நான் கண்ட கனவு நீயடி(டா) - கதை திரி

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 20

டெடி அவன் போனால் நான் சும்மாவா இருப்பேன்? நா லவ்வர் ஆ இருக்கும் போதே அவனே சும்மா விட்டது இல்ல. இப்போ நான் அவன் மனைவி அவன் குடுமி என்கிட்ட.

அடேய் தேஜூ பேபி வரேன் டா வரேன். என் மாமனார் வீட்டுக்கே வந்து உன்னை ஒரு வழி பண்றேன்.

என் மாமனார் சர்வேஷ் குமார் வீடு..

உள்ளே போன முதல் வேலையா என் அக்கா அஸ்வினியே கட்டி கொண்டேன் அதே பார்த்து ரெண்டு பேரில் வயிறு எரிந்தது. ஒருவர் என் தேஜூ பேபி மற்றொருவர் என் ஆகாஷ் மாமா.

முகத்தை திருப்பி கொண்டு போன தேஜுவை விட்டு அஸ்வினி அக்கா கூட பேசினேன்..

அஸ்வினி, "என்னடி நம்ம ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் ஆனது ஒரே நாளில் ஆனால் இந்த அக்காவை பார்க்க உனக்கு வர இத்தனை நாள் ஆச்சு அபப்டி தானே?"

நிலா, "என்னக்கா பண்றது? என் புருசன் ஓவர் லவ் பொழிந்து எல்லாரையும் மறக்கும்படி செய்து விட்டான். இப்போ கூட பாருங்க என்னை விட்டு அவன் இங்கே வர போய் தானே வர முடிந்தது இல்ல நானே வரணும் நினைத்தாலும் அவன் விடுவானா?"

அஸ்வினி, "அடிப்பாவி இப்படி கூட என்னை பார்க்க வரல அவன் அவன் வந்தனு பின்னாடியே ஓடி வந்து இருக்க.."

நிலா, "ஹி ஹி.. போக கா எனக்கு வெட்க வெட்கமா இருக்கு."

அப்போ தான் என் மாமனார் அவரின் ரூமை விட்டு வெளிய வர ஓடி போய் அவரின் காலில் விழுந்து வணங்கி விட்டு..

நிலா, "என்ன மாமனரே உங்க பையனை பார்த்த சந்தோசத்தில் பத்து வயசு குறைந்த மாதிரி இருக்கு."

மாமனார், "ஆமா இப்போ மருமகள் உன்னை பார்த்த இன்னும் பத்து வயசு குறைச்சு போச்சு.."

நிலா, "அப்போ உங்களுக்கு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் வைச்சா உங்களுக்கு ஒரு துணை கிடைத்த மாதிரி இருக்கும் எங்களுக்கு மாமியார் மருமகள் சண்டை போட ஒரு மாமியார் கிடைத்த மாதிரி இருக்கும். என்ன சொல்றீங்க பார்த்துடுவோமா?"

மாமனார், "வேண்டாம் மா.. வேண்டவே வேண்டாம். மருமகள்கள் ஆளுக்கு ஒரு பேரன் இல்ல பேத்தி மட்டும் பெற்று கொடுங்க அதை கொஞ்சி காலத்தை ஒட்டுறேன்."

நிலா, "நானா வேண்டாம் சொல்றேன் உங்க பையன் தான் நோ நோ சொல்லி ஒடுறான். அதை கேட்க போய் தான்.. நான் எங்க அப்பா விட்டு போறேன்.. சொல்லிட்டு ஓடி வந்துட்டான். நீங்களே போய் பேசி என் கூட அனுப்பி வைங்க."

மாமனார், "இது புருசன் பொண்டாட்டி சண்டை மா. நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க இதில் நான் தலை கொடுப்பதால் இல்ல ஆளை விடு .??"

நிலா, "சரி நானே பார்த்துக்கிறேன். என் புருஷனை சமாளிக்க எனக்கா தெரியாது."

பின் அஸ்வினி அக்கா கிட்ட திரும்பி நான்..

நிலா, "அக்கா தேஜூ வந்ததிலிருந்து ஏதாவது சாப்பிட்டானா?"

அஸ்வினி, "இல்லமா நானும் கேட்டு பார்த்தேன் வேண்டவே வேண்டாம் சொல்லிட்டான். நீயே போய் கேளு.."

நிலா, "சரி ஒரே தட்டில் ரெண்டு பேருக்கு ஏற்ற சாப்பட்ட போட்டு கொண்டு வாங்க பின் எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்."

அக்கா எடுத்து வந்த சாப்பாட்டை தேஜூ இருந்த அறைக்கு சென்று ஒரு வாய் நான் ஊட்டி விட அவனும் எதுவும் பேசாமல் எனக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டான். இருவருமே சாப்பிட்டு முடிந்த பிறகு அங்க இருந்த குளியல் அறையில் கை அலம்பினோம் பின் என் மடியில் படுத்தவன் ஒன்றும் பேசாமல் என் முகத்தை பார்த்து கொண்டு இருக்கே நானோ இனி இவனை விட்டால் சரியாகாது என புரிந்து..

நிலா, "பிளீஸ் உன் மனசில் என்னதான் உறுத்தி கொண்டு இருக்கு சொல்லு, இப்படி ஒன்னும் பேசாமல் இருந்தால் நான் என்ன தான் பண்றது?"

