நான் கண்ட கனவு நீயடி(டா) - கதை திரி

Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 15


எப்படியோ இவனை சம்மதிக்க வைச்சாச்சு, நம்ப மாம்ஸ் என்ன சொல்ல போறாரோ? நாளைக்கு முதல் வேலையா அவரை மீட் பண்ணணும் எங்க பண்ணுறது.

காலையில் ஆது மாமாவும் தேஜூவும் ஹாஸ்பிடல் போனதும் மாம்ஸ் தனியா தான் இருப்பாரு அது தான் சரியான டைம் என்று மனக்கணக்கு போட, கள்ளியின் கண்ணசைவில் அவளது கள்ளத் தனம் புரிய அவள் நாடியை பிடித்து கொஞ்ச ஆரம்பித்தான்.

நிலா போதும் டி இதுக்கும் மேல எந்த பிளானும் போட்டுறாதே மனசு தாங்காது என்று இதயத்தை சுட்டிக் காட்ட அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது , நேரமாச்சு தேஜு நீ கிளம்பு என்று விரல்களில் தன் இடைத்தாங்கி அவன் உயரத்திற்கு எம்பி நெற்றியில் இதழ் பதித்து, உனக்கு என் மேலை நம்பிக்கை இருந்தா இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று அவன் கண்களில் விடை தேட, உன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனால் உன் ஞாபக சக்தி மேல் தான் இல்லை.

இங்க என்று அவன் இதயத்தை சுட்டிக் காட்டியவன், இங்க உன்னை தவிர எதுவும் இல்லை. மனசு முழுக்க நீ தான் இருக்க, திடீர்ன்னு உனக்கு ஞாபகம் வந்து என்னை விட்டு போயிட்டா என்ன பண்ணுறதுனு தான் என் பயம் என்று தன் மனதை அவளுக்கு வெளிக்காட்டினான்.

இவ்வளவு தான் உன் கவலையா என்க்கிட்ட அதுக்கு ஒரு ஐடியா இருக்கு, நம்ம கல்யாணத்திற்கு பிறகு நடக்கிற எல்லாத்தையும் சேகரித்து வைக்கலாம் இதை எல்லாம் பார்த்தா மட்டும் நான் நம்ம மாட்டேன். எனக்கு உன் மேல நம்பிக்கை வந்தா போதும் அதுவே நம்ம உறவை எனக்கு ஞாபகப்படுத்தும். முக்கியமா எனக்கு உன்னோட அணைப்பும் முத்தமும் தினமும் கொடு அது சொல்லும் நம்ம காதலோட ஆழத்தை . நிறையா இருக்கு என் ஞாபகத்தை மீட்க ஒரு காதலானா? எப்படி நீ இருக்கணும் என்று சொல்லிட்டேன் ஒரு டாக்டரா என்ன செய்தால் என் ஞாபகம் திரும்பும் என்று உனக்கு தெரியும் அதை செய். அப்பறம் தேவையில்லாத பயத்தை தூக்கி போட்டு நம்ம எதிர்கால கனவை மட்டும் நினைத்து இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு என்று நீண்டதொரு உரையாடலை முடித்தாள் மது.

சரி தங்கம், நீ சொன்னதை மனசில் ஏத்திக்கிட்டேன். தேவையான போது யூஸ் பண்ணிக்கிறேன், பேச்ச மாத்தாமல் நீ அடுத்து என்ன தில்லு முல்லு பண்ண திட்டம் போடற என்று அவள் கண்னை பார்த்தான்.

தேஜு உன் டாக்டர் புத்திய வைச்சு ரொம்ப யோசிக்காதே, இப்போ வீட்டுக்கு போய் ஆது மாமா கல்யாணத்தை பத்தியும் நம்ம கல்யாணத்தை பத்தியும் பேசு இப்போதிக்கு இது தான் உன் வேலை.

டாடா என்று அவனை துரத்தும் வேலையில் ஈடுப்பட்டாள் , அவளது எண்ணத்தை புரிந்து கொண்டவன் அவளை சிரமப்படுத்தாமல் ஒரு முறை அணைத்து பிரியாவிடை பெற்று வீட்டை நோக்கி சென்றான்.

அவன் சென்றதும் பெற்றோரிடம் வந்தவள், கல்யாணத்திற்கு முன்னாடியே உங்க மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றிங்க இதலாம் போங்கு என்று அவர் தோளில் சாய்ந்தாள்.

மதும்மா அந்த தம்பி இந்த ஒரு வருஷமா உன்னை பார்த்து கொண்டதை கண்ணால் பார்த்த பிறகும் உன் காதலுக்கு உதவி செய்யலை என்றால் நிஜமா எங்களுக்கு இரக்கம் இல்லை என்று தான் அர்த்தம். உனக்கு சரி ஆகும் என்ற நம்பிக்கை கொஞ்ச நாளிலேயே போய்டுச்சு, மீதி நாட்களை அவரோட நம்பிக்கையில் தான் போக்குனோம் என்று தன் தரப்பை கூறினார் மதுவின் தந்தை.

அவர் குணம் மட்டுமில்லை அவர் குடும்பத்தில் இருக்க எல்லாருடைய குணமும் எங்களை கவர்ந்திருச்சு முக்கியமா ஆதர்ஸ் தம்பி, இந்த ஒரு வருஷம் மகனா இருந்து எங்களை பார்த்துகிட்டாரு. ரொம்ப நிறைவா இருக்கு இந்த மாறி குடும்பத்தில் உன்னை இணைக்கிறது என்று மகளின் வாழ்க்கை சரியான நபருடன் நிகழ போகிறது என்ற பூரிப்பில் பேசினார் மதுவின் தாய்.

சரி நேரமாச்சு மாத்திரை சாப்பிட்டு நீ தூங்கு என்று அவளது உடல்நிலையை நினைவு செய்தார் மதுவின் தந்தை.
ஒ.கேப்பா நாளைக்கு என் மாமனார் கூட ஒரு மீட்டிங் அரேஞ் பண்ணி கல்யாணத்தை பத்தி பேசங்க என்றாள்.

உனக்கு முழுசா குணம் ஆகுற வரை காத்திருக்கலாம் மதும்மா எதுக்கு இவ்வளவு அவசரம் என்றவரை கூர்ந்து பார்த்து, நீங்களும் என்னப்பா தேஜு மாறியே பேசறிங்க, அவன் தான் டாக்டர் ஆச்சே எனக்கு மறந்தாலும் எப்படி ஞாபகப் படுத்தனும் என்று அவனுக்கு தெரியும் நீங்க கல்யாணத்தை எப்படி பண்ணலாம் என்று மட்டும் யோசிங்க என்று கூறியவள் தன் அறைக்கு சென்று மாத்திரையை உண்டு தன்னுயிர் தோழிக்கு அழைப்பேசியில் அழைப்பு விடுத்தாள்.

ஹலோ என்று நகுலன் பேச, ஒரு நிமிடம் தயங்கி நான் மது பேசுறேன் கனி இல்லையா என்றாள் மெல்லமாக.
அவள் வாக்கிங் போயிருக்கா மது, எதாவது பேசனுமா என்றான் நகுலன்.
இல்லை சும்மா தான் கூப்பிட்டேன் காலையில் பேசிக்கிறேன் என்று அவன் பதிலை கேட்காது துண்டித்தாள் மது.

