நான் கண்ட கனவு நீயடி(டா) - கதை திரி

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 10

தினம் தினம் வேலை முடிந்து கிளம்பும் நேரத்தில் எல்லாம் உன்னை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தான் போவேன்.

நிலா எப்பொடி நினைவு திரும்புவே? எப்போ கண் திருந்து என்னை பார்ப்பே? என நான் வேண்டாத நாள் இல்ல. எனக்கே என் நிலை ஒரு புதிர் தான்.. உன்னிடம் ஒரு வார்த்தை பேசியது இல்ல.. நீ எப்படிப்பட்டவள்.. ஏற்கனவே உனக்கு ஒரு காதல் இருந்தது அது நீ காதலித்தவன் உன்னை விட்டு வேறு பொண்ணை கல்யாணம் செய்தது.. அதில் நீ கொண்ட ஏமாற்றத்தில், அதிர்ச்சியில் கண் மண் தெரியாத வேகத்தில் என் வண்டியில் முட்டியே வேகம் அதில் படுகாயம் கொண்டு விழுந்தது. அந்த விபத்தில் நீ தலையில் பட்ட காயம் அதிலிருந்து வெளிப்பட்ட அதிக இரத்த போக்கு காரணமாக சாவின் விலும்புக்கு சென்று வந்தாய்! ஏன்? நான் உன்னை சந்திக்க வேண்டும் என்பது விதி.. கண்ட நொடி முதல் உன் மேல் எனக்கு காதல் வர வேண்டும் என்பது கூட விதி தான்.. சீக்கிரம் வாடி.. என்னுடைய மொத்த காதலையும் உனக்கு காட்ட வேண்டும். அப்போ உன் முகத்தில் வரும் உணர்ச்சி மாறுதல்களை கண்டு இந்த ஜென்ம பயனை அடைய வேண்டும்..

என தினம் தினம் உன் அறையில் யாரும் இல்லாத நேரத்தில் நான் வந்து பேசிட்டு போவேன்.. இந்த விஷயம் எப்படியோ உங்க அம்மாவுக்கு தெரிந்து விட்டது.

அவங்க கேட்டது ஒன்றே ஒன்று தான்..

"தம்பி இன்றோடு என் பொண்ணு கோமாவுக்கு சென்று ஆறு மாசம் ஆச்சு.. இந்த நிலை சரியாகுமா? இல்லையா? கூட தெரியல.. இவளை நினைத்து நீங்க வாழ்க்கையை வீணாகாமல் வீட்டில் பார்க்கும் பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.. இவளுக்கு ஒரு வேளை நினைவு திரும்பினாலும் உங்களை அவள் ஏற்று கொள்ள மாட்டாள். காதல் என்பது ஒரு முறை தான் என்பது அவள் கொள்கை.. அது நகுல் என்பது அவள் ஆள் மனதில் பதிந்து விட்டது."

"உங்க பொண்ணுக்கு மட்டும் இல்லமா எனக்கும் அதே கொள்கை தான்.. என்னை நம்புங்க அவள் கண் முழிக்கும் போது என் காதலை அவளுக்கு எப்படியாவது புரிய வைத்து விடுவேன்.."

"இன்னும் எத்தனை நாளைக்கு?"

"என் வாழ்க்கை முழுசும்.."

"என் பொண்ணுக்கு நான் அம்மா தான் இருந்தாலும் உன்னை ஒரு மகனாக நினைத்து சொல்கிறேன் மனித வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதை யாரோ ஒருவருக்காக வீணாகாமல் வாழ்க்கை போகும் பாதையில் போ.."

"சரி உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்.. இன்னும் ஆறு மாசம் டைம் கொடுங்க அதற்குள் இவள் கோமாவில் இருந்து எழுந்து கொள்ள வில்லை என்றால் என் அப்பா சொல்ற பொண்ணையை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. இல்ல நீங்களே உங்க பொண்ணை விட நல்ல பொண்ணா பார்த்து.. தாலி கட்டு சொல்லுங்க கேள்வி எதுவும் கேட்காமல் கட்டுறேன்.."

அப்பறம் போனது..
ஒரு மாசம்..
ரெண்டு மாசம்..
முன்று மாசம்...
நான்கு மாசம்..
ஐந்து மாசம்..
ஆறாவது மாசத்தின் கடைசி நாள்..

உன்னோட மொத்த குடும்பத்துக்கும் என்னோட காதல் விஷயம் உன்னோட அம்மா அதன் என்னோட அத்தை மூலம் தெரிந்து போச்சு..

எனக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னாங்க.. சத்தியமா சொல்றேன் நிலா.. சாரி மதி.. அன்னிக்கு இரவே செத்து போய் இருப்பேன்.

நான் ஒரு டாக்டர்.. அதுவும் மனநல மருத்துவர். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன முடிவு எடுப்பான் என்பது புரிந்தவன் நான். ஹார்மோன் தான் எல்லாத்துக்கும் காரணம் என படித்தவன் நான்.. ஆனால் அந்த நேரத்தில் எதுவும் என் முளைக்கு தெரியல.. காதலில் எப்போ மனிதன் முளை சொல்வதை கேட்டு இருக்கான். அது மனது செய்யும் மாயாஜாலம் தானே.. அன்று இரவு மட்டும் உனக்கு சிகிச்சை நடந்து கொண்ட அறையில் தங்கினேன்.. உன்னோட அப்பா அம்மாவின் அனுமதியோடு தான். என் மேல் என் காதல் மேல் இருந்த நம்பிக்கையில் அவர்கள் சம்மதம் சொன்னாங்க.

அன்னிக்கு நான் எதுவும் பேசல.. உன் பக்கம் படுத்து கொண்டேன்.. உன்னை அணைத்தவரே படுத்தவன் முதல் முறை என் இதழ் முத்தம்.. மருத்துவ முத்தத்தை நீண்ட நேரம் கொடுத்து கொண்டே இருந்தேன்.. ஒரு பக்கம் கண்ணீர் வழியே மறு பக்கம் அந்த கண்ணீரே என் கண் வழியாக சிந்தி உன் இதழில் பட்டு உள்ளே சென்றது. அப்படி இருந்தும் நான் நிறுத்த வில்லை ஏன் நிறுத்தனும்.. முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்ல அது கொடுக்கும் இடம் தன்மையை பொறுத்து.. நீ என்னை தப்பாக நினைத்தாலும் சரி எனக்கு உன் மேல் காமம் இல்ல.. அப்படி இருந்தது இருந்தால் என்னோட கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவமனை அதில் நான் என்னவெனா செய்ய முடியும். எனக்கு நீ வேண்டும்.. காதலியாக மனைவியாக நீ வேண்டும்.

அப்போ கூட நீ சுயநினைவில் இல்லாத போது கொடுத்த முத்தம் எனக்கு தப்பாக தெரியல.. காரணம் அடுத்த நாள் நான் கண் விழித்து பார்த்த போது உன்னை அணைத்தவாறே நான் படுத்து இருக்கே.. நீயோ ஒரு வருடத்துக்கு பிறகு கோமாவில் இருந்து கண் முழித்து என்னை பார்த்த மாதிரியே இருந்தாய்..

***************

அவன் சொன்னதை கேட்க கேட்க அதனை நின்ற இடத்தில் மதுமதி உணர்ந்தாள்.

முதல் முறை தேஜுவின் நிலவாக உணர்ந்தாள். அதே உணர்வில்..

"அப்பறம் என்ன ஆச்சு சொல்லுங்க.."

"வெயிட் வெயிட்.. நீ எப்போதும் போல என்னை வாடா போடா மாதிரியே பேசு.. நீ நிலவாக இருக்கும் போதும் என்னை ஒரு தடவை கூட மரியாதை கொடுத்து பேசியது இல்ல.. யார் சொன்னாலும் கேட்காமல் நான் அப்படி தான் கூப்பிடுவேன் சொல்லி காளி ஆட்டமே ஆடி இருக்கே.."

"கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம் பார்த்தேன்.. அதை நீயே கெடுத்துட்டே.. ஹ்ம்ம் சரி சரி சொல்லுடா சொல்லு என்னை எப்படி மயக்கினே..?"

