடிஞ்சுதாமா? நாளைக்கு வந்து கச்சேரியை வச்சுகிறேன்” என்றாள் ஆத்திரத்துடன்.

“நாம எப்பவும் இளிச்சவாயா இருக்கக் கூடாது பத்மா” என்றவன் “என் மனசு கேட்காம தான் உனக்கு போன் செஞ்சு சொன்னேன்..சரி நான் போனை வைக்கட்டுமா?” என்றான்.

“பிரகாசு! மாமா எனக்கு புடவை, நகை வாங்கிக் கொடுத்ததெல்லாம் சொல்லி வைக்காதே” என்றாள்.

“அதெல்லாம் சொல்லுவேனா” என்று கூறி தனக்குள் சிரித்துக் கொண்டு அலைபேசியை அனைத்தான்.

சற்று நேரம் யோசனையுடன் நடந்தவன் அடுத்து ஹேமாவின் கணவனுக்கு அழைத்தான்.

“அத்தான் நான் தான் பிரகாசம் பேசுறேன்”

“என்ன பிரகாசு அதிசயமா இருக்கு நீ போன் பண்ற?” என்றான் பார்த்திபன்.

“தீபாவளி எல்லாம் வருது...வீட்டு மாப்பிள்ளை உங்களுக்கு எதுவும் வேணுமான்னு போன் பண்ணி கேட்டாங்களா அப்பாவும், அம்மாவும்?”.

அவனோ “அப்படியே உங்க வீட்டில் கேட்டுட்டாலும்? நானா வந்து கேட்டு வாங்கினா தான் உண்டு” என்று சலித்துக் கொண்டான்.

“அதுக்கு தான் அத்தான் போன் பண்ணினேன். இப்போ ரகுவுக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு. நீங்க ஒதுங்கி இருந்தா உங்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்காம போயிடும் இல்ல...நீங்க தீபாவளிக்கு உங்களுக்கு வேணும்றதை லிஸ்ட் போட்டு அனுப்புங்க” என்றான்.

சற்று யோசனையுடன் “அப்படி சொல்றியா மாப்பிள்ளை. ஆனா, நீ கைகாசை எடுக்க மாட்டியே... அடுத்தவனை கையை காட்டிட்டு ஒதுங்குற ஆள் ஆச்சே” என்று நக்கல் அடித்தான்.

அதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் “யார் பண்ணினா என்ன அத்தான். எங்க வீட்டில் இருந்து கிடைக்க வேண்டியது கிடைச்சா சரி தான்” என்றான்.

“சரி...சரி நீயே சொல்லிட்ட...நாளைக்கு மாமனாருக்கு போனை பண்ணி தீபாவளிக்கு வேண்டியதை கேட்டுடுறேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு நிம்மதியாக உணர்ந்த பிரகாசம் “நேரமாச்சு அத்தான் . நான் சொன்னதை மறக்காம கேட்டுடுங்க” என்று கூறி வைத்தவன் படுக்கையில் சாய்ந்து கொண்டு கொளுத்தி போட்டாச்சு இனி எனக்கு நல்லா பொழுது போயிடும் என்று எண்ணிக் கொண்டு கண்ணை மூடினான்.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம் – 8

பிரகாசம் சொன்னதை வைத்துக் கொண்டு அடுத்த நாளே வந்து குதித்தாள் பத்மா.

எப்பபொழுதும் சனி, ஞாயிறுகளில் மட்டுமே வரும் மகள் அன்று வந்ததுமே பரிமளத்திற்கு சஞ்சலம் தோன்றியது. என்னவோ இருக்கு...இவ இப்படி திடீர்ன்னு வந்திருக்கான்னா ஏதோ ஓரண்டையை இழுக்கப் போறான்னு அர்த்தம் என்று நினைத்துக் கொண்டார்.

“வா பத்மா...என்ன சொல்லாம கொள்ளாம வந்திருக்க?” என்றார்.

வீட்டை கண்களால் அளந்து கொண்டே, சீதாவை எங்கும் காணாமல் “ஏன் பொறந்த வீட்டுக்கு வரதுக்கு சொல்லிட்டு தான் வரனுமா?” என்றவள் “எங்கே உன் அருமை மருமக? உன்னை வேலை செய்ய விட்டுட்டு தூங்குறாளா?” என்றாள்.

