லாக் டவுன் - கதை திரி

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 22:

சூரியனின் துடிப்பைப் பார்த்து மனமே இல்லாமல் இருள் துளி துளியாக விலக ஆரம்பித்த நேரமது. கீழ் வீடு “கொக்கரக்கோ” கூவக் காத்திராமல் எப்போதோ விழித்து, அன்றைய பெரும் அரவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா…

பெருமாள் கோவிலிலிருந்து பலத்த ஒலியலையாய் ஒலித்துக் கொண்டிருந்த கோவிந்த நாமாவளி சைந்தவியின் வீடு வரைக்கும் எட்டியது.

நல்ல உறக்கத்திலிருந்த சைந்தவியின் உறக்கம் மெல்லக் கலைய தொடங்கியது. சில நிமிடங்கள் தூக்கத்திற்கு விடை கொடுக்க இயலாதவளாகப் படுக்கையில் புரண்டு புரண்டு தலையைத் தலையணையில் தேய்த்துக் கொண்டிருந்தவள் சட்டென விழித்தாள்.

“ரொம்ப நேரமா தூங்கிட்டேனா? ஹ… ச்சோ…” எழுந்து நேரத்தைப் பார்க்க, ஐந்து மணி கூட இன்னும் ஆகவில்லை என்பது தெரிந்ததும், “ஸ்ஸ் நேரமிருக்கு” கைகளைத் தேய்த்துக்கொண்டு கண்களில் அழுந்த ஒற்றியெடுத்தாள்.

கண்களை மூடி அமர்ந்திருந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் அவள் மனத்தில் சில எண்ணங்கள் வலம் வந்தன. ‘வரப் போவதை எதிர்கொள்ள நான் தயார்’ என்கிற நிமிர்வுடன் ஏற்கெனவே எடுத்து வைத்த உடையுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

அந்நேரம் வசந்த் ஆழ்ந்தத் தூக்கத்தில் இருந்தான். அவனுக்கு சைந்தவி என்ன ப்ளான் பண்ணுகிறாள் என்பது தெரியவில்லை. அவளும் உதய்குமாரும் இவனை எப்படி அலைக்கழிக்கப் போகிறார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் வசந்திற்கு வசதியாக இருந்திருக்கும்.

‘அய்யோடா’ என முழி பிதுங்கிப் போயிருக்க மாட்டான்.

சதீஷ் அன்றைய நாளை வரவேற்கத் தயாராக நினைத்தாலும் சோம்பல் அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டது. படுக்கையில் சோம்பலுடன் மெதுவாக உருளத் தொடங்கினான்.

உதய்குமார் கலெக்டரின் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். கார்கோ பேண்ட் மற்றும் டீஷர்டில் மிடுக்கும் தோரணையுமாக இருந்தாலும், அவனுடைய கண்கள் தூக்கமின்மையை அப்பட்டமாகக் காட்டின. அந்தக் கீழ் வானத்தின் சிவப்பு அவன் கண்களுள் வரிகளாய்!

சில நிமிடப் பயணத்தின் முடிவில் பொலிரோ உறுமலைக் கக்கிவிட்டு அடங்கியது. வாசலில் வண்டிச்சத்தம் கேட்டதும் ‘வந்து நிற்பது யார்’ என்று வாசற்காவலாளி பார்க்க வந்தான்.

“புதுசாய்யா நீ? பேரென்ன?”

எதிரே வந்தவனிடம் கேட்ட உதய்குமார் அவனைக் கூர்மையாக அளவிட்டான்.

“பேரு மூர்த்தி சார். இங்க வேலைக்கு வந்து நாலஞ்சு வாரமாச்சு. நீங்க யாருங்க?”

வசந்த் இந்த வீட்டிற்குக் குடி வந்த சில வாரங்களில் இரண்டு மூன்று தடவை வந்திருந்தான் உதய். அதற்குப் பின்னர் இங்கு வீடு வரை வருவதற்கு அவசியமோ காரணமோ இல்லாமல் போனது.

“நான் யாருன்னு புரியாம பதில் சொன்னியாக்கும். வெளங்கிரும். யோவ் என்ன பேர் சொன்ன?”

“மூர்த்தி.”

“ஆங்… மூர்த்தி. இப்படி வாங்க.”

அருகில் வந்தவனுடைய தோளில் கை போட்டு, “கலெக்டர் வீடுன்னா இன்னும் கூடுதல் சுதாரிப்பு இருக்க வேண்டாமா? இந்தக் கட்டிங்கும் தோரணையும் வந்திருக்கிறது போலீஸ்ன்னு பார்த்ததும் உனக்குப் புரிஞ்சிருக்கணும்!” கடித்து வைத்தான் உதய்.

முபர் சயான் அப்போது தான் குளியலறையில் இருந்து வெளியே வந்தான். வாசலில் நின்ற போலிரோ கண்ணில் பட்டதும் அங்கே விரைந்தான்.

“குட் மார்னிங் சர்!”

விரைப்புடன் சல்யூட் வைத்தான்.

“மார்னிங் முபர்! யாருப்பா இந்த ஆளு? வெடுப்பான ஆளுங்களைப் போட வேண்டாமா? ம்ம்… எத்தனை பேர் காவல் டியூட்டி பார்க்க வர்றாங்க?”

உதய் தாடையைச் சொரிந்தபடி முபரிடம் கடைசிக் கேள்வியை எழுப்பினான்.

“மூணு பேர் ரெகுலரா வர்றது. இவர் தான் அதிலே புதுசு சர்.” தனியே முபரிடம் பேசியபடி வீட்டின் வெளியைச் சுற்றி வந்தான்.

“இன்னைக்கு என்ன விசேஷம்? வீட்ல நடமாட்டம் அதிகமா தெரியுது.”

பொலிரோவையும் தன்னையும் வேடிக்கை பார்க்க வந்த சில தலைகளைப் பார்த்தபடி உதய் கேட்டான்.

“இந்த வீட்டம்மாவுக்கு ஈம காரியம் சர்.”

“பெரியம்மா இறந்திட்டாங்களா?” உதயின் குரலில் வருத்தம் தெரிந்தது.

“எஸ் சர்.”

“பேச்சும் சத்தமுமா இருப்பாங்களே. அவங்க தோரணை அதிகாரம் தான்னாலும் வீட்டுக்கு வர்றவங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த ஜீவன்.”

“ஆமாம் சர்.”

பேச்சு இருந்த போதும் உதயின் பார்வை சுற்றுப்புறத்தைச் சல்லித்தது.

முபரிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு அவனைப் போகச் சொன்னான். வீட்டின் ஒரு பக்கத் திடலில் சில வாகனங்கள் நின்றிருந்தன. அவற்றைப் பார்த்தபடி மொபைலில் பேசி சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

சைந்தவி எளிமையான சல்வாரில் தயாராகியிருந்தாள். சதீஷ் கண்ணெதிரே இல்லை என்று உறுதி செய்தவள், அந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொண்டாள். தன்னுடைய சின்ன டிராவல் பை மற்றும் மடிகணினியை வெராண்டாவில் ஓர் ஓரத்தில் வைத்தாள்.

அவள் கீழே போக நினைத்த நேரத்தில் முன் கதவு தட்டப்பட்டது.

‘இந்த நேரத்திலே கரடியாட்டம் யாரு?’ சட்டென மனத்தில் ஓர் எரிச்சல் பரவினாலும் அதை முகத்தில் காட்டவில்லை.

கதவைத் திறந்த சைந்தவிக்குள்ளே ‘யாரிவன்’ என்கிற கேள்வி. அதை மட்டும் தன் பார்வையில் காட்டினாள். உதய்குமாருக்கு அங்கே ஓர் இளம்பெண்ணைப் பார்த்து வியப்பும் கேள்வியும்!

இருவரும் ஒன்றிரண்டு வினாடிகள் மற்றவரைப் பார்வையிட்டு நின்றார்கள்.

அங்கு ஓர் இளம் பெண்ணை எதிர்பாராத வியப்பில்… சைந்தவியின் காலை நேர ஃப்ரெஷ் தோற்றத்தில்… அவன் அறியாமலே “ப்ரிட்டிஃபுல்!” என வாய் சொல்ல, “ஹாய் ஐ’ம் உதய்குமார்!” தன்னை அறிமுகப்படுத்தியவன் அவளுக்குக் கை கொடுக்கும் பொருட்டுக் கையை முன்னால் நீட்டினான்.

‘ப்ரிட்டி ஆர் பிட்டி’?

மெல்லிய குரலில் அவன் சொன்னது சைந்தவிக்கு சரியாகக் கேட்டிருக்கவில்லை. தன்னை அழகு என்று சொன்னானா இல்லை தன் மீது அனுதாபமா? என்னை இவனுக்குத் தெரியுமா? எந்தளவு? என்னை ‘பிட்டிஃபுல்’ என்று சொல்லும் அளவு தெரியுமா என்ன?

இரண்டுமே முன்னரே அறிமுகமில்லா நபரிடம் தேவையற்றது என்றே தோன்றிற்று. சுள்ளென்று கோபம் வந்தது. ஆனால், தான் அங்கே யார் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இங்கிதத்தைக் கடைபிடித்தாள்.

அவனுடைய நீட்டிய கையைப் பற்றாமல் அழகாகக் கைகளைக் குவித்தாள். அவளுடைய செய்கையை வியப்பாகப் பார்த்தான்.

“மரியாதையான வரவேற்பு.” உதய் புன்னகையுடன் சொன்னாலும் குரலில் மாறுதல் வந்திருந்தது.

“நீங்க வந்திருப்பதா உள்ளே சொல்றேன். உட்காருங்க.”

அங்கே வரவேற்பு அறையிலிருந்த இருக்கைகளைக் காட்டினாள் அவனை உட்காரச் சொல்லி. உதய் சொல்லாமல் விட்டிருந்தாலும், வந்திருப்பது ஒரு காவல் அதிகாரி என்று அவளுக்குத் தெரிந்தது.

வசந்தை நேரிடையாகப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்து சதீஷைத் தேடினாள். அவன் சமையலறையில் இருந்தான்.

பால் பொங்கி வரும் வாசனையுடன் சுக்கு; ஏலம் மற்றும் கருப்பட்டி மணம் நாசியைத் தீண்டியது. அவற்றை நுகர்ந்து வாசம் பிடித்தபடி சமையலறையின் நிலைப்படியை எட்டினாள்.

“சதீஷ்…”

“மேடம் ஜி… குட் மார்னிங்!” விரிந்த புன்னகை சதீஷிடம். புத்துணர்ச்சியை அப்புன்னகையில் அள்ளித் தந்தான்.

“குட் மார்னிங் சதீஷ்.” சைந்தவியும் விரிந்த புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். இத்தனை நாட்களில் அவனின் அக்கறையும் கவனிப்பும் அவளைச் சற்று நெகிழ்த்தியிருந்தது. தானாகவே புன்னகை வந்தது. உடன் முகத்தில் கனிவும்.

அவளை அறியாமலேயே வசந்த் வீட்டின் இனிமை அவளுள் இருந்த இறுக்கத்தைச் சற்றே தளர்த்திவிட்டது. நட்புணர்வுடன் தான் வளைய வந்திருந்தாள்.

அவன் அவளைத் திரும்பிப் பார்க்க, “உதய்ன்னு…” சைந்தவி செய்தியைச் சொல்லும் முன்பே, “ஹலோ உதய் ஜீ!” உற்சாகம் தொற்றிக்கொள்ள சதீஷ் வணக்கம் சொன்னான்.

‘என்னடா இவன் என்ன சொல்கிறான்’ குழப்பத்துடன் என்னவென்று திரும்பிப் பார்த்த சைந்தவி திடுக்கிட்டாள். உதய் அவளுக்குப் பின்னால் நின்றிருந்தான். வரவேற்பறையில் உட்காரச் சொன்னால் பின்னாலேயே வந்துவிட்டானே?

சைந்தவியின் திடுக்கிடலை ஓரக்கண்ணால் பார்த்தபடி சதீஷிடம் உதய் பேச ஆரம்பிக்க, ‘இதுவும் தனக்கு நல்லதே’ என்று நினைத்துக்கொண்டு தன் வேலையைப் பார்க்க நழுவினாள்.

சிறிது நேரத்தில் வசந்த் எழுந்து வர, உதய் காபி குடித்துக் கொண்டிருந்தான்.

“வா உதய். வந்து நேரமாச்சா?”

“குட் மார்னிங் வசந்த்! இல்ல இப்ப தான் வந்தேன். ஒரு பத்து நிமிசம் இருக்கும்.”

“நைட் தூங்கினேயா இல்லையா? என்ன கண்ணெல்லாம் இப்படிச் சிவந்திருக்கு?”

“நல்லா தூங்கினேன்னு சொல்ல மாட்டேன்… தூங்கலைன்னும் இல்லை. உன் சம்பவ மேட்டர் என்னன்னு முழுசா தெரியணும். அது வரைக்கும் எப்படி நிம்மதியா தூங்குவேன்?”

“இவ்வளவு சீக்கிரம் இங்க வந்திருக்கேன்னா எனி நியூ டெவலெப்மெண்ட்?”

“இன்னும் தீவிரமா இறங்கி இருக்கோம். உன் வீட்டுப் பக்கமும் ஒரு ரவுண்ட் பார்த்திட்டு அப்படியே சதீஷ் ஸ்பெஷல் காஃபி குடிக்க வந்தேன். வந்ததும் தான் தெரிஞ்சது இந்த ஹவுஸ் ஓனர் பற்றி…”

“சரி… காஃபி மட்டும் போதுமா? இருந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுப் போகலாம். யா சடனா நடந்திடுச்சி. மனசு கஷ்டமா இருந்தது.”

மௌன குளியலுள் வினாடிகள்…

கரகரத்த தொண்டையைச் சரி செய்த வசந்த் உதயிடம் கேட்டான்…

“என்ன சொன்னான்?”

“யாரு?”

“நேத்து பிடிபட்ட அந்தப் பையன்.”

“பேரு தர்மா. அப்பா கூட இல்லையாம். அம்மா சீக்காளி. அம்மாவைப் பெத்த பாட்டி மூனு பேருக்கும் சம்பாதிச்சு கஞ்சி ஊத்துது. இந்தப் பய படிக்கிறவன் தான். ஸ்கூலுக்கு போயிட்டிருக்கான்.”

“எப்படி வந்தானாம் எங்க ஆஃபீஸ் பக்கம்?”

“பசங்களோட மைதானத்துக்கு வந்தேன்னு சொல்லி ஏதோ கதை விடுறான். அச்சுபிசுகாம ஒரே மாதிரி பேசுறான். எங்க மிரட்டலுக்கெல்லாம் ஆள் அசரலை.”

“எங்க வச்சிருக்கீங்க?”

“என் கஸ்டடியிலே வச்சிருக்கேன். இப்போதைக்கு இருக்கட்டும். எதாவது பெயருதான்னு பார்ப்போம்.”

“ம்ம் என்ன செய்யணுமோ பார்த்துச் செய் உதய். அந்தப் பையனுக்கு என்ன எப்படி கான்டேக்ட்ஸ். ஒரு பக்கம் போகட்டும். நீ கேட்ட மாதிரி நான் சமீபத்திலே ஹேண்டில் செய்த கேசஸ் மட்டுமில்லை, முன்னால் வொர்க் பண்ண சில சிக்கலான கேசஸ் பற்றியும் விபரங்களைத் தரச் சொல்லியிருக்கேன். கல்யாண் இன்னைக்குக் காலையில் உன்னைக் கூப்பிடுவார்.”

பேச்சுக்கிடையில் சதீஷ் வசந்திற்குக் குடிக்கக்கொண்டு வர, “மேடம் எழுந்தாச்சுன்னா அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டுக் கொடுத்திடு சதீஷ்.” என்றான்.

“சரி ஜி!”

சதீஷ் நகரக் காத்திருந்தவன் போல் உதய், “யாரு மேடம் புதுசா? ஓ… அவங்க உங்க… வருங்கால மேடம்?” கையை நயனத்துடன் ஆட்டியபடி வசந்திடம் கேட்டு அர்த்தத்துடன் புன்னகைக்க, “நீ வேற. சும்மா இருடா அவ காதுல விழுகப் போகுது.” அவள் படுக்கையறை பக்கம் வசந்த் பார்த்துக்கொள்ள,

“இப்பவே அவ்வளவு பயமா மேடம்கு. உன் மேடம்கு நீ பயப்பட வேண்டியது தான். ஆள் ஹோம்லி ப்யூட்டின்னாலும், பட படப் பட்டாசு மாதிரி வெடிக்கிற ரகம் தானோ?” கேள்வியாகப் புருவம் உயர்த்திக் கிண்டலாய் உதய் சொல்ல,

“ஹே நீ சைவியைப் பார்த்துட்டியா உதய்? அப்படி என்ன பட படன்னு பேசினாள்? அதுவும் பார்த்தவுடனே?” அரும்பு முறுவல் துளிர்க்க ஆர்வத்துடன் வசந்த் வினவினான்.

“ம்ம்… அவங்க தான் டோர் ஓபன் பண்ணினாங்க. பெருசா எதுவுமில்லை வசந்த். ப்யூட்டி அவங்கன்னு பார்த்ததும் முணு முணுத்திட்டேன். அது அவங்களுக்குச் சரியா கேட்டுச்சா தெரியலை. பட் ஷி டிட் ரியாக்ட். இண்ட்ரெட்யூஸ் பண்ண கை கொடுத்தா, ஷி வான்டெட்லி இக்னோர்ட் தேட் டா. டிரெடிஷனெல்னு சொல்றது போல அவங்க பதிலுக்கு அழுத்தத்துடன் கை குவிச்சாங்க.”

“ஹாஹா முதல் டைமே உனக்கு செம வரவேற்பா…” வசந்த் விரிந்த புன்னகையைத் தர,

“டேய் என்னைக் கிண்டல் பண்றது இருக்கட்டும், அவங்க ஆல்ரெடி இங்கே இருந்து உன் கிட்ட சொல்லாம எஸ் ஆயாச்சு போலவே. நீ இப்போ வந்து குடிக்கத் தரச் சொன்னா…” வியப்பும் கேள்வியுமாய் உதய்.

“ஓஹ்! கீழே போயிருப்பா. அந்தப் பாட்டி பேத்தி தான் இந்த மேடம். பேரு சைந்தவி. இன்னும் எங்களுக்குள்ளே எதுவும் முடிவாகலை. பெரியங்களுக்குள்ள ஒரு ப்ரபோசல் போகுது.”

“அப்படியா குட் டு நோ ஹெர் வசந்த். குட் லக் வித் யுவர் ப்ரொபோஸல்.” நண்பனுக்குக் கை கொடுத்து வாழ்த்திவிட்டு உதய் சொன்னான்… “அவங்க பேக்ஸ் எல்லாம் கொண்டு போனாங்க ஊருக்குக் கிளம்புற மாதிரி… அதான் எஸ் ஆயாச்சு சொன்னேன்.”

சைந்தவியை லிட்டரலி வசந்திடம் போட்டுக் கொடுத்திருந்தான் உதய்!

“என்ன அவ திங்க்ஸ் எல்லாம் எடுத்திட்டா கீழே போனாள்?” என்று வசந்த் கேட்க, “அப்படித் தான் தெரிஞ்சது டா.” என்றான் உதய்.

போலீஸ் அல்லவா அங்கு வந்த சில நிமிடங்களில் தன் கண்ணில் பட்டிருந்த எல்லாவற்றையும் கனெக்ட் பண்ணிவிட்டான். வசந்த் எழும்பி வெளியே வந்ததும் கண்ணெதிரே உதய் இருக்கவும் சைந்தவியைப் பார்க்கவில்லை.

“ஜி… மேடம் கீழே போயிருக்காங்க. நான் போய் ஹெல்த் ட்ரிங் தந்திட்டு வரட்டுமா?” சதீஷும் இப்போது கேட்டுக் கொண்டு வர, “நோ விட்டுடு. நம்ம வீட்டில இருக்கும் போது கவனி. போதும்.” சதீஷ் அங்கிருந்து விலகினதும்,

“ஜஸ்ட் எ மினிட் உதய். இரு வர்றேன்.” நண்பனிடம் சொல்லிவிட்டு நகர்ந்தான் வசந்த். அவளிருந்த அறையைத் தட்டிவிட்டு அரை வினாடிக்குப் பின்னர் உள்ளே சென்றான். நுழைந்ததும் தெரிந்தது ஆம்… அவள் உடைமைகள் எதுவும் அங்கில்லை.

பார்த்ததும் ஏமாற்றம் அடைந்தான். ஏமாற்றம் மெல்லக் கோபத்தைக் கிளப்ப… அதை எங்கே காட்ட முடியும்? இயலாமையால் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டான்.

அவ்வளவாகக் கோபம் வராது வசந்திற்கு. வீட்டில் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக வளர்ந்தான். அம்மா வசந்தின் இரண்டு மூன்று வயதில் இறந்து போக, அப்பா மற்றும் சிற்றன்னையிடம் வளர்ந்தவன். சிற்றன்னை தான் தெய்வநாயகி. நல்ல குணவதி. வசந்தை உயிராக வளர்த்திருந்தார்.

நல்லச் செல்லமாக வளர்ந்தவன் என்கிற போதும் அவனுடைய குணமே ஆர்ப்பாட்டம், கோபம், கத்தல் என எதுவுமே இல்லாத அமைதியே.

சாந்தம், புன்னகை, சிந்தனை இது தான் வசந்த். அவனுடைய குணங்களைக் கொண்டே சாதித்திருந்தான். உயரம் போக முடிந்தது.

எரிச்சலோ கோபமோ நேற்று சைந்தவியிடம் காட்டியதே. வரவே வராது என்றில்லை… எப்போதாவது அரிதாக வருவது நேற்றைய தினம் ஏன் வந்தது? அவளுக்கு நேரம் கொடுத்து யோசிக்கச் சொன்னதும் இவன் தானே?

“பொறுமை வசந்த். உனக்கு அவள் பிடித்தவள் ஆகிட்டால் உன்னை அவளுக்குப் பிடித்தே ஆகணுமா? விடு யோசிச்சு பார்க்கட்டும். இப்போதைக்கு என்ன வேலை முக்கியமோ அதை மட்டும் நீ பாரு.”

தனக்கே சொல்லிக் கொண்டு அந்தக் கட்டிலில் நிமிடம் உட்கார்ந்துவிட்டான். ஏதோ புது விதமாக ஓர் உணர்வை அங்கே உணர்ந்தான். வெறுமை… வெறுமை தான் ஆக்கிரமித்தது அவனை! இவ்வெறுமை அவனுக்கு ஏதோ சங்கடத்தை ஏற்படுத்தியது.

சிறியதொரு மனப்போராட்டம்…

காதல் தானா? புது உணர்வுகளைத் தருவது காதலா?

காதலா ஈர்ப்பா… தனக்குள் எது வந்திருக்கோ… வரும் போதே ஏமாற்றமா? வெறுமையா?

மனம் தளராதே வசந்த்! இன்னும் தூரம் போகணும்!

காதல் சாதலா? வலிகள் தான் வருமோ? கோபம்; ஏமாற்றம்; வெறுமை!

