வரமாய் வந்த வலிகள் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

தீபி புதிய கதையுடன் வந்து விட்டார்கள்..."வரமாய் வந்த வலிகள்" ...மனமார்ந்த வாழ்த்துக்கள் தீபி...
 
  • Love
Reactions: Kripnythaa

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
ஹாய் பிரெண்ட்ஸ்,

தீபி புதிய கதையுடன் வந்து விட்டார்கள்..."வரமாய் வந்த வலிகள்" ...மனமார்ந்த வாழ்த்துக்கள் தீபி...
Tnx ma❤❤❤❤
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-1

எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு கருப்பு அங்கி அணிந்தவர்களுடன் பலரும் பேசிக்கொண்டிருப்பதை மிரண்ட பார்வையுடன் பார்த்துக்கொண்டே நீதிமன்ற வளாகத்தினுள் காலடி எடுத்து வைத்த அனுசுயா தன்னுடைய அலைபேசியில் இருந்து தான் பார்க்க வேண்டியவருக்கான அழைப்பினை விடுத்தாள்.

இவளது அழைப்பினை மறுபுறம் ஏற்றவுடன் "மேடம்! நான் கோர்ட் வாசலில்தான் நிக்குறேன். உங்களை எந்த இடத்துல வந்து பார்க்கட்டும்?", என வினவினாள். மறுபுறம் உரைத்ததை கேட்டவள் அவர்கள் கூறியிருந்த வழியில் தன் எட்டுகளை சற்று பதட்டத்துடனே எடுத்து வைத்தாள்.

தனக்கு கூறப்பட்டிருந்த பத்தாம் எண் அறையின் முன் வந்தவள் மீண்டும் அலைபேசியை எடுத்து அழைப்பு விடுக்க முயற்சித்த நொடியில் அவளை நோக்கி வேகமாக வந்த கருப்பு அங்கி அணிந்த ஒரு பெண் "நீங்கதானே அனுசுயா?", என வினவினார். அனுசுயா ஆமாமென தலையாட்டிய உடன் "வாங்க நான்தான் சுஜாதா!", என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அப்பெண் அனுசுயாவை அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

அவரது பின்னேயே ஆட்டுக்குட்டி போல வந்த அனுசுயாவின் மனதில் பலவித எண்ணங்கள், பயங்கள் பூதாகரமாக தோன்றினாலும் அதனை எவ்வாறேனும் சமாளிக்க வேண்டும் என்ற ஒரு துளி எண்ணமும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

தன்னுடைய எண்ணங்களிலேயே ஆட்பட்டிருந்த அனுசுயா தன்னை சுஜாதா தோள் தொட்டு உலுக்கிய பின்னர்தான் அதிலிருந்து மீண்டு "சொல்லுங்க மேடம்!", என்றாள். வந்ததிலிருந்தே அவளை அவதானித்துக் கொண்டிருந்த சுஜாதா இப்பொழுது மிகவும் நிதானமாக "நீங்கதான் சொல்லனும் அனுசுயா! என்ன விஷயமா நீங்க என்னை பாா்க்கணும்னு வந்தீங்க?", என வினவினார்.

சுஜாதா வினவியவுடன் தன்னை சுற்றி இருந்த சுற்றுப்புறத்தை பார்த்த அனுசுயா இங்கே வைத்து சொல்வதா என்ற ஒரு பார்வையை தயக்கத்துடன் வெளிப்படுத்தினாள். அவளது பார்வை கண்டு புரிந்து கொண்ட சுஜாதா "நீங்கதான் அவசரமா பேசணும்னு சொன்னீங்க. பகல் நேரத்துல கண்டிப்பா நான் கோர்ட்லதான் இருப்பேன். சாயங்காலமா வந்தீங்கன்னா என்னோட ஆபீஸ்ல வச்சு நீங்க ஃப்ரீயா பேசலாம்", என சிரித்த முகமாகவே பதிலுரைத்தார்.

அவரது பதிலில்தான் அவரிடம் பேசிய விஷயங்கள் மனதில் ஆடினாலும் தன்னுடைய நிலைமையை இப்படி வெட்ட வெளியில் கூற சற்றும் விருப்பமின்றி "மேடம்! ப்ளீஸ் மேடம்! எங்கேயாவது தனியா உட்கார்ந்து பேசலாம். என்னால இங்க இப்படி வெட்ட வெளில வச்சு சொல்ல முடியாது", என கெஞ்சும் குரலில் கேட்டாள்.

