வரமாய் வந்த வலிகள் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-15

தன்னுடைய வக்கீல் கேட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவரை சந்திக்க சென்ற நந்தன் "சார்! கேஸ் ஹியரிங் வர்ற அன்னைக்கு எத்தனை மணிக்கு நான் கோர்ட்டுக்கு வரணும்?", என வினவினான்.

"காலையிலேயே வந்துடுங்க. அதுக்காக கோா்ட் கேட்டை ஓபன் பண்றதுக்கு முன்னாடி வந்து நின்னுடாதீங்க. ஒன்பதரை மணிக்கு கோர்ட்ல இருக்குற மாதிரி பாா்த்துக்கோங்க. காலையில தான் அந்த கேஸுக்பகுரிய ஆட்கள் வந்திருக்காங்களான்னு பாா்ப்பாங்க. அதுக்கு அடுத்துதான் நேரம் முடிவு பண்ணுவாங்க", என ராஜ் பதில் கூறினார்.

"ஓகே சார்! கூட என் அம்மாவையும் கூட்டிட்டு வரணுமா?", என நந்தன் வினவியதற்கு அவனைப் பார்த்து நக்கலாக சிரித்து "விவாகரத்து உங்களுக்கும், உங்க முன்னாள் மனைவிக்குமா? இல்லை உங்க அம்மாவுக்கும், உங்க முன்னாள் மனைவிக்குமா? கொஞ்சமாவது புத்தியோட இருங்க. அதுதான் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ ஒரு பெரிய வழக்கை கொடுத்துருக்காங்களே!

அதுக்குதான் உங்க அம்மா வர வேண்டியது இருக்கும். இப்போ உங்க அம்மாவை கூட்டிட்டு வந்தா அங்க வாசலில் வச்சு ஏதாவது ஏடாகூடமா பேசுவாங்க. அங்க வச்சி என்னால பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. அதனால நீங்க மட்டும் வாங்க", எனக் கூறிய ராஜ் "அந்த கேசோட ஹியரிங் என்னைக்குன்னு சொல்லி இன்னும் வரலை. வந்ததுக்கு அப்புறம் சொல்றேன். அப்ப பாா்த்துக்கலாம்", என பேச்சினை முடித்து நந்தனை வெளியில் அனுப்பிவிட்டாா்.

கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறும் ராஜை வழக்கு முடிந்தவுடன் தெரிந்த ஆட்கள் யாரையாவது வைத்து போட்டு தள்ள வேண்டும் என நந்தன் மிகக் கேவலமான திட்டம் ஒன்றை தன் மனதினுள் வகுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதனைப் பற்றி சாவித்திரியிடம் கூட மூச்சு விடவில்லை.

வீட்டிற்கு வந்தவனை பிடித்துக் கொண்ட சாவித்திரி "என்னதான்டா சொல்றான் அந்த வீணாப்போனவன்?", என வினவினார். "அவன் என்ன சொல்லுவான்? காசு காசுன்னு பறக்குறான். கோர்ட்டுக்கு போறப்ப உன்னை கூட கூட்டிட்டு போறது பத்திக் கேட்டா உங்க அம்மா வந்தா ஏதாவது பஞ்சாயத்து பண்ணி வைப்பாங்க.

அங்க வந்து எல்லாம் என்னால நாட்டாமையா இருக்க முடியாதுன்னு சொல்றான். அந்த வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஒரு கேஸை போட்டு இருக்கால அந்த மூதேவி. அப்ப மட்டும் உன்னை கூட்டிட்டு வரணுமாம்", என நந்தன் தன் தாய்க்கு பதிலுரைத்தான். "கேஸ் முடியட்டும் அப்புறம் இருக்குடா அந்த நாதாாிக்கும் இந்த வீணாப்போனவனுக்கும்", என்ற சாவித்திரி "நந்தா! புதன்கிழமை நீ மட்டும் போயிட்டு வா்றியா? இல்லை நானும் கூட வரட்டுமா?", என வினவியதிலேயே உடன் வருவதற்கு தீவிரமாக இருக்கிறார் என நந்தனுக்கு புரிந்து போனது.

"இந்த தடவை நான் மட்டும் போயிட்டு வரேன்மா. அடுத்த தடவையில இருந்து எப்படின்னு பாா்த்துக்கலாம். அந்த சனியனோட மூஞ்ச வேற பார்த்து நீ உன் உடம்பை கெடுத்துக்கக் கூடாது. நீ இரு. எப்படியும் நம்ம பக்கம்தான் ஜெயிக்கும்", என நந்தன் சாவித்திரிக்கு ஆறுதல் உரைத்துவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

நந்தன் என்னதான் சமாதானப் படுத்தினாலும் சாவித்திரிக்கு கோர்ட்டுக்கு சென்று தேவியை நேருக்கு நேராக பார்த்து அவளது சிண்டைபிடித்து ஆட்ட வேண்டும் என்ற வெறி மட்டும் சற்றும் குறையவில்லை. அந்த வெறியிலேயே பல மணி நேரம் அமர்ந்திருந்தவர் தனக்கு தேவியின் பக்கம் இருந்து அவ்வப்பொழுது அவளது நடவடிக்கைகளை பற்றி தகவல் அளித்து வரும் அவளது உறவினர் ஒருவருக்கு அழைப்பு விடுத்தார்.

இவரது அழைப்பை ஏற்ற உடன் அந்தப் பக்கமிருந்தவரும் " சொல்லுங்கண்ணி உங்க போனை தான் எதிர் பார்த்துகிட்டு இருக்கேன். நீங்க பிஸியா இருப்பீங்கன்னு நான் உங்களை கூப்பிடாமல் இருந்தேன்", என அநியாயத்திற்கு குழைந்தார். "என்ன ரங்கம்?அந்த சனியனை போய் பார்த்தியா? என்னதான் சொல்றா? என்ன பண்ணிக்கிட்டு திரியுறா? உன் வீட்டிலிருந்து நாலு வீடு தள்ளிதானே இருக்குறா?", என சாவித்திரி பேச்சை ஆரம்பித்தவுடன் இவர் எப்போது இதையெல்லாம் கேட்பார் என காத்திருந்தவர் போல மறுபக்கமிருந்த ரங்கம்மாள் தேவியைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தார்.

"அவ மினுக்கு என்ன? தளுப்பு என்னன்னு பாா்க்குறீங்க? அன்னைக்கு ஒரு நாள் ராத்திரி கார்ல எவன் கூடவோ வந்து இறங்கி காசை எடுத்து நீட்டுனா, அவன் வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு வாங்காமலேயே போறான். பக்கத்துல போய் நின்னு என்ன பேசுறாங்கன்னு கேக்கலாமுன்னு நினைச்சா அந்த நேரம் பார்த்து இந்த கூறுகெட்ட மனுசன் கூடவே நின்னாரு. அதனால அங்க என்ன நடக்குதுன்னு பாா்த்தளவுக்கு, பக்கத்துல நின்னு என்ன பேசுறாங்கன்னு கேட்க முடியலை.

அதுவும் பொழுது சாஞ்சதுக்கு அப்புறம்தான் வெளியில போறா, வர்றா. காலையிலிருந்து வீட்டுக்குள்ளேயே இருக்கா. நீங்கதான் நல்ல வக்கணையா ஆக்கிப் போட்டு அவ உடம்பை பெருக்க வச்சிருக்கீங்க. அதே மாதிரியே இப்பவும் அந்த சொகுசு கண்டு பழகுனதனால இங்க வந்து அப்படியேத்தான் திங்குறா போல.நல்லா வீங்கி விண்ணாந்து போயிருக்கா. இவளை அடிச்சு போட்டா ஒரு ஊரே உட்கார்ந்து திங்கலாம். அந்தளவுக்கு இருக்கா", என அநியாயத்திற்கு பேசியவர்

"அண்ணி! அப்புறம் நம்ம மாப்பிள்ளைக்கு பொண்ணு தகைஞ்சதா?", என வினவினார். "இந்த சனியனை ஒரேடியா தலைமுழுகிட்டு பிறகு தான் பொண்ணை பத்தி பேசணும்.ஏகப்பட்ட பேர் பொண்ணு தர்றோமுன்னு வராங்க", என சாவித்திரி பதில் கூறும் பொழுதே சாவித்திரி அறிவார்.

ரங்கம்மாளுக்கு அவரின் மகளை நந்தனுக்கு தரும் எண்ணம் உள்ளது என்பதை. "என் மக பதவிசா இருப்பா. ஒத்த வார்த்தை எதிர்த்து பேச மாட்டா. வீட்டை விட்டு வெளியில காலை வைக்க மாட்டேங்கறா பாருங்க. நாம பார்த்து ஏதாவது கடை கண்ணிக்கு கூப்பிட்டாலும் நீங்க பார்த்து வாங்குனா எனக்கு போதும் அப்படின்னு சொல்லிடுவா. அந்த மாதிரிப் பொண்ணா பாருங்க" என மறைமுகமாக தன் பெண்ணை பார்க்கலாம் என ரங்கம்மாள் கூறிய செய்தியை புரியாதவரா சாவித்திரி?

அதனை புரிந்தாலும் "பாா்த்துக்கலாம் .நீ, நான்னு போட்டி போட்டுட்டு தான் நிக்கிறாங்க. நான்தான் எல்லாரையும் நிறுத்தி வச்சிருக்கேன். என் வீட்டுக்கு வர்றதுக்கு எவளுக்கு கொடுப்பினை வாச்சிருக்கோ?", என இந்தப்பக்கம் சாவித்திரி தன் ஜம்பத்தை காட்டிட ரங்கம்மா ஆமா பெரிய கொடுப்பினைதான் என தன் மனதிற்குள் பேசிக் கொண்டாலும் வெளியில் எதுவும் காட்டிக்கொள்ளாமல் மேலும் சற்று நேரம் குழைந்து விட்டு அழைப்பினை துண்டித்தார்.

சாவித்திரி பேசி முடிக்கும் நேரத்தில் வந்த நந்தன் "யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க?", என வினவியதற்கு "எல்லாம் அந்த தேவியோட ஒண்ணுவிட்ட பெரியம்மா ஒருத்தி அவ வீட்டு பக்கத்துலயே இருக்கா இல்லை? அவகிட்டதான் பேசிட்டு இருந்தேன். வரிசையா நாலு பொட்ட கழுதைகளை பெத்து போட்டுருக்கா.கடைசி கழுதையை உன் தலையில கட்ட நினைச்சுகிட்டு இருக்கா.

இந்த மூதேவியை கட்டுனதுக்கே இன்னைக்கு கோர்ட்டில் நிக்க வச்சிருக்கா. அந்த சனியனை கட்டிகிட்டு வந்தா அவளும், அவங்க அம்மாவும் பேசுற பேச்சுக்கு மறுநாளே நம்மளை தெருவுல விட்டுருவாங்க", என பொறுமிய சாவித்திரி "நந்தா! ராத்திரிக்கு திங்கிறதுக்கு வெளியில் சொல்லிடு. என்னால அந்த சமையல்கட்டுல நின்னு வேலை எல்லாம் செய்ய முடியலை. அதனால கடையில வாங்கிட்டு வா, இல்லை போனை போட்டு கொண்டு வந்து குடுக்க சொல்லு. நான் கொஞ்சம் சாஞ்சி கிடைக்குறேன்", எனக் கூறிய சாவித்திரி மருமகளை எவ்வாறெல்லாம் கொடுமை படுத்தலாம் என விதவிதமாக காமிக்கும் தமிழ் நாடகங்களில் மூழ்கிவிட்டார்.

நந்தனும், சாவித்திரியும் தங்களின் பக்கம்தான் வழக்கு வெற்றி பெறும், தேவியை நாறடித்து விடலாம் என்று இறுமாந்திருந்த நேரத்தில் தேவியோ உடல் உபாதைகளாலும், தன்னுடைய மன பயத்தினாலும் நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருந்தாள்.

மனதில் நினைப்பதை உடனடியாக வெளியில் சொல்ல அவளது ஞாபகத்திறன் ஒத்துழைக்கவில்லை என்பது ஒரு காரணமாக இருப்பினும் அதனை பகிர்ந்து கொள்ளவும் அவளுக்கென்று ஆட்கள் யாரும் இல்லாததுமே அவளது மனதின் பயத்தினை நிமிடத்திற்கு நிமிடம் அதிகாிக்கச் செய்து கொண்டிருந்தது.

இதில் அவ்வப்பொழுது அவளது ஒன்றுவிட்ட பெரியம்மாவான ரங்கம்மா வேறு தேவியிடம் வந்து குத்தல் மொழிகளால் பேச்சுக் கொடுத்து அவளை புண்படுத்திக் கொண்டிருந்தார். அதுவும் சென்றமுறை வந்திருந்த பொழுது "என் மூத்த மகளைதான் உன் மாமியார் வீட்ல முதல்ல முடிக்கிறதா இருந்தாங்க. இடையில உங்க அப்பாவும், அம்மாவும் புகுந்து உனக்கு சீர் செனத்தி ஜாஸ்தியா செய்றேன்னு கழிச்சு விட்டுட்டாங்க.

அந்த பாவத்துக்கு தான் இன்னைக்கு நீ இப்படி வந்து மூலையில உக்காந்து இருக்க. செஞ்ச பாவம் சும்மாவா விடும்? இப்ப அதனாலதான் சாவித்திரி அண்ணி எனக்கு போனை போட்டு என் கடைசி மகளை மாப்பிள்ளைக்கு முடிச்சுக்க கேட்டுகிட்டே இருக்காங்க. உன் மூஞ்சில டெய்லி முழிக்க வேண்டியதா இருக்கு. அப்படி இருக்குறப்ப நீ வாழ்ந்த இடத்துக்கு அவளை எப்படி அனுப்புறதுன்னு யோசனைல நான்தான் முடிவு சொல்லாம நேரத்தை கடத்திட்டிருக்கேன்", எனக் கூறி சென்றிருந்தார்.

