Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
27
19
8
ஐயோ அதுக்குள்ள முடிச்சிட்டிங்களே sis😭😭😭🤣..

Really superb story.. ரொம்பவே ரசிச்சு படிச்சேன்.. சில இடங்கள் எல்லாம் மறுபடியும் மறுபடியும் படிக்க வச்சுட்டீங்க..

வேகமா அடிக்குற காற்று கூட உன்னை துன்புறுத்த கூடாதுனு நினச்சேன்ற வார்த்தைகள் எல்லாம் wow👏👏👏💐

பேமிலி என்டேர்டைன்மெண்ட் லவ் பிரின்ட்ஷிப் எமோஷன்ஸ் காமெடி எல்லாமே நிறைந்த அழகான காதல் கதை..

ரொம்பவே தேங்க்ஸ் sis இப்படி ஒரு கதை கொடுத்ததுக்கு..

அர்ஜுன் சித்தார்த் ரெண்டு பேருல யாரு பெஸ்ட்னு சொல்லவே முடியாத அளவுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் நிறைவான கதை..

நெகடிவ் ரோல்ன்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இவ்வளவு அழகான கதை.. அதுக்கே பெரிய அப்லாஸ் 💐👏👏😍😍


ரொம்ப ரொம்ப அருமை sis💐💐
 

Rithi

Member
Feb 8, 2021
27
19
8
நின்னை சரணடைந்தேன்
பாகம் 1

ஷெண்பா sis ஸ்டோரி தெரியாதவங்க யாரும் இருப்பாங்களா? 2013 நான் ரீடரா முதன்முதலில் படித்த நாவல் நின்னை சரணடைந்தேன் தான்.. திரும்பவும் அவங்களே அதை போஸ்ட் செய்து படிக்கும் போது அதுவும் இத்தனை வருஷம் கழித்து படிக்கும் போது அவ்வளவு சந்தோசம்..

என்ன! அப்ப காலேஜ்ல பிரண்ட்ஸ் கூட சேர்ந்து படிச்சுட்டு கதையை பத்தி பேசிப்பேசியே என்ஜோய் பண்ணி படிச்சோம்.. இப்ப! தனியா படிக்குறேன்..

கூட்டு குடும்பம், காதல், நட்புக்கள், இன்னும் என்னென்ன எதிர்பார்க்குறீங்களோ எல்லாமும் இங்க இருக்கு..

கொஞ்சமும் தொய்வில்லாத கதை.. எங்கேயும் பாதில விட்டுட்டு போக முடியாது. அடுத்து என்ன அப்டிங்ற கேள்வியை கடைசி வரை கொண்டு வந்து அழகா முடிச்சு கொடுத்திருக்காங்க.

ஹீரோ யாரு? அர்ஜுன் இல்ல சித்தார்த்?
ரெண்டு பேருமே ஹீரோ தான். ஒரே மேனரிசம் மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் ஒரே மனமும் கூட..

ஹனி.. தேனு.. இதுல இருந்து தொடங்கும் அவர்களின் ஒற்றுமை.
சுபாவின் உடன் பிறந்தவனும் உடன் பிறவாதவனுமாய் இருவரும் மனதை அள்ளுவது உண்மை..

சித்தார்த் தான் எனக்கு ரொம்பவே புடிச்ச கதாபாத்திரம். அவனோட கோபம், ஏக்கம், கண்ணீர், சிரிப்பு, குறும்பு, காதல் எல்லாமே என்னை ரொம்ப கவர்ந்தது. காதலுக்காகவே காத்திருந்து, காதலுக்கவே காதலை விட்டுக்கொடுக்கவும் தயாறானவன்.

அவனின் காதல் கை சேர்ந்ததா?

அர்ஜுன் விளையாட்டு பிள்ளையானாலும் பொறுப்பானவன். விளையாடியே அவளை ஏமாற்றி அழ வைத்து சமாதானம் செய்யாமலே காதலால் சமாதானபடுத்துபவன்.

அவன் பொறுப்பாய் செய்த செயல் தான் இறுதியில் அவனுக்கு எமன் ஆனதோ? வாழ்க்கையிலும் ஏமாற்றி போனானோ?

மது.. எந்த இடத்திலும் இவளோட செய்கையை யாரும் குற்றம் சொல்லவே முடியாது. காதலிக்கும் போது அவளின் துள்ளலும், எல்லாம் இழந்து நிற்கும் போது குடும்பத்திற்காய் வாழும் வாழ்வும், அதே குடும்பத்திற்காக அவள் எடுக்கும் ஒரு முடிவும்னு... அவ்வளவு அழகு.