"நீ கேட்பதை பார்த்தால் நான் சொல்வதை சந்தேகம் இல்லாமல் நம்புற மாதிரி இருக்கு.."

"எங்க அம்மாவே உனக்கு முன்னாடி சாட்சியாக வச்சு இருக்கே நம்பித்தான் ஆகணும்.."

அதில் முகத்தை திருப்பி கொண்டவன்..

அதனை பார்த்து அவன் அருகே வந்தவள் தன் அம்மா தோழி அங்கே இருப்பது கூட கண்டு கொள்ளாமல் அவனை அணைத்து கொண்டு..

"என் தேஜூ குட்டிக்கு என்ன கோபம்?"

"சொல்ல மாட்டேன் போடி.."

"சொல்லல உன் பேச்சு கா.."

அவளின் குழந்தை பேச்சில் தன் மனதில் கொண்ட வருத்தத்தை கூறினான்..

"உன் நம்பிக்கை என் மேல் வைத்த காதலால் தான் இருக்குனுமே தவிர வேற எந்த காரணத்தாலும் இருக்கவே கூடாது.."

"அட லூசு.. அந்த காதலை நானே இப்போ தான் டா ஃபீல் பண்றேன். அந்த நிலாவா உன்னை எவ்வளவு காதலித்தேன் தெரியாது இந்த கொஞ்ச நாளில் உன்னிடம் விழுந்துட்டேன்.. ஏன்? ஏன்? யோசித்து யோசித்து காய்ச்சல் வந்தது தான் மிச்சம். இப்போதான் காரணம் புரிந்து இருக்கு.. எல்லாம் எனக்கே தெரியாமல் என் கனவு போல உன் கூட வாழ்ந்த வாழ்க்கையால் தான்."

அவளின் அம்மாவும் அவளின் தோழி கனிமொழியும் சத்தமாக இரும்ப கனவு உலகில் இருந்து வந்தார்கள்.

பின் மதியே..

"இனி நடந்தது சொல்லு.. நான் முழித்த பிறகு என்ன நடந்தது..?"

"மானம் போச்சு மரியாதை போச்சு..", என தலையில் அடித்து கொண்டான்..

*************

நம்மளோட பார்வை அந்த அறைக்கு ஒரு நர்ஸ் வருவரை தொடர்ந்தது.. வந்தவர் நம்மை பார்த்த ஷாக் ல கையில் இருந்த குளுகோஸ் ஏ கீழே போட்டு விட்டு ஓடி விட்டாள்.

அதில் நானோ விலக.. நீயோ நெடுநாள் பிறகு கண் முழித்த சோர்வோடு என்னை பார்த்து..

"யார் நீ..?", என்ற கேள்வி கேட்டு மயக்கத்துக்கு போய்ட்டே.. அதில் சிறிது நேரத்துக்கு பைத்தியம் பிடித்தது போல உன்னை மடியில் வைத்து தட்டி கொண்டு இருக்கே பின் அப்போது தான் நான் ஒரு டாக்டர் என்கிற நினைவு வந்து உன்னை பரிசோதனை செய்தேன்.

நீண்ட பிறகு கண் முழித்த சோர்வு அதோடு என்னை பார்த்ததால் வந்த அதிர்ச்சி எல்லாம் சேர்த்து மயங்கிட்டே என்பது புரிந்தது.

எப்படியோ நீ வந்துட்டே.. என் காதலை பெற வந்துட்டே என்கிற சந்தோஷத்தோடு வெளியே வந்தால் அந்த நர்ஸ் ஹாஸ்பிடல் முழுசும் என் பெயரை நாறடித்து விட்டாள்.

ஏற்கனவே அடிக்கடி உன் அறைக்கு நான் போவதை இவர்கள் பார்த்து இருக்கே இப்போ அதுவே என் பெயர் நாற காரணம் ஆகி விட்டது.

எப்படியோ என் பெயர் காக்க அங்கே வந்த உங்க அம்மா.. என் அத்தை..

"அவர் என் வருங்கால மாப்பிள்ளை.. அந்த உரிமையில் அந்த அறைக்கு போய் இருப்பார்.. அத்தோடு இருவருமே காதலர்கள் இதுக்கு மேல் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டுமா", என கேட்க அவ்வளவு தான் கூட்டம் ஓடியே போச்சு.

என் தனி அறைக்கு அவர்களை அழைந்து கொண்டு போய் அவர்களின் இரு கையையும் என் கண்ணீரால் நனைத்து..

"அத்தை என் நிலா.. திரும்பி வந்துட்டா.. உங்க பொண்ணு மதுமதி திரும்பி வந்துட்ட அத்தை. இதை உடனே எல்லாருக்கும் சொல்லணும் அத்தை. இப்போவே எங்க அப்பாவுக்கு சொல்லி வர வைக்கிறேன்."

"இல்ல பா.. உங்க அப்பாவை இப்போ கூப்பிட வேண்டாம். என் பொண்ணு எந்த நிலையில் இருக்கிறாள் முதலில் தெரிந்து கொள்வோம். அவள் எப்போ திரும்பி கண் முழிப்பாள்?"

"இன்னிக்கு இரவு இல்ல நாளைக்கு காலை.. என்ன அத்தை..? என்ன யோசிக்கிறீங்க?"

"தெரியல பா.. இனி என்ன நடக்க போகுது பயமா இருக்கு. உன்னை மட்டும் சந்திக்காமல் இருந்து இருந்தால் கூட இவ்வளவு பயந்து இருக்கே மாட்டேன். இப்போ பயமா இருக்கு எங்க உன் காதலை ஏற்றுக் கொள்ளாமல் நகுலே மட்டும் நினைத்து வாழ்ந்து விடுவாளோ பயமா இருக்கு."

அதே பயத்தில் தான் நானும் இருந்தேன் மதி. என் பயத்தை புரிந்த கடவுள் ஒரு நல்லது பண்ணார். அது நல்லது கூட இல்ல ஒரு வரம்.. உன் கூட வாழ கடவுள் கொடுத்த வரம்.

அடுத்த நாள் திரும்பி நீ கண் முழித்த போது உன் மொத்த குடும்பமும் அங்கே இருந்தது கனிமொழி, நகுல் உட்பட..

எல்லாரையும் அடையாளம் தெரிந்த உனக்கு நகுலே அடையாளம் தெரியல..

"அம்மா, நம்ம கனிமொழி கூட நிற்பவர் யார்?"

அதில் சந்தேகம் வந்த அத்தை என்னை பார்க்க என் அறைக்கு வந்தார்கள்.

"தேஜூ.. தேஜூ.."

"சொல்லுங்க அத்தை.. என் நிலா.. சாரி உங்க பொண்ணு மதுமதி எப்படி இருக்கிறாள். எல்லாம் ஓகே தானே?"

"சரியா தெரியல.. அவளுக்கு எல்லாரையும் அடையாளம் தெரியுது.. ஆனால் நகுலே மட்டும் தெரியல.. இதில் வேற ஏதாவது பிரச்சினை.."

"அத்தை.. இருங்க நானே வந்து பார்க்கிறேன்.."

அப்பறம் நான் வந்தேன்.. நீயோ என்னை முறைத்து பார்த்த மாதிரி இருந்தாய்? இருக்காதா பின்ன யார் எவன் தெரியாதவன் தன்னை கட்டிப்பிடித்த மாதிரி இருந்தால் முறைக்க தானே செய்வாங்க. நல்ல வேளை நீ உடல் சோர்வில் இருந்தே.. அப்படி மட்டும் இல்ல கையில் கிடைத்தது வைத்து அடித்து கூட இருப்பே.

அப்பறம் சில கேள்விகள் உன்னை பற்றி கேட்க அதில் நான் தெரிந்து கொண்டது அந்த நிலையில் நீ காலேஜ் ல மூன்றாவது வருசம் படிக்கிற நிலைவில் இருந்தாய் தலையில் அடிப்பட்ட அதிர்ச்சியில் ஒரு வருட நினைவே நீ இழந்து விட்டாய்.