அவளை பரிதாபமாக பார்த்த சுஜாதா "உங்களால எவ்வளவு நேரம் இப்ப வெளியில இருக்க முடியும்?", என தன்னுடைய வினாவினை வீசினார். அவர் அவ்வாறு கேட்டவுடன் அதிர்ந்து விழித்த அனுசுயா தான் சிறிது நேரம் மட்டுமே வெளியில் இருக்க முடியும் என்பதை இவர் எவ்வாறு உணர்ந்து கொண்டார் என அதிசயித்துப் போனாள்.

"என்னால ரொம்ப நேரம் வெளியில இருக்க முடியாது மேடம்!", என்று அனுசுயா கூறிய பதிலை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தவர் போல சுஜாதா "சரி! என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க", என்று முடிவெடுக்கும் பொறுப்பை அவளிடமே தள்ளினார்.

அவர் கூறியதை கேட்டு விழித்ததிலேயே தெரிந்து போனது இதுவரை தன்னிச்சையாக எவ்வித முடிவுகளும் இவள் எடுத்திருக்கமாட்டாள் இதுவே முதல் முறை என்று. அவள் விழிப்பதை பார்த்து மனதினுள் பரிதாபப்பட்டவர் "உங்களால காலையில கொஞ்சம் சீக்கிரம் வர முடியுமா?", என தன்னுடைய வினாவினை சற்று மாற்றிக் கேட்டார்.

"எத்தனை மணிக்கு வரணும் மேடம்?", என அவள் கேட்ட பொழுது ஒரு ஒன்பது டூ பத்துக்குள்ளன்னா உங்களுக்காக உங்க நிலைமையைப் பார்த்து நான் வீட்ல வச்சு பேசுறேன்", என கூறியவுடன் ஒன்பது டூ பத்தா என சிறிது தயங்கியவள் "சரி மேடம்! நான் கண்டிப்பா வந்துடறேன்", என பதிலுரைத்தாள்.

ஓகே வந்துடுங்க என்று தன்னுடைய முகவரி அட்டையை எடுத்து அவளிடம் நீட்டிய பொழுது "இது வேண்டாம் மேடம்! நீங்க எந்த இடம்னு மட்டும் சொல்லிடுங்க. என்கிட்ட இதெல்லாம் வச்சிக்க முடியாது", என அதற்கும் தன்னுடைய கழிவிரக்க நிலையை எண்ணி வருந்தியவாறே கூறிய அனுசுயாவை யோசனையுடன் பார்த்த சுஜாதா தன் வீட்டிற்கு வர வேண்டிய வழியை அவளிடம் கூறியதுடன் இல்லாமல் மீண்டும் ஒரு முறை அவளை கூறச் செய்து திருப்தி பட்டுக் கொண்டார்.

" ஓகே! அனுசுயா! நீங்க நாளைக்கு காலையிலேயே வீட்டுக்கு வந்திடுங்க. நான் உங்களுக்காக வீட்டிலேயே வெயிட் பண்றேன்", என அவர் கூறிய உடன் தேங்க்ஸ் மேடம் என கூறிவிட்டு அவரிடம் நின்று முறையாக கூட விடை பெற நேரம் இல்லாதவள் போல அனுசுயா வேக வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அனுசுயா நகர்ந்த உடன் சுஜாதாவின் அருகில் வந்து நின்ற அவளது ஜூனியர் கோபி "என்ன மேடம்! கிளையன்ட்கிட்ட என்ன சொல்லி விரட்டுனீங்க? இந்த ஓட்டம் ஓடுறாங்க. கோர்ட்ல பேசுற மாதிரியே கிளையன்ட்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னா கேட்குறீங்களா?", என அலுத்துக் கொண்டான்.

அவனது பேச்சைக் கேட்டவர் "என் ஜூனியர் ஒருத்தன் வருவான் அப்படின்னு சொன்ன உடனேதான் அந்தப் பொண்ணு இந்த மாதிரி விழுந்தடிச்சு ஓடுது", என அவனுக்கு பதிலடி கொடுத்தார். இந்த வேலை தானே வேண்டாம் என அவன் கூறிய உடன் "கோபி! அந்த பொண்ணை காலைல வீட்டுக்கு வரச் சொல்லிருக்கேன். நீயும் நாளைக்கு வீட்டுக்கு ஒன்பது மணிக்குலாம் வந்துரு", எனக் கூறியவுடன் அவரை அதிசயமாக பார்த்தான்.