தேவி இவரைப் பற்றியும் அறிவாள் .தன் மாமியாரை பற்றியும் நன்கு அறிந்திருந்தாள். ரங்கம்மா யாரேனும் நன்றாக இருந்தால் பொருத்துக் கொள்ளமாட்டார். சாவித்திரியோ அவர்களிடம் வசதி வாய்ப்பு இருந்தால் மட்டுமே பேச்சு வைத்துக் கொள்வார். சாவித்திரி ரங்கம்மாவிடம் பேசுவது தன்னைப் பற்றி அறிந்துகொள்ளதான் என தேவி சிறிதும் யோசிக்கவில்லை. இல்லையெனில் யோசிக்கும் திறனை இழந்து இருந்தாளோ என்னவோ?

கோா்ட்டுக்கு செல்ல வேண்டிய புதன் கிழமைக்கு முந்தின நாள் சுஜாதா தேவிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவள் அழைப்பை ஏற்றவுடன் "அனுசுயா! நாளைக்கு காலையில என்னோட ஜூனியர் கோபி வந்து உங்களை கோா்ட்டுக்குக் கூட்டிட்டு வருவான். அவன் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லுவான். அதுப்படிதான் நீங்க நாளைக்கு கோர்ட்டுல நடந்துக்கணும். வேற எதுவுமே மாத்தி பேசாதீங்க", என்றதுடன் "உங்களுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு?", என வினவினார்.

"நல்லா இருக்கு மேடம்! சரி மேடம்!", என்றவள் அதற்கு மேல் எந்த வார்த்தைகளையும் கூறவில்லை. அவரும் கேட்கவில்லை. இதுதான் இவளின் சுபாவம் என விட்டுவிட்டார். மேலும் சிறிது துருவி அவளிடம் விவரங்களை சேர்த்திருந்தால் பின்னால் ஏற்படப்போகும் இழப்பை சற்றுத் தவிா்த்து இருக்கலாமோ என்னவோ?

அவசரஅவசரமாக இயங்குகின்ற இந்த உலகத்தில் அவரவர் வேலைகளை மட்டுமே மனித மனமும், புத்தியும் சிந்திக்கும். மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்தால் அது அவர்களை குத்திக் குதறி கிழிக்க மட்டுமே இருக்கும். சுஜாதா கூறியதன் பின்னா் அவர் எழுதி கொடுத்த அந்த பேப்பரை அடிக்கடி எடுத்துப் பார்த்ததில் தேவியும் மனதிலே எண்ணுபவற்றையும் ,தன்னுடைய வலிகளையும் எழுதி வைப்பதை விட்டிருந்தாள்.

புதன்கிழமை விடிந்த நேரத்திலேயே கோபி தேவிக்கு அழைத்து "மேடம்! சீக்கிரமா ரெடியாகிடுங்க. நான் உங்களை வந்து பிக்கப் பண்ணுறேன்", எனக் கூறினான். அவனது அழைப்பிற்கு பின்னர்தான் தேவிக்கு தான் அன்று கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நாள் என்று ஞாபகம் வந்தது. முதல்நாள் சுஜாதாவிடம் பேசியதை எவ்வாறுதான் மறந்தாளோ!

உடனடியாக குளித்து தயாரானவள் சாப்பிட கூட மறந்து கோபிக்காக காத்திருந்தாள். அந்நேரம் அவளது வீட்டிற்கு வந்த ரங்கம்மா "என்ன தேவி! இவ்வளவு வெள்ளன கல்யாண வீட்டுக்கு போற மாதிரி கிளம்பி உட்கார்ந்துருக்க? ஆமா ரெண்டு புடவையை சேர்த்து வச்சி தச்சி கட்டிருக்கியா? நீதான் தடியா இருக்கியே அதான் எப்படி ஒரு புடவை பத்துதுன்னு கேட்டேன்", என வினவினார்.

அவருக்கு பதில் கூற விரும்பவில்லை என்றாலும் "நீங்க வருவீங்கன்னு உங்க கண்ணுக்கு லட்சணமா இருக்கணும்னு ஒக்காந்து இருக்கேன் பெரியம்மா! வேறு ஒன்னும் இல்லை", என்பதுடன் முடித்துக் கொண்டாள். "ஊமை கோட்டான்! இன்னைக்கு கோா்ட்டுக்கு கெளம்பிட்டு என்ன ஏதுன்னு சொல்லாம உக்காந்துட்டு இருக்கா... நெஞ்சழுத்தக்காரிதான்! இந்த நாசமா போனவளை சீக்கிரமா தலைமுழுகி தொலைச்சிட்டா என் மகளை அந்த குடும்பத்துல கட்டிக் கொடுத்து அத்தனை சொத்துக்கும் நான் ராணி ஆயிடுவேன்", என மனதிற்குள் எண்ணிக் கொண்ட ரங்கம்மா சிரித்துக்கொண்டே சந்தோஷம் என்றவாறு வெளியேறிவிட்டார்.

வெளியேறிய உடன் அவர் செய்த முதல் வேலை சாவித்திரிக்கு அழைத்து " அண்ணி! அந்த சிறுக்கி மக முழுசா மேக்கப் போட்டுட்டு கிளம்பி உட்கார்ந்து இருக்கா. அவ மூஞ்சில ஒரு சொட்டு கூட வருத்தமே கிடையாது. இவ்வளவு நல்ல மாப்பிள்ளையையும் நல்ல மாமியாரையும் இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டோமேங்கிற எண்ணமே இல்லாம தெனாவட்டா இருக்கா",என காலையிலேயே தன்னுடைய போட்டுக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து முடித்தார்.

அதற்கு சாவித்திரியோ "அவ எப்படி இருந்தா என்ன ஆகப்போகுது? நாங்களே விவாகரத்து பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.ஆனா இப்ப அவளா கோர்ட்டுக்குப் போய் இருக்கா. அவ தான் நாறிப் போகப்போறா... சரி நான் உனக்கு அப்புறமா பேசறேன். கொஞ்சம் வேலையா இருக்கேன்", என பட்டென சாவித்திரி அழைப்பை துண்டித்துவிட்டார்.

"என் மக அந்த வீட்டுக்கு போனதும் இந்த கிழவிக்கு சோத்துல விஷம் வச்சு கொன்னுடனும்", என எண்ணிக்கொண்டு ரங்கம்மா தன்னுடைய வேலையான புறணி பேசுவதற்கு அடுத்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். சொன்ன நேரத்திற்கு வந்த கோபி தேவியை வாங்க மேடம் என அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

தேவி காரில் ஏறியவுடன் சற்று அவள் பதட்டத்துடன் இருப்பதை பார்த்து "பயப்பட ஒண்ணுமே இல்லை மேடம்! ரொம்ப ரிலாக்ஸா இருங்க. முக்கியமா ஜட்ஜ் உங்ககிட்ட எதுவுமே கேட்க மாட்டாங்க", என்றவுடன் தேவி அவனை புரியாத பார்வை பார்த்தாள். அவளது பார்வையை பார்த்தவன் சிரித்துக்கொண்டே "மேடம்! ஏற்கனவே நாம கொடுத்திருக்கும் பேப்பா்ல எல்லாமே இருக்கும். அதை படிச்சு பார்த்துட்டு வந்துதான் ஜட்ஜ் உட்காருவாங்க", என விளக்கினான்.

"சினிமால வர்ற மாதிரி கேள்வி எல்லாம் கேட்க மாட்டாரா? நிறைய எல்லாம் பேசுவாங்களே!", என தேவி வினவியது சிரித்து விட்டு "சினிமாவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மேடம்! அதெல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க. உங்ககிட்ட சேர்ந்து வாழ்றதுக்பு வாய்ப்பு இருக்கா இல்லையான்னு கேட்பாங்க. இல்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் நந்தனோட வக்கீல் ஏதாவது கேள்வி கேட்டால் மட்டும் நீங்க பதில் சொல்லுங்க. ரொம்ப தெளிவான பதிலா இருக்கணும்.

நாம முக்கியமா உங்க கணவர் ஆண்மையற்றவர் அப்படின்னு சொல்லி கேஸ் போட்டு இருக்கோம். அதை பத்தி கேட்பாங்க. ஆமா! அவரு அவரோட குறையை மறைப்பதற்காக என்னை செயற்கை முறை கருத்தரிப்புக்கு ரொம்ப வற்புறுத்தினார் அப்படி மட்டும் சொல்லிடுங்க. இத்தனை வருஷமா இல்லாம இப்ப ஏன் கேஸ் போட்டு இருக்கீங்கன்னு கேட்டாங்கன்னா அவங்க இப்ப வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு என்னை மாதிரியே அவர்களை ஏமாத்த ட்ரை பண்ணாங்கன்னு முடிச்சிடுங்க.வேற எதுவுமே பேச வேண்டாம்", என கோர்ட்டில் பேசவேண்டிய விதத்தை கோபி அவளுக்கு நன்கு விளங்குமாறு கூறினான்.

எவ்வாறு கூறினாலும் இந்த பெண் மறந்து விடுமோ என்ற ஐயம் கோபிக்கு இருந்துகொண்டே இருந்தது. தேவியும் அவன் பேசியதற்கெல்லாம் பதில் பேசாமல் இருந்தாளே தவிர புரிந்தது என்றோ, சரி என்றோ எந்த பதிலும் கூறவில்லை.

"என்ன மேடம்! பேசாம வரீங்க?", என கோபி வினவியதும் ஒன்னும் இல்ல யோசிச்சுகிட்டு இருந்தேன் சார் என்றவள் "எத்தனை மணிக்கு ஆரம்பிப்பாங்க? ரொம்ப நேரம் நடக்குமா?", என வினவினாள். "அதெல்லாம் கிடையாது மேடம்! இப்ப நாம கோர்ட்டுக்குப் போனதும் நம்மளோட ஐட்டம் நம்பர் அதாவது கேஸ் நம்பரை அவங்க ஐட்டம் நம்பர்னு தான் சொல்லுவாங்க.

நம்ம ஐட்டம் நம்பர் பத்துனு வச்சிக்கோங்க, அந்த நம்பருக்கு உரிய கட்சிக்காரங்களும், எதிர்க்கட்சிக்காரங்களும் வந்திருக்காங்களான்னு செக் பண்ணுவாங்க. வந்திருக்காங்கன்னு உறுதி ஆயிடுச்சின்னா ரூம் நம்பா், எத்தனை மணிக்குன்னு சொல்வாங்க. சிலநேரம் காலையிலேயே முடிஞ்சிடும். சில நேரம் மத்தியானத்துக்கு மேல கூட ஆகலாம். அதனால இதுதான் நேரம்னு உறுதியா சொல்ல முடியாது மேடம்!", என்றுக் கூறியவன் சாப்டீங்களா என வினவினான்.

அவள் சாப்பிட்டாளா இல்லையா என்பதை ஞாபகத்தில் வைத்திருந்தால் தானே அவனுக்கு பதில் கூற முடியும் அதனால் அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். ரொம்பவே கஷ்டம், இந்தம்மா வந்து என்னத்த சொதப்பி வைக்க போகுதுன்னு தெரியலை.. சீனியர் வேற ஓவரா இவங்களுக்காக வரிஞ்சு கட்டிக்கிட்டு இருக்காங்க", என மனதில் எண்ணியவன் அதன்பின்னர் எதுவும் பேசாமல் கோர்ட்டுக்கு காரை செலுத்தினான்.

இவர்கள் உள்ளே நுழையும் பொழுது இவர்களுக்காக காத்திருந்த சுஜாதா "அனுசுயா! அந்த பென்ச்ல வந்து உட்கார்ந்து இருங்க. உங்க ஐட்டம் நம்பர் சொல்லி வந்துருக்காங்களான்னு கேப்பாங்க . அவங்ககிட்ட பதில் வாய் திறந்து கொஞ்சம் சத்தமாகவே பேசுங்க", எனக் கூறிவிட்டு வேக நடையுடன் உள்ளே நுழைந்தார்.

அவர்களின் வேகத்திற்கு தேவியால் சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அவர்களை பின் தொடர்ந்தாள். தேவி சென்று அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தவுடன் நந்தனும் தன்னுடைய வக்கீலுடன் வந்து சேர்ந்திருந்தான். வக்கீல் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அவர்களுக்கு என்ன முன் பகையா இவர்களுக்காக அவர்கள் பேசாமல் இருக்க முடியுமா? தேவி அதனைப் பற்றி கண்டு கொள்ளாவிட்டாலும் நந்தன் மனதிற்குள் அதனைப் பற்றி பொறுமிக் கொண்டிருந்தான்.

அதனைக் கண்ட சுஜாதா "என்ன ராஜ் சார்! உங்க க்ளையன்ட் இங்கேயே பொரிஞ்சு தள்ளிடுவார் போல இருக்கே! அவரோட முகத்தை கொஞ்சம் பாருங்க", என சிரித்தவாறேக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அவர் கூறிய பின்னர் நந்தனை திரும்பி பாா்த்த ராஜ் என்ன உணர்ந்தாரோ அப்படி போய் உட்காருங்க என்றவாறு உள்ளே சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் வெளியே வந்த ஒருவர் ஐட்டம் நம்பர் 112 அனுசுயா தேவி வந்திருக்கீங்களா என சரிபார்த்தாா். அதன் பின்னர் நந்தனின் வருகையையும் உறுதி செய்து கொண்டவர் உள்ளே சென்றுவிட்டார். தேவி அங்கேயே அமர்ந்து இருந்தாலும் அவளை எதுவும் பேச முடியாமல், திட்டம் முடியாமல் நந்தன் வெறுப்புடன் காத்திருக்க ஆரம்பித்தான்.