மது எடுக்கும் அந்த முடிவு அவளை வாழ வைத்ததா?
இதில் எல்லாம் விதியின் சூழ்ச்சி தான்.

நட்பாக கீதா சுரேஷ் லதாவும் உறவின் நட்பாக வரும் தீபக் மேகலா வித்யா ராஜேஷ் எல்லாமே அருமையான படைப்புக்கள்.

தேவகி, ராஜி, விமலா, ராமமூர்த்தி பெரியவர்கள் அனைவரின் படைப்புமே சொல்லக் கூடியது தான்.
அண்ணியாக மீராவும் அண்ணன் தம்பி தங்கைகளாக ஆதி, அஸ்வந்த் நேத்ரா எல்லாம் வேற லெவல்..

சுபா ஹரி திருமணம் முடிந்தும் இவர்களின் புரிதலை அழகா காட்டிருக்காங்க sis..

நிறைய இடங்கள் திரும்ப திரும்ப படிக்கவும் அழவும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்குறது தனி அழகு..

இப்படி ஒரு கதையை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டுட்டோமேனு கண்டிப்பா தோணும்..

இன்னொரு ரசிக்க கூடிய ஒன்று.. கதையில் வில்லன் வில்லி என்ற ஒன்றுக்கு இடமே இல்லாமல் முழுதும் பாசத்தால் மட்டுமே உணர்வை கொட்ட வைப்பது. காதலை உணர வைப்பது..

இதுவரை படிக்காதவங்களுக்கு பெஸ்ட் சஜகேஷன் நின்னை சரணடைந்தேன்..

தரமான படைப்பிற்கு நன்றி sis👏😍.. மென்மேலும் தங்கள் எழுத்து பயணத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐😍..
 

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
வாவ் ஃபுல்லா முழு கதையையும் படிச்சாச்சு❤😍🥰ரொம்ப அழகான ஒரு உணர்வு எப்பேயும் தோன்றும் இந்த கதையைப் படிக்கும் போது❤😍🥰🥰கதை மாதிரி இல்லமா உண்மை சம்பவம் மாதிரி உணர வைக்கும் கதை❤❤❣❣

அர்ஜுன்😍🥰❤ஒரு 15 எப்பிஸ் வரும் அர்ஜுன் கதை முழுக்க வரும் நாயகன் நாயகிக்கு இணையா மனதில் பதியும் ஒரு கதாப்பாத்திரம்❤😍ஆல்வேஸ் இன் லவ் வித் ஹிம் ❤❤🥰🥰ஃபிளாஷ் பேக் முழுக்க அவனை மட்டுமே ரசிக்க வைப்பான்... என்ன லவ்😍😍😍🥰🥰🥰அர்ஜுன் தான் எனக்கு ரொம்ப பிடித்தவன் இந்த ஸ்டோரி😂😜😜

மது அர்ஜுன் காதல் காட்சிகள் எல்லாமே சூப்பரா இருக்கும்... மதுவை சீண்டும் அர்ஜுன், அவளோடு விளையாடும் அர்ஜுன், அவன் காதல், அவங்க ரெண்டு பேரும் செய்யும் சேட்டைகள் எல்லாமே சூப்பரா மனதை நிறைக்கும்❤❤🥰🥰

அர்ஜூன்🥺😭😭இறந்ததை தான் மது மாதிரி ஏற்றுக் கொள்ளவே முடியல... அடுத்து எல்லாமே கஷ்டமா நடக்கும் ரொம்ப பாவம் அவன்😭😭

ஆப்டர் 42, சித்து மது கல்யாணம்🥰❤😍😍வாவ் மதுக்காக பார்த்து பார்த்து செய்யும் சித்து ரொம்ப ரொம்ப ஸ்வீட்❤❤😍😍🥰🥰அவனை புரிந்துக் கொள்ளாத மது, அதுக்காக மற்றவர்கள் அவளுக்கு புரிய வைக்க நினைப்பது எல்லாமே சூப்பரா இருக்கும்❤❤❣❣

என்ன இந்த வித்யா, மேகலா எப்பயும் கொஞ்சம் ஓவரா பண்ணுவாங்க😂😜🤭தீபக் ராஜேஷ் சொல்லவே வேணா😉🙄🤐அதுக்கும் மேல... மதுவை பார்க்கவே ரொம்ப பாவமா தோன்றும்... அர்ஜுன் மது காதல் முழுக்க முழுக்க இன்பம் தந்து பின்னர் துன்பம்னா... சித்து மதுவின் காதல் துன்பத்துக்கு பின் சேர்ந்த இன்பம்🥰❤❣💞

