Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பாசப்பறவைகள் - கதை திரி | SudhaRaviNovels

பாசப்பறவைகள் - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
அத்தியாயம் – 4

அடுத்த வாரம் எந்தவித குழப்பங்களும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது. பாக்கி சஞ்சனா பேசியதை மனதில் வைத்துக் கொண்டு அந்த வாரம் வீட்டிற்கு வராமல் இருந்தாள். அவளது கணவனுக்கு அது உலக அதிசயமாக தெரிந்தது.

என்னாவாயிற்று இவளுக்கு? ஊரில்லாத அதிசயமாக அம்மா வீட்டிற்கு போகாமல் இங்கேயே இருக்கிறாளே என்று எண்ணினானே தவிர அவளிடம் வாய் விட்டு கேட்கவில்லை. அவள் தங்கள் வீட்டில் இருப்பதை மனதிற்குள்ளேயே ரசித்தான்.

வைதேகிக்கு தான் சிறு உறுத்தல் எழுந்தது. சஞ்சனா பேசியதால் தான் பாக்கி வராமல் இருந்து விட்டாளோ என்றெண்ணி புழுங்கிக் கொண்டிருந்தாள். வசந்தியும் மகளை காணாமல் வைதேகியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்நேரம் அங்கே வந்த சஞ்சனாவை சமயலறைக்கு அழைத்துச் சென்று “பாரு சஞ்சு! நீ பேசியதில் பாக்கி இந்த வாரம் வரவே இல்லை” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

அவரை அதிசயமாக பார்த்த சஞ்சு “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள்.

என்னவென்று புரியாமல் “கேளு சஞ்சு” என்றார்.

“நீங்க கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்ததில் இருந்து எத்தனை தடவை உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திருப்பீங்க?” என்றாள்.

என்ன இது சம்மந்தம் இல்லாத கேள்வி என்கிற யோசனையுடன் “வருஷத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ போயிட்டு வருவேன்” என்றார்.

அவரை பார்த்து சிரித்தவள் “பாக்கி அக்கா மாசத்துக்கு நாலு முறை இங்கே வருவாங்க. முக்கியமா சொல்லனும்னா மாசத்துல பாதி நாள் இங்கே தான் இருப்பாங்க” என்றாள்.

“அது உள்ளூரில் இருக்கிறதுனால” என்று இழுத்தார்.

அவரை கூர்ந்து பார்த்தவள் “நீங்க உள்ளூரில் இருந்தா இப்படித்தான் உங்கம்மா வீட்டுக்கு போவீங்களா?” என்றாள்.

பேச்சு போகும் திசையை உணர்ந்து கொண்டவர் “இதென்ன பேச்சு சஞ்சு. ஏற்கனவே நீ சொன்னதில் தான் அவ வரலேன்னு மனசு கஷ்டமா இருக்கு” என்றார் கண்டிப்புடன்.

“எங்க அண்ணனுக்கும் வாழ்க்கை இருக்கு. அதை அவங்க புரிஞ்சுக்க நீங்களும் உதவனும்” என்றாள்.

அதைக் கேட்டதும் சட்டென்று வாயை மூடிக் கொண்டார். அதோடு வசந்தியும் வந்துவிட, அந்த பேச்சை விட்டுவிட்டு மற்ற வேலைகளை தொடர்ந்தனர்.

காலை சாப்பாட்டு வேலை நடக்க, ஒவ்வொருவராக சாப்பிட வந்தனர். வந்தனாவும் மற்றவர்களுடன் இணைந்து வேலையைப் பார்க்க, சாப்பாட்டு மேஜை கலகலவென்று ஆனது.

ராஜாராமன் குளித்து முடித்து பக்தி பழமாக மேஜையில் வந்து அமர, ரகுவும் சதீஷும் அவர் அருகில் வந்து பவ்யமாக அமர்ந்தனர்.

பெரியவர் வேலையைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு பதிலளித்துக் கொண்டே சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்தான் ரகு. அதை கவனித்துக் கொண்டிருந்த வந்தனாவிற்கு உள்ளுக்குள் எரிச்சல் வந்தது. தான் ஒரு நாள் ஆசையாக சமைத்தாலும் இப்படி சாப்பிடாதவன் அண்ணி கையால் சமைத்த உணவை மூக்குப் பிடிக்க சாப்பிடுவதை கண்டு கடுப்பானாள்.