இதனிடையில் சாவித்திரியை அழைத்து "இப்பதான் வந்து கேட்டுட்டு போய் இருக்காங்க. எத்தனை மணிக்கு உள்ள கூப்பிடுவாங்கன்னு தெரியலைம்மா. நம்ம வக்கீல் அவளோட வக்கீல்கிட்ட சிரிச்சு சிரிச்சுப் பேசுறான்", என புலம்பித் தவித்துக் கொண்டிருந்தான். சாவித்திரி நான் வந்து இருக்கணுமோ, வந்திருக்கலாமோ என பலமுறை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே பதினொரு மணியளவில் தேவியையும், நந்தனையும் உள்ளே அழைத்தனர். அங்கே சென்றவுடன் அவளை கூண்டில் ஏற சொல்லவும் பதற்றத்துடனே கை,கால் நடுங்க ஏறினாள். சினிமாவில் பார்த்ததை தவிர்த்து முன்பின் கோர்ட் கூண்டில் ஏறி இருந்தால்தானே தெரியும்?

அவள் ஏறியவுடன் அவளிடம் அங்கே அமர்ந்திருந்தவர் வந்து நீங்க உண்மையை தான் சொல்றீங்களா என சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு சென்றார். அவரது பதவி என்ன ஏது என்று அவளுக்கு தெரியவில்லை. அதனைப்பற்றி சுஜாதாவிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தவள் அப்பொழுதே மறந்து போனாள்.

அவளின் பதட்டத்தை பார்த்த ஜட்ஜ் மீண்டும் ஒரு முறை இவர்களது வழக்கின் பேப்பரை படித்தவர் "தாங்கவே முடியாத அளவுக்கு கொடுமையா?", என வினவினார். என்ன பதில் சொல்வது அதற்கு என புரியாமல் சுஜாதாவை பார்த்தால் அவர் தலையசைத்ததை உணர்ந்து ஆமா சார் என மெதுவான குரலில் பதிலளித்தாள். "சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு எதுவும் இருக்கா?", என அவர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே வேக வேகமாக தலையை வலது மற்றும் இடதுப்புறமாக ஆட்டினாள்.

வேற எதுவும் கேட்கணும்னா கேளுங்க என ராஜை பார்த்து ஜட்ஜ் கூறிய உடன் அவர் எழுந்து வந்து தேவியிடம் முதல் கேள்வியாக "நீங்க கல்யாணத்தப்ப எவ்வளவு எடை இருந்தீங்க?", என வினவினார். அதற்கு பதிலாக தேவி திரு திருவென விழித்தாள். சரி இப்ப எவ்வளவு இருக்கீங்க என கேட்டவுடன் 124 கிலோ எனக் கூறினாள்.

"இப்ப இந்த அளவுக்கு இருக்கீங்க அப்படின்னா உங்க கணவர் உங்களை நல்லா பாா்த்துக்குறாா்னு தானே அா்த்தம்!",என ஒரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டு வைத்தார். அவரது கேள்வி நீதிபதிக்கே ரசிக்கவில்லையோ என்னமோ "ராஜ் கொஞ்சம் அறிவாளிதனமா கேளுங்க. ஒருத்தவங்க உடல்வாகை கேலிபடுத்துற மாதிரி கேள்விகள் இருக்கக் கூடாது .அது உங்களுக்கு தெரியாதா? சம்மந்தப்பட்டது மட்டும் கேளுங்க", என சற்று கடுகடுப்புடன் கூறினார்.

சரி சரி என தலை ஆட்டிய ராஜ் "நீங்க எதுக்காக பொய்யான வழக்கு போட்டீங்க?", என எந்தவித விளக்கமும் இன்றி வினவினார் .அதற்கு தேவி ஒன்றும் பதில் கூறாமல் இருந்தவுடன் "நீங்க ஏன் உங்க கணவர் ஆண்மையற்றவர் அப்படின்னு சொல்லி பொய்யான ஒரு வழக்கு தொடுக்கனும்? உங்களுக்கு விவாகரத்து வேணும் அப்படின்னா நீங்க அதை மட்டும்தானே கேட்டுருக்கணும். ஏன் பொய் சொன்னீங்க?", என வினவினார்.

அவரது கேள்வியிலேயே தேவிக்கு வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்துவிட்டது. கோபி ஏதோ கூறினான் அது என்னவென்று அவளுக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வரவில்லை. எனவே சுஜாதாவை பார்த்துவிட்டு வேறு என்னக் கூறுவது என தெரியாத நிலையில் ஜட்ஜை பார்த்தவள் "நான் பொய் சொல்லலை சார்! நான் சொல்றது எல்லாமே நிஜம்", என கண்களில் கண்ணீர் தளும்ப அவள் கூறிய விதம் நீதிபதிக்கே பாவமாகிவிட்டது. அதன்பின்னர் எந்த வித கேள்விகளும் இன்றி" இந்த மாதம் 29 ஆம் தேதி அடுத்த ஹியாிங்", எனக் கூறி முடித்து விட்டு அடுத்த வழக்கின் பேப்பரை எடுத்து விட்டார்.
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-16


ஜட்ஜ் அடுத்த வழக்கிற்கான பேப்பரை எடுத்தவுடன் சுஜாதா கண்ணை காட்டிட தேவி அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள். அவளை தொடர்ந்து வெளியே வந்த நந்தன் "வெளியில வாடி! உனக்கு இருக்கு கச்சேரி", என பற்களை கடித்தவாறு சொல்லிவிட்டு சட்டென நகா்ந்து நின்றவன் அவனுடைய வக்கீலுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.


ராஜ் வெளியில் வந்தவுடன் அவருடன் இணைந்து நடந்தவன் "என்ன சார் அந்த ஜட்ஜ் ஒரு வார்த்தையும் என்கிட்ட கேட்கலை. வந்தாரு, உட்காந்தாரு, அவகிட்ட ஏதோ ரெண்டு கேள்வியை கேட்டாரு. நீங்க கேட்டதுக்கு உங்களையும் திட்டினாரு... கேசை ஒத்திவச்சு முடிச்சுட்டாரு... என்ன சார் ஒரே நேரத்தில் முடிக்க மாட்டாங்களா?", என வினவினான்.


"கொஞ்சம் சத்தத்தை குறைச்சு அடக்க வாசிக்கிறீங்களா நந்தன்?", என அவனை பார்த்து ராஜ் சற்று கோபமாகப் பேசினார். கோர்ட்டு வாசலுக்கு வந்தவுடன் "இங்க இருக்குறவங்க எல்லாம் உங்க வீட்ல இருக்குற வேலையாளுங்கன்னு நினைச்சிங்களா? உங்க ஒருத்தர் கேஸ் மட்டும் அவர் பாா்க்கலை. இது மாதிரி ஆயிரக் கணக்குல பாா்த்துக்கிட்டு இருக்காரு. எதுவும் சத்தம் போடுறதா இருந்தா அடுத்த ஹியாிங்க்கு நான் அட்டென்ட் பண்ண மாட்டேன். நீங்களே வந்து நின்னுக்கோங்க, பேசிக்கோங்க.


உங்க இஷ்டத்துக்கு சத்தம்போட நான் ஒன்னும் உங்க முன்னாள் மனைவி கிடையாது. அப்புறம் அவங்க குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஒரு கேஸ் பதிஞ்சுருக்காங்களே! அதுக்கு திங்கக்கிழமை வரச் சொல்லி இருக்காங்க. வீட்டுக்கு உங்களுக்கு நோட்டீஸ் வந்திருக்கும். பாா்த்துட்டு திங்கட்கிழமை காலையில இதே மாதிரி வந்து சேருங்க. அப்ப உங்க அம்மாவையும் கூட கூட்டிட்டு வாங்க", என்ற ராஜ் அதற்கு மேல் வேறு எதுவும் பேசாமல் மீண்டும் கோா்ட்டினுள் நுழைந்துவிட்டார்.


வெளியில் வந்த தேவியும் சுஜாதா மற்றும் கோபி வருவதை பார்த்தவுடன் அவர்களின் அருகே செல்லவா வேண்டாமா என தயங்கி நின்றாள். சுஜாதாவே அவளின் அருகில் வந்தவர்" அனுசுயா! திங்கட்கிழமை நீங்க கோர்ட்டுக்கு வரணும். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் போட்ட கேஸுக்கு ஹியாிங் அன்னைக்குதான் வருது. இதேமாதிரி காலையிலேயே வந்துடனும்.


அதுல என்ன கேட்பாங்க, எப்படி பதில் பேசுறதுன்னு நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன். இல்லைன்னா முடிஞ்சா சனிக்கிழமை காலைல நீங்க ஆபீஸ்க்கு வந்துடுங்க. இப்ப தனியா வீட்டுக்கு போயிடுவீங்களா இல்லைன்னா எதாவது கேப் அரேஞ்ச் பண்ணி தரவா?", என வினவினார்.


"கேப் அரேஞ்ச் பண்ணி கொடுங்க மேடம்! இப்பதான் அவர் வெளியில வா கச்சேரி வைக்கிறேன்னு சொல்லி மிரட்டிட்டு போறாரு", என தேவிக் கூறியதும் சுஜாதா கோபியிடம் திரும்பி கேப் அரேஞ்ச் செய்யுமாறுக் கூறினார். அப்பொழுது இருவரின் பார்வையும் இவளுக்கு இது மட்டும் எவ்வாறு மறக்கவில்லை என்பதையும் வினவிக் கொண்டது.


அவன் தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு சற்று நகா்ந்தவுடன் தேவி சுஜாதாவிடம் "கோபி சார் ஏதோ சொல்லி கூட்டிட்டு வந்தாரு. அது என்னன்னு மறந்துட்டேன். அதனால்தான் கேள்வி கேட்ட உடனே என்னால பதில் சொல்ல முடியலை. என்னை மன்னிச்சிடுங்க மேடம்!", எனக் கூறினாள்.


அவள் பேசியதைக் கேட்டு சிரித்த சுஜாதா "கோர்ட்டுக்கு வர்றது உங்களுக்கு புதுசும்மா. அப்படி இருக்கறப்ப இதுக்காக ப்ரிப்பேர் பண்ணிட்டு எல்லாம் வர முடியாது. யாரா இருந்தாலும் முதல் தடவையா இருக்குறப்ப அப்படித்தான் இருக்கும். விடுங்க இந்த கேஸ் முடியறதுக்கு முன்னாடி உங்களுக்கு பழகிடும். கவலைப்படாமல் வீட்டுல போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க", என்றுரைத்து விட்டு அவர் தன்னுடைய சேம்பர்குள் சென்றுவிட்டார்.


கோபி கேப் அரேஞ்ச் செய்தவன் அதில் தேவி ஏறி செல்லும் வரை அவளுடன் வந்து வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்தான். தேவி காரில் ஏறும் வரை அங்கேயே நின்றிருந்த நந்தன் அவளுடன் கோபி வருவதைப் பார்த்த பின்னர் அவ்விடத்தை விட்டு அவசர அவசரமாக நகர்ந்தான்.


அதனை கண்டுகொண்ட கோபியும் இவன் எல்லாம் ஒரு ஆளு! இவனுக்கு பயந்து இந்த பொண்ணு தனியா போக பயப்படுது என நொந்தவாறு சுஜாதாவிடம் சென்று அதனை முறையிட்டான். "விடு கோபி! அனுசுயாகிட்ட வாங்குன நகை, பணம் அத்தனையும் திருப்பி தந்ததுக்கப்புறம் நாம பாா்த்துக்கலாம். இப்போதைக்கு எதையும் காட்டாமல் இருக்கிறது, அந்த பொண்ணோட பயம் கேஸுக்கு வலு சேர்க்கும். அப்படியே இருக்கட்டும்", என சுஜாதா வக்கீல் தொழிலில் தேர்ந்தவராகக் கூறினார்.


தேவி கிளம்பியவுடன் தன்னுடைய வீட்டிற்கு நேராக தன் வண்டியை செலுத்திய நந்தன் செல்லும் வழி நெடுகிலும் வழக்கு தன்பக்கம் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் சிறிதேனும் இருக்கிறதா என்ற ஆலோசனையில்தான் இருந்தான்.


அவன் வீடு சென்று சேர்ந்த பொழுது சாவித்திரி வாசலிலேயே அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அவன் வண்டியை நிறுத்தும் வரை கூட பொறுத்திருக்காமல்"நந்தா என்ன நடந்துச்சு? உனக்கு போன் போட்டா நீ போனை எடுக்கலை.நான் இங்க என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறிப் போய் உக்காந்துருக்கேன். என்னடா என்னதான்டா நடந்துச்சு?", என வினவினார்.


ஏற்கனவே கோாட்டில் நடந்ததை யோசித்துக் கொண்டிருந்தபோது சாவித்திரி வந்தவுடன் கேட்டதும் நந்தன் கோபமாக "அம்மா! எல்லாத்தையும் வெளியிலேயே வச்சு கேட்டு தொலைக்கனுமா? வீட்டுக்குள்ள வந்து உன்கிட்ட சொல்லாம நான் அப்படியே எங்கே வனவாசமா போகப்போறேன்?", எனக் கத்தினான்.