கடந்து வா வசந்த்… காதல் சாரலடிக்கும். குளு குளு காதல் அனுபவம் தொலைவில் இருக்கலாம். நீ இந்தத் தூரத்தை எளிதா கடந்திட முடியாதா?

காதல் சாரலின் இள வாசனையின் நுகர்வு நாசியைத் தொடுவதாய்!

அறையில் மிச்சம் இருந்த அவளுடைய சுவாசத்தை, வாசனையை ஆழ்ந்த மூச்சுடன் உள்வாங்கிக் கொண்டான்.

‘என் விசயம் இருக்கட்டும். முதல்ல அவ பாட்டி ஒப்படைத்து விட்டுப் போயிருக்கும் உயில் விசயங்களை மட்டும் பார்த்திடலாம்.’ முடிவெடுத்துவிட்டு வெளியே வந்தான் வசந்த்.

உதய் அவன் முகத்தைப் பார்த்து என்னவெனக் கேட்க, பரிமளம் தந்துவிட்டுப் போன உயில் பற்றிய பொறுப்பை மட்டும் சொன்னான். “நான் அதை ஹேண்டில் பண்ணுறப்ப நீயும் கூட இரு உதய். எப்போன்னு சொல்றேன்.” என வசந்த் சொல்லவும் உடனே ஒப்புக் கொண்டான் உதய். வேறு எதையும் பேசிக் கொள்ளவில்லை.

ஆனால் வசந்த் நினைக்கிற மாதிரி நாலைந்து நாட்களில் அந்த வேலை முடியப் போவதில்லை என்பதை அங்கிருந்த இருவருமே அறியவில்லை.

உதய் சில முக்கிய விசயங்களை வசந்திடம் பகிர்ந்துவிட்டு, சாப்பிட்டுக் கிளம்பும் நேரம் வசந்தும் கிளம்பியிருந்தான். இருவரும் வெராண்டாவிற்கு வர, சரியாக அந்த நேரத்தில் வசந்தின் தந்தை மோகன் மட்டும் திருவனந்தபுரத்தில் இருந்து வந்து இறங்கினார்.

“என்னப்பா நீங்க மட்டும் வந்திருக்கீங்க? அம்மா வரலை? கீழேயே நின்னுட்டாங்களா?”

அப்பா மட்டும் வந்து நின்றதில் வசந்த் கேள்விகளை அடுக்க, “வாசல்ல வச்சே கேள்வி கேட்பியா? என்னை உள்ளே வர விடு.” என்றவரைப் பார்த்து உதய் புன்னகையுடன், “வாங்க அங்கிள்” என அழைத்தான்.

“உதய் நீயும் இங்க தான் இருக்கியா நல்லதா போச்சு. உன் விசாரணை எந்த லெவெல்ல இருக்கு. வசந்த் ஆஃபீஸ்ல நடந்தச் சம்பவம் ஆண்ட்டிக்கு தெரியாதுப்பா. அவளை வேற ஒரு காரணங்காட்டி வீட்ல விட்டுட்டு நான் மட்டும் தான் கிளம்பி வந்தேன்.”

மகன் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே மோகன் பதில் சொன்னார். அப்பாவை மெச்சுதலுடன் பார்த்த வசந்த், “ஐ லவ் யூப்பா” எனக் கட்டிக்கொள்ள, “மருமகளைக் கட்டிப் பிடிச்சு கொஞ்சுற வயசுல என்னைக் கட்டிப் பிடிக்கிறான் பாரு உதய்.” என்றார் சிரிப்புடன். அவரும் மகனை அன்புடன் தழுவி நின்றாலும் கிண்டலடித்தார்.

“மருமகள் வந்ததும் நான் என்ன செய்யறேன் பாருங்க.” என்றுவிட்டு வசந்த் தள்ளிப் போய் தெய்வநாயகிக்கு அழைக்க, “உதய் பெருசா ஒன்னும் இருக்காதில்லப்பா?” கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் மோகன்.

“பெருசா இருக்காதுன்னே நம்புவோம். பட், எதுவா இருந்தாலும் பார்த்துக்க முடியும் அங்கிள். நீங்க கவலைப்படாதீங்க.”

“நாயகிக்குத் தெரிஞ்சதுன்னா கஷ்டமாகிரும். அவள் இவனைச் சுமக்கலை, வலி கண்டு பெறலை தான். ஆனா மகனுக்கு ஒன்னுன்னா துடிச்சுப் போயிருவாள். அவளாலே தன்னைக் கட்டுப்படுத்திக்க முடியாது உதய்.”

உணர்ச்சி வேகத்தில் பேசினார். உதய்க்கு அவருடைய பயம் புரிந்தது. சொல்லும் போதே அவருக்குக் கண்கள் கலங்கிவிட, உதய் அவர் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“ஆண்ட்டியை பற்றி எனக்கும் நல்லாவே தெரியுமே அங்கிள். சியர் அப் அங்கிள். போய் குளிச்சி ரெடியாயிட்டு வாங்க. உங்க மருமகளைப் போய்ப் பார்க்க வேண்டாமா? ஏற்கெனவே அவங்களை நீங்க நேரில் பார்த்திருக்கீங்களா அங்கிள்? ஹோம்லியா தெரியுறாங்க…”

மோகன் உதய்க்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய மனநிலையை உதய் மாற்றிட, அங்கே வசந்த் அன்னையுடன் வம்பு வளர்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“என்ன என்ன சொன்னீங்க? அம்மே நல்ல நாளிலே வந்து தான் மருமகளைப் பார்க்கப் போறீங்களா? அப்போ சைந்தவி தான் உங்க மருமகள்னு முடிவே பண்ணிட்டீங்க?” கிண்டல் போல் கேட்டான்.

“அதிலே என் மகனுக்கு என்ன சந்தேகம் வந்திருக்கு?” ஆர்வமாக மகனைக் கேட்டார் தெய்வநாயகி.

“உங்க மோன பிடிச்சா தானே சரி சொல்லப் போகிறாள் அந்தப் பெண்?”

“என் மோன ஏன் சைந்தவிக்குப் பிடிக்காது?”

“எல்லா அம்மைக்கும் இந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் காமன் குவாலிட்டி போல!”

“எதுடா ஓவர்ன்னு சொல்லுற?”

“உங்க பிள்ள பெருமையைத் தான் சொல்லுறேன். என்னை அவங்களுக்குப் பிடிக்கணும்னு என்ன இருக்கும்மே.”

அம்மாவும் பிள்ளையும் காலை வேளையில் வழக்காடிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே உதய் புன்னகையுடன் வசந்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவர்களை நன்றாகத் தெரியும். அன்பான குடும்பம் என்று எப்போதையும் போல் உதய் நினைக்க, வசந்த் சைந்தவியை அதே கணம் நினைத்துக் கொண்டான்.

‘என்னைப் போல அவளுக்கு ஏன் ஒரு அப்பா அம்மா இல்லாம போயிட்டாங்க?’

அப்போது அவனுக்குத் தோன்றியது, ‘என்னைப் புருஷனாக ஓகே பண்ணிடு சைவிம்மா. தெய்வநாயகியும் மோகனும் உன்னைப் பிரியமா பார்த்துப்பாங்க. நீ அன்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கி ஏங்கித் தவிச்சது போதும்.’

சிறிது நேரத்தில் மோகன், வசந்த், உதய் மூவரும் கீழே வர… அங்கே கூட்டம் சேர்ந்திருந்தது. இவர்களைப் பார்த்ததும் சூர்யா அருகே வந்தான். முபரும் மதுர பாண்டியும் கவனமாக இடைவெளி விட்டு நின்று கொண்டார்கள்.

“எப்போ வந்த சூரி?” வசந்த் கேட்க, “ஆறு மணிக்கே வந்திட்டேன் வசந்தண்ணா. ஹலோ உதய் சார்… ஹலோ அங்கிள்!” சரளமாகப் பேசிக்கொண்டு நின்றவனை வசந்த் தனியாக அழைத்துப் போனான்.

“எங்க உன் மாமன் மகள்?”

“உள்ளார இருக்காண்ணா. அவள் பிரண்டு அருணா குடும்பம் வந்திருக்காங்க. அவங்க கூட இருந்தாள். கூப்பிடவாண்ணா?”

“நோ இப்ப கூப்பிட வேண்டாம். அவள் பிரண்ட் அருணா ஆஃபீஸ் கொலீக்கா? பேமிலியோட வந்திருக்காங்களா? குட்.”

“அருணா சவிக்கு காலேஜ்மேட். ரெண்டு பேரும் சென்னையிலே ஒன்னா படிச்சாங்க.”

“ஓ அப்படியா? இப்போ சென்னைல இருந்து வந்திருக்காங்களா? நான் அருணாவை அவங்க போகும் முன்னால் பார்த்துப் பேச முடியுமா?”

“இல்லை அவங்க பெங்களூர்வாசி. அருணா சரவணன் பெங்களூர்ல வேலை செய்யறாங்க. கணவனும் மனைவியும் வரலை. என்ன விசயம் தெரியலை. அவங்க ரெண்டு பேரோட பேரண்ட்ஸ் மட்டும் வந்திருக்காங்கண்ணா. அருணா அவங்க அம்மா அப்பா இங்க ஓசூர் தான். சரவணன் அவங்க அம்மா அப்பா பெங்களூர்ல இருந்து வந்ததா சொன்னாங்க. நான் தான் அவங்களை ரிசீவ் பண்ணினேன்.”

“வந்ததுமே உன்னை வேலை வாங்கிட்டாளா சைந்தவி?”

யோசனைகளோடு உரையாடிக்கொண்டு நின்றிருந்தாலும் முறுவலுடன் விசாரித்தான்.

“ம்ம் வந்ததும் முதல் வேலையே அது தான். நான் வர்றப்ப அவங்க போன் வந்திருந்தது.”

“எப்படிப் பேசினாள் உன்னோட. உன் கிட்டேயும் கோவத்துல முறுக்கிட்டு இருந்தாளே? இத்தனை மாசம் பிடிச்சி வச்சிருந்த வீம்பையும் கோவத்தையும் விட்டுட்டாளா?”

“எப்பவும் போலத்தான் அண்ணா. அவள் கோபம் என்னைய என்ன செய்யப் போகுது. அத்தை இறந்ததுக்கு அப்புறம் என்னைக்கு இங்க வந்தாளோ அப்ப பிடிச்சி முட்டிக்கிறதாச்சு. அப்பத்தா செஞ்ச வேலையால வந்ததில் என் பங்கென்ன… புரியலை அவளுக்கு. மெல்ல புரிஞ்சிக்குவா. இன்னைக்கி ரொம்ப சங்கடமாகிருச்சு. என்னைப் பார்த்ததும் சட்டுன்னு சவி கண்ணு கலங்கிடிச்சு. அவளை அப்படிப் பார்க்க முடியலைங்கண்ணா.”

இதைச் சொல்லும் போது சூர்ய நாராயணன் குரல் கரகரத்துவிட, வசந்த் அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்தான்.

“சரியாகிடுவா. விடு பார்த்துக்கலாம். நீங்க ஆக வேண்டிய வேலைகளைப் பாருங்க. எனக்கு ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. வேலை இருக்கு. உதய் வெயிட் பண்ணறான். உங்க அம்மா மாமாவைப் பார்த்திட்டுக் கிளம்புறேன். அப்பா இங்க இருப்பாங்க.”

“சரிங்கண்ணா…”

“தென்… சைந்தவி இன்னைக்கே சென்னைக்குப் போறாள்னு நினைக்கிறேன். உன் பொறுப்பு… இன்னைக்கு அவள் எங்கேயும் போக வேண்டாம். ஒரு ரெண்டு நாள் இங்க தான் இருக்கணும்.”

சைந்தவியைச் சென்னைக்கு அனுப்ப வேண்டாம் என்பதை மிகவும் அழுத்திச் சொன்னான் வசந்த். அவன் தொனியே சூர்யாவிற்குச் சொன்னது கவனம் என்று. அவன் புரிந்து கொண்ட பாவனையாகத் தலையாட்டினான்.

ஆனால், அவள் கேட்பாளா? சூர்யாவே அவளைச் சென்னை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப் போகிறான் என்பதை அந்நேரம் இருவருமே அறிந்திருக்கவில்லை.

இருவரும் பேசிக் கொண்டதை மற்றவர்கள் பார்த்து இருந்தார்கள். மோகன் என்ன ஏது என்று ஊன்றிக் கவனிக்கவில்லை. உதய்க்கு வசந்த் கடைசியில் சொன்னது என்ன என்று ஊகிக்க முடிந்தது. நண்பனின் செய்கையில் புன்னகைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் அலெக்ஸ் மட்டும் அங்கு வந்து சேர்ந்தான். ஆட்டோ வாசலில் நிற்க அதிலிருந்து இறங்கியவன் தயக்கத்துடனேயே உள்ளே நுழைந்தான்.

அவன் வரும் போது உதய், வசந்த், சூர்யா என எல்லோரும் அங்கேயே இருக்க, இதிலே வினித் சொல்லியனுப்பிய வசந்த் யாரா இருக்கும் என்கிற யோசனையுடன் நடந்தான்.

அவனை யாருக்கும் அங்கே தெரியவில்லை. அதனை அறிந்தவனாக ரொம்பவே தயக்கத்துடன் இவர்கள் அருகே வந்து நின்றான். பக்கத்தில் வந்து நின்றவனை உதய் சந்தேகத்தைக் காட்டிப் பார்த்தான் என்றால் வசந்த் அலெக்ஸை வேறு ஆராய்ச்சியுடன் பார்வையிட்டான்.

இவன் தான் வினித்தோ என்று! ஆள் படித்த களை, பெர்சனாலிட்டி, வைட் காலர் நறுவிசு என்பதாகத் தெரிய, கூர்மையான பார்வையுடன் பார்த்தான். ஏனோ ஒரு கோபம் கூட வர வசந்த் அங்கு இயல்பாக நிற்க முடியவில்லை.

இருவரும் தன்னை ஆராய்ச்சியாகப் பார்ப்பதைக் கண்ட அலெக்ஸ், ‘என்னடா இவங்க இப்படிப் பார்க்கிறாங்க’ அவஸ்தையில் வினித்தைச் சபித்தான். வினித் என்னமோ சைந்தவிக்கு நல்லதை நினைத்தே இங்கு வராமல் நின்று விட்டான்.

ஆம், சைந்தவிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சரள்கண்ணன் சொன்னதும், தான் இச்சமயம் அவளெதிரே போக வேண்டாம்… மீண்டும் குழம்புவாள்… ஏதாவது முடிவாகி வரட்டும், அதுவரை தானாக அவள் முன் போக வேண்டாம் என்று நினைத்தான்.

ஓர் இடைவெளி ஏற்பட்டால் அவளின் மனது மாறும் என்பது வினித்தின் நம்பிக்கை.

“டேய் அலெக்ஸ்… எதிர்பாராத வகையில் என்னால் சைவிக்கு ஒரு பாதிப்பு வந்திருச்சு. என்ன தான் நான் பிரண்ட் பிரண்ட்ஷிப் சொன்னாலும் அவள் அந்த மாதிரி நினைக்கலைங்கிறது தெரிஞ்சதிலிருந்து நான் அப்செட் தானே மச்சி.”

“சரி அதுக்கு? எனக்கு மட்டும் பஸ் டிக்கெட் போட்டிருக்க ஏன்னு கேட்டா ஏதோ பழங்கதைய ரிபீட்டடிக்கிற? என்னைய ஏன் டா உங்கதைல கோர்த்து விடுற?”

கடுப்பாகிப் போயிருந்த நண்பனை இறுக்கத் தழுவிக்கொண்டான் வினித்.

“ச்சீய் விடு என்னை! இப்ப தான் எனக்கே இது புரியுது. பாவம் அந்தப்புள்ள… ஏமாந்து போச்சே!”

வினித்தைப் பிடித்து வேகமாகத் தள்ளிவிட்டான் அலெக்ஸ். தள்ளிவிட்டதும் பரபரப்பாக உடம்பை உதறித் துடைக்கவும் செய்தான்.

“ஹே சாலா என்னடா பண்ணுற?” வினித் கோபமாக அவனை முறைக்க…

அலெக்ஸ் “ம்ம்… அதுவா நீ கேன்னு (ஓரினச் சேர்க்கையாளன்) தெரிஞ்சதுல அப்படியே ஷாக்காயிட்டேன்!” வடிவேலு மாடுலேஷனில் கலாய்த்தவனின் கழுத்தைப் பிடித்திருந்தான் வினித்.

“மச்சி விடுடா விடுடா… அழுத்திப் பிடிக்கிற… ஹக்…” மூச்சுக்காக அலெக்ஸ் திணறவும் வினித் விலகினான். அலெக்ஸ் தன்னை இந்த நேரம் பார்த்து நக்கல் பண்ணதில் ரொம்பவே டென்ஷன் ஏறிவிட்டது வினித்திற்கு… அவன் மேல் பாய்ந்திருந்தான்.

தண்ணீரைக் குடித்து நிதானத்திற்கு வந்ததும், “அந்தப்புள்ளைக்குக் காதல் வந்திச்சாம்… இங்க என் நட்பு ‘நான் நண்பன்டா’ தான்னு தோள் கொடுப்பானாம்… ஊடால நா எதுக்குடா? உன் நட்பு அப்பத்தா செத்ததுக்கு என்னைய ஏன்டா தனி பேக்கேஜா அனுப்புற? நீ போயேன் டா வினித்… நான் தான் அப்பா மகளை இங்கேயே பார்த்துட்டேனே!” பரிதாபமாக அலெக்ஸ் கேட்க,

“முடியாது மச்சி நான் போனால் சரி வராது. அவ என்னைப் பார்த்தால் குழம்புவாள். கொஞ்ச நாள் நாங்க பார்க்காம இருக்குறது நல்லது. அவங்க வீட்டிலே பார்க்கிற மாப்பிள்ளையைப் பற்றி யோசிச்சி முடிவு சொல்லுவாள். இப்போ அந்த மாப்பிள்ளை அவங்க ஆட்களும் அங்க இருக்கலாம். நான் போனால் சங்கடமா இருக்கும் மச்சி.”

“நீ என்ன நினைக்கிறேன்னு புரியுது மச்சி. நீ போகாத. என்னையும் போகச் சொல்லாத. சைந்தவி எப்படியும் சென்னை வருவாள்ல? அப்ப பார்த்துக்கலாம். அவங்க அப்பாவும் இங்க வராம போயிடுவாரா? அந்த மாப்பிள்ளை பய யாரோ எவரோ… சிக்கிமுக்கி நானா போயி சிக்கல்ல மாட்டப் போறேன்!”

“நண்பேன் டா! அப்ப நீ போற?”

“நா எப்படா போறேன்னு சொன்னேன்?”

“சிக்கிமுக்கி சிக்கல்னு சொன்னியே இப்ப… அப்படி எதுலயும் மாட்ட மாட்ட. சைவிக்கும் வேற யாரிருக்கா? நல்லதுக்குப் போகலைன்னாலும் ஓகே. பட் இப்படித் துக்கத்துக்குப் போகணும். என் சார்பு உன் சார்பு ரெண்டுக்கும் நீயே போய் தலையைக் காட்டிட்டு வா.

அப்படியே அந்த மாப்பிள்ளை… பேரு வசந்த். கொஞ்சம் டீடெயில்ஸ் சேகரிச்சிட்டு வா. சைவி நல்லா இருக்கணும்னு ஒரு நண்பனா எனக்கும் பொறுப்பு இருக்கு மச்சி. ப்ளீஸ் டா!”

நண்பனின் முகத்தில் கண்ட பாவனையில் அவன் ப்ளீஸ் போட்டதில் மனம் இளகினான் அலெக்ஸ். இளகினாலும் எதுக்கும் இன்னொரு தடவை எடுத்துச் சொன்னான்.

“நட்புக்காக நான் போறேன் மச்சி. ஆனாலும் நீ தேவையில்லாம இன்னும் சிக்கலாக்கிறன்னு மனசுலபடுது. ஒதுங்கிறதுன்னு முடிவு செய்துட்டா முழுசாவே ஒதுங்கிடு. அவள் கூட இனி நட்பா பழகுறது கூட வேண்டாம்டா. லைப்ல செட்டிலானா அவளும் பிஸியாகிடுவா. இப்படியே விட்டுட்டு உன் வேலையைப் பாரு மச்சி.”

“என் மனசு கேட்கலை மச்சி. எப்பவும் நான் சைவிக்கு ஒரு நல்லத்தோழன். இது மாறாது… மாறக்கூடாதுன்னு ஆசைப்படுறேன்டா. எனக்காக நீ போற. என்ன சிட்டுவேஷன்னு தெரிஞ்சிட்டு வா.”

வினித் வசந்தைப் பற்றி அறிந்து வருமாறு சொல்லியிருந்தாலும் சைந்தவிக்காகவும் கிளம்பி வந்தான்.

தனியாக வந்ததைவிட வினித் கூட வந்திருந்தால் பெட்டராக இருந்திருக்கும் என்று தோன்றியது தான். வந்தாச்சு… சைந்தவியையும் அவள் அப்பாவையும் பார்த்திட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தான்.

சரள்கண்ணன் வெளியே வந்தவர் வசந்த், உதய் எல்லோரையும் பார்த்து வசந்த் அருகே வந்தார். மோகனும் அங்கே இருக்க, “அப்பா அங்கிள்” என வசந்த் சொன்னான். அவரைப் பார்த்து சரள் தலையசைக்க, இருவரும் கை பிடித்துக் கொண்டார்கள்.

வசந்தை மட்டுமே சரள்கண்ணனிற்குத் தெரியும். மோகன், தெய்வநாயகியைப் பார்த்ததில்லை.

வசந்த் உதயையும் அறிமுகம் செய்து வைத்தான். “ஏசிபி உதய்… என் ஃபிரண்ட் டூ அங்கிள்” என்றது அலெக்ஸையும் சென்றடைந்தது.

சரள்கண்ணன் ‘வசந்த்’ என அங்கே வந்ததையும் கவனித்திருந்தான். வினித் சொல்லியனுப்பிய மாப்பிள்ளை வசந்த் அவன் தான் என்பதைத் தெரிந்து கொண்டான். வசந்தைப் பார்வையிட்டவன் சரள்கண்ணன் அருகே செல்ல நினைக்க, அதற்குள் அவரே அலெக்ஸ் ஒதுங்கி நிற்பதைக் கவனித்தார்.

“அலெக்ஸ்” என அருகே வந்தவர் சூரிக்கு அவன் யாரென அறிமுகம் செய்து அழைத்துப் போகச் சொன்னார். இப்போது உதய் தன் சந்தேகப் பார்வையை விட்டிருந்தான். வசந்திற்கு வந்திருப்பவன் அலெக்ஸ் என்று தெரிந்தது. அலெக்ஸ் வினித்தின் நண்பன் என்று தெரியவில்லை. சரள்கண்ணன் சூர்யாவிடம் சைந்தவியின் தோழன் என்று சொல்லியிருந்தார்.

சூர்யாவுடன் அலெக்ஸ் செல்ல, மோகனும் வசந்தும் சரள்கண்ணனுடன் வீட்டிற்குள்ளே போனார்கள். சைந்தவி அங்கே சமையலறையினுள் இருந்தாள். கூடத்தின் ஒரு பக்கம் கும்பிடுக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஐயர் வருகிற நேரம் என்றார்கள்.