உணவருந்திக் கொண்டே தோழியின் முகத்தை கவனித்த சதீஷுக்கு அண்ணனுக்கு ஆப்பு ரெடியாவது புரிந்தது. தன்னால் முடிந்த உதவியை அண்ணனுக்கு அளித்திட முடிவு செய்தவன் “என்ன அண்ணி அண்ணன் சாப்பிடுறதை அப்படி பார்க்குறீங்க?” என்றான் கிண்டலாக.

கணவன் மேலிருந்த கடுப்பில் சதீஷ் கேட்டதும் “உங்க அண்ணனுக்கு என் சமையலைத் தவிர, மற்றது எல்லாம் பிடிக்கும்” என்றாள்.

அவர்களின் பேச்சில் கவனத்தை திருப்பிய ராஜாராமன் சதீஷின் திருவிளையாடலை புரிந்து கொண்டார். மெல்லிய சிரிப்புடன் அவனிடம் “உன் தட்டை பார்த்து சாப்பிடு சதீஷ்” என்றார்.

ரகுவோ அவனை முறைத்து விட்டு மனைவியைப் பார்த்து “நல்லா இருக்கிறதை தானே நல்லா சாப்பிட முடியும்” என்று கூறி தன் தலையிலேயே தணலைக் கொட்டிக் கொண்டான்.

எல்லோர் முன்பும் அவன் அப்படி சொன்னதில் அதிர்ந்து போனவள் கண்கள் கலங்க வேகமாக அங்கிருந்து தங்கள் அறைக்கு ஓடினாள்.

வைதேஹி அவர்களின் பேச்சில் கடுப்பாகி “என்ன ரகு பண்ணி வச்சிருக்க! சதீஷ்! உனக்கேன் இந்த வேலை? பாவம் அவ அழுது கிட்டே போறா” என்று கடிந்து கொண்டார்.

சதீஷோ குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ரகுவும் அவள் அழுது கொண்டே சென்றதைப் பற்றி கவலைப்படாமல் சாப்பிட்டு முடித்து அண்ணனுடன் ஆபிஸ் செல்ல கிளம்பினான்.

அவனை வழிமறித்த வைதேஹி “ரகு! முதல்ல போய் அவளை சமாதானப்படுத்திட்டு அப்புறமா கிளம்பலாம்” என்றார் கண்டிப்புடன்.

ராஜாராமனும் அதை ஆமோதித்து “நீ பேசிட்டு வா ரகு. நானும் சதீஷும் கிளம்புறோம்” என்றார்.

அவர் சொன்னதும் வேறுவழியில்லாமல் தலையை ஆட்டியவன் தங்களது அறைக்குச் சென்றான். அண்ணனுடன் அவசரமாக வெளியேற முயன்ற சதீஷை நிறுத்திய வைதேஹி “இனிமே இது மாதிரி பேசாதே சதீஷ். நீ கிளப்பி விட்டுட்ட இப்போ ரகு தான் கஷ்டப்படுறான் பாரு” என்றார்.

வைதேஹியை பாவமாக பார்த்து “அண்ணி அண்ணனை முறைச்சிட்டே இருந்தாங்க அது தான் கேட்டேன்” என்றான்.

ராஜாராமன் அவனை திரும்பி பார்த்து “கணவன், மனைவி உறவுக்குள்ள நாம நுழையக் கூடாது சதீஷ். நமக்குன்னு எல்லைகள் இருக்கு” என்றவர் “வா போகலாம்” என்றார்.

அவர் சொன்னதை புரிந்து கொண்டவன் மௌனமாக அவரின் பின்னே சென்றான்.

வந்தனாவை சமாதானப்படுத்த அறைக்குள் சென்றவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. தன்னையே மனதிற்குள் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான். உனக்கு வாயில வாஸ்து சரியில்லடா ரகு. அந்தப் பய தான் கிளப்பி விட்டானா உனக்கு எங்கே போச்சு அறிவு? என்று திட்டிக் கொண்டே “வந்து! வந்தும்மா” என்று குழைந்து கொண்டே கூப்பிட்டான்.

படுக்கையில் குப்புற படுத்து அழுது கொண்டிருந்தவளோ அவனது குரலைக் கேட்டவுடன் “வெளியே போ ரகு! பேசாதே! இருக்கிற கடுப்பில் எதையாவது எடுத்து அடிச்சிடுவேன்” என்றாள் கண்களை துடைத்தபடி.

அவள் சொன்னதைக் கேட்டு உள்ளுக்குள் பயந்தவன் அதை மறைத்துக் கொண்டு “வந்து செல்லம்...அதெல்லாம் சும்மா சொன்னதுடா...எனக்கு உன் சமையல் ரொம்ப பிடிக்கும் டா” என்றான் மெல்லிய குரலில்.