மகளைப் பற்றி அறிந்த காரணத்தினால் அவள் பேசியதை காதில் வாங்கிக் கொள்ளாது “மாடிக்கு துணி காயப்போட போயிருக்கா” என்றார்.

“ஏம்மா தீபாவளி வருதே...உள்ளூர்லயே பொண்ணு இருக்காளே அவளுக்கு என்ன வேணும்னு கேட்போம்னு ஏதாவது தோணுச்சா உனக்கு?” என்று ஆரம்பித்தாள்.

அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டே “இதென்ன புதுசா கேட்கிற பத்மா? இத்தனை வருஷமும் நீ இங்கே தானே இருந்த. நாங்களும் இங்கே தான் இருந்தோம். ஏதோ தலை தீபாவளிக்கு தான் எடுத்து கொடுப்போம். திடீர்ன்னு இந்த வருஷம் புதுசா ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிற” என்றார் கடுமையாக.

“நீங்க மட்டும் புதுசா நடந்துக்கலையா அம்மா. அப்போ நானும் அப்படி தான் நடந்துப்பேன்” என்றாள் காட்டமாக.

“என்ன சொல்ற?”

“நீ எந்த மருமகளுக்கு பட்டுப்புடவையும், நகையும் வாங்கிக் கொடுதிருக்கம்மா?”

“என்னடி சொல்ற?” என்றார் அதிர்ச்சியாக.

“என்னம்மா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? இதோ பாரு நீ உன் மருமகளுக்கு என்ன வேணா எடுத்துக் கொடு...எனக்கு அதெல்லாம் தேவையில்ல...ஆனா, எனக்கு பட்டுபுடவை வந்தாகனும்” என்றாள் கறாராக.

அப்போது மாடியிலிருந்து வந்த சீதா அவளைப் பார்த்து சிரித்து “வாங்கக்கா...இப்போ தான் வந்தீங்களா?” என்றாள்.

“ம்ம்...ரொம்ப சீக்கிரம் வந்து கூப்பிட்டுட்ட” என்று நொடித்துக் கொண்டாள்.

சீதாவிற்கு அவளின் நடவடிக்கை பழகிப் போனதால் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் துணிமணிகளை கொண்டு வைத்துவிட்டு வந்து சிறிது பலகாரமும், காப்பியும் போட்டு எடுத்துக் கொண்டு வந்து தந்தாள்.

பத்மாவோ அதையெலாம் கவனிக்காது அன்னையிடம் “சொல்லும்மா...தீபாவளிக்கு எனக்கு என்ன புடவை எடுத்து தரப் போற?” என்றாள்.

மகளது பேச்சு கடுப்பைக் கொடுக்க, மருமகளை வைத்துக் கொண்டு பேசவும் முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

அப்போது சீதா அறைக்குச் சென்று பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவையை எடுத்து வந்து அவளிடம் நீட்டி “அக்கா! உங்களுக்கு தான் அத்தை எடுத்து வச்சிருக்காங்க...கலர் பிடிச்சிருக்கா பாருங்க?” என்றாள்.

இதை எதிர்பார்க்காத பரிமளம் திகைத்துப் போய் “சீதா என்ன இது” என்று ஆரம்பிக்கும் முன்பே “என்னத்தை அக்கா கிட்ட காண்பிச்சு அவங்களுக்கு கலர் பிடிச்சிருந்தா இதையே கொடுத்திடலாம் இல்லேன்னா மாத்தி கொடுக்கனும்னு சொல்லிட்டு இருந்தீங்களே மறந்துட்டீங்களா?” என்றாள்.

ரகுவின் மனைவி ரகுவைப் போலவே இருப்பதைக் கண்டு கண்கள் கலங்க மகளை முறைத்தார்.
சீதா தனக்கு வாங்கி வந்த புடவையைக் கொடுப்பாள் என்று எதிர்பார்க்காத பத்மா ஒருநிமிடம் யோசித்தாலும், சரி வருவதை ஏன் விடுவானேன் என்று புடவையை பிரித்து ஆராய்ந்து விட்டு “எனக்கு இந்த கலர் பிடிக்கல...பில்லை கொடுத்தா நான் மாத்திக்கிறேன்” என்றாள்.

