மாறாதோ எந்தன் நெஞ்சம்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
453
130
63
"மாறாதோ எந்தன் நெஞ்சம்"

மண்ணின் மகிமையுடன் ,மங்கையின் மனது மன்னவனிடம் மயங்கிடுவதை யாழ் சத்யா உங்களின் வழக்கமான வித்தியாசமான நடையில் தந்தமைக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.

சாகரி சுதனின் நட்பில் இருந்த அழுத்தமும், அன்பும் அசைக்க முடியாத ஆனந்தத்தை அளித்தது. பூனைக்கண்ணன் பாவை உள்ளத்தில் புகுந்தானா? இல்லை பேதையின் புத்தியில் புகுந்திட்டானா? என நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை .

தன்னை காத்திட உயிர் நீத்த உறவில்லாத உயிரினை உள்ளத்தில் புகுத்தி உன்னத துறவி நிலையில் வாழ்ந்த சாகரியின் மென்னுள்ளம் மேனி சிலிர்த்திட செய்கிறது.


பெண்ணே நுவானின் நுண்ணுர்வும், நூதனமும் நகமும்சதையுமாக இருந்த நன்னுயிர் நீத்திட்டதை அறிந்த மீளாத்துயர நொடியை மிகவும் நுட்பமாக கொடுத்தது புருவக் குறியீட்டை மேலேற்றுகிறது.

மங்கையின் காதலும் ,மன்னவனின் புரிதலும் மாற்றியது அவர்களின் நெஞ்சத்தை மட்டுமல்ல மதி கிறங்கி படிப்போரின் நெஞ்சத்தையும் தான்.

விதியால் வீட்டை இழந்து வாழும் ஈழ தேசத்தில் மதி கெட்ட மானுட பதர்கள் மென்மொட்டுகளை கசக்கி எறிந்திடும் வலியினை மாற்றும் வழியறியா நிலையில் வித்யாவின் வலி விழிநீராக மண்ணில் விதைகின்றது .
மிகவும் அருமையாக உள்ளது சத்யா.

யாழினையும், யுவதிகளின் இன்னல் கலந்த இக்கால வாழ்க்கையையும் தங்களின் எழுத்தில் மேலும் மேலும் அளித்திட வாழ்த்துகிறேன்.

மாறதோ
எந்தன் நெஞ்சம்
மனதை
மெழுகாக்கிடும்
மயிலிறகு!