அவனை கடுமையாக முறைத்து “நானென்ன கேனையா? அங்கே எல்லோர் முன்னாடியும் நல்லா இருந்தா சாப்பிடுவேன்னு சொல்லிட்டு இங்கே வந்து ஐஸ் வைக்கிறியா?” என்றாள் கடுப்பாக.

மெல்ல அவளருகில் நெருங்கி “இல்லடா! அதெல்லாம் சதீஷுக்காக சொன்னது. உன்னை கலாய்ச்சா அவனுக்கு சந்தோஷம்” என்றவனை கேவலமாக ஒரு லுக் விட்டு “இப்படி சொல்ல வெட்கமா இல்ல?” என்றாள்.

மேலும் அருகில் நெருங்கியவன் சற்றே தைரியத்துடன் அவள் கைகளைப் பற்றி “சாரி டா! இனிமே இப்படி செய்ய மாட்டேன்” என்றான்.

அவன் சொல்லி முடிக்கவும் பக்கத்தில் வைத்திருந்த தண்ணி பாட்டிலை எடுத்து நடு மண்டையில் நச்சென்று வைத்தாள்.

அதை எதிர்பார்க்காதவன் ‘உஸ்’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு “ராட்சசி! உன் கிட்ட பேச வந்த என்னை சொல்லணும்” என்று வலியில் முகத்தை சுளித்தான்.

“எல்லோர் முன்னாடியும் கேலி பண்ணிட்டு தனியா வந்து சமாதனப்படுதினா நான் தலையை ஆட்டிக்கிட்டு ஒத்துக்குவேன்னு நினைச்சியா. இனிமே தான் உனக்கு இருக்கு. மதியத்துல இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு என் கையால சமைச்ச சாப்பாடு தான். அண்ணி சமைச்சதை நீ சாப்பிடக் கூடாது” என்றாள்.

அதுவரை இதை பெரிய பிரச்சனையாக கருதாத ரகு மனதிற்குள் அலறி விட்டான். ஓரிரு நாட்களே தாங்க முடியாத சமையலை ஒரு வாரம் சாப்பிடுவதா? சதீஷை தாளித்து எடுத்தான். இவனால தான் எல்லாம். அவ முகத்தை எப்படி வச்சிருந்தா என்ன? இப்போ என்னை கோர்த்து விட்டு அவன் நிம்மதியா கிளம்பிட்டான் என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

அவளோ “சரி சரி கிளம்புங்க...நான் மதியம் சமைச்சு அனுப்புறேன்” என்று கூறி விட்டு அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

சதீஷின் மீது கொலைவெறியோடு கடைக்குச் சென்றான். போகும் வழியில் இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பலவாறு யோசித்துக் கொண்டே சென்றான். இறுதியில் அருமையான தீர்வு கிடைத்தது.

சதீஷோ கடைக்கு வந்ததும் ரகு தன்னிடம் எகிருவான் என்று எதிர்பார்த்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். அவன் இஷ்டத்திற்கு விட்டுப் பிடித்த ரகு மதியம் உணவு வந்ததும் வந்தனா தனக்காக ஸ்பெஷலாக கொடுத்தனுப்பியதை சதீஷிற்கு எடுத்து வைத்து விட்டு காத்திருந்தான்.

மதிய உணவிற்காக உற்சாகமாக வந்தவன் ரகு தனக்காக காத்திருப்பதை கண்டதும் அமைதியாக வந்தமர்ந்தான்.

வைதேஹி கொடுத்தனுப்பியதை தனக்கும் ரகுவிற்கும் எடுத்து வைத்துக் கொண்டு வந்தனா கொடுத்தனுப்பியதை அவன் புறம் நகர்த்தி வைத்தான்.

“என்னதிது”

தம்பியை நக்கலாக பார்த்து “என் பொண்டாட்டி சமைச்சு அனுப்பி இருக்கா. இன்னும் ஒரு வாரத்திற்கு உனக்கு அவ அனுப்புற சாப்பாடு தான்” என்றான்.

ரகுவை பார்த்து முறைத்தவன் வைதேஹி கொடுத்தனுப்பியதை தன் பக்கம் இழுக்க முயல “உங்க பொண்டாட்டி அனுப்பியதை நீங்க தான் சாப்பிடனும். நான் ஏன் சாப்பிடனும்” என்றான்.

இருவரின் போராட்டத்தையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த ராஜாராமன் “என்ன பண்றீங்க ரெண்டு பேரும்?” என்றார்.