அதில் சந்தோசம் கொள்வதா? இல்ல நான் உயிராக நினைக்கும் உனக்கு அம்னீஷியா வந்தது நினைத்து கவலை கொள்வதா? தெரியாது நான் இருக்கே அதே நிலையில் மொத்த குடும்பம் முழித்து கொண்டு இருக்கும் போது நம்மை அன்று காலை கட்டிப்பிடித்த நிலையில் பார்த்த நர்ஸ் அத்தை ஹாஸ்டலில் எல்லார் முன்னாடி நானும் நீயும் காதலர்கள் என சொன்னதை உன்னிடம் தனிமையில் சொல்லி விட்டாள்..

அப்போ ஆரம்பித்தது எங்களின் சடுகுடு ஆட்டம்.. என்னோடு சேர்த்து உன் மொத்த குடும்பமே எனக்காக.. என்னோட உன்னோட காதலுக்காக.. நம்மை சேர்ப்பதுக்காக.. பல நாடகங்கள் நடத்தினார்கள்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 11​எல்லாரும் இருக்கும் போதே, என்னை கூப்பிட்ட, ஐய்யோ காலையில் பக்கத்தில் படுத்ததுக்கு அடிக்க போறியோ என்று பயந்து பயந்து வந்தேன் உன்கிட்ட என்று அந்த நாளை நினைத்து பார்த்தான் தேஜு.

மது, " உன் பேர் என்ன?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டாள்.
அதில் விழுந்தவன், மெலிதாக சிரித்து அவள் கையை பிடித்து. நான் தேஜஸ்வின் சர்வேஷ் குமார் இதே ஹாஸ்பிட்டலில் சைக்காடிரிஸ்ட்டா இருக்கேன் இப்போ இது போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடு மத்ததை கொஞ்சம் கொஞ்சமா பேசலாம் என்று அவன் கூற.

சற்று தூங்கி எழுந்தால் நல்லா இருக்கும் என்று தோன்ற மெதுவாக கண்களை முடினாள். எல்லாரையும் சைகையால் வெளியே அழைத்து வந்தான் தேஜு.
உன்கிட்ட எனக்கு பொய் சொல்ல பிடிக்கலை நடக்காத ஒரு விசியத்தை சொல்லி, அப்பறம் எல்லாம் தெரியும் போது அது உனக்கு கஷ்டத்தை தரும் என்று என் மனசு சொல்லுது நிலா. நகுல் உன்னை விட்டு வந்த இடத்தில் இருந்து காதல் செய்ய பிடிக்கலை.

உனக்கு பழசு ஞாபகம் வந்தாலும் நகுலன் காதல் ஞாபகம் வரக்கூடாது அந்த அளவுக்கு உன் இதயத்தை ஆளும் ராஜாவா இருக்கணும் . இப்போ எப்படி நீ என்னோட இதய ராணியா இருக்க அதே மாறி என்று நினைத்தவன் மற்றவர்களிடம் பேசினான்.

மாமா, அத்தை, கனி, நகுல் உங்க எல்லாருக்கும் சேர்த்து சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோங்க. நிலா மறந்த விஷயங்கள் சில நாளோ, வாரமோ, மாதமோ, வருசமோ இல்லை வராமல் கூட போகலாம் . இப்போ நான் எதை சொல்லுறேன் என்றால், நிலாக்கு ஃபோர்ஸ் பண்ணி ஞாபகம் வர வைத்தும் என்றால் அதோட ரிசல்ட் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அந்த அதிர்ச்சியில் அவளோட கண்டிஷன் எப்படி வேணா போகலாம். ஷோ நகுல் கனியோட ஹஸ்பண்டாவே நிலாவை பொறுத்து வர இருக்கட்டும்.

அப்பறம் அவ என்னை பத்தி எதாவது கேட்டா, அவள் லவ் பண்ணுற விசயமே அவளோட ஆக்சிண்ட் அப்பறம் தான் தெரியும் என்று சொல்லிருங்க. மற்றதை
நான் சமாளிச்சுக்றேன் முக்கியமான விசயம் அவக்கிட்ட எந்த உண்மையும் சொல்லாதீங்க அதே மாறி பொய்யும் சொல்லாதீங்க. எனக்கு ஒ.பி இருக்கு முடிச்சுட்டு வரேன் என்று சென்று விட்டான்.

அங்கு நின்றவர்கள் மனதில் மதுவின் வாழ்வு இனி நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரே மாறி நினைத்தனர்.
யாரும் எதையும் பேசிக் கொள்ளவில்லை அமைதியாக வெளியே நின்றனர்.
உறங்க நினைத்தாலே தவிர உறக்கம் அவளை தழுவாது விழித்து காலையில் அவளிடம் தேஜுவை பற்றி கூறிய நர்ஸை அழைத்தாள்.

மது, " சிஸ்டர் தேஜஸ்வின் இங்க எவ்வளவு நாளா வொர்க் பண்ணுறார்".
சிஸ்டர், " உனக்கு ஆக்ஸிடண்ட் ஆகுறதுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இங்க சேர்ந்தாரு".
மது, " அவரை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? சிஸ்டர்" .
சிஸ்டர், " அவரோ பர்சனல் விஷயம் எதுவுமே தெரியாது ஆனால் ஓ.பி முடிஞ்சதும் இங்க தான் வருவார். வீட்டுக்கு போகுற வரை இங்க தான் இருப்பார். போன வாரம் அவரோட அப்பா வந்து உன்னை பார்த்துட்டு போனார். உன்மேல் ரொம்ப லவ் போல. ஒரு நாள் முழுசா என்ன பண்ணுவாரோ அதை நைட் உங்கிட்ட சொல்லிட்டு தான் இங்க இருந்து போவார்.

அவர் இருந்தா இந்த ரூம்குள்ள உன் வீட்டில் இருக்கவங்க யாரும் வரமாட்டாங்க. அடிக்கடி உங்க அம்மா இவர்கிட்ட பேசி பார்த்திருக்கேன் வேற எதுவும் தெரியாது என்று அவர் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

ஒரு வருஷம் கோமாவில் இருந்ததால் கைகால்கள் எல்லாம் மறந்து போயிருந்தது மதுவிற்கு . அடுத்து எதையும் யோசிக்க விடாது வந்து சேர்ந்தார் பிஸியோதெரபிஸ்ட் .

அவளுக்கு சில உடற்பயிற்சியை சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் தேஜு.
உடற்பயிற்சி முடித்து தேஜுவிடம் வந்தவர் அவனை அணைத்து , உன் கனவு நினைவாகி விட்டது என்று சொல்ல.

இதை அப்பாகிட்ட அப்படியே சொல்லி எனக்கு கிரின் சிக்னல் கொடுக்க சொல்லு இப்போ இடத்தை காலி பண்ணு என் செல்லக்குட்டிக்கோட கொஞ்ச பேசனும் என்றதும். நீ நடத்து டா தம்பி பைய்யா என்று மதுவிடம் திரும்பி நல்லா ரெஸ்ட் எடு மதும்மா என்று கிளம்பினான்.

போகும் அவனை கேள்வியாக பார்த்த மதுவிற்கு பதில் அளித்தான் தேஜு. அவன் உடன்பிறப்பு ஆதர்ஷ் சர்வேஷ் குமார். அவனும் இதே மருத்துவமனையில் பகுதி நேரமாக பணிபுரிகிறான் அதுமட்டும் இல்லாமல் தனியாகவும் ஒரு கிளினிங் வைத்துள்ளான் என்றான் தேஜு.

அதற்கு எதையும் கூறாது உன்னை ப்ஸ்ட் எங்க பார்த்தேன் என்று கேட்டாள்.
ம்ம் ரோட்டில் தான் என்று சொன்னவன், அய்யோ இப்படியா உளருவ என்று தன்னை தானே திட்டி கொண்டு சமாளித்தான்.
உன்னை ஹாஸ்பிட்டலுக்கு வரும் போது தான் பார்த்தேன் என்றான்.
எப்படி லவ் சொன்ன என்று அவள் கேட்டதும் .

சொல்ல மாட்டேன் நிலா, நான் உன்னை எப்படி எல்லாம் லவ் பண்ணேன் என்று அந்த அந்த இடத்துக்கு கூட்டிட்டு போய் கதை சொல்லுறேன். இப்போ சமத்தா தூங்கு என்று அவள் பிறைநிலா நெற்றியில் நோகாது இதழ் பதித்து தட்டி கொடுத்தான்.