அவளது செய்க்கையால் வருத்த படவில்லை நகுலன், காரணம் இந்த நான்கு மாதம் அவனிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் இதுதானே எதையும் கண்டுக் கொள்ளாது கனி வந்ததும் மது அழைத்ததை கூறி உறங்க சென்றான்.

மேடிட்ட வயிறுடன் அவன் அருகே அமர்ந்தவள் நகுல், உனக்கு தான் மதுவோட நிலைமை தெரியுமே இப்போ எதுக்கு பீல் பண்ற என்றவளை பார்த்து, உண்மை தெரிந்ததும் அவள் என்னை மன்னிக்க மாட்டா தானே என்று கவலையாக கேட்டான்.

அப்படி எல்லாம் இல்ல நகுல் அவளுக்கான காதல் நீ இல்ல தேஜு அது அவளுக்கு புரியும் வரை நம்ம பண்ணது தப்பா தான் தெரியும் அது புரியும் போது அவள் ஏற்றுப்பாள். இப்போ அவளை பொறுத்த வரைக்கும் நீங்க என்னோட ஹஸ்பண்ட் அவ்வளவு தான்.

சோ உன் கற்பனை எல்லாம் தூக்கி போட்டு தூங்குங்க, மதுவுக்கு உங்க நிலைமை புரியும் அப்படி புரியலை என்றால் நான் புரிய வைக்கிறேன் இப்போ தூங்கலாம் என்று அவனை அணைத்து படுத்தாள்.

வீட்டிற்கு வந்த நான் ஆதர்ஷிடம் கூறி நம்ம கல்யாணத்தை பற்றி பேச சொல்ல, எடுத்தவுடன் மறுத்துட்டார் அப்பா, இது வேலைக்கு ஆகாது என்று நானே பேசினேன்.

அப்பா ஏன் மறுக்கிறிங்க என்று கேட்டேன்ன்.
மதுக்கு ஞாபகம் வந்ததும் கல்யாணம் பண்ணணும் , இது மதுவோட மாமனாரா என் பதில் என்று விறுவிறுவென்று அறை கதவை அடைத்து விட்டார்.

விடியலை நோக்கி காத்திருந்த நிலாவிற்காக நிலவு மறைந்து ஆதவன் வந்தான்.

எட்டு மணி வரை காத்திருந்த நீ, உன் வருங்கால மாமனாரை பார்க்க பறந்து வந்த.


தொடரும். . . .


இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 16

சர்வேஷ் குமார் எங்க அப்பா அவரை பார்க்க நீ அன்னிக்கு அவர் தனிமையில் இருக்கும் போது வந்தே..

சர்வேஷ் குமார் (மாமனார்), "இங்க பாரு மதுமதி நீ என்ன சொன்னாலும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்ட. எனக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை என இல்ல உன்னை பிடிக்காதுன்னு என்று இல்ல. என்னோட பயமே உன்னுடைய ஞாபகமறதி தான். எங்கே அது திரும்பி வரும் போது சேர்த்து என் பையனின் நினைவு சேர்த்து போய்டும் பயம். என் மனைவி அதன் தேஜூவின் அம்மா உன்னோட மாமியார் அவளுக்கு பிறகு தேஜு உன் மேல் தான் உயிராக இருக்கான். ஒருவேளை உன் பழைய நினைவு திரும்பிய பிறகு அவனைப்பற்றி நினைவுகள் உனக்கு இல்லையென்றால் உடைந்து போய் விடுவான். காதலனை மறப்பது விட கட்டிய கணவனை மறப்பது கொடுமை உனக்கும் அந்த கஷ்டம் வேண்டுமா?"

மதுமதி, "அப்படி ஒன்னும் நடக்காது மாமா அதற்கான எல்லா ஏற்பாடும் செய்வோம். கல்யாணத்துக்கு பிறகு எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வீடியோ மாதிரி ரெக்கார்ட் பண்ணிட்டு தான் நாட்களை முடிப்போம். நீங்க எல்லாம் பயப்படுவது போல நினைவு போனாலும் இந்த வீடியோ சாட்சிகள் மட்டும் போதாதா என்னை நம்ப வைக்க? அத்தோடு என் ஆழ்மனதில் தேஜூ மேல் எனக்கு இருக்கும் காதலை நான் உணர்ந்தால் மட்டும் போதும் இந்த வீடியோஸ் கூட தேவையில்லை"

மாமனார், "காதல் இதம்மா இப்போ இப்ப பிரச்சனையே உனக்கு நினைவு திரும்பும் போது தேஜு மேலிருக்கும் காதல் மொத்தமாக போய்விடும். அந்த காதலன் இடத்தில் இன்னொரு ஆள் வந்து விடுவான்."

மதுமதி, "என்ன சொல்றீங்க புரியல? நாங்க காதலித்த நினைவு போகிறது சரி, இன்னொருவன் வருவான் என்று சொல்றீங்க அது எப்படி?"

மாமனார், "அந்த ஆக்சிடென்ட் க்கு முன்னாடி உனக்கு ஒரு காதலன் இருந்தான். அவன் பேர்.. இல்ல அது வேண்டாம் அவனால் உனக்கும் எங்களுக்கும் பிரச்சினை இல்ல அவன் ரொம்ப நல்லவன் வேறு ஒரு பெண்ணோடு அவனுக்கு கல்யாணம் கூட ஆச்சு. அந்த பெண் என நினைத்து உன்னை தவறுதலாக உன்னை காதலித்தவன் உண்மை தெரிந்த போது அன்றே அந்த பெண்ணிற்கு தாலி கட்டி மனைவி ஆகிவிட்டான். அதைக் கண்டு அதிர்ச்சியில் தான் நீ வண்டி வேகமாக ஓட்டிக்கொண்டு போனதும் என் பையனின் வண்டியில் முட்டி அடிபட்டு விழுந்ததும்."

நிலா ரொம்ப யோசிக்கல ஒரே வார்த்தையில் பதில் சொல்லிட்ட..

மதுமதி, "மாமா நீங்க சொல்வது உண்மை என்றால் கவலைப்படாமல் எங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.."

மாமனார், "என்னம்மா லூசு தனமா பேச பேசுற? நான் சொன்னது புரியல உன் நினைவு திரும்பும் பட்சத்தில் தேஜூ மேல் இருக்கும் காதல் மறந்து உன் மனதில் அவனோட இடம் போய் வேற ஒருவன் வந்துவிடுவான். அப்புறம் என்ன ஆனாலும் அவனுக்கு நீ கிடைக்க மாட்ட. அதுவே நினைவு திரும்பியதும் அவன் மேல் அதே காதலோடு நீ இருந்தால் நானே ஜாம் ஜாம்னு கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன் இது உங்க ரெண்டு பேருக்குமே நல்லது. இதை நான் என் அப்பாவை பேசல உன்னோட வருங்கால மாமனார் ஆ பேசுறேன்."