“அண்ணா நீங்களே சொல்லுங்க நியாயத்தை? காலையில அண்ணன் அண்ணியை பேசினது தப்பு. அதுக்கு அவங்க தண்டனை கொடுத்திருக்காங்க. அதனால அதை சாப்பிட வேண்டியது அண்ணன் தானே?” என்றான் சதீஷ்.

இருவரையும் மாறி மாறி பார்த்தவர் “எதுக்கு இப்போ அடிச்சுகிறீங்க? அதை கொடுங்க நானே சாப்பிடுறேன்” என்று கையை நீட்டினார்.

அதில் இருவரும் பயந்து போய் “வேண்டாம் அண்ணா...நாங்களே பார்த்துக்கிறோம்” என்றனர்.

அவர் மௌனமாக தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார். அதற்கு மேலும் பிரச்னையை பெரிது செய்யாது ரகு வந்தனா கொடுத்தனுப்பிய உணவை எடுத்து வைத்து சாப்பிட முயன்றான்.

அவன் மேல் இருந்த கடுப்பில் உப்பு தூக்கலாகவும், காரம் தூக்கலாகவும் போட்டு அனுப்பி இருந்தாள். அதை இருவரிடமும் காட்டிக் கொள்ளாது கஷ்டப்பட்டு உண்டு முடித்தவன் அவசரமாக வாஷ் ரூம்மிற்கு சென்று தண்ணீர் அடித்து வாயைக் கழுவிக் கொண்டான்.

‘பாவி! பாவி! நல்லா வச்சு செஞ்சிட்டா’ என்று திட்டிக் கொண்டே வெளியேறினான்.

அவனுடைய மனது வேலையில் மூழ்க விடாமல் மதியம் சாப்பிட்டதையே எண்ணி அலறிக் கொண்டிருந்தது. இரவிற்கும் இப்படியே சாப்பிட வேண்டும் என்றால் ஒரு வாரத்திற்குள் தனது நிலை என்ன என்று பயந்து போனான்.

அவனது மூளை கடுமையாக யோசிக்க ஆரம்பித்தது. எப்படியாவது இரவு வேறு வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்.

மாலை வேலை முடிந்து ராஜாராமனும், சதீஷும் கிளம்ப “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க ரெண்டு பேரும் போங்க” என்று கூறி அனுப்பி வைத்தான்.

அவர்கள் சென்றதும் அவசரமாக கிளம்பியவன் நேரே சென்றது ஒரு நல்ல ஹோட்டலுக்கு. செம பசியில் இருந்தவன் பல் வேறு விதமான ஐட்டங்களை ஆர்டர் செய்தது சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான்.

சுமார் எட்டு மணியளவில் வீட்டிற்கு சென்றவன் குளித்து முடித்து வந்தவன் “எனக்கு வயிறு கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கு. நைட் சாப்பாடு வேண்டாம்” என்று கூறினான்.

வந்தனாவோ மதியம் தான் அனுப்பியதை சாப்பிட்டு தான் அவனுக்கு இப்படி இருக்கிறது என்றெண்ணி மகிழ்ந்து போய் ‘மவனே! என்னை காலாய்க்கிரப்ப நல்லா இருந்தது இல்ல. இப்போ அனுபவி’ என்றெண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அவனோ நன்றாக உண்ட களைப்பில் படுத்து விட்டான்.

வந்தனா வருவதற்குள் மதியம் நடந்ததை வைதேஹியிடம் போட்டுக் கொடுத்திருந்தான் சதீஷ். அதில் வந்தனா மேல் கோபத்தோடு இருந்த வைதேஹி அவள் வந்ததும் “ரகு எங்க வந்தனா?” என்றார்.

“அவங்களுக்கு வயிறு என்னவோ பண்ணுதாம் அக்கா. அதனால படுதுட்ட்டாங்க” என்றாள்.

அவளை முறைத்த வைதேஹி “மதியம் என்ன செஞ்சு கொடுத்த?” என்றார்.

அவர் கேட்டதும் பயத்துடன் கையைப் பிசைந்தவள் “நல்லா தான் செஞ்சு கொடுத்தேன் அக்கா” என்றாள்.

அவளை முறைத்தவர் “இங்கே பார் வந்தனா! வீட்டு ஆம்பளைங்க நமக்காக உழைக்கிறாங்க. அவங்க வயிற்றை காயப் போடாம சத்தான உணவா கொடுக்கணும். அதை விட்டுட்டு நம்ம கோபதாபங்களை எல்லாம் அவங்க சாப்பாட்டில் காட்டக் கூடாது” என்றார்.