மனதில் ஆயிரம் கேள்வி இருந்தாலும், அவன் அருகாமை அந்த அரவணைப்பில் தூங்கிவிட்டாள் மதுமதி.
தூங்கும் அவள் அருகே அவள் கைபிடித்து அமர்ந்திருந்தான் தேஜு.


இப்படிக்கு ,
உங்கள் ,
சுபாஷினி? .
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 12

நிலா நீ பழைய நிலை திரும்ப முன்று மாதம் ஆனது. அதுவரை நீ என்ன கேட்டும் நம்மை பற்றிய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லல..

நீ எனக்காக காதலிக்கனும் நினைத்தேன் அதே போல உன்னிடம் பொய் சொல்லவும் என் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. பொய் சொல்லி காதல் வர வைக்க முடியாது அதே போல உன் குடும்பம் சொல்லி நீ எந்த அளவுக்கு நகுல காதலித்தாய் தெரியும். அவர்கள் சொன்னதை தாண்டி நினைவு இழந்த நிலையிலும் அவனின் தாக்கம் உனக்குள் இருக்க என்பது தெரிந்து கொள்ள நினைத்தேன்.

இல்ல.. இல்லவே.. உன்னோட காதல் திடீர் என ஒரு அழகான பையன் அதுவும் காலேஜே ரோல் மாடல் என சொல்லும் ஒருவன்.. அவனே காதல் சொல்ல அதில் மயங்கி போய் சரி என சொல்லி இருக்கிறாய். அது வெறும் குறு குறு காதல் தான்.

காதல் படங்கள் அதிகம் பார்த்து இதன் காதல்! இப்படி காதல் இருக்கும்! என உனக்கு நீயே வகுத்து கொண்டது போல காதல் செய்தாய்.

அந்த காதல் மயக்கத்தில் தான் உன் தோழியின் ஒதுக்கம் கூட உன் கண்ணில் பட வில்லை.

நீ காதலிக்க ஆரம்பித்த ரெண்டு மாதத்திலேயே படிப்பும் முடிய உடனே வேலையும் கிடைத்த வேகத்தில் உன் காதல் விஷயம் உன் வீட்டுக்கு தெரிந்தது. மாமாவும் அத்தையும் காதலுக்கு எதிரி இல்ல.. முதலில் நகுலின் குடும்ப நிலை தெரிந்த போது சிறு தயக்கம் கொண்டாலும் அவனின் குணத்தை பற்றி விசாரித்து சரி என்றார்கள்.

எல்லாம் நல்ல போக ஒரு நாள் உன் தோழி கனிமொழியின் நினைவு வர நகுல அழைத்து கொண்டு அவளை காண சென்றாய்.. அதன் பிறகு நடந்ததை எல்லாம் அத்தை சொல்லி இருப்பாங்க..

மொத்தத்தில் காதலே இல்லாத காதல் கதை தான் உனக்கும் நகுலுக்கும் இருந்த காதல்..

உன்னோடது சினிமா காதல் அவனோடது கனிமொழி மேல் வைத்த உண்மை காதல். அதனால் தான் உண்மை தெரிந்த அடுத்த நொடியே அவளை கை பிடித்தான்.

அதை மனோதத்துவ டாக்டர் ஆ இருந்த.. இருக்கும் எனக்கு நன்றாகவே புரிந்தது.

அந்த எண்ணத்தில் தான் ஹாஸ்பிட்டல் இருந்தவரை உன் கூட டாக்டர் என்ற உறவை தாண்டி நெருங்கவில்லை.. ஆனால் நீ தூக்கத்தில் இருந்த நேரத்தில் எல்லாம் உன் கையை பிடித்து சிறிது நேரம் எப்போதும் போல அன்று நடந்தது எல்லாம் சொல்லி விட்டு போவேன்.

அப்படி தான் ஒரு நாள் உன் அறைக்கு வந்த நான் எப்போதும் போல உன் கையை பிடித்து சொல்ல ஆரம்பிக்க நீயோ தூக்குவது போல நடித்தாய்.. அதை புரியாத நான்..

நிலா பேபி.. இன்னிக்கு ஒரு குழந்தையை பார்த்தேன். தன்னோட அப்பா அம்மா கூட வந்தான். குழந்தைக்கு ஐந்து வயசு தான் இருக்கும் சில மாதமாக குழந்தைக்கு பேச்சு சரியா வரல சொல்லி அழைத்து வந்தார்கள்.

அவர்களை மட்டும் அனுப்பி விட்டு குழந்தை இடம் பேச ஆரம்பித்தேன்..

பேச்சு வரல என்றாலும் அவன் சைகையில் சொன்னதை வைத்து புரிந்தது என்னவென்றால்..

1. அப்பா அம்மா இருவருமே ஐடி ல வேலை செய்யும் நபர்கள். அதன் காரணமாகவே குழந்தையிடம் நேரம் செலவழிக்க முடியல தனிமை, பயம் அதனால் பேசு ஒன்றையே குழந்தை மறந்து விட்டது.

2. பள்ளியில் கூட அந்த குழந்தைக்கு யாரிடமும் பேச பிடிக்கல.. பிடிக்கல என்பதை விட முடியல..

3. இன்னும் விசாரிக்க காலத்தின் கோலம் அறிந்தேன். ஒரு வருடத்துக்கு முன்னாடி வரை தாத்தா பாட்டி என்ற உறவு அவர்களோடு இருந்தது. பின் மருமகளிடம் நடந்த சின்ன சண்டை அதில் வெறுப்பு கொண்ட மருமகள் அவர்கள் பிடிவாதம் பிடித்து முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள்.

4. அவர்களின் செயல் அன்பு கொண்ட ஒரு உறவை அந்த குழந்தை இழந்து விட்டது. அந்த சோகத்தில் அதன் பேசும் தன்மை தற்காலிகமாக இழந்து விட்டது.

எல்லாத்தையும் அறிந்து கொண்ட நான் அந்த குழந்தைக்கு மருந்து தாத்தா பாட்டியின் வருகை மட்டுமே என்பதை புரிகிற விதத்தில் சொன்னேன்.

அவர்களும் தலையாட்டி விட்டு சென்றார்கள். அழகான குழந்தை அதன் குரல் திரும்பி வரும் நாளை நானும் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்பான உறவு தேவை நிலா.. எனக்கு சிறு வயதில் இருந்து தாத்தா பாட்டி என்ற உறவு இல்ல.. எனக்கு எல்லாமே எங்க அம்மா தான். என்னோட ஏழு வயதில் அப்பாவுக்கு பிசினஸ் ல பெரிய லாஸ் வர அதில் கடன் தொல்லை என பல அவமானங்கள் அதை தாங்க முடியாத எங்க அம்மா மனநலம் பாதிக்கப்பட அதன் தாகத்தில் தற்கொலை செய்தார்கள்.

அந்த பாதிப்பில் தான் மனநல மருத்துவர் ஆகணும் என்கிற முடிவுக்கு வந்தேன். அதே போல எங்க அண்ணனுக்கும் சிறு வயசில் இருந்தே டாக்டர் ஆகணும் என்ற ஆசை தான் இருந்தான்.

அதன் பார்த்தியே என் அண்ணனை ஆதர்ஷ் சர்வேஷ் குமார். அம்மாவுக்கு பிறகு அவன் தான் எனக்கு க்ளோஸ்.. பல நாள் அம்மாவை நினைத்து நான் அழும் போது எல்லாம் என்னை தட்டி தூங்க வைக்கும் பொறுப்பு அவனே எடுத்து கொண்டான். அப்படி இருந்தும் அம்மா இல்லாத ஏக்கம் என் மனசில் இருந்தது உன்னை பார்க்கும் வரை..

ஐ லவ் யூ நிலா.. ஐ லவ் யூ ஏ லாட்.. இதே வார்த்தையை உன் வாயால் கேட்கும் நாளுக்காக காத்திருக்கிறேன். எப்போடி எனக்கு ஓகே சொல்லுவே..

இப்படியெல்லாம் நான் சொல்லி கொண்டு இருக்கே.. திடீர் என எழுந்த நீ என்னை கட்டி கொண்டது மட்டும் இல்லாமல்.. என் முகம் முழுசும் பல முத்த பரிசை கொடுத்து விட்டு என் இதழில் நீண்ட ஒன்றை கொடுத்தாய்..