சாவித்திரியிடம் கத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் நேரடியாக சமையல் அறைக்குள்தான் சென்றான். அங்கே சென்று சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனத் துழாவிப் பார்த்தால் சாவித்திரி காலையில் செய்த உப்புமாவை மட்டுமே வைத்திருந்தார்.அதனை பாா்த்துவிட்டு

"ஏதாவது சமைச்சிருக்க வேண்டியதுதானே! வீட்ல தானே உட்காந்துகிட்டு இருக்க", என நந்தன் பேசியதும் சாவித்திரி பதிலுக்கு


"ஏன்டா!என்னை உனக்கு எடுபிடின்னு நினைச்சியா? ஒருநாளும் என்னை எதுத்து பேசாத நீ இப்பெல்லாம் கொஞ்சம் ஓவராதான் துள்ளிக்கிட்டு இருக்க. நானும் கண்டுகிட்டாலும் கண்டுக்காத மாதிரியே எவ்வளவு நாளைக்கு வலம் வர்றது? எது மேலயோ போற ஆத்தா என் மேல வந்து ஏறுது. இருக்கிறதை போட்டு தின்னுட்டு என்ன நடந்துச்சுன்னு வந்து சொல்லு. அதுக்கு அடுத்தது உனக்கு சோறு போடுறதா இல்லை வேற எதையாவது போடுறதான்னு நான் யோசிக்கிறேன் என பதிலுக்கு கத்தியவுடன் சிறிது அடங்கிப் போனான்.


ஏனெனில் அவனுக்கு தான் அவனுடைய அம்மாவை பற்றி தெரியுமே! அவருக்கு அடங்கி இருக்கும் வரை மட்டுமே அவரது பெயரில் இருக்கும் சொத்துகளை இவனுக்கு மாற்றித் தருவார். அடங்காமல் ஏதாவது எதிர்த்துப் பேசினால் அதனை சாகும்வரை செலவழித்துவிட்டு இவனுக்கும் ஒன்றும் வைக்காமலே சென்றுவிடுவார். அவரின் இந்த புத்தியை அறிந்திருந்ததால் மட்டுமே நந்தன் எப்பொழுதுமே அவனது அம்மாவுக்கு அடங்கியவனாக நடந்து கொண்டிருந்தான்.


சாவித்திரி கத்தியதும் வேறு ஏதும் கூறாமல் தண்ணீரை மொண்டு குடித்தவன் அந்த உப்புமாவை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்து அவரதருகில் அமர்ந்து வேகமாக உண்டு முடித்தான். அவன் சாப்பிடுவதிலேயே அவனின் பசி புரிந்ததும் சாவித்திரியும் சற்று மனம் இரங்கி " என்னால மனசை ஒருநிலைப்படுத்தி சமையல்கட்டுல நிக்க முடியலைடா! நீ மட்டும் தனியா கோா்ட்டுக்கு போயிருந்தியா! அவளோட வக்கீல் கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பொம்பளையா வேற இருக்கு. உனக்கு ஏதாவது ஏழரையை இழுத்து விட்டுவாளோன்கிற பயத்திலேயே உட்கார்ந்துகிட்டு இருந்தேன்.


அதனால உனக்கு போன் போட்டுக் ஏதாவது சாப்பிட்டு வாடான்னு சொல்றதுக்கு கூப்பிட்டா நீ போனை எடுக்கலை", என அவன் கேளாமலேயே பேசி முடித்தார். சாப்பிட்டுமுடித்ததும் ஓரளவு நிதானத்திற்கு வந்த நந்தன் "விடும்மா. நானும் பசியில எதையோ கத்திட்டேன். அந்த ஓடுகாலியை கோர்ட்டுல பார்த்தவுடனே கழுத்தைப் பிடிச்சி நெறிக்கனும்னு தோணுச்சு. அதுக்கு தோது இல்லாமல் போனதுனால என்னால ஒண்ணுமே பண்ண முடியலை. கோர்ட்டுல இன்னிக்கு என்னை எந்த கேள்வியும் கேட்கலை. அவளை மட்டும் கூப்பிட்டு வாழ விருப்பம் இருக்கா இல்லையா அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.


அவ கண்ணுல தண்ணியை காட்டுனதும் அந்த ஜட்ஜ் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வச்சுட்டார்", எனக் கூறிக் கொண்டே வந்தவன் திடீரென ஞாபகம் வந்தவனாக "ஏதாவது நோட்டீஸ் வந்துச்சாம்மா?", என வினவினான். ஆமாண்டா வந்துச்சு என்றவர் அதனை எடுத்துக்கொண்டு வந்து நந்தனிடம் தர அதை பிாிக்காமலேயே கையில் வைத்து ப பார்த்தவன் தன் தலையை நிமிர்த்தாமலேயே திங்கட்கிழமை "நீயும், நானும் கோர்ட்டுக்குப் போகணும்", எனக் கூறினான்.


29ஆம் தேதிதானே போகனும்னு சொன்ன என்ற சாவித்திரியிடம் "இது நம்மகிட்ட இருந்து பணம் ,நகை பிடுங்குறதுக்காக போட்டு இருக்காளே ஒரு கேஸ்.அதுக்குதான் போகணும். காலையிலே நாம கார்ல கிளம்பிடலாம் அன்னைக்கு", என்று உரைத்தவன் கையிலிருந்த நோட்டீசை பிரித்து படிக்க ஆரம்பித்தான். அவனது அலைபேசி அப்பொழுது ஒலி எழுப்பிட எடுத்துப் பார்த்தவன் அவனது அலுவலக அழைப்பு என்றதும் அதனை ஏற்றான். மறுபுறம் என்னக்கூறினார்களோ அழைப்பை துண்டித்ததும் இரு கைகளையும் தலையில் வைத்து அழுத்திய மகனின் நிலைமையை பார்த்த சாவித்திரி "என்னாச்சு? அந்த வக்கீல் எதுவும் காசு கேக்குறானா?", எனக் கேட்டாா்.


" அவன் இல்லை.எனக்கு படியளக்குறவன். வேலைக்கு இப்பலாம் அடிக்கடி லீவு போடுறீங்க, குடுத்த ப்ராஜெக்ட் ஒழுங்கா முடிக்கலை இதே மாதிரி பண்ணிட்டு இருந்தா வேலை போய்டும்னு கண்டபடி திட்டிட்டு வைக்கிறான்", என அலுத்துக் கொண்டவாறுக் கூறினான்.


அதைக் கேட்ட சாவித்திரி" ராத்திரியெல்லாம் வேலை பாா்த்துட்டுதானே இருக்க.அப்படி இருந்தும் அவனுங்களுக்கென்ன வந்துச்சாம் ", என நொடித்துக்கொண்டார். "ஐடியில வேலை பார்த்தா எல்லா கருமத்தையும் கேட்டு தான் ஆகணும், பார்த்து தான் ஆகணும். சரி நான் கொஞ்ச நேரம் தூங்குறேன். பயங்கரமா தலை வலிக்குது. தூங்கி எந்திரிச்சா மட்டும்தான் நைட்டு ஒக்காந்து வேலை பார்க்க முடியும். நீ அவளோட பெரியம்மாவுக்கு போனை போட்டு அவ வீடு வந்து சேர்ந்தப்புறம் ரொம்ப சந்தோசமா காட்டிக்கிட்டாளான்னு மட்டும் கேளு.


அப்படி அவ சந்தோசமா இருக்குறான்னு தெரிஞ்சா என்ன ஆனாலும் பரவாயில்லைனு அவ வீட்டுக்கு நாலு ஆளுங்களை அனுப்பி அவளை போட்டு தள்ளிடுவேன்", என சாதாரணமாக சமையலுக்கு காயை வெட்டுவது போல் உரைத்தவன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.


கோர்ட்டில் நடந்ததை கூறியபொழுதே சாவித்திரி "இந்த ஜட்ஜுங்க பொம்பளைங்க கண்ணீரை பார்த்த உடனே உருகிடுறானுங்க. டிவியிலதான் அப்படி காட்றாங்கன்னு பார்த்தா நிஜத்துலயும் அப்படிதான் இருப்பாங்க போல இருக்கு. திங்கட்கிழமை அன்னைக்கு நான் அழுகுறதுல அவளை என் கால்ல விழுந்து அந்த ஜட்ஜே மன்னிப்பு கேட்க வைப்பான்", என சபதம் விட்டுக் கொண்ட சாவித்திரி மேலும் ஒரு மணி நேரம் சென்ற பின்னர் ரங்கம்மாவை அழைத்தார்.


ஏற்கனவே தேவி வந்து வாசலில் இறங்கும் வரை வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த ரங்கம்மா அவள் வந்தவுடன் வேகமாக அவளின் அருகில் சென்று சிரித்தவாறே "விவாகரத்து கிடைச்சிருச்சா? உனக்கும், மாப்பிள்ளைக்கும் இனிமே எந்த சம்பந்தமும் கிடையாதுதானே!", என வினவினார்.


அவரை ஒன்றும் புரியாமல் பார்த்தவள் இல்லை பெரியம்மா என்பதுடன் உள்ளே நகர எத்தனித்தாள். அவள் இல்லை என்று கூறியதிலேயே திகிலடைந்தவர் அவளது கையைப் பிடித்து இழுத்தவாறு "என்னது மூத்தவங்க பேசினா மட்டு மரியாதை இல்லாமல் படக்குனு உள்ளப் போற... இப்படிதான் உன் மாமியார் வீட்டுல இருந்துருப்ப.மரியாதை தெரியாத உன்னை எல்லாம் மருமகளா வச்சுட்டு அந்த அண்ணி என்னதான் பாடுபட்டாங்களோ!


ஏதோ என் ஒன்னுவிட்ட தங்கச்சியோட மகளாச்சேங்கிற அக்கறையில என்னாச்சு ஏதாச்சுன்னு கேட்க வந்தா மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொல்ற", என அந்த தெருவிற்கே கேட்குமாறு பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்துவிட்டார். தனது கணவர் வேலைக்கு சென்றுள்ளார் அவர் வீடு வந்து சேர இன்னும் நேரம் இருக்கிறது என்ற தைரியத்தில்தான் ரங்கம்மா தேவியின் அருகில் வந்து கத்திக் கொண்டிருந்தார்.


ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கணவர் சற்று விரைவாக வந்து விட ரங்கம்மாவை பார்த்து அவரின் அருகில் விரைந்துச் சென்றார். வந்தவுடன்"ரங்கம்! தேவிகிட்ட என்ன வம்பு வளர்த்துட்டு இருக்க?", என்றதும் "ஆமா! இவகிட்ட வம்பு வளா்த்துட்டாலும்... கோர்ட்டுக்கு போனாளே விவகாரத்து கிடைச்சிருச்சான்னு கேட்டா மூஞ்சில அடிச்ச மாதிரி இல்லைன்னு சொல்லிட்டு உள்ளே போகப்போறா... நீங்கதான் இவளோட குணத்தை மெச்சிக்கனும்", என தனது தோள்பட்டையில் நாடியை வைத்து நொடித்தவராக ரங்கம்மாள் தன் கணவருக்கு பதிலுரைத்தார்.


"நீ எந்த எண்ணத்துல கேட்க வந்திருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும். போய் ஜோலியைப் பாரு. கண்ட கருமாந்திர கனவு கண்டுட்டு இருக்காதே! நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது எதுவுமே நடக்காது. அப்படி நடக்குற சூழ்நிலை வந்தா உனக்கு எழவு நடத்திட்டு நீ நினைக்கிறதை நடக்க விடாம செஞ்சுருவேன். ஞாபகம் வச்சுக்கோ", என தன் மனைவியை மிரட்டி அனுப்பியவர்


தேவியின் புறம் திரும்பி "விடுமா தேவி! நடக்குறது எல்லாம் நல்லதுக்குன்கு நெனச்சுக்கோ... ஏதாவது உதவி வேணும்னா பெரியப்பாவுக்கு போன் பண்ணு. அவன் அன்னைக்கு வந்தப்ப நான் வீட்ல இல்லை. இருந்திருந்தா செவுள சேர்த்து நாலு அப்பு அப்பியிருப்பேன். அடுத்த தடவை கோர்ட்டுக்கு தனியா போகாத. என்கிட்ட முதல் நாளே சொல்லிடு நான் கூட வரேன்", எனக் கூறினார்.

அவருக்கும் வேறு எந்த பதிலும் கூறாமல் சரி பெரியப்பா என்றதுடன் தேவி தன் வீட்டினுள் நுழைந்து விட்டாள். தேவியின் பதிலை பற்றி சாவித்திரியிடம் சொல்வதற்கு ரங்கம்மாவின் கையும், வாயும் பரபரத்தாலும் அவரது கணவர் வீட்டில் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்று எண்ணியவர் சாவித்திரியிடம் இருந்து வந்த அழைப்பையும் எடுக்காமல் அழைப்பை துண்டித்துவிட்டார்.


யாரு உனக்கு போன் போடுறாங்க என ரங்கம்மாவின் கணவர் சந்தேகத்துடன் வினவியதற்கு "அந்த வீணாப்போன கம்பெனிக்காரன் போன் போடுவான்.வேற எவன் எனக்கு போன் போட போறான்", என அவரிடம் பதில் கொடுத்தவர் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறும் வரை தவியாய் தவித்துப் போனார்.