தான் செய்த தவறின் அளவை உணர்ந்தவள் தலையைக் குனிந்தபடி “சரிக்கா” என்றாள் குற்ற உணர்வுடன்.

அதன்பின் இரவு வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்கு திரும்பியவள் அசந்து உறங்கும் ரகுவை பார்த்து மனதிற்குள் வருத்தம் எழுந்தது. மதியம் எப்படி அந்த காரமான உணவை சாப்பிட்டு கஷ்டப்பட்டானோ என்று வருந்தினாள்.

சதீஷோ சஞ்சனாவிடம் சிக்கி இருந்தான்.

“எதுக்கு காலையில ரகு அத்தானை மாட்டி விட்டீங்க?”

அவனோ அவளது கேள்வியில் கவனத்தை வைக்காமல் அவளுடன் இழைந்து கொண்டே “அடியே! காலையில இருந்து இப்போ தான் உன் கூட இருக்க டைம் கிடைச்சிருக்கு. இப்போ எதுக்கு அந்தப் பேச்சு” என்றான்.

அவனது கையில் ஒரு அடியைப் போட்டு “இன்னொரு தடவை இப்படியொரு வேலையைப் பார்த்தீங்க. வந்தனா அண்ணி மாதிரி நானும் மிளகாய் தூளை அள்ளிப் போட்டு சமைச்சு கொடுத்திடுவேன்” என்றாள்.

அதைக் கேட்டதும் ரகுவின் நிலையை எண்ணி அதிர்ச்சி அடைந்தவன் “அடபாவமே! அந்தப் பிசாசு இப்படியா பண்ணுச்சு” என்றான் தன்னை மறந்து.

அதைக் கேட்டவள் “என்ன இது! அண்ணியை பிசாசுன்னு சொல்றீங்க” என்று முறைத்தாள்.

அப்போது தான் வாய் விட்டு சொன்னதை எண்ணி விழித்தவன் “ஐயோ செல்லம்! உன்னை சொல்ற மாதிரி அவங்களை சொல்லிட்டேன்” என்று கூறி தலையில் கொட்டு வாங்கிக் கொண்டான்.
 
  • Like
Reactions: lakshmi

பாசப்பறவைகள்எபி - 5

நீங்க என்ன இங்க விருந்தினர் விடுதியா நடத்தறீங்க?” உள்ளே வருவதற்குள் கடுப்பாய் கேட்ட வந்தனாவை முறைத்தவன்,

நாலு பேரோட பிறந்திருந்தா உனக்கு பந்தபாசம் எல்லாம் என்னன்னு தெரிந்திருக்கும்.ஒன்டியா ஒத்தையா பிறந்த உனக்கு இதெல்லாம் புரியாது-டிஎன்றான் எரிச்சலாய்.

அப்பா சாமி... போதும் உங்க பந்தபாச பிரதாபங்கள். இங்க ஏற்கனவே நாலு குடும்பம். இது போதாதுன்னு நிரந்தர விருந்தாளியாக உங்க சின்ன அக்கா, அவங்களுக்கு பதிலா அவங்க சொந்தக்காரங்களை மாசாமாசம் அனுப்பிவிடும் உங்க பெரிய அக்கா முடியலடா சாமி! சத்திரம் சாவடி போல எப்போ பார்த்தாலும் இந்த வீட்டில் கஜகஜன்னு ஒரே கூட்டம். இந்த வாரம் வில்லங்கம் வண்டி கட்டிட்டு வரலையேன்னு அப்படி கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.அது பொறுக்காம உங்க பெருசு புண்ணியம் கட்டிக்கிச்சுஎன்று வாய் மூடாமல் புலம்புபவளை எப்படி அடக்குவது என புரியாது விழிபிதுங்கியவன்,

எங்க அக்காக்களை இழுக்கலைன்னா உனக்கு தூக்கமே வராதா-டிஎன்று கேட்டான் பரிதாபமாய்.

ஐய்ய.. இழுத்ததும் பீஸ் மூட் தரும் லவேண்டேர் பர்ஃபூம் உங்க அக்காங்க! அதான் சும்மா சும்மா இழுக்கறேன்என்று கன்னத்தை இடது தோள்பட்டையில் இடித்துக் கொண்டவளை பார்த்தவன்,இதற்குமேல் வாயைத்திறந்தால் பெரிய கலவரம் நடக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்திருந்த ரகு அமைதியாக வேறுபுறம் திரும்பிக்கொண்டு வெளியே செல்வதற்கு உடைகளை அணிந்தான். அவனின் மவுனம் இவளை இன்னும் உசுப்பேற்றிவிட வேகமாக சென்று அவனின் தாடையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவள்,

நீங்க என்னப் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது.இன்னைக்கு நைட்டுகுள்ள அந்த ரெண்டு டிக்கெட்டையும் வண்டி ஏத்தறீங்க....இல்லன்னா நான் நாளைக்கு காலையில எங்க வீட்டுக்கு வண்டியேறிடுவேன்என்று மிரட்டல் விடுத்தாள்.