இதழ் முத்தத்தில் மயங்கிய நான்... நீ விட்டும் நான் விடல.. என் மனம் கவர்ந்தவள் நீ முதல் முறை அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்த முத்தம் அது.

நகுல கூட நெருங்க விடாத நீ.. என் மேல் கொண்ட இந்த திடீர் நெருக்கத்தில் உணர்ந்து கொண்டேன்..

என் நிலாவுக்கு என் மேல் காதல் வந்து விட்டது. அதுவும் ரொம்ப உரிமையான காதல் அதன் தாக்கமே என் இதழை முத்தம் என்ற ஒன்றை கடித்து ரத்தம் குடிக்கும் நிலைக்கு வந்தது.

ரத்தம் வரும் இதழோடு நான் உன்னை பார்க்க நீயோ..

"தேஜூ, இதுக்கு முன்னாடி நான் உன்னை எந்த மாதிரி காதலித்தேன் தெரியல. அந்த நினைவு வந்தாலும் சரி! வரல என்றாலும் சரி! ஐ லவ் யூ.. நீ மிஸ் பண்ற உங்க அம்மாவை போல என்னால் அன்பு காட்ட முடியாது. ஆனால் உன் காதலியாக, வருங்கால மனைவியாக என் முழு உடல் ஆவி எல்லாம் உனக்கு தான். சீக்கிரம் என் உடல் நிலை சரியாகனும் அப்போ தான் இந்த மாதிரி உரிமையா அடிக்கடி நினைத்து எல்லாம் பண்ண முடியும். அதுவரை உனக்கு முத்தம் மட்டும் தான் அதுக்கு மேல் ஒன்றும் கேட்க கூடாது சொல்லிட்டேன்.."

"நிலா, நீங்க என்ன சொல்றீங்க..?"

"ஓய் அது என்ன முழித்து இருந்தால் நீங்க, வாங்க போங்க.. அதுவே தூங்கி கொண்டு இருந்தால் நீ வாடி போடி இப்படி. முஞ்சி மோகறையை உடைத்து விடுவேன். எப்போவும் போல டி போட்டுட்டே கூப்பிடு அதன் செம்ம கிக் ஆ இருக்கு, பிடித்தும் இருக்கு."

"நிலா.. நிலா.. அவசரம் வேண்டாம். நீ ரொம்ப பாஸ்ட் ஆ போற.. அதுவும் ராக்கெட் பாஸ்ட். எதுவும் யோசித்து பேசு.. பழைய நினைவு வந்த பிறகும் நீ எப்படியே பேச மாட்டே.."

"ஏன்? நம்ம தான் முன்னாடி காதலித்தோம் சொன்னியே"

"அது.. அது வந்து.."

"எனக்கு தெரியும்.."

"என்ன தெரியும்?"

"அந்த ஆக்ஸிடென்ட் முன்னாடி நமக்குள் ஏதோ பெரிய சண்டை நடந்து இருக்கணும் அதை நினைத்து தானே என்கிட்ட நெருங்க பயந்து கொண்டு இருக்கே?"

இது என்ன காமெடி என நான் நினைத்து..

"அப்படி யார் சொன்ன?"

"எத்தனை படத்தில் பார்த்து இருப்பேன். ஹீரோ ஹீரோயின் நடுவில் ஏதோ விஷயத்தில் சண்டை வரும். அதில் ஒருவர் பிரிந்து போவாங்க, மற்றொருவர் செய்யாத தப்பை நினைத்து கொண்டே ஃபீல் பண்ணுவாங்க. கடைசியில் பிரிந்து போனவங்க செய்த தப்பை உணர்ந்து திரும்பி வருவாங்க. அப்படி தானே நம்ப கதை.. உன்னை பார்த்தால் தப்பு செய்தவன் போல தெரியல அப்போ நான் தானே நீ செய்யாத தப்பிக்கு உன் மேல் கோபப்பட்டு போய் இருக்கணும். சாரி தேஜூ.. நான் என்ன செய்து இருந்தாலும் மன்னித்து விடு. மாறப்போம் மன்னிப்போம் சரியா?"

"வெயிட்.. வெயிட்.. நீ நினைக்கிற மாதிரி எல்லாம்.."

"பிளீஸ் டா.. நான் ஜாலி மூட் ல இருக்கேன். நான் தான் சாரி சொல்லிட்டேன் ல.. இனி மேல் புதுசா லவ் பண்ணலாம். என் பெயர் மதுமதி.. ஆனால் உன்னோட நிலா.. ஐ லவ் யூ.. இனி உன்னோட முறை.."

"ஹ்ம்ம்.. என் பெயர் தேஜஸ்வின் சர்வேஷ் குமார். உன்னோட தேஜூ.. உனக்கு மட்டும் எப்போதும் சொந்தமான தேஜூ.. ஐ லவ் யூ பேபி.. இதுவரை உன் கூட கனவில் வாழ்த்த வாழ்க்கையை நிஜத்தில் வாழ ஆசைப்படுகிறேன். வாழ்வோமா?"

"கண்டிப்பா.. அதுவும் கூடிய சீக்கிரம்.."

திரும்பி உன்னிடம் இருந்து நான் பெற்ற இதழ் முத்தத்துக்கு பிறகு..

உன்னை அன்று இரவு பிரிய மனம் இல்லாமல் என் வீட்டுக்கு கிளம்பி போனேன்.. அதுவும் என் காதல் கனவு நிறைவேறிய சந்தோசத்தில்..

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 13


இப்படியே டிரீட்மென்ட், கொஞ்சம் காதல், நிறைய சண்டை என்று ஹாஸ்பிட்டலில் மூனு மாசம் முடித்து வீட்டுக்கு வந்தோம். அதுவரை நார்மல்லா இருந்தா என் நிலா முழுசா காதல் சந்திரமுகியா மாறிட்டா என்று வீட்டிற்கு வந்ததில் இருந்து அவள் செய்ததை புன்சிரிப்புடன் கூறினான் .

மது, " டேய் உனக்கு கொஞ்சமாச்சும் டீ டிக்கஷன் இருக்கா டா . நம்மலை பாவம் பார்த்து ஒரு பொண்ணு லவ் பண்ணுதே அதை வெளிய எங்கையாச்சும் கூட்டிட்டு போகலாம், மறந்து போன காதலை ஞாபகம் படுத்தலாம் எல்லாம் உனக்கு எண்ணமே இல்லை. எப்ப பாரு ஹாஸ்பிட்டல் பேஷண்டு டேப்லெட்டுன்னு ரொம்ப தான் பண்ணுற. இனிமேல் என்கிட்ட பேசாத " என்று அவனை பேச விடாது பொரிந்து தள்ளியவள், வேகமாக சென்று கதவை அடைத்து கொண்டாள் .

வெளியே நின்று நிலா, நிலா என்று அவன் கதவை தட்ட அவளோ கதவை திறப்பதாக இல்லை. அவன் சத்ததில் மதுவின் அம்மாவும் அப்பாவும் அவனை பாவமாக பார்க்க அவனோ புன்னகையுடன் மீண்டும் தன்னவளை சமாதானம் செய்ய தொடங்கினான்.

தங்களை அவன் கண்டும் காணாது இருக்க சொன்னதால், அவனே சரி செய்துவிடுவான் என்ற நம்பிக்கையில் தங்கள் வேலையை பார்த்தனர்.

நிலா சீக்கரம் கதவை தொறந்தா, நம்ப டின்னர் போலாம் லேட் பண்ணா பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவடி என்றதும் பட்டென்று கதவை திறந்து வந்தாள் மது.

நிஜமா டின்னர் கூட்டிட்டு போறியா என்று கண்கள் பளபளக்க கேட்டவள் நெற்றியில் முட்டி, நிஜமா தான் போய் கிளம்பி வா நான் வெய்ட் பண்ணுறேன் என்றான்.

அவன் சொன்னது போல கிளம்பி வந்தவளை பார்த்தவனுக்கு பொம்மை கேட்டு அடம்பிடிக்கும் சிறு பிள்ளையாக தெரிந்தாள்.