தேஜூ, "நிலா உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி கற்பனை பண்ணி இருக்கேன் உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை சேட்டை எல்லாம் செய்து வீட்டை ஒரு வழி பண்ற மாதிரி அதோடு சேர்ந்து நீயும் இன்னொரு பக்கம் சேட்டை பண்ணி என்னை சிரிக்க வைக்கிற மாதிரி. வாவ் நினைக்கவே நல்ல இருக்கு ல.."

நிலா, "நினைத்தால் மட்டும் போதுமா? அதற்கான வழிகள் செய்ய வேண்டாமா? இப்படி பார்த்துகிட்டு கிஸ் மட்டும் பண்ணால் எப்படி டா குழந்தை பிறக்கும். ஒருவேளை முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறக்கும் நினைக்கிற 90'ஸ் கிட் ஆ நீ?"

தேஜூ, "ஏய் நான் ஒரு டாக்டர் உன்னை விட எனக்கு எல்லாம் தெரியும்."

நிலா, "அப்போ ஏன் இத்தனை நாள் சும்மா இருந்தே?"

தேஜூ, "ஏற்கனவே சொன்னது தான். என் நிலவுக்கு என் மேல் காதல் இருக்கு. அவளே பிடிவாதம் பிடித்து என்னை கல்யாணம் கூட செய்து விட்டாள். நானும் சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் இல்லனு சொல்லல. ஆனால் நாள் போக போக பயமா இருக்கு நிலா, நீ நிலவாக இருக்கும் போது இருக்கும் காதல் மதுமதியா பழைய நினைவு வந்தவுடன் என்னை பற்றிய நினைவு மறந்து என்னை விட்டு போய்டுவியா? நிலவுக்கு என்னை பிடித்த அந்த மதுமதி.. மதிக்கு என்னை பிடிக்குமா?"

நிலா, "உன்னை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் சொல்லு? மூளைக்கு தான் டா நினைவு எல்லாம் வேண்டும் இந்த காதல் கொண்ட மனதுக்கு அது தேவையில்லை. அது சொல்லி தானே என் மாமனார் கிட்ட சொல்லி உன்னை கல்யாணம் கட்டி கொண்டேன். இப்போ போய் இப்படி பேசுற.."

தேஜூ, "நீ எந்த அளவுக்கு அன்பானவளோ அந்த அளவுக்கு கோபக்காரியும் கூட. இப்போ நிலவா இருக்கும் உன்னை நான் தொடுவது பிரச்சினை இல்ல. அதுவே நினைவு வந்த மதுமதி இதை எந்த மாதிரி எடுப்பாள் சொல்லு. உங்க அம்மா அப்பா மற்றும் இத்தனை நாள் நம்ம வாழ்கையை வீடியோ வா எடுத்து வைத்தது விட நீயா என்னை அப்போ உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் காதலிப்பது உன் காதல் மனம் தான் அது என்னையும் காதலிக்கும் நிலையில் இருக்க வேண்டும். அப்போ உனக்கு எல்லா நினைவும் திரும்பினால் ஒழிய இந்த கணவன் மனைவி புணர்ச்சி நடக்காது அது எனக்கு வேண்டாம். பிளீஸ், ஒருவேளை நீ சொல்றது இப்போ சம்மதம் சொல்லி அப்பறம் நமக்கு குழந்தை வந்த பிறகு தான் உனக்கு பழைய நினைவு வந்தது வை அப்போ நம்ம குழந்தையின் நிலை என்ன? தன் அம்மா தன்னையே மறந்து விட்டார்கள் என்றால் அதன் பிஞ்சு மனம் எப்படி தங்கி கொள்ளும் சொல்லு?"

மடியில் படுத்து இருந்த அவனின் தலையை கட்டிக்கொண்டு..

நிலா, "ஏன்டா எனக்கு மட்டும் இப்படி? நல்ல நல்ல உறவுகள் எல்லாம் கிடைத்தும் கடவுள் எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை கொடுத்தார்?. எனக்கு எப்போ பழைய நினைவு வருவது எப்போ எல்லா குழப்பங்கள் முடியறது."

தேஜூ, "ஃபீல் பண்ணாதே நிலா. எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும் அதுவரை என் நிலாவை வித விதமாக லவ் பண்ணணும். நம்ம காதல் நினைவுகளை நீ மதுமதி மாறி வந்தாலும் படித்து பார்த்து, வீடியோ எல்லாம் பார்த்து உன்னை நினைத்து நீயே பொறமைப்படனும். அது என்னை இன்னும் லவ் பண்ணு, உடல் சேர்வதில் இருக்கும் சந்தோசத்தை விட என்னை உயிராய் காதலித்து தினம் தினம் பல குறும்பு சேட்டை செய்து என்னை இம்சை பண்ணும் உன் அன்பு தொல்லையில் தான் டி உன் காதலன், புருசன் ரொம்ப சந்தோசமாக இருக்கான்."

நிலா, "சொல்லிட்ட ல இனி என் ஆட்டத்தை பார். தினம் தினம் ரணகளம் தான் என் காலில் நீ விழுந்து கதறினாலும் உன்னை விட போவது இல்ல.. ஹ ஹ ஹ.. ஐயோ ரொம்ப சிரிச்சு இருமல் வருதே.. தேஜூ பேபி உன்னோட நிலா பேபிக்கு போய் தண்ணீர் எடுத்துக்கிட்டு வா.."

தேஜூ, "அதுக்கு ஏன் பேபி தண்ணீர் நம்ம இதழ் முத்தமே போதும் வேண்டிய அமிர்தம் எல்லாம் தருகிறேன்."