அதைக் கேட்டு அவளை மிரண்டுப்போய் பார்த்தவன், “அது எப்படி வந்தும்மா இன்னைக்கே ஊருக்கு அனுப்பமுடியும்? அவங்க வந்த வேலை...என்று கையை பிடித்தவனை வெடுக்கென உதறிவள்,

ஹாங்... அவங்க இந்த ஒருவாரமா செய்த வேலையைத்தான் நான் பார்த்தேனே! புருஷன் வேலைன்னு வெளிய போய் மூக்கு பிடிக்க மொக்க வேண்டியது.பொண்டாட்டி வீட்டில் இருக்கறவங்க வாயை பிடுங்கி, களகம் மூட்டி சண்டைக்கு வழிப் பண்ண வேண்டியது! வந்த நாளா இதைத்தானே அவங்க செய்யறாங்க. இதுவரைக்கும் அவங்க பார்த்த வேலையே போதும்.இன்னைக்கே ஊரு போய் சேர சொல்லுங்கஎன்று முடிவாய் சொன்னாள்.

வந்தும்மா... டேய்... நீ செய்றது எல்லாம் உனக்கே நல்லா இருக்கா? எப்படிடி அவங்ககிட்ட சொல்லமுடியும்? நாம அக்கா வீட்டு ஆளுங்ககிட்ட அப்படி சொன்னா அவளுக்கு மாமியார் வீட்டில் அசிங்கமா போகாதா?” என்று ஆதங்கமாய் கேட்டவனை முறைத்தவள்,

அதுக்கு பார்த்தா... நீங்க இனிமே உங்க மாமியார் வீட்டில் வந்து வாழ வேண்டிவரும். பரவாயில்லையா?” என்று நக்கலாய் கேட்டாள்.

மங்கம்மா மலையேறிட்டா! இனி இவளை இறக்கறது ரொம்ப குஷ்டம்!என்று நொந்தவன்,அவளிடம் ஏதும் சொல்லாது சதீஷை அழைத்துக் கொண்டே வெளியே சென்றான்.

தன்னிடமிருந்து தப்பித்து செல்லும் ரகுவை பார்த்து, ”என்கிட்டேயிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது மிஸ்டர்.ரகுராமன்! எங்க போனாலும் இங்கதான் வந்தாகனும்.வரும்போது நான் சொன்னது நடந்தே ஆகனும்.என்று சத்தமாக கூறி, டீபாயின் மேல் இருந்த தட்டை ஒரு கையிலும், போனை மறுக்கையிலும் எடுத்தவள்,

எனக்கு வாய்ச்சது, லீவு நாளு அதுவுமா பொண்டாட்டி கூட எங்கயாவது வெளிய போகலாம்னு நினைக்காம, அக்கா வீட்டு ஆட்டுக்குட்டியை மேய்ச்சலுக்கு கூட்டிட்டு சுத்துது. இதுக்கு காதல், கல்யாணமெல்லாம் எதுக்கு?” என்று ரகுவை வசைப்பாடிக்கொண்டு கட்டிலில் வசதியாக சாய்ந்து அமர்ந்து முந்திரி பக்கோடாவிலும் போனிலும் மூழ்கிப்போனாள்.

மூத்தவளான தனலட்சுமியின் நாத்தனாரின் நாத்தனார் மச்சினனுக்கு இவர்களின் ஊரில் இருக்கும் தாசில்தார் அலுவலகத்திற்கு ஒரு வேலை விஷயமாக வரவேண்டியிருந்தது. தனத்தின் நாத்தனாரின் நாத்தனார், அவளின் அண்ணியிடம் இதை பேச்சுவாக்கில் சொல்ல, பாவம் ரகுவிற்கு வினை அங்குதான் உருவானது.

தனத்தின் நாத்தனார், தன் அண்ணியிடமும் பிறந்த வீட்டிலும் தனக்கிருக்கும் செல்வாக்கை புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு காட்ட எண்ணி, தன் அண்ணியின் அம்மா வீட்டில் தங்கிக் கொண்டு வேலையை முடித்துக் கொள்ளலாம் என்றும் அங்கிருப்பவர்கள் உதவியும் செய்வார்கள் என்றும் கூறினாள்.

