Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி | SudhaRaviNovels

மௌனம் பேசியதே - ரிலே ஸ்டோரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
ஏனோ எத்தனை பெண்களிலும் கண்டுக்கொள்ளாத ஒரு உணர்வை அவளறியாமல் அவனுக்கு அளித்துக் கொண்டிருப்பவள், இன்றும் அதேப் போல் அவன் கண்களுக்கு அழகிய சுடிதாரில் ஒப்பனையற்ற முகத்துடன் காட்சியளிக்க, அவனுக்கு ஏதோ ஒன்று வித்தியாசமாகப்பட அவளையே உற்று நோக்கினான்.

அவனின் பார்வை அவளையே சுற்றி வருவதைக் கண்டுக் கொண்டவள், ஒருவித எரிச்சலை முகத்தில் காட்டி, அவன்புறம் திரும்பாமல் அவனை கடந்து சென்றாள்.

கார்த்திக், அவளின் முதுகுபுறம் பரந்து விரிந்திருந்த கூந்தல், அவள் நடைக்கேற்ப அசைந்தாட, அவளை மட்டுமே பார்த்திருந்தான். அப்போது அவள் எதிரே ஒருவன் வர, அவனிடம் தன் கையிலிருந்த சாவியை நீட்டி, உரிய இடத்தில் காரை நிறுத்துமாறு சொல்லிவிட்டு, மேலும் நடந்து அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்தாள்.

அவள் உள்ளே நுழைந்ததும் வெளியே இருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்தவன், தனக்குள் சிரித்து, தன் வாலட்டில் இருந்த ஐபாடை எடுத்துப் பார்த்தான்.

ஒரு சிலருக்கு சிறு வயது பழக்கம் விடாமல் இருப்பது போல், இவளுக்கு கைக்கு அடக்கமான எந்த பொருளையும், கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து சுழற்றும் பழக்கம் போலும்.

லிஃப்ட்டில் வரும்போதே கார் சாவியை இரு விரல்களுக்கு இடையில் வைத்து சுழற்றியதை தான் கார்த்திக் இமைக் கொட்டாமல் ஆச்சரியமாகப் பார்த்தான். பின் நடக்கும் போதும் அவள் அப்படியே செய்துக் கொண்டிருக்க, அவளின் கூந்தலையும், துப்பட்டாவிற்கு பின் பண்ணிய ஸ்டைலையும் வைத்து, சைட் அடிப்பதில் பி.எச்.டி படிப்பவன், அவள் தான் அன்று இரயிலில் பார்த்தவள் என்றும் கண்டுக் கொண்டான்.

இப்போது ஐபாடை எடுத்து,

‘உன் ஐபாட் என்னிடம் வந்தது மாதிரியே, நீயும் என்னிடம் வருவ. வர வைப்பேன்’ என்று தனக்குள் சொல்லிய போது, இன்னொருவன் அவளுடன் வந்தது சரியான நேரத்திற்கு ஞாபகத்திற்கு வந்து ஒரு இனம் புரியா வலியை தந்தது.

‘என் செல்லத்துடன் வந்தவன் யாராக இருக்கும்’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தப் போது,

“ஏப்பா கார்த்திக்!” என்று காந்திமதி அழைத்தது, அவன் காதை சென்றடையவே இல்லை.

“ஏங்க! எப்பவும் ரேடியோவில் பேசி, பேசி இந்த வயசிலேயே அவனுக்கும் காது கேட்கலேயேங்க. எப்படீங்க பொண்ணு வீட்ல கேட்கிறது?” என்று கவலையாக, மாறனிடம் கேட்க,

“என்ன பொண்ணு வீட்லயா?” என்று அடித்து பிடித்து அவர்கள் புறம் திரும்பினான்.

“காது கேட்குதாப்பா? உனக்கும் சேர்த்து அப்பாயின்ட்மென்ட் கேட்கலாம் நினைச்சேன்” என்று காந்திமதி கேட்க, மாறன் நமட்டு சிரிப்பை வெளிப்படுத்த, இருவரையும் முறைத்தான்.