அப்பறம் என்ன அன்று இரவு வரை ஆதர்ஷ் மாமா, அஸ்வினி அக்கா அப்பறம் என் ஸ்வீட் மாமனார் கூட நேரம் செலவு பண்ணிட்டு எங்க காதல் மாளிகைக்கு போனோம் எங்களின் காதலின் மற்றோரு அத்தியாயம் படைக்க.

அதுவரை படித்த மதி, அவர்களின் காதலின் ஆழத்தை அறிந்து கொண்ட பரவசத்தோடு தன் அன்பு காதலன் தேஜூ வரும் வரை வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 21

அவனுக்காக காத்திருந்தவள் மருந்தின் தாக்கத்தால் அப்படியே உறங்கி விட்டாள். இரவு ஏழு மணிக்கு வந்தவன் மது உறங்குவதை கண்டு அவளை டிஸ்டர்ப் செய்யாது இரவுணவை சமைத்தான்.

கிச்சனில் பாத்திரம் உருட்டும் சத்ததில் எழுந்தவள் டைரியை கபோர்டில் வைத்து முகம் கழுவி தேஜுவிடம் சென்றாள். அவளுக்கு பிடித்த எக் ரைஸ் செய்து கொண்டிருந்தவனை கிச்சன் வாசலில் இருந்து சைட் அடித்தாள்.

அதை பார்த்தவன், "என்ன பொண்டாட்டி வச்ச கண்ணு வாங்கம பார்க்கிற என்ன வேணும்" என்றான் தேஜு.
என் ஐஸ்கிரீம் எங்க என்று அவள் கேட்க பிரிட்ஜில் இருந்து அவளுக்கு வாங்கிட்டு வந்ததை எடுத்து கொடுத்து அவளோடு அவனும் அமர்ந்தான்.

செல்லக்குட்டி டின்னர் சாப்பிட்டதும் தான் இதலாம் அலோவ்ட் என்று தட்டில் ரைஸ் வைத்து அவளுக்கு அவன் ஊட்ட அதை வாங்கியவள் அவனுக்கும் ஊட்ட ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தனர். பத்து நிமிட இடைவேளியில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தாள், இதில் மட்டும் யாருக்கும் பங்கு தர மாட்டாள் தேஜுவிற்கும் கூட.

இந்த விசியத்தில் இவளுக்கும் மிதுலாவிற்கும் தான் அதிகம் சண்டை வரும் அதை தடுக்கவே இருவருக்கும் ஒரே மாறி ஒரே அளவு வாங்கி வருவான் தேஜூ.
எப்போதும் போல் இன்றும் அவள் சாப்பிடுவதை வேடிக்க பார்க்க அவனுக்கும் ஊட்டி விட்டாள். போதும் உனக்கு இப்போ தான் பீவர் சரியா போச்சு என்று லிமிட் போட்டான்.

அவளும் எதிர் பேச்சு பேசாது எழுந்தாள், அவளது செய்கை தேஜுவிற்கு ஆச்சரியமா தான் இருந்தது .
அவன் கன்னம் நெற்றி என்று கை வைத்து பார்த்து, நல்லா தானே இருக்க அப்பறம் என்னாச்சு என்றவனை பொய்யாக முறைத்தாள்.

இல்ல தங்கம் நீ அடம்பிடிப்ப கிஸ் பண்ணி சமாதானம் செய்யலாம் என பிளான் பண்ணேன் எல்லாம் பிளாப் ஆகிறுச்சு என்றான் பாவம் போல்.
பிராடு டா நீ, என்று அவன் காதை திருகி அவன் மடியில் படுத்து கொண்டாள் மது.

பேபி தூக்கம் வருதா என்று அவன் கேட்க இல்லை என தலையாட்டு அவன் வயிற்றில் முகம் புதைத்து அழுதாள்.
மதி எதுக்கு அழுகிற என்னாச்சு ? என்று பதறினான் தேஜு.

எனக்கு ஞாபகமே இல்லை நடந்தது எதுவும் ஒருவேளை எனக்கு கடைசி வரை எதுவும் ஞாபகம் வரவில்லை என்றால் என்ன செய்வேன் என்று உடைந்து அழுதாள்.
இங்க பாரு நிலாவா இருந்த போது எப்படி காதலிச்சேனோ அதைவிட நூறு மடங்கு இந்த பத்து நாளில் நீ என்ன எவ்வளவு விரும்புறனு புரிய வைச்ச . என் பேர் என் முகம் எல்லா மறந்த நீ, என் தொடுகை என் உணர்வை மறக்கலை. ஒரு டாக்டரா அதை முதல் நாளே புரிந்து கொண்டேன்.

அது மட்டும் இல்லாமல் நான் வேற ஒரு பொண்ணை நினைச்சு தான் உன்னை கிஸ் பண்ணேன் என்று நான் சொன்னதை கேட்டு நீ எவ்வளவு துடிச்சனு எனக்கு தெரியும். உன் காதல் மூளையை தாண்டி ஒரு புரட்சி செய்திருக்கு. உனக்கு ஞாபகம் வரவில்லை என்றால் என்ன புதுசா காதலிப்போம்.

நாளையில் இருந்து புது வாழ்க்கையை வாழலாம். நீ மதுமதி என்கிற நிலாவா நான் தேஜஸ்வின்னா எப்படி என் ஐடியா என்று அவன் கேட்க . கேட்க எல்லாம் நல்லா தான் இருக்கு அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை , பார்ப்போம் என்று படுக்கை அறைக்கு சென்றாள்.