‘இது சீதாவிற்கு வாங்கிய புடவை என்று அவளுக்கு தெரியும்!’ என்பதை அறிந்து கொண்ட பரிமளம் நொந்து போனார். தனது வளர்ப்பு இப்படி கேவலமாக நடந்து கொள்வதை எண்ணி வருத்தப்பட்டு தலையைக் குனிந்து கொண்டார்.

இது எதை பற்றியும் கவலைப்படாத பத்மா “எனக்கு மட்டும் புடவை எடுத்து கொடுத்தா போதும்மா. உங்க மாப்பிளைக்கு எல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். பொறந்த வீட்டோட நிதி நிலைமையை தெரிஞ்சுக்காத அரக்கி நானில்ல. அவரை நான் சமாளிச்சுக்கிறேன்” என்றாள்.
அதுவரை பொறுமையாக இருந்த பரிமளம் “ஹப்பா! பொறந்த வீட்டு மேல உனக்கிருக்கிற பாசத்தை தான் கண்கூடா பார்த்தேனே...வந்த வேலை முடிஞ்சிடுச்சு இல்ல கிளம்புற வழியைப் பாரு” என்றார் கடுப்புடன்.

பிரகாசத்தின் அக்கா நான் என்பது போல் சிறிதும் அசராமல் சீதாவைப் பார்த்து “மதியானத்துக்கு எனக்கும் சேர்த்து சமையலை பண்ணு. சாப்பிட்டுட்டே கிளம்புறேன்” என்றவள் எழுந்து அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.

அவள் போவதையே வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் பரிமளம். இந்த வீட்டுல பொறந்து வளர்ந்ததுங்க தானே, எப்படி பெத்தவங்க மேலையும், கூட பிறந்தவங்க மேலையும் பாசம் இல்லாம போச்சுன்னு தெரியல...என்ன புத்தியோ என்று சலித்துக் கொண்டு மருமகளுக்கு உதவ சென்றார்.

மாலை நான்கு மணி வாக்கில் பத்மா சென்ற பின்னர், மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டிருக்கும் போது போன் அடிக்க எடுத்தவரின் முகம் மாறிப் போனது. ஹேமாவின் கணவர் அழைத்திருந்தார்.

“அத்தை! தீபாவளி நெருங்கிகிட்டு எனக்கு ஒரு ரெண்டு பவுனுக்கு செயின் வாங்கி அனுப்பிடுங்க” என்றார் அதிகாரமாக.

அதைக் கேட்டதும் அதிர்ச்சியாக “என்ன மாப்பிள்ளை திடீர்ன்னு?” என்றார்.

“என்ன இப்படி கேட்குறீங்க? உங்க வீட்டுக்கு மாப்பிள்ளைக்கு நீங்களா வாங்கிக் கொடுக்கனும். நானா கேட்ட பிறகும் இப்படியொரு கேள்வி கேட்டா என்ன சொல்ல?” என்றார் கடுப்புடன்.

பரிமளமோ மாப்பிள்ளையிடம் “என்ன மாப்பிள்ளை இப்படி பேசுறீங்க?” என்றார் பதட்டத்துடன்.
“வேற எப்படி பேச சொல்றீங்க? தீபாவளி வருதே மாப்பிள்ளைக்கு முறை செய்யனும்னு யோசிச்சீங்களா?”

“இல்ல மாப்பிள்ளை...அது வந்து கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சேன்னு” என்று இழுத்தார்.

அவனோ விடாக் கொண்டனாக “ஆமாம் ஏழு வருஷம் தான் ஆச்சே. உங்க மகளை திருப்பி கொண்டு வந்து விட்டுடவா?” என்றான் நக்கலாக.

அதைக் கேட்டு பதறிப் போனவர் “மாப்பிள்ளை!” என்றார் அதிர்ச்சியாக.

அவனோ அசராமல் “ரெண்டு நாளில் எனக்கு செயின் வந்தாகனும்” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா மாமியாரின் தோளின் மீது கையை வைத்து அழுத்தி “அத்தை! டென்ஷன் ஆகாதீங்க. எனக்கு வாங்கி கொடுத்த செயினை அனுப்பி விடுங்க” என்றாள்.

அவள் கைகளைப் பற்றிக் கொண்டவர் “கல்யாணம் ஆகி ஏழு வருஷம் கழிச்சு மாமியார் வீட்டில் கேட்டு வாங்குறானே இவனெல்லாம் என்ன மனுஷன்...மாப்பிள்ளையா போயிட்டானேன்னு பார்க்கிறேன்” என்றார் வெறுப்புடன்.