மதுமதி, "மாமா, என்னைப் பற்றி நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். சினிமா வசனம் மாதிரி தான் இருக்கும் ஆனாலும் கேட்டுக்கோங்க என்னோட காதலன் இன்னொருத்திக்கு கணவன் ஆகலாம். ஆனால் இன்னொருத்தியின் கணவன் எனக்கு காதலனாக முடியாது. நான் யாரை காதலித்து இருந்தாலும் என் கண் முன்னால் எப்ப அந்த ஆள் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினானோ அப்பவே என் மனதிலிருந்து அவனை தூக்கி போட்டு இருப்பேன். அப்படி இருந்தும் ஏதோ திடீர் அதிர்ச்சியில் நான் வண்டியை வேகமாக ஓட்ட அதில் விபத்து ஏற்பட்டு இருக்கும். இதுதான் நடந்திருக்கும் சொல்ல ல இப்படியும் நடந்து இருக்கலாம் சொல்கிறேன். என்னை நம்புங்க என் தேஜூ கூட நான் கடைசிவரை இருக்க ஒரே வழி இந்த கல்யாணம் மட்டும் தான். கண்டிப்பா அந்த பழைய காதல் என் மனசில் இல்ல அப்படி இருந்து இருந்தால் இந்த நேரத்தில் நான் உணர்ந்து இருப்பேன். தேஜூவின் காதலை நம்ப எனக்கு நினைவுகள் தேவையில்ல மனதின் உணர்வுகள் போதும்."

மாமனார், "இருந்தாலும் மருமகளே.."

மதுமதி, "அதன் மருமகள் என வாயால் சொல்லிட்டீங்களே அப்பறம் என்ன மாமா தயக்கம்? நான் மதுவா இருந்தாலும் மதியா இருந்தாலும் உங்க மகனின் நிலாவாக இருந்தாலும் என் காதல் எப்போதும் அவனுக்கு தான். அதை மனதில் வைத்து சீக்கிரம் கல்யாணம் ஏற்பாடு செய்யுங்க இல்ல அவன தூக்கிட்டு போய் குடும்பம் நடத்திடுவேன்.."

மாமனார், "வாலு.. வாலு. என்னவெல்லாம் பேசுற எப்படி தான் என் மகன் உன்னை சமாளிக்க போறான் தெரியல."

மதுமதி, "ஹ.. ஹ.. அதற்கு நிறைய வழிகள் இருக்கு உங்களுக்கு சொன்ன புரியாது ஏன்னென்றால் உங்களுக்கு ரொம்ப வயசு ஆச்சு. ஓல்டு மேன் நீங்க.."

மாமனார், "அடிங்கு.. என்னைய கிழவன் சொல்ற?"

மதுமதி, "கிழவன் சொல்லல.. ஓல்டு மேன் சொன்னேன். ஓல்டு இஷ் கோல்டு மாமா.. நீங்க தங்கம் ல உடனே எங்களுக்கு கல்யாண ஏற்பாடு செய்விங்களாம் அங்கே ஒவ்வொரு வருடமும் பிள்ளை குட்டி பெற்று போடுவோமா அதையெல்லாம் நீங்க மடியில் போட்டு கொஞ்சுவிங்களாம். என்ன ஓகே ஆ?"

மாமனார், "ஹ்ம்ம்.. பேசி பேசியே உனக்கு காரியம் சாதிக்க தெரியுது. சரி சரி கடவுள் மேல் நம்பிக்கை வைத்து கல்யாண ஏற்பாடு செய்கிறேன்."

மதுமதி, "கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது போல எங்க காதல் மேல் கூட நம்பிக்கை வைங்க மாமா. ரெண்டிலே எது பலித்தாலும் முடிவில் எல்லாருக்கும் சந்தோசம் தானே.."

மாமனார், "அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். எங்க வீட்டுக்குள் ரெண்டு மருமகள்களும் காலெடுத்து வைக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்."

அப்பறம் என்ன அப்பாவின் சம்மதம் கிடைத்த உடனே வேக வேகமாக கல்யாண ஏற்பாடு நடந்து ஒரே மாசத்தில் உன் கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கி கொண்டேன்.

இப்போ கூட நினைவு இருக்கு நிலா, உன் கண்ணில் இரு சொட்டு கண்ணீர் விழ நான் தாலி கட்டினேன். அப்ப தான் முதல் முறையாக யார் பார்த்தாலும் கவலை இல்லனு உன் இதழில் ஒன்று, கன்னம் இரு பக்கமும் ஒன்று ஒன்று, நெற்றியில் ஒன்று என முத்தம் தந்தேன்.

காமத்தில் சேர்ந்தது முத்தம் இல்ல நிலா. அதே நீயே சொல்லி இருக்கே அப்படி தான் அந்த முத்தங்கள் கொடுத்தேன்.

இங்க உன்கிட்ட காலை ஒன்று, மதியம் ஒன்று மற்றும் இரவு ஒன்று என இதழ் முத்தம் கேட்டது கூட அதன் மூலம் நம்ம காதலை உணர வைக்க தான்.

சண்டை போட்டது, கொஞ்சி பேசியது தாண்டி இந்த முத்தங்கள் தான் நிலா நாம் காதல் வாழ்க்கையை விட கல்யாண வாழ்கையில் நிறைய இருந்தது.

கல்யாணம் என்னமோ உன் பிடிவாதத்தால் நடந்தது. ஆனால் கணவன் மனைவி பந்தம் உனக்கு பழைய நினைவு திரும்பிய பிறகு தான் என்பதில் நான் தெளிவா இருந்தேன்.

எனக்கு நிலாவின் காதல் மட்டும் இல்ல.. இந்த நினைவு திரும்பிய மதுமதி.. இந்த மதியின் காதலும் வேண்டும். உன் எல்லா நிலையிலும் உனக்கு என் மேல் காதல் வந்த பிறகு தான் உடலால் இணையனும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நிலவாக உனக்கு அப்போ அதில் சம்மதம் இல்ல. அப்படி இருந்தும் உன் அளவுக்கு என் பிடிவாதம் கண்டு சரி என்றாய்.

கணவன் மனைவி வாழ்க்கை தொடர நாட்களை தள்ளி போட்டாலும் நீ காதல் சேட்டைகளை நீ விடல.. தினம் தினம் சேட்டைதான்.

அதில் சில,

1. ஒரே படிக்கையில் தான் இருவரும் தூங்க வேண்டும்.

2. காலை, மதியம் மற்றும் இரவு நினைக்கும் நேரத்தில் முத்தம் கட்டாயம்.

3. தினம் ஒரு படம் ஒன்றாவது சேர்ந்து பார்க்கணும் அதுவும் நீயோ நானோ மடியில் படுத்து கொண்டு.

4. ஒருவேளை உணவாது சேர்த்து சமைக்க வேண்டும்.

5. காலையில் ' ஐ லவ் யூ ' என்ற காதல் வார்த்தையில் தொடங்கும் நம்ம நாள் அதே காதல் வார்த்தையில் முடியணும் சொன்னாய்.

என்ன அப்படி பார்க்கிறாய் இந்த ஐம்பது நாள் காதல் பண்ண பாத்திரத்திலும் இதே ரூல்ஸ் எல்லாம் வந்தது என்று தானே.

அந்த பத்திரத்திலிருந்த எல்லாத்துக்கும் அடித்தளமே நீதான். நீ சொன்ன பத்து ரூல்ஸ் அதில் எழுதி வைத்தேன்.

அது எல்லாம் என் நிலாவுக்கு பிடித்த விஷயங்கள் ஆனால் இப்போ எனக்கு முன்னாடி இருக்கும் உனக்கு மதிக்கு பிடிக்காத உன்னை விருப்பமே இல்லாமல் கட்டாயப்படுத்தும் விஷயங்கள்.