“என்னை டேமேஜ் பண்ண வெளியிலிருந்து யாரும் வர வேணாம்” என்று கார்த்திக் புலம்ப,

“நம்மதான் முதலில் போகணும்டா” என்று மாறன் மௌனிகாவின் அறையைக் காட்ட,

‘அவ்வளவு தானா’ என்பது போல் பார்த்தவன்,

“நான் வரல. நீங்க எல்லாம் கரெக்டா கேட்டுட்டு வந்துடுங்க” என்று மாறனுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்க, அவனை பெற்றவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அங்கிருந்த நர்ஸ் மீண்டும் காந்திமதி பெயர் சொல்லி அழைக்கவும்,

“கூப்பிடுறாங்க இல்ல போங்க” என்று ஒரு அதட்டலுடன் அவர்களை உள்ளே அனுப்பினான்.

‘என்னவாயிற்று இவனுக்கு?’ ஏனென்றால் காலையில் நிமிடத்திற்கு ஒரு சட்டையை, அவன் மாற்றி, மாற்றி துவைக்கும் கூடையில் தூக்கி எறிந்ததைப் பார்த்து, வேலை செய்யும் பெண்ணே சண்டைக்கு வந்து விட்டாள்.

பின் கடைசியாக இந்த சட்டையை தேர்வு செய்து, இவர்களையும் ஒரு வழி ஆக்கி அழைத்து வந்திருந்தான். இப்போது வரவில்லையென்றால்? கடைசி நொடி கூட திரும்பிப் பார்த்து ஒரு வித பயத்துடன், அவன் ஒப்புதலைப் பெற்று தான் உள்ளே சென்றனர்.

ஒரு சிறு தலையசைப்புடன் கூடிய புன்னகையுடன் மௌனிகா அவர்களை அழைக்க, தன் மகன் விரும்பும் பெண் என்பதாலோ என்னவோ, காந்திமதியும் முதல்முறையாக அவளை ரசனையுடன் பார்த்தார்.

அவரைப் பரிசோதித்துக் கொண்டே, ‘இவ்வளவு தூரம் வந்தவன் ஏன் உள்ளே வரவில்லை’ என்றெண்ணியபடியே, இருமுறை வாயிலைப் பார்த்து விட்டாள். அது பெரியவர்கள் கண்களுக்கும் தப்பவில்லை. தங்களுக்குள் அர்த்தத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.

கோகிலா
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Kedi பையன் ah இருக்கான் maa இந்த கார்த்தி பையன் எப்படி எல்லாம் பண்றான் பாருங்க.... Vennum ne ulla varala..... Avalodayathu thaan ipod nu kandupidichitaan..... தீபக் ku athu avan பாத்த கார்த்தி ah இருக்க kudaathunu ninaikiraan.... Super Super maa... Semma episode
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம்-12

கார்த்திக் உள்ளே செல்லவில்லையென்றாலும், அவனுடைய காதும்,மூக்கும்(தொ.மூ.கா. பொ்ப்யூம் வாசனையை மோப்பம் பிடிக்கிறாராம்) மிகவும் விழிப்புடனே உள்ளறையில் இருந்து சத்தத்தை கேட்டிட விழிப்புடனே இருந்தன.

கண்களோ கையில் இருந்த மொபைலை நோண்டிக் கொண்டிருந்ததில் மூச்சை அவ்வப்பொழுது ஆழ இழுத்துக் கொண்டிருந்த கார்த்திக் தன்னருகில் வந்து "ஆர் யூ ஓகே?", என்ற தீபக்கின் குரலைக் கேட்டு தான் அனைவரின் கவனத்தையும் கவருமாறு நடந்து கொண்டது புரிந்தது. தீபக்கை நிமிர்ந்து பார்த்ததும் இருவரின் முகமும் ஒரு நொடி இவனா என்ற பாவனையைக் காட்டியே சாதாரணமானது.