“விடுங்க அத்தை! எல்லோரும் ஒன்று போலவே இருக்கிறதில்லையே”.

“உன் வயசுக்கு உனக்கு இருக்கிற பக்குவம் ஏன் இவங்களுக்கெல்லாம் வரல? என் வயிற்றில் பிறந்ததே இப்படி இருக்கு” என்று பத்மாவை எண்ணி சலித்துக் கொண்டார்.

“அத்தை! எழுந்து வாங்க...காபி போட்டு தரேன் குடிச்சிட்டு பக்கத்தில் இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்று கூறி அவர் மனதை மாற்ற முயன்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த பரிமளம் ‘நான் செய்த ஒரே புண்ணியம் ரகுவும், இவளும் எனக்கு கிடைச்சது தான். இவங்க ரெண்டு பேரும் இல்லேன்னா காவ்யா நிலைமை என்னவாகி இருக்கும்’ என்று யோசித்து பெருமூச்சை விட்டார்.

வீட்டிற்குள்ளேயே ஒருவருக்கொருவர் பத்த வைத்து விட்டு ஆபிஸ் சென்ற பிரகாசத்துக்கு போன் மூலமாக இடி விழுந்தது தலையில்.

குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டிருந்தவனை திடீரென்று பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அழைத்தார்கள்.

“யார் சார் நீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” என்றான்.

“சார் நான் உங்க பக்கத்து பிளாட் ஒனர். நீங்க சீக்கிரம் இங்கே கிளம்பி வாங்க. உங்க பிளாட்டில் ஒரு பிரச்சனை” என்றார்.

பிரகாசமோ அதைக் கேட்டு கடுப்பாகி “ஹலோ! எதுவா இருந்தாலும் என் டெனன்ட் கிட்ட பேசிக்கிறேன்” என்றான்.

“சார்! போலீஸ் வந்திருக்கு..சீக்கிரம் கிளம்பி வாங்க...உங்க டெனன்ட் தான் பிரச்சனை” என்றார்.
அதைக் கேட்டவன் மிரண்டு போய் “வாட்? போலீசா?” என்றான்.

“ஆமாம் சார்! சீக்கிரம் வாங்க”

அவர் சொன்னதைக் கேட்டு பயந்து போய் அடித்து பிடித்துக் கொண்டு தனது பிளாட்டிற்கு சென்றான். அங்கே அவனது பிளாட்டின் முன்பு கூட்டம் கூடி நின்றது. போலீஸ்காரர்கள் வீட்டின் கதவை உடைக்க முயன்று கொண்டிருந்தனர்.

அவசரமாக அவர்கள் அருகில் சென்றவன் “சார் நான் தான் இந்த வீட்டு ஒனர். என்ன பிரச்சனை?” என்றான்.

இன்ஸ்பெக்டர் அவனை திரும்பி பார்த்து “ஏன்யா வாடகைக்கு வைக்கும் போது ஆளை பார்த்து வைக்க மாட்டீங்களா? காசு கொடுத்தா எவனுக்கு வேணும்னாலும் வாடகைக்கு கொடுத்துடுவீங்களா?” என்று கடித்தார்.

“என்ன சார்?”

“எதுவும் நாத்தம் வருதா இல்லையா? கொன்னு போட்டுட்டு போயிருக்கானோ என்னவோ?” என்றார்.

அவர் சொன்னதும் தான் அந்த வாடை வயிற்ரை பிரட்டுவது போல் தோன்ற முதன் முதலாக அவனது கண்களில் பீதி தெரிந்தது.

ஒருவழியாக கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் அதிர்ந்து நின்றனர். அங்கு ஒரு பிரபல சீரியல் நடிகை கழுத்து திருகப்பட்டு கிடந்தார். இறந்து எப்படியும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கும் போல் தோன்றியது.

பிரகாசத்துக்கு அதைப் பார்த்ததும் வியர்த்து வழிய ஆரம்பித்தது. போலீஸ் தனது நடவடிக்கையை ஆரம்பிக்க, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவரையும் விடாது விசாரித்து இறுதியாக பிரகாசத்தையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்று ஸ்டேஷனில் கொண்டு வைத்து விசாரித்தனர்.

