நான் கண்ட கனவு நீயடி(டா) - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுபாஷிணி மற்றும் விஜயன் அவர்கள் இணைந்து எழுதும் இக்கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா)

யார் மீது கோபத்தை கொட்டுவது என தெரியாது, தற்போது தன் கையில் கிடைத்த அந்த பைக்கில் தன் கோபத்தை காட்டினாள் மதுமதி.

எங்கே போகிறோம் என்று உணராது செலுத்திய வண்டி ஒரு கட்டத்தில் பெட்ரோல் இல்லாது நிற்க. அப்போது தான் அவள் இருக்கும் இடத்தை கண்களால் அளவிட்டாள்.

சுற்றிலும் கருமை நிற படர்ந்து, ஆள் ஆரவாரமற்ற அவ்விடத்திற்கு தன் ஒளியை வீசி சிரித்து நின்ற நிலவு மகளை தவிர.

உன்னை போல தான் இனி நானும் இவ்வுலகத்தில் ஒற்றை நிலவாய் வாழப்போகிறேன். மாயை நிறைந்த இவ்வுலகத்தில் எனக்கென்று யாருமின்றி, இன்று காலை வரை எப்படி இருந்தேன் இந்த உலகத்தில் என்னை போல் பாக்கியச்சாலி யாருமில்லை என்ற கர்வத்தில் இருந்த என்னை ஒற்றை நொடியில் கீழே தள்ளி என் இறுமாப்பை மட்டுமின்றி என் இதயத்தையும் உடைத்து விட்டாயே ஏன்? எதற்கு? எனக்கு மட்டும் இப்படி என்று கதறுபவளை தேற்ற ஆளின்றி கேட்பாரற்று கிடந்தாள் அந்த இடத்தில்.

நேரமாக ஆக வெறுமை மட்டுமே துணை நின்றது அவளுக்கு. வண்டியை அங்கேயே போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தாள். சாலையோர நிழலுக்காக போடப்பட்டிருந்த நிழற்மேடையில் அமர்ந்தவளுக்கு காலையில் நடந்த காட்சியே நினைவிற்கு வந்தது.

தன் காதலன் தன் ஆருயிர் தோழியை திருமணம் செய்து, மாலையும் கழுத்துமாக நின்ற காட்சி, மனக்கண்ணை விட்டு அகலாது அவளை இம்சித்தது.
இப்படி ஒரு பேரடியை வாழ்க்கையில் அவள் எதிர்பார்த்ததே இல்லை. அழகான குடும்பம், விருப்பப்பட்ட படிப்பு, தனக்காக ஒரு காதலன் என்று அழகான கூட்டில் யாரோ கல்லை விட்டு எறிந்தது போல் இருந்தது அவளது வாழ்க்கை.

அவனுக்கு திருமணம் செய்து வைத்தது தனது பெற்றோர் என்பதையும் துளியும் அவளால் ஏற்க முடியவில்லை. ஏன் இந்த முடிவு . காதல் என்று வந்து நின்ற போது ஒற்றுக்கொள்ளவில்லை என்றாலும் எதிர்க்கவில்லையே. பின் ஏன் இந்த முடிவு என்று குழம்பி தவித்தவள் கண்கள் இருட்டிக் கொண்டு வர விழும் தருவாயில் ஒரு மடி அவளை தாங்க. யாரு என்று காணும் முன்னே முச்சரையானாள்.

கண்ணை திறந்தவள் கண்டது சுற்றிலும் வெள்ளை நிற வண்ணம் பூச்சு ஆங்காங்கே சுவர் ஓவியம் நிறைந்த அறை. ஆள்ளில்லாது அமைதியை சூடி இருந்த அவ்வறையை கண்டவளுக்கு தான் எப்படி இங்கு வந்தேன் என்ற கேள்வி தலைவலியை உண்டாக்கியது. மெதுவாக எழுந்தவள் அவ்வறையை விட்டு வெளியேற , நடுக்கூடத்தில் சட்டமாக அமர்ந்திருந்தான் அவன்.

புருவமுடிச்சுடன் அவனிடம் வர, அவளை ஏற்றெடுத்தும் காணாது மடிக்கணிணியில் கண்ணை பதித்திருந்தான். தன்னிருப்பை நிறுபிக்க இரும்பினாள் மதுமதி.

நிமிர்ந்து பாராது, அவன் எதிர்புறம் இருந்த இருக்கையை கைக்காட்ட . யாரிவன் எதற்காக என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கான். பேசாமல் சைகையில் பேசுகிறான், ஒரு வேளை ஊமையா இருப்பானோ . சரி நம்ப கிளம்புவோம் என்று கதவை திறக்க, காதை கிழிக்கும் அலாரம் ஒலி அலறியது. பயத்தில் கண்ணை இறுக்கி காதை மூடி அப்படியே மண்டியிட்டு அமர்ந்தாள்.