கார்த்திக் தான் முதலில் சுதாரித்தவனாக "ஹலோ டாக்டர்..... எப்படி இருக்கீங்க? அன்னிக்கு பார்த்ததை விட கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க..." என்று தன்னுடைய வாயடித்தனத்தை வஞ்சகமில்லாமல் எடுத்துவிட்டு தீபக்கை தீயாக தகிக்க செய்தான்.

அதையெல்லாம் கண்டுகொண்டால் கார்த்தியின் கெத்து என்னாவது? மீண்டும் பேச வாயை திறந்த கார்த்திக்கை "நீங்கதான் மௌனிகாவை தொந்தரவு பண்றீங்களா?", என்ற தீபக்கின் கேள்வி திகைக்க செய்தது.

தீபக்கும் இதை கேட்க வேண்டுமென்று எண்ணியிருக்கவில்லை.கார்த்திக்கின் கேள்வி ஏற்படுத்திய எரிச்சலில் பட்டென்று கேட்ட பின்னர்தான் தான் தவறு செய்துவிட்டோமோ? என்று யோசித்தான்.

தீபக்கின் கேள்வியில் ஒரு நொடி திகைத்தவன் "நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை என்னை தவிர வேறு யாரும் தொந்தரவு பண்ண முடியாது", என்று கார்த்திக் கூறியதும் "இதை நீங்க மட்டும் முடிவு பண்ணக்கூடாது", என்று தீபக் உரைத்தான்.

"என்ன மச்சான்? இந்த தொ.மூ.கா தான் உர்ருன்னு பேசுதுன்னு பார்த்தா நீயும் இப்படி பேசலாமா?என்ன இருந்தாலும் உன் ஜிகிடி தோஸ்திய கல்யாணம் பண்ணி சாதனை பண்ணப்போற என்னை இப்படி எடுத்தெறிஞ்சு பேசலாமா?

கார்த்திக் கூறியதில் அவனை ஆச்சரியமாக பார்த்த தீபக் "எதை வச்சு இவ்ளோ உறுதியா பேசுறீங்க?", என்று கேட்டதும் "மச்சான்! நானே உங்ககிட்ட பேசணும்... எப்ப எங்க பேசலாம்னு சொல்லுங்க, பேசுவோம், பழகுவோம்", என்று பதிலளித்ததுடன் கார்த்திக் அவனுடைய மொபைலை எடுத்து தீபக் கையில் தந்து அவனது நம்பரை பதிய செய்தான்.

இவர்களிருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காந்திமதியும், மாறனும் வெளியே வந்திட அவர்களிருவருக்கும் தீபக்கை நண்பன் என்று அறிமுகப்படுத்திய கார்த்திக் "ஓகே தீபக்! இன்னிக்கு முழுக்க நான் பிரீ தான்..... எப்ப வேணும்னாலும் கால் பண்ணு", எனக் கூறிவிட்டு பெற்றோருடன் வெளியேறிவிட்டான்.

மௌனிக்காக இவன்கிட்ட இன்னிக்கு பேசியே ஆகணும் என்று தீபக் முடிவு செய்தவனாக மௌனிகாவை சந்திக்க உள்ளே சென்றால் அவளோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள். "என்னாச்சு மௌனி?", என்று கார்த்திக்கை மனதில் இருத்தி கேட்டவனுக்கு "எல்லாம் அந்த லவுட் ஸ்பீக்கர் பண்ணுன வேலைதான்... என்னை யோசிக்க வச்சுடுச்சு", என மௌனிகா அலுத்துக் கொண்டாள்.