உள்ளுக்குள் உதறல் எடுத்ததில் யாரிடம் உதவி கேட்பது என்று புரியாமல் அமர்ந்திருந்தான். வீட்டில் சொல்லலாம் என்றால் யாருக்கும் வீடு வாங்கியது தெரியாது. அண்ணன்களிடமும் சொல்ல முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தான்.

அப்போது அவனது போனிற்கு அழைப்பு வந்தது. மதி தான் அழைத்திருந்தாள்.

“ஹலோ பிரகாஷ்...சார் லைன்ல இருக்கீங்களா?”

யோசனையுடன் “ம்ம்...நான் வெளில இருக்கேன்...அப்புறம் பேசலாம்” என்றான்.

“சார்! ஒரு நிமிஷம் போனை வச்சுடாதீங்க. உங்களுக்கு ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன். ஏதாவது உதவி வேணும்ன்னா சொல்லுங்க” என்றாள்.

“நான் இப்போ போலீஸ் ஸ்டேஷனில் இருக்கேன். உங்களால என்ன உதவி பண்ணிட முடியும் சொல்லுங்க” என்றான் எரிச்சலுடன்.

அதைக் கேட்டவள் “சார்! எந்த பிரச்சனையாக இருந்தாலும் பார்த்துக்கலாம். நீங்க இப்போ எந்த ஸ்டேஷனில் இருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சந்தேகத்துடன் தான் இருக்கும் ஸ்டேஷனை சொல்லிவிட்டு நம்பிக்கை இன்றி அங்கு நடப்பவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
ஒரு அரை மணி நேரம் கழித்து ஒரு வக்கீலுடன் வந்தாள் மதி.
 
  • Like
Reactions: lakshmi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,425
939
113
அத்தியாயம்- 9

வக்கீல் வந்தவுடன் ஒரு தெம்பு வந்தது போல் உணர்ந்தான். அவன் சார்பாக பேசி, வாடகைக்கு இருந்தவர்களைப் பற்றிய தகவல்களை எல்லாம் கொடுத்து முடித்து விட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றானது.

மிகவும் ஓய்ந்து போன தோற்றத்துடன் நின்றவனை பார்த்த மதி “சார் வீட்டுக்கு போறீங்களா? இல்ல ஆபிசுக்கு போகலாமா?” என்றாள்.

இப்படியொரு சம்பவத்தை எதிர்பார்க்காததால் இந்த மனச் சோர்வுடன் வீடு செல்லவும் விருப்பம் இல்லாமல், அதேசமயம் ஆபிசிற்கு செல்லவும் விருப்பம் இல்லாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதுதான் நல்ல சந்தர்பம் என்றெண்ணி “எங்க வீட்டுக்கு வேணா வாங்க சார். ஒரு சேஞ்சா இருக்கும். ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு போங்க” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் சற்று யோசித்து விட்டு அவளுடன் கிளம்பினான்.
தனக்கு கீழே வேலை செய்யும் அவளது வீடு நிச்சயமாக ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு போல தான் இருக்கும் என்றெண்ணிக் கொண்டு போனவனுக்கு அவளது வீடு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

உயர் ரக சோபாக்களும், எல்ஈ.டி டிவியும் எங்கும் ஒரு பணக்காரத் தன்மையுடன் இருந்தது. அதைக் கண்டு மலைத்து நின்றவனைப் பார்த்து “உள்ளே வாங்க சார்” என்றழைத்துச் சென்றாள்.

அவன் சென்று அமர்ந்து ஒரு பத்து நிமிடம் வரை வீட்டிலிருப்பவர்கள் யாரும் வெளியே வரவே இல்லை. ஒருவித சங்கடத்துடன் அமர்ந்திருந்தவனைப் பார்த்து “சாரி சார்! அம்மா ஷாப்பிங் போயிருக்காங்க. தங்கை வேலைக்குப் போயிருக்கா. இருங்க நான் போய் சூடா காப்பி போட்டு கொண்டு வரேன்” என்று எழுந்து சென்றாள்.

அவனால் அவளது பொருளாதார நிலைமையை ஜீரணிக்க முடியவில்லை. இவளுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு வசதியான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அப்போது கை நிறைய பைகளுடன் ஒரு நடுத்தர வயது பெண் உள்ளே வந்தார். கொண்டு வந்த பைகள் அனைத்தையும் டீபாயின் மீது வைத்து விட்டு வியர்வையை துடைத்துக் கொண்டு அமர்ந்தவர், அவனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.

