வசீகர வனமாலி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
423
112
63
" வசீகர வனமாலி" வசியம் செய்வதில் வல்லவனாக இவனை படைத்தமைக்கு சரயுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்ந்திட அதிரடியாக காட்டிட எண்ணும் கமலி கல்லினுள் இருக்கும் பனித்துளி!

கமலியை விட என்னை அதிகம் ஈர்த்தவர்கள் சிவகாமியும் ,மணியும் தான். வைராக்கியமும், வீம்பும் விலக்கி வைத்தாலும் இருவரது நிமிர்வும் ஒருவருக்கொருவர் குறைவு இல்லை என்பது என் எண்ணம்.... மகுடேஸ்வரன் மனிதர் என்ற கணக்கில் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத கொலை பாதக செயல் செய்தவர் ...

தஞ்சாவூர் சென்று தலையாட்டி பொம்மை பார்க்க விரும்பாமல் ராதா ஆட்டுவித்த பொம்மையான இந்திரா எதற்காக வாழ்கிறார் என்றே தெரியாத ஒரு பிறவி.....

வீட்டிற்காக விண்ணுலகம் செல்ல தயாரான பமீலா பாசத்திற்காக பேசாமல் இருக்க முயற்சி செய்யாமல் போனது ஏனோ?
உடன்பிறப்புகளின் புரிதல் அழகிய கவிதை....
இறுதியாக வனமாலி விஷ்ணுவின் நாமகரணத்தை கொண்டதால் அவனது வசீகரிக்கும் புன்னகையில் வளைக்கமுடையா வசந்தமான உறவுகளை ஒன்றுபடுத்தி ஒருகூட்டு உறவிற்காக உருக்குலைந்த விதம் சபாஷ்...
மொத்தத்தில்
வனமாலி
வசீகரித்தது
வசிக்கும்
வாசகர்களை !