உறவுப் பெண்கள் சிலருடன் சாமி கும்பிடுக்கு சைந்தவி இனிப்புப் பதார்த்தம் செய்து கொண்டிருந்தவள், அது செய்து முடிந்ததும் அப்போது கூடம் அருகே வந்தவள் வசந்த் யாருடனோ வருவதைக் கண்டு விரைந்து பக்கத்து அறையில் நுழைந்தாள்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 23:


வசந்தைப் பார்த்ததும் கூடத்தைத் தவிர்த்து அவசரமாக வேறொரு அறைக்குள்ளே சைந்தவி நுழைய, அங்கே அருணாவின் மாமி, அம்மா இருந்தார்கள்.


ஆர்ணவ் பாத்ரூமில் இருந்தான். ஆம், ஆர்ணவ் மட்டும் தாத்தா பாட்டிகளுடன் வந்திருந்தான். இவளே குளியலறைக்குள் சென்று பார்த்து அவனுக்குச் சுத்தம் செய்ய உதவினாள்.


ஆர்ணவ் சைந்தவியுடன் கதை பேசிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனுடைய பேச்சும் பாவனையும் அவளை அவ்வளவு கவர்ந்தது. ஆர்ணவ் ஒருவனே அவளறிந்த குழந்தை. அவன் பிறந்ததிலிருந்து பார்க்கிறாள்…


அவனுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் நேரில் சென்று பார்க்கவில்லை என்றாலும் அருணா மூலம் அறிந்தது, வீடியோ கால், அவ்வப்போது பகிரப்படும் படங்கள் என அவனை நன்றாகத் தெரிந்தவள்.


பல மாதங்களுக்குப் பின்னர் அவனைப் பார்க்கிறாள். அவனுடன் கிடைத்த இந்த நேரத்தை இரசித்தாள். அவன் கன்னம் கிள்ளிக் கொஞ்சினாள். அக்கணம் சைவி வெளியே இருந்த பரபரப்பை மறந்தவளாய்!


குழந்தைகளுக்கே உரித்தான மகத்தான பண்பு… அவர்களுக்குக் கடவுளின் பரிசாகக் கிடைத்த ஒன்று… எந்தச் சூழலும் இளக உதவுவது. இங்கும் அது நடந்தது. சைந்தவியின் மனத்தை ஆர்ணவ் லேசாக்கிக் கொண்டிருந்தான்.


அவள் மனத்தில் எந்தவொரு எண்ணமும் உறுத்தவில்லை. உள்ளுக்குள் ஊன்றியிருந்த பல ஞாபகங்கள் தள்ளிப் போயின. அவளும் அவனுடன் சிறுமி போல விளையாடினாள். மிகச் சில நிமிடங்களே!


அருணா அவள் மாமிக்கு அந்நேரம் அழைக்க, அவர்கள் பேசியதும் சைந்தவிடம் மொபைலை தந்தார்கள்.


“உனக்கு ரெப்ரெசண்டேடிவ் ஆர்ணவாடி? சோ ஸ்வீட் டி உன் மகன். வந்ததும் என்னைக் கட்டிக்கிட்டான். இப்ப கொஞ்சம் விளையாட்டுக் காட்டிட்டு இருந்தேன். அவனை இங்க அனுப்பிட்டு நீ என்ன செய்ற?” புன்னகையுடன் மெல்லிய குரலில் தோழியுடன் பேசினாள்.


“மாமி, அம்மா சொல்லையாடி? நெக்ட் பேபி கன்சீவ் ஆகியிருக்கேன். ஹோம் ப்ரெக்நென்சி கிட்ல கன்ஃபர்ம் பண்ணியிருக்கோம்.”


“வாவ் கங்கிராட்ஸ்டி! சந்தோஷமா இருக்கு. ஏன்டி எனக்கு கால் பண்ணிச் சொல்லலை?”


“இன்னும் கைனிக் பார்க்கலை சைந்து. அடுத்த வாரம் தான் அப்பாயின்மெண்ட். மாமி டாக்டர்கிட்ட காமிச்சிட்ட பிறகு வெளியே சொல்லுன்னு சொன்னாங்க. அதான் இன்னும் யாருக்கும் சொல்லலை. சாரிடி.”


“சவி சவி…” யாரோ சைந்தவியைக் கூப்பிட்ட குரல் கேட்டது. அருணாவின் மாமியும் அம்மாவும் கூட இருக்க, சைந்தவி தோழிக்கு என்ன பதில் சொல்வாள்? நல்ல நேரமாக அவளை வெளியே கூப்பிடவும் உடனே அப்பேச்சை முடித்துக் கொண்டாள்.


“ஓ… சரி சரி பரவாயில்லை விடு. நீ உடம்பைப் பார்த்துக்கோ. ஹெல்தியா சாப்பிடுடி. நம்ம அப்புறமா பேசலாம். மொபைலை மாமிட்ட தர்றேன். நீ பேசு.”


அவர்களிடம் மொபைலை தந்தவள் சொல்லிக்கொண்டு வெளியே போக, ஆர்ணவ் அவளை வால் பிடித்துக்கொண்டே கூடவே செல்ல, பாட்டிகள் இருவரும் தங்களுடன் அவனைப் பிடித்து வைக்க முயன்றார்கள். அவனோ அடம் பிடிக்க ஆரம்பித்தான்.


“வரட்டும் ஆன்ட்டி. விடுங்க. கொஞ்ச நேரத்திலே உங்ககிட்ட வந்து விடுறேன்.”


அப்படியே அவனை ஆசையாகத் தூக்கிக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள். கூடத்தின் ஒரு பகுதி நிறைந்திருந்தது.


ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக ஆட்கள் உட்கார்ந்தும் நின்றுகொண்டும் இருந்தார்கள். பரிமளம் உறவுகளுக்கு மத்தியில் சற்று பெரிய தலை. உறவுகள் மட்டுமில்லை, பழகியவர்கள், பக்கத்திலிருந்து வேறு ஜனங்களும் பலர் வந்திருந்தார்கள். அவருடைய கணவரின் வகையறாவில் என்றும் வந்திருந்தது வீடு நிறைந்து கொண்டிருந்தது.


வீட்டை ஒட்டியிருந்த காலி மனை, இவர்களுடையது தான். அங்கே ஷாமியானா போடப்பட்டிருந்தது. அங்கு தான் காலை, மதியம் எனப் பந்திக்குத் தயாராகி இருந்தது.


வீட்டாட்களான காயத்ரி, பாலசந்தர், சரள், சைவி, சூரி என இவர்களுக்கு வந்திருப்பவர்களைக் கவனித்து உபசரிக்கும் வேலையின்றி விசேஷத்திற்கு கேட்டரிங்கில் கூடுதலாக சப்ளைக்கும் ஆட்களை வரச் சொல்லியிருந்தார்கள்.


சைந்தவி கூடத்தையும், ஜன்னல் வழியாக வெளியேயும் பார்க்க, அவர்கள் சுத்தமும் சுகாதாரமுமான முறையில் வீட்டிற்குள்ளும் வெளியும் நன்றாக கவனித்து வந்தது தெரிந்தது. ஒரு பக்கம் காஃபி, தேனீர், பால் என்று சப்ளை நடந்து கொண்டிருந்தது.


கூடத்தின் உள்ளடக்கிய பகுதியில் சிலர் மட்டுமே விஸ்தீனமாக உட்கார்ந்திருந்தார்கள். அங்கு காயத்ரியைக் கண்டு பேசிக் கொண்டிருந்தார் மோகன். பாலசந்தரும் உடன் நின்றிருந்தார். சரள் சில நிமிடங்கள் பொறுத்து உள்ளே வந்திருந்தார்.


சரள்கண்ணன் மோகனிடம் பேசிக் கொண்டிருக்க, சம்பந்தியாகப் போகிறவர் என்கிற மரியாதை அவருடைய உடல்மொழியில் அப்பட்டமாகத் தெரிந்தது. தொலைவில் ஆர்ணவ்வுடன் நின்றிருந்த சைந்தவியும் அதைக் கவனித்திருந்தாள். வசந்தும் கவனத்திருந்தான்.


காயத்ரியையும் பாலசந்தரையும் அப்பாவிடம் அறிமுகப்படுத்திவிட்டு அவர்களருகே தான் வசந்த் நின்றிருந்தான். பக்கத்து அறைக்குள் அவசரமாய் நுழைந்த சைந்தவியைக் கவனித்திருந்தான்.


அவர்கள் உள்ளே வந்ததை அவள் பார்த்திருந்தாள் என்பதை வசந்த் அறிவான். ‘வேணும்னே ஓடுறா பாரு. அவாய்ட் பண்ணுறியா நீ?’ நினைத்துக்கொண்டான். அத்தனை பேருக்கு நடுவில் வேறு என்ன செய்வான்?


அவளோ, அறைக்குள்ளே சில நிமிடங்கள் கடந்து போனதால், அந்நேரம் வரை வசந்த் இங்கே இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அலுவலகம் போயிருப்பான் என்றே நினைத்தாள்.


ஆனால், வசந்த் எங்கேயும் போகாமல் இன்னும் நின்றிருந்ததைப் பார்த்ததும் விழிகள் சாஸரை போல் விரிந்து அவளது நினைப்பை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது.


அவள் கவனித்த வரை, வசந்த் கூட்டத்தைத் தவிர்த்து விடுவான். முதல் முக்கியமாக ஐந்து நிமிடங்களுக்கு மேலே கீழே நின்றதில்லை. வேற்று ஆட்களிடம் தலையசைப்புடன் நகர்ந்து விடுவான்.


புதிதாகக் கண்ட தன்னிடம் அவ்வளவு இளகிப் பேசியது ஆச்சரியமே! அதுவும் முதல் முறை பார்த்ததிலிருந்து நேற்று இரவு வரை!


இன்று தான் இன்னும் அவனுக்கு அவளிடம் பேசுவதற்கு சான்ஸ் கிட்டவில்லையே!


அப்படுக்கை அறையினுள் அவனிருந்த நிலை அவளுக்குத் தெரியாதில்லையா? அதிகாலையிலேயே அவனை அவள் அலைபாய வைத்திருந்தாள் என்பதை உணராதவளாய்!


உதய் வந்தது, அவன் அந்த வெடி சம்பவம் பற்றிய முக்கிய விசாரணையால் கூடுதல் பணியிலிருப்பது என்று அலுவல்கள் ஏகப்பட்டது கவனத்தில் இருக்கையில், அந்தக் கால் மணி நேரத்தை இப்படி வசந்த் வெட்டி ஆக்குவானா?


“இன்னும் இவன் வெளியே போகாம இங்க என்ன செய்றான்?” முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.


சைந்தவிக்கு வசந்த் அப்பா வந்தது தெரியாது. வசந்த் அப்பாவிற்காக மட்டுமல்ல, சைந்தவி இங்கிருந்ததால் அந்தக் கூடுதல் நிமிடங்களைப் பொருட்படுத்தவில்லை. வேலை சம்பந்தப்பட்டவை அவனுக்குட்பட்டது. சைந்தவி அப்படியா? அவளை எதற்கும் கட்டுப்படுத்த அவன் விரும்பவுமில்லை.


சைந்தவிக்கு வசந்தை சரியாகப் புரியவில்லை. அவளுடைய உணர்வுகளுக்கான உலகத்தில் மட்டும் சௌகர்யமாக வலம் வந்து கொண்டிருந்தாள். இல்லையென்றால் அவனிடம் சொல்லாமல் கிளம்ப எப்படி அவள் மனம் விழைந்தது?


இன்றைக்கு அவள் ப்ளான் செய்ததும் நடக்கும். ப்ளானில் அவள் எதிர்பாராததையும் கடக்க வேண்டியது வரும்!


சைந்தவி வசந்தைப் பற்றிய யோசனை செய்து கொண்டு இருக்கையில், சரள்கண்ணனுக்கு ஓர் அழைப்பு வர, அவர் அதில் பிஸியானார். அவ்வழைப்பு அந்த வீடே எதிர்பார்த்திராத தகவலைத் தந்து கொண்டிருந்தது.


மோகன் திரும்பி பாலசந்தர் தம்பதிகளுடன் பேச, வசந்த் சைந்தவியை அவன் தொண்டைக்குக் குளிர்பானமாக்கிக் கொண்டான்.


சைந்தவிக்கு அவன் பார்வை தன்னை ஊடுருவுவது தெரிந்தது. தான் இன்று அவனைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்தால்… என்ன நடக்குது இங்கே?


முழித்தாள் சைந்தவி.


அவனைக் கண்ணுக்கு நேரே பார்த்துவிட்டு, அங்கிருந்து அவனிடம் சொல்லாமல் எப்படிப் போவது? ஆனால் இப்போது அவனைத் தவிர்க்க முடியாதபடிக்கு ஆகிவிட்டதே!


அவன் அவளைப் பார்க்க மட்டும் செய்யவில்லை. ஏதோ கடத்த முயன்றான். சைவியின் உடம்பில் மின்னல் தாக்கமில்லை. ஆனால், நிச்சயமாய் எதுவோ எதுவோ பிசைந்தது.


ஆர்ணவ்வைத் தூக்கிக்கொண்டு லட்சணத்துடன் நின்று கொண்டிருந்த சைந்தவி வசந்தைக் கொள்ளை கொண்டாள். அவன் கண்ணுக்கு மிகவும் பாந்தமாய்த் தெரிந்தவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வசந்த் என்பது கூட பொருத்தமான வாக்கியமில்லை.


கண்களின் பருகலில் நெஞ்சிற்கு இதத்தைச் சேமித்துக் கொண்டிருந்தான்.


அவன் உள்ளுக்குள் எப்போதோ தடம் புரண்டிருந்ததை உணராமல் இருந்தவன் தான்… அவனுக்குள் இப்போது காதல் சாரல் மழையாய்த் தூவத் தொடங்கியது. அதை அவனும் உணரத் தொடங்கினான். உல்லாசம் தொற்றிக்கொண்டது.


சீட்டியடிக்க வரவில்லை கலெக்டருக்கு… அப்பட்டமாக அவளையே கண் கொட்டாமல் நிமிடம் கடந்தும் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.


அவனைப் பார்த்திருந்த சைந்தவிக்கு, ‘இவனென்ன இப்படிப் பார்க்கிறான்’ என்றிருந்தது. உதடு கடித்தாள். கழுத்து செயினில் கோர்த்திருந்த ஒற்றை மீனைப் பிடித்து இவள் கடித்த கடியில், கண் சிமிட்டி சிமிட்டித் துடித்த மீன் ‘என்னை ஒரு கடியில் கடித்து விழுங்கி விடேன்’ எனக் கெஞ்சியது.


சைந்தவிக்கு அவன் மேல் இரவிருந்த கோபம் இப்போது சுத்தமாக இல்லை. அவன் சொன்னதை மீறி அவள் இன்றே சென்னை செல்ல வீம்பு பிடித்துக் கொண்டதே அவனிடமிருந்து தள்ளி இருக்கத்தான்.


அவளால் இங்கேயே கீழே சமாளித்துக் கொண்டு இருக்கவும் முடியாத நிலையில் வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் தள்ளி நிற்க அவன் விட மாட்டான் போலவே!


என்ன பார்வை!


அவனின் கடமையாகச் சொல்லியிருக்கும் உயில் பற்றிய செயலாற்றல் அவளுக்கு முக்கியமில்லை. அவன் சொல்லியும், அவன் வார்த்தைகளை மதிக்காமல் போகிறேனே என்கிற குற்ற குறு குறுப்புடன் தான், அவன் வீட்டிற்குள்ளே வந்ததைக் காணாததைப் போல் அறைக்குள் போயிருந்தாள்.


இப்போதோ அப்பார்வை கலக்கத்தைக் கொடுத்தது. அவளுக்குள் என்ன உணர்கிறாள்?


வீணாக அப்பத்தா வேறு இப்படியொரு வட்டத்தை வரைந்துவிட்டுப் போயிருக்கக் கூடாது என உள்ளுக்குள் படபடத்தாள்.


அவனிடம் வசமாக மாட்டிக்கொண்டது போலிருக்க, அவனைத் தவிர்க்கவும் இயலாது போனது ஒரு கடுப்பைத் தர, அவனுடைய பார்வை வேறு சஞ்சலப்பட வைக்க அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.


அந்த முறைப்பு வசந்தை எரித்துவிடுமா என்ன? அசால்டாக அதனை எதிர்கொண்டான். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கண்ணடிக்க வேறு செய்தான். சைந்தவிக்கு அவனுடைய அலும்பைப் பார்த்து தலையில் அடித்துக்கொள்ள தோன்றியது.


பாலசந்தர் தான் அவளைச் சற்று முன்னர் அழைத்தது. இத்தனை நேரமும் அவள் அங்கே நின்றிருந்ததைக் கவனிக்கவில்லை. இப்போது தான் பார்த்தார். அவள் தலையைக் கண்டதும், “சவி இங்க வாம்மா” எனக் கை நீட்டி அருகே வருமாறு சைகை காட்டினார்.


அவரைப் பார்த்தும் பாராதது போல் எங்ஙனம் இருப்பது? வேறு வழியற்றவளாக, “இதோ வர்றேன் மாமா” என்றபடி ஆர்ணவ்வை இடுப்பிலிருந்து கீழே இறக்கி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.


வசந்தை நோக்கித்தான் போக வேண்டியதாயிற்று. மாமா, பக்கத்தில் அத்தை, கூடவே ஒரு பெரியவர் உட்கார்ந்து இருக்க, அவரை அடுத்து வசந்த் நின்று இருந்தான்.


சைந்தவி அருகே வர, இப்போது வசந்தின் பார்வை மாறியிருந்தது. அந்த விழுங்கும் பார்வை இல்லையெனவும், ‘ச்சப்பா’ என நிம்மதியடைந்தாள்.


“சைந்தவியா வாம்மா வா.” விரிந்த புன்னகையுடன் மோகன் கூப்பிட, “வசந்த் தம்பி அப்பா சவி.” பாலசந்தர் மோகனை அவளுக்கு அறிமுகம் செய்தார்.


“ஹலோ” என்று முதல் முறை பார்க்கும் ஒருவரிடம் பேசுவது போல் சொல்லி மெல்லிய புன்னகை இழையோட சைந்தவி நிற்க, “என்ன இப்படி மொட்டையா பேசுற சவி. வாங்க மாமான்னு வாய் நிறைய கூப்பிடு.” என காயத்ரி கட்டளையிட்டார்.


அவருக்கு இத்திருமணப் பேச்சுக் கடுப்புத்தானே? ஏதோ ஒரு வகையில் இந்தச் சம்பந்தம் தகையாமல் போய்விட்டால் சூர்யாவிற்கு சைந்தவியை மணமுடித்து வைத்து, தம்பி மகளை வீட்டு மருமகளாக்கிக் கொள்ளும் நப்பாசை இன்னுமே காயத்ரியின் நெஞ்சில் ஒட்டியிருந்தது.


அவருக்கு ஒன்று புரியவில்லை. அவர் விரும்புவது அத்தனை பொருத்தமில்லாத ஒரு கல்யாணம். சைந்தவி சூரியைவிட வயதில் மூத்தவள் என்பது மட்டும் காரணமில்லை. சைந்தவி மாதிரியான பெண் அவர்களுடைய இல்லத்திற்கு செட்டாக மாட்டாள்.


வாழையை வெப்பமண்டல பூமியில் பயிரிட்டால் அதற்குரிய விளைச்சலும் பயனும் கிடைக்கும். குளிர் பிரதேசத்தில் நட்டு வைக்க முயன்றால் என்னவாகும்? நல்லாப் பிழைக்குமா?


அப்படி இத்தனை வருடம் மருமகளுக்குத் தர முடியாது போன ஆதரவை இனியாவது தர நினைத்தா சைந்தவியைத் தன்னுடைய வீட்டு மருமகளாக்க நினைக்கிறார்? நாலையும் ஆராய விழையாமல் ஏதோ தன் மனத்தில் தோன்றிய ஆசைக்காக ஒரு கல்யாணமா?


இன்னும் சூரி மற்றும் சைந்தவியின் விருப்பமும் முக்கியமில்லையா? அவர்கள் இருவரின் உணர்வுகளையும் பற்றிய எண்ணமில்லாமல்!


ஒரு நல்ல அத்தையாக அவளுக்கு ஒரு நல்வாழ்வை ஏற்படுத்தித் தருவது தானே சிறப்பு? காயத்ரிக்கு அந்த நினைப்பே வரவில்லை.


“காயத்ரீ” உன் பேச்சுப் பிடிக்கவில்லை என்கிற கண்டனம் பாலசந்தரின் குரலிலும் பார்வையிலும் தெரிந்தது.


கூடவே வசந்த், “முதல் தடவையா ஒருத்தரைப் பார்க்கும் போது வேற எப்படிப் பேசுவாங்க? எங்களுக்குள்ள இன்னும் எந்தப் பேச்சும் முடிவாகலை. சைவி இருக்கிறபடி இருக்கட்டும் ஆன்ட்டி.” எனவும் காயத்ரி அடங்கிவிட்டார். அவனுடைய குரலும் தோரணையும் ஏற்கெனவே அவருக்குப் பயம் தான்.


“நீங்க பேசிட்டு இருங்க. இதோ வர்றேன்” என்று சொல்லிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவினார் காயத்ரி. வசந்திடம் அவர் பப்பு எப்படி குக்காகும்?


வசந்திற்குக் காயத்ரியின் மனத்தில் ஏற்பட்டுள்ள நப்பாசை பற்றி எதுவும் தெரியாது. பரிமளம் மகளை அடக்கி வைத்தவர், வசந்திடம் மகளின் எண்ணத்தைப் பகிரவில்லை.


சைந்தவிக்குப் போதுமான அன்பும் ஆதரவும் கொடுக்காது போனார். இப்பவும் அவளிடம் சிடுசிடுப்பும் குற்றம் குறை சொல்லும் மனப்பான்மையைத் தானே காட்டுகிறார் என்கிற கோபம். அதை உள்ளடக்கிக் கொண்டு அவரை மேலே பேச விடாமல் தடுத்தான்.


மோகன் மகனை ஒரு பார்வை பார்த்து வைக்க, சைந்தவிக்கு இப்போது ஓர் அசௌரிகமான மனநிலை தொற்றிக்கொண்டது.


அவள் வசந்தைப் பார்க்க, நிர்மலமான தோற்றத்துடன் நின்றிருந்தான். ‘அத்தையிடம் எனக்கு சப்போர்ட்டாக இப்ப இவனா பேசினான்?’ என்றிருந்தது அவளுக்கு.


‘அடுத்தவர்களிடம் உனக்காக சப்போர்ட் செய்வான். உனக்காக உன்னிடம் சண்டை தான் போடுவான். நீ அவன் பேச்சை உதாசீனப்படுத்திட்டுக் கிளம்பிட்ட. அதைக் கண்டு பிடிச்சிட்டான். அது ஒரு கடுப்பு.


ஆர்ணவ்வைத் தூக்கிட்டு நளினமா நின்னுட்டு இருந்தியா? அப்படியே அவனுக்கு மூட் ஏத்திட்ட வேற.