கைகளில் காப்பியுடன் வந்த மதி அவரைப் பார்த்து “என்னம்மா ஷாப்பிங் முடிஞ்சுதா?” என்றாள்.

அதைக் கேட்டதும் மனதிற்குள் ‘ஒ..இவர் தான் இவள் அம்மாவா? என்னவோ சின்ன பொண்ணு மாதிரி டிரஸ் பண்ணியிருக்காங்க’ என்றெண்ணிக் கொண்டான்.

அவரோ “ம்ம்...பாதி தான் முடிஞ்சுது மதி. ஐ அம் சோ டயர்ட்” என்றவர் அவனை பற்றி அவளிடம் எதுவும் கேட்காது “நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்.இதையெல்லாம் என் கப்போர்ட்டில் எடுத்து வச்சிட்டு ஒரு கிளாஸ் ஜூஸ் கொண்டு வா’ என்றபடி எழுந்து சென்றார்.

அம்மாவும் பெண்ணும் பேசியதைக் கேட்டவனின் பார்வை அவர் வாங்கி வந்திருந்த பைகளின் மீது சென்று விலகியது. ‘இது தான் பாதியா? அப்போ இன்னும் எவ்வளவு வாங்கியிருப்பார்’ என்றெண்ணி மலைத்துப் போனான்.

அவர் உள்ளே சென்றதும் அவன் புறம் திரும்பியவள் “சாரி பிரகாஷ் சார்! அம்மா எப்பவும் இப்படித்தான். நீங்க காப்பியை எடுத்துக்கோங்க” என்று கொடுத்தாள்.

காபியின் மணத்தில் வேறு எதுவும் சிந்திக்காது அதை அருந்த ஆரம்பித்தான். மனமோ தனது பிளாட்டில் நடந்தவைகளை எண்ணிக் கொண்டிருந்தது. அவனது மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொண்டவள் “கவலைபடாதீங்க சார்! நம்ம வக்கீல் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வார்” என்றாள்.

“ம்ம்..ரொம்ப டென்ஷனாகிடுச்சு மதி”

“ப்ரீயா இருங்க...வீட்டை வாடகைக்கு தான் விட்டீங்க. மற்றபடி உங்க மேல எந்த தப்பும் இல்ல...பார்த்துக்கலாம்” என்றாள்.

“ம்ம்...” என்றவன் “உங்க தங்கை என்ன பண்றாங்க மதி?” என்றான்.

“அவ ஒரு மல்டி நேஷனல் கம்பனியில வேலை பார்க்கிறா சார்”

“ஒ...நீங்களும், உங்க தங்கையும் மட்டும் தானா? அண்ணன், தம்பி...” என்று இழுத்தான்.

“நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் சார். எனக்கு ஒரு விபத்தில் யுட்ரஸ் எடுத்திட்டாங்க. அதனால தான் தங்கைக்கு இப்போ கல்யாணத்துக்கு பார்த்துகிட்டு இருக்கோம். ஆனா, அவ உங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றா” என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்தவன் “உங்க அப்பா என்ன பண்றார்ன்னு சொல்லவே இல்லையே?” என்றான்.

அதற்கு சற்று முகத்தைச் சுளித்து “அவர் நாலு வருஷமா படுத்த படுக்கையா இருக்கார். காய்ச்சல் வந்ததில் கால்கள் எல்லாம் இழுத்துகிட்டு. வாதம் வந்த மாதிரி ஆகிடுச்சு” என்றாள்.

அப்போது இளம் மஞ்சள் நிற சுடிதார் அணிந்து பெங்களுர் தக்காளி போன்ற உருவத்துடன் உள்ளே நுழைந்தவளை வாயைத் திறந்து கொண்டு பார்த்தான் பிரகாசம்.

அவளும் அவனைப் பார்த்ததும் அதிசயித்து நேரே அவனிடம் வந்து “ஹாய் பிரகாஷ்” என்று கையை நீட்டினாள்.

அவளைப் பார்த்து மலைத்து அமர்ந்திருந்தவன் தன்னையறியாமலே கையை குலுக்கினான்.