நான்கைந்து முறை அழைத்துப் பார்த்த சாவித்திரியும் ரங்கம்மா அழைப்பை துண்டித்தவுடன் "இளிச்சுட்டு வரப்ப வச்சிக்கிறேன்", எனக் கருவிக் கொண்டார். இனி ரங்கம்மாவே அழைக்கட்டும் என சாவித்திரி அழைக்காமல் விட்ட பின்னர் சிறிது நேரத்திலேயே மீண்டும் சாவித்திரிக்கு அவர் எதிர்பார்த்திருந்த அழைப்பு வந்து சேர்ந்தது.


அழைப்பை ஏற்ற சாவித்திரி ஒன்றும் பேசாமல் அமைதி காத்திட ரங்கம்மாவோ 'ஐயோ அண்ணி! என் மேல் கோபப்பட்டு பேசாம இருக்காதிங்க. எல்லாம் அந்த கூறுகெட்ட மனுசன் நடு கூடத்திலே வந்து உட்கார்ந்தா உங்ககிட்ட உள்ளது உள்ளபடி பேசமுடியுமா? இந்த புத்தி கெட்டவரை கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே!", என அங்கலாய்க்க ஆரம்பித்தார் .


"ஓ! அப்படியா! சரி சொல்லு. நான் உனக்கு அவ வீடு வந்து சேர்ந்துட்டாளான்னு கேக்குறதுக்குதான் கால் பண்ணேன். எந்த விவரமும் இல்லாத கழுதை. கோர்ட்ல இருந்து பத்திரமாக வீடு வந்து சேர்ந்தாளா இல்லையான்னு தெரிஞ்சுக்கதான் கூப்பிட்டேன்", என சாவித்திரி உலகத்தில் தான் மட்டும் மிக நல்லவர் என்பதுபோல் நடித்திட அவரது நடிப்பை விட மிஞ்சும் நடிகையாக ரங்கம்மா பேச ஆரம்பித்தார்.


" அதெல்லாம் வந்துட்டா.என்னாச்சு? ஏதாச்சு? மாப்பிள்ளையை பார்த்து மன்னிப்பு கேட்டியா? விவாகரத்து கிடைச்சதான்னு கேட்டா அதெல்லாம் என்னால தர முடியாது. வேணும்னா நீயும், உன் பொண்ணும் போய் அவனுக்கு கூஜா தூக்குங்க.மன்னிப்பு கேட்க மான மரியாதை இருக்கனும்.அதெல்லாம் அவனுக்கு இல்லை. எனக்கு புத்தி சொல்ற வேலையெல்லாம் நீ வச்சுக்காதன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசிட்டா. உங்களுக்காக தான் இத்தனை வார்த்தையும் தாங்கிக்கிட்டு நான் ஒன்னும் பேசாம வீடு வந்து சேர்ந்துட்டேன்.


அதை இந்த மனுஷன்கிட்ட சொன்னா இவர் ஒத்துப்பாரா என்ன? தேவி நல்லவ, வல்லவன்னு சொல்லிட்டு வியாக்கியானம் படிப்பாரு. அதான் உங்க போனை கட் பண்ணி விட்டேன்", என பேசிவிட்டு ரங்கம்மா சாவித்திரி ஏதும் பதில் கூறுவாரா என காத்திருக்க ஆரம்பித்தார் .


சாவித்திரியும் ரங்கம்மா கூறுவது நிஜமாக இருக்குமோ என சிந்திக்க ஆரம்பித்து விட்டார். அவரது வீட்டில் இருந்தவரை தேவி ஒரு வாயில்லாப் பூச்சி. அவர் ஆட்டிவைக்கும் ஒரு மரபொம்மை. அவளுக்கு இந்தளவிற்கு எப்படி வாய் துடுக்கு வந்தது என சாவித்திரி யோசித்துக் கொண்டிருக்கையில் ரங்கம்மா ம அண்ணி அண்ணி எனக் கத்தியதும் தான் யோசனையில் இருந்து மீண்டாா்.


அதன் பின்னர் சாவித்திரியிடம் கோா்ட்டில் என்ன நடந்தது எனக் கேட்டிட அவரோ "இவ அங்க போய் கண்ணீரைக் காட்டி மாயாஜாலம் பண்ணிக்கிட்டு திரிஞ்சிருக்கா. அந்த ஜட்ஜும் இவ நீலிக்கண்ணீரை பார்த்து கேஸை ஒத்தி வச்சுட்டாராம். எல்லாம் என் நேரம். ஊர்ல இல்லாத அழகி ன் கு ஒருத்தியை தேடி பிடிச்சு கொண்டுவந்தா அவளால் என் குடி கெட்டது தான் மிச்சம். வம்சமும் விருத்தியாகலை. என் வம்சத்துல இருக்கிறவனையும் நிம்மதியா வாழ விடாம பண்ணிக்கிட்டு இருக்கா.


அவ செய்ற பாவத்துக்கு அனுபவிப்பா", என சாபம் விட்டார். அது நிஜம்தான் என ரங்கம்மா ஒத்து ஊதிட இவர்களின் சாபத்திற்கு ஆளான தேவியோ எந்தவித நினைவுகளும் இன்றி, உணவும் இன்றி தன் படுக்கையில் உதிரப்போக்குடன் படுத்திருந்தாள்.


இருட்டும் வரை அதே நிலையில் படுத்திருந்த தேவி எழுந்து பார்த்த பொழுது தன் நிலையை கண்டு கழிவிரக்கத்திற்கு ஆளானாள். ஆனால் அதிலேயே மிகுந்த நேரம் அமர்ந்து இராமல் எழுந்து சுத்தப்படுத்திக் கொண்டவள் வேகவேகமாக ஒரு பேப்பரை எடுத்து "ஏதாவது லேடி டாக்டரிடம் போய் பாக்கணும். இந்த மாதிரி இருந்துகிட்டே இருக்கு", என எழுதி வைத்தாள்.


அதன் பின்னர் எழுந்து பசித்த வயிறுக்கு எளிதாக வீட்டில் இருந்த பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்ட உடன் அன்றைய நிகழ்வுகள் ஏதேனும் தன் மனதில் இருக்கிறதா என யோசித்துப் பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்! அனைத்துமே அவளது நினைவில் மிகவும் தெளிவாக இருந்தது.


அதற்கு காரணம் அவை ஒன்றும் நல்ல நினைவுகள் இல்லையே! நந்தன் அவளது அருகில் வந்து பேசியதிலிருந்து அவனது பழைய குத்தல் பேச்சுகள் தேவியின் காதில் ஒலித்தவாறே இருந்தன. நந்தனின் வீட்டை விட்டு வெளியேறிய தேவி ஒன்றை மறந்து விட்டாள். அந்த வாழ்விலிருந்து வெளிவந்தால் மட்டும் போதாது. அது ஏற்படுத்திய வடுவில் இருந்தும் வெளிவர தான் முயற்சிக்க வேண்டும் என்பதை அவள் மறந்திருந்தாள்.


அந்த வடுக்களின் வலு அதிகரிக்க அதிகரிக்க அவளின் வலு குறைந்து கொண்டே செல்லும் என்பது அவள் அறியாத ஒன்று. அதை அறியாமலே அவளது காலம் முடிந்து விடுமோ?


இதனிடையில் சனிக்கிழமை காலை தேவியை அழைத்த சுஜாதா அனுசுயா! ஒரு பத்து மணிக்கு என்னோட ஆபீஸ்க்கு வந்துடுங்க", எனக் கூறி அழைப்பை துண்டித்தார்.


தேவியும் அவர் கூறிய நேரத்திற்கு முன்னதாகவே அவரின் அலுவலகத்தை அடைந்தவள் தன் கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். தான் வந்ததை கூட உணராமல் என்ன படித்துக் கொண்டிருக்கிறாள் என பின்புறமாக இருந்து எட்டிப்பார்த்த சுஜாதா அதில் "வக்கீல் மேடம்கிட்ட நல்ல லேடி டாக்டர் யாராவது இருக்காங்களான்னு கேட்கணும். எனக்கு தெரிஞ்சது நான் இதுக்கு முன்னாடி ட்ரீட்மென்ட் எடுத்துக்க போன ஹாஸ்பிடல் மட்டும்தான்.


அங்க போனா அவருக்கும், அவரோட அம்மாவுக்கும் டாக்டரை பார்த்தது தெரிஞ்சிடும். அதனால மேடம்கிட்ட மறக்காமல் கேட்டு உடனே போய் பார்க்கணும்", என எழுதி இருந்தது. அதனை படித்தவரின் முகம் யோசனையில் சுருங்கியது. ஆனால் அதனை நொடியில் மாற்றிக் கொண்டவர் "என்ன அனுசுயா! என்ன படிச்சுட்டு இருக்கீங்க?", என வினவியவாறு அவளின் முன்புறம் வந்து அமர்ந்தார்.


வணக்கம் மேடம் என்றவள் தான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை அவரிடம் எந்தவித தயக்கமுமின்றி நீட்டினாள். நீட்டியதுடன் "மேடம்! நீங்க எழுத வேண்டாம்னு சொன்னீங்க. ஆனால் சில விஷயங்கள் நான் எழுதினா மட்டும்தான் ஞாபகம் வச்சுக்க முடியுது", என உரைத்தாள்.


"சரி! இது ஏன் இப்படி எழுதி வச்சு இருக்கீங்க?", என்ற சுஜாதாவிடம் "எனக்கு எப்பவுமே பிளீடிங் இருந்துகிட்டே இருக்கு மேடம்!", எனக் கூறினாள். கொஞ்சம் தெளிவா சொல்லுங்க என்றவரிடம் "வருஷத்துல 365 நாளில் 300 நாள் எனக்கு பிளீடிங் இருந்துகிட்டே இருக்கு. அதுவும் அளவுக்கு அதிகமா இருக்கு .அப்படி போறப்ப எல்லாம் என்னோட முதுகும், வயிறும் ரொம்ப வலிக்குது.கடந்த ஒரு வருஷமா இப்படி இருக்குது. நீங்க யாராவது நல்ல லேடி டாக்டர் சொல்றீங்களா மேடம்? நான் உடனே போய் பாா்க்குறேன். என்னால இந்த வலியை தாங்க முடியலை.


எங்கேயாவது போறப்ப அசிங்கமாயிடுமோ அப்படிங்கற பயமாவும் இருக்கு", என தேவிக் கூறியதும் சுஜாதா உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து அவர் சென்று வரும் கைனகாலஜிஸ்ட் ஒருவரின் எண்ணையும், அவரின் மருத்துவமனை பெயரையும் எழுதிக் கொடுத்து "இந்த நம்பருக்கு போன் பண்ணி எப்ப வரட்டும்னு கேளுங்க. போன் பண்றப்பவே நீங்க எனக்கு தெரிஞ்சவங்க அப்படின்னு சொல்லிடுங்க", என்று அந்தப் பேப்பரை தேவியிடம் ஒப்படைத்தார்.


அதனை வாங்கி வைத்துக் கொண்டவள் சரி மேடம் என்றவள் அவரின் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். அதன்பின்னர் சுஜாதா அவளின் வழக்கு சாராம்சத்தை சற்று விளக்கிக் கூறியவர் அதன் பின்னர் "அனுசுயா விவாகரத்துக்கு கேஸுக்கும் இந்த கேஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.


விவாகரத்துக்கு கேஸுல நம்மளுக்கு இருக்கிற ஒரே சாதகமான விஷயம் என்னன்னா உங்க அப்பா கல்யாணத்தப்ப செஞ்ச செலவு அத்தனைக்கும் பில்லை பத்திரமா வச்சுருந்துக்காரு. அதே மாதிரி உங்களுக்கு வாங்குன நகைகளோட ரசீது இருக்கிறதால அவங்ககிட்ட இருந்து வாங்கிடலாம். ஆனா உங்களுக்கு ட்ரீட்மென்ட் பண்ண கொடுத்த காசுக்கு எந்த எவிடன்ஸும் இல்லாததால அதை திரும்ப வாங்க முடியாது.


இப்ப இந்த கேஸ்ல என்ன கேப்பாங்க அப்படிங்கிறதை உங்களுக்கு சொல்றேன். உங்களை கொடுமைப்படுத்துனது, உங்களை வார்த்தையால துஷ்பிரயோகம் பண்ணது, மனரீதியாக உளைச்சலுக்கு ஆளாக்குனது இதுக்கெல்லாம் அவங்ககிட்ட நாம காம்பன்ஷேன் கேட்கலாம். விவாகரத்து கேஸ் முடிக்கிறதுக்கு முன்னாடி இந்த கேஸ் முடிஞ்சிடும். ஜட்ஜ் ஏதாவது கேள்வி கேட்டாலோ, நந்தனோட வக்கீல் ஏதாவது கேள்வி கேட்டாலோ தைரியமா வாயைத் திறந்து பதில் பேசுங்க.


நீங்க உண்மையை மட்டும்தான் சொல்லப் போறீங்க. பொய் எதுவும் சொல்லப் போறதில்லை. அதனால மறக்காம எல்லா விஷயத்தையும் சொல்லிடுங்க", என சுஜாதா தேவிக்கு பேசவேண்டியவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தநேரம் உள்ளே நுழைந்த கோபி "இவங்களுக்கு எல்கேஜி பாப்பாக்கு சொல்லி கொடுக்குற மாதிரி சொல்லி கொடுத்து என்ன பிரயோஜனம்? எல்லாத்தையும் மறந்துட்டு அங்க வந்து கண்ணுல கண்ணீர்தான் காட்டப் போறாங்க. நேரம்தான் வேஸ்ட்", என தன் மனதில் எண்ணினான்.