அவன் கடுப்பையும் காதலையும் இப்ப உன்கிட்ட காட்டவா முடியும்? உணர்ச்சிகளை மறைக்கத் தெரிந்த நடிகன் கலெக்டர்!’


சைந்தவிக்கு வசந்தின் நிலைமை புரிந்துவிட்டாலும்!


இருவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த லவ் குரு நொடித்துக்கொண்டது தான் மிச்சம்.


“இப்படி வந்து உட்காரு மா.” மோகன் சொல்ல, எதிரே ஓர் இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டாள்.


“பெரியம்மாக்கு இப்படி ஆகும்னு யாரும் எதிர்பார்க்கலை. திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தாங்க. எங்க வீட்டம்மா நாயகியும் உங்க பாட்டியும் ரெண்டு நாளு கலகலப்பா பேசிப் பழகினது இப்ப கண்ணுக்குள்ள வந்து நிக்குது.


அவங்களுக்கு இப்படின்னு சேதி கேட்டதும் பதறிட்டோம். எங்களாலே இங்க உடனே வர முடியாத இக்கட்டாகிப் போச்சு சைந்தவிம்மா. வசந்த் இங்க இருந்து அந்நேரத்துக்குப் பார்த்துக்கிட்டது எங்களுக்கும் ஆறுதலாச்சு.


நீ தைரியமா இருக்கணும். நாங்கெல்லாம் இருக்கோம்…”


மோகன் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார். அவளுக்குப் பதிலுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை. அவள் வயதிற்கு வேறு எத்தனை பெரியவர்களிடம் பேசிப் பழகியிருக்கிறாள்? ஒரு குடும்பச் சூழ்நிலை வாழ்வு என்பது எத்தனை சின்ன சின்ன விசயங்களையும் கையாள பால பாடமாக இருந்திருக்கும்.


ஆதுரமான அவருடைய பேச்சில் இளகினாள் சைந்தவி. வசந்தின் குணம் இவரிடமிருந்து வந்ததா என்று கூட நினைத்தவள் வசந்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள்.


இம்மாதிரியான சடங்குகளில் கலந்துகொள்ள வருபவர்களை வாவென்று அழைப்பார்களா? அத்தை சொன்னதும் இதுவே ஒரு குழப்பம்…


அப்பத்தா இவர்களிடம் பேசிப் பழகினாரா? இவர்கள் திருவனந்தபுரத்திலா இருக்கிறார்கள்? வசந்த் அம்மா வரலையா?


பல கேள்விகள் அவளுக்குள் வலம் வர, “அப்பத்தா உங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்காங்களா அங்கிள்? இப்ப ஆன்ட்டியும் உங்க கூட வந்திருக்காங்களா?” ஒரு வழியாக அவரிடம் உரையாடத் தொடங்கினாள்.


தன்னை மதித்து அழைத்துப் பேசுபவரிடம் மரியாதையாகவே பேசிக் கொண்டிருந்தாள். வசந்த் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே அமைதியாக இருந்தாலும் நெஞ்சுக்குள்ளே சந்தோஷம் பாப்கார்னை போல உப்பி எழுந்தது.


தன் அப்பாவிடம் சரளமாக அவளால் உரையாட முடிகிறது என்கிற உவகையில் நிரம்பி நின்றிருந்தான்!


நேரம் ஓடிக்கொண்டிருக்க, அலுவலகம் போகும் அவசியமும் இருக்க, வசந்த் சைவியையும் அப்படியே விட முடியாமல் அங்கேயே இருந்தான். இதற்கிடையே உதய் இரண்டு மூன்று குறுஞ்செய்திகள் அனுப்பி இவனுடன் பேசி, இவனுக்காகக் காத்திராமல் கிளம்பியும் விட்டான்.


அப்பாவுடன் அவள் நன்றாகப் பேச, இளமுறுவல் அரும்பப் பார்த்திருந்தான். ஓரக்கண்ணால் சைந்தவி வசந்தின் முறுவலை கேப்சர் செய்தாள்.


அப்படி கேப்சர் செய்து வைப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் எனப் புரிபடாத லவ் குரு அவரின் ஏஞ்சலுடன் டிஸ்கஷனில் இறங்கினார்.


ஆர்ணவ் சில நிமிடங்கள் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரே இடத்தில் அவனால் இருக்க முடியவில்லை. அதுவும் பெரிசுகளின் மத்தியில். அவன் சைந்தவியை நச்சுப் பண்ணத் தொடங்கினான்.


அதைப் பார்த்த வசந்த் ஆர்ணவிடம் கையாட்டி “ஹாய்” சொன்னான். ஆர்ணவ் சைந்தவியின் தோளில் முகம் புதைத்து, பின்னர் ஒரு பக்கமாகத் தலையைத் தூக்கி என நெளிந்து மெதுவாகப் பதிலுக்குக் கையாட்டினான்.


சிறு முறுவலுடன் அச்சிறுவனை இரசித்தவன், “இந்தப் பொடியன் யாரு சைவி?” என்று இவ்வளவு நேரத்தில் இப்போது தான் வசந்த் அவளிடம் பேசினான்.


“நானு பொதியன் இல்லை. ஆர்ணவ்.” அக்குட்டியின் பாவனையில் அவர்கள் மூவரும் சிரித்துவிட, “என் பிரண்ட் அருணா பையன்.” சைந்தவி வசந்திற்கு பதில் சொன்னாள்.


“இங்க வாங்க ஆர்ணவ்” வசந்த் அழைக்க, “ம்கூகூம் வர மாத்தேன்.” மறுத்துவிட்டு, “இவங்க உங்க அங்கிளா?” வசந்தைப் பார்த்துக் கையை நீட்டி சைவியிடம் கேட்டு வைத்தான்.


அக்குட்டிப் பையனின் கேள்வியில் மோகன் உரக்கச் சிரிக்க, சைந்தவியும் சிரிப்பை அடக்க முடியாமல் கையால் வாயைப் பொத்திக்கொண்டு கண்களில் சிரிப்பைப் பிரதிபலித்து வசந்தைப் பார்க்க, அவனோ கூலாக இருந்தான்.


“ஆர்ணவ், உங்க ஆன்ட்டிக்கு நான் அங்கிள் ஆக முடியாது. இவரை வேணும்னா அங்கிள் சொல்லு. உங்க ஆன்ட்டிக்கிட்ட கேளு. அவளுக்கு ஓகேன்னா நான் உனக்கு அங்கிள் ஆவேன்.” புன்னகையுடன் ஆர்ணவின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தான்.


ஆர்ணவ்வின் கன்னம் தொட்ட அவன் விரல்கள் சைந்தவியின் கைகளிலும் பட, அவள் உடம்பில் சிறு சிலிர்ப்பு!


முகத்தில் இரத்தம் பாய்ந்ததை வசந்த் உணர்ந்தான். அவன் கண்கள் ஆழ்கடலென அவளை உள்வாங்கிக் கொண்டது.


ஆர்ணவ் வசந்த் சொன்னது புரியாமல் முழிக்க, மோகன் மகனின் நிலையறிந்து நாசூக்காக அங்கிருந்து வேறு பக்கம் போனார்.


“ஆர்ணவ் செல்லம், உங்க ஆன்ட்டி ஓகே சொல்லுவாங்களா கேளுங்க?” தன் ஆர்வத்தை மறைத்து, ‘இவ ஓகே சொல்லிட்டாலும்’ எனும் சிணுங்கலுடன் பேசினான்.


ஆர்ணவ், “ஆன்த்தி இந்த அங்கிள் ஓகே வா?” எனக் கேட்டு வைக்க… சைந்தவிக்கு அவஸ்தை. மோகன் வேறு என்ன நினைப்பாரோ?


ஏற்கெனவே வந்திருந்தவர்களில் சிலர் இவர்களின் பக்கம் கண்ணை வைத்திருக்க, அவர்களின் குறுகுறு பார்வையும் குசுகுசுப்பும் சைந்தவிக்கு ஒரு மாதிரி இருக்க…


இதில் உறவினர்களில் பெரிய பாட்டி முறைக்கு வருபவர் ஒருவரின் குரல் வேறு, “அந்தா அங்கன நிக்கிறானா அவந்தே பரிமளம் பேத்திக்குப் பார்த்து வச்சிருக்க மாப்பிள பையன். டீ சரோஸா, பட்டம்மாவ கூப்பிடு. அன்னைக்கிப் பிடிச்சிக் கேட்டுக்கிட்டு இருந்தா. அவளும் கண்ணு நிறைச்சிப் பார்த்துக்கட்டும். மாப்பிள்ளை அம்சமா இருக்காப்படி. கலெக்டர் படிப்புப் படிச்சவர்னா சும்மாவா!” என்று ஊருக்கே கேட்கும்படி சத்தமாகச் சொல்ல… விதிர்த்துப் போனாள் சைந்தவி.


வசந்திற்கும் திடுக்கிடல் தான். தான் நினைத்தது போலில்லை. நாலு பேரிலிருந்து நாப்பது பேருக்கும் மேலேயே தங்களின் கல்யாணப் பேச்சுத் தெரிந்து இருக்கும் போலவே!


அசந்து போய் வசந்த் நிற்க, சைவி அவனை முறைத்துப் பார்த்தாள். அவனை ‘ஏன் இப்படி… இப்பவே எல்லோருக்கும் தெரியுற மாதிரி?’ எனக் கோபத்துடன் எதிர்கொள்ள முயல, முடியவில்லை அவளால்.


இருவரின் பார்வைகளும் சந்தித்துக்கொள்ள, அவன் பார்வை கூர்மையாக அவளுள் ஊடுருவியது!


‘என்ன முறைப்பு? ஈர்ப்புன்னு நினைச்ச நானுந்தான் ஏமாந்துட்டேன். என்ன இப்போ? காதல் தான் பெண்ணே உம்மேல எனக்கு! இவங்க எல்லாம் பேசிட்டு இருக்கிற மாதிரி நமக்கு டும் டும் வச்சிடலாம்! நீ என்னை ஓகே பண்ணு!’


வசந்த் உணர்த்த முயன்றதை இந்த சைந்தவி கண்டு கொண்டாளா?
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 24:


மோகனிடம் சொல்லிவிட்டு வசந்த் அங்கிருந்து புறப்படும் நேரம், சூரியுடன் அலெக்ஸ் கூடத்துக்குள்ளே நுழைந்தான்.


அலெக்ஸை கண்ணெதிரே கண்டதும், சில வினாடிகள் சைந்தவி திகைப்புடன் நின்றாள். அவன் இங்கு வருவதைப் பற்றி அவளுக்குச் சொல்லவில்லை. வினித்தும் நாலைந்து நாட்களாக எந்தத் தொடர்பிலும் இல்லை என்பதும் சட்டென ஞாபகத்தில் வந்தது.


சின்ன முறுவலும் மெல்லிய தலையசைப்புமாய் அலெக்ஸை வரவேற்றவளின் பார்வை, சட்டென அவனுக்குப் பின்னால் சென்றது. அந்த நேரம் அவளுடைய கண்களில் அவ்வளவு ஆர்வம் பளிச்சிட்டது!


“வினித் வரலை சைந்தவி. அவசர வேலையா மும்பாய் போயிருக்கான்.” அவளது தேடலை உணர்ந்து அவள் கேட்பதற்கு முன்னே அலெக்ஸ் அவசரமாகச் சொன்னான். அவள் ஏமாற்றம் அடையும் முன் தான் முந்திக்கொள்ள நினைத்தான். அவனுக்கு அவளின் மனநிலையைப் பற்றிய ஊகம் இருந்தது.


அலெக்ஸின் வரவினை சைந்தவி எதிர்கொண்ட விதத்தை வசந்தும் பார்த்திருந்தான். ‘வினித் வரலை’… அலெக்ஸ் சொன்னதும் சைந்தவியின் முகத்தைத்தான் வசந்த் அளவிட்டான். அம்முகத்தில் பரவிய ஏமாற்றத்தையும் மெல்லிய சோகத்தையும் உடனே கண்டு கொண்டான் வசந்த்.


அவ்வளவு நேரம் இருந்த ஓர் இனிய உணர்வலை சடுதியில் தேய்ந்திருந்தது. அவளுடைய முகபாவனை அப்படியே மாறிவிட்டது. சுருங்கிய கண்களும், இறுகிய உதடுகளுமாய்!


‘ஓ… இந்த அலெக்ஸ்க்கும் வினித்தைத் தெரியும். சைந்தவி - வினித் பற்றி இவனுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இவன் வினித்தின் நண்பனா? சைவிக்கு அவ்வளவு நெருக்கமான நட்பில் இருக்கும் வினித் வரலை. அவன் வராமல் இவன் மட்டும் வந்திருக்கான்…’ வசந்த் யோசனையுடன் தயங்கி நிற்க,


அலெக்ஸ் வசந்த் சைந்தவி இருவரையும் மாறி மாறி அளவிட்டான்.


அதற்கு மேல் வசந்தை அவன் அலுவல்கள் இருக்க விடவில்லை. மணிகண்டன் இரண்டு முறை எட்டிப் பார்த்திருக்க, இப்போது முபர் அருகேவே வந்துவிட, கர்சீப்பால் முகத்தை ஒற்றி எடுத்த வசந்த் சூர்யாவிடம் சொல்லிக்கொண்டு வெளியேறினான்.


அவன் போனதும் தன்னுடன் நின்றிருந்த சூர்யாவிடம், “யாரு சூர்யா அவர்?” அலெக்ஸ் கேட்டதும், “தர்மபுரி கலெக்டர்” என்று மட்டும் சூர்யா பதிலளித்தான்.


அலெக்ஸ் அவனுக்கு வேற்று ஆள் தானே? வசந்த் சைந்தவிக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்பதைச் சொல்லவில்லை. அவன் சொல்லாமல் விட்டது ஏற்கெனவே அலெக்ஸுக்குத் தெரிந்த விசயம் என்று பாவம் சூர்யாவிற்கு தெரியவில்லை.


வசந்த் தர்மபுரி கலெக்டர் என்பது அலெக்ஸுக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் தகவல் என்றும் சூர்யாவிற்கு தெரிய வாய்ப்பில்லை. அவன் வந்த நோக்கமும் வசந்த் பற்றித் தெரிந்து கொள்வது தான் என்பது சூர்யாவிற்கு எப்படித் தெரியும்?


ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டும் சைந்தவி அலெக்ஸிடம் பேசிக் கொண்டிருந்தாள். அந்நேரம் சூர்யாவும் உடன் நின்றிருந்தான். தன் மாமன் மகளுக்குத் துணை போல்.


இன்னும் பலரின் எண்ணங்களில் பிற்போக்குத்தனம் குடியிருப்பதை அறிந்தவனாய்!


அலெக்ஸ் வசந்தைப் பற்றி வினித்திடம் பகிர ஆர்வமாக இருந்தான். நல்ல வேலை, ரொம்ப கம்பீரமான தோற்றம், வசந்த் வினித்தை அறிந்திருக்கிறான் என்கிற தன்னுடைய கண்டுபிடிப்பு… இப்படி.


அவர்களைவிட்டு நகர்ந்த சைந்தவிக்குள் சில உணர்வுகள் குவிந்திருந்தன.


வினித் வரவில்லை. எந்தளவு ஏமாற்றத்தை அவள் மனது உணர்கிறது என்பதை யாரிடம் பகிர? அப்படி அந்த ஏமாற்றத்தைத் தொண்டைக்குழிக்குள்ளே அமிழ்த்திக்கொள்ள முயன்றாள்.


அவன் வரவில்லை… ஏனென்று யோசிக்கவும் வேணுமா?


தேவையில்லை... யோசிக்க வேண்டிய அவசியமின்றி அவளிடமிருந்து அவன் தள்ளிப் போக நினைக்கிறான் என்பது நன்றாகப் புரிந்தது.


ஆனால் ஒரேயடியாகவா? இல்லை தற்காலிகமாகவா? இதற்கான விடை தான் சைந்தவிக்குத் தெரியவில்லை.


அலெக்ஸ் மட்டும் இங்கு வந்ததிலிருந்து அவளுக்குத் தெரிந்து போனது. தான் வராமல் எதற்காக நண்பனை மட்டும் வினித் அனுப்பி வைக்கிறானாம்? அவளுக்குச் சென்னையில் இருந்தே என்னத்தை உணர்த்த முயல்கிறான்?


“எப்பவும் நான் உனக்கு நல்ல பிரண்டா இருப்பேன் சைவிம்மா!” வினித் முன்பு சொன்னது தானே? இப்போது அதைக் கடைப்பிடிக்கவில்லையே!


அப்பத்தாவின் இறப்புச்செய்தி வந்ததும் இதோ இங்கு வர அவன் தானே ஏற்பாடு செய்து பத்திரமாக அனுப்பி வைத்தான்.


‘நீ சொன்ன மாதிரி ஒரு நண்பனா என் கூட துணைக்கு நிற்க வந்திருக்கலாமே வினித்? ஏன்டா இன்னைக்கு வராம போன?’ என்ன தான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றும் அவளால் முடியவில்லை.


பாரமாகிப் போன மனது பலதையும் போட்டு உழப்பிக் கொண்டது. வினித் தனக்குப் பேசவில்லை என்பது மீண்டும் ஓட்டிப் பார்க்க, இந்த நாலைந்து நாட்களுக்குள் என்ன மாறிவிட்டது?


அரை நிமிடத்தில் நினைவிற்கு வந்தது வசந்த் சொன்னது…


“நேத்து கேட்டிருந்தா வினித் யாருன்னு எனக்குத் தெரியாதுன்னு சொல்லியிருப்பேன். அந்தப் பேரு கூட எனக்குப் பரிட்சயமில்லை. இன்னைக்கு வினித்தைப் பற்றி உங்க அப்பா என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.”


“அப்பாவா! அவருக்கு வினித்தைத் தெரியும். ஆனால் என் மனசு அவருக்கு எப்படி?”


அன்றைக்கு ஒரு நாள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டது அப்படியே அவளுடைய மனத்தில் ஓடியது…


“வினித்தை ஒரே தடவை தானே பார்த்திருக்காரு. அதுவும் போன வாரம். இங்கே வர்ற அவசரத்துல.” குழப்பமாக அவனைப் பார்த்து நின்றாள்.


“அது தான் அப்பா. நம்ம அப்பா அம்மாவுக்கு நம்மளை உணர்கிற சக்தி இருக்கு சைவிம்மா.”


வசந்த் சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்த சைந்தவிக்குள் பற்றி எரிந்தது! கப கபவென பற்றிய எரிச்சலால் சுவாசக் குழாயும் கூட மக்கர் செய்தது போல. பெரிய பெரிய மூச்சுக்களாய் வெளியேறியது.


“அப்பாஆ!” பல்லைக் கடித்தாள்.


“எதுக்கு என் விசயத்துல மூக்கை நுழைக்கிறாரு? வசந்த் வினித்துன்னு எல்லார் கிட்டயும் என்னைப் பற்றிப் பேசணுமா? பெரிய இவரு… காலம் போனதுக்கு அப்புறமா தான் பெத்த மகள் மேலே அக்கறை பொத்துக்கிட்டு வருது. அப்படியே வெளியே உருகிட்டு… போய்யா போயி அந்த மினி குண்டம்மாவ கொஞ்சு. அவ பெத்த பிள்ளைங்க கிட்ட உருகி பாசமழையைக் கொட்டுப் போ!”


பெருங்குரல் எடுத்துக் கத்த வேண்டும் போல் துடித்தாள். ஆனால் வீடு முழுவதும் ஜனக்கூட்டம் கூடியிருக்கையில் கத்தவா முடியும்?


அப்படியே மைண்ட் வாய்ஸ்க்குள் பேசி சரளை வைத்துச் செய்தாள் சைந்தவி!


என்னமோ தன்னுடைய சுயத்தை எல்லோருமே சேர்ந்து மாற்றுவதாகத் தோன்ற, அவளுக்குள்ளே அப்படியொரு கழிவிரக்கம் சுரந்தது. அழுகை வேறு பொங்கி வர, மற்றவர்களுக்குக் காட்சிப் பொருளாகி விடாமல் அவசரமாகக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


என்ன தான் வினித்திடம் இருந்து ஒதுங்கிப் போக வேண்டும் என்று சைந்தவி நினைத்திருந்தாலும், இவள் நினைத்ததை முந்திக்கொண்டு அவன் செயலாற்றத் தொடங்கியிருப்பது இவளுக்கு வலியைத் தந்தது.


வெஎளியேயும் சொல்ல முடியாது… சொல்லுவதற்கு எந்த ஜீவன் பக்கத்தில் நிற்குது?


என்ன முயன்றும் கைகளில் அகப்படாத கோலிகளைப் போன்று அவளின் ஞாபகங்களும் போக்குக் காட்டி அப்படியொரு அழுத்தத்தைத் தந்தன. இடது புறம் மார்பை அழுத்தியபடி நின்றவள் மெல்ல அதனை விழுங்கிக்கொண்டாள்.


“உலகத்தில் பலருக்கும் வாழ்க்கை அவங்க சாய்ஸ் கிடையாது!” வினித் முன்னர் பேசியது இப்போது காதில் ஒலித்தது. இமைகளை அழுந்த மூடி கசந்த நினைவுகளை ஒதுக்கி வைக்கப் போராடினாள்.


வினித்தை இதயப் பரப்பில் பொத்தி வைத்துக்கொள்ள சைந்தவி விரும்பவில்லை தான். அதற்காக உடனே தூக்கி எறிந்துவிட முடியுமா?


இங்கு வந்ததில் வசந்த் மற்றும் வசந்த் வீட்டின் மகிமையால் ஏதோ கொஞ்சமாக மனம் மாறி வந்து கொண்டிருந்தாள். மீண்டும் பின்னுக்கு இழுத்தது போல ஒரு தடுமாற்றத்தை அலெக்ஸ் ரூபத்தில் வினித் ஏற்படுத்தி விட்டான். அலெக்ஸ் வராமலே இருந்திருக்கலாம் என்று சைந்தவி மருகினாள்.


முகத்தில் குளிர்ந்த நீரை அடித்து மூக்கைச் சீந்தி, கண்ணீரைக் கழுவி துடைத்து ரெஃப்ரெஷ் செய்து வெளியே வந்தவள், விடுவிடுவென கூடம் கடந்து வீட்டின் முன் பக்கம் வந்து நின்றாள்.


அலெக்ஸ் சைந்தவியின் பார்வை வட்டத்தில் பட்டான். தள்ளி திண்ணையருகே தான் உட்கார்ந்திருந்தான். சாமி கும்பிடு முடியும் வரைக்கும் இங்கே இருக்க வேண்டுமா? அவனுக்கு அப்படிப் பொறுமையாக இருந்துவிட்டுப் போக வேண்டும் என்கிற எண்ணமில்லை. அவ்வளவு அன்ஈஸி ஃபீல்… ரெஸ்ட்லெஸாக உணர்ந்தான்.


‘வந்து தலையைக் காட்டியாச்சு. நினைச்சி வந்த மாதிரி வசந்த் யாருன்னு தெரிஞ்சிட்டு. வசந்த் ஒரு கலெக்டர். அவரைப் பற்றித் தெரிஞ்சிக்கணும்னா, இன்னும் விவரங்களை ஈஸியா ஆன்லைன்ல வினித்தே தேடி எடுத்துக்குவான். இதுக்கும் மேல இங்க இருக்கிறது சரியில்லை. சைந்தவியைப் பார்க்கச் சங்கடமா வேற இருக்கு. வினித் வரலைன்னதும் அவ மூஞ்சியே இருளடைஞ்சிட்டு.’