"எப்ப இருந்து வீட்ல எல்லாம் வச்சு நீங்க கிளையன்ட்கிட்ட பேச ஆரம்பிச்சீங்க சொல்லவே இல்லை", என கோபி வினவியவுடன் "அந்த பொண்ணோட நிலைமை சரியில்லைன்னு தெரியுது. கோர்ட்டுக்கு வர்றது இதுதான் முதல் தடவையா இருக்கும் போல இருக்கு .ஒரு மாதிரி பயந்து பயந்து வருது. வீட்டுக்கு தெரியாமல் ஏதோ ஹெல்ப் நம்மகிட்ட கேட்டு வந்து இருக்கு. பேசிப் பார்ப்போம், முடிஞ்சா செய்வோம். முடியலைன்னா இந்த வேலைக்கு நாங்க சரிபட்டு வரமாட்டோம்ன்னு ஒதுங்கிடுவோம்", என அசால்ட்டாக உரைத்தவர் தன்னுடைய அடுத்த வேலையை பார்க்கச் சென்று விட்டார்.

தனது மருமகள் தேவி சமையலறையில் சமைத்துக் கொண்டிருப்பதை ஹாலில் அமர்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தார் சாவித்திரி அவளை ஏதேனும் கூறி காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் "ஏய் தேவி என்னோட மொபைலை எடுத்துக்கொடு", எனக் கத்தினார்.

அவரது கருத்துக்கு எவ்வித எதிர்வினையும் காட்டாமல் வேகவேகமாக ஹாலுக்கு வந்தவள் மொபைலை வேறு எங்காவது வைத்திருக்கிறாரா என பார்த்தால் அது அவர் அமர்ந்திருந்த சோபாவின் முன்னே இருந்த டீப்பாய் மேல்தான் இருந்தது.

கையெட்டும் தூரத்தில் வைத்திருந்த மொபைலை எடுத்துக் கொடுப்பதற்கு தன்னை ஏன் அழைத்தார் என மனதில் எண்ணினாலும் அதனை வெளிப்படுத்தாமல் அந்த அலைபேசியை எடுத்தவள் இந்தாங்கத்தை என அவரின் கையில் வைத்த பொழுது "உன்னையெல்லாம் தண்டத்துக்கு பெத்து விட்டிருக்காங்க. ஒரு வேலை செய்றதுக்கு துப்பு இல்லை. அந்த போனை எடுத்துக் கொடுக்கிறப்பவே யாருக்காச்சும் போன் பண்ணனுமா? நானே போட்டு தரட்டுமான்னு கேட்க தெரியாதா? இந்த மாதிரி ஒன்னத்துக்கும் உதவாதவளை வச்சுக்கிட்டு என் பையனும், நானும் காலத்துக்கும் மாரடிக்க வேண்டியதா இருக்கு. எல்லாம் எங்க தலையெழுத்து", என அன்றைய நாளின் மருமகள் வதையை சாவித்திரி ஆரம்பித்தார்.

அவா் அனைத்தையும் பேசி முடிக்கும்வரை அதே இடத்தில் நின்று கொண்டிருந்த தேவி ஒரு வார்த்தையும் பதில் பேசாமல் மீண்டும் சமையல் அறையில் தான் விட்டிருந்த பணியைத் தொடர்வதற்கு சென்றுவிட்டாள். அதற்கும் "சரியான அமுக்குணி! லட்சணமா இருக்கான்னு சொல்லி கட்டிக்கிட்டு வந்தா இப்ப பன்னி மாதிரி பெருத்து போயிருக்கா. வெளியில் தலைகாட்ட முடியலை. உங்க மருமக என்ன இவ்வளவு தடியா இருக்கா? கொஞ்சம் சாப்பாடு கம்மி பண்ணுங்க அப்படின்னு மத்தவங்க பேசறப்ப எனக்குதான் நாக்க புடுங்கிட்டு சாகலாம் போல இருக்கு", என அதற்கும் பேசிய சாவித்திரி மருமகள் எடுத்து தந்த அலைபேசியில் யார் யாருக்கோ அழைத்து தேவியைப் பற்றி குறை கூறும் படலத்தை செவ்வனே செய்து ஒன்றுக்கும் உதவாத மருமகளை தாங்கும் மாமியார் தான் மட்டுமே என்பது போல் பேசிக் கொண்டிருந்தார்.

மிருக வதை தடுப்புச் சட்டம் என்று இருப்பதுபோல் மருமகள் வதை தடுப்புச் சட்டம் என ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணமே அந்நொடியில் தேவியின் மனதில் தோன்றியது.

திருமணமான முதல் மாதத்திற்கு பின்னர் ஆரம்பித்த ஒரு நிமிட இரண்டு, நிமிட குத்தல் பேச்சுகள் வருடம் செல்ல செல்ல அதிகரித்து இந்த பதினைந்து வருடங்களில் நொடி நேர இடைவெளியின்றி கிடைப்பதில் அந்த வீட்டில் இருக்கும் சுவரை போன்றே தன்னையும் தேவி உணர ஆரம்பித்திருந்தாள்.