எப்போதும் போல் அவன் கைவளைவில் தன்னை வாகாக பொருத்தி உறங்க ஆரம்பித்தாள்.
மதி உன்னை பார்த்துட்டே உன் வாசத்தை சுவாசித்து கொண்டு இருந்தால் மட்டும் போதும். இது என்ன பைத்தியக்காரமான காதல் என்று நீ நினைக்கலாம் ஆனால் எனக்கு இதை விட சந்தோஷம் வேற இல்லை என்று கண்ணயர்ந்தான்.

விடிந்தும் விடியாதுமாக எழுந்த மது, குளித்து கபோர்டில் இருந்து எடுத்த சேலையை கட்டிக்கொண்டு உறங்கும் தேஜுவை எழுப்பினாள். முழித்து பார்த்தவனுக்கு தான் காண்பது கனவா நினவானு தெரியலை , சேலை கட்டி சிலை போல் நின்றவளை கண்டு உறைந்தான்.

தேஜு சீக்கரம் எழுந்திரிச்சி போய் குளிச்சுட்டு வா நேரம் ஆச்சு என்று அவனை பாத்ரூமிற்குள் தள்ளினாள். என்னனு தெரியலையே என்று குழப்பத்திலேயே குளித்து அவள் கொடுத்த வேஷ்டி சட்டையை அணிந்து கிளம்பியதும் தான் அவனை வாய் திறக்க விட்டாள் அது வரை விரட்டி கொண்டே இருந்தாள்.

மதி, எங்கே டி போறோம் எதுக்கு டி இந்த அலப்பறை என்றான் பொறுமை இழந்து.
அதற்கு பதில் சொல்லாது என் தாலி எங்க என்றாள் மது.

நகை பெட்டியில் இருந்து எடுத்து அவள் கழுத்தில் மாட்ட போனவனை தடுத்து அதை வாங்கி கொண்டு நகைப் பெட்டியில் இருந்து சில நகைகளை போட்டு அவனை இழுத்து கொண்டு வெளியே வந்தவள்.

அவளது செய்கையில் குழப்பி இருந்தவனை வீடு பூட்டச் சொல்லி புக் செய்த காருக்காக வெளியே நின்றாள்.

அவள் சொன்னதை செய்து அவள் அருகே வந்து இங்க என்னடி பண்ணுற என்ற கேள்விக்கு கொஞ்ச நேரம் எதுவும் கேட்காதே அமைதியா இரு என்று கூறும் போடே கார் வந்து விட ஏறு என்று அவனுடன் ஏறினாள்.

என்ன பண்ணுறா ? எங்க போறோம்? ஒன்னும் தெரியலை? என்னமோ பெருசா நடக்க போது அது மட்டும் நல்லா புரியுது என்று அவளோட பயணித்தான். திடீரென்று ஓர் இடத்தில் கார் நிற்க அவனை இறங்க சொல்லி அவளும் இறங்கினாள்.

நிமிர்ந்து பார்க்க அது ஒரு கோவில் காருக்கு காசு கொடுக்க சொல்லி முன்னே சென்றாள். இதுக்கு என் காரிலையே வந்திருப்பேனே என்று மனதில் புலம்பி அவள் பின்னே ஓடினான்.

அர்ச்சனை சீட்டு வாங்கும் இடத்தில் சில சீட்டுகளை வாங்கி அவனை கையசைத்து வரச் சொல்ல, அவளை நெருங்கினான் எதுவும் கேட்காது காசை கொடுத்து சென்றான் அவளோடு.


கோயில் முழுவதும் சுற்றி ஒவ்வொரு சன்னதியிலும் மனமுருகி வேண்டி கடைசியாக மூலக் கடவுளான முருகனிடம் வந்தாள். வெகு நேரம் கண்ணை மூடி வேண்டியவள் இடுப்பில் சொருகி வைத்த தாலியை ஐயரிடம் கொடுத்து சாமி பாதத்தில் வைத்து கொடுக்க சொல்ல, அவள் சொன்னது போல் செய்து தேஜுவிடம் நீட்டினார். அதை வாங்கியவன் கை நடுங்க அவளை பார்க்க மனம் நிறைந்த புன்னகை கண்ணிலும் தெரிய தலை தாழ்த்தினாள்.

காதலுடன் அவள் கழுத்தில் அந்த தங்க சருடை மாட்டியவன் கண்ணில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்தது.
அதன் பின் ஐயர் கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றியிலும் வகிட்டிலும் வைத்து இரண்டாம் முறை அவளை தன் சரி பாதியாக மாற்றினான்.

அடுத்து காதலுடன் அவர்கள் சென்றது அஸ்வினி ஆதர்ஷ் மட்டும் தேஜுவின் தந்தையை காண .


தொடரும் . . . . .


இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா)..!! 22

தன் காலில் விழுந்து வணங்கிய மதுமதி மற்றும் தேஜூவை தலை தொட்டு ஆசிர்வாதம் செய்தார் சர்வேஷ் குமார், தேஜூ மற்றும் ஆதர்ஷ்யின் தந்தை.

மாமனார், "பல நூறு வருஷம் இணைபிரியாமல் இருவரும் சேர்ந்தே இருக்கணும்."

தேஜூ, "அப்பா நாங்க திரும்பி ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சாரி பா ஏதோ மதி கேட்டதால் கோவிலுக்கு போனவுடன் சாமி முன்னால் நின்று கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

மாமனார், "ஹ்ம்ம், எப்பவும் அவளின் பிடிவாதத்தில் தானே கல்யாணம் நடந்துக்கிட்டு இருக்கு இப்ப மட்டும் என்ன புதுசா சொல்ற?"