அலெக்ஸின் எண்ணவோட்டம் இவ்வாறு இருந்தது. அவன் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று உறுதியாக நினைக்கும்படி அடுத்து சைந்தவியும் நடந்து கொண்டாள்.


வசந்த் சென்ற சிறிது நேரத்தில் தான் சைந்தவி வெளியே வந்திருந்தாள். அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மனம் கனத்து மண்டையைத் தெறிக்க வைத்தது.


சில நாட்களாக எல்லாம் சரியாத்தானே போனது?


ஏன் இப்படி ஏன் இப்படி? மறுபடியுமா?


அமிழ்ந்து கிடந்த ஏமாற்றத்தை மீண்டும் கிளறிவிட்ட வினித்தின் மேல் அப்படியொரு கோபம் பொங்கியது! ஏதோ படபடப்பாகவும் இருந்தது.


தென்னம்பாளையிடம் ஒரு வேலையைக் கொடுப்பது போல் வெளிப்புறத்தை நோட்டம் விட்டாள். வசந்த் கண்களில் படவில்லை. அவன் ஆட்களும் அங்கிருப்பதாகத் தெரியவில்லை. ஆசுவாசப்பட்டுக் கொண்டாள்.


“நல்லவேளை வசந்த் இல்லை. வெளியே போயிட்டான் போல. இல்லைன்னா தேவையில்லாம அவனுக்கு வேற விளக்கம் தரணும். பேசிப் பேசியே ஆவியைப் பறிச்சிடுவான். அந்தப் பார்வை வேற! இன்னும் யார் யாருக்கெல்லாம் பார்க்க வேண்டி வருமோ!” முணு முணுப்பாகச் சொல்லிக் கொண்டாள்.


அலெக்ஸ் அருகே போனாள். “அலெக்ஸ், வினித் உண்மையிலே மும்பாய் போயிருக்கானா?” அமைதியாகத்தான் கேட்டாள். அலெக்ஸ்க்கு அவளின் கோபம் தெரியவில்லை.


“ஆமா இன்னைக்குக் காலைல போயிருப்பான் சைந்தவி. ஏன் கேட்கிற?”


“ம்ம் ஒரு காரணமாத்தான்... அப்ப அவன் உங்களை இங்க கிளப்பி அனுப்பிட்டு மும்பாய் போயிருக்கான்?”


‘எதுக்கு இவ இப்ப இப்படித் துருவுறா?’ அலெக்ஸ் மண்டைக்குள்ளே மணியடித்துக் கிலியைத் தர,


“அவனும் நானும் வர்றதா தான் டிக்கெட் புக் பண்ணி இருந்தோம் சைந்தவி. திடீர்னு நைட் கால் வந்திச்சு. அதான்…”


அலெக்ஸ் தன் கிலியை மறைத்துச் சாதாரணமாகச் சொன்ன விதம் உண்மை போலவே தெரிந்தாலும், சைந்தவி அவன் சொன்னதைக் கொஞ்சம் கூட நம்பவில்லை.


“அவன் அக்கறைக்கு ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லிடுங்க. என் வாழ்க்கைய எனக்கு வாழத் தெரியும். அவன் ஒரு கோழைகிட்ட ஒன்னும் பழகலை.”


படபடப்பாகப் பேசிய சைந்தவிக்குள்ளே இருந்த அடக்கப்பட்டக் கோபத்தை அலெக்ஸ் அடையாளம் கண்டு கொண்டான்.


அவள் பேசிய விதத்தில் ஒரு வினாடி திகைத்த அலெக்ஸ் தன்னை மீட்டுக்கொண்டு, “சைந்தவி வினித் உனக்காகப் பார்க்கி…” வினித் மனநிலையை எடுத்துச் சொல்ல விழைய, அவன் பதிலைக் கேட்க சைந்தவி அங்கே இல்லை.


தான் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டு நில்லாமல் விர்ரென்று வீட்டிற்குள் போயிருந்தாள்.


அலெக்ஸுக்கு அவளின் செய்கை பலத்த அதிர்ச்சி தான். அவன் முகத்திலும் அது தெரிந்தது. நல்லவேளையாக வேறு யாரும் பார்ப்பதற்கு முன்னே சுதாரித்துக் கொண்டான்.


வினித்தால் தான் சைந்தவி தன்னிடம் கடிந்து கொள்கிறாள் என்று புரிந்தாலும் மனம் தாளவில்லை அவனுக்கு!


அப்படியே தனக்கிருந்த கடுப்பில், ‘விளக்கெண்ண உனக்காக இனி எந்த ஆணியையும் புடுங்கச் சொல்லீறாத!’ என்று அவசர அவசரமாக டைப்பி வினித்திற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான்.


அன்றிலிருந்து அலெக்ஸ் மட்டுமில்லை, வினித்தையும் சைந்தவி விசயத்தில் எந்த ஆணியையும் புடுங்க விடவில்லை.


“ஒதுங்கி இருக்க முடிவெடுத்திட்ட. அப்படியே இரு மச்சி. சைந்தவியை அவங்க அப்பா பார்த்துக்குவாரு. வசந்த் நல்லவரா தெரியுறார். நீ உன் வேலை, குடும்பம், நீலிமான்னு பாரு.”


வினித்திற்கும் நண்பன் சொன்னது சரியெனப்பட்டது. மனம் சங்கடப்பட்டாலும் தன் தோழியின் நலனை எண்ணியே அவனும் அவளிடம் தன் பக்கமிருந்து எந்தவொரு தொடர்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடிவு செய்தான்.


ஏற்கெனவே தற்காலிகமாய் விலகி நிற்பது என நினைத்திருந்தது தானே? வெட்டியாய் அலெக்ஸை அனுப்பி சைவியைக் கொந்தளிக்கச் செய்துவிட்டது அவன் மனத்தையும் வருத்தியது!


தோழியின் நலனுக்காக என நல்லதொரு முடிவாகத் தோன்றியதைச் செயலாற்ற ஆரம்பித்தான்.


சைந்தவிக்கு வினித்தைத் தெரிந்த அளவு வசந்தைத் தெரியாதல்லவா? அவன் கண்களுக்குத் தான் தப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தாள்.


‘அவன் என்ன நினைத்தால் எனக்கென்ன’ என்று தோன்றவில்லை… புதிதாக ஏன் இந்த மாதிரி அவனைப் பற்றிய கவலை எல்லாம்? அதுவும் அவள் கருத்தை எட்டவில்லை!


வசந்தைச் சைந்தவி அண்டர் எஸ்டிமேட் செய்துவிட்டாள். முதலில் அலெக்ஸ் வந்ததிலிருந்தே வசந்த் கவனித்திருந்தான் தானே?


அலெக்ஸ், சைந்தவியைச் சந்தித்த முதல் அரை நிமிடமே வசந்திற்கு சைந்தவியின் உணர்வுகளைப் படிக்கப் போதுமானதாக இருந்தது.


‘இந்த சரள் அங்கிளை என்ன சொல்ல? வினித்தைப் பற்றி என்கிட்ட பேசின மாதிரி என்னைப் பற்றியும் அவன்கிட்ட சொல்லியிருக்காரு. மனுசன் ரொம்ப தான் உணர்ச்சி வசப்படுறாரு.


இத்தனை வருசம் மகளுக்கு எப்படிப் போச்சாம்… இப்ப வந்து பாசத்தைக் கொட்டுக் கொட்டுன்னு கொட்டினா ஆச்சா? இனி என்ன? சைவி கிட்ட என்ன அக்கறை காட்டி என்ன… எதைச் சாதிக்கப் போறாரு?’ என்று மிகவும் கடுப்பாக நினைத்தபடி தான் அங்கிருந்து அலுவலகம் சென்றிருந்தான்.


அவனுடைய அலுவலில் முழுதாக ஒன்ற முடியாதவாறு அவளது வாடிய முகம் தோன்றி வாட்டிக் கொண்டிருந்தது.


அவனை அதிகம் யோசிக்க விடாமல் உதயின் குழு வேறு வந்து அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. ஒரு தீவிரமான விசாரணையின் சூழலில் வசந்த் மூழ்கியிருந்தான்.


அந்நேரத்திலே தான் சூர்யா அவனை அழைத்துக்கொண்டே இருந்தான். சைலண்ட் மோடில் வைத்திருந்த மொபைல் பளிச் பளிச்சென ஒளியைத் துப்பிக்கொண்டே இருக்க, கவனத்தில் பட்டதைத் தவிர்க்க முடியாமல் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு வசந்த் தனியே வந்து அழைப்பை ஏற்றான்.


வசந்த் அழைப்பில் வந்து ஹலோ சொன்னதும் சூர்யா கொஞ்சம் வேக வேகமாகப் பேசினான். இந்தப் பக்கம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் வசந்த்.


சூர்யா ஏதோ கேட்டு இவன் பதிலை எதிர்பார்க்க, “அவள் இஷ்டப்படி செய்யட்டும் சூர்யா. நீயே அங்க இருந்து பார்த்திட்டுக் கிளம்பு. எனக்கு இப்ப பேச நேரமில்லை. வச்சிடறேன்.” என்று அழைப்பை உடனே துண்டித்துவிட்டான்.


வசந்தை அநேகமாக உதய் சரண் மற்றும் ஸ்பெஷல் போலீஸ் ஃபோர்ஸ் சூழ்ந்திருந்தார்கள்.


“உதய் என்ன இதெல்லாம்? நீ ரொம்ப எக்ஸ்சாஸரேட் பண்றடா.” வசந்த் சற்று எரிச்சலுடன் பேசினான்.


“வெபன்ஸ் கைப்பற்றி இருக்கோம். இது பெரிய விசயமில்லையா… என்ன நீ இப்படி கூலா சொல்ற?” உதய் நண்பனை முறைத்தபடி சொல்ல,


“ஆமாம்டா நாட்டு வெடிகுண்டு, வெட்டருவாள், கோடாலி, கதிர் வெட்டிங்க… வேற என்ன பர்பசா சேர்த்து வெச்சாங்களோ. நீங்க, ‘தர்மபுரி கலெக்டரை கொல்லச் சதின்னு’ ஹெட்லைன் நியூஸ் கொடுக்க ஃபேவர் பண்ணி வச்சிருக்கீங்க.”


தலையைப் பிடித்தவன் நெற்றியில் கை வைத்து அழுத்திக்கொண்டான் வசந்த். தேநீரைச் சிப்பிக்கொண்டிருந்த உதய் கடகடவென்று மீதியைத் தொண்டையில் சரித்துக்கொண்டான். கப்பை அழுத்தத்துடன் மேஜையில் வைத்துவிட்டுச் சொன்னான்...


“கலெக்டர் ஆஃபீஸ் ப்ராக்ஸிமிட்டி வசந்த். அப்ப நாங்க என்னன்னு நினைக்க? சந்தேகம் வரத்தான் செய்யும். ரெண்டு பேரைக் கைது செய்து லாக் அப்பில் வச்சிருக்கோம். இன்னும் சிட்டி முழுக்க சர்ச் ஸ்க்வாட் தீவிரமா வேலையில் இறங்கியிருக்காங்க.”


உதய் காரணமில்லாமல் டென்ஷனாக மாட்டான்… தன்னையும் டென்ஷனாக்க மாட்டான். வசந்த் சில வினாடிகள் யோசனைக்குப் பின், “யாருக்குச் சொந்தமான இடம் டா அது?” என்று கேட்க,


“சுனில் ஆக்ரோ குரூப்ஸ்.” உதய் பதில் சொன்ன ஓரிரு வினாடிக்குள் நூல் பிடித்துவிட்டான் வசந்த்.


“வேற எங்கேயும் நீங்க போக வேண்டாம் உதய். நான் கெஸ் பண்றது ‘தி சௌத்ரி டெய்ரீஸ்’. அவனுங்க வேலையாத்தான் இது இருக்கும்னு தோணுது. ஏதோ அந்தச் சின்னப் பையன் விளையாட்டா வெடி வெடிச்சிட்டான்னு நினைச்சேன்டா. இப்ப நீ சொல்றதை வச்சி லிங்க் பண்ண முடியுது.


டக்குனு ஒரு மேட்டர் க்ளிக் ஆகுது…


‘சுனில் ஆக்ரோ’ சுதனும் ‘சௌத்ரி டெய்ரீஸ்’ நரேனும் க்லோஸ் பட்டீஸ் (buddies).”


“சோ? அவங்க நண்பர்களா இருக்கட்டும். உனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை வசந்த்?” கேள்வியாய் உதயின் புருவம் வளைந்தது.


“எனக்கும் சுதனுக்கும் பிரச்சனை இல்லை உதய். எனக்கும் நரேனுக்கும் தான் பிரச்சனை. அவன் டெய்ரி ஃபார்ம் மேலே நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேஸ். அமுக்கப் பார்த்ததை வெளியே கொண்டு வந்திட்டேன்னு என் மேலே செம காண்டுல இருக்கான் நரேன்.


அவங்க ப்ராடெக்ட்ஸ் உற்பத்தியை நிறுத்த ஆர்டர் போட்டிருக்கேன். ஏற்கெனவே மார்க்கெட்ல விற்பனைக்குப் போனதும் ப்ராடெக்ட் ரீ-கால் செய்ய அறிவிப்புத் தந்தாச்சு. இதனால் அவங்களுக்கு ஏகட்ட நஷ்டம்.


அதான் என் கிட்ட மோதிப் பார்க்கிறான் அந்த நரேன். சௌத்ரி டெய்ரீஸ்க்காக சுதன் உதவுறான். சந்தேகமே இல்லைடா. வெயிட் ஏ மினிட்… கல்யாண்…”


வசந்த் தன் பிஏ கல்யாணத்தை கூப்பிட்டு உதய்க்குத் தேவையான கோப்புகளுள் குறிப்பிடும் விபரங்களைக் காட்டச் சொல்ல, உதய் கல்யாணிடம் பேசி மேலும் சில விசயங்களையும் சேகரித்துக் கொண்டான்.


அடுத்து வந்த இரண்டு வாரங்களும் வசந்திற்கு வேறு நினைவில்லை. அவன் கவனம் மொத்தமும் தனக்கெதிராக நடத்தப்படும் சம்பவங்களும், அதற்கு காரணமான நபர்களும் என்றிருக்க, மற்ற அனைவரும் பின்னுக்குச் சென்றுவிட்டார்கள்.


இடையில் ஒரேயொரு குறுஞ்செய்தியை மட்டும் சைந்தவிக்கு அனுப்பியிருந்தான். இருவரும் மொபைலில் கூட பேசிக் கொள்ளவில்லை.


விசேஷம் நடந்த அன்று வீட்டில் என்ன நடந்தது என்று சூர்யாவிடம் விசாரித்து முழுதாகத் தெரிந்து கொள்ள வசந்திற்கு நேரமில்லை. உதய் அவனை ஃப்ரீயாக விட்ட பின்னரே மூச்சுவிட முடிந்தது.


அப்புறமே வசந்த் சூர்யாவிற்குக் கூப்பிட்டுப் பேசினான். தென்னம்பாளையின் மூலம் அறிந்தது, சூர்யாவிடம் கேட்டுத் தெரிந்தது எல்லாம் வசந்தை எரிச்சலூட்டியது. வசந்தின் மனநிலையை அவனுடைய குரலே சூர்யாவிற்குக் காட்டியது.


தாமினி தன் மகள் மற்றும் மகனுடன் திடீரென விசேஷத்திற்கு வந்திறங்கியது தான் அன்றைய ஹைலைட்டாக இருந்திருக்கிறது. தான் அவ்வீட்டு மருமகள் என்பதை ஸ்திரமாக்கிக்கொள்ள மலேசியாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்திருந்தாள். அவர்கள் வருவது சரள்கண்ணன் உள்பட யாருக்கும் தெரியாது.


தர்மபுரி ஊருக்குள் நுழையும் முன்னர் தான் சரள்கண்ணனுக்கு அழைத்து விசயத்தைச் சொன்னாள் தாமினி. அவருக்கு விசேஷ வீட்டிற்கு மனைவியும் அந்தப் பிள்ளைகளும் வருவது பிரச்சனை இல்லை. சைந்தவிக்காக எண்ணிப் பயந்தார்.


ஆக தாமினியும் சரத் ஷானவியும் வந்தது, அப்பா மூத்த மகளின் உறவுநிலை மேலும் பாதிப்புக்கு ஆளானது.


பரிமளம் இல்லாமல் போனது தாமினிக்குப் புது தெம்பைத் தந்திருக்க, அவ்வீட்டின் ராணி போல் உரிமையாக நடந்து கொண்டிருந்தாள். காயத்ரியின் குடும்பம் தவிர மற்ற உறவினர்கள் வேறு அந்த மூவரிடம் பேசிப் பழக ஆர்வம் காட்ட, சைந்தவிக்கு அங்கிருக்க முடியவில்லை.

மூச்சு முட்டும் சூழல்!


ஏற்கெனவே புறப்பட தயாராக இருந்த சைந்தவி சூர்யாவின் உதவியுடன் சென்னைக்கு பஸ் ஏறிவிட்டிருந்தாள்.


‘சைவிம்மா உன் வீடு மட்டும் தான்டா இது முழுக்க. பாட்டி அப்படித்தான் உயில் எழுதி இருக்காங்க. உன் வேர் உன் சொந்தம் எல்லாம் இங்க தான். உன்னைத் தனியா உன் அப்பத்தா விடலைடா செல்லம். இது தெரியாம தாமினி மேடம் நடந்திருக்காங்க.’


வசந்த் அன்று தான் வீட்டில் இல்லாமல் போனதைப் பற்றி நினைத்து வருந்தினான். மோகன் கூட மகனிடம் பேசக் கிடைத்த வாய்ப்பில் தன் வருத்தத்தை வெளியிட்டிருந்தார்.


சைந்தவியின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை வசந்தால் உணர முடிந்தது. அவளால் எவ்வளவு தாங்க முடியும்? வசந்தின் மனம் வேதனை அடைந்தது.


உடனே சைவியைப் பார்க்க ஏக்கம் கொண்டான். முடிந்ததை விட்டுவிட்டு இனி என்ன செய்ய என்பதைத் திட்டமிட்டான்.


வசந்த் திட்டமிட்டால் சைந்தவி கேட்டு விடுவாளா?


வசந்த் சைந்தவியை நினைத்துக்கொண்டிருக்க, அதே நேரம் அவள் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாள்.


“டேக் கேர் சைந்தவி!” அத்துடன் அவன் அனுப்பிய இரு வரிகளில் அவள் பார்வை நிலைத்தது. புன்னகையுடன் பெரு விரலால் அவ்வரிகளைத் தொட்டுப் பார்த்துக் கோடு இழுத்தாள்.
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்

ஆர்த்தி ரவி

அத்தியாயம் 25:

நானா, நீயா, வேறு யாருமா? காலத்திற்கு முன்னே எதுவுமே நிற்பதில்லை. காலம் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது. சைந்தவி ஆண்ட்வெர்ப் நகரம் பெல்ஜியம் நாட்டிற்கு வந்து மூன்று முழு மாதங்கள் முடிந்துவிட்டன.

வேறு வேலை, ஆன்சைட் என்று எத்தனை துடிப்பு அப்போது? சென்னையைவிட்டு வெகு தொலைவு போக வேண்டும் என்று மிகவும் முயன்று தானே புது வேலையில் சேர்ந்தாள்.

அதுவும் சென்னையைவிட்டு வெகு தொலைவு செல்வதில் குறியாக இருந்ததால், ஆன்சைட் வாய்ப்பிற்கு வேலை நியமனத்தின் போதே விருப்பமும் தெரிவித்திருந்தாள்.

அவள் அப்படி மெனக்கெட்டது எதுவும் வீண் போகவில்லை. அவள் விருப்பம் நிறைவேறியது. அவள் ஆசைப்பட்டதும் நடந்துவிட்டது. ஆனால் கால அவகாசம் தான் வேறாகிப் போனது!

புது வேலையில் சேர்ந்து அங்கே சென்னையில் தான் முதலில் இருந்தாள். அப்போதெல்லாம் எந்த ஆன்சைட் ப்ராஜெக்ட்டிலும் சைந்தவி அசைன் ஆகவில்லை. அதுவும் கூட ஒரு வகையில் நல்லதாயிற்று என்றே பின்னர் நினைக்கும்படி நிகழ்வுகள் நடந்திருந்தன.

இவள் முதலில் கேட்டுக் கொண்டபடி ஆன்சைட் ப்ராஜெக்ட்டும் வந்துவிட்டது. அச்சூழலில் அதை நோ சொல்லி மறுக்க ஒரு மனது துடித்தும்… எதையுமே நோ சொல்லவில்லை. ஏற்றுக் கொண்டாள். ஃப்ளைட் ஏறி ஆண்ட்வெர்ப் வந்தும் விட்டாள்.

இதோ இப்போது சந்தோஷப்படுகிறாளா என்று கேட்டால் இல்லவே இல்லை! தவிக்கிறாள்… நிரம்பவுமே தவிக்கிறாள். கணவனைக் காண வேண்டும் என்று மனது அலைபாய்கிறது! ஆனால் எப்படி?

இரக்கமில்லாத அரக்கன் அதற்கு மனமிறங்க வேண்டுமே? அவனோ, “முடியாது சைந்தவி. நீ நேரிலே வர்றப்ப நாம பார்த்துக்கலாம்!” என்று சொல்லிப் பிடிவாதமாய் வீடியோ காலில் வரவே இல்லை.

திருமணமாகி ஒரே வாரத்தில் ஃப்ளைட் ஏறியிருந்தாள். இன் ஃபேக்ட், ஆன்சைட் போக வேண்டும் என்கிற கெடுபிடியில் தான் திருமணம் நடக்க அத்தேதிக்குள் ஒப்புக் கொண்டாள். ஒரு பக்கம் விசா வேலை. இன்னொரு பக்கம் கல்யாண வேலை.

மிகப் பிரமாண்டமான கல்யாணமாக இல்லாவிடினும் சாஸ்திரப்படி எல்லாச் சம்பிரதாயங்களும் அனுஷ்டிக்கப்பட்டு, பெரியோர்களின் நல்லாசியுடன், நட்புகளின் நல்வாழ்த்துகளுடன் நன்றாகவே நடந்திருந்தது.

ஆம், சைந்தவி சில மாதங்களுக்கு முன்னர் மிஸஸ். சைந்தவி வசந்த் ஆகியிருந்தாள்.

பிடிபிடியென அந்த நாட்கள்… கணவனாகப் போகிறவனுடன் நேரம் செலவளிக்கவில்லை. கணவனான பின்னும் இருவருக்கும் எங்கே நேரமிருந்தது? ஒரு வாரத்தில் அவனைவிட்டுக் கிளம்பியிருந்தாள்.

இப்போது ஃபோனிலேயே இருவரும் குடும்பம் நடத்துகிறார்கள்.