அவனிடம் கை குலுக்கி விட்டு அக்காவின் பக்கம் திரும்பி அவளை முறைத்து “பிரகாஷை கூட்டிட்டு வரப் போறேன்னு சொல்லவே இல்லையே” என்றாள் கோபத்துடன்.

தங்கை முறைத்ததுமே முகம் மாறி “இல்ல-டி திடீர்னு தான் முடிவு செஞ்சோம். சாருக்கு ஒரு நெருக்கடி. அதுக்கு ஹெல்ப் பண்ண போனேன்” என்றாள்.’

பட்டென்று அவனருகில் அமர்ந்தவள் “என்ன பிரகாஷ் பிரச்சனை? நான் எதுவும் ஹெல்ப் பண்ண முடியுமா?” என்றாள்.

அவளது செயலைக் கண்டு அதிர்ந்தவன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு “மதி பண்ணிட்டாங்க...இப்போ ஒன்னும் பிரச்சனையில்ல” என்றான்.

அவளோ மதியின் பக்கம் திரும்பி ஒற்றை விரலை நீட்டி “இதோ பார் மதி! பிரகாஷுக்கு எது செய்யறதா இருந்தாலும் நான் தான் செய்யனும். எனக்கு சொல்லாம நீ எதுவும் பண்ணக் கூடாது” என்றாள் மிரட்டலாக.

அவளைப் பார்த்து மென்சிரிப்பை பதிலாகத் தந்து பிரகாசத்திடம் “பாருங்க சார்! இவளுக்கு உங்க மேல இருக்கிற லவ்வை” என்றாள் கேலியாக.

அவனோ அந்த நாளின் அதிர்ச்சிகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அவனிடம் அவளை பேச விட்டு-விட்டு மதி அங்கிருந்து மெல்ல நழுவி தனதறைக்குள் சென்றாள்.

கிரிஜா அவனிடம் அவனது குடும்பத்தைப் பற்றியும், அவனைப் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டாள். அவளது உரிமையான நடவடிக்கைகளை மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் இயலாமல் அமர்ந்திருந்தான். அதே சமயம் மதி அவனிடத்தில் சொன்னவைகள் வேறு அவனை சிந்திக்க வைத்தது.

‘நல்ல சம்பளம் வாங்குகிறாள். பார்க்கவும் நல்லா தான் இருக்கிறா.இவ சம்பளத்தை வச்சு நாலு வீடு வாங்கிப் போட்டுடலாம் போல இருக்கே’ என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

மெல்ல-மெல்ல அவனது மனம் அவளை மணந்து கொண்டால் என்ன என்று சிந்திக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் அவர்களிடம் விடைப் பெற்று வீட்டிற்கு வந்த பின்னர் கூட அதே சிந்தனையில் இருந்தான். அதனால் பத்மா வந்து போனது, ஹேமா கணவன் செயின் கேட்டது எல்லாம் அவனை மகிழ்விக்கவில்லை. அன்னையின் ஜாடைமாடையான பேச்சுகளும் அவனை ஒன்றும் செய்யவில்லை.

அவனது மோன நிலையை கலைக்கும்படி அமைந்தது பெண்கள் மூவரும் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சிரிப்பைப் பார்த்ததும் சற்று எரிச்சலாக இருந்தது. அப்போது தான் ஞாபகம் வந்தது தான் கொளுத்திப் போட்டும் இவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்களே என்று.

மெல்ல அவர்கள் பேசும் இடத்துக்கருகில் சென்று நின்றவன் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தான்.

சீதா பரிமளத்திடம் “அத்தை எனக்கு தையல் தெரியும். வீட்டில் பாதி நேரம் சும்மா தானே இருக்கேன். உங்க தையல் மெஷினை கொடுத்தீங்கன்னா...நான் வெளியில உள்ளவங்களுக்கு தச்சு கொடுக்கலாம்” என்றாள்.

அதைக் கேட்ட பரிமளமோ “ஏன் மா உனக்கு தான் வீட்டிலேயே நிறைய வேலை இருக்கே...இதுல தையல் வேலையை வேற இழுத்து விட்டுகிறேன்னு சொல்ற” என்றார் பரிவாக.

அதற்குள் காவ்யாவோ “அண்ணி! உங்களுக்கு சுடிதார் தைக்கத் தெரியுமா?” என்றாள்.