மதி, "மாமா சாரி.."

மாமனார், "உங்கள் சாரி எல்லாம் எனக்கு வேண்டாம். இன்னும் ஒரு மணிநேரத்திற்கு நீங்க ரெண்டு பேருமே எதுவும் பேசாமல் அந்த சோபா ல போய் உட்காருங்கள். நீங்க ரெண்டு பேரும் செஞ்ச தப்புக்கு மொத்த குடும்பமே ஒரு தண்டனை தர முடிவு பண்ணியிருக்கோம்."

மதியும் தேஜூவும் என்ன தண்டனை தர போறாங்க என்கிற பயத்தில் ஒருவரை மற்றவர்கள் பார்த்து கொண்டு இருந்தார்கள்.

மதுமதியின் அப்பா, அம்மா, தங்கை இந்துமதி, தோழி கனிமொழி, மற்றும் அவளின் கணவன் நகுல் அவர்களின் பெண் குழந்தை மிதுலா கூட வந்து இருந்தாள்.

அங்கே வந்த அனைவரும் அவர்களை கோபத்தில் முறைத்து கொண்டு இருந்தார்கள்.

மதியின் அப்பா, "மது மா நீ இப்படி பண்ணவே நாங்க நினைத்தே பார்க்கல."

இந்துமதி, "தேஜூ மாமா என்ன இருந்தாலும் எங்க இம்சை அக்கா சொல்லி இருந்தாலும் இப்படி ஒரு காரியத்தை நீங்க செய்து இருக்க கூடாது."

மதியின் அம்மா, "மாப்பிள்ளை உங்க மேல நான் வைத்த நம்பிக்கை மரியாதை எல்லாத்தையும் ஏற்கனவே தெரிந்து இருந்தும் இப்படி ஒரு காரியத்தை நீங்க எப்படி பண்ணலாம்.?"

நகுல், "மிஸ்டர் தேஜூ, இது தான் ரொம்ப தப்பான செயல்"

கனிமொழி, "என் தோழியும் சரி இல்ல, என் அண்ணனும் சரி இல்ல. எல்லாம் எங்களின் தலை விதி"

மிதுலா, "மதும்மா நீ நீ ரொம்ப பேட் மா. தேஜூப்பா உன் பேச்சு கா.."

ஆதர்ஷ், "டேய் தம்பி, காதல் உன் கண்ணை திரும்பியும் மறைத்து விட்டது."

அஸ்வினி, "இவள் நிலவாக இருந்தாலும் சரி, மதுமதியா இருந்தாலும் தேஜூ குடுமி எப்பவும் இவள் கையில் தான். என்ன பண்றது எங்க நிலவாக இருந்தால் ஒரு வார்த்தை சொல்லி இருப்பாள் இவள் மதுமதி ஆச்சே அதன் சொல்லல.."

பின் தேஜூ மதி ரெண்டுமே காலில் விழாத குறையாக கெஞ்ச பின் சிலரின் காலில் விழுந்து கூட கெஞ்சினார்கள்.

பின் தங்கள் தரும் தண்டனைக்கு சரி என்றால் தான் மன்னிப்போம் என ஒரே குரலாக சொல்ல, என்ன தண்டனையோ பயத்தில் தலையை ஆட்டினார்கள்.

மாமனார், "மதி அப்பா, அந்த பையில் இருப்பதை இங்க கொடுங்க."

மதியின் அப்பா பையில் இருந்த எல்லாத்தையும் வெளியே வைக்க ரெண்டு மோதிரங்கள், நூற்று கணக்கில் பத்திரிகைகள் இருந்தன.

மதி, "மாமா, அப்பா என்ன இதெல்லாம்?"

மாமனார், "புரியல இன்று உங்களுக்கு நிச்சயதார்த்தம் எங்கள் கண் முன்னே. இந்த பத்திரிகைகள் உங்களின் ஐம்பதாவது நாள் முடிந்து அடுத்த நாள் கல்யாணம் பற்றிய அறிவிப்பு."

மதி, "அதன் ஏற்கனவே எங்களுக்கு ரெண்டு தடவை கல்யாணம் ஆச்சே.."

மதியின் அம்மா, "இல்லடி, முதல் தடவை நடந்தது நீ நிலவாக இருந்த போது செய்த பிடிவாதம் மற்றும் மிரட்டல்களில் நடந்தது. யாருமே முழு மனதில் கலந்து கொள்ளாமல் ஒரு பயத்திலேயே நடந்தது. இப்போ உங்களின் ரெண்டாவது கல்யாணம் கூட மதியா நீ பிடிவாதம் பிடித்து நடந்தது. இப்போ இந்த மூன்றாவது கல்யாணம் எங்களின் பிடிவாதம். உனக்கு நிலவாக இருந்த நினைவு வர வாய்ப்பு இல்ல ஆனால் இந்த கல்யாண ஏற்பாட்டில் எல்லா சடங்கும் இன்னொரு தடவை பார்த்த சந்தோசம் உனக்கு கிடைக்கும். மதியின் கல்யாண கனவுகள் பற்றி எல்லாரும் அறிந்த ஒன்று தானே?"

மதி, "எதுக்கு தேவையில்லாமல்.."