முன்பிருந்த சைந்தவி இல்லை இப்போது. அவள் மனநிலை அப்படியே மாறியிருந்தது. அப்போது மனம் தேடிய மாற்றத்தை இப்போது அதே மனம் அறவே வெறுத்தது. தனிமை பிடிக்கவில்லை.

நினைத்துப் பார்த்தால் இந்த மாதிரி மாறியிருப்பது தான் தானா என்று கூட சந்தேகம் வந்தது சைந்தவிக்கு.

அன்று வார விடுமுறை. செய்ய வேலைகள் இருந்தாலும் செய்யத் தோன்றாமல் ஒரு ஆல்பத்தை வைத்துக்கொண்டு அந்த ட்வின் பெட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தாள் சைந்தவி.

கல்யாணத்தின் போது எடுத்திருந்த புகைப்படங்களில் சிலவற்றை மட்டும் மினி ஆல்பம் போல் தயாரித்து அனுப்பி இருந்தான் வசந்த். அவனை ஃபேஸ்டைமில் பார்க்க முடியாமல் போன ஏமாற்றத்தைப் போக்கிக்கொள்ள அந்த ஆல்பத்தைப் புரட்டியபடி இருந்தாள்.

/அப்படியே அவளை கடந்து சென்றிருந்த வருடத்தின் நினைவுகள் ஆக்கிரமித்துக் கொண்டன./ இந்த வரி அவசியமா இங்க வரணுமா?

யார் யாருக்கு எதெது எப்போது நடக்க வேண்டும் என்கிற கொடுப்பினை இருக்கோ அப்போது தான் அந்தந்த காரியங்கள் நடந்தேறும். அவரவர் விருப்பம் விரும்பிய நேரத்திலே நடந்துவிட நாம் ஒரு ரெடிமேட் உலகத்திலா வாழ்கிறோம்?

எதற்காக மாற்றத்தை விரும்பினாள்? நிரம்பவும் பிரயாசப்பட்டாள்? அதற்கான அவசியமின்றிப் போனது. அவள் வேலை மாறிப் போகும் சமயத்தில் வினித்திடம் இருந்த தொடர்பு விட்டுப் போயிருந்ததே!

வினித், தான் எடுத்த முடிவிலிருந்து பிரளவில்லை. அவள் அவனைக் காண நேரவுமில்லை. அவனுடனான மொபைல் தொடர்பும் சைந்தவிக்கு விட்டுப் போயிற்று. இருவருமே ஒரே சமயத்தில் ஒருவரைவிட்டு ஒருவர் விலகியிருந்தார்கள்.

இது தானா பரஸ்பர அன்பும் நட்பும்? சைந்தவிக்குள்ளே இக்கேள்வி குடைந்தாலும் அதிலேயே சுழன்று கொண்டிருக்கவில்லை. தன் வழியில் முன்னே செல்லவே விரும்பினாள்.

வினித் என்னவானான் என்று சைந்தவிக்குத் தெரியாது!

சைந்தவி தன்னுடைய வேலை மாற்றம், இடம் மாற்றம் பற்றி யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமின்றி எல்லாம் சுமூகமாக நடந்தது.

பழைய விடுதியில் இருந்து சைந்தவி காலி செய்யும் நேரம், ராணிமேரியும் முல்லையும் மட்டும் வருத்தப்பட்டிருந்தார்கள். கண்கள் கலங்க நெகிழ்ச்சியுடன் தான் அந்த ஹாஸ்டலிலிருந்து கிளம்பியிருந்தாள் சைந்தவி.

அவளின் பழைய வேலையிலிருந்து ரிலீவ் ஆனது எல்லாம் ஃபார்மல் வகை.

இரண்டு ஜீவன்கள்… வசந்த் மற்றும் வினித் இருவரும் சைந்தவி பற்றி அறிந்து வைத்திருந்தார்கள்.

அவள் சென்னையிலேயே தான் இருந்தாள். வேறு அலுவலகம். வேறு ஜாகை. புதியதொரு உலகத்தில் அவள் மட்டுமான ஒரு வாழ்க்கையில் சுழன்றாள். தர்மபுரிக்கும் செல்லவில்லை. வசந்தும் அவளை வரச் சொல்லி வற்புறுத்தவில்லை.

ஆனால் வசந்த் அவளிடம் தொடர்பில் இருந்தான். அவனுக்கு அவளைக் காணும் ஆவல் பொங்கி வந்தாலும், அணையிட்டுக் கொண்டான். சிலருக்குத் தனிமை தான் சிந்திக்க லாயக்கு. சும்மா சும்மா நச்சுப் பண்ணாமல், அவளுடைய எண்ணங்களை மதித்துக் காத்துக் கொண்டிருந்தான்.

இரண்டொரு முறை சைந்தவியிடம் உயில் படிக்க வருவாறு கேட்டுப் பார்த்து அவள் வருவதாகத் தெரியவில்லை என்றதும் விட்டுவிட்டான். அவன் தலையில் தான் அந்தச் சொத்துக்களின் தற்காலிகப் பராமரிப்பும் விழுந்தது. தென்னம்பாளையை வைத்துக்கொண்டு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மத்தியில் ஆட்சியாளரின் குடியிருப்பும் மாமரத்து வேலைகள் எல்லாம் முடிந்து குடிபுக ஏதுவாகத் தயாராகியிருக்க, வசந்த் மீண்டும் அந்தப் பங்களாவுக்கே குடி பெயர்ந்தான்.

பரிமளத்தின் வீட்டைவிட்டுக் காலி பண்ணி அங்கே போனாலும், அவன் மனது சைந்தவியுடன் செலவளித்த அந்நாட்களைப் பொக்கிஷம் போல் மூட்டைக் கட்டி உடன் தூக்கிப் போனது.

அவள் வைத்த செடி கொடிகளின் பராமரிப்பு, வளர்ச்சி என அவ்வப்போது எட்டிப் பார்த்தும் கேட்டறிந்தும் கொண்டிருந்தான்.

எத்தனை வேலைப்பழு இருந்த போதும் ஒவ்வொரு இரவும் அவளுக்கு ஒரு குட் நைட் மெசேஜ் அனுப்பி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

சைந்தவியின் செடி, கொடி, வீடு, சொத்து என்று கவனித்து வந்தவன் சைந்தவியைக் கவனிக்காமலா இருந்திருப்பான்? அவளுடைய பாதுகாப்பையும் சுகத்தையும் அவன் சென்னை காண்டேக்ட்ஸ் வழிப் பேசி உறுதிப்படுத்திக் கொண்டான். உதய் வேறு இருந்தானல்லவா? அவனிடமும் வேலை வாங்கிக் கொண்டான்..

ஒரு மூன்று மாத இடைவெளிக்குப் பின்னரே சைந்தவி தர்மரிக்குப் போயிருந்தாள்.

அதற்குள் வசந்தும் வெகுவாக ரிலீவ் ஆகியிருந்தான். ‘சுனில் ஆக்ரோ’ சுதனும் ‘சௌத்ரி டெய்ரீஸ்’ நரேனும் கைதாகி, அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து தீர்ப்பாகியும் இருந்தது. பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் அபாயம் இருக்க, நரேனுக்கும் வேறு வழியிருக்கவில்லை. சௌத்ரி டெய்ரீஸ் பொருட்களின் தரம் சீராக்கப்பட்டது.

நரேனுக்கு வசந்த் மேல் கடுப்பு இருந்தாலும், வேறு எதுவும் செய்ய முடியாமல் தொழிலை மீட்டு வரும் முயற்சியில் லாக்காகி இருந்தான்.

சைந்தவி தான் வரப் போவதாக வசந்திடம் முன்கூட்டியே தகவல் சொன்னதால் அவனும் தக்க ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

சைந்தவியை அவனுடன் தான் தங்கச் சொன்னான். சதீஷ் சைந்தவியைப் பார்த்ததும் சிரிப்புடன் வரவேற்க, தென்னம்பாளை அழுதே விட்டார். அவ்வளவு நெகிழ்ச்சி!

முபர், மணிகண்டன், பாண்டி மற்றும் அனைவருமே மரியாதையுடன் சைந்தவியிடம் வந்து பேசினார்கள்.

சைந்தவி தர்மபுரிக்குப் போன சமயத்திலே தெய்வநாயகி, மோகனும் அங்கிருக்க, சைந்தவிக்கு தெய்வநாயகியைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

சூர்யா குடும்பம், சரள்கண்ணன் குடும்பம் என எல்லோருமே கலெக்டர் பங்களாவில் கூடியிருந்தார்கள். காயத்ரி மற்றும் தாமினியின் அமைதியைக் காண கண் கோடி வேண்டும் நிலை!

அந்தப் பெரிய பங்களா, அங்கே கம்பீரமாய் இருந்த வசந்த்… அந்த இடத்தில் வசந்தின் உயரம் நன்றாகவே கண்களில் பட, சாதாரணமாக பரிமளத்தின் வீட்டில் தங்களிடம் பேசினவரா(னா)? அந்த வியப்பெல்லாம் அவர்களின் வாயைக் கட்டிப் போட்டிருந்தது.

ஊரிலிருந்து புறப்பட்டுத் தர்மபுரிக்கு வரும் போதே சூரியும் பாலசந்தரும் காயத்ரியைக் கண்டித்துத் தான் அழைத்து. வந்திருந்தார்கள்.

தாமினிக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவளுடைய பெற்றோரின் சொத்து, முதல் கணவன் வழிக் கிடைத்த வருமானம், அவளுடைய சொந்தப் பணம் என வளமும் தைரியமும் அவளிடம் குவிந்து இருக்க, இப்போது பரிமளமும் இல்லாமல் போனதால் வந்திருந்த நிமிர்வும் சேர்ந்திருந்தது.

சைந்தவியும் சரளிடம் பேசுவதில்லையா… தனக்குக் கட்டுப்பட்டுத் தான் கணவன் என்கிற மிதப்புடன் தான் வந்திருந்தாள்.

அங்கே வந்து சேர்ந்ததும் வசந்த், அவனுடைய ஆளுமை, உயரம் என்று கவனித்ததில் யாரும் எடுத்துச் சொல்லாமலே வாயை மூடி வைத்தாள்.

பரிமளம் எழுதி வைத்திருந்த உயில்படி…

சைந்தவிக்கு அந்தப் பெரிய வீடும், பரிமளத்தின் ஐம்பது சதவீத நகைகள், சைந்தவியின் அம்மா மதுமிதாவின் அனைத்து நகைகள், திருமணச் செலவிற்காக டெபாசிட் செய்யப்பட்டிருந்த ஏழு லட்சம் பணம் என இருந்தது.

காயத்ரிக்கு அம்மாவின் ஐம்பது சதவீதம் நகை மட்டும். அவருக்கு வீட்டுப் பங்கிற்கு வேறு இடத்தை முன்பே வாங்கித் தந்திருக்க, சைந்தவிக்கு வீடு போனதில் பிரச்சனை இல்லை.

தாமினிக்கு நான்கு வளையல்களைத் தந்திருந்தார் பரிமளம்.

சைந்தவி, சூர்யா, சரத்தைச் சம பங்காக்கி, ஒரு தோப்பைத் தந்திருக்க, சைந்தவி அதனை வேண்டாம் என்றாள். ஏதோ வகையில் இளைய தலைமுறையினர் மூன்று பேரும் இணைந்திருக்க அப்பத்தா வழி செய்து வைத்திருக்க, சைந்தவி வேண்டவே வேண்டாம் என அதனை உறுதியாக மறுத்துவிட்டாள்.

அத்தோப்பிற்கான அவள் பங்கு அவளுடைய ஒப்புதலின் பெயரில் அவள் அப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போக, சரள்கண்ணனுக்கும் சில லட்சங்கள் பெருமான பத்திரங்கள் கிடைத்தன.

தென்னம்பாளையையும் மறக்கவில்லை பரிமளம். அவருக்கும் அவருடைய கடைசிக் காலம் வரைக்கும் வழி செய்திருந்தார்.

யாரும் அதிருப்தி ஆகாத வகையில் பரிமளம் எழுதியிருக்க, தாமினிக்கு மட்டும் மனத்தில் ஒரு பொருமல்… நகைகளை மூன்று பங்கு போடவில்லை… தான் மருமகள் தானே? ஷானவியையும் விட்டுவிட்டார் என்றும் கொதித்து வந்தது.

தாமினியை உடன் இணைத்துக்கொள்ள, அவள் ஒன்றும் ஆசாபாசமாக வந்து உறவாடவுமில்லை… சைந்தவியிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவுமில்லை. இதை வசதியாக மறந்திருந்தாள் தாமினி!

ஷானவி பரிமளத்திற்கு யார்? மகன் தாமினியைத் திருமணம் முடித்த காலத்திலிருந்து அவளைப் பார்த்துப் பழகியிருந்தால் அன்போ பாசமோ வந்திருக்கும். எந்தவிதமான கனெக்‌ஷனும் இல்லாமல் சும்மா தூக்கிக் கொடுக்கவா முடியும்?

ஷானவியின் பெயர் உச்சரிக்கப்படாமல், அவளை அவருடைய வாரிசு இல்லையெனச் சொல்லாமல் சொல்லி, பரிமளம் சைந்தவிக்கு நியாயம் செய்துவிட்டார்.

சைந்தவி இதனால் எல்லாம் உவகை கொண்டாளா? இல்லை. அங்கு நடந்தது எதுவுமே அவளுக்குப் பெரிய பாதிப்பைத் தரவில்லை. எல்லோரிடமும் பொதுவாகப் பேசினாள்.

சரத் சைந்தவியிடம் பேசிப் பழக முயல, அவனிடம் சைந்தவிக்கு வெறுப்பில்லை என்றாலும் அவளால் கொஞ்சம் கூட அவனுடன் ஒட்டவும் முடியவில்லை. அவன் முகம் அப்படியே அப்பாவின் சாயலில் இருக்க, அவள் அப்பாவிடமே சரியாக முகம் கொடுத்துப் பேச முடியவில்லை. தாமினியோ ஷானவியோ ஏதோ ஓர் வித அவஸ்தை!

கூட்டம் கலைந்திருக்க, அதுவரைக்கும் யாரிடமும் பெரிதும் உறவாடாமல் ஒதுங்கி நின்ற சைந்தவி, சூரியிடம் மட்டும் சற்று நன்றாகப் பேசினாள்.

மாமன் மகளும் அத்தை மகனும் பேசுகையில் சைந்தவி அடிக்கொரு தரம் புன்னகைக்க, தூரத்தில் உட்கார்ந்திருந்த வசந்த், ஆழமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளின் புன்னகையை உள்வாங்கியபடி ஏதேதோ எண்ணக் கலவைகள் சூழ ஓர் ஆழ்நிலையில் இருந்தவனை அவளும் கண்டு கொண்டாள். முதுகு பக்கம் குறு குறுக்க, சட்டெனத் திரும்பிப் பார்த்தவளைச் சளைக்காமல் எதிர்கொண்டான் வசந்த்.

சூரி போனதும், வசந்தும் சைந்தவியும் தனித்து இருக்க, கைகளைக் கட்டிக் கொண்டு அவனைக் கூர்ந்தபடி நின்றவளின் அருகே வந்திருந்தான்.

“என்ன பார்க்கிற?” என்று கேட்டு அவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி இறக்கியதை உள்வாங்கிய சைந்தவி, “கலெக்டர் சாரே, என்ந்தா சைட்டா?” சிரிக்காமல் சீரியஸ் குரலில் அவனை நக்கல் செய்தாள்.

“ம்ம்…” அப்படியொரு ஹஸ்கிநெஸ் அவன் குரலில்.

‘அச்சோ’ அவனுடைய குரல் அவளை அப்படித் தாக்கியது!

“தூரத்தில் இருந்து வேற என்ன செய்ய முடியும்? மலையாளத்திலே பேசி இன்னும் என்னை ஏத்திவிடற நீ!” அவளின் வலது கன்னக் கதுப்பில் சிவந்து போய் மினுங்கலாய் தெரிந்த அந்த ஒற்றைப் பருவில் வலது ஆள்காட்டி விரலைப் பதித்தான்.

“ஸ்ஸ்” அவளுக்குச் சிறு வலி ஏற்பட்டது போலும். அதை உணர்ந்தவன் போல் மெதுவாக அதை வருடிக் கொண்டிருந்தான்.

“முகக்குரு அழகு!” அவன் அருகாமையில் தீண்டிய மூச்சுக்காற்றில் ஏற்கெனவே உள்ளே வெல வெலத்துக் கொண்டிருக்க, அந்தத் தொடுகையில் ஒற்றையாய் நிற்க முடியாமல் தள்ளாடிப் போனாள்.

அவளுடைய தழும்பலைக் கண்டு தாங்கிப் பிடித்து அப்படியே அவளை நடு அறைக்கு அழைத்துப் போயிருந்தான் வசந்த். ஓர் இருக்கையைக் காலால் உந்தி அருகே இழுத்து அவளை அமர்த்தினான்.

இருக்கையின் கைப்பிடியில் கைகளை அழுத்திப் பிடித்தபடி, “சைந்தவி…” வசந்த் உணர்ச்சி வசப்பட்டிருந்தான் என்பதை அந்தக் கரகரத்துப் போயிருந்த குரல் அவளுக்குக் காட்டிக் கொடுத்திருக்க, அவளுமே இதயத்தின் இரட்டிப்புத் துடிப்பைத் தாங்கொணாதவளாய்!

அந்த மணித்துளிகளின் தாக்கத்தை அவ்விருவருமே அடுத்து வந்த சில நாட்களும் உணர்ந்திருந்தார்கள்.

அதன் பின்னரும் பல வாரங்களை வெட்டியாகப் போக்கிய இருவரையும் கண்டு லவ் குரு தான் தவித்துப் போனார். தன் ஏஞ்சலுடன் சல்லாபிக்க அவருக்கு ஒரு மூடும் கிட்டில்ல!

வசந்தை மட்டுமில்லை, லவ் குருவையும் ஒரு நாள் குதிக்க வைத்திருந்தாள் சைந்தவி.

“வசந்த்… உன்னை லவ் பண்ணுறேன்னு உறுதி எடுத்திட்டு நான் இந்தக் கல்யாணத்துக்கு ஓகே சொல்லலை.”

“புரிஞ்சது சைவி. நானும் லவ் பண்ணச் சொல்லி உன்னை ஃபோர்ஸ் பண்ணலை. என் மனைவியா வா.”

“என்னமோ உன் ஆஃபீஸ்ல பதவி ஏற்கக் கூப்பிடுற மாதிரி, ‘வாங்கிற’. இது வாழ்க்கையில்லையா வசந்த்? இப்போ நம்ம ரெண்டு பேர் மட்டும்… நம்ம ரெண்டு லைஃப் டெசிஷன். கொஞ்சம் காலம் போனா நம்ம ரெண்டு லைஃப் அப்படியே நாலு லைஃப் சம்பந்தப்பட்டதா ஆகலாம்.”

“ஹே சைந்தவி! சூப்பர்! அப்போ ரெண்டாவது கண்டிப்பா உண்டுங்கிற?”

கண்கள் பளபளக்கக் கூறியவனை வினாடிகள் புரியாமல் பார்த்து இருந்தாள்.

பின்னர், “முக்கியமா உன்கிட்ட பேச முடியுதா? நீ, எப்பவும் அதிகப்பிரசங்கித்தனமா பேசி வம்பு பண்ணிட்டே இரு. போ, இனி என்னாலே சொல்ல வந்ததைச் சரியா சொல்ல முடியாது!” சொல்லிவிட்டு முறைப்புடன் அகலப் போனாள்.

வழுவழுவென்று இருந்த அவள் கையை எட்டிப் பற்றியபடி வசந்த் சொல்லியிருந்தான்…

“உன் வாயும் கோபமும் வேற இருக்கே! அதை எப்படி லெவல் பண்றதுன்னு இனி புதுசா கத்துக்கிட்டு எக்ஸாம் எழுத ரெடியாகிக்கிறேன் பேபி.”

“கலெக்டருக்கு எக்ஸாம் எல்லாம் ஒரு மேட்டரா? நீ என்ன வேணும்னாலும் கத்துக்கோ பட் தேட் பேபி… பேபியை விட்டிருங்க சாரே.”

இருவரும் தனிமையில் பேசும் போது நடந்த பேபி டாபிக் பற்றிய நினைவின் ஞாபகத்தில், வசந்த் மந்தகாசமாக முறுவலித்தான். சைந்தவி தலையில் அடித்துக் கொண்டாள்.

“சைந்தவி, என்னைப் பிடிக்காமல் உன்னால் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருக்க முடியாது. லவ் இருக்கு இல்லை… வரும் வராது. அந்த யோசனைக்குப் போக வேண்டாம்.

வி ஆர் கனெக்ட்டட்ன்னு உனக்குத் தோணியிருக்க மாதிரி, வி வில் ஸ்டே பாண்டட்ன்னு எனக்குத் தோணுது. நம்ம உள்மனசு சொல்றதைக் கேட்டு இப்போ கல்யாணம் பண்ணிப்போம்.”

அவளுடைய இரண்டு உள்ளங்கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டான். தோள் அருகே குனிந்து அவளுடைய முகத்துடன் முகத்தை ஒட்டிக்கொண்டான்.

அவள் விலக முயல, “முத்தம் வைக்க விடு சைந்தவி!” சொல்லிக்கொண்டு கன்னத்தை உதடுகளால் உரசினான்.

வேகத்துடன் தள்ளிவிட்டு அவள் திரும்பிப் பாராமல் நடக்க, சென்னைக் கடலன்னை புன்னகையுடன் இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைத்திருந்தாள்.

அச்சந்திப்பின் போது ஒரு கண்டிஷன் போட்டிருந்தாள் சைந்தவி. ஏ மேரேஜ் வித் ஏ கண்டிஷன்!

அந்த ஒப்புதலுடன் தான் வசந்த் சைந்தவியின் திருமணமும் நடந்திருந்தது!

நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ…

ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. திருமண மண்டபத்தைக் கொண்டாட்டம் நிறைத்திருக்க, பட்டும்; அணிகலன்களும்; பூக்களும் அலங்காரத்தின் முக்கியச் சின்னங்களாய்!

எத்தனை அலங்காரமும் ஈடு கொடுக்க முடியாத புன்னகைகள் சபையை நிறைத்துக் கொண்டிருந்தன. முக்கியமாக தெய்வநாயகியின் பளிச் புன்னகைகளைப் போட்டோகிராபரும் வீடியோகிராபரும் தப்பாமல் உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

சைந்தவி தான் கணவனாகக் கைப்பிடிக்கப் போகும் அவனை நேரடிப் பார்வையாகப் பார்த்ததைவிட, தன்னுடைய வுட்பி மாமியாரை பல தடவை பார்த்தாகிவிட்டது.

முறுவலுடன் அவளை உள்வாங்கிக் கொண்டாலும், மனத்தில் மணமகனாக அருகிலிருந்தவனுக்குப் பொறாமை புகைந்தது.

“என்ற அம்மே தான் உனக்கு ஸ்பெஷல். நானில்லையா?”

தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான். அவள் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தாள். அவனிடம் சொந்தத்தையோ நெருக்கத்தையோ எங்கும் காட்டவில்லை.