நினைவு திரும்பினாலும் என் நிலவாக அவள் இருப்பேன் என்றால்.. அப்படி நினைவு திரும்பிய பிறகு மதுமதியாக மட்டுமே இருக்கே..

ஏன்? ஏன்? இப்போ உன்னை நான் எந்த விதத்தில் பார்ப்பது சொல்லு மதி! சொல்லு! காதலனாகவும் இல்லாமல் கணவனாகவும் இல்லாமல் உனக்கு யாரோ ஒருதனாக என்னால் இருக்கே முடியல டி.. தினம் தினம் எப்போ நீ என் காதலை புரிந்து கொள்வாய் என எதிர்பார்த்து எதிர்பார்த்து கொஞ்ச கொஞ்சமாக உயிர் போகுது.

இனி என்ன??

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 17


தேஜு, " நடந்தது எல்லாவற்றையும் சொல்லிட்டேன் மதி, இதுக்கு மேல நீ தான் சொல்லனும் என்ன பண்ணனும் " என்று கவலையாக கேட்டான்.
மது, " நான் என்ன சொன்னாலும் கேட்பியா?" என்றாள் கேள்வியாக ..

தேஜு, " நீ என்ன சொன்னாலும் அதை நான் கேட்டேன் இனியும் அப்படி தான் கேட்பேன்" என்றான் தீர்க்கமாய் .
மது, " அப்போ சரி. நம்ம அக்ரிமென்ட் படி இப்போ பத்து நாள் முடிஞ்சிருக்கு, இன்னும் நாற்பது நாள் இருக்கு. அதில் எனக்கு ஞாபகம் வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி. இந்த மதுமதியோட காதல் தேஜுவோட தான் " என்றாள்.

தேஜு, " அப்போ நகுலன்?".
மது, " நகுலன் என் வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயம். நீ சொன்ன மாறி எனக்கு அவர் மேல் இருந்தது காதல் இல்லை வெறும் ஈர்ப்பு தான் போல".

என்ன சொல்ல வர என்று நேரடியாய் கேட்டான் தேஜு.
நிலா என்ற பேர் என்ன டிஸ்டர்ப் பண்ண அளவுக்கு கூட நகுலன் நினைவு என்ன எதுவும் பண்ணலையே அப்போ அதுக்கு காதல் இல்லைன்னு தானே அர்த்தம்.

மதி நிஜமா நகுலன் மேல எந்த பீலீங்கும் இல்லையா? என்றான் தேஜு.
ஏன் இல்லை இருக்கே, ஆனால் நீ நினைக்கிற மாறி இல்லை. அவனோட அவசரத்தால் எனக்கு ஏற்ப்பட்ட கோபம் தான் அதுக்கூட உன்னை பார்க்கிற வரை தான். உன்னை பார்த்ததும் எனக்கு நானே புதுசா தெரிந்தேன்.

ஒரு நாள் கூட இந்து கூட பேசாமல் இருந்தது இல்லை இந்த பத்து நாளில் அவளை மறந்தே விட்டேன்.
அடிபாவி உன் ஆளை பார்த்ததும் கூட பொறந்த தங்கச்சியே மறந்துட்ட என்று பொய்யாய் கோபித்து தேஜுவிடம் சென்றாள் மதுவின் தங்கை இந்துமதி.

நீ எப்போ டி வந்த என்று அவளை அணைத்து கொண்டாள் மது.
போடி நான் உன் கூட பேச மாட்டேன் என்று முகத்தை திருப்பி கொள்ள, அம்மு இல்லை செல்லம் இல்லை ஐஸ்கிரீம் வாங்கி தரேன் டி, அக்கா பாவமில்லை பேசு டி என்று கெஞ்சினாள்.

மதும்மா என்ற குரலால் மதுவை தன் புறம் ஈர்த்தாள் அந்த குட்டி தேவதை.
யார் இந்த குட்டி என்ற கேள்வியுடன் அவளை இரு கைகளால் அள்ளி கொஞ்சிய படி இந்துவை பார்க்க, எங்க பொண்ணு தான் மது என்று வசீகரிக்கும் குரல் வந்தது வாசலில் இருந்து.

வாங்க என்று அழைத்ததோட சரி, பின்னால் வந்த தந்தையின் மீது கண்கள் போக யாரையும் காணாது அவரிடம் சென்றாள்.

மதும்மா அப்பானாலை உன்னை இப்படி பார்க்க முடியலை டா . உன் பிடிவாதத்தில் கல்யாணம் பண்ண எல்லா சரியா போகும் நேரத்தில் இப்படி ஆகிருச்சு. பழசு ஞாபகம் வந்திருச்சு என்று சந்தோஷம் படுகிறதா இல்லை நடுவில் நடந்தது எல்லாம் மறந்திருச்சு என்று கவலை படுறதானு தெரியலை என்றார்.

அப்பா நீங்க எதுக்கு இப்போ பீல் பண்றிங்க நான் தானே பிடிவாதமா கல்யாணம் பண்ணேன் , அதே பிடிவாதம் தான் இப்பவும் இருக்கு ஞாபகத்தில் இல்லை என்பதற்காக எல்லாத்தையும் விட முடியாது. இதுக்கு முன்னாடி எனக்கு தேஜுவை எவ்வளவு பிடிக்கும் என்று தெரியாது ஆனால் கண்டிப்பா இதுக்கு மேல் அவனை தவிர யாரையும் எனக்கு பிடிக்காது. இப்போ என்ன நடந்துச்சு எனக்கு ஞாபக மறதி அவ்வளவு தானே. அதை எப்படி சரி செய்யனும் என்று அவனுக்கு தெரியும் நீங்க கவலை பட வேண்டாம் என்றவள்.

கையில் இருந்த குட்டியின் கன்னத்தை தட்டி பேபி பேரு என்ன என்றதும், கனியை பாவமாக பார்த்தது.
கனி, " மிதுலா டி பாப்பா பேரு ".
மது, " மிதுக்குட்டிக்கு என்னை எப்படி தெரியும் " என்றாள்.

நல்லா கேட்ட போ, நீயும் அவளும் சேர்ந்தீங்க வீட்டையே ரெண்டு பண்ணிருவிங்க. அவளுக்கு நீ என்றால் உயிர், மதும்மா மதும்மா இந்த பத்து நாளில் உயிர வாங்கிட்டா என்று தான் பெற்று எடுத்த ரத்தினத்தை பற்றி பெருமையாக கூறினாள் கனிமொழி.

பிஞ்சு விரலால் அவள் கன்னத்தை திருப்பி, மதும்மா என்க போத, நா தேதேன் தெதியுமா? என்று அவளை கேட்டாள் மிதுலா.
அதுவா குட்டி என்று அவள் வாய் எடுக்க, குட்டி இல்ல நான் மிதும்மா என்று அவளுக்கு எடுத்து கொடுத்தாள்.

ஆமாம் ஆமாம் , அம்மா மறந்துட்டேன். சாரி மிதும்மா .
மதும்மா தேஜுப்பா கூட டூ விடு, எனக்கு சாக்கி வாங்கி தரல என்று தேஜுவை அவனது நிலாவிடம் போட்டு கொடுத்தாள் மிது குட்டி.

