Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript விபத்தாய் ஒரு கல்யாணம் | SudhaRaviNovels

விபத்தாய் ஒரு கல்யாணம்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
விபத்தாய் ஒரு கல்யாணம்

இரு மலர்கள் மூலம் ஈரடி எடுத்துவைத்து, மறவாதே உந்தன் நெஞ்சம் வழியாக நெஞ்சங்களில் மறக்கமுடியாத எழுத்தாளராக பதிந்து, உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனோ என்ற ஒப்பாவின் மூலமாக அடுத்த கதையை எதிர்நோக்க செய்து விபத்தாய் ஒரு கல்யாணத்தில் விடுபட முடியாத ஓர் உணர்வை தந்த சத்யாவிற்கு வாழ்த்துகள்??? கதைக்கு தாமதமாக பதிவுகள் தந்தாலும் வெற்றிகரமாக முடித்து விட்ட சத்யாவிற்கு வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

ஒப்பா கதை எழுதும் பொழுதே ஆதூா்தான் ஹீரோவாக இருப்பான் என்று ஒரு எதிர்பார்ப்பை தோற்றுவித்து கடைசியில் அவனை தனிமரமாக நிற்கச் செய்துவிட்டார் என்ற வருத்தத்தில் இருந்த பொழுது அதுக்கு அதிதி என்னும் ஒரு அழுகாச்சி பெண்ணை ஜோடி சேர்த்துவிட்டு சத்யா பலரின் வசவுகளில் இருந்து தப்பிவிட்டார். ஆர்தூரின் அன்பும் அரவணைப்பும் மிகவும் யதார்த்தமாக இருந்தது சத்யா!

வீரதீர சாகசங்கள் இன்றி எவ்விதமான கெத்துமின்றி மிகவும் எளிய நடையிலும் கதையை தந்த நீங்கள் ஃபிரான்ஸில் இருக்கும் பல இடங்களை எங்களுக்கு அருமையாக சுற்றிக்காட்டி விட்டீர்கள். அதிதி சராசரி பெண்ணாக அவளின் உணர்வுகள் வெளிப்படும் இடங்கள் மிகவும் அருமை. ஆர்தூரின் அம்மா தன்னுடைய மகனிடம் கூறும் அறிவுரை, அவர்கள் சுற்றிப்பார்க்க செல்லும் இடங்கள் என அனைத்தும் இப்பொழுதே ஃபிரான்ஸ் வர தூண்டிவிடுகிறது.

பப்புவை இறுதியிலும் காட்டாமல் விட்டதற்காக நான் வன்மையாக கண்டிக்கிறேன். அத்துடன் அந்த எலினாவை கதை உள் இழுத்து வந்தமைக்காக கண்டித்து அதற்கு பிராயசித்தமாக சஞ்சயனை விரைவில் அழைத்து வருமாறு கூறிக்கொள்கின்றேன்.

இதுபோல் மேலும் பல கதைகளை எழுதிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் சத்யா?❤