அது சரிவராது என இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் தனத்தை போனில் அழைத்து விஷயத்தை கூறி,

உங்க வீட்டில் தங்கிக்கலாம்னு நான் சொன்னா என்னோட நாத்தனார், உங்க அண்ணியோட அம்மா வீட்டில் ஏதாவது சொல்வாங்கன்னு யோசிக்கிறா அண்ணி.அப்படி ஏதாவது அவங்க சொல்வாங்களா...?” என்று சாதுவாய் கேட்டாள்.

சம்மந்தப்பட்டவளை அருகில் வைத்துக் கொண்டு அவள் அப்படி கேட்டால் தனத்தாலும் என்ன சொல்லிட முடியும்? ‘இவ அம்மா வீடு போல உரிமையா தங்க சொல்றதைப் பாரேன்! அங்க அம்மா அப்பா மட்டும் இருந்தாலும் பரவாயில்ல.அண்ணன் தம்பிங்க\ன்னு அவங்க குடும்பம் இருக்கும் போது என்னுடைய புகுந்த வீட்டு ஆளுங்களை அடிக்கடி அங்க அனுப்பிவைக்கறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. இதை சொன்னா இவளும் இவ அம்மாவும் ஆடி தீர்ப்பாங்களே...!என தனம் மனதில் புகைந்தாலும், வெளியே தன் நாத்தனாரின் நாத்தனாரிடம், போன வேலை முடியும் மட்டும் தன் அம்மா வீட்டில்தான் அவளின் மைத்துனன் தங்க வேண்டும், அவருக்கு வேண்டிய உதவிகளை தன்னுடைய தம்பிகள் கூடயிருந்து செய்வார்கள் என்று வேறு வழியில்லாமல் கூறினாள்.

அதைக் கேட்ட அவளின் நாத்தனார், தன்னுடைய நாத்தனாரிடம், தான் ஒன்றுக் கேட்டு அண்ணி அதை மறுத்ததாய் சரித்திரமே இல்லை.... என்று பெருமை பேசியவள், மைத்துனனை மனைவியோடு சென்று, இன்னும் இரண்டு நாட்கள் வேண்டுமானாலும் அங்கு தங்கி அருகில் இருக்கும் எல்லா கோவில்களையும் பார்த்துவிட்டு வரும்படி கூறினாள்.

இந்த் பக்கம் போனில் இதை கேட்டுக் கொண்டிருந்த தனத்திற்கு,’அடியேய்.... உனக்கும் உன்னோட அம்மாவுக்கும் இதே வேலையா போச்சு! என்னைவிட உங்க வீட்டு ஆளுங்கதான் என்னோட வீட்டில் விருந்தாடறாங்கஎன்று வயிறு எரிந்தது.

இவள் தன் அண்ணி வைதேகியிடம் நடந்ததை சொன்னதும் வெள்ளந்தியான அவள், தாராளமாக அவர்கள் வந்து தங்கிக்கொள்ளட்டும் என்று சொல்லி விட்டாள்.

அப்படி வேலைக்காக இங்கு வந்த பரந்தாமனும் அவனின் மனைவி சுந்தரியும் வந்த வேலையை தவிர மற்ற அனைத்தையும் சரியாக செய்தனர். காலையில் வீட்டில் இருந்து வயிறு முட்ட சிற்றுண்டிவை முடித்துக் கிளம்பினாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் பரந்தாமனுக்கு அகோரப் பசி வந்துவிடும். வேலையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, அந்த ஊரில் உள்ள பெரிய உணவகத்தில் அவசரமாய் நுழைபவன் அங்கிருக்கும் காலை உணவு மொத்தமும் தீர்ந்தபிறகே வெளியே வருவான்.அதற்குள் தாசில்தார் அலுவலகத்தில் டீ ப்ரேக் வந்துவிடும்.உடனே இவனுக்கும் டீ குடிக்க ஆசை முளைத்து அருகில் இருக்கும் கடைக்கு அடுத்த படையெடுப்பு தொடங்கும். மாலை வரை இதுவே தொடர அடுத்தடுத்து வந்த நாட்களிலும் இதுவே நடந்து, பரந்தாமன் குடும்பம் வசந்தமாளிகைக்கு வந்து வாரம் ஒன்றானது.

கணவன் இப்படி தினமும் தின்றே இவர்களின் சொத்தை அழிக்க, மனைவியோ அங்கிருக்கும் பெண்களிடம் அவர்களுக்கு சாதகமாய் பேசுவதை போல பேசி, ஒருவரை மற்றொருவரிடம் போட்டுக் கொடுத்தாள்.