மதுவின் அம்மா அப்பாவிடம் சொல்லி கிளம்பினர் இருவரும். அவன் அழைத்து சென்றது ஒரு வீட்டிற்கு கேள்வியாக அவனை பார்த்தவளுக்கு பதில் சொல்லாது அவளை இறங்க சொன்னான்.

இது தான் நம்ப வாழ போற வீடு, முதல் முதலில் இங்க கூட்டிட்டு வரனும் நினைத்தேன் என்றதை இடை வெட்டி அப்போ நம்ம லவ் பண்ணப்பை என்னை இங்க கூட்டிட்டு வந்தது இல்லையா என்றாள் ஆவலாய்.

இப்படி உளரிட்டேனே, சரி சமாளிப்போம். இல்ல நிலா ஆக்சிடண்ட் ஆனதுக்கு அப்பறம் இங்க தான் கூட்டிட்டு வரணும் என்று நினைத்தேன், அதை தான் சொல்ல நினைத்தேன் பேபி. இப்படியே பேசிட்டே இருக்கலாமா? இல்ல உள்ள போகலாமா? .
ஹி ஹி போலாம் , என்று அவன் கைகளை பற்றி உள்ளே சென்றாள்.

அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை மதுவிற்கு, அதை அவனிடமும் கேட்டாள்.
இந்த வீடு நீயும் நானும் காதல் செய்ய வாங்கின கனவு கோட்டை , ஆதர்ஷும் அப்பாவும் எங்க வீட்டில் இருக்காங்க என்றான் காதலாய் .

அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தவளாக, தேஜு ஆதர்ஷ் மாமாவுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா என்று அதிமுக்கிய கேள்வி கேட்டாள் மது.

பொண்ணு பார்த்துட்டு இருக்கோம் ஆனால் அவனுக்கு தான் யாரையும் பிடிக்கலை என்று சொல்கிறான். நாளைக்கு கூட ஒரு பார்க்க தான் போறான் பார்ப்போம் என்று கிச்சனை நோக்கி சென்றான் தேஜு.

தேஜு நான் நாளைக்கு ஆது மாமா கூட போகட்டா என்று குழந்தை போல் கேட்பவளிடம் என்ன சொல்வது என்று தெரியாது விழித்தான். தேஜு நான் நல்ல பொண்ணா நடந்துப்பேன் பிராமிஸ் என்றதும் சரி சரி நாளைக்கு நீ நான் ஆதர்ஸ் முனு பேரும் போகலாம் இப்போ சமைக்கலாம் வா என்று அழைத்து சென்றான்.

டின்னருக்கு கூட்டிட்டு போறேன்னு சின்ன பிள்ளையை ஏமாற்றி இப்படி கொடுமை பண்ற இதெல்லாம் நியாயமா என்று பாவமாக அவள் கேட்க.

வாய் பேசாம சொன்னதை செய் பேபி பசிக்குது என்றான்.இருவரும் அளுக்கு ஒரு வேலையாக செய்து குறுகிய நேரத்தில் சமையல் செய்து முடித்தனர்.

பசியின் தாக்கம் அதிகமாக பரிமாறியது தேஜுவை கண்கள் சுருக்கி பார்த்தவள் சாப்பிடாது முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள், எதுக்காக மூஞ்சியை இப்படி தூக்கி வைச்சிட்டு இருக்க என்றான் கேள்வியாக.

டேய் நீ மட்டும் நல்லா கொட்டிக்கிற என்றவளை முறைத்தவன், நான் என்ன உன் கையவா பிடிச்சு வைச்சிருக்கேன். நீ சாப்பிடாததுக்கு என்ன ஏன் டி திட்டுற.

போடா உனக்கு என் மேலே பாசமே இல்லை இருந்து இருந்தா எனக்கு ஊட்டி விட்டிருப்பிலை என்றாள் காதலாய் .

என்னடி புது புரளியா இருக்கு இப்ப என்ன நான் ஊட்டி விடனும் அவ்வளவு தானே என்று ஊட்ட போக , எனக்கு வேணாம் என முகத்தை திருப்பி கொண்டாள்.
அடியே இங்க பாரு என்று அவள் முகம் திறப்பி கைப்பிடித்து மடியில் அமர்த்தி அவளுக்கு ஊட்ட, மறுபின்றி வாங்கி கொண்டாள். அவனுக்கு அவள் ஊட்ட என்று ஒருவாறு உண்டு முடித்தனர் இருவரும் .

இங்க பாரு தேஜு இப்பயில்லை எப்பவும் எனக்கு நீதான் ஊட்டனும் என்ன சரியா என்று விரல் நீட்டி எச்சரிக்க.
தங்கள் கட்டளையே சாசனம் ராணி வாய் மூடி தலை தாழ்த்தி பணிய, அவன் செயலில் வாய்விட்டு சிரித்தாள் மதுமதி.

சரி செல்லம் ஜோக்ஸ் அப்பார்ட், கல்யாணதிற்கு பிறகு நான் எப்படி இருக்கணும் என கனவு கண்ட என்று விழிகள் மின்ன கேட்டான்.

கண்கள் முடி அவன் வாசம் பிடித்து, காதலாய் கூற ஆரம்பித்தாள் தேஜுவின் நிலா.

காலை ஐந்து மணிக்கு நெற்றி ஒற்றலுடன் எழுப்ப நீ வேண்டும்.
உணவு சமைக்கும் போது சமையல் மேடையில் நீ வேண்டும்.
நான் தயார் ஆகும் போது, குறிப்பாக சேலை அணியும் போது மண்டியிட்டு மடிப்பெடுக்க நீ வேண்டும்.
சாப்பிடும் போது மனமாற பரிமாற நீ வேண்டும்.
நீ நான் வேலை செல்ல, எனை அறிய போன் செய்ய நீ வேண்டும்.
இரவுணவு என் கையில் உண்ண நீ வேண்டும்.
தூக்கம் வராமல் நானியிருக்க விரல் சொடக்கெடுத்து தலைகோதி எனை அணைத்து தூங்க நீ வேண்டும்.
ஞாயிறு முழுவதும் என்னவனாய் எனக்கானவனாய் நீ வேண்டும்.
முதல் சந்திப்பில் முதல் கடைசி நொடி வரை ஒரே அளவு காதல் கொடுக்க நீ வேண்டும்.


இப்போதிக்கு இவ்வளவு தான் அப்பறம் தோணும் போது நானே சொல்லுறேன்.

நான் எப்படி இருக்கணும் என நீ நினைக்கிற என்றவளின் தோளில் கைப்போட்டு,

நான் கண்ட கனவு நீயடி,
உன் காதலில் கரைந்திட
முயல்கிறேன் நானடி,
உன் காதல் மட்டும் போது,
வேறெதும் தேவையில்லை
உன் சுவாசம் ஒன்றே போதுமடி.

இங்க பாரு நிலா நா ஒரு கவிதை மாறி என்னை புரிஞ்சுக்க ட்ரை பண்ணா தான் புரியும், ஆனால் நீ ஒரு புதிர் எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் பதில் சொல்ல தான் முடியும் ஆனால் அது சரியா தவறானு நீ தான் சொல்லனும்.

பேசிட்டே மணியை பார்க்கலை லேட் ஆச்சு வா போகலாம் என்று இருவரும் இருவேறு கருத்துடன் மதுவின் வீட்டை நோக்கி பயணித்தனர்.

தொடரும். . . .


இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?.
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 14

நிலா உன் அளவுக்கு என்னால் காதலை காட்ட முடியல. ஏதோ பயம் உன்னை ஏமாற்றுகிறேன் என பயம்.

முத்தத்தை கூட எவ்வித தயக்கமும் இல்லாமல் உன்னால் கொடுக்க முடிந்தது. என்னால்?? முடியல பயம் எங்கே உனக்கு பழைய நினைவு வந்து என்னை வெறுத்துவிடுவாய் பயம்.

காதலானாய் எனக்கு தெரியும் நம்ம காதலை நீ எந்த நிலையிலும் உணர்ந்து கொள்வாய்.

ஆனால் ஒரு மருத்துவர் நிலையில் யோசித்தால் உனக்கு வந்தது தற்காலிக நினைவு இழப்பு. அப்படியென்றால் பழைய நினைவு வரும் பட்சத்தில் இடைப்பட்ட நினைவுகள் போக வாய்ப்பு இருக்கு. அதன் காரணத்தால் மனசு முழுதும் காதல் இருந்தும் கூட உன்னிடம் நெருக்க முடியல.