தேஜு, "அச்சோ என் மிதுக்குட்டி இப்படி என்கிட்ட கோச்சுக்கலாமா? அப்பா பாவமில்லையா? சாரி டா பட்டு ".
மிது குட்டி, " சாரி சொன்னா, மதும்மா தித்து வாங்க முத்தா தா " என்று நெற்றியை காட்டினாள்.
டேய் குழந்தையையும் விடலையா என்ற மது கேட்க, அடிப்பாவி எல்லாத்தையும் நீ பண்ணிட்டு இப்போ என்ன சொல்றியா? என்று அவளை சீண்டினான் தேஜு.

சரி சரி நேரமாச்சு சமைக்கனும் வா என்று மிதுவை கனியிடம் விட்டு யாரும் உதவிக்கு வேண்டாம் என்று தேஜுவை இழுத்துக் கொண்டு சமையல் கட்டிற்குள் மறைந்தாள் மதுமதி.

எதுவும் பேசாது சமைக்கும் மதுவை பார்க்கும் போது ஏதோ தவறாக பட்டது. அவளது நாடியை நிமிர்த்தி பார்க்க, நீர் திரையிட்ட விழிகளே அவனுக்கு தெரிந்தது.

ஏய் நிலா, எதுக்குடி அழுகிற என்றான்.
என்னால் எல்லாருக்கும் பிரச்சனை தானே. யாருக்கும் நிம்மதியே இல்லை என்று அவனை நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.

இங்க பாரு நிலா, எனக்கு நீ எப்பவும் முதல் நாள் பார்த்த மாறி தான் இப்பவும் தெரியுற. முக்கியமா உனக்கும் எனக்கும் இருக்க உறவு உடலால் இணைந்தது இல்லை உணர்வுகள் இணைந்தது. என்னை உன்னால் உணர முடியும் , இல்லைனால் இந்த பத்து நாள் கூட இருந்து இருப்பியா? இல்லை என்று தலையசைத்து , முதல் முதலா உன்னை பார்த்த போதே ஒரு வித பீல் இருந்துச்சு, வில்லன் ரேஞ்ச்சுக்கு நீ பேசினாலும் உன் கண்ணில் காதல் இருந்துச்சு.

என் மனசு உன் பக்கம் சாய ஆரம்பிச்சுடுச்சு அதை தடுக்க தான் உன்னை காயப்படுத்திர மாறி பேசினேன். ஆனா அது உன்னை விட என்னை தான் ரொம்ப பாதிச்சுது. நீ நிலா என்று சொன்னதும் அந்த பொண்ண கொல்லுற அளவுக்கு வெறி வந்தது.

அப்போ அதுக்கான காரணம் தெரியலை இப்போ தான் புரியுது ஏன் அப்படி தோணுச்சுனு .
நீ என்னோட தேஜுன்னு மனசு சொல்லுது, எப்போ மூளையும் சொல்லுதோ அப்போ தான் என்னால் நிம்மதியா இருக்க முடியும்.

என்ன பண்ணுவியோ எங்க கூட்டிட்டு போவியோ தெரியலை, பட் எனக்கு ஞாபகம் வர எதாவது செய். இப்படியே இருந்தா நான் உனக்கு துரோகம் பண்ணுற மாறி இருக்கு என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு சமையலை கவனித்தாள்.

சமைக்கும் அவளையே பார்த்து இருந்தவனுக்கு இதே போல் கல்யாணம் ஆன புதிதில், தன்னுடன் சண்டையிட்டு தன்னை விட்டு சமைத்து, தன்னை விட்டு சாப்பிட்ட நாளை நினைத்து இதழோரம் குறும்பை தவிழவிட்டு அவளை பார்த்தான் தேஜு.

அவன் பார்வையில் தெரிந்த கள்ள தனத்தை விழி விரித்து பார்த்தாள் மதுமதி.


தொடரும். . . .


இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 18

அவன் பார்வையில் தெரிந்த கள்ள தனத்தை விழி விரித்து பார்த்தாள் மதுமதி.

மதி, "என்னடா அப்படி பார்க்கிற? இதில் கூட ஏதாவது ஃப்ளாஷ்பேக் இருக்க?"

தேஜூ, "அறிவாளி டி நீ, எஸ் இருக்கு. நீயும் நானும் கல்யாணத்துக்கு பிறகு முதல் முதலில் போட்ட சண்டையில் நீ போட்ட ருலே நீயே உடைந்து தனியே சமையல் செய்ய வந்தாய். அதை நீயே என்னை பார்க்க வைத்து சாப்பிட்ட"

மதி, "எதற்கான சண்டை அது?"

தேஜூ, "ஃப்ளாஷ்பேக் போவோம்.."

*************

நிலா, "தப்பு பண்ணிட்ட டா தப்பு பண்ணிட்டே. நம்ம முத்தம் குறைந்தது ஒரு நிமிடம் நீடிக்க வேண்டும். ஆனால் நீ காலையில் கொடுத்த முத்தம் 58 நொடிகள் வரை தான் நீடித்தது. அதுக்கு உனக்கு தண்டனை கண்டிப்பா இருக்கு. ரொம்ப பெரிய தண்டனை.."

தேஜூ, "நிலா ரெண்டு நொடிக்காக ஏன் தண்டனை எல்லாம் சொல்ற? திடீர் முக்கிய ஃபோன் கால் வர அதன். நீ ஃப்ரீயா விடுமா, அடுத்த தடவை ஒண்ணுக்கு ரெண்டு நிமிஷம் கொடுக்கிறேன்."

நிலா, "இல்ல.. சொன்னது சொன்னது தான். அடுத்த தடவை சேர்த்து தர பேச்சே இல்ல இது காதல் கணக்கு அப்போ அப்போ கொடுப்பது மட்டுமே கணக்கு."

தேஜூ, "சரி சாரி, என்ன தண்டனை?"

நிலா, "இன்னிக்கு ஒரு நாள் நீ தனியே சமையல் செய், நான் தனியே சமையல் செய்கிறேன். இன்னிக்கு ஒரு நாள் தனி தனியாக சாப்பிடணும். ஊட்டி விடுவது எல்லாம் இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இல்ல.."

தேஜூ, "இது அநியாயம் அக்ரமம்."

நிலா, "நீ எனக்கு பண்ண அநியாயத்திற்கு இதுதான் தண்டனை."

தேஜூ, "இரண்டு நொடிகள் முத்தம் குறைந்தது என்பதற்கா இவ்வளவு பெரிய தண்டனை. உன் கையால் சாப்பிடாம எனக்கு நாள் ஓடாது என்று உனக்கு தெரியாது. உப்பில்லாத உணவு கூட உன் கையில் சாப்பிட்டால் அமிர்தம் இல்லையா?"

நிலா, "உன்னோட வசனத்துக்கு மயங்க மாட்ட போடா. எனக்கு பசிக்குது நான் சமைத்து சாப்பிட போறேன்."

சமையல் அறையில் தோசை சட்னி செய்து சமைத்த நிலா, தேஜூவை பார்க்க வைத்து சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்த பிறகு..

நிலா, "இப்போ உன் முறை நீ போய் சமைத்து சாப்பிடு.."

தேஜூ, "பின் உன் இஷ்டம்."

வித விதமான காய்கறிகள் நறுக்கியவன் அதனை எல்லாம் வைத்து வெஜிடபிள் பிரியாணி செய்தான். அதற்கு சைடு டிஷ்ஷாக தயிர்பச்சடி பன்னீர் குருமாவும் செய்தான்.