"லவுட் ஸ்பீக்கரா?", என்று கேள்விக் குறியாக நிறுத்தியவனுக்கு "எல்லாம் அந்த லொட லொட ஆர்.ஜேவை தான் சொல்றேன்..... வழக்கமா வம்படியா உள்ளே வந்து ஆயிரம் கேள்விகளை கேட்குறவன், இன்னிக்கு அம்மாக்கு எப்படி இருக்குங்குற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம வெளியே வெட்டியா உட்கார்ந்துகிட்டான்" என்று தன்னுடைய இயல்பிலிருந்து புலம்பியவளைக் கண்ட தீபக்கிற்கு அந்த நொடியில் புரிந்து போனது, மௌனிகாவின் மௌனத்தை உடைத்திடும் ஒரே ஆயுதம் கார்த்திக் மட்டுமே என்று.

மேலும் சில நொடிகள் மௌனிகாவிடம் சாதாரணமாக பேசிவிட்டு வெளியில் வந்தவன் செய்த முதல் வேலை அன்று மாலை சந்திக்க வேண்டி கார்த்திக்கிற்கு குறுஞ்செய்தி அனுப்பியதே....

ஹாஸ்பிடலை விட்டு வெளியே வரும் பொழுது "என்னம்மா சொன்னாங்க?", என்றுக் கேட்டு காந்திமதி கூறியதை காதில் வாங்கிக்கொண்ட கார்த்திக், அதன் பின் எதுவும் பேசவில்லை. காந்திமதியும் மகன் மௌனிகாவை பற்றி பேச்செடுப்பானா என்று வீடு வரும் வரை அவனது முகத்தையே பார்த்து கொண்டே வந்தார்
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அம்மாவின் எதிர்பார்ப்பு புரிந்தாலும் அதனை கண்டுகொள்ளாதவன் போன்று வந்த கார்த்திக் தன்னுடைய மொபைலில் தீபக் அனுப்பியிருந்த மெஸேஜை படித்ததும் மனதிற்குள்ளாகவே "கார்த்திக் பேசி ஒருத்தன் முடியாதுனு சொல்லிடுவானா?", என்று தன்னை தானே புகழ்ந்து கொண்ட பொழுது "தொ.மூ.கா சொல்லும்", என்று அவனது மனசாட்சி இடித்துரைத்தது.

" ச்சூ..... நீ சும்மா இரு", என்று அதை அடக்கியவன் வீட்டிற்கு வந்ததும் தன் அறைக்குள் நுழைந்து கொண்டு எந்த டிரஸ் போடுவது என்று ஆராய ஆரம்பித்தான். உள்ளே இவன் குதூகலமாக தயாராகி கொண்டிருக்க வெளியே காந்திமதி நிலைகொள்ளாமல் தவித்து கொண்டிருந்தார்.

"என்னங்க! நான் பிள்ளையார் பிடிக்க போய் அது குரங்காயிடுச்சே..... கலகலன்னு திரிஞ்சுகிட்டு இருந்த பையன் இப்ப சுணங்கி போயிருக்கான்..... அவ்வளவு தூரம் வந்துட்டு அந்த பிள்ளையை கூட ஏறெடுத்து பார்க்காமல் வந்துட்டானே!எல்லாம் என்னால் தான்", என்று புலம்பிய மனைவியை பரிதாபமாக பார்த்த மாறனின் மைண்ட் வாய்ஸ் "உன் பிள்ளையோட தில்லாலங்கடித்தனம் தெரியாம இப்படி புலம்புற", என்பதாகத்தான்இருந்தது.


ஒரு வழியாக உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கார்த்திக் "எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கும்மா.... நான் அங்கேயே சாப்பிட்டுக்குறேன்", எனக் கூறிவிட்டு பதிலை கூட எதிர்பாராமல் பார்க்கிங்கில் வந்து வண்டியை எடுத்தவன், தீபக் குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சென்று காத்திருக்க தொடங்கினான்.

தீபக்கும் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்ததும் கார்த்திக் அவனை மௌனிகாவே வந்தது போல் கட்டி தழுவி வரவேற்றான். இருவரும் அமர்ந்திருந்த காபி ஷாப்பில் இருந்தவர்கள் யாரையும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் தீபக் கூச்சப்பட்டதை யாரும் காணவில்லை.