ரெண்டுமே அழகு... ரொம்ப ரொம்ப அழகு...❤❤🥰🥰மதுக்கு சித்துவை புரிய வைக்கும் சம்பவங்கள், மீரா அண்ட் கோவின் திட்டம் எல்லாமே ரொம்ப ரசிக்கும் படியா இருக்கும்❤❤💞💞❣❣ அஷ்வந்த் தமிழ் நாட்ல உன்னை யாரும் அசைக்கவே முடியாது... வேற மாதிரி வேற மாதிரி ஒரு மேட்....💜💜😜😂😂

நேத்ரா ஸ்ரீ கிட்ட வளைச்சு வளைச்சு பேசுறது எல்லாமே காமெடியா இருக்கு ஆனாலும் பொண்ணு பாவம்🤭🥺😂எப்படியோ அவங்க சேர்ந்தாச்சு😍🥰❤எல்லாரும் லைனா அம்மா ஆகுவாங்க பார்க்கவே செம்ம அழகு😍❤💞❣

மது🥺🥺சித்து பாவம் ஆக்சிடென்ட் ஆனதும் மது எடுக்கும் முடிவு கஷ்டமா இருக்கும்🥺🥺🙄🙄நல்ல வேளை சித்து கண்டிப் பிடித்து ரெண்டு தருவான்😜😜

மது சித்து ரொமான்ஸ்😍😍🥰🥰❤❤வேற லெவல் சீன்ஸ்... டெல்லி காட்சிகள் கடைசியாக ஸ்விஸ் எல்லாமே சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤😍😍💞💞❤❤ரொம்ப ரொம்ப நிறைவான ஒரு கதை😍🥰எப்போது படித்தாலும் சலிக்காமல் மனதை நிறைய வைக்கும்😍😍❤

இந்த கதையை ரீரன் பண்ணதிற்கு நன்றி அக்கா❤❤இதே மாதிரி சூப்பரா இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்💜💜

ரொம்ப இனிமையான பயணமாக இருந்தது கதையைப் படிக்க படிக்க... என்.எஸ் எப்பயும் அப்படி தான்💜💜💜
 

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
நின்னை சரணைந்தேன் ❤❤

புத்தகம் வாசிப்புனு ஒன்னு எனக்கு அறிமுகமான புதிதில் ... நா தேடி தேடி படிச்ச கதைகள்ல இதுவும் ஒன்னு..

ஒரு சில கதைகள் எத்தனை முறை வாசித்தாலும் திரும்ப திரும்ப வாசிக்க வைக்கும். உண்மையா நின்னை சரணைத்தேன் கதையும் அப்படித்தான்.

அர்ஜுன், மது, சித்து இவங்க மூணு பேரோட காதலும், வலிகளும் அதை காட்சி படுத்திய விதமும் அருமை ஷென்பா மா❤❤

மது❤அர்ஜுன்... lovely part... ரொம்ப அழகா ரசிச்சு படிச்சேன் .. இவங்க லவ் ஆஹ் ... அர்ஜுன்.. வேற லெவல்🤩🤩🔥அர்ஜுன் ஹாஸ்பிடல் சீன் ரொம்பவே அழ வைத்தது என்னை... 🥺🥺

சித்து ❤மது... அழகான புரிதலான காதல். சித்துவுடைய காத்திருப்பும், அவன் காதலை மதுவுக்கு உணர்த்தும் அவன் செயல்களும், தன் சிறு செய்கையும் அவளை பாதிக்குமோ, வருந்த செய்யுமோனு சித்து ஒவ்வொரு விஷயமும் மதுவிற்காக பார்த்து பார்த்து செய்வது எல்லாம் அவ்வளவு அழகு. புரிதலுடன் கூடிய துணை அமைவது வரம் அந்த வைகையில் நம்ம மது லக்கி😍❤

சரி ரெண்டு ஹீரோ இருக்காங்களே கதைல இவரு தான் ஹீரோனு சித்துவையோ அர்ஜுனையோ தனியா சொல்லவே முடியாது. ஒண்ணுக்கு ஒண்ணு சலச்சது இல்லைனு சொல்லுவது போல.. சித்து , அர்ஜுன் ரெண்டு பேருமே ஹீரோ தான். ரெண்டு பேரோட காதலும் வேற லெவல்.