சத்தம் வந்ததும் தன்னிடம் இருந்த ரிமோட் மூலம் அதை அணைத்து அவளிடம் வந்தான் அவன்.
அவள் கைப்பிடித்து தூக்கி உன்னை உட்கார தான சொன்னேன், அதுகுள்ள அங்க எதுக்கு போன என்றான் சற்று உயர்த்திய குரலில்.

ஹலோ, யார் சார் நீங்க? உங்க இஷ்டத்துக்கு திட்டுறிங்க? என்று கடுகடுத்தாள்.
வெல், என் பேர் தேஜஸ்வின். இப்போ நீ தேஜூவோட கோட்டையில் இருக்க. அப்பறம் என்கிட்ட இப்படி குரலை உயர்த்தி பேசாதை, அது எனக்கு சுத்தமா பிடிக்காது.
என் இடத்துக்குள்ள வர என் அனுமதி தேவையில்லை , பட் இங்கயிருந்து போகணும் என்றால் கண்டிப்பா என் அனுமதி வேணும் என்றான் அமர்த்திய குரலில் ஆனால் அழுத்தமாய்.

எங்கோ வசமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்தாள். இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பது மட்டுமே அவள் மூளையில் ஓடியது. அவள் எண்ணவோட்டத்தை சரியாக கணித்தவன், அவர்களுக்கு முன் இருந்த டி.வியை இயக்க அதில் வந்த காட்சியை கண்டு சிலையாய் சமைந்தாள் அங்கு அவளது பெற்றோர்கள் சுற்றி ஐந்தாறு பேர்கள் மறைத்து வைத்த துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். அவர்கள் பேசுவது கேட்கவில்லை, ஒளிபடம் மட்டுமே காட்டினான் தேஜு.

எதுவும் கேட்காது நேராக விசயத்திற்கு வந்தாள் மதுமதி. நான் என்ன பண்ணனும் என்றாள் மரத்தக்குரலில்.
குட் நான் கூட உனக்கு எப்படி புரிய வைப்பது என யோசிச்சேன். நீ கொஞ்சம் ப்ரில்லியன்ட் என்று அவள் கன்னம் கிள்ளி சென்றான். அவன் பின்னாடி சாவி கொடுத்த பொம்மைப் போல் சென்றாள் மதுமிதா.

இந்த பேப்பர்ஸில் சைன் பண்ணா போதும் உன் அப்பா அம்மாவை விட்டறேன். ஏன்? என்று கேள்வியாக பார்க்க.
உன் அப்பா என்கிட்ட பத்து லட்சம் கடன் வாங்கிருக்கார், அதுக்கு வட்டியும் கொடுக்கலை. முழுசா மூணு வருசம் முடிந்துவிட்டது , என்று அதற்கான சில பேப்பரை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சி தற்போது அந்த பணம் ஐம்பது லட்சமாக ஏறியிருந்தது. அவர்கள் ஒன்றும் பெரிய பணக்காரர்கள் அல்ல அப்பர் மிடில் கிளாஸ் தான். இவ்வளவு பணம் அவரால் புரட்ட முடியாது அதுவுமில்லாது தனக்கு தெரியாது இவ்வளவு பெரிய தொகையை கடனாக வாங்க காரணம் என்ன என்ற கேள்வி மனதை அரித்தது.

என் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லு அப்பறம் நீ சொல்கிறதை கேட்கலாமா வேணாமானு யோசிக்கிறன் என்றாள்.
பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து ஏதோ நம்பரை தட்டி அழைக்க எதிர்முனையில் அவர்கள் பேசும் முன் ஸ்பீக்கரில் போட்டு அவளிடம் நீட்ட, ஹலோ என்றாள்.

மதும்மா என்ற தழும்பிய குரலே பேசுவது தன் தந்தை என புரிந்தது.
அப்பா இவங்க என்ன என்னமோ சொல்றாங்கப்பா பயமா இருக்கு, என்னை விட சொல்லுங்கப்பா என்றாள் மது.
மதும்மா அதை பத்தி பேச தான் காலையில் கூப்பிட்டேன், நீ தூங்கிட்டு இருக்கன்னு தம்பி சொன்னார் என்றவரை குறுக்கிட்டு பேசினாள் மது.
மது, "அப்பா என்ன சொல்லுறிங்க? இவன் நீங்க கடன் வாங்கினதா சொல்லுறான்?".
அவர் என்ன சொன்னாலும் கேளு மதும்மா அது மட்டும் தான் இப்போ மதுனால சொல்ல முடியும் என்று போனை வைத்துவிட்டார்.

அவள் பேசிவிட்டு அமைதியாக அமர்ந்திருக்க, அவள் கையை பிடித்தான் தேஜு. அவன் கையை தட்டிவிட்டவள் அருகில் இருந்த கத்தியால் அவன் தொட்ட இடத்தை வெட்டினாள்.

அவளருகே வர , அங்கையே நில்லு ? நீ நினைக்கிற எதுவும் நடக்காது உன் பணத்தை வைச்சு எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்காதே.