ஆளுக்கொரு கேப்புசினோவும், சாண்ட்விச்சும் ஆர்டர் செய்து வந்ததும் "சொல்லுங்க தீபக்! என்னை எதுக்கு உங்களுக்கு பிடிக்கலை", என்று கார்த்திக் நேரடியாகவேஆரம்பித்தான்.

தீபக் அதிர்ந்து நோக்கியதில் "அன்னிக்கு அந்த சின்ன பொண்ணை கவுன்செலிங் கூட்டிட்டு போனா நாம செஞ்சது தப்பு, அதான் நம்மள இங்கெல்லாம் கூட்டிட்டு வந்துருக்காங்கனு பயந்துடும்..... அதுவே எடுத்து சொன்னா புரிஞ்சிக்கும் ....அது உங்களுக்கு பிடிக்கலைனு உங்களோட முகத்தை பார்க்குறப்பவே தெரிஞ்சுது", என்று கார்த்திக் கூறியதை கேட்டதும் இவன் லொடலொடன்னு பேசுனாலும் புத்திசாலி தான் என்று தீபக் எண்ணினான்.

" அந்த ஒரு விஷயத்தை வச்சு மௌனிகாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறதை நீ தடுக்க நினைச்சா, சாரி டு சே திஸ் நீ தோத்துடுவ", என்று கார்த்திக் மேலும் பேசியதில் தீபக் வாய்விட்டு சிரித்தே விட்டான்.



"ஓவா் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது....மெளனிய பத்தி உனக்கு என்ன தெரியும்?" என தீபக் கேட்டதற்கு எல்லாத்தையும் தொிஞ்சுகிட்டு இன்டா்வியூ பண்ணி செலக்ட் பண்றதுக்கு மெளனி என்ன என்கிட்ட வேலையா பாா்க்கப் போறா? நான் அவளை லவ் பண்றேன், அதுக்கு அவளோட ப்ளஸ் மைனஸ் எல்லாமே ஒன்னுதான்........ என்று தன் எண்ணத்தை விளையாட்டாகவே கார்த்திக் கூறியதில் தீபக்கிற்கு ஒருவித திருப்தி ஏற்பட்டது.

"ஓகே! கார்த்திக் நீங்க நான் சொல்ற விஷயங்களைக் கேட்டுட்டு எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுங்க....மெளனி சின்ன வயசுல இந்தளவுக்கு சிடுமூஞ்சித்தனமா இருக்க மாட்டா.... அவளோட அப்பா அம்மா ரெண்டு பேரும் ஆக்சிடென்ட்ல இறந்தப்ப அவளுக்கு பத்து வயசுதான்.....

அவளோட சொந்தக்காரங்க எல்லோரும் நல்ல வசதி.....அதனால இவளை பாத்துக்குறதுக்கு யாரும் முன் வரலை.....எங்க வீட்டுல தான் அடுத்த ஒரு வருஷத்துக்கு இருந்தாள். திடீரென ஒரு நாள் அவளோட மாமா வந்து என்னோட தங்கச்சி பொண்ணை வளர்த்து ஆளாக்க வேண்டியது என்னோட கடமை அப்படி இப்படினு டிராமா போட்டு மெளனியை கூட்டிட்டுப் போயிட்டார்...

நாங்க ரெண்டு தடவை நேரா போய் பார்த்தப்ப அவளை நல்லா வச்சிருக்காங்கனு தெரிஞ்சது...அதோட நாங்க அடிக்கடி போனால் அவ அங்க ஒட்டமாட்டா அதனால் நீங்க வராதீங்கனு சொல்லிட்டாங்க...அப்புறம் நாங்களும் போய் பார்க்கவே இல்லை.



திரும்ப மெளனி மெடிக்கல் காலேஜ்ல ஜாய்ன் பண்ணுனப்பதான் பார்க்க முடிஞசது...அப்ப கண்ணுல கொஞ்சம் கூட ஜீவனே இல்லாமல் வெளிறி போன முகத்தோட அவளை பார்த்து பதறிப் போய்ட்டோம்...என்னாச்சுனு எப்படி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டா...