அவள் தலையில் தட்டி “ஒ..ரொம்ப நல்லாத் தெரியும். இனிமே வெளில தைக்கக் கொடுக்காதே. உனக்கு என்ன மாதிரி வேணுமோ சொல்லு நானே தச்சு கொடுத்திடுறேன்” என்றாள்.

அதைக் கேட்டதும் குதித்து சீதாவைக் கட்டிக் கொண்டாள்.

ரகு அமர்ந்து இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். நாகரஜனோ வழக்கம் போல “பத்மாவையும் உன் கிட்டேயே கொடுக்க சொல்லம்மா” என்றவரை பரிமளம் முறைத்தார்.

‘இவருக்கு கூறே கிடையாது. அப்படி என்ன தான் அந்த பொண்ணு மேல பாசமோ’ என்று மனதிற்குள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாசத்திற்கு அவர்களின் சிரிப்பு அனலை அள்ளிக் கொட்டியது. அப்போது அவனது அலைப்பேசி அடிக்க அதை எடுத்துப் பார்த்தவன் மூத்த அண்ணன் அழைப்பதைக் கண்டதும் மெல்ல நழுவி மொட்டை மாடிக்குச் சென்றான்.

“சொல்லு கிருஷ்ணா? என்ன இந்த நேரத்துக்கு போன் பண்ணியிருக்க” என்றான்.

“நீ என்னடா பண்ணிட்டு இருக்க? உன் பிளாட்டில் கொலை நடந்திருக்கு. போலீஸ் ஸ்டேஷன் வரை போயிட்டு வந்திருக்க. குடும்பத்தில் எதையும் சொல்லாம இருக்க. உன் மனசில் என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” என்று அதட்டினான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போய் நின்றான். தான் வீடு வாங்கியது எவருக்கும் தெரியாது என்று இறுமார்ந்திருக்க, இன்று போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்ததைக் கூட அறிந்திருக்கும் அண்ணனைக் கண்டு உறைந்து நின்றான்.

“ஹலோ..ஹலோ..பிரகாசு..லைன்ல தான் இருக்கியா?”

அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன் “ம்ம்..இருக்கேன்...உனக்கு எப்படித் தெரியும்?” என்றான் கடுப்புடன்.

“என் மாமனார் தான் சொன்னார்-டா. நீ வீடு ரெஜிஸ்ட்ரேஷன் முடிச்சவுடனே எனக்கு விவரம் தெரியும். நீயா சொல்வேன்னு பார்த்தேன். நீ தான் எப்பவும் எல்லாத்தையும் மறைப்பியே. சரின்னு விட்டுட்டேன்” என்றான்.

“அது சரி ஆனா என் வீட்டில் கொலை நடந்தது எப்படித் தெரியும்?” என்றான்.

“என் மாமனார் தான் சொன்னார் டா” என்றான் இறங்கிய குரலில்.

“மச்...நான் வெச்ச பயலுங்க இப்படியொரு வேலையை பண்ணுவானுங்கன்னு நினைக்கல” என்றான் எரிச்சலுடன் கூடிய குரலில்.

“பிரகாசு நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத. காசு பணத்தை விட நிம்மதி முக்கியம்” என்றான் கிருஷ்ணா.

“ஏன் சொல்ல மாட்ட? நல்ல வசதியான வீட்டுக்கு மாப்பிள்ளையா போயிட்ட. அதனால காசு பணம் உனக்கு பெருசா தெரியாது” என்றான் கடுப்பாக.

“உனக்குப் போய் அட்வைஸ் பண்ணினேன் பாரு என்னை சொல்லனும்” என்று கடுப்படித்தபடி போனை அணைத்தான்.

அண்ணன் பேசி வைத்ததும் மாடியிலேயே நின்று கொண்டு யோசிக்க ஆரம்பித்தான். கிரிஜா நமக்கு நல்ல சான்ஸ். இவளை நழுவ விட வேண்டாம். அக்காளுக்கும் கல்யாணம் ஆகல. அவ சம்பாத்தியமும் நமக்கு தான் கிடைக்கும். அந்த வீடும் சொந்த வீடு போல தான் தெரியுது. இதை விட நமக்கு நல்லதா என்ன வந்திடப் போகுது என்று தனக்கு ஆப்பை அவனே அடித்துக் கொண்டிருந்தான்.
 
  • Like
Reactions: lakshmi
Need a gift idea? How about some novelty socks?
Buy it!