அர்ஜுனுடையது ஜாலியான அழகான காதல்னா, சித்துவிடது காத்திருந்த ஆழமான காதல்.
மொத்ததுல இவங்க ரெண்டு பேரும் அவங்க காதலால் நம்ம எல்லாரையும் கட்டி போட்டுட்டாங்க என்று தான் சொல்லணும்❤❤🔥

கதைல ஒரு காதல் இருந்தாலே கொண்டாண்டாம் தான். கதை முழுக்கவே நிறைய காதல் இருந்தா சொல்லவா வேண்டும் அவ்வளவு குஷி.

தீபக்-மேகி, ராஜேஷ் - வித்யா,ஹரி - சுபா, ஆதி- மீரா, சுரேஷ் - கீதா, ஸ்ரீ ராம் - நேத்ரா ... அழகான ஜோடிகள்.

தீபக், ராஜேஷ், சுரேஷ் எல்லாரும் மது மேல காட்டும் அன்பு அழகோ அழகு🤩🤩 அஸ்வந்த் பண்ணுற காமெடி எல்லாம் வேற லெவல்🤣🤣.

அழகான கதை🔥❤ அதை உணர்வு பூர்வமா கொடுத்த விதம் அருமை. கதை படிக்கும் போது , அவங்க கூட சேர்ந்து நாமும் அந்த கதைல ட்ராவல் பண்ணின ஃபீல்❤❤.

இன்னும் இதே போல நிறைய நிறைய நல்ல கதைகளை எங்களுக்கு கொடுத்துக்கொண்டே இருங்க ஷென்பா மா🤩❤ வாழ்த்துக்கள்❤❤
 

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
1. தேவகி மீரா மதுவை கோவிலில் பார்ப்பது
2. ஜீவா மதுவைக் காதலிப்பது
3. நேத்ராவும் மதுவும் எங்கோ முன்னாடியே சந்திப்பது, நேத்ரா மது அண்ணியா வரணும்னு நினைப்பது
4. ரமேஷ் தங்கையின் கல்யாண காட்சிகள்
5. மது டான்ஸ் ஆடுறது அதுக்கு சித்து அப்பா ஜட்ஜ்
6. தீபக், மது, ஜீவா, சித்து ஐஸ் கிரீம் பார்லர்ல மீட் பண்ணுவது
7. தீபக் மதுயோட நிறைய சேட்டைகள்
8. அஸ்வந்த் மதுவை பற்றி சொன்னதும் 4 பேரும் அவங்க அவங்க ஆசையை சொல்வது
9. மது சித்தார்த் வீட்டுக்கு வரும் போது எல்லாரும் நாலும் ஒரே பொண்ணுன்னு தெரிஞ்சு ஷாக் ஆகுறது
10. மது வீட்ல யாரும் இல்லாத அப்போ நேத்ரா அங்க வந்து தங்குனது
11. ஆதி பேரு அத்வைத்😂😜
12. சித்தார்த் பெரை மணல்ல எழுதியதை தீபக் சித்து கிட்ட காட்டுவது
13. சுபா ஹரியோட காம்போ
14. ஆதி எப்பயும் மீராவை கலாய்ப்பது😂🤭
15. அர்ஜுன் மதுவோட ரொமான்ஸ் சீன்
16. அர்ஜுன் டிரீட் அப்பறம் அவங்கள எல்லாரும் சேர்ந்து கலாய்ப்பது
17. கடைசியாக எபிலாக்... ரெண்டு பேருக்கும் பேபி பிறக்கும் அர்ஜுன பேரை வைப்பது, திருமண நாள் பரிசுகள்
18. எல்லாரும் சேர்ந்து வருவாங்க... அஸ்வந்த் கலாய்ப்பது... அவனுக்கு ஒரு ஜோடி வரும் மற்ற எல்லாருக்கும் திருமணம் ஆகிடும்🙄😉

இது எல்லாமே எடிட் ஆகிடுச்சு🥺🥺எனக்கு ரொம்ப பிடிக்கும்😍❤ ஃபர்ஸ்ட் ஹாஃப்ல பாதி போய்டுச்சே அக்கா🙄🙄இன்னும் நிறைய இருக்கலாம் எனக்கு இவ்வளோ தான் நியாபகம் வந்தது😜🤭

ஆனாலும் இவ்வளவு எடுத்தும் அது தெரியாமையே ரொம்ப அழகான கதையாக உணர்வு பூர்வமான நிறைவோடு ஜோலிக்குது கதை❤❤

ரொம்ப நன்றி அக்கா ரீரன் பண்ணதுக்கு... எல்லாம் மலரும் நினைவுகளாக இருக்கு இன்னுமும் மனதில்❤💝💯💯