அவள் பேசுவதை எதையும் காதில் வாங்காது பஸ்ட் எய்டு கிட் எடுத்தவன் அவளை நெருங்க , மீண்டும் கத்தியால் வெட்டிக் கொள்ள பார்த்தவளை அலேக்கா தடுத்து மீண்டும் எடுக்க முடியாதபடி தூக்கி போட்டான் தேஜூ.

"ஏய்" என்று பேச முனைந்தவளை பேசாத படி மருத்துவ முத்தம் கொடுத்தான் அதன் விளைவாக கல்லாய் சமைந்தாள் மதுமதி.
இதை சாதகமாக எடுத்தவன் வெட்டுபட்ட இடத்திற்கு மருந்திட்டு தூங்குவதற்கு ஏற்றார் போல் ஊசியை போட்டான்.
அவனையே பார்த்திருந்தவள் தூங்கம் வர அவன் மீதே சரிந்தாள்.

அவளை கையில் ஏந்தி படுக்கையறையில் படுக்க வைத்தவன், அவளருகே படுத்து தலைகோதினான் தேஜு.

எண்ணங்கள் மாற
உந்தன் ஞாபகம் பெருக
எந்தன் மனமோ தவிக்க
ஏன் இந்த நிலை...

உமிழவும் முடியாது விழுங்கவும் முடியாது
தகிக்கும் என் நிலைக்கு
நீயும் ஒரு காரணமோ? ....

தூரிகையால் வண்ணம் தீட்ட நினைத்த
என் வாழ்வை வர்ணம் தீட்டி
மீண்டும் வர்ணமின்றி ஆக்கியது
தான் விதியோ !!!!

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி.
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 2

உறக்கத்தில் இருப்பவளை ரசித்து கொண்டே அவளை அதிலிருந்து எழுப்பினான் தேஜஸ்வின்.

"மதுமதி... மதி. மை டார்லிங்.. புச்சு குட்டி.. பேபி.. பேபி மா.. எழுந்துகோ மா."

சில நொடிகளுக்கு பிறகு கண் முழித்தவள் தன்னருகே அமர்ந்திருந்த தேஜஸ்வினை பார்த்து அடிக்க கை உயர்த்தினாள்.

அதனை ஒரே நொடியில் தடுத்தவன்,

"மதுமதி.. ஹ்ம்ம் பெயரில் மட்டும் தான் மதி இருக்கு மற்றப்படி அது உண்மையில் இருக்க வேண்டிய இடத்தில இல்ல போல. இது என் இடம், இங்கே உனக்கு என்ன நடந்தாலும் அதை தடுக்க ஒருத்தன் இல்ல. உன் காதலன் கூட காப்பாற்ற வர மாட்டான். ஹ்ம்ம்.. கேள்விப்பட்டேன் உன் காதலன் நகுலன் உன்ன விட்டு உன் தோழி அவள் பேர் என்ன? ஆ கனிமொழி. அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டனாம்.. பாவம் தான் போ."

"நீ ஒன்னும் எனக்கு பாவம் பார்க்க வேண்ட", மதுமதி சீற அதனை கேட்டவன் வயிறு வலிக்க சிரித்து விடு, "உனக்கு எவன் பாவம் பார்த்தான். நான் சொன்னது உன் காதலனை, ஒரு பேய் கிட்ட தப்பி இன்னொரு பிசாசு கிட்ட மாட்டி கொண்டான் ல"

"யாரை பார்த்து பேய் சொன்ன.. நானா நானா?"

"கண்டிப்பா நீயே தான். இதோ இந்த கண்ணாடியை பார் பேய்கான பத்து பொருத்தம் பக்காவா இருக்கு. என்ன ஒரு வெள்ளை புடவை கட்டி இருந்தால் நூறு சதவீதம் பேய்யே தான்.", கையில் ஒரு கண்ணாடி கொடுத்து விட்டு நகர்ந்து கொண்டான்.

அதில் பார்த்தவளின் முகம் முழுதும் அவன் கை வண்ணத்தில் பல ஒவிங்கள் திட்டப்பட்டு இருந்தது. ரெண்டு நீண்ட பல்லு, கண்ணை சுற்றி அடைத்தியான கருவளையங்கள், நெற்றி பொட்டில் பெரிய சிவப்பு பொட்டு என காளி தேவியே போல அலங்காரம்.

அதில் கோபம் கொண்டவள்..

"ஏய் உன்னே உன்னே.", அவள் கொலைவெறில பார்க்க

"என்னே என்னே..", அவன் ஆர்வமா கேட்க

"சீ..", என சொல்லி முகம் திருப்பி கொண்டாள்.

பின் கழிவறை சென்று முகத்தை கழுவி கொண்டு அங்கே இருந்த புது ப்ரஷ் பேஸ்ட் ல பால் விலக்கி விட்டு கண்ணாடியை திரும்பி பார்த்தாள். அந்த நொடி அவளும் இதே போல ஒரு காலத்தில் தன் தாய் தந்தையின் முகத்தில் வரைந்த நினைவு வந்தது.