நிலா மாதிரி அவன் பார்க்க வைத்து சாப்பிடல சாப்பிடுவதற்கு முன்னாடி..

தேஜூ, "இப்பவும் கெட்டு போல நீ சாப்பிட்டது ரெண்டு தோசை தான். இங்கே வந்தால் இதை மாற்றி மாற்றி உட்டிகொண்டே சாப்பிடலாம். என்ன சொல்ற?"

நிலா, "நான் சொன்னது சொன்னது தான். அதில் மாற்றம் இல்ல நீயே சாப்பிடு நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்."

தேஜூ, "அப்பறம் உன் இஷ்டம்.."

சாப்பாட்டை ஒரு வாய் எடுத்து வைக்க போனவனை ஓடி வந்து தடுத்து அவன் கையில் இருந்த உணவினை உட்டி விட்டு..

நிலா, "இங்கே பார் நான் உயிரோட இருக்கும் வரை நான் தான் உட்டி விடுவேன். எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் நான் தான் உனக்கு உட்டி விடுவேன் அதே மாதிரி நீயும்.."

பின் எதுவும் பேசாமல் மாற்றி மாற்றி வயிறு நிறைய சாப்பிட்டு முடித்தவர்கள் ஒருவர் மீது மற்றவர் சாய்ந்து கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

நிலா, "நீ எப்படி நான் உட்டாமல் சாப்பிடலாம்?"

தேஜூ, "நீ மட்டும் சாப்பிடல.."

நிலா, "ஆமாம் ஆமாம் சாப்பிட்டேன். வயிறு நிறைய சாப்பிட முடியல. அந்த ரெண்டு தோசையை நீ பார்க்கும் போது வாயில் போட்ட மாதிரி போட்டு விட்டு நீ அசரும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதை துப்பி விட்டேன்."

தேஜூ, "ஹ்ம்ம்.. பார்த்தேன் பார்த்தேன். அதன் வேண்டுமென்றே இப்படி ஒரு நாடகம் பண்ணேன். எனக்கும் உன் கையால் சாப்பிடாமல் இருக்க முடியாது. இருந்தாலும் ஏதாவது சூழ்நிலையில் நீயும் நானும் பிரித்து இருக்கணும் நிலை வந்தால் என்னடி பண்றது."

நிலா, "நம்ம ஏன் பிரிய போறோம்.?"

தேஜூ, "ஒரு வேளை வேலை விஷயமாக நான் வெளியூர் போக வேண்டியது வந்தால் இல்ல உன்னால் ஊட்டி விடாத முடியாத ஒரு நிலை வந்தால்?"

நிலா, "ஹ்ம்ம்.. அதற்கு ரெண்டு யோசனை இருக்கு. ஒன்று நீ அந்த வேளை மட்டும் சாப்பிடாதே, ரெண்டு ரொம்ப பசியாக இருந்தால் சாப்பிட்டு விட்டு ரெண்டு பேருமே எத்தனை வேளை மிஸ் ஆச்சோ அதனை ஒவ்வொரு வேளைக்கு ஐந்து நிமிட முத்தம் தரணும். எப்படி ஐடியா? முத்தத்தால் ஏற்ப்பட்ட சண்டைக்கு முத்தமே முடிவு கட்ட வேண்டும். இனி எல்லா தண்டனையும் ஐந்து நிமிட முத்தம் தான்."

பின் கொஞ்சமாக அவள் தோசையை சாப்பிட்டதற்கு அந்த முத்த தண்டனை கொடுக்க ஆரம்பித்தான். அவளும் அந்த தண்டனையை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டாள்.

*************

ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்தவன் மதியை பார்க்க அவளுக்கு அப்போ தான் சில நாள் முன்னாடி அவன் கேட்டு பெற்ற ஐந்து நிமிட முத்தம் நினைவுக்கு வந்தது.

மதி, ஓ.. அதன் அன்னிக்கு மிருதன் படம் பார்த்த அன்னிக்கு அப்படி ஒரு தண்டனை கேட்டியா?"

தேஜு, "ஆமாம், அது மட்டும் இல்ல உனக்கு திரும்பிய அடுத்த நாளே இங்க நாடகம் போட்டு தூங்கி வந்துவிட்டேன். நீ எழுந்து ஒரு வாய் உணவு ஊட்டும் வரை நானும் சரி நீயும் சரி எதுவுமே சாப்பிடல. என்னை பற்றிய நினைவு இழந்த நிலையில் கூட என் கைப்படாமல் நீ சாப்பிடல.."

நிலா, "எல்லாம் யாரின் யோசனை..? இந்த படம் விஷயங்கள் கூட.."

தேஜூ, "எல்லா யோசனைக்கு காரணம் நீ தான். அது உனக்கே திரும்புகிறது.. படம் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது இந்த பத்து நாளில் நம்ம பார்த்த படம் கூட ஏற்கனவே சேர்ந்து பார்த்து சில கலாட்டா பண்ணி இருக்கோம்."

மதி, "அதையும் சொல்லேன்.."

அப்போ ரொம்ப நேரமாக கிச்சன் ல அவர்கள் இருந்ததால் சந்தேகம் கொண்டு கனிமொழி அங்கே வந்து அவளை அழைத்து கொண்டு சென்றாள். செல்வதற்கு முன் தேஜூகிட்ட..

கனிமொழி, "அண்ணா, நாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விடுவோம் அப்பறம் உங்க காதலி பொண்டாட்டி உங்க கூட தான் இருப்பாள். அப்போ உங்க ரொமான்ஸ் எல்லாம் வைத்து கொள்ளுங்கள்."

தேஜூ, "கனி, உன் பொண்ணும் சரி நீயும் சரி எங்கள் நடுவில் வந்து வந்து கொடுமை பண்றீங்க. இரு இரு உன் புருசன் கிட்ட சொல்லி உனக்கு தண்டனை தர சொல்றேன்."

கனிமொழி, "எது உங்களின் முத்த தண்டனை போலவா? மது ஏற்கனவே நிலவாக இருந்த போதே அந்த தண்டனைகளை எங்க வீட்டில் கொண்டு வந்துவிட்டாள் என் மூலமாக.."

தேஜூ, "நல்ல தோழிகள் மா நீங்க.."

அன்று அவர்கள் போன பிறகு அவனிடம் வந்தவள் அந்த படத்தின் ஃப்ளாஷ்பேக் பற்றி கேட்டாள்.

தேஜூ, "ஓகே திரும்பி ஃப்ளாஷ்பேக் போவோம்.."

**************

'ஒ மை கடவுளே' ஃப்ளாஷ்பேக்..

அந்த படத்தை பார்த்து கொண்டு இருந்த போது நிலா தன் மடியில் படுத்து இருந்த தேஜூவிடம் கேட்டாள்.

நிலா, "தேஜூ, இந்த படத்தில் வர மாதிரி உனக்கு இன்னொரு தடவை வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு கிடைத்தால் எனக்கு நடந்த விபத்தை தானே மாற்றுவாய்?"

தேஜூ, "இல்ல.. உன்னை திரும்பி திரும்பி இதே போல பல விதத்தில் முதலிருந்து காதலிப்பேன். எனக்கு நீ பண்ண எல்லா சேட்டையும் உனக்கு நான் பண்ணனும். அதில் உன் முகம் போகும் போக்கை பார்த்து சிரிக்கணும். உனக்கு?"