அவன் உள்ளே நுழைந்ததை பார்த்தவுடன் சுஜாதா "நீ வெளியே உட்கார். நான் அனுசுயாகிட்ட பேசி முடிச்சதுக்கப்புறம் உள்ள வா", என அனுப்பி விட்டார். அவன் ஏதாவது விளையாட்டுத்தனமாக கூறி அது தேவியின் மனதை பாதித்திடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் அவர் அவனை வெளியில் அனுப்பினாள்.


சுஜாதா கூறியவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு தேவி "அவங்க பேசுன விஷயம் எதுவுமே எனக்கு மறக்கலை மேடம்! அதனால நான் கண்டிப்பா சொல்லிடுவேன்", என்றுவிட்டு "இதுக்கு தண்டனை எதுவும் தர மாட்டாங்களா? அவங்க பேசினப்ப இருந்த வலி இன்னைக்கு வரைக்கும் எனக்கு இருந்துகிட்டே இருக்கு. அவர் கோர்ட்டுல எனக்கு பக்கத்து வந்து நின்னதுமே வீட்ல இருக்குறப்பயே அப்படி திட்டுவாரு, இங்கே என்னென்ன திட்டா் போறாரோ அப்படிங்கற எண்ணம்தான் மனசுல முதல்ல வந்துச்சு.


அதுக்கெல்லாம் சோ்த்து அவங்களுக்கு தண்டனை கொடுத்தா போதும். எனக்கு காம்பன்ஷேஷன் எல்லாம் எதுவும் வேண்டாம்", எனக் கூறினாள்.
 
  • Like
Reactions: Sumathi mathi

Sumathi mathi

New member
Dec 12, 2019
24
9
3
Devi is not able to share her feelings.already she’s lonely along with health issues.her life’s in pathetic condition. Wow excellent.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-17

தேவி கேட்ட கேள்வியில் அவளைப் பார்த்து சிரித்த சுஜாதா "அனுசுயா! நீங்க முதல் தடவை என்கிட்ட என்ன கேட்டீங்கன்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?", என வினவினார்.

அவர் அவ்வாறு கேட்டவுடன் அனுசுயா சற்று யோசனை செய்ய ஆரம்பித்தாள். அவளது யோசனையை கண்டவர் அவளுக்கு மறந்துபோய் இருக்குமே என தன்னைத்தானே மனதில் நொந்து கொண்டவராக "நீங்க என்கிட்ட விவாகரத்து வாங்குறது முக்கியம் கிடையாது. ஆனா அதுக்கு அடுத்து உங்க முன்னாள் கணவருக்கு கல்யாணம் ஆகக் கூடாது, அவர் எந்த வகையிலாவது அவமானப்படனும் அப்படின்னுக் கேட்டீங்க. இப்ப தண்டனை கிடைச்சா போதும்னு சொல்றீங்க இல்லையா? தண்டனை கிடைக்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கு", எனக் கூறி நிறுத்தியவர் அவளின் முகத்தை தான் பார்த்தார். அதில் ஏதும் சந்தோசம் கலந்த ஆர்வம் இருக்கிறதா என ஆராய்ந்தார்.

ஆனால் தேவியோ ஆசிரியரிடம் பாடம் கேட்கும் மாணவி போல் அமர்ந்து இருந்தாளே தவிர அவள் முகத்தில் மகிழ்ச்சி என்பது மருந்துக்கும் இல்லை.அதற்கும் மேலும் அவளது முக உணர்வுகளை பற்றிக் கவலைப்படாமல் சுஜாதா வழக்கின் போக்கினை விளக்க ஆரம்பித்தார்.

"அனுசுயா! இதுல ரெண்டு விதமான தண்டனைகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு. ஒண்ணு அபராதம் போட்டு விட்டுடுவாங்க. இன்னொன்னு சிறை தண்டனை கொடுப்பாங்க.சிலருக்கு கேசோட வீரியத்தைப் பொறுத்து சிறை தண்டனையும், அபராதமும் சேர்ந்து விதிப்பாங்க. அது எந்த பட்சத்தில் அப்படின்னா அவங்க செய்த கொடுமைகள் ரொம்ப அளவுக்கு அதிகமானதாக இருந்து அதனால பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்பட்ட சேதாரம் அதிகமா இருந்துச்சுன்னா அபராதம் பிளஸ் சிறை தண்டனை ரெண்டுமே கிடைக்கும்.

ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு", என்றுக் கூறி நிறுத்தியவா் சிறிது தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் தன் பேச்சினை தொடர்ந்தார். நாம சொல்ற குற்றச்சாட்டுகள் எல்லாத்துக்குமே சரியான ஆதாரம் கொடுக்கணும். உங்களோட வழக்குல பக்கத்து வீட்டுக்காரங்க இல்லைன்னா உங்க சொந்தகாரங்க யாராவது நந்தன், சாவித்திரியை பத்தி, அவங்களோட மோசமான குணத்தை பத்தி தெரிஞ்சவங்க வந்து சாட்சி சொன்னா என்னால நந்தனுக்கும், சாவித்திரிக்கும் சிறை தண்டனை, அபராதம் ரெண்டுமே கிடைக்கிற மாதிரி செய்ய முடியும். உங்களால் சாட்சியை கூட்டிட்டு வர முடியுமா?", என விளக்கத்துடன் ஒரு கேள்வியையும் எழுப்பி நிறுத்தினார்.

அவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த தேவி "அவங்க செஞ்ச விஷயங்கள் பக்கத்திலிருந்த எல்லாருக்குமே தெரியும் மேடம்! ஆனா யார்கிட்டயும் நான் நெருங்கிப் பழகுனது இல்லை. நெருங்கிப் பழக மட்டுமில்லை பேசக் கூட செஞ்சதுக் கிடையாது. அதனால யாரும் வருவாங்கன்கு சொல்ல முடியாது மேடம்! வீட்டு பக்கத்துல பெரியப்பா ஒருத்தர் இருக்காரு. அவருகிட்ட நான் கேட்டு பார்க்கட்டுமா", என சுஜாதாவிடமே ஆலோசனை கேட்டாள்.

சிறிது நேரம் யோசித்த சுஜாதா இவளை பேச விட்டால் பாதி விஷயங்களை மறந்து விடுவாள். அதனால் அந்த பெரியப்பா என்பவரிடம் தானே பேசினால் ஏதேனும் சாதகமாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு என்று எண்ணி தேவியிடம் "அனுசுயா! நீங்க உங்க பெரியப்பாவோட நம்பர் என்கிட்ட கொடுத்துட்டு போங்க. நான் அவர்கிட்ட பேசிக்கிறேன். உங்களுக்காக நான் இன்னொரு விஷயமும் செய்றேன்.

அன்னைக்கு சாவித்திரியையும், நந்தனையும் கூப்பிடப் போன கான்ஸ்டபிள்ஸ், ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அவங்களை சாட்சிய வரவைக்க முடியுமா அப்படினு பாா்க்குறேன். போலீஸ் ஸ்டேஷன்ல நடந்துக்கிட்ட விதத்தை நேரில் பார்த்தவங்க என்கிற முறையில் அவங்களோட சாட்சி செல்லுபடியாகும். நீங்க உங்க பெரியப்பா நம்பரை மட்டும் உடனே கொடுங்க", என்றவர் அவள் நீட்டிய அலைபேசியை வாங்கி தன்னுடைய அலைபேசியில் ரங்கம்மாவின் கணவர் செல்வத்தின் எண்ணை குறித்துக் கொண்டார்.

அதன் பின்னர் தேவியிடம் மேலும் சில மணித்துளிகள் உரையாற்றி விட்டு அவள் கிளம்பும் பொழுது கடைசியா "முடிஞ்சா கைனகாலஜிஸ்ட்கிட்ட இன்னிக்கே பேசிடுங்க.ம", என ஆரம்பித்தவர் அத்துடன் நிறுத்திக் கொண்டார். மறந்துடாதீங்க என்ற வார்த்தையை கூறி அவளை தன்னிரக்கத்திற்கு ஆளாக்க அவர் விரும்பாததாலேயே பாதியில் நிறுத்திக் கொண்டார்.

தேவியும் அதனை புரிந்து கொள்ளாமல் சரி மேடம் என்றவள் மீண்டும் அவரின் புறம் திரும்பி "மேடம்! வீட்டுக்கு போகணும்", என தயங்கினாள். அவளது தயக்கத்திலேயே புரிந்துகொண்ட சுஜாதா வெளியிலிருந்த கோபியை அழைத்து தேவிக்கு கேப் அரேஞ்ச் செய்யுமாறு கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அவர் உள்ளே சென்றவுடன் தேவியின் அருகில் வந்த கோபி " என்ன மேடம்! நீங்க மட்டும் தனியா போய்டுவீங்களா? இல்லை கூட கொண்டுவந்துவிடவா?", எனக் கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் தேவியோ "இல்லை சார்! நான் தனியாகப் போறேன்", என்றதும் "எங்கே! நீங்கதான் எல்லாத்தையும் மறந்திடுறீங்க. உங்க வீட்டை மறந்திட்டிங்களோ என்னமோனு நினைச்சுதான் கேட்டேன்", என சுஜாதா எதை செய்யக்கூடாது என்று எண்ணினாரோ அதையே கோபி செய்து வைத்தான்.

அவன் அவ்வாறு கூறியதும் தேவியின் கண்களில் குளம் கட்டி விட்டன.மறந்துடுறிங்கன்னு நான் சாதாரணமாதானே சொன்னேன் என கோபி அவளிடம் சமாதானம் பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்த சுஜாதா வெளியில் வேகமாக வந்தவர் "என்னாச்சு? ஏன் அழுகிறீங்க?", என வினவினார்.

அவர் கேட்டதற்கு பதில் கூறாமல் தலையை மட்டும் ஆட்டிய தேவியால் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை. சுஜாதா கோபியை ஏறிட அவன் தலைகுனிந்தவாறு "அவங்க எல்லாத்தையும் மறந்துடுறாங்க.அதான் வீட்டை மறந்துட்டிங்களோன்னு சொன்னேன் சீனியர்!", என்றவுடன் அவனை ஒருமுறை முறைத்தவர்

"அனுசுயா! இதெல்லாம் சாதாரண விஷயம். முதல்ல எடுக்குறதுக்கு எல்லாம் அழுகிறதை நிறுத்துங்க. தைரியமா உங்களை கஷ்டப்படுத்துனவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு வந்துட்டீங்க. இதுக்கு மேல இன்னும் நிறைய கேள்விகள், நிறைய பேச்சுகள் வாங்க வேண்டியதிருக்கும்னு உங்களுக்கு முதல் தடவையே சொல்லிட்டேன். அதுக்கு எல்லாம் ரெடியா இருக்கணும். இப்ப கோபி சொன்னது ஒரு வகையில உங்க மனசை கஷ்டப்படுத்தினாலும் அதுக்கு பதிலா வீடெல்லாம் ஞாபகம் இருக்கு. அப்படி மறந்து போச்சுன்னா கண்டிப்பா உங்ககிட்ட உதவி கேட்கிறேன்னு ஒரு வார்த்தை நீங்க தைரியமா சொல்லியிருந்தா அடுத்த தடவை அவன் பேசமாட்டான்.

தைரியமா இருங்க", எனக் கூறி அவளை திடப்படுத்திக் கொண்டு இருந்த போதே அவளுக்கு ஏற்பாடு செய்திருந்த கேப் வந்துவிட்டது. சரி மேடம் என்றவள் கோபியிடமும் வரேன் சார் எனக் கூறிவிட்டே கேபில் ஏறினாள். அவள் ஏறும் வரை அமைதிக் காத்த சுஜாதா "கோபி! அவங்க ரொம்ப சென்சிடிவா இருக்காங்க. அதோட மனசளவுல மட்டுமில்லை, உடலளவிலும் நிறைய பிரச்சனைகளை வச்சுகிட்டு இருக்காங்க. நீ உன்னோட விளையாட்டு தனத்தையோ, இல்ல வக்கீல் அப்படிங்கிற கெத்தை காட்டுறதுக்காக மண்டையா பேசுவதையோ அவங்ககிட்ட வச்சுக்காத. இது உனக்கு நான் கொடுக்குற லாஸ்ட் வாா்னிங்", என்றவர் தேவியின் பெரியப்பாவிடம் பேசுவதற்கு உள்ளே சென்றார்.

சுஜாதா செல்வத்திற்கு அழைத்திட அவரும் உடனே அழைப்பது யாரென்று தெரியாமலே ஏற்று விட்டார். அழைப்பை ஏற்றவர் "யாருங்க பேசறது?", என்றதும் சுஜாதா தன்னை அனுசுயா தேவியின் வக்கீல் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் சற்றுப் பேச வேண்டும் எனக் கூறினார்.

"ஒரு அரை மணி நேரத்துல நானே உங்களை திரும்பக் கூப்பிடுறேன்", எனக் கூறி செல்வம் அழைப்பை துண்டித்து விட்டார். அவர் அழைப்பை ஏற்ற பொழுது அருகில் இருந்த ரங்கம்மா "யாருங்க உங்களுக்கு இன்னைக்கு போன போடுறது?", என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வினவிட அவரை ஒருமுறை முறைத்தவர் "என் வேலை விஷயமா எல்லாத்தையும் உன்கிட்ட நான் சொல்லியே ஆகணுமா? போ! போய் பொழப்பை பாரு... நாளைக்கு பெரிய பொண்ணும் பேரப் பசங்களும் வர்றாங்க. அவங்களுக்கு தேவையானதை செய். அதை விட்டுட்டு கண்ட கழுதைகளோட போன் பேசிட்டு இருக்குறதை பார்த்தேன் சங்க அறுத்துடுவேன்", என ரங்கம்மா சாவித்திரியிடம் பேசுவது தனக்கு தெரியும் என்பதை மறைமுகமாகக் கூறி விட்டு வெளியேறிவிட்டார்.