அதை பார்த்து நீ..

மதி, "தேஜூ, என்னடா நான் உன் காதலி தைரியமாக வந்து பக்கத்தில் உட்கார் கட்டிப்பிடித்து கிஸ் பண்ணு நான் குழந்தை மாதிரி இதை யாரிடமும் சொல்ல மாட்டேன். உன் நிலாவை நம்பு.."

இப்படி பல தடவை உன் எதிர்ப்பார்ப்பு சொல்லியும் என்னால் முடியல. கடைசியில் அந்த முத்தம் நிகழ்வு கூட உன்னால் ஆரம்பித்து உன்னாலே முடியும். அந்த சமயத்தில் தான் இந்த வீட்டுக்கே உன்னை அழைத்து வந்ததும் அப்போ தான் ஆதர்ஷ் அண்ணனின் கல்யாண விஷயத்தை பற்றி நீ கேட்டதும்..

சத்தியமா அப்போ நான் நினைக்கல அதை வைத்தே நீ பண்ண பிளானை.

அடுத்த நாள் எங்க அண்ணியை, அதன் எங்க அண்ணனின் இப்போதையே மனைவி அஸ்வினி போய் அன்று நீ, நான் மற்றும் ஆதர்ஷ் பார்க்க ஒரு ரெஸ்டாரன்ட் போனோம்.

ரெண்டு டேபிள் புக் பண்ணி ஒன்றில் நீயும் நானும் மற்றொன்றில் அண்ணனும் அண்ணியும் அமர்ந்தோம்.

அவர்களுக்கு தனிமை கொடுத்த நீயும் நானும் அமர்ந்த டேபிள் ல உனக்கு வேண்டிய ஐஸ்கிரீம் எல்லாம் வர வைத்தாய்.

எங்க போனாலும் நீ உன் காதலால் என்னை கொன்றாய். அங்கேயும் ஐஸ்கிரீம் ஊட்டி விடச் சொல்லி பிடிவாதம் பிடித்தாய். எல்லாரும் பார்க்க நான் மாட்டேன் சொல்ல நீயோ ஒரே பிடியாய் இருந்தாய்.

மயங்கிட்டேன் நிலா உன்னோட ஒவ்வொரு குழந்தைத்தன சேட்டையில் மயங்கிட்டேன். இனி யார் பார்த்தாலும் கவலை இல்லை என நான் ஐஸ்கிரீம் ஊட்டிவிட நீயும் பதிலுக்கு ஊட்டி விட்டாய். அது எதிர்பார்த்தது தான் ஒரு ஐஸ்கிரீம் ஐந்து ஐஸ்கிரீம் ஆகும் வரை நம்ம சுற்றி யார் நம்மை பார்க்கிறார்கள் என்பதை கண்டுக்கவே இல்ல.

எனக்கு உன் அளவுக்கு காதல் வெளிப்படுத்த தெரியல. அதை நீ தான் கற்று கொடுத்தாய்.. நான் காதலை கண்ணால் காட்ட நீயோ செயலில் காட்டி கொண்டே இருந்தாய்.

ஒரு கட்டத்தில் ஐஸ்கிரீம் காலி ஆக இன்னொரு ஐஸ்கிரீம் சொல்ல திரும்பினால் நம்மை பார்த்த மாதிரியே மொத்த ரெஸ்டாரன்ட் மனித கண்கள் இருந்தது.

அதில் நான் வெட்கம் கொள்ள நீயோ என் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து. நாங்கள் இப்படி தான் இன்னும் வேற என்னவென பாருங்க எங்களுக்கு கவலை இல்ல. நாங்க லவ் பண்றோம் இப்படி தான் இருப்போம் என நீ சொல்ல பாதி பேர் தலையில் அடித்து கொண்டு திரும்ப மிச்ச பேர் தங்கள் இணையோடு அதே போல ஊட்டிக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார்கள்.

அப்பறம் அஸ்வினி அண்ணிக்கிட்ட போன நீ அவர்களை நம்ம இருக்கையிலும் என்னை அவர்களின் இருக்கையில் அமர சொல்லிவிட்டு நெடு நேரம் அவர்களோடு பேசி கொண்டு இருந்தாய்.

இங்கே அண்ணன் தான் என் மேல் கோபமாக இருந்தான்.

தேஜூ, "அண்ணா என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே?"

ஆதர்ஷ், "ஹ்ம்ம்.. உங்கள் இருவரால் ஒண்ணுமே பேச முடியல. உங்கள் காதல் இம்சை தங்கலடா சாமி, மொத்த கூட்டமும் உங்களை தான் பார்த்தது. அதில் என் அஸ்வினியும் ஒருத்தி.."

தேஜூ, "உன் அஸ்வினி..?"

ஆதர்ஷ், "ஏன் நீ மட்டும் தான் பார்த்த ஒரே நொடியில் காதலில் விழுவாயா? நாங்க மாட்டோமா? இங்கேயும் லவ் இருக்குடா தம்பி பையா.."

தேஜூ, "அப்போ அண்ணி?"

ஆதர்ஷ், "யாரை அண்ணி என சொல்ற?"

தேஜூ, "அஸ்வினி அண்ணி தான். நீயே லவ் என ஃபிக்ஸ் பண்ணிட்டே அப்பறம் அவங்க என் அண்ணி தானே?"

ஆதர்ஷ், "எங்கே வந்ததில் இருந்து உங்களை பற்றி மட்டும் தான் கேட்டுகொண்டே இருந்தாள். அதில் எங்கே என்னை பிடிக்கிறது?"

தேஜூ, "என்னை நம்பு அண்ணா.. அங்கேயும் லவ் பல்ப் எரிந்தது. அதன் பார்த்தேனே நிலா பேச அழைத்து சென்ற போதே உங்களின் கண் பரிமாற்றத்தை, அது ஒன்றே லவ் தான் காதல் தான் சொல்வேன்."

ஆதர்ஷ், "அப்போ அடுத்த மாசமே கல்யாணம் தான், ஃபர்ஸ்ட் நைட் தான். ஆய் ஜாலி.."

தேஜூ, "தூ.. எங்க இருந்து எங்கே போற? மனசை அடைக்கு உணர்ச்சியை கட்டுப்படுத்து. அதன் நல்லது.."

ஆதர்ஷ், "ஹி.. ஹி.. கொஞ்சம் ஓவர் ஆ போய்ட்டேன்."

தேஜூ, "கொஞ்சம் இல்ல, ரொம்ப"

அப்பறம் தன் நீயும் அண்ணியும் பேசிவிட்டு வந்திர்கள்.

அஸ்வினி, "ஆதர்ஷ் எனக்கு ஓகே. உங்களுக்கு?"

ஆதர்ஷ், "எனக்கும் நாளைக்கே என்றாலும் ஓகே தான்.."

தேஜூ, "எது ணா சொல்ற?"

ஆதர்ஷ், "கல்யாணம் தான். நீ என்ன நினைச்ச?"

தேஜூ, "அதை சொன்னால் உனக்கு தான் அசிங்கம்."

ஆதர்ஷ், "அப்போ சொல்லாதே! சொல்லாதே!."

தேஜூ, "சரி அண்ணி ரொம்ப சந்தோசம். இனி வீட்டில் அடுத்த கட்டம் பற்றி பேச வேண்டியது தான்."

அஸ்வினி, "அதற்கு முன்னாடி ஒரு கண்டிஷன்."

ஆதர்ஷ், "ஏதுவாக இருந்தாலும் இப்போவே எனக்கு சம்மதம் தான்."

அஸ்வினி, "கண்டிஷன் உங்களுக்கு இல்ல, தேஜூக்கு"

மொத்த சொத்து அண்ணன் பெயரில் கேட்க போறாங்க என்கிற எண்ணத்தில் அதோடு அண்ணனின் காதல் நிறைவேற..

தேஜூ, "சொத்து தானே அண்ணி, எங்க அப்பாவின் மொத்த சொத்தும் எங்க அண்ணனுக்கு தான். எனக்கு அதில் ஒரு பைசா வேண்டாம்."