ஆரம்பத்தில் தன் கணவனான நந்தனிடம் இந்த பேச்சுகளைக் கூறியபொழுது காது கொடுத்து கேட்பது போல் நடித்தவன் பின்னர் இந்தப் பேச்சுகளை வாங்குவதற்கு நீ மட்டுமே தகுதியானவள் என்ற ரீதியில் பேச ஆரம்பித்திருந்தான். அதன் பின்னரான வாழ்க்கையில் தேவி ஒன்றை ஆராய்ச்சி இன்றி கண்டுபிடித்திருந்தாள்.

உணவு விழுங்குவதை போன்றே உதாசீனம் செய்யும் வார்த்தைகளையும் விழுங்கி விட வேண்டும் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவாக இருந்தது. அனைத்து ஆராய்ச்சிகளும் நேர்மறை முடிவுகளை மட்டும் தருவது இல்லையே! அதில் எதிர்மறை முடிவுகளும் கிட்டிடுமே! அது போன்றுதான் முதலில் உணவும், வார்த்தைகளும் ஒன்று என எண்ணியவள் உணவு உண்ட பின்னர் அது செரிமானமாகி தேவையற்ற கழிவாக வெளியேறுவது போன்று வார்த்தைகள் செரிக்கப்படுவதும் இல்லை, வெளியேறுவதும் இல்லை என்ற எதிர்மறை முடிவினை தேவி பெற்றிருந்தாள்.

திருமணம் தேவியின் மனதின் மரணமாக அமைந்ததை நொந்துகொண்டே தேவி தனது வேலையை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்.பேசினாலும், பேசாவிட்டாலும் குற்றம் குறை கண்டுபிடிக்கும் மாமியாரின் மத்தியில் வாழ்வது திமிங்கலத்தின் வாயில் இரையாகாமல் அதன் அருகிலேயே வாழும் குட்டி மீனின் நிலைதான்.

சுஜாதா கூறியது போல் காலை நேரத்தில் எவ்வாறு வெளியில் செல்வது என்று இரவு முழுவதும் யோசித்து அனுசுயா மறுநாள் விடியலில் எழுந்தவுடன் தன் வீட்டினரிடம் தான் வெளியில் செல்வதற்கு ஏற்ற காரணத்தை தயக்கத்துடன் கூறியவுடன் அவர்களே அவளை மனமுவந்து வெளியே அனுப்பி வைத்தனர்.

மனம் குற்ற குறுகுறுப்பில் உறுத்தினாலும் அதனைப் புறந்தள்ளிவிட்டு சுஜாதாவின் வீட்டிற்கு சென்றவள் தனக்காக தன் ஜூனியர் உடன் காத்துக்கொண்டிருந்தவரை வணங்கி அவர் முன் அமர்ந்தாள்.

சுஜாதாவும் சுற்றி வளைக்காமல் நேரடியாக அனுசுயாவிடம் என்ன உதவி செய்ய வேண்டும் என வினவியவுடன் அவள் கூறிய முதல் வார்த்தையிலேயே கோபியும், சுஜாதாவும் திகைப்பின் உச்சத்திற்கு சென்று விட்டனர்.

அப்படி என்ன வார்த்தைகளை தான் அனுசுயா சுஜாதாவிடம் கூறியிருப்பாள்?
 
  • Like
Reactions: Sumathi mathi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
வரமாய் வந்த வலிகள்-2


அனுசுயா கூறியதைக் கேட்டு சுஜாதா, கோபி இருவரும் அதிர்ந்தாலும் அவள் இத்தகைய வார்த்தைகளை கூற வேண்டுமெனில் எப்பேற்பட்ட துன்பத்தை அனுபவித்து இருக்க வேண்டுமென நொடியில் உணர்ந்துகொண்ட சுஜாதா தன் திகைப்பை விரட்டிவிட்டு அவளது முகத்தை ஏறிட்டாா்.

அனுசுயாவின் முகத்தில் பதட்டத்துடன் பயமும் சூழ்ந்திருப்பதை கண்டவர் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் தனக்கு தேவையான விவரங்களை அவளிடம் சிறு சிறு கேள்விகளாக கேட்க ஆரம்பித்தார். அதன் பின்னர் "நீங்க வீட்டுக்கு கிளம்புங்க அனுசுயா! வேற எதுவும் தேவைப்பட்டால் நான் உங்க நம்பருக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி விடுறேன். நீங்க அதை பார்க்கிற நேரத்தில் எனக்கு போன் பண்ணுங்க", என கூறியவுடன் அவளும் மிகவும் வேகமாக எழுந்து வாசலை நோக்கி சென்ற பொழுதுதான் சுஜாதாவிற்கு மற்றொரு கேள்வி எழுந்தது.