இந்துமதி, "இல்ல கா, கண்டிப்பா நடக்கணும். நீ மதியா எல்லா சடங்கும் செய்து மாமாவை கல்யாணம் பண்ணிக்கணும் இது எங்க ஆசை மட்டும் இல்ல நீ நிலவாக இருந்த போதே எங்களுக்கு இட்ட கட்டளையும் கூட."

கனிமொழி, "பிளீஸ் ஓகே சொல்லுடி"

மிதுலா, "மதும்மா ஓகே சொல்.. சொல்லு.. பிளீஸ்.."

மதி, "என் தேஜூ பேபிக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான்."

அஸ்வினி, "இதோ பாருடா இத்தனை நாள் அவள் இஷ்டம் போல எங்க தேஜூவ ஆட்டி வைத்தவள் இப்போ புதுசா அவனை கேட்கணும் சொல்ற? என்ன தேஜூ சார் உங்களுக்கு ஓகே ஆ?"

தேஜூ, "வேண்டாம் சொன்ன விடவா போறீங்க? இந்த தண்டனையை ஏற்றுகொள்கிறேன்."

மிதி அவனை முறைக்க அவளின் கையை அழுத்தி பிடித்தவன்.

தேஜூ, "இது இன்ப தண்டனையும் கூட. எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அரிய வாய்ப்பு? ஒரே பொண்ணை மூன்று முறை கல்யாணம் செய்யும் வாய்ப்பு."

ஆதர்ஷ், "இந்த உலகத்தில் ஒரே பொண்ணை மூன்று முறையும் கல்யாணம் செய்த முதலும் கடைசி ஆள் நீயா தான் இருப்பே தம்பி. அதை கூட ரொம்ப சந்தோசமாக ஏற்றுக்கொண்டது கூட நீயா தான் இருப்பே. நானாக இருந்தால் ரெண்டாவது முறையே ஓடி இருப்பேன்."

அவன் சொன்ன பதில் கோபம் கொண்ட அஸ்வினி தன் கணவனை தனியே அழைத்து சென்று சிலபல பரிசுகளை தன் பூ போன்ற கையால் ஓங்கி கொடுத்தாள். அதை கூட தன் கெத்து மாறது வாங்கியவன் வெளிய வரும் போது ரொமான்ஸ் பண்ணோம் சொல்லி சமாளித்து விட்டான்.

அவன் சொன்னது பொய் என தெரிந்தும் யாருமே எதுவும் சொல்லாமல் நமட்டு சிரிப்புடன் தேஜூ மற்றும் மதியின் கையில் ஆளுக்கு ஒரு மோதிரம் கொடுத்து மாற்றி கொள்ள சொன்னார்கள்.

இருவருமே காதல் பார்வை பரிமாறி கொண்டு தங்களின் தனி உலகில் பயணித்து கொண்டே மோதிரம் மாற்றி கொண்டார்கள்.

மதி, "ஐ லவ் யூ டா.. என் லூசு புருசா"

தேஜூ, "லவ் யூ டூ மை ஸ்வீட் பொண்டாட்டி"

நினைவுகள் இழந்தது ஒரு முறை காதலித்து கை பிடித்து விட்டு அதே ஆளை பழைய நினைவு திரும்பி வந்ததும் இன்னொரு முறை அதே ஆளை காதலோடு திருமணம் செய்தவள். மூன்றாவது முறையாக பெற்றோர்கள் மனசு நெருக்கம் கொண்ட உறவுகளோடு திருமணம் செய்ய போகும் நாளே இப்போவே நினைத்து பரவசம் கொண்டாள் நம்ம கதாநாயகி மதிமதி நம்ம தேஜூவின் நிலா மற்றும் மதி.

அதே பரவசத்தோடு அன்று இரவே தங்கள் மாளிகைக்கு சென்றவள் அவனுக்கு பல காதல் அணைப்புகள் முத்தங்கள் வழங்கி விட்டு..

மதி, "தேஜூ, உண்மையில் நம்ம இருவரில் யாரின் காதல் பெஸ்ட்?"

தேஜூ, "காதலில் போட்டிகள் ஏன்? இதில் பெஸ்ட் வொர்ஸ்ட் சொல்ற பதிலுக்கே இடம் இல்ல. என்னை பொறுத்தவரை என் பொண்டாட்டி என்னை ரொம்ப லவ் பண்றாள் அவள் அளவுக்கு நானும் லவ் பண்றேன். அதுக்கு மேல் யார் இதில் பெஸ்ட் என்கிற கேள்வியோ பதிலோ எனக்கு தேவையில்லை. நீயும் அதை கண்டுபிடிக்க பார்க்காதே.."

அன்று இரவும் ஒன்றாக மாற்றி மாற்றி ஊட்டி கொண்டு உண்டவர்கள் முத்த பரிமாற்றம் முடிந்த பிறகு அவன் நெஞ்சில் தலை வைத்து அவள் தூங்க அவளின் இடையை கையால் கட்டி கொண்டு அவனும் தூங்கினான்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா)? - 23போட்டி போட்டு கொண்டு காதல் விளையாட்டில் வெற்றி தோல்வியின்றி பங்கு பெற்றனர்.வளர்பிறையாக நாளொரு மேனியாக காதலை வளர்த்தனர் , தேஜுவின் காதலில் திகட்டாது அனுபவித்தவளுக்கு மனதில் இருந்த ஒரே சஞ்சலம் நினைவு திரும்பவில்லை என்பது மட்டுமே.

அதை ஒரு சில நேரத்தில் மறக்கும் அளவிற்கு தேஜு காதல் புரிய, அனைத்தும் அவன் காதல் பின்னே சென்றுவிட்டது.

