முன்பனி காதல் - சுதா ரவி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? போன வருடமும் அதற்கு முந்தைய வருடமும் நமக்கு கற்றுத் தந்த பாடம் ஏராளம்....கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி மனதளவில் சோர்ந்து போய் இருந்த நமக்கு போன வருடத்தின் இறுதியில் சற்று ஆசுவாசம் கிடைத்தது. நிறைய இழப்புகள், வலிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை என்று பலருக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கி அதையும் கடந்து வரும் மனோதிடத்தை கொடுத்தது . இந்த நிலை மாறும் என்கிற நம்பிக்கையுடன் புதிய வருடத்தில் அடியெடுத்து வைப்போம்.

இந்த பொங்கல் திருநாளில் புதிய கதைக்கான அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். இந்தக் கதை காதலிக்கும் இருவருக்கு இடையே எழும் போராட்டத்தை சொல்லும் கதை.. வாசகர்களான உங்களுக்கு சிறப்பு பரிசுகள் அறிவிக்கபடுகின்றது.

இக்கதையினை தொடர்ந்து படித்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்து தெரிவிக்கும் மூவருக்கு எனது இரண்டு புத்தகங்கள் பரிசாக தரப்படும். தளத்தில் [பதிவிடப்படும் கருத்துகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

அடுத்து கதை முடிந்ததும் போடப்படும் மூன்று விமர்சனங்களை தேர்ந்தெடுத்து எனது புதிய புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.

ஜனவரி இறுதியிலிருந்து இந்த கதைக்கான அத்தியாயங்கள் பதிவிடப்படும்.


 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,652
1,596
113
முன்பனி காதல் – சுதா ரவி

ஏன்?

என் காதல் அத்தனை எளிதாக போய் விட்டதா?

ஏனடி என்னை விட்டு விலகி நிற்கின்றாய்?

எதை நான் கொடுத்தால் உன்னில் எழுந்த கோபம் அடங்கும்?

கால்களை அகல விரித்து பாகெட்டினுள்ளே கைகளை வைத்தபடி மேகங்களை பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம் பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. எத்தனை ஆசைகளை சுமந்து கொண்டு அவள் முன் சென்று நின்றான்.

ஒற்றை பார்வையில் எப்படி தூர நிறுத்த முடிந்தது? அவளின் பார்வையை நினைத்த போது உடல் தன்னையும் அறியாமல் விரைத்துக் கொண்டது. அவள் கண்களில் தெரிந்த வெறுப்பு அவனுள் பூகம்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

அவனது இந்த வேதனைக்கு காரணமானவளோ மனதிலிருந்த பாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தனது வேலையில் கவனத்தை செலுத்த முயன்று கொண்டிருந்தாள். ஆனால் என்ன முயன்றும் கண்முன்னே அவன் முகமே வந்து போய் கொண்டிருந்தது.

அதை புறக்கணித்து வேலை செய்ய முயன்று முடியாமல் போக, “ச்சே!” என்று மேஜையை ஒரு தட்டு தட்டிவிட்டு எழுந்து நின்றவளை குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தாள் தான்யா.

சிறிது நேரம் கழித்து “ஏன் அக்கா இந்த தவிப்பு? எதுக்கு இந்த பிடிவாதம்? நீ வேண்டாம்னு நினைச்சாலும் உன் மனசுக்கு அது புரியணுமே? அப்படி இருக்கும் போது விட்டுக் கொடுத்து போகலாமே?”

தங்கையை முறைத்து “எதை விட்டுக் கொடுக்க சொல்ற தான்யா? காதலுக்காக தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழ்வதை விட காதலை விட்டுக் கொடுப்பதில் தப்பில்லை”.

அக்கா மதுவர்ஷினியின் தோள்களை அழுந்தப் பற்றி “தினம்-தினம் நீ படுகிற கஷ்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விட்டுக் கொடுக்கிறேன்னு சொல்றது ஈஸி. ஆனா ஒவ்வொரு நாளும் உன் நினைவுகளோட நீ செய்து கொண்டிருக்கும் போராட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன் அக்கா. சித்தார்த்துக்கு தெரியாம நாம எங்கேயாவது போய்விடுவோம். அவரும் கஷ்டப்பட்டு நாமளும் வேதனைப்பட்டு எதுக்கு இந்த வாழ்க்கை?”

நீண்ட பெருமூச்சுடன் “அப்படித்தான் செய்யணும். ஆனா சித்தார்த் நம்மள கண்கானிச்சிட்டே இருப்பார். நாம எங்கே போனாலும் அவருக்கு தெரியாம போகாது”.

“ம்ம்...தி கிரேட் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு எதுவும் சாத்தியம்”.

சுருங்கிய நெற்றியுடன் “இதை தொடர விடக் கூடாது தான்யா. நீ சொல்றது போல நாம கண்காணாத இடத்திற்கு போய் விடுவோம். எப்படியாவது அவரிடம் இருந்து விலகியே ஆகணும்” என்றாள் உறுதியான குரலில்.

746
 
  • Wow
Reactions: Chitra Balaji