இரவில் வரப் போகும் முதல் லாக்ட் டவுன் அறையின் தனிமையான சூழ்நிலைக்கான எதிர்பார்ப்பு அவனிடம் ஓவர் ஃப்ளோ ஆகிக் கொண்டிருந்தது.

‘இவள் ஒரு மாதிரி! நம்ப முடியாது. எப்படி இருப்பாள்ன்னு எந்த ஊகமும் வைக்கக் கூடாது!’

சடங்குகளின் மத்தியில் நினைத்துக்கொண்டான். அவனுடைய மனநிலை வேறு. அவளோ வேறாக இருந்தாள். அவனுக்கு ஈடாக ஸ்டெப் அப் ஆகவில்லை சைந்தவி.

‘நானா இத்தனை பேருக்கு நடுவிலே கல்யாணப் பொண்ணா உட்கார்ந்து இருக்கேன்?’

நம்ப மறுத்தது அவளுடைய மனது. தன்னுடைய கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்.

“நான் வேணும்னா கிள்ளி வச்சி இது நிஜம் தான்னு உனக்குக் காட்டவா?”

காதோரம் சரசரத்தான் மணமகன்.

“வசந்த்!”

மெல்லியக் குரல் தான். ஆனால், அழுத்தத்துடன் அவனுக்குக் கண்டனத்தைக் காட்டியது. புரிந்தாலும் அதனை வசந்த் உதாசீனப்படுத்தினான்.

“யா பேபி! கிள்ள வேண்டாம். கிஸ் பண்ணுங்கிறயா?”

கண்ணடித்தான் கலெக்டர். மணமேடையில் அமர்ந்திருந்தாலும், தன்னுடைய இரசனையை அப்பட்டமாகக் காட்டினான். சுற்றுப்புறத்தை எண்ணி அவள் பதைத்தாள்.

“வசந்த் ப்ளீஸ்!”

“ப்ளீஸ் எல்லாம் நமக்குள்ளே எதுக்கு பேபி? எங்கே கிஸ் பண்ணன்னு சொல்லு.” அவளுடைய முகத்தின் அருகே வந்துவிட்டான்.

“ஹய்யோ உன்… உங்களை!” தலையில் தான் அடித்துக் கொள்ளவில்லை அவள்.

“பரவாயில்லை சைந்தவி, நீன்னே சொல்லு.”

அவன் ‘சைந்தவி’ என்று சொன்னதும் சுருண்டு விட்டாள். அவனும் அதனை உணர்ந்தே இருந்தான். ஆனாலும் பிடிவாதமாக அப்படியே முழுப்பெயர் சொல்லியே பேசினான்.

அவன் சைவிம்மா என்று கூப்பிட கூடாது என்று முடிவு செய்து வைத்திருக்க, சைந்தவி என்றே கூப்பிட்டு அவளைக் கடுப்பேத்தினான்.

நிறையச் சங்கடங்களைக் கடந்து அன்று திருமண மேடையில் உட்கார்ந்திருந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த சைந்தவியின் உடலில் புல்லரிப்பு!

அவள் விருப்பப்படியே தான் திருமண ஏற்பாடுகள் நடந்திருந்தன. வசந்த் அவ்வளவு அவளுக்கு ஆதரவாக நிற்பான் என்று சைந்தவி எதிர்பார்த்திருக்கவில்லை.

அதே போல் சைந்தவியின் சில செயல்களை வசந்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தளவு பிடிவாதமா என்கிற திகைப்பு வசந்திடம் இருந்தது.

கண்டிப்பாக சைந்தவி ஒரு புத்தகம் போன்று என்று புரிந்து கொண்டிருந்தான். புரிதல் தானே ஓர் உறவின் தொடக்கம்?

வாழ்க்கை வாசிப்பு அவளை முழுதாக உணர வைக்கும் என்று நம்பித் துணிந்து திருமணத்தை ஏற்றிருந்தான்.

அவனுடைய அப்பா மோகன் கூட சற்றுத் தயங்கி யோசிக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்க, வசந்த் தான் அவரைச் சமாதானப்படுத்தி முன்னோக்கி நகர வைத்திருந்தான்.

சைந்தவி போட்டிருந்த கண்டிஷனே மோகனின் தயக்கத்திற்கான காரணம்.

“தன் அப்பாவுடன் எந்தவிதமான சம்பந்தமும் தனக்கு இருக்கப் போவதில்லை. தான் தனி ஆள். பின்னால் அவள் பக்க உறவுகளை முன்னிட்டு, எந்தவிதமான கட்டாயமும் தனக்கு ஏற்படகூடாது என உறுதி அளித்தால் மட்டுமே திருமணம்!” என்று சொல்லிவிட,

அப்பாவாக மோகனுக்குச் சைந்தவியின் கண்டிஷன் ஒரு மாதிரி தெரிந்தது. அவர்களின் வீட்டில் எல்லாம் ஈஸி கோயிங் டைப். பல விசயங்கள் பெருந்தன்மையில் கடந்து போகும். தெய்வநாயகி மாற்றாம் தாயாகச் சந்திக்காத பிரச்சனைகளா?

“இந்தப் பொண்ணு வசந்த்க்கு ஒத்து வருவாளா தெய்வா?” மோகன் புலம்ப, “எல்லாம் வசந்த் பார்த்துப்பான். அவனுக்கு மருமகளைப் பிடிச்சிருக்கு. அவங்க வாழ்க்கைக்கு எது முக்கியம்னு அவங்களே முடிவு செய்யட்டும்.” தெய்வநாயகி கணவருக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்.

வசந்தும் சைந்தவியின் மனத்தில் ஏற்பட்டுள்ள காயங்களைச் சுட்டிக்காட்டி நிறைய பேசி அவரை கன்வின்ஸ் செய்திருந்தான்.

“உனக்கு என்னை ரொம்ப பிடிக்குமா வசந்த்? நான் கேட்டதுக்கெல்லாம் சரி சொன்ன?” ஃபோட்டோவில் இருந்தவனின் வரி வடிவை அளந்தாள்.

மீண்டும் நினைவுகளின் சுவடு…

“அந்த மினியும் அவ பொண்ணும் கல்யாணத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிடு வசந்த்.”

“ரொம்ப பிடிவாதம் பிடிக்கிற சைந்தவி.”

“அப்ப என்னைக் கட்டிக்காத நீ!”

“சரி கட்டிக்கலைடி. வச்சிக்கறேன். ஓகே?”

“உதைக்கப் போறேன்டா கிறுக்கு!”

“கிறுக்குத் தான்டி உன் மேல எனக்கு!”

“ஐய்ய ச்சீப்ப… கலெக்டர் கிறுக்காகிட்டா மக்கள் நிலைமை என்ன ஆகுமோ? ரொம்ப வழியாதடா!”

“காதலுக்குக் கண்ணில்லை பேதமுமில்லை. நான் கலெக்டர்னா லவ் ஃபீல் வரக் கூடாதா? லவ் வரும். ஃபீல் பண்ணுவோம். உணர்ச்சிவசமும் படுவோம்ல.”

கட்டிக்கப் போறவனின் உல்லாசமும் மயக்கமும் சைந்தவிக்கு லஜ்ஜையில் நெளிய வைத்திருக்க, “நீ இப்ப தனியாவே அந்த ஃபீலை பட்டுக்கோ. என்னை ஆளைவிடு. மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணுறேன்.” என்று பேசிய அணைத்த அந்த நாள் மனத்தில் வந்தது.

“இப்ப மட்டும் நான் ஒன்வேயா தானே உன்னைப் பார்க்கத் தவிக்கிறேன். உனக்கு அப்படி எதுவும் இல்லையாடா புருஷா?”

வரிசையாக ஒவ்வொரு பக்கமாக அந்த ஆல்பத்தை புரட்டிக் கொண்டிருந்தாள் சைந்தவி.

கண்களில் ஏக்கமும் மயக்கமும் வழிய, விரல்கள் புகைப்படத்தில் தன்னருகில் அமர்ந்திருந்தவனை வருடுவதை நிறுத்தவில்லை.

“கெட்டி மேளம் கெட்டி மேளம் கெட்டி மேளம்!”

வசந்த் சைந்தவியைப் பார்வையால் ஊன்றிப் பார்த்தான். வினாடி நேரம் கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை முன் நிறுத்தி வேண்டிக் கொண்டான். உதடுகளில் புன்னகை தவழ மங்கள நாணை அவளருகில் கொண்டு செல்ல, கண் முன்னே ஆடிய அந்தத் தாலி அவளை நிமிரச் சொன்னது.

இருவருடைய கண்களும் சந்தித்துக்கொண்டன. சரியாக அந்தக் கணத்தில் வசந்த் அவளுடைய கழுத்தைச் சுற்றிக் கைகளைக் கொண்டு போனான்.

சுற்றிச் சூழ்ந்திருந்த உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் அட்சதையைத் தூவி வாழ்த்த, வசந்த் மிகவும் கவனமாக, தானே மூன்று முடிச்சைப் போட்டு முடித்தான்.

அவனுடைய அம்மா, அப்பா, மற்றும் நெருங்கின உறவினர்கள் மண மேடையை நிறைத்திருந்தார்கள்.

சரள்கண்ணன் மற்றும் சரத், காயத்ரி, பாலசந்தருடன் இன்னும் ஒன்றிரண்டு மூத்த உறவினர்கள் சைந்தவியுடைய பக்கமாக இருந்தார்கள். சரள்கண்ணன் கண்களில் குழம் கட்டி நின்றது.

“அப்பா!” சரத் அவரைக் குனிய வைத்துக் கண்களைத் துடைத்துவிட்டான். “அக்கா மாமாக்கு ஹேப்பியா விஷ் பண்ணுங்க” பெரியவன் போல அப்பாவிற்கு அறிவுரை வழங்கினான்.

சைந்தவியும் வசந்தும் அப்போது சரத் சொன்னதைக் கேட்டிருந்தார்கள் தான். அவனை முறுவலுடன் பார்த்திருந்தான்.

வசந்த் “காலப்போக்கில் சைந்தவி மனசு மாறலாம் அங்கிள். அதுவரைக்கும் நீங்க டிஸ்டென்ஸ் விடுங்க. நாங்க அவளைப் பார்த்துக்கிறோம். அவ என் வைஃப். எங்க ரிலேசன்ஷிப் ஸ்மூத்தா போகணும்னு நான் ஆசைப்படுறேன். நீங்க புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன் அங்கிள்.” சரளின் கைகளைப் பற்றிக்கொண்டு சொல்லியிருந்தான்.

“பைடா மை லிட்டில் மச்சான்! நல்லாப் படி!” சரத்திடம் சொல்லி இருவருக்கும் விடைகொடுத்திருந்தான் வசந்த்.

அதன் பின்னர் சரள் மற்றும் அவர் குடும்பத்துடன் எந்தப் போக்குவரத்தையும் வைத்துக் கொள்ளவில்லை வசந்தும் அவன் குடும்பமும். சூர்யா மட்டுமே வசந்த் சைந்தவியுடன் தொடர்பில் இருந்தான்.

எத்தனை நேரம் அதே நிலையில் இருந்தாளோ, ஆல்பத்தை பிடித்துக்கொண்டு அப்படியே தூங்கி இருந்தாள். தூக்கத்திலும் பசியை உணர்ந்த அவள் வயிறு குய்யோ முய்யோ எனவும் விழிப்பு வந்தது.
.
“இப்படிப் பட்டப் பகல்ல தூங்கினா யாரு சைவி சமைப்பா?”

“இல்லாட்டியும் நீ சமைப்ப? எங்க எந்திரிச்சி சமையேன் நானும் அதைப் பார்க்க வெயிட்டிங்!”

“நான் சமைக்காம வேற யாரு இங்க செஞ்சு தர்றாங்களாம்?”

“தண்ணிய கொதிக்க வச்சி நீ அதிலே போட்டு எடுக்கிற நூடில்ஸ், ஸ்பெகட்டி, பாஸ்தா வகை எல்லாம் சமையல்னு நீ சொல்லிக்கிறது எல்லாம்… த்ச்சு!”

“ரைஸ் குக்கர்ல சாதம் வக்கிறேன். பிரஷ்ஷர் குக்கர்ல பருப்பு வைக்கலை? என்னமோ குறை சொல்லிட்டு இருக்கிற. சதீஷ் போல சமைக்க நானென்ன செஃபா?”

“செஃப்பு தான் நல்லாச் சமைக்கணுமா? வயிறு இருக்கிற யாரும் நல்லாச் சமைக்கக் கத்துக்கலாம் தப்பில்லை சைவி!”

இப்படியாக அவளும் நல்லச் சாப்பாட்டுக்கு ஏங்கும் அவளுள் இருந்தவளும் வழக்காடிக் கொண்டிருக்க, நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது.

அக்குட்டி கிட்சனில் நின்று வினாடிகளை வெட்டி ஆக்கினது தான் மிச்சம்.

இதில் க்லாசெட் அருகே தெனாவெட்டாக வீற்றிருந்த கூடையில் குவிந்திருந்த அழுக்குத்துணிகளும் மற்ற வேலைகளும் அவளுக்குப் பயத்தைக் கிளப்பிவிட்டன.

சமையல் செய்யத் தெரியாது என்றில்லை. அப்பத்தா கற்றுத் தந்தது மறக்கவில்லை. ஓர் ஆளுக்கு என்னத்த சமைக்க? பல வருட ஹாஸ்டல் வாழ்க்கை. சென்னையில் இருந்த போதும் சமைக்கும் அவசியமே இல்லையே!

உணவை யூபர் ஈட்ஸ் ஆப்பில் ஆர்டர் செய்துவிட்டு முதலில் குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வந்து மெஷினில் துணிகளை அள்ளிப் போட்டு ஓட விட்டாள்.

சில நிமிடங்களில் ஆர்டர் செய்திருந்த உணவும் வந்துவிட்டது. சிக்கன் பிரியாணியும் மீன் வறுவலும் வரவழைத்திருந்தாள். டிவியை உயிர்ப்பித்துவிட்டு, ஆசையாக உணவைப் பிரித்தாள்.

அது ஒரு வங்காளதேசத்து உணவகம். சைந்தவிக்கு முதலில் இந்த வித்தியாசம் தெரியாது. உணவுடைய ருசியை வைத்துப் பின்னரே அது இந்திய உணவகமல்ல வேறு என்று தெரிந்து கொண்டாள். அங்கு மூன்று நான்கு வகை மட்டுமே அவளுக்குப் பிடித்தது. அதில் இரண்டு தான் இன்றைய ஆர்டர்.

நாலே ஸ்பூன் பிரியாணியை வேகமாகச் சாப்பிட்டு, மீன் வறுவலில் ஒரு சிறு துண்டை விள்வி எடுத்து வாயில் போட்டு மெல்ல ருசித்தாள். இன்னொரு துண்டைக் கையில் எடுத்தவளுக்கு அதற்கு மேல் உள்ளே செல்லவில்லை. சாப்பாட்டு நல்லாத்தான் இருந்தது. அவளுக்குத்தான் இறங்கவில்லை.

அப்படியே உணவு பார்சலை எடுத்துப் போய் கிட்சனில் வைத்துவிட்டு ரெஸ்ட்ரூம் சென்று வந்தாள். வெளியே வந்தவள் ஒரு குவளையில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு ஒற்றை இறுக்கையில் உட்கார்ந்து சிப்பியபடி கண்களை மூடிக்கொள்ள… ஏதோ தோன்றியது.

மொபைலை எடுத்துப் பார்த்தாள். பின் நெற்றியில் கை வைத்து அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

வசந்தைக் கூப்பிட பரபரத்தாலும் அடக்கிக்கொண்டாள். சில வினாடிகளில் அவனே இவளைக் கூப்பிட, முதலில் எடுக்காமல் வெறித்தபடி இருந்தாள். அவன் மீண்டும் கூப்பிட, அடக்கப்பட்ட உணர்வில் முகம் சிவக்க, கண்கள் கலங்கிவிட்டன.

அதற்கு மேலும் சும்மா விட முடியாமல் அழைப்பை ஏற்றாள். அவன் பேசும் முன்னர் இவளே பேசினாள்.

“லூசு லூசு… லூசு கலெக்டர்!”

“ஹாஹ்ஹாஹ்ஹா” அட்டகாசமாகச் சிரித்த வசந்த், “ஓய் பொண்டாட்டி… என்ன கோபமாம்? ஏன்டி வையுற? துவக்கமோ அமோகமா இருக்கு. இன்னைக்கு நீ ஒரு ஃபார்ம்ல இருக்கிற மாதிரி தெரியுது.”

“ம்ம் ஒரு ஃபார்ம் இல்லை ரெண்டு ஃபார்ம்ல இருக்கேன். நீ ஃபோனை வச்சிடு. நான் இப்ப பேசுற மூட்ல இல்லைடா. கோபத்திலே இருக்கேன்னு புரிஞ்சிடுச்சில்ல?”

“என்ன கோபம்னு சொல்லு வச்சிடறேன். எனக்கும் இப்ப உன்கிட்ட பேசிக் கொஞ்சிட்டிருக்க நேரமில்லை.”

“ஓஹோ கலெக்டர் சார்க்கு நேரமிருக்காது தான்!” நக்கலாகப் பேசியவளின் குரலையும் பேச்சையும் வசந்தால் சகிக்க முடியவில்லை.

“ம்ப்ச்… என்னாச்சுன்னு சொல்லு சைந்தவி. தூரத்திலே இருந்திட்டு இப்படி டென்ஷன் பண்ணாதே!” அழுத்தமான குரலில் வசந்த் பேச,

“என்னாச்சுன்னு சொன்னா மட்டும் நீ நேரிலே வரவா போற? எல்லாம் உன்னால் தான். நீ… நீ தான் காரணம்!”

அவள் குரலில் கலக்கம். அவனுக்கும் அது எட்டியது. என்னவென்று புரியாமல் அவனுக்கும் டென்ஷன். தானும் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகவே பேசினான்.

சிறிது நேரத்தில் சமாதானம் ஆனவள் காரணத்தைச் சொன்னாள். அந்தப் பக்கம் அதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்த் திகைத்தான்!
 

Kripnythaa

Moderator
Mar 26, 2018
502
148
63
லாக் டவுன்


ஆர்த்தி ரவி


அத்தியாயம் 26:


பூவே உந்தன் மேனியில்

ஏதோ ஓர் வாசனை

நீயும் கூட காதல் கொண்டாயோ

பூவ பூவ பூவ பூவ பூவே

பூவ பூவ பூவ பூவ பூவே

பூவ பூவ பூவ பூவ பூவே

பூவ பூவ பூவே


வசந்தம் வந்த செய்தியினை

வண்டுக்கு எப்படி சொல்வாயோ…

வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா?


வசந்தம் வந்த செய்தியினை தன் வசந்திற்கு எப்படிச் சொல்ல என்று தெரியாது சைந்தவி தவிப்பிற்கு உண்டானாள். தன் பதட்டத்தில் அத்தனை சொதப்பி வைத்தாள்.


சைந்தவி சொன்ன விசயத்தைக் கேட்டு வசந்த் திகைத்துப் போனது ஒன்றிரண்டு வினாடிகளே. பின்னர் அவனின் சிரிப்புச் சத்தம் தான் சைந்தவியின் காதுகளை நிறைத்தது.


அந்தச் சிரிப்பு அவளுக்குப் பிடித்தமானது. ஆனால் இன்றைக்கு அவளுக்கு அதன் இதம் மனத்தை எட்டவில்லை. நிறைய உணர்ச்சி வசப்பட்டிருந்தாள் மனத்தளவில். உடலிலும் அதன் எதிரொளியாய் நடுக்கம்.


“ஸ்டாப் இட் வசந்த்! என்ன சிரிப்பு இப்போ… செய்யுறதையும் செஞ்சிட்டு!” என்ன… எப்படி இதனை எதிர்கொள்ள என்பது தெரியாமல் வசந்தைக் கடுப்படித்துக் கொண்டிருந்தாள்.


“கங்கிராட்ஸ்டி பொண்டாட்டி! எவ்வளவு ஹேப்பி நியூஸ் சொல்லியிருக்க, இரு இரு வர்றேன்.”


“ஹேய் எங்க போற நீ… எனக்குப் பேசணும்.”


அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே வசந்த் அழைப்பைத் துண்டித்துவிட, சைந்தவி இப்போது திகைத்து நிற்க, வசந்த் அத்திகைப்பை நீடிக்க விடவில்லை.


உடனேயே வீடியோ அழைப்பில் வந்தான். அது வீடியோ அழைப்பு என்பதை உணரும் முன்னரே அழைப்பை உயிர்ப்பித்து இருந்தாள் சைந்தவி.


அப்புறமே கண் முன்னே பளிச்சிட்ட மொபைல் ஸ்க்ரீனை உணர்ந்தாள். அதில் வாய் கொள்ளாமல் புன்னகைத்தபடி இருந்தான் வசந்த்.


அவன் இத்தனை நாட்களாய் வீடியோ அழைப்பிற்கு வரவில்லை தானே? அந்தக் கடுப்பை வைத்து மொபைலை அணைத்து விட நினைத்தாள். ‘சேச்சே இது விளையாட்டுக்கான நேரமா’ அவளுக்குள்ளே இருந்த நல்லவள் அவ்வெண்ணத்தை எரேஸ் செய்தாள்.


இருவருக்குமே ஒரு சிலிர்ப்பு உடலில் சில்லிட்டது! மூன்று மாதங்களும் பார்த்திராத இணையின் முகம்… ஏக்கக் குழைவுடன் நெக்குருகிப் போன நிமிடங்கள்…


இருவரும் கண் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்வையிட, மொழிக்குள் ஒலியைப் புதைத்து வைத்த மௌனம் ஷப்பாடா என ஓய்ந்து கிடந்தது.


வசந்த் தான் முதலில் அந்த மௌனத்தைப் பத்திவிட்டான்.


“ரொம்ப மெலிஞ்சு போயிட்டடி பொண்டாட்டி. உடம்பு எப்படி இருக்கு? சந்தோஷமா சொல்ல வேண்டிய விசயத்தை இப்படியா கோவிச்சிட்டுச் சொல்லுவ…”


அவன் கேட்கவும் அவளுடைய குட்டி உதடுகள் துடித்தன. கண்கள் வேறு காலம் நேரம் தெரியாமல் சிணுங்கலாய் முத்துத்துளிகளை மினுங்க வைக்க, வசந்தின் இதயம் லவ் பீட்ஸ் போட்ட ரிதத்தில் தட தடத்தது!


“ச்சு ஏன் கண்ணுல தண்ணி? பிடிக்கலையா?” ஆதுரமாகக் கேட்டான்.


ஆழ்ந்த அந்தக் குரலில் கணவனின் உணர்வினைப் படிக்க விளையாமல், அவசரமாக அவன் கேட்டதை மறுத்துத் தலையை இடமும் வலமுமாய் ஆட்டினாள்.


“எப்படி இப்படி எனக்குப் பிடிக்கலையான்னு கேட்டுட்டு இருக்க?” வெடுக்கெனக் கேட்டாள்.


“நீ இவ்வளவு கோவப்பட்டா நான் வேற எப்படி எடுத்துக்க சைந்தவி?”


“உனக்கு ஏன்னு புரியலை? போ போ…” முகத்தைத் திருப்பிக் கொண்டவளைப் பார்த்து முறுவலுடன் பேசினான்.