வெளியேறியவர் தேவியின் வக்கீல் எதற்கு தன்னிடம் பேச வேண்டுமென்றாா் என யோசித்துக்கொண்டே அவர்களின் தெருவினை தாண்டி சற்று ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு வந்தவர் சுஜாதாவின் எண்ணிற்கு அழைத்தார். அவரின் அழைப்பிற்காக காத்திருந்த சுஜாதா அழைப்பை எடுத்தவுடன் "வணக்கம் சார்! நீங்க இப்ப ஃப்ரீயா?", என வினவினார்.

"மன்னிச்சுக்கோங்க மேடம்! முதல்ல நீங்க போன் பண்ணுனப்ப வீட்ல இருந்தேன். என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா உடனே தேவி பிள்ளையோட அத்தைக்கு போனை போட்டு சொல்லிடுவா. அதனாலதான் உங்ககிட்ட மரியாதையா கூட பேசாம அரை மணி நேரம் கழிச்சு கூப்பிடுறேன்னு சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க", என தன்னுடைய செயலுக்கான காரணத்தை கூறினார்.

அவர் கூறியதைக் கேட்ட சுஜாதா இவர் உதவுவாரா என்ற எண்ணத்தில் யோசித்துக்கொண்டே பதில் எதுவும் கூறவில்லை. "மேடம் லைன்ல இருக்கீங்களா?", என செல்வம் மீண்டும் கத்தியவுடன் "இருக்கேன் சார்! உங்ககிட்ட ஒரு விஷயமா பேசதான் கால் பண்ணேன். ஆனா அது எந்த அளவுக்கு சாத்தியம்னு எனக்கு தெரியலை", என்றதும் செல்வம் "நீங்க கேட்டு பார்த்தா தானே அது சாத்தியம் ஆகுமா ஆகாதானு தெரியும். கேட்காம நீங்களா முடிவு எடுக்கலாம", என நெற்றிப் பொட்டில் அடித்தது போல் கூறியதும் சுஜாதா தெளிந்தார்.

"நீங்க சொல்றது கரெக்ட்தான் சார்! அனுசுயா தேவியோட வக்கீல் நான்தான்.நீங்க உதவி பண்ண வாய்ப்பு இருக்குன்னு அவங்க சொன்னதாலதான் உங்க நம்பர் வாங்குனேன். இப்ப அவங்களோட விவாகரத்துக்கு கேஸூம் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழே போட்ட கேஸூம் கோர்ட்ல நடக்கிறது உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு. இதுல என்ன ஒரு கொடுமைனா அனுசுயா தேவிக்கு நடந்த கொடுமைகளுக்கு சாட்சியம் எதுவுமே கிடையாது.

அந்த சாட்சிகள் இருந்தால் மட்டும் தான் தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனையும்,அனுசுயா தேவிக்கு நிம்மதியான ஒரு விடுதலையும் வாங்கி தர என்னால முடியும். நீங்க அனுசுயா தேவிக்கு சாதகமா அவங்களுக்கு நடந்த கொடுமைகளை பற்றி கோர்ட்டில் வந்து சொல்ல முடியுமா?", என சுஜாதா செல்வத்திடம் வினவினார்.

சுஜாதாவின் பேச்சினைக் கேட்டவர் "மேடம்! என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க! நான் நாலு பொண்ணுங்களை பெத்து வச்சிருக்கேன். என் பொண்ணுக்கு ஒன்னுனா நான் சும்மா இருப்பேனா? அதுமாதிரிதான் தேவி பிள்ளையும். அன்னைக்கே இந்த சம்பந்தம் வேண்டாம்னு தலப்பாடா அடிச்சுகிட்டேன். ஆனால் என் தம்பியோட பொண்டாட்டி பிக்கல் பிடுங்கல் இல்லாத இடத்துல குடுக்குறதுதான் நல்லதுன்னு இந்த சம்பந்தத்தை பிடிவாதமா முடிச்சுச்சு.

அவங்க என்ன கொடுமைப் படுத்தினாங்கன்னு நான் நேரடியாப் பார்த்ததுக் கிடையாது. ஆனா என் தம்பி மகளோட ட்ரீட்மெண்ட்டுக்கு பணம் கேட்டு அவங்க வீட்ல இருந்து போன் வந்த உடனே அடிச்சு பிடிச்சு கையில இருக்குற பணத்தோட, வேறு எங்கேயாவது ஏற்பாடு பண்ண முடிஞ்சாலும் ஏற்பாடு பண்ணிட்டு ஓடுறதை கண்கூடா பார்த்திருக்கேன்.

ஊர்ல இருந்த தோப்புத் துரவு எல்லாத்தையும் தேவி பிள்ளைக்கு ட்ரீட்மென்ட்காக காசு கேக்குறாங்க. இதை தந்தாதான் தேவியை வீட்டுல வச்சுப்பேன்னு தேவி மாமியார் சொல்றாங்கன்னு சொல்லிட்டு அதையெல்லாம் வித்து அவன் காசு கொண்டு போனது எனக்கு தெரியும். சொல்லப்போனா அந்த நிலத்தை என் பங்காளி ஒருத்தன் வாங்குறதுக்கு நான் தான் ரெண்டு பேருக்கு நடுவுல பேசிவிட்டேன்.

இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த நந்தன் இங்கே நடுராத்திரியில் வந்து கத்தி கலாட்டா பண்ணி இருக்கான். அப்போ நான் ஊர்ல இல்லை. இருந்திருந்தா அன்னைக்கு அவன் தோலை உரிச்சு எடுத்து இருப்பேன். இந்த விஷயம் மட்டும்தான் எனக்கு தெரியும் மேடம்! வேற தேவி வீட்டுக்குள்ள என்ன நடந்துச்சி அப்படிங்கற விஷயங்கள் எனக்கு தெரியாது", எனக் கூறி முடித்தார்.

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சுஜாதா "சார்! இந்த விஷயம் மட்டும்னு நீங்கள் ஈசியா சொல்லிட்டீங்க. ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம் சார்! நீங்க வேற எதுவுமே சொல்ல வேண்டாம். இந்த விஷயத்தை மட்டும் கோர்ட்ல சாட்சியா வந்து சொல்ல முடியுமா? உங்க தம்பி கொடுத்த முழு பணத்தையும் வாங்க முடியலை அப்படினாலும் த அனுசுயாதேவி மனசளவுலப் படுற கஷ்டத்தை குறைக்க இது உதவும். நீங்க சாட்சியா வர்றதா இருந்தா நான் அதற்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பிக்கிறேன்", என்றார்.

"அதுக்கு என்ன மேடம் வந்துட்டா போச்சு. என்னைக்கு வரணும்னு சொல்லுங்க. நான் வரேன்", என்று உடனே ஒத்துக்கொண்ட செல்வம் "வேற யாராவது சொந்த பந்தத்துல தேவி பிள்ளைக்கு சாதகமா பேசுறதுக்கு இருக்காங்களான்னு சொல்லி நான் அரசல் புரசலா விசாரிச்சு பார்க்கிறேன் மேடம்! ஏன்னா நான் வர்றது தெரிஞ்சாலே என் பொண்டாட்டி உடனே அந்த சாவித்திரிக்கு போனை போட்டுடுவா. அதனால நான் நேரடியா யார்கிட்டயும் கேட்க முடியாது", என்று தன் நிலையையும் தெளிவாகக் கூறினார்.

"எங்க மூலமா விஷயம் வெளியில் போகாது சார்! நீங்க மட்டும் வாங்க, போதும். அதுக்கு மேல சாட்சிகளை வேற வழியில ஏற்பாடு பண்ண முடியுமா முடியாதான்னு நான் பார்த்துக்குறேன். நீங்க வேற யார்கிட்டயும் கேட்க வேணாம் சார்! அனுசுயா தேவியோட முன்னாள் கணவரும், முன்னாள் மாமியாரும் ரொம்ப மோசமானவங்களா இருக்காங்க. அவங்களால இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆபத்து வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கு. நீங்க யார்கிட்டயும் கேட்க வேண்டாம், யாருகிட்டயும் சொல்ல வேண்டாம். நீங்க என்னைக்கு கோர்ட்டுக்கு எத்தனை மணிக்கு வரணும் அப்படிங்கிறதை நான் உங்களுக்கு நேரடியாக போன் பண்ணி சொல்லிடுறேன் சார்!", என சுஜாதாக் கூறியவுடன் தனக்கு அழைக்க வேண்டிய நேரங்களை பகிர்ந்துகொண்ட செல்வம் அழைப்பினை துண்டித்தார்.

ரங்கம்மாவிற்கு தன்னுடைய கடைசி மகளை நந்தனுக்கு முடித்து தர வேண்டும் என்ற எண்ணம் இருப்பது அவருக்கு புரிந்த நொடியிலேயே அவர் தேவிக்கு ஆதரவு ஆதரவளிக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டார். இல்லையெனில் அவரும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார். இப்போது தான் கூறும் சாட்சியம் மூலமாக நந்தனுக்கு தண்டனை கிடைத்தால் தனது மகளின் வாழ்வு தப்பிவிடும் என்ற சுயநலமும் அவரை சாட்சி கூற ஒப்புதல் அளிக்கச் செய்தது.

செல்வத்திடம் பேசி முடித்த சுஜாதா உடனடியாக மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரை அழைத்து அவரிடம் சிறிது நேரம் பேசி அவர்களை சாட்சியாக சேர்க்க ஒப்புதல் பெற்றுக்கொண்டார். தேவிக்கு ஒரு நல்லதொரு நிம்மதியான வாழ்வினை தந்திட சுஜாதா முயற்சிகள் மேற்கொண்டு இருக்க அவளோ நிம்மதி என்பதே அறியாமல் வலியினால் சுருண்டு கொண்டிருந்தாள்.

அந்த வலியிலும் சுஜாதா கூறியதை ஒரு பேப்பரில் எழுதி வைத்திருந்த காரணத்தினால் கைனகாலஜிஸ்டிற்கு உடனடியாக அழைத்து விட்டாள். இவள் அழைப்பினை அழைப்பு முடியும் வரையும் அவர் ஏற்கவில்லை. சுஜாதா அன்றொருநாள் ஒரு முறை அழைத்து ஏற்காவிட்டாலும் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டும் என்றுக் கூறியது அவளது ஆழ்மனதில் பதிந்து இருந்ததோ என்னவோ அதனை பற்றிய ஞாபகம் இன்றியே மீண்டும் மீண்டும் அந்த எண்ணிற்கு அவள் அழைத்திட அவள் வலியும் ஒரு காரணமாக இருந்தது.

ஐந்தாவது முறையாக தேவி அழைத்த பொழுது அழைப்பினை ஏற்ற மருத்துவர் ஹலோ என்ற குரலில் சற்று கடுப்பும் தட்டுப்பட்டது. ஆனால் தேவி அதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் "மேடம்! அட்வகேட் சுஜாதா மேடம் உங்க நம்பரை கொடுத்து பேசச் சொன்னாங்க", என்றவுடன் மறுபுறம் இருந்த மருத்துவரும் "சுஜாதா சொன்னாங்களா? சொல்லுங்கம்மா. என்ன விஷயமாப் பேசும்?", என வினவினார்.

"மேடம்! என் பேரு அனுசுயா தேவி! எனக்கு பிளீடிங் போய்க்கிட்டே இருக்கு. ரொம்ப வலிக்குது", என அவள் கூறியக் குரலிலேயே அந்த மருத்துவருக்கு அவளின் வலி புரிந்ததோ என்னவோ?
"எத்தனை நாளா இப்படி இருக்குமா?" என வினவினார். "இப்போ ஒரு வருஷமா இருக்குது மேடம்!", என்றவளிடம் "மாசத்துல எத்தனை நாள் பிளீடிங் இருக்கு?", என அடுத்தது ஒருக் கேள்வியை வீசினார்.

"வருஷத்துல 300 நாளும் பிளீடிங் இருக்கு மேடம்! ஒரு 65 நாள் மட்டும்தான் இல்லை. அந்த மாதிரி நேரத்துல என்னோட முதுகும், வயிறும் ரொம்ப வலிக்குது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை", என்று அவள் கூறியதைக் கேட்டு மறுபுறம் இருந்தவர் சற்று அதிர்ந்துதான் போனார்.

"இத்தனை நாளாய் டாக்டர்கிட்ட ஏன் காமிக்காம இருந்தீங்க?", என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல் நீங்கள் எந்த இடத்தில் இருக்கீங்க என வினவினார். தேவி தன்னுடைய இருப்பிடத்தை பற்றிக் கூறிய உடன் "இன்னைக்கு சாயங்காலம் ஹாஸ்பிடலுக்கு வரமுடியுமா? வந்தா இன்னைக்கே செக் பண்ணிடலாம்", என்று மருத்துவர் கூறிய உடன் "நான் இப்பவே கிளம்பி வரட்டுமா மேடம்?", என்றாள் தேவி.

அதற்கு சற்று யோசித்தவா் "சரி வாங்க. வந்து ரிசப்ஷனில் டாக்டர் வாணியை பாா்க்கணும் அப்படினு மட்டும் சொல்லுங்க. அப்பாயின்மென்ட் இருக்கான்னு கேட்டா டாக்டர்தான் வர சொன்னாங்கன்னு சொல்லிடுங்க", என்று அவர் அழைப்பை துண்டித்துவிட்டார். அவர் அழைப்பை துண்டித்த உடன் உடனடியாக தன்னுடைய கைப்பையை எடுத்துக் கொண்ட தேவி மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள்.

