"மலரினும் மெல்லிய"

Kripnythaa

Moderator
Mar 26, 2018
450
127
63
"மலரினும் மெல்லிய"

மலர் போன்ற மென்மையான மனம் மங்கைகளுக்கு என்று கூறுபவர்களுக்கு மலரினிடை விட மெல்லியவர்கள் மழலைகள் என்பதை அழகிய எளிய நடையில் தந்தமைக்கு வாழ்த்துகள்.

சஹியின் பிடிவாதமும், அர்த்தமற்ற கோபமும் ஒரு வித ஆதங்கத்தை ஏற்படுத்திய பொழுதும், நேஹாவின் மீதான பாசமும் ,ஆழ் மனதில் புதையுண்ட சஹியின் கடந்த கால கசடுகளும், கட்டாயமாக சமுதாயத்தில் வெட்டியெறிய வேண்டிய களைகளின் முன்பாக அவள் முன்னேறிய விதம் பாராட்டப்பட வேண்டியதே!

ஆதியின் பாசமும் ,காதலும் தேவையான இடங்களில் அழுத்தமாகவே பதிந்துள்ளது .அனைத்தையும் விட மழலைகள் பற்றிய சஹானாவின் உரை மனதை கலங்க செய்தது.

உண்மைதானே! நமக்கு நடக்கும் சில நரக வேதனைகளை மனதில் சமூக போலி வேடத்திற்கு பயந்து பூட்டி வைத்து கொள்வதுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். இன்றைய நிலையில் நடைபெறும் நிகழ்வுகளை அருமையாக காட்டியமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

மலரினும்
மெல்லிய
மனதை
மீட்டும்
மழலையின்
மகிழ்ச்சி !
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,559
1,118
113
அருமை தீபி.....எனக்கும் ரொம்ப பிடிச்சுது ஹேமா கதை.......வாழ்த்துக்கள் ஹேமா!
 
  • Like
Reactions: Hema Jay

Hema Jay

New member
Sep 24, 2018
2
0
1
நன்றி தீபி! ரொம்ப சந்தோஷம். தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் எல்லா கதாபாத்திரங்களையும் தொட்ட நிறைவான விமர்சனம்! Happy to know how the story line is perceived.

குட்டிக் கவிதையாய் கடைசி வரிகள். 'மலரினும் மெல்லிய' உங்கள் மனதை மீட்டியதில் மிகுந்த மகிழ்ச்சிப்பா!
 

Hema Jay

New member
Sep 24, 2018
2
0
1
அருமை தீபி.....எனக்கும் ரொம்ப பிடிச்சுது ஹேமா கதை.......வாழ்த்துக்கள் ஹேமா!
ரொம்ப ரொம்ப நன்றி சுதாக்கா !