"அனுசுயா! ஒரு நிமிஷம் நில்லுங்க. இப்ப நீங்க செய்யப் போற வேலைக்கு நீங்க வேற வெளியில எங்கேயாவது இருந்தாதான் உங்களுக்கு கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும். நான் இதை உங்களை பயமுறுத்துறதுக்காக சொல்லலை. பல இடங்களில் நடக்கிற நடைமுறையைதான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன். உங்களால வெளியேற முடியுமா? இல்லை நான் எதுவும் ஹெல்ப் பண்ணனுமா?", என வினவினார்.

சுஜாதாவின் கேள்வியில் சற்று நிதானித்தவள் "இந்த வாரத்துல நான் இதைப் பத்தி நேராவே பேசிடப் போறேன் மேடம்!" எனக் கூறியவள் தலையசைத்து வெளியேறி விட்டாள். அவள் வெளியே சென்ற பின்னரும் வந்தவுடன் கூறிய வார்த்தைகளை கேட்ட திகைப்பிலிருந்து வெளிவராத கோபி சுஜாதா உலுக்கியவுடன் திகைப்பில் இருந்து மீண்டவன் " என்ன மேடம்? ஒரு லேடி வந்து இப்படி ஒரு வார்த்தை சொல்றாங்க.நீங்க சரின்னு சொல்லிட்டு அவங்ககிட்ட கேள்வி கேட்குறீங்களே! முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே! ஏன் அவங்ககிட்ட நீங்க ஒத்துக்கிட்டீங்க?", என சற்றுக் குரலை உயர்த்தி வினவினான்.

"கோபி! நாம வக்கீல். நம்மகிட்ட ஒருத்தவங்க பிரச்சனையை கொண்டு வர்றாங்கனா நாம அதை தீர்த்து வைப்போம் அப்படிங்கற நம்பிக்கையில்தான் வற்ராங்க. அந்தப் பொண்ணு கேட்டதுல எனக்கு எந்த தப்பும் தெரியலை. உனக்கு ஏன் அது தப்பா தெரியுது?", என சுஜாதா சற்று கடுமையாக வினவினார்.

அவரின் கேள்விக்கு பதிலளித்திடாத கோபி "இவ்வளவு துணிச்சலான முடிவு எடுத்த பொண்ணு பயத்தோடு உட்காா்ந்து இருக்கு. அந்த பயத்துக்கும், முடிவு எடுத்த துணிச்சலுக்கும் சுத்தமா சம்பந்தமில்லாத மாதிரியே இருக்கு. நாளைக்கு கோர்ட்டில் வந்து இது மாத்தி பேசினா நாமதான் அசிங்கப்படனும்", எனக் கூறியவுடன்

" அவங்களை மரியாதையாக் கூப்பிட்டு பழகு. அது என்ன அது இதுன்னு சொல்லிக்கிட்டு. அவங்க கொடுக்கிற காசுலதான் நம்மளோட வாழ்க்கை ஓடும். அதை மனசுல வெச்சுட்டு பேசு", எனக் கூறிய சுஜாதா நீ கேட்ட கேள்விக்கு கோர்ட்டுக்கு போறப்ப பதில் சொல்றேன். முதல்ல காரை எடு", என அவனை விரட்டினாா்.

காரை முதலில் கிளப்பி வைத்த கோபி சுஜாதா வந்து ஏறியவுடன் காரை நகர்த்தியவாறு அவரது முகத்தை திரும்பி திரும்பி பார்த்தவாறு வந்தான். "ரோடை பார்த்து ஓட்டு மேன்...கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி பரலோகத்துக்கு கூட்டிட்டு போயிடுவ போலிருக்கே!", என அவனை அதட்டிய சுஜாதா தன் கையில் இருந்த மொபைலில் சிலபல குறுஞ்செய்திகளை தட்டியவர் அதன்பின்னரே நிமிர்ந்தார்.

நிமிர்ந்தவர் கோபியின்புறம் திரும்பி பாா்த்து விட்டு "கோபி! நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்குறேன். அதற்கு சரியான பதிலை நீ சொல்றியான்னு பாா்ப்போம். பெரும்பாலான பெண்கள் செய்ற கொலை வழக்கில் அவங்க எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்து வந்தவங்களா இருப்பாங்கன்னு கவனிச்சு இருக்கியா?", என்ற வினாவினை தொடுத்தார்.