ஏனெனில் அவளது வலி உயிரினை குடித்துக்கொண்டிருந்தது. தேவி வெளியில் வரும்பொழுது அவளது எதிர்ப்புறமாக வந்த செல்வம் "என்னமா தேவி! எங்க கெளம்பிட்ட?", என்றவுடன் "ரொம்ப வயிறு வலிக்குது பெரியப்பா! ஹாஸ்பிடலுக்கு போறேன்", என்றாள்.

எந்த ஹாஸ்பிடலுக்குமா என்றவரிடம் சுஜாதா எழுதி தந்திருந்த பேப்பரை நீட்டினாள்.இரு ஆட்டோ படிச்சிட்டு வர்றேன் என்றவர் சற்று தள்ளி சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்து அந்த ஆட்டோக்காரரிடம்
"ஹாஸ்பிடல்ல பிள்ளையை பத்திரமாக இறக்கி விட்டு திரும்ப வர்ற வரைக்கும் காத்திருந்து கூட்டிட்டு வந்துரு. உன்னோட வெயிட்டிங் சார்ஜ் வாங்கிக்கோ", என்றவுடன் அதே தெருவில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் இருப்பவர் என்பதால் "சரி சார்! நீங்க சொல்லனுமா? பத்திரமா கூட்டிட்டு வந்துடறேன்", என அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.

ஒன்னு மாத்தி ஒன்னு இந்த பிள்ளைக்கு தான் வரணுமா என புலம்பிக்கொண்டே செல்வம் தன் வீட்டிற்கு சென்றுவிட ரங்கம்மா "யார் கூட பேசுறதுக்காப அவசர அவசரமா வெளியில போனீங்க? நீங்க பக்கத்து தெருவுல நின்னு யாரோடையோ போன் பேசிக்கிட்டு இருந்தீங்கலாம்", என வினவினார்.

வீட்டுக்கு நாம வந்து சேருறதுக்கு முன்னாடி நாம என்ன பண்றோம் ஏது பண்றோம்னு நியூஸை கொண்டு வந்து வீட்டுல்போடுறவங்களை போட்டு தள்ளனும் என மனதில் எண்ணிக் கொண்டவர் "எனக்கு போன் எதும் வரவே கூடாதா? கட்டையில போற வயசுல இன்னும் கட்டுனவன்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க.எவனாவது சொன்னா முக்கியமான போன் ஏதாவது பேசி இருப்பார்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே!யார் சொன்னா அதை சொல்லு முதல்ல", என தன் சத்தத்தை செல்வம் உயர்த்திய உடன் ரங்கம்மா அடங்கி விட்டார்.

இதுக்கு மேல இந்த மனுஷன்கிட்ட மனுஷி பேசுவாளா என புலம்பிக்கொண்டே மறுநாள் வரப்போகும் பேரப் பிள்ளைகளுக்காக பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்.


தேவி மருத்துவமனைக்கு சென்ற உடன் அங்கிருந்த ரிசப்ஷனில் மருத்துவர் கூறியது போன்று அவரது பெயரை உரைத்திட வாங்க மேடம் என அவர் இருக்கும் அறைக்கு ஒரு நர்ஸ் அழைத்துச் சென்றார்.

"கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. டாக்டர் இன்னொரு பேஷண்ட் பார்த்துகிட்டு இருக்காங்க", என கூறிவிட்டு மருத்துவரிடமும் அனுசுயா தேவியின் வரவை கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார். உள்ளே இருந்த பெண் வெளியில் வந்தவுடன் தேவியை மற்றொருவர் வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.

தேவி மருத்துவமனைக்கு செல்லும் பொழுது தன் கைப்பையை எடுத்து சென்றிருந்ததால் அவர் தேவியிடம் கேள்விகள் கேட்டவுடன் தன் கைப்பையில் இருந்த மருத்துவமனை அறிக்கைகளை எடுத்து அவரிடம் தந்தாள். ஏற்கனவே இந்த பொண்ணு வேற எங்கேயோ ட்ரீட்மென்ட் போயிருக்கோ என எண்ணியவாறே வாங்கிப் பார்த்தவர் சற்று அதிர்ந்துதான் போனார்.

ஏனெனில் தேவி எட்டு தடவை ஐவிஎஃப் ட்ரீட்மென்ட்க்கு உட்படுத்தப்பட்டு இருந்தாள். அது ஐவிஎஃப் ட்ரீட்மென்ட்கான ஃபைல் இல்லை என்றாலும் அதிலிருந்த மருந்துகள், மருத்துவ குறிப்புகள் வைத்தே இவள் ட்ரீட்மென்ட் சென்றுள்ளாள் என்பது அந்த மருத்துவருக்கு புரிந்துபோனது.

உடனடியாக அவளிடம் "எப்ப கடைசியா ஐவிஎஃப் ட்ரீட்மென்ட் எடுத்தீங்க?", என்றவுடன் மூணு வருஷத்துக்கு முன்னாடி மேடம் என்றாள். "இடையில இருந்த 2 வருஷம் எந்த பிரச்சினையும் இல்லையா? "என வினவினார்.

"அப்ப பீரியட்ஸ் ஒழுங்கா வராம இருந்துச்சு மேடம்! அதனால நானும் கண்டுக்கலை", எனக் கூறினாள். "சரிமா இப்ப நான் உங்களுக்கு சாதாரணமாக ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பண்ணி பாா்க்குறேன். அதுக்கு அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணலாம்", எனக் கூறிய மருத்துவர் அவளை பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்று அல்ட்ரா சவுண்ட் செய்து பார்த்தார்.

அதனை செய்து பார்த்தவர் தேவியிடம் "உங்களுக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுதுன்னு சொன்னீங்க", என வினவினார். ஆமாம் மேடம் என்றவளிடம் உள்ள உட்காருங்க வரேன் என கூறிவிட்டு சிறுது நேரத்தில் வந்தவர் "வீட்டிலிருந்து வேற யாரும் வந்துருக்காங்களா?", எனக் கேட்டார்.

"இல்லை மேடம்! எனக்கு யாருமே கிடையாது. நான் மட்டும்தான்", என்றவுடன் உங்க ஹஸ்பண்ட் என பாதியிலேயே நிறுத்தினார். மருத்துவரின் வார்த்தையில் தேவியின் உடல் தூக்கி போட அதன்பின் எந்த கேள்வியும் கேட்காமல் மருத்துவர் அவளுக்கு விளக்க ஆரம்பித்தார்.

உங்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பார்த்ததுல அடினோமயோசிஸ் (Adenomyosis)மாதிரி இருக்கு. நீங்க சிடி ஸ்கேன் பண்ணிட்டு வந்துடுங்க.அதுக்கு அடுத்து தான் அதை கன்ஃபார்ம் பண்ண முடியும். முதலில் அடினோமயோசிஸ் அப்படின்னா என்னனு உங்களுக்கு நான் தெளிவா சொல்லிடறேன். நம்ம கர்ப்பப்பைக்கு வெளியில எண்டோமெட்ரியல் திசு இருக்கும். அதோட வளர்ச்சி கர்ப்பப்பைக்குள்ளயும் வர்றப்ப தான் அடினோமயோசிஸ்னு சொல்லுவாங்க.

இதை தமிழ்ல கருப்பை திசு நார்க்கட்டி அப்படின்னு சொல்றோம். இதனால தான் உங்களுக்கு அளவுக்கதிகமான குருதிப்போக்கு, வலி ஏற்படுது. இதுக்கான ட்ரீட்மெண்ட் அப்படின்னு சொன்னா குணப்படுத்தவே முடியாத அளவுக்கு போற பட்சத்தில் கர்ப்பப்பையை நீக்குவது மட்டும் தான். நீங்க சிடி ஸ்கேன் பண்ணிட்டு வாங்க. நான் உங்களுக்கு ஒரு ஆறு மாசத்துக்கு மாத்திரை மட்டும் கொடுக்கிறேன்.

அதுக்கு அடுத்து நிலைமை சரியாகாத பட்சத்துல கர்ப்பப்பையை எடுக்க வேண்டியதுதான். அந்த தசை நார் கட்டிகள் கேன்சர் செல்களா மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால மட்டும் தான் நாங்க கர்ப்பப்பையை நீக்குவோம்", என விளக்கிக் கொண்டே வந்த மருத்துவர் தேவியின் முகம் பயத்தில் வெளிறி இருப்பதை பார்த்து "பயப்படுற அளவுக்கு ஒன்னும் பெரிய விஷயமில்லை. இது இப்ப இருக்குற காலகட்டத்துல சர்வசாதாரணமா நடந்துகிட்டு இருக்கிறதுதான்.

நீங்க எப்ப சிடி ஸ்கேன் பண்ண வரமுடியும்?", என வினவினார். தனது கையில் இருந்த பேப்பரை பார்த்ததில் திங்கட்கிழமை கோர்ட்டுக்கு செல்ல வேண்டியது பற்றி எழுதி இருந்ததால் திங்கட்கிழமைக்கு அடுத்து வரட்டுமா மேடம் என தேவி வினவினாள். "நல்லது! நான் இப்ப ஸ்கேன் பண்றதுக்கு உங்களுக்கு எழுதிக் கொடுத்துடுறேன். நீங்க வர்றப்ப அதை கொண்டுவந்தா ஸ்கேன் பண்ணிடுவாங்க.

முதலில் வெறும் வயித்துல ஸ்கேன் எடுப்பாங்க. அதுக்கு அடுத்து உங்களுக்கு தண்ணில ஒரு மருந்து கலந்து கொடுத்து குடிக்க வைத்து ஸ்கேன் எடுப்பாங்க. மூணாவதா கையில உங்களுக்கு டெஃப்லான் போட்டு அதுல மருந்து ஏத்திகிட்டே ஸ்கேன் பண்ணுவாங்க. மொத்தமா இது முடிய ரெண்டுல இருந்து ரெண்டரை மணி நேரம் ஆயிடும். அதற்கு தயாராக வாங்க", என்றவர் அவளுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்கானவற்றை எழுதி கொடுத்து அனுப்பியதுடன் சுஜாதாவிற்கு அழைத்து அவளின் நிலைமையை உடனேக் கூறிவிட்டார்.

தேவியின் நிலைமையை கேட்ட சுஜாதா முதல்ல இந்த பொண்ணை ரஞ்சனிகிட்ட அனுப்புறதா இல்லை கைனகாலஜிஸ்ட் ட்ரீட்மென்ட்க்கு அனுப்புறதா? இன்னும் என்னென்ன தான் உடம்புல இருக்குன்னு தெரியலையே!", என கவலைப்பட ஆரம்பித்து விட்டார்.

யாரின் கவலையையும் யாரின் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் திங்கட்கிழமையும் வந்து சேர்ந்தது. முதலில் வந்து அழைத்து சென்றது போன்றே அன்றும் கோபியே வந்து தேவியை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றான்.

தேவிக்கு முன்னதாகவே சாவித்திரியும், நந்தனும் வந்து காத்திருந்தனர். அன்றைய தினம் போலவே இவர்களின் ஐட்டம் நம்பர் சொல்லி உறுதி செய்த பின்னர் தங்களுக்கான அறையை எங்கே என்று அங்கிருந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொண்டு அவ்விடத்திற்குச் சென்று அமர்ந்த பொழுது தேவியை கண்ட சாவித்திரி அதற்குமேல் பொறுத்துக் கொள்ள இயலாமல்

"மூதேவி வீட்டிலிருந்தப்பதான் எங்க உசுரை எடுத்தன்னா இப்ப கோர்ட்டுக்கு இழுத்து எங்களை நாறடிக்கணும்னு பாா்க்குறியா? உன்னை என்னைக்கு என் மகனுக்கு கட்டி வச்சேனோ அன்னைக்கே கொன்னு போட்டுருக்கணும். நல்லா சொத்துபத்துமா வருவான்னு நினைச்சி சந்தோசபட்டு கட்டுனா இருக்குறதெல்லாம் பிடுங்குறதுக்கு வழி பார்த்துட்டுருக்கியா", என கத்திக் கொண்டே இருந்தவர் வேக வேகமாக வந்து அவளது கன்னத்தில் ஓங்கி அடித்திருந்தார்.

அவரை நிதானத்திற்கு கொண்டு வருவதற்குள் நந்தனும், ராஜூம் படாதபாடுபட்டு போயினர். இந்த கலவரம் நடந்து கொண்டிருக்கையில் இதனை தடுத்து நிறுத்திட ஓடிவந்த சுஜாதா தன்னுடன் வந்த கோபியின் கையை பிடித்துவாறு திடீரென நின்றுவிட்டார்.

"மேடம்! சீக்கிரமா வாங்க. அந்த லேடி அனுசுயாதேவியை போட்டு அடிச்சிகிட்டிருக்காங்க. இப்படியே போனா பெரிய பிரச்சனை ஆயிடும்", என்று பதறியவனிடம் கண்ணைக் காட்டியதில் அந்த திசையில் பார்த்தவன் அவனும் பதட்டத்தை விடுத்து அந்த இடத்திலேயே நின்று விட்டான். சாவித்திரி செய்த செயல் தேவிக்கு அவமானமாக இருந்தாலும் அதனால் ஏற்படும் போகும் சாதகமான நிலையை பற்றி அவள் அந்நொடியில் அறிந்திருக்கவில்லை.
 
  • Like
Reactions: Sumathi mathi