இதோ அவளவன் கையால் மூன்றாம் முறை மூன்று முடிச்சு தன் சங்கு கழுத்தில் வாங்க பதுமையாய் கிளம்பிக் கொண்டிருந்தாள் இந்து மற்றும் அஸ்வினியின் உதவியால் தன்னை மெருகேற்றி கொண்டிருந்தவளை அழைத்து செல்ல வந்தாள் அந்த குட்டி வாண்டு.

மதும்மா போதும் வாங்க, தேஜுப்பா தொம்ப நேதமா அங்க வெய்ட்டிங் என்று அவள் மதுவை இழுக்கும் போதே அங்கு வந்து விட்டாள் கனி.
மிது குட்டி நீங்க இந்து சித்திகூட இருங்க என்ற கனியை தள்ளி, மதுவின் கையை பிடித்து தன் முகத்தில் தவிழ்ந்த முடியை காதோரம் ஒதுக்கி தன் ரோஜா பாதத்தை தரைக்கு நோகாமல் நடந்து வந்த குட்டி தேவதையை காண இருக்கண்கள் போதவில்லை என்று அக்காட்சியை கண்ணில் நிரப்பினர் அவையில் இருந்தோர்.

அவ்வழகை ரசித்த மது, அவளை அள்ளி மிதுக்குட்டி, என்னவிட நீ தான் தங்கப்பிள்ளை இன்னிக்கு அழகா இருக்கீங்க என்று ஒரு கையால் நெட்டி முறிக்க அதில் சிரிப்பு வந்து தன் தாயிடம் தாவினாள் மிதுலா.

எத்தனை முறை இந்நிகழ்வு நடந்தாலும் நான் காதல் பார்வை பார்க்க, நீ வெட்கத்தில் பூத்து தலை தாழ்ந்து என் விரல் தீண்ட அந்த மங்கள நாணை கட்டும் தருணம் புதிதாக பிறந்தது போல் உணர்வு ஏற்படுகிறது என்று காதல் மொழி பேசி, ஐயர் கொடுக்க தங்க கழுத்தில் மஞ்சள் சரடை கட்டி தன்னுறவை பலப்படுத்தினான் தேஜு.

அக்காட்சியை தங்கள் கண்களில் நிரப்பி, பதினாறு செல்வங்களாகிய
1.உடலில் நோயின்மை,
2.நல்ல கல்வி,
3.தீதற்ற செல்வம்,
4.நிறைந்த தானியம்,
5.ஒப்பற்ற அழகு,
6.அழியாப் புகழ்,
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை,
9.நுண்ணிய அறிவு,
10.குழந்தைச் செல்வம்,
11.நல்ல வலிமை,
12.மனத்தில் துணிவு,
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்),
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி,
15.நல்ல ஊழ்(விதி),
16.இன்ப நுகர்ச்சி
என்று இச்செல்வங்களை பெற்று வாழ்வில் வளமாக வாழ வேண்டும் என்று ஆசீர்வதித்தனர் என இரு வீட்டாரும்.

வீட்டிற்கு வந்ததும் பால் பழம் கொடுத்து, சிறிது நேரம் உறங்க சொல்ல மிதுவை தூக்கி கொண்டு அவள் செல்ல பாவமாய் மூஞ்சியை வைத்து கொண்டு அவன் அறைக்கு செல்ல, நமட்டு சிரிப்புடன் தன் தமக்கையிடம் வந்த இந்து, தேஜுவின் செயலை கூறி சிரிக்க, அவனை நினைத்து அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.

மிதுக்குட்டி தூங்க, அஸ்வினி, இந்து, கனி மற்றும் மது கதை அளந்து கொண்டிருந்தனர் மதுவின் அன்னை வந்து அழைக்கும் வரை . அவளை குளித்து வர சொல்ல அவளும் புதிதாக ஏற்பட்ட வெக்கத்தை மறைத்து குளிக்க சென்றாள்.

நல்ல நேரத்தில் தேஜுவின் அறைக்கு கனிமொழியால் கொண்டு விடப்பட்டாள். தினமும் கூட இருக்கும் போது ஏற்படாத இவ்வுணர்வு இன்று ஏற்பட தன்னை நினைத்தே சிரித்துக்கொண்டாள்.

உள்ளே நுழைந்தவளிடம் இரவு உடையை கொடுத்து அதை மாற்ற சொன்ன தேஜுவை பார்த்து சிரித்தவாறு மாற்றி வந்தவள், அவன் மடியில் படுத்து எனக்கும் மிதுக்குட்டி மாறி ஒரு பாப்பா வேணும் என்று அவள் சொன்னது தான் தாமதம் அவளில் தன்னை கரைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டான் அவன் கனவு காதலியுடன் .

சில வருடங்களுக்கு பிறகு,

அஞ்சு எழுந்திரி டி, ஸ்கூலுக்கு லேட் ஆகுது என்று அறை வாசலில் நின்று மது கத்துவது எதுவும் காதில் விழுகாது தன் தந்தையின் மார்பில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்தாள் அவர்களின் காதல் பரிசு .

அஞ்சு ஒழுங்க எழுந்திரிச்சிரு என்னை டென்ஷன் பண்ணாதே என்று அவள் உச்சஸ்தானியில் கத்த, கடுப்பில் எழுந்து அவள் அப்பாவிடம் கத்த ஆரம்பித்தாள் அஞ்சனா.