நிலா, "நான் எப்படி இருந்தாலும் உன்னை தான் காதலிப்பேன், அதற்கு கடவுள் தான் ஞாபகமறதி என்கிற வரத்தை கொடுத்து இருக்கிறார். நிலவாக இருந்து மதியா என்றாவது ஒரு நாள் மாறும் போது கூட உன்னை திரும்பி காதலிப்பேன். அப்போ நான் உனக்கு பண்ணது எல்லாம் எனக்கு திரும்பி பண்ணு அது கூட என் நினைவை மீட்க உதவும் ல.."

'சைக்கோ' மற்றும் 'ராட்சசன்' ஃப்ளாஷ்பேக்..

தேஜூ போட்ட படங்களை பார்த்த நிலா கத்தினாள்.

நிலா, "டேய், எத்தனை தடவை சொல்றது இந்த மாதிரி படம் எல்லாம் போடாதே போடாதே என. எனக்கு இப்படிப்பட்ட படம் பிடிக்காது, பிடிக்காது."

தேஜூ, "எனக்கு பிடிக்கும் அதை பார்த்து பயந்து நீ என்னை கட்டிகொள்வது ரொம்பவே பிடிக்கும்."

நிலா, "கேடி.. கேடி.."

அவனுக்கு அவள் விதத்தில் காதல் தண்டனை வழங்கினாள்.

' மிருதன் ' மற்றும் ' சோம்பி ' ஃப்ளாஷ்பேக்,

தேஜூவின் சைக்கோ படங்களை பார்த்த நிலா அவனை பழிவாங்கும் எண்ணத்தில் மிருதன் மற்றும் சோம்பி படத்தை போட்டு அதில் கடிக்கும் காட்சி வரும் போது எல்லாம் அதே போல நடித்து காட்டி தேஜூவை பயம் கொள்ள செய்தாள்.

அது மட்டும் அல்லாமல் அன்று அசைவ உணவினை ஏற்கனவே சமைக்க வைத்து விட்டு தான் இதையெல்லாம் செய்தாள்.

உணவினை பார்க்க பார்க்க அவனுக்கு முன்னாள் நாள் சாப்பிட்ட உணவினை கூட வாந்தி எடுத்தான்.

அசைவ உணவை அவள் ஊட்ட சொல்ல அவன் முடியாது சொல்ல அவளே சாப்பிட்டு விட்டு அவனுக்கு தண்டனையாக ஐந்து நிமிடத்திற்கு முத்தத்தை அவனின் வாந்தி எடுத்த வாயால் பெற்றாள்.

நிலா, "இந்த மாதிரி முத்தம் கூட நல்ல தான் இருக்கு. இதே மெதட் அடிக்கடி முயற்சி பண்ணி பார்க்கணும்.."

' அர்ஜுன் ரெட்டி ' ஃப்ளாஷ்பேக்..

அந்த படம் தேஜூ போட்ட அடுத்த நொடி அவனின் கன்னத்தை நிலா அறைந்து விட்டாள்.

நிலா, "என்னடா படம் இது. சீ.. எப்போ பார்த்தாலும் கிஸ் பண்றது படுக்கிறது என போகுது. அவனின் காதலி விட்டு போய்ட்ட என வரவள் போரவள் பின்னாடி எல்லாம் புணர்ச்சி கொள்ள போறான். சீ.."

தேஜூ, "படத்தை படமா பார்.."

நிலா, "இல்ல என்னால் அது முடியாது. காதல் பற்றி தெரியும். இதுவெல்லாம் காதல் இல்ல. அவனை பார் காதல் ஒன்றை வைத்து அவன் செய்கிறது என்ன? கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட என்னை கணவனா தொடாமல் இருக்கும் நீ எங்கே..? பிளீஸ் டா இந்த படம் வேண்டாம். பிளீஸ்.. நான் பார்க்கும் எல்லா படத்தில் நீ ஹீரோ.. நான் ஹீரோயின் என்கிற விதத்தில் தான் பார்ப்பேன். இதில்.. இல்ல வேண்டாம் வேண்டாம்.."

அவள் காட்டு கத்தல் கத்த அவன் படத்தை நிறுத்தி விட்டு அவளை மடியில் உட்கார வைத்து சமாதானம் செய்து நெற்றி முத்தொடு நாளை நிறைவு செய்தான்.

********************

தேஜூ ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க..

தன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியாத மதி, மிக நீண்ட முத்தங்கள் அணைப்புக்கு பிறகு தான் அவனை விட்டாள்.

அவர்களுக்கு அது சில நொடிகள் போல இருந்தாலும் அது உண்மையில் நீடித்தது ஒரு மணி நேரம்..

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா)? - 19


சமையல் அறையில் இருந்த வாழைப்பூவை எடுத்து தேஜுவின் முன் மண்டியிட்டு, எனக்கு பழசு எதுவும் ஞாபகம் இல்லை,
நீ கதை சொல்லி காதல் வரலை,
உன்னை பார்த்ததும் மனசுக்கு இதமா இருந்துச்சு,
ஒரு வேலை இதுக்கு பேரு தான் காதல் போல,
காதல் இல்லா காமம் இல்லா முத்தம் உண்டு சித்தம் மறந்து பித்தம் கொண்டேன் உன்பால்,
காதலின்றி வேறில்லை.
சின்ன சின்ன கொஞ்சல், நிறையா காதல், அர்த்தம் இல்லாத சண்டை, அசட்டையான கெஞ்சல் இதெல்லாம் என் மீதி வாழ்க்கையில் எனக்கு வேண்டும். அதுக்கு நீ எனக்கு வேண்டும் உனக்கு சம்மந்தமா என்று அவள் கேட்க என் வாழ்க்கை உன்னோடு தான் என்று அவள் போல் மண்டியிட்டு அவள் நெற்றியோடு நெற்றியை உரசி, இந்த உணர்வு நான் சாகுற வரை சாகாது என்று எழும்ப.

மதுவின் குடும்பம் தலையில் கை வைத்து என்ன திரும்பி முதலிருந்தா என்று அதிர்ந்தனர்.

இருவரும் எழுந்து சிரிக்க, யப்பா சாமி ஒரு தடவைக்கே கண்ண கட்டிருச்சு திரும்பி முதல் இருந்துச்சுனா உடம்பு தாங்காது சாமி என்று பதறினாள் இந்து .

தேஜுவின் முழங்கையை கட்டிக் கொண்டு உனக்கு பொறாமை டி, என் தேஜுவை நான் காதலிச்சுட்டே இருப்பேன் போடி என்று அவனை பார்க்க சுற்றம் மறந்து அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். ரசனையாக அவனை பார்த்தவள், அவனை கிள்ளி நடப்பிற்கு அழைத்து வந்தாள் மது.

என்ன இப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க வாங்க சாப்பிடலாம் என்று அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றான். அப்பாடா நல்ல வேலை தேஜு கூட்டிட்டு போனான் இல்லை இவங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிருக்கனும் என்று உணவு மேடைக்கு சென்றாள் மதுமதி.

மதும்மா சமையல் சூப்பர் டா என்று மனதார பாராட்ட, தேஜுவை பார்த்து கண்ணடித்தாள். அனைவருக்கும் பரிமாறி மிதுலாவை தூக்கி கொண்டு வெளியே இருந்த ஊஞ்சலுக்கு அழைத்து சென்றாள் உணவு ஊட்ட மதுவிடம் அமைதியாக உண்ணு தூக்கத்திற்கு தாயை தேடி சென்றாள் அந்த குட்டி வாண்டு .