“எனக்கும் புரியுதுடி. நீ அங்க தனியா இருக்கிறது தான் உன் பிரச்சனை. என்னாலயும் இங்க இருக்க முடியாம ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்… உன் பக்கத்திலே உடனே வரணும்னு தோணுது. இதுக்குத்தான் உன்னை வீடியோ காலில் பார்க்க வர்றதை அவாய்ட் பண்ணேன்.”


“இப்ப நீ எனக்காக ஃபேஸ் டைம்ல வரலை? பேபிக்காக தானே வந்திருக்க. அப்படி ஒன்னும் டிஸ்டர்ப் ஆகிட மாட்ட.”


“இப்ப எனக்கு உன் வயிறு தெரியுதா முகம் தெரியுதா? முகத்தை மட்டும் காட்டிட்டு எதுக்கு கம்ப்ளெயின் பண்ணுற… பேபிக்காக வந்தேனாம்!”


உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து ஒரு பெருமூச்சை அவள் வெளியேற்ற, “பார்த்துடி ரொம்ப பலமா நீ மூச்சுவிட்டா என் பொண்ணுக்குப் பயந்து வரப் போகுது!” நக்கலடித்தான்.


“ரொம்ப தான் அக்கறை! இப்பவே பொண்ணாம்… பொண்ணுன்னு எப்படிச் சொல்லுற?” வழக்காடிக் கொண்டிருந்தாள்.


“சும்மா சொல்றது தான். இதுக்கெல்லாம் கேள்வி வைக்கிற… என்னாச்சு… அதுக்குள்ள ஹார்மோனல் சேஞ்? சரி இனி பேபின்னு மட்டும் மென்ஷன் பண்ணுறேன்.” அவளுடைய கோபம் அவனுக்குக் கவலை அளிக்க, சமாதானமாகவே பேசினான்.


“பாய் பேபி ஆர் கெர்ல் பேபி எதுவும் இருக்கட்டும்… ஐ’ம் ஃபைன் வித் இட். நீயும் அப்படித்தானே?” ‘ஆமாம் சொல்லு’ அவள் பார்வையாலே கணவனை மிரட்டினாள்.


விரிந்த முறுவல் வசந்திடம்… கண்களாலேயே தனக்கு மனைவியை ஹார்லிக்ஸ் ஆக்கிக் கொண்டான்.


“எஸ் மேடம்!” குறும்பாகக் கண்ணடித்தவனைக் கண்டு முகம் செம்மையுற்றது அவளுக்கு! பார்வையைத் திருப்பிக் கொண்டாள். பின்னர் தொண்டையைச் செருமி உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.


“என்ன சேஞ்சோ… நம்ம பேபி பற்றி எங்க பேசினோம்? திடீர்னு இப்படின்னு தெரியவும் ஷாக்காகிட்டேன். ஐ’ம் நாட் ப்ரிப்பேர்ட் ஃபார் அவர் ஜூனியர் டா வசந்த்.”


“நமக்கு லவ் பண்ணவே டைம் கிடைக்க மாட்டேங்குது. இதுல அடுத்த ஸ்டேஜ் பற்றி எங்க பேச நேரமிருந்தது. இனி பேசிட்டா போச்சு!”


“நீ லவ்லயே நில்லு! வேற நினைப்புக்கு வரவே வராத. இனி என்னத்த பேசப் போற.”


“அலுத்துக்காதடி… இப்போ என்ன நம்ம குழந்தை பெத்துக்க தயாராகலைன்னு தானே உன் யோசனை? அந்தக் கவலையை நான் பட்டுக்கிறேன். நீ நிம்மதியா இரு. நல்லாச் சாப்பிடு. உன் உடம்பை டேக் கேர் பண்ணு. நீ பயந்துக்கிற அளவுக்கு எதுமில்லை. நம்ம என்ன செய்யுறதுன்னு டிசைட் பண்ணிக்கலாம்.”


அவள் கலக்கமாகத் தெரிந்தாள். அவன் மனைவியின் கவலையைப் புரிந்து கொண்டான். அவன் வேலை, அவள் வேலை… இருவரும் சேர்ந்து இருப்பது எங்கு, எப்படி? அவளுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷன் உடனே கிடைக்குமா? கொஞ்சம் ப்ளான் பண்ணிக் கொண்டால் ஓகே ஆகிவிடும். ஆனால், அதுவரைக்கும்… சில மாதங்களை அவள் தனியாகத்தானே சமாளிக்க வேண்டும்?


அவளுக்காகப் பரிதாபப்பட்டு, ‘ஏன்டா ப்ரிக்காஷன் எடுத்துக்கலை?’ உள்ளே ஒரு குரல் அவனைக் கடித்து வைத்தது.


‘ஞாபகமா வாங்கி வச்சவன் யூஸ் பண்ணாம இருப்பேனா? ஏதோ ஒரு நாள் ஸ்லிப் ஆகி…’ யோசனை போனது வசந்திற்கு.


“ஹலோ” சொடக்குப் போட்டு அவனின் யோசனையை அவள் கலைக்க, “இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டயா? எப்படி… திடீர்னு நீ சொல்லவும் எனக்குமே ரொம்ப ஷாக்! உடனே ரியாக்ட் பண்ணவும் முடியலை.” எமோஷன்ஸ்க்குள்ளே அவனுமே கர கரத்துப் போனான்.


நெகிழ்வுடன் நின்றாள் அவளும். பின்னர், “ம்ம் இப்போ தான் தெரிஞ்சது. இன்னும் ஹோம் டெஸ்ட் கூட பண்ணிக்கலை. பட் ஐ ஃபீல் இட். பீரியட்ஸ் டேட் மிஸ் ஆகியிருக்கு.” என்றாள்.


“ஹோ! எப்படி நீ த்ரீ மன்த்ஸ் மிஸ் ஆனதைக் கவனிக்காம விட்ட சைந்தவி? ஆர் யு ஷ்யூர் அபௌட் திஸ்… ப்ரெக்நென்ஸி தான்னு?” அவன் குழப்பத்துடன் கேட்க,


“இங்க வந்த முதல் மாசத்திலே கொஞ்சமா ஸ்பாட்டிங் இருந்ததுடா. எனக்கு எப்பயாச்சும் அப்படியே ஸ்பாட்டிங் வந்து நின்னுடும். ஏர்லி ஒன்ஸ் ஆர் டுவைஸ் பீரியட்ஸ் வராம கூட இருந்திருக்கு. அதான் நான் இதைப் பெருசா எடுத்துக்கலை. உன் கிட்டயும் சொல்லத் தோணலை. பட் இந்த வாரம் முழுக்க ரொம்ப அன்ஈஸியா இருந்தது. ப்ரெஸ்ட்ல ஏதோ ஹெவி ஃபீல். நேத்தும் இன்னைக்கும் சாப்பிட முடியாம ஒரு மாதிரி த்ரோ அப் ஃபீல்ல சுத்துறேன்.”


“ஒரு மாதிரி இருக்குன்னா கூப்பிட்டுச் சொல்லணும்! நீயே சிரமப்பட்டுக்குவியா? தனியா வேற இருக்க. முதல்ல நீ போய் ஒரு கிட் வாங்கிட்டு வா. இல்லை ஒரு டாக்டரை போய் பாருடி! என்னை அவஸ்தைப்பட வைக்கணும்னே முடிவு பண்ணி வச்சிருக்க நீ!”


“இன்னைக்கு சன் டே. எமர்ஜென்சின்னா தான் டாக்டரை பார்க்க முடியும். வெளியே போய் ஹோம் டெஸ்ட் கிட் வாங்கிட்டு வர்றேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அவஸ்தைப்படு. ஆமா உன்னை டென்ஷன்ல சுத்தவிடணும்னு தான் நினைச்சிருக்கேன்.”


‘எப்படிக் கவனிக்காம விட்டேன்? கல்யாணத்துக்கு முன்னால் பீரியட்ஸ் மிஸ் ஆகிறதும் இப்ப தள்ளிப் போகிறதும் ஒன்னா? இது கூடவா தெரியாது?’ தன் மேலேயே கோபம் கொண்டாள். அதை வெளியே சொல்லாமல் அவனிடம் காய்ந்தவள், தன்னுடைய கிராஸ்பாடி கைப்பையை மாட்டிக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கினாள்.


வசந்த் ஃபோனில் தான் இருந்தான். “என்னை என்னமும் சுத்தவிடு. இப்போ நீ பார்த்து மெதுவா இறங்கு. தட தடன்னு சத்தம் கேட்குது பாரு.” இருப்புக் கொள்ளாமல் அங்கே தவியா தவித்தான்.


“இங்க மரப்படிகள் வசந்த். நான் சாதாரணமா நடந்தாலே சத்தம் வரத்தான் செய்யும். இவ்வளவு துடிக்கிறவன் நேரிலே கிளம்பி வர வேண்டியது தானே? மதுரையில் இருந்திட்டே பத்திரம் சொல்லுற.”


ஆம், வசந்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் மதுரைக்கு மாற்றலாகி இருந்தது. தர்மபுரியில் இருந்து அனைத்தையும் காலி செய்து பேக் பண்ணி இப்போது மதுரைக்கு வந்து செட்டிலாகி இருந்தான்.


“கொழுப்புடி உனக்கு. நாங்க அப்படியெல்லாம் ஈஸியா இண்டர்நேஷனல் டிராவல் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சே நக்கலடிக்கிற பார்த்தியா… நேரந்தான்.” வீடியோ அழைப்பைவிட்டு சாதாரண அழைப்பில் வந்திருந்தான்.


இருவருக்கும் இந்நிமிடங்களைக் கடப்பது எளிதாக இல்லை. அவள் பேருந்து நிறுத்தம் வரும் வரை பேசிக்கொண்டு இருந்தார்கள்.


“அப்புறம் மதுரை சிட்டி எப்படி இருக்கு டா?”


“மதுரைக்கு என்ன சூப்பரா இருக்குடி. ஐயாவுக்கு இங்க வேலையும் வரிசை கட்டுது.”


“அப்புறம் கலெக்டர் சார் வேற எங்க போனீங்க?”


“இன்னும் மீனாட்சியைக் கூட பார்க்கப் போகலைடி. என் பொண்டாட்டி வரட்டும் ரெண்டு பேரும் சேர்ந்து உன்னைப் பார்க்க வர்றோம்னு சொல்லி வச்சிருக்கேன்.”


வசந்த் சொன்னதும் சைந்தவிக்குச் சிரிப்புத் தாளவில்லை.


“என்னடி சிரிக்கிற? வா இங்க வந்ததும் அந்த வாய் என்னத்துக்கு ஆகுதுன்னு பாரு.” மிரட்டினான் அவளை. உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள் சைந்தவி. அனுபவித்தவளுக்குத் தெரியாதா என்ன?


“வசந்த்…” அந்தப் பேர் சொல்லும் விதமே அவளை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது.


ஒன்றிரண்டு வினாடிகளில் பேருந்தும் வர, “கிட் வாங்கிட்டு டெஸ்ட் பண்ணிட்டு அப்புறமா கூப்பிடுறேன் வசந்த். வச்சிடு.” என்றாள்.


“இந்நேரத்திலே டெஸ்ட் செஞ்சா சரியா காட்டுமான்னு அங்க பார்மசிஸ்ட் கிட்ட கேட்டுக்கோ சைந்தவி.” அவசரமாகச் சொல்லிவிட்டே வைத்தான்.


சைந்தவி ப்ரெக்நென்ஸி டெஸ்ட் எடுக்கும் சாதனத்தை வாங்கிக்கொண்டு வரவும் வசந்த் அழைத்துவிட்டான்.


“வாங்கிட்டியா?”


“ம்ம்…”


“இப்பவே பார்த்திடு. காலை வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். முதல் மூணு வாரம் மார்னிங் யூரின்ல பார்த்தா தான் சரியா காட்டுமாம். உனக்கு இப்ப மூணு மாசமே முடிஞ்சிருச்சு. எனி டைம் டெஸ்ட் பண்ணலாமாம். HCG ஹார்மோன் அளவு பொறுத்து இப்படி அட்வைஸ் பண்றோம்னு என் பிரண்ட் ஒருத்தன் சொல்றான். இப்ப ஃபோன் பண்ணி கேட்டேன். டென்ஷனாகாத என்ன…”


“நானும் கூகுள்ல பார்த்திட்டேன். பார்மசிலேயும் கேட்டேன். நீ தான் பேசிப் பேசி என்னை இப்ப டென்ஷன் பட வைக்கிற. இரு பார்த்திட்டு வர்றேன்.”


சைந்தவி சொன்னது சரி தான். வசந்த் தான் இப்போது நிலைகொள்ளாமல் நகத்தைக் கடித்துத் துப்பினான். அவனுடைய அறையை இங்கிட்டும் அங்கிட்டும் நடந்து டைல் டைலாக அளந்தும் கொண்டிருந்தான்.


சற்று நேரத்தில் குளியலறையில் இருந்து வெளிப்பட்ட சைந்தவி மொபைலை தூக்கி அந்தச் சாதனத்தின் மேலே பிடித்துக் காட்டினாள். இருவரும் ஒரே நேரத்தில் அதில் தென்பட்ட இரட்டைக் கோடுகளைப் பார்க்க, அவ்வினாடிகளை எப்படிச் சொல்ல?


“சிந்தும்மா…” உணர்ச்சிவசத்தில் அவனுடைய ரோஸ் நிற உதடுகள் துடிக்க… கண்கள் காதல் சாரலால் பொங்கி வழிந்தன.


சைந்தவி அவனை அணைத்துக்கொள்ள துடித்தாள். அப்படியே கட்டிலில் சாய்ந்து மொபைலில் தெரிந்த உருவத்தைக் கட்டிக் கொண்டாள்.


இருவரும் காற்றில் முத்தங்களைக் கடத்தினார்கள்.


“இதென்ன புதுசா சிந்தும்மா?” கேட்டாள். மனைவியின் சுருங்கிய புருவம் கொடுத்த முக அழகை லவட்டிக் கொண்டான்.


“என் பொண்டாட்டி பேருக்கு அர்த்தம் தெரிஞ்சிட்டு வச்சிருக்கேன் சிந்தும்மா… எப்படி இருக்கு? நான் மட்டுமே கூப்பிட போகும் லவ் நேம் பேபி!” உல்லாசமாகச் சிரித்தான்.


தன்னுடைய சம்மதத்தைக் கண்களில் காட்டி, “அந்த பேபியை நீயும் விட மாட்ட?” அவள் கேட்க,


“நோ பேபியை விட போறதில்லை. யூ டீல் வித் இட் மை பொண்டாட்டி. ஐ’ம் சோ சோ ஹேப்பீ! நான் அன்னைக்குச் சொன்ன மாதிரி நமக்கு ஒரு பேபி வரப் போகுதுடி!”


“டீல் பண்ணிக்கிறேன்! வேற வழி? கலெக்டர் சார் போட்டிருக்க ஆர்டர் ஆச்சே? நீ உளறுறதிலேயே உன் ஆனந்தம் பொங்கி வழியுதே!”


“ஆனாலும் இது சரி கிடையாது!”


“எதுடா?”


“உன்னை கற்பனையிலே இறுக்கி அணைச்சி உம்மாவ இப்பவும் காத்துல தானே அனுப்புறேன்… அந்த நாள் தான் அப்படின்னா கல்யாணம் ஆகியுமா?”


“இரு இரு உன்னை டார்சர் பண்ண வந்துட்டே இருக்கேன் டா!”


“வா வா காத்துட்டிருக்கேன்டி. உன் பித்தமோ சித்தமோ என் வரம்!”


“ச்சீப்ப நிறுத்து! இன்னைக்கு என்ன இவ்வளவு நேரம் கடலை வறுக்கிற? பார்த்து… தீயுற வாடைல இங்க எனக்குப் பிரட்டிட்டு வருது!”


“ஏன் வராது? வரும் வரும்… என் உழைப்பு வீணாகக் கூடாதில்லை? போ போ ரெஸ்ட் ரூம் போயி உவாக் பண்ணிட்டே வா. வெயிட் பண்ணுறேன்.”


“உன்னை!”


“சரி சரி கூல் டவுன் பேபி! எதுக்குடி குட் நியூஸ் சொல்லும் போது அந்த அலட்டு அலட்டுன? அதுவும் நீ சொன்ன விதம்… ஹஹ் ஹஹ்ஹா… நான் தான் காரணமா? ஏன் நீ காரணமில்லையா? நீயும் தான்டி காரணம். நீயும் நானும் சேர்ந்து *** செஞ்சது தான். என்னை மட்டும் தனியா பழிப் போடுவ நீ!” அவளைச் சீண்டினான்.


“ஐய்ய போதும்… விட்டா என்னென்ன பண்ணி இப்படி ஆச்சுன்னு எல்லாத்தையும் சொல்லி இப்போ படம் ஓட்டுவீங்க போல.”


“ஓய் ஃபோன்ல சொல்லி வெத்துப் படத்தை ஓட்ட நான் என்ன நீ கூப்பிட்ட மாதிரி லூஸு கலெக்டரா? நீ நேரிலே வா. இன்னும் வித விதமா லைவ்வா ஓட்டலாம்.” மந்தகாசமாய் ஒரு சிரிப்பை உதிர்த்தான்.


“ச்சீப்ப… எப்பவும் இப்படி க்ரீன் டாக்கா பேச வேண்டியது!” தலையில் அடித்துக்கொண்டாள். அவளுடைய முகச் சுழிப்பையும் இரசித்துக்கொண்டான்.


முறுவலுடன் கேட்டான்… “புருசன் பொண்டாட்டின்னா இப்படித்தான் பேசிக்கணும். வேற எப்படிப் பேசிப்பாங்க?”


“உங்களை…”


“பல்லைக் கடிக்காதடி!”


“கடிச்சா என்ன? என்ன பண்ணுவீங்க? நான் அப்படித்தான் கடிப்பேன். ஈய்ய்ய்… உங்க பிள்ளையை ஹர்ட் பண்ணுமா?”


“நீ இந்த நேரத்திலே டென்ஷென் ஆகாம இரு. அதுக்குச் சொன்னேன். குழந்தைக்கு எது நல்லது எது ஆகாதுன்னு அப்புறமா பேசலாம். இன்னும் மூணு வாரத்திலே இங்க வரப் போறியே. அது வரைக்கும் தனியா சமாளிக்கணும் நீ. நானும் தான் இங்க தனியா கஷ்டப்படணும். எப்படி இந்த மூணு வாரம் போகுமோ!” சோகம் போல் சொன்னான்.


“உங்க கஷ்டம் எதுக்குன்னு எனக்குத் தெரியாதா?” கிண்டலாக அவள் பார்க்க…


“என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது?” ஒரு புருவத்தை ஏற்றி இறக்கியவனை மனத்தில் இரசித்தவள், “பசுமைப் புரட்சிக்குக் கை கொடுத்திட்டு இருந்த கலெக்டர் இப்போ பொண்டாட்டி கிட்ட கடலை போடறதிலே ஆர்வமாகிட்டார். க்ரீன் க்ரீனா பேசுறார்.” என்றாள். அத்தனை குறும்பு அவள் கண்களில்.


“இந்தப் பச்சை டாக்கெல்லாம் ஒன்னுமே இல்லை. நமக்குத்தான் டைம் இல்லை. உன் டயத்துக்கும் என் டயத்துக்கும் வேற ஒத்து வர மாட்டேங்குது. இதுல நம்ம கல்யாணமாகி ஒரே வாரத்திலேயே எனக்கு ‘டாட்டா’ சொல்லிட்டுப் பறந்திட்ட. இதிலே மொத்தமே நமக்குன்னு கிடைச்சது மூணே நாள் தனிமை. இதை வச்சி எவ்வளவு பேச முடியும்?” புருசனாகத் தன்னுடைய ஏக்கத் தாபத்தைக் கொட்டினான்.


அவனைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்திருந்தவள், “அந்த மூணே நாள்! குழந்தையே வந்திருச்சாம்… இது போதாதாம் கலெக்டர் சாருக்கு!” நக்கல் செய்தாள்.


“அதான் பாரேன் உண்மையிலே நீ உண்டாகி இருக்கியா? நம்பவே முடியலை பேபி!”


“போடா ஃப்ராடு! எல்லா மேட்டரையும் செஞ்சிட்டு நம்ப முடியலைங்கிற? சரி எப்ப இந்த பேபி விசயத்தை அத்தை மாமாகிட்ட சொல்றது?”


“லூசு அவங்க கிட்ட எல்லாம் இதைச் சொல்வாங்களா என்ன?”


அவன் கள்ளத்தனத்தைப் புரிந்தவளாக, “உன்னை…” பல்லைக் கடித்தாள்.


“சும்மா சும்மா பல்லைக் கடிக்காதடி! நான் விளையாடுறேன்னு தெரியுதில்ல? நீ முதல்ல இந்த வாரத்திலேயே ஒரு டாக்டரை போய்ப் பாரு. உன் டிராவல் பற்றியும் கேட்டுக்கோ. டாக்டரை பார்த்ததும் வீட்ல சொல்லிக்கலாம். நீயே அம்மாவ கூப்பிட்டுச் சொல்லு.”


“நான் சொல்லணுமா? போடா என்னாலே முடியாது! இதெல்லாம் கூப்பிட்டுச் சொல்ல ஒரு மாதிரி இருக்கு. நீயே அவங்க கிட்ட சொல்லு!”


“சைந்தவிக்கு வெக்கமா? பாருடா… நம்ப முடியலையே!”


“அப்படியெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் எனக்கு இல்லை!”


“அதான் எனக்குத் தெரியுமே!…” ஏதோ அவர்களின் அந்தரங்கத்தை அவன் புட்டு வைத்து பிட் படச்சுருளை ஓட்ட எத்தனிக்க…


“கொன்னுருவேன் வைடா ஃபோனை! அத்த மாமாட்ட நானே சொல்லிக்கிறேன்.” என சைந்தவி கத்த… வசந்த் இங்கே இடது கன்னத்தினுள் நாக்கை முட்டி குறும்பு கொப்பளிக்கச் சிரித்ததைக் காண அவள் அழைப்பில் இல்லை.


“அப்படி வா வழிக்கு! வாரத்துக்கு நாலஞ்சு தடவை மாமியாரைக் கூப்பிட்டுக் கொஞ்சிக்குவா… இந்த நல்ல செய்தியை ஷேர் பண்ண அம்மணிக்குத் தயக்கமாம். யாருகிட்ட? என் அம்மே அவங்க… இப்ப அப்படியா தெரியுது? முழுசா சுருட்டி முடிஞ்சி வச்சிக்கிட்டா!”


அவன் புலம்பலைக் கேட்டு உள்ளே இருந்த மனசாட்சி வசந்த் நக்கலடித்தது… “உன்னையும் தான் அவள் முந்தானையில் மொத்தமா முடிஞ்சி வச்சிருக்கா… த்தூ எதுக்கு இப்ப தண்டமா புலம்புற?”


“புருசனை வச்சிக்கலாம். அது நியாயம்!”


“உங்க அம்மாட்ட அன்பா பழகுறான்னு சந்தோஷப்படு ராசா!” எடுத்துச் சொல்லிக் குட்டி வைத்தது!