அப்பா இந்த அம்மா தொல்லை தாங்க முடியலை, நைட்டானா தூங்கு தூங்குனு இம்மை பண்றாங்க காலையிலானா எந்திரி எந்திரினு சொல்லுறாங்க. பேசாமல் நீ தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டு வந்திருங்க , அப்பா பாவம் சனா தங்கம் என்று மீண்டும் தூங்க , அப்பா எழுந்திரிங்க என்று சொல்லி கொண்டிருந்தவளின் காதை திருகி குளிக்க இழுத்து சென்றாள் மதுமதி.


எழுதும் பேசாது அவளை குளிக்க வைத்து கிளப்பி சாப்பிட வைத்து பேக்கை கொடுத்து அனுப்ப , நிலாம்மா கிஸ் பண்ணலை என்று கேட்க, போடி போ உனக்கெல்லாம் நான் செட் ஆக மாட்டேன், நான் எங்க அப்பா வீட்டுக்கு போறேன் என்றவளை இடுப்பில் கை வைத்து பார்த்தவள் எனக்கு கிஸ் பண்ணலை அப்பாக்கு தெரியாம நேத்து நைட் நீங்க ஐஸ்கிரீம் சாப்பிட்டத்தை சொல்லி வைச்சிருவேன் என்று மிரட்ட.

எனக்கு மாமியார் இல்லைங்கிற குறையை நல்லா தீர்கிற, என்று அவள் தலையில் வலிக்காது கொட்டி இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு அனுப்பி வைத்து அவளவனை எழுப்பும் பணியை தொடர கிளம்பினாள்.

தேஜு எந்திரி எனக்கு ஆபிஸுக்கு லேட் ஆகுது என்றவளை இழுத்து கைவளைவில் வைத்து , நிலா பைவ் மினிட்ஸ் டா என்று தூங்க . டேய் நான் போய் கிளம்புறேன் நீ என்னமோ பண்ணு என்று எழுந்திரிக்க முயல அவன் இறுக்கியதில் அவன் மீதே சரிந்தாள்.

மது, "தேஜு இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? " .
தேஜு, " என்ன நாள் நிலா ?".
மது, " ஆறு வருசத்துக்கு முன்னாடி இதே நாள் இதே வீட்டில் தான் உன்னை முதல் முதல் பார்த்தேன்" .
தேஜு, " ஆனால் நான் உன்னை பார்த்து ஒன்பது வருஷம் ஆச்சு ".

மது , " என் செல்லமில்லை இப்பவாச்சு சொல்லுடா அன்னிக்கு என்ன தான் ஆச்சு. நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் எப்படி எனக்கு பழைய ஞாபகம் வந்துச்சு?".
தேஜு, " அது ரொம்ப சப்ப இன்ஸிடன்ட் நிலா".

மது, " என்ன கொலைக்காரி ஆக்காதே".
தேஜு, "சரி சரி சொல்லுறேன். நம்ம எல்லாரும் கோவிலுக்கு போயிருந்தோம். சரியா அந்த ஐயர் நகுலனை பார்த்து, அவசரமா கல்யாணம் பண்ணாலும் ஷேமமா வைச்சிருக்க அம்பி என்று கொளுத்தி போட்டு போயிட்டார்.
நீ கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் உன்னை சமாளிக்க முடியலை நிலா.வேற வழியில்லாமல் சொல்லிட்டேன். உனக்கு மயக்கம் வந்திருச்சு வாட்டர் பாட்டில் வாங்க போன கேப்பில் நீ முழிச்சி எல்லார்கிட்டையும் கோச்சுக்கிட்டு வண்டியில் கிளம்பிட்ட . உன்னை பொறுத்தவரை அப்போ தான் நகுலனோட கனிக்கு கல்யாணம் ஆச்சு. கொஞ்சம் பொறுமையா அவங்களை கவனித்து இருந்தாள் உனக்கே புரிந்து இருக்கும். என்ன பண்ண நீயே லவ் பெயிலியர் பீலிங் வேற கோவத்தில் வண்டியில் என்னை விட்டு போயிட்ட கஷ்டபட்டு ஆட்டோவில் உன்னை ஃபாலோ பண்ணிட்டு வந்தப்ப தான், ரோட்டில் மயங்க பார்த்த .அலேக்கா கேட்ச் பண்ணி இங்க கொண்டு வந்தேன் " என்று இவ்வளவு நாள் அவளுக்கு தெரியாத விஷயத்தை கூறினான்.

தேஜும்மா என்றவளை பேச விடாது நெற்றியில் முத்தமிட்டு, நீ மட்டும் எப்படி நிலா முதல் நான் பார்த்த மாறியே இருக்க.
அதுவா என் புருஷன் என்னை பொண்டாட்டியா பார்க்காமல் காதலியா பார்க்கிறான் என்று அவன் நெற்றியில் முட்டி கிளம்ப சென்றாள்.

சிறிது நேரம் தூங்கியவன், எழுந்து குளித்து சாப்பிட அமர்ந்தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி அவரவர் வேலைக்கு கிளம்பினர்.

காதல் கொண்ட நெஞ்சம் ஒவ்வொரு நாளும் புது புது அனுபவத்துடன் தங்கள் காதல் உலகில் சஞ்சரிக்கின்றனர். அவள் கண்ட அவனா? அவன் கண்ட அவளா ? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை அவர்களுக்கு? இன்று போல் என்றும் அவர்கள் காதல் பயணம் தொடர வாழ்த்துவோம்.


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வு
தான் ஏனோ?******சுபம்*****​இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?
 
  • Like
Reactions: Aarya moorthy