அவர் ஏன் இந்த கேள்வியை கேட்கிறார் என புரியாவிட்டாலும் கோபி "அதற்கு ரெண்டு காரணம் மேடம்! ஒன்னு அளவுக்கதிகமான கொடுமை அனுபவிக்கிறவங்க, இரண்டாவது தேவையில்லாத தவறான பழக்க வழக்கத்தால் தன்னோடு குடும்ப நிம்மதியை தொலைத்து விடுறவங்க... இந்த ரெண்டு காரணம் தான்", என அசால்ட்டாக சற்று அலட்சியத்துடன் கூறினான்.

"சரி! நீ சொன்ன அந்த ரெண்டாவது காரணத்தை விட்டுடு. முதல் காரணம் அதுல இருந்து ஒரு கேள்வி. கொடுமையை அனுபவிக்கிறவங்க எந்த ஒரு சூழ்நிலையில் அந்த கொலையை செய்து இருப்பாங்க?", என அடுத்த கேள்வியை வீசினார். தன் புருவங்களை சுருக்கியவாறு யோசித்த கோபி "ஏதோ ஒரு ஆத்திரம். எல்லா மனுஷனுக்குமே சில நேரத்தில் தன்னுடைய ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத கோபம் வெறியா மாற வாய்ப்புகள் இருக்கு.

அந்த சூழ்நிலையிலே நாம என்ன செய்றோம் அப்படிங்கிறதை நம்மளால உணரமுடியாது. அந்த தன்னிலை மறந்த சூழ்நிலையில்தான் முதல்வகை கொலைகள் நடக்குது", எனக் கூறியவன் சுஜாதாவின் அடுத்த வார்த்தைகளுக்காக தன் செவியை கூா் தீட்டினான்.

"நீ சொன்னதுதான் சரின்னு சொல்ல முடியாது கோபி! ஏன்னா அத்தனை நாள் அந்த கொடுமையை அனுபவிக்குறதுக்குக் காரணம் தன்னோட கணவன் மேல இருந்த பயமாக இருக்கலாம், இல்லைன்னா சமுதாயத்தின் மேலிருந்த பயமா இருக்கலாம், இல்லைன்னா வளர்க்கப்பட்ட சூழ்நிலையா இருக்கலாம்.அவ்வளவு பயத்தோட வாழ்ந்தவங்க எப்படி ஒரே நாளில் ஒரே ஒரு குறிப்பிட்ட நிமிசத்துல நீ சொன்ன தன்னிலையை மறந்து துணிச்சலாக முடிவு எடுப்பாங்க?", என அவனை வசமாக கேள்வியை சிக்கவைத்தார்.


" நீங்க கேட்டதுக்கு பதில் சொல்ல தெரியலை. ஆனாலும் பயத்தோட வாழ்ந்தாலும் இப்ப அனுசுயா ஒரு துணிச்சலான முடிவை எடுத்து இருக்காங்க. அந்த முடிவை செயல்படுத்துற வரைக்கும் இந்த பயம் அவங்ககிட்ட இருக்கும் அப்படின்னு சொல்ல வற்ரீங்களா?", என கோபி சிரிப்புடனே வினவினான்.


"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலைனாலும் இருக்குற மூளையை வச்சு கொஞ்சமாச்சும் புரிஞ்சுகிட்ட. அந்த வகையில் சந்தோஷம். அனுசுயா சின்ன வயசுல இருந்து வீட்ல பணிஞ்சு போய் வளா்ந்திருக்காங்க. இப்ப இந்த முடிவை எடுக்குறதுக்கு அவங்க மனசு அளவுல எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பாங்கன்னு மட்டும் யோசி. நான் கேட்ட கேள்விகளுக்கு அவங்க சொன்ன பதிலிலேயே தெரிஞ்சி போச்சு. இதுவரைக்கும் அவங்க ஒரு முடிவு கூட சுயமாய் எடுத்தது இல்லை. இப்பதான் சுயமா முடிவு எடுத்திருக்கிறோம்.இந்த முடிவு சரியா தப்பா அப்படிங்கிற ஒரு பெண்டுலம் அவங்க மனசுல ஓடிக்கிட்டே இருக்கு.

நான் இன்னிக்கு அவங்ககிட்ட எல்லாத்தையும் பேசி முடிச்சி ப்ராசஸ் ஸ்டாா்ட் பண்ணிருக்கலாம். அதை செய்யாம உங்களுக்கு நான் மெசேஜ் அனுப்புறேன்னு சொன்னதுக்கு காரணம் அந்தப் பெண்டுலத்தை ஒரு பக்கமா நிறுத்தணும். அதற்கான நேரத்தைதான் கொடுத்துருக்கேன்.