அந்த வீட்டின் ஆணிவேர் வைதேகி, அவளை பற்றி எந்த குறை சொன்னாலும் யாரும் காது கொடுத்து கேட்கமாட்டார்கள் என்பதை வந்த நாளே உணர்ந்தவள், அடுத்து தன்னுடைய கைவரிசையை சஞ்சுவிடம் காட்டி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டாள்.

வசந்திக்கு எப்போதும் வந்தனாவின் மேல் அவ்வளவு பிடித்தம் இருந்ததில்லை. அதை தனக்கு சாதகமாக்கி கொண்ட சுந்தரி, அவளை வசந்தியிடம் சின்னசின்ன விஷயத்திற்கெல்லாம் மாட்டிவிட்டு அதை பார்த்து ரசித்தாள்.

வந்தனா எப்போதும் அந்த வீட்டில் யாரிடமும் எதிர்த்து பேசி சண்டை போடமாட்டாள். தனக்கு வேண்டியதை ரகு மற்றும் சதீஷ் மூலமாகவே சாதித்துக் கொள்பவள் இப்போதும் சுந்தரி செய்யும் செயல்களை அறிந்திருந்த போதும், தன்னை குறை கூறும் மாமியாரிடம் ஏதும் பேசாது அமைதியாக இருந்துவிட்டு, தனிமையில் ரகுவை காய்ச்சி எடுத்துவிடுவாள்.

இப்படியே வார விடுமுறை நாட்கள் வந்துவிட வேலையை சாக்காய் வைத்துக் கொண்டு வெளியே சென்று கண்டதையும் இதுவரை உண்டவனுக்கு, இன்று நாள் முழுதும் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எங்காவது செல்லலாமா என்று யாரிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தவனின் கண்ணில் ரகு மாட்டினான். அவனிடம் வெளியே செல்லலாமா என இவன் கேட்டுக் கொண்டிருந்ததை பார்த்த வந்தனா ரகுவை உள்ளே வரும்படி கண்காட்டிவிட்டு சென்றாள். அதைப் பார்த்து மிரண்ட ரகு, பரந்தாமனிடம் தயாராகி வருவதாக சொல்லி உள்ளே சென்றபோதுதான் வந்தனா அவனை போட்டு தாளித்துவிட்டாள்.

வந்தனா சொன்னதை நினைத்துக் கொண்டு வெளியே வந்தவனை பார்த்த சதீஷ்,

என்ன ப்ரோ! பூஜை பலமோ? முகமெல்லாம் வியர்த்து வழியுதுஎன்று கேலி செய்ததும்,

ம்ஹும்... உங்களை போல பொண்டாட்டியை மதிக்காம மைனர் போல எல்லோராலும் சுத்தமுடியுமா? என்று அங்கு வந்த சஞ்சனா கேட்டாள்.

யாரு... நான் பொண்டாட்டியை மதிக்காத மைனரு? எங்க அண்ணாவாவது அண்ணியை எதிர்த்து தைரியமா அப்பப்ப பேசுவான்.ஆனா நானு...என்று இவன் இழுத்ததும்,

அவராவது அப்பப்ப பேசுவார். நீங்க எப்போதும் அப்படித்தான்! நிஜம் தானே ரகு மாமா?”என்றாள்.

இவர்களின் எந்த பேச்சையும் காதில் வாங்காதவனைப் போல் ரகு இருக்கவும், அவனிடம் என்னவென்று கேட்க சொல்லிக் கண்ணைக் காட்டினாள்.

ரகு, எப்போதும்போல் இப்போதும் சதீஷிடம் புலம்பியதைக் கேட்ட சஞ்சு, ”அக்கா சொல்றதில் தப்பேயில்ல மாமா!இந்த விஷயத்தில் அக்காக்குதான் என் முழு சப்போர்ட். அந்த முந்திரி அத்தைக்கிட்ட ஓவரா குழையுது. அது தாளத்துக்கு இவங்களும் ஆடறாங்க.இதையெல்லாம் என்னாலேயே பொறுக்க முடியல.பாவம் வந்தனா அக்காஎன்றாள்.

ஆமா ரகு.அந்த பரந்தாமன் சரியான பறக்காவெட்டி ராமனா இருக்கான்.இன்னைக்கு அந்த ஜோடிக்கு ஒரு முடிவு கட்டிடனும்.இரு உன்கூட நானும் வரேன்என்ற சதீஷ், சஞ்சுவிடம் கண்ணால் விடைப்பெற்று ரகுவுடன் கிளம்பினான்.
 
Status
Not open for further replies.