ஒரு நாள் என்னோட அம்மா தான் கொஞ்சம் மிரட்டி பேச வச்சாங்க ...அவளோட மாமா எலக்ஷன்ல நிக்க சீட் கேட்டப்ப சொந்த தங்கச்சி மகளையே பா்ாத்துக்காதவன் எப்படி மக்களுக்கு நல்லது செய்வான் அப்படினு கேட்டதால தான் மெளனியை கூட்டிட்டுப் போயிருக்காங்க...

ஜெயிக்கற வரைக்கும் நல்லா பார்த்துக்குற மாதிரி நடிச்சவங்க அதுக்கடுத்த ஒரு மனுஷியா கூட நடத்தல...எலலாமே லிமிடெட் ஆயிடுச்சு ...அவளுக்கு அவங்களா சாப்பிட தந்தா மட்டும்தான் சாப்பிடனும்...தூங்குற நேரத்துல அளவுக்கதிகமான சத்தத்தை வச்சு தூங்க விடாம செய்றது ...காது பக்கத்துல கத்தி பயப்படுத்துறதுனு எல்லா கொடுமையும் செஞ்சுறுக்காங்க ...

கேட்க சாதாரணமா இருந்தாலும் சின்ன பொண்ணா இருந்த அவ மனசை இதெல்லாம் அளவுக்கதிகமா பாதிச்சுடுச்சு....சத்தம் கொஞ்சம் அதிகமா இருந்தாலோ, யாராவது தொடர்ந்து பேசினாலோ எாிச்சலாயிடுவா....படிச்சு முடிக்குற வரைக்கும் அங்க இருந்து வெளியே வரமாட்டேனு சொல்லி படிப்பு முடிஞ்சதுக்கப்புறம் தான் வெளியேறுனா...

சத்தம்னாலே காத தூரம் ஓடுறவளுக்கும், சத்தம் மட்டுமே வாழ்க்கைனு நினைக்கிற உங்களுக்கும் எப்படி ஒத்து வரும் ?

என்று தீபக் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் அவனது கேள்வியில் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு "ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதா்", என்ற அரத பழைய தத்துவத்தை உதிா்த்தான்.



இவன் என்ன நாம சொன்னதை கேட்டு எந்த ரியாக்சனும் காமிக்கல என்று தீபக் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே "மச்சான் நீ சொன்னதெல்லாம் பாஸ்ட்... முடிஞ்ச விஷயத்துக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது...

ஆனா இனி வர காலம் முழுக்க சத்தமும், மெளனமும் போல எங்களோட வாழ்க்கையை அமைச்சுக்குற திறமை என்கிட்ட அளவுக்கதிகமாகவே இருக்கு.....அதனால் பிடில் வாசிக்காம இப்ப சாப்பிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு வா .....நான் வெளியே வெய்ட் பண்றேன்,முக்கியமான இடத்துக்கு போகனும்" என்று வெளியேறிய கார்த்திக் தீபக்கை பொறுத்தவரை புரியாத புதிராக தெரிந்தான்.



பில் தொகையை செலுத்திவிட்டு வெளியே வந்தவனிடம் "தீபக் எனக்கு மெளனி வீட்டு அட்ரஸ் வேணும். அப்புறம் உன் தோஸ்திகிட்ட பேசுறப்ப என்னோட பாபுலாரிட்டிக்கு பழகிக்க சொல்லு....மீதியெல்லாம் எனக்கு தோணுறப்ப கால் பண்ணி சொல்றேன்...இத்துடன் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கார்த்திக்"

என்று கூறி விடைபெற்றவன் அறியவில்லை சத்தத்தை சங்கீதமாக ரசித்திடும் தான் சத்தமின்றி வாழப் போகும் வாழ்க்கையை...



தீபி
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
125
68
28
Super Super maa.... Mouni romba is paavam thaan.... Karthi romba confident ah இருக்கான்....