Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript பன்னீர் பூக்கள் | SudhaRaviNovels

பன்னீர் பூக்கள்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
463
150
63
பன்னீர் பூக்கள்


நீண்ட நாட்களுக்கு பின்னர் விமர்சனம் எழுத தோன்றிய கதை. எழுத்தாளர் எப்பொழுது அடுத்த பதிவினை இடுவார் என ஏங்கி எதிர்பார்க்க வைத்த ஒரு அருமையான கதை. அம்மா என்னும் ஒரு அம்மிக்கல் அனைவரையும் அரைத்து தண்ணீர் ஊற்றி ஒன்றுமில்லாமல் கீழே தள்ளி விடுவதை நடைமுறை வாழ்க்கையுடன் மிகவும் இயல்பாக எழுத்தாளர் எடுத்து இயம்பியுள்ளார். கார்த்திக போன்ற அம்மாக்கள் 90 சதவீதம் இன்றளவும் மற்றொரு பெண்ணின் வாழ்வினை மங்க செய்து கொண்டு தான் இருக்கின்றனர். அனைவரும் வித்யாவாகவும், சந்துருவாகவும் இருப்பதில்லை. ஒரே ஒரு வருத்தம் சுகுமாரன் மனைவி ஆரம்ப காலத்தில் பேசும் பொழுதே விலகிப் போய் இருக்க வேண்டுமோ என தோன்றியது.பிள்ளைகளின் வாழ்விற்காக பெற்றவர்கள் எதை இழக்கின்றோமோ இல்லையோ தன்னிடம் உள்ள தான்,தன்னுடைய என்ற ஆங்காரத்தையும், அகங்காரத்தையும் கண்டிப்பாக தியாகம் செய்ய வேண்டும் அந்த தியாகத்தை செய்யாத அம்மாவை சந்துரு தனிமைப்படுத்தியதில் தவறில்லை. எவ்விடத்திலும் தேவையற்ற வர்ணனைகள் வார்த்தையாடல்கள் இன்றி கதைக்கு தேவையான கருத்தை மட்டும் எடுத்து இயம்பிய எழுத்தாளருக்கு இது போன்ற இன்னும் பல கதைகளை படைப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.