பசியெடுக்க வேகமாக தட்டில் சாதம் போட்டு அமர அவளோட போட்டிக்காக அதே தட்டின் மறுவோரம் அவளவன் அமர எப்போதும் போது ஒருவருக்கு ஒருவர் ஊட்டி சாப்பிட்டனர்.
மதுவின் நிலையை அவளுக்கு புரிய வைத்த மனநிறைவில் இவர்களிடம் இருந்து விடை பெற்று கிளம்பினர் அனைவரும் .

இந்து, "மது சீக்கரம் எல்லாம் சரி ஆகிரும் டி, உனக்கு இப்போ என்ன தோணுதோ அதை செய். எப்பாவும் நாங்க உனக்கு துணையா இருப்போம் டி. இது நீ ஆசைப்பட்டு பிடிவாதமா வாழ்ந்த வாழ்க்கை. நல்லதோ கெட்டதோ அதை நீ தான் முடிவு பண்ணனும். மாம்ஸ் விட உன்னை யாராலையும் நல்லா பார்த்துக்க முடியாது. இனிமேல் ஆவது உன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்று மதுவை அணைத்து விடுவித்தாள்.
மது, " சரிங்க பாட்டி " என்று இந்துவை கிண்டல் செய்தாலும் அவள் கூறியதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

கிளம்பாது மதுவையே பார்த்து கொண்டிருந்தான் நகுலன். அதை உணர்ந்த தேஜூ, மதுவிடம் கண்ணை காட்ட அவன் முன் சென்றாள்.
நகுலன் இப்போ நீங்க என் கூட பிறக்காத தங்கச்சி வீட்டுகார் அப்படி நான் மனதில் நினைக்கிறேன். நீங்களும் அப்படியே இருங்க மன்னிப்பு அது இதுனு எதாவது பேசுனிங்கனா என்னால் இயல்பா உங்க கூட பேச முடியாது. நான் சொல்லுறது புரியுதுல என்றவளிடம் தலையசைத்து சென்றான் நகுலன் .

இதுவரை அவர்கள் இருக்க , பயமில்லாது இருந்துவிட்டேன் இப்போ தனியா தேஜு கூட எப்படி இருகிறது என்று பயந்தாள் மது.

அவளது மனதை படித்த தேஜு , நம்ம லவ்வர்ஸ் தானே என் கிட்ட எதுக்கு இவ்வளவு நர்வஸ் ஆகுற என்று கேட்டுவிட்டான்.
தெரியலையே என்றாள் உதட்டை பிதுக்கி .

சரி மதி, நீ போய் தூங்கு நான் ஹாஸ்பிட்டல் வர போய்ட்டு வந்தறேன் என்றான்.
ம்ம், ஓகே வரும் போது எனக்கு பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஒன் கே.ஜி, கிட்கேட் பேமிலி பேக் ஒன்னு, பால்கோவா ஹாப் கே.ஜி, ரசகுல்லா ஹாப் கே.ஜி வாங்கிட்டு வா என்று ஒரு லிஸ்டை கொடுத்து அனுப்பினாள்.

இது தான் என் நிலா, எப்படி தான் இந்த டென் டேஸும் இது எல்லாம் சாப்பிடாமல் இருந்த என்று டவுட்டா இருந்துச்சு இப்போ தான் நீ நார்மல் ஆகிருக்க என்றான்.
அதுவா வந்த அன்னிக்கே கடன், அக்ரிமென்ட்ன்னு ஏதேதோ சொல்லி என்ன டென்ஷன் பண்ணிட்ட. சாக்கி ஐஸ்கிரீம் கேட்ட எதாவது ரூல் நம்பர் சொல்லுவியோனு ஒரு பயத்தில் கேட்கலை என்று அவனுக்கு பதில் அளித்தாள் .

ஹா ஹா , நிலா வர வர உன் காமெடி சென்ஸ்க்கு அளவே இல்லை. வரும் போது வாங்கிட்டு வரேன் இந்த டேபிளெட் போட்டு தூங்கு என்று அவளுக்கு தேவையானதை செய்து விட்டு மருத்துவமனை சென்றான் தேஜஸ்வின்.

மாத்திரை போட்டு விட்டு , படுக்கையறை சென்றவளுக்கு தூக்கம் வரவில்லை. சரி எதாவது செய்யலாம் என்று வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். அப்போது ஒரு டைரி அவள் கையில் சிக்கியது. யாருடையது என்ற ஆர்வத்தில் திறக்க ,நிலாதேஜு என்றிருந்தது.

நமக்கு டைரி எழுதுற பழக்கம் எல்லாம் இருந்துச்சா ஆச்சரியமா இருக்கே என்று படிக்க ஆரம்பித்தாள்.ஹாய் டெடி, யாரு அந்த டெடி என்று தானே யோசிக்கிறிங்க அது வேறு யாரும் இல்ல, என் டைரி தான் அதுக்கு நான் வைத்த பேர் தான் டெடி என்று ஆரம்பித்திருந்தது அந்த டைரி. அதில் தேஜுவை முதல் முதலில் சந்தத்தில் இருந்து அவர்களது முதல் சண்டை வரை மட்டுமே இருந்தது. அதற்குள் அந்த டைரி முடிந்துவிட்டது.

அடுத்த டைரி தேட அதுவும் கையில் சிக்கியது. காதலை அணு அணுவாய் ரசித்து ருசித்து எப்படி எல்லாம் வாழ்ந்திருந்தனர் என்று முதல் டைரியில் இருக்க பிரம்மிப்புடன் அடுத்த டைரியை படிக்க ஆரம்பித்தாள்.

ஹாய் டெடி, இன்னிக்கு ஒரு ஹாப்பி நியூஸ் , பேபி மாறி இருக்க கனி வயித்துக்குள்ள ஒரு பேபி வளருது. எனக்கும் ஆசை தான் எனக்கு பேபினா எவ்வளவு பிடிக்கும் உனக்கே தெரியுமில்லை இந்த தேஜுக்கு தான் புரியவே மாட்டேங்குது. நான் பேபியை பத்தி பேசினால் நான் உனக்கு பேபி நீ எனக்கு பேபினு சொல்லிட்டு போறான்.

நீயே சொல்லு அந்த லூசு பையனுக்கு அப்போவாது புரியுதானு பார்போம். பேசாமல் சாப்பிடாமல் அடம் பிடிக்கிட்டா ? அப்போ பசிக்குமே வேணாம் வேற எதாவது யோசிப்போம். ஹான் கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போலாம் அவனால் என்ன விட்டு இருக்க முடியாது என்ன கூட்டிட்டு போக வருவான் . சூப்பர் ஐடியா என்று கடைசி வரி இருந்தது
ஆவலாக அடுத்து என்ன நடந்தது என்று படிக்க ஆரம்பித்தாள்.

போ டெடி இந்த தேஜு ரொம்ப மோசம் எனக்கு முன்னாடி அவன் கோச்சுக்கிட்டு மாம்ஸ் வீட்டுக்கு போய்ட்டான் என்ற வரியை படித்து வயிறு வலிக்க சிரித்தாள் மதுமதி.


தொடரும் . . . . .

இப்படிக்கு,
உங்கள்,
சுபாஷினி?