அது போக இந்த வாரமே நான் வீட்டில் இதை பத்தி பேசப் போறேன்னு சொன்னவங்க பேசுவாங்களான்னு நமக்கு தெரியனும். அவங்க பேசி முடிவு எடுத்து வெளில வந்ததுக்கு அப்புறம்தான் நாம நம்மளோட வேலையை ஆரம்பிக்கப் போறோம்.", என சுஜாதா நீளமாகப் பேசி முடித்தார்.

அவர் பேசி முடிப்பதற்காக காத்திருந்த கோபி "நீங்க இந்த காரணத்தை எல்லாம் அவங்ககிட்ட சொல்லி இருக்கலாமே!", என வினவினான்."நீ எல்லாம் எப்படிதான் வக்கீலுக்கு படிச்சியோ", என அவனை தாக்கிப் பேசிய சுஜாதா "அனுசுயாவுக்கு இப்ப ஏதோ ஒரு மூலையில் நமக்கு நல்லது நடக்கப் போகுது என்கிற எண்ணத்தை கொஞ்சமாச்சும் விதைக்கணும். நான் இன்னிக்கு நெகட்டிவா பதில் சொல்லியிருந்தா அவங்க வேற மாதிரியான முடிவுகளுக்கு போறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

அந்த வேற மாதிரி முடிவுகள் எடுக்குறதால எந்த உயிர் போகும் அப்படின்னு நம்மளால கணிக்க முடியாது. இப்ப அனுசுயா நிதானமா கொஞ்சம் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிப்பாங்க. அவங்க வரட்டும். அதுக்கடுத்து நாம மேல என்ன செய்யலாம்னு முடிவு எடுப்போம்", என கூறி முடித்த பொழுது கோர்ட் வளாகம் வந்திருந்தது. கோபியையும், சுஜாதாவையும் அவர்களின் அன்றைய நாளுக்கான வழக்குகள் உள் இழுத்துக் கொண்டன.

பக்கத்துக் கோவிலில் சத்ஸங்கம் கேட்க சென்ற தன்னுடைய மாமியார் சாவித்திரி வந்து தனக்கு நடத்தப் போகும் ஆலாபனையை கேட்க காத்திருந்த தேவி அன்று வெடித்திட போகும் பூகம்பத்தை பற்றி அறிந்திட வில்லை. ஆனால் தேவி அறிந்த விஷயம் என்னவென்றால் சத்ஸங்கம் கேட்கப் போன இடத்திலும் என்னுடைய மருமகள் அவ்வளவு மோசம், இவள் எதற்கும் லாயக்கில்லை என தன்னுடைய மாமியார் குறைகூற தவற மாட்டாா் என்பதுதான்.

அதிசயத்திலும் அதிசயமாக ஏழரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்த நந்தன் தேவி மட்டும் தனியாக இருப்பதை பார்த்துவிட்டு "அம்மா எங்கே போயிருக்காங்க?", என அவளிடம் வினவினான். கோவிலுக்கு போயிருக்காங்க என்றவள் ஏதேனும் தன்னிடம் பேசுவானா என அவனின் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்திட அதற்கு சற்றும் பலனின்றி அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் அப்படியே வெளியே கிளம்பி விட்டான். எங்கே கிளம்புகிறான் என கேட்பதற்கு தேவிக்கு அவ்வீட்டில் உரிமை சிறிதும் கிடையாது.

இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டுமே நிம்மதியாக மூச்சினை விட முடிந்த தேவியால் அதனை எண்ணி மகிழ்ச்சி கொள்ளவும் முடியவில்லை. இருப்பினும் அந்த நொடிகளில் சிறிதேனும் அமரலாம் என்று எண்ணியவள் கண்முன்னே மாமியார் கோவிலுக்கு செல்வதற்காக எடுத்து மாட்டிக் கொண்டு போயிருந்த நகைகளின் பெட்டிகள் அவ்விடத்தில் பட்டன.

அதனைப் பார்த்த உடனே தேவிக்கு புரிந்து போனது. அவை அனைத்தும் அவளுக்கு சீதனமாக அவளது தந்தை கொடுத்திருந்த நகைகள் என்று. சீதனமாக வந்த நகைகளில் எதனையும் தேவி அணிவதில்லை. திருமணம் ஆன முதல் மாதம் மட்டுமே இந்த நகைகளை அணிந்து பார்த்தவள் அதற்குப் பின்னர் வந்த காலகட்டங்களில் அதனை பற்றி மறந்தே போயிருந்தாள். தற்போதைய சூழ்நிலையில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அதை அணிந்து கொள்ள விரும்பினாலும் பன்னி போல இருக்குற உனக்கு இது எடுபடுமா என காண்டாமிருகம் போன்ற தன் மாமியார் கூறுவது அவளது கண் முன்னால் வந்து சென்றது.