அஸ்வினி, "சொத்தா? தேஜூ.. தேஜூ.. நான் கேட்க வந்தது அது இல்ல. எங்க கல்யாணத்தோடு என் தங்கச்சியோடு உன் கல்யாணமும் நடக்கணும்."

தேஜூ, "சாரி அண்ணி அது மட்டும் முடியாது. என் உடல் உயிர் எல்லாமே என் நிலாவுக்கு தான். அதை தவிர வேற என்னவென கேளுங்க.."

அஸ்வினி, "நான் கேட்டது கூட அதன். மதுமதி.. அதன் உங்க நிலா பேசிய கொஞ்ச நேரத்தில் எனக்கு கூட பிறக்காத தங்கை ஆகி விட்டாள். உங்களின் காதல் விளையாட்டை சிறிது நேரம் பார்த்த எண்ணத்தில் ஆசையில் சொல்றேன் எங்க கல்யாணமும் உங்க கல்யாணமும் அடுத்த மாசமே நடக்கணும். இல்ல உங்க அண்ணா எனக்கு வேண்டாம்."

அப்போ உன் முகத்தை நான் பார்த்தேன். அதில் ஏதோ திருட்டு கலை தெரிந்தது. அப்போவே புரிந்து விட்டது எல்லாமே தேவி உங்க திருவிளையாடல் தான் என்பது.

பின் அண்ணிகிட்ட ரெண்டு நாள் யோசிக்க நேரம் கேட்டேன்.

அதில் கோபம் கொண்டது இருவர். ஒன்று என் அண்ணன் இன்னொரு ஆள் நீ.

அண்ணனோ முறைப்பில் கட்டிவிட்டு போனான். நீயோ காரில் அமர்ந்தவுடன் என் புது சட்டை மொத்தம் நனைவும் வரை அதில் சாய்ந்து கண்ணீருடன் காட்டினாய்.

என்ன பண்றது தெரியாமல் உன் இதழில் முத்தம் ஒன்றை வைத்து..

தேஜூ, "நிலா பிளீஸ் அழதே.. என்னால் தாங்க முடியல டி. பிளீஸ்.."

என் முகத்தில், தோளில்.. இன்னும் சொல்ல முடியாத பல இடத்தில் அடித்த நீ..

மதி, "நீ ஏன் யோசிக்கணும் சொன்ன? உடனே சரி சொல்ல வேண்டியது தானே. நான் ஏதாவது தப்பா பண்ணிட்டேன் போல அதன் இப்படி?"

தேஜூ, "அப்படி இல்லடி.. அது சொன்ன உனக்கு புரியாது. உனக்கு பழைய நினைவு வந்த பிறகு இந்த கல்யாணம் எல்லாம் பார்த்துக்கலாம்."

மதி, "இல்ல நீ என்னமோ மறைக்கிற. உன் கண்ணில் காதல் இருக்கு ஆனால் ஏதோ ஒண்ணு உன்னை என் பக்கம் வர விடாமல் தடுக்கிறது. அது என்ன? அது என்ன சொல்லுடா சொல்லு."

தேஜூ, "பிளீஸ் நிலா, இப்போ வேண்டாம். அந்த உண்மையை உன்னால் தாங்க முடியாது.."

மதி, "என்னடா உண்மை சொல்லு.. இப்போ மட்டும் நீ சொல்லல. இதன் நீ என்னை உயிரோட பார்க்கிற கடைசி நாள்."

இல்ல, அதை நீ சொன்னவுடன் என்னையே அறியாமல் உன்னை அடித்து விட்டேன் நிலா. என் உயிரான உன் பட்டு கன்னத்தில் அடித்து விட்டேன். ஐந்து விரல் தடயம் கூட பதியும் அளவுக்கு ஒரு அடி அதில் மருந்து தடவுவது போல என் இதழால் முத்தம் கொண்டு பல தடவை மருந்து போட்டேன்.

நான் அடித்ததால் கோபம் கூட கொள்ளாமல் நீ திரும்பி கண்ணீரோடு..

மதி, "பிளீஸ் டா சொல்லு.. அது என்ன உண்மை. ஒருவேளை எனக்கு நடந்த விபத்தில் குழந்தை பெற கூடிய தகுதி ஏதாவது..?"

தேஜூ, "அப்படி எல்லாம் ஒண்ணு இல்ல நிலா. இது வேற கண்டிப்பா இந்த உண்மை தெரிந்தால் என்னை வெறுத்து விடுவாய் அது மட்டும் நிச்சயம்."

மதி, "உன் நிலா செத்தாலும் உன்னை வெறுக்க மாட்டாள். இது ஒண்ணும் சினிமா வசனம் இல்ல என் மனசால் உணர்ந்து சொல்ற வார்த்தைக்கள்."

தேஜூ, "ஹ்ம்ம்.. சரி சொல்றேன். நீ நினைக்கிற மாதிரி நீயும் நானும் அந்த விபத்துக்கு முன்னாடி இருந்து காதலிக்கல.. அன்று வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்த நீ என் வண்டியில் முட்டி விழுந்து தலையில் அடிபட்டு மயங்கின. உயிருக்கு போராடும் உடனே மருத்துவமனையில் சேர்த்த நான் அந்த நொடி முதல் சொல்ல முடியாத ஒரு உணர்வு உன் மேல் எனக்கு வந்தது போகப்போக அது காதல் என்று உணர்ந்தேன். நீ கோமாவில் இருந்து வரும் வரை என் காதலை சுமந்துகொண்டு உன் பெற்றோரின் அனுமதியுடன் காத்திருந்தேன். பின் கண்விழித்தாய், அதற்குள் மருத்துவமனை முழுவதும் நீயும் நானும் காதலர்கள் என்பது போலவே ஆகிவிட்டது அதில் ஒன்றுதான் அந்த நர்ஸ் சொன்னது. பிளீஸ் நிலா என்னை வெறுக்காதே என் காதல் நிஜம் இறந்து போன என் அம்மா மேல் சத்தியமாக நிஜம்."

நகுல் பற்றிய விஷயத்தை மட்டும் மறைந்தேன். எனக்கே அது காதல் என்கிற நம்பிக்கை இல்ல அதன்.

மற்றபடி நான் சொன்னது எல்லாம் கேட்ட நீ அதற்கு பதில் சொல்லாமல்,

மதி, "தேஜூ, உடனே எங்க வீட்டுக்கு வண்டியை விடு.. சீக்கிரம்."

நானோ வலி நிறைந்த மனத்தோடு உன் வீட்டுக்கு வண்டியை விட்டேன்.

உன் வீட்டுக்கு போனோம். உன் கன்னத்தில் இருந்த விரல் தடயம் பார்த்து உன் குடும்பம் கேள்வி கேட்க..

மதி, "என் புருசன் என் மீது இருந்த அளவுக்கு அதிகமாக காதலால் கொடுத்த பரிசு. அதற்கு சேர்ந்து மருந்தாக பல முத்தங்கள் கூட வாங்கிட்டேன். இனி உங்கள் வேலை எண்ணி ஒரே மாசத்துக்குள் எங்களின் கல்யாணத்தை நடத்த வேண்டும். தேஜூ என் அறைக்கு வா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்."

உன் குடும்பம் என்னை கேள்விக்குறியாக பார்க்க சில உண்மைகள் உன்னிடம் சொல்லி விட்டேன் என சொல்லி உன் அறைக்கு வந்தேன்.

அங்கே திரும்பி எதிர்பாராத ஒரு இதழ் முத்தம் ஒன்றை தந்த நீ..

மதி, "தேஜூ, அந்த பொய்யான காதல் கதை கேட்டு உன்னை காதலிக்கல, தினம் தினம் நான் தூங்கிட்டேன் நினைத்து நீ அடிக்கடி பேச வந்ததை கேட்டு உன்னை காதலித்தேன். இந்த காதல் உண்மை சத்தியமான உண்மை. அதை மனதில் கொண்டு என்னை கல்யாணம் பண்ணிக்கோ.. இல்ல நானே உன்னை கட்டப்படுத்தி உன் கழுத்தில் தாலி கட்டி விடுவேன்."

எங்கே நீ சொன்னபடி என் கழுத்தில் தாலி கட்டி விடுவியோ என்கிற பயத்தில் உடனே சம்மதம் என்றேன்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?