Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript விவேக் ஸ்ரீநிவாசன் - வத்சலா | SudhaRaviNovels

விவேக் ஸ்ரீநிவாசன் - வத்சலா

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
விவேக் ஸ்ரீநிவாசன் (வத்சலா)

காதல் இல்லாமல் ஒரு கதை நம் உணர்வை தாக்கிச் செல்ல முடியுமா? முடியும் என்றிருக்கிறார் வத்சலா...கதை முடிந்த பின்னும் இந்த தந்தை, மகன் பாசத்தைக் கண்டு நெஞ்சம் சர்க்கரை பாகில் விழுந்த இனிப்பாய் தித்திக்கிறது.

தாய் பத்து மாதங்கள் தன் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்றால் தந்தை காலம் முழவதும் தன் பிள்ளைகளை நெஞ்சில் சுமக்கிறார். ஸ்ரீநிவாசன் தன் மகனுக்கு ஆசானாய், நண்பனாய், வழிகாட்டியாய் வாழ்ந்திருக்கிறார்.

அந்த பெயரை கேட்டாலே உருகி விடும் அளவிற்கு அவர் மீது பாசமும், பக்தியும் வைத்திருக்கும் மகன் விவேக். ஒவ்வொரு நாளும் மேகங்களை முத்தமிட்டு, தனது பணியை காதலித்துக் கொண்டிருக்கும் பைலட் விவேக். குழந்தை பருவத்தில் உயரத்தை கண்டு பயந்தவனை தனது முறையான வழிகாட்டலால் இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்.

தனது ஒவ்வொரு செயலிலும் தந்தையை சம்மந்தப்படுத்தி பார்க்கும் மகன். ஹரிணி அவசர செயல்களுக்கு காரணகர்த்தா...எங்கும், எதிலும் அவசரம்...தந்தை மீது பாசம் என்ற உணர்வை காட்டத் தெரியாதவள்...தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த ஒரே காரணத்திற்காக விவேக்கின் மீது பழியோடு சுற்றிக் கொண்டிருப்பவள்.

டாக்டர் சுஹாசினயின் மகன் ஸ்ரீநிவாசன் டெல்லி விமான நிலையத்தில் அவன் மனதை கவர், தன்னை அறியாமலே அவன் மீது பாசம் வைக்கிறான். சுஹாசினியும், ஹரிணியும் சகோதரிகள்...விவேக் எப்படி தந்தையின் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கிறானோ, அதற்கு நேர்மாறான குணம் கொண்டு காதலுக்காக தந்தையை தூக்கி எறிந்து சென்றவள் சுஹாசினி. ஹரிணியோ தந்தையை கடமைக்காக மட்டுமே பார்த்துக் கொள்பவள்.

அனைவரையும் நேசிக்க வேண்டும் என்கிற தந்தையின் பாடத்தை மனதில் பதிய வைத்திருக்கும் விவேக், தனது தந்தையின் இழப்பிற்கு காரணமானவனை கூட மன்னித்துச் செல்லும் இடம், மனதை நெகிழ வைக்கிறது.

தாமோதரனை தன் தந்தையாக ஏற்றுக் கொள்ள தவிப்பதும், அவரது உணர்வுகளை புரிந்து கொண்டு ஹரிணியுடன் அனுப்பி வைத்து, தந்தை தன்னோடு தன் உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து மகிழ்ச்சி அடையும் விவேக்கைப் பார்த்து நம் கண்கள் கலங்குகிறது..

இப்படியொரு தந்தை அந்த மகனுக்கு கிடைப்பது வரமென்றால், விவேக்கை மகனாக அடைந்த அவரும் பாக்கியம் செய்தவர் தான்...

“அப்பா!! அப்பா! என்று விவேக் போல உருகும் மகன் நமக்கு கிடைக்க மாட்டானா என்று ஏங்க வைக்கிறான் விவேக் ஸ்ரீநிவாசன்....