கிடைத்த நேரத்தை அனுபவிக்கத் தெரியாமல் அமர்ந்திருந்த தேவி காண்டாமிருகமும், காண்டாமிருகம் பெற்ற குட்டி காண்டாமிருகமும் அச்சச்சோ இல்லை இல்லை அவளது மாமியாரும், மாமியார் பெற்ற மகனும் இணைந்து வருவதை கண்டதும் துள்ளி எழுந்தவள் எதுவும் பேசாமல் நேராக சமையலறைக்குள் நுழைய முயன்றாள்.

அவளால் முயல மட்டுமே முடிந்தது. "பாரு, பாரு குட்டி யானை மாதிரி இருந்துட்டு நாம வந்த உடனே அப்படியே எந்திரிச்சு உருண்டு உருண்டு உள்ளே ஓடுறது. சமையல்கட்டுக்குள்ள இருந்துகிட்டு தின்னே என் சொத்தெல்லாம் கரைச்சுட்டா", என வாசலிலேயே ஆரம்பித்த சாவித்திரி பேசியதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த அம்மா நிஜமாகவே சத்ஸங்கம் கேட்கதான் போச்சா இல்லை ஏதாவது சண்டை கச்சேரி பாா்த்துட்டு வருதா என்றுதான் எண்ணுவார்கள்.

தன் அம்மாக் கூறியதை கேட்டவுடன் நந்தனும் வேகமாக வந்தவன் "அம்மா வற்ராங்க. அவங்க கால் கழுவிவிட்டு வீட்டுக்குள்ள விடாம உனக்கு என்ன அப்படி வேலை வெட்டி கிடக்கு? காலையில் இருந்து தின்னுட்டுதானே இருக்க",என அவனின் பங்கிற்கு அவனும் பேசிட தேவி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

அதற்கும் சாவித்திரி முனங்கி கொண்டே உள்ளே நுழைந்தவர் "அந்த எருமைமாட இங்க இழுத்துட்டு வாடா நந்தா! அவகிட்ட இப்பவே பேசி முடிச்சுடலாம்", என மகனிடம் கட்டளையிட்டார். அவன் இழுத்து நகர்ந்து போகும் அளவிற்கா தான் இருக்கிறோம் என்று எண்ணிய தேவி எதுவும் பேசாமல் சாவித்திரி அமர்ந்த இடத்திற்கு அருகில் சென்று கையை கட்டிக்கொண்டு நின்றாள்.

அவளது முகத்தைப் பார்த்தவர் அதில் கண்ணீா் ஏதும் தென்படுகிறதா என்றுதான் பாா்த்தாா். அவாிடம் இது ஒரு பழக்கம்.எப்போது திட்டினாலும் அவள் அமைதியாக நிற்பதை விட அவளது கண்ணிலிருந்து கண்ணீர் வந்தால் மட்டுமே தான் திட்டுவதை சிறிதேனும் குறைப்பார்.ஆனால் அவர் அறியவில்லை. தேவியின் கண்ணீர் வற்றிப் போய் பல காலம் ஆகிவிட்டது என்பதை.

" இங்கப் பாரு எருமை உன்னை கட்டிட்டு வந்து 15 வருஷமா இங்க வச்சு பார்த்துகிட்டு இருக்கோம். ஊரெல்லாம் என்னை அந்த மலடியோட மாமியா அப்படின்னுதான் கூப்பிடுறாங்க. இதுக்கு மேலயும் அந்த பேச்சை கேக்குறதுக்கு நான் ரெடியா இல்லை. உன்னால என் பையனோட வாழ்க்கையும் வீணாப் போகுது. என் நிம்மதியும் வீணாப் போகுது. இதுக்கெல்லாம் ஆற அமர யோசிச்சு நான் ஒரு நல்ல முடிவை எடுத்துருக்கேன்.

அதனால உனக்கு எந்த பாதிப்பும் வராது. நான் எடுத்திருக்கும் முடிவை நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும். புரியுதா? உனக்கு வேற போக்கிடம் இல்லை. என்னை நம்பி மட்டும்தான் இருக்குற. அதை மனசுல வச்சுக்க",. என மிரட்டலுடன் தன்னுடைய முடிவை அவர் கூறிய பொழுது தேவியின் இதழ் கடையில் தோன்றியது சிரிப்பா? இல்லை விரக்தியா?
 
  • Like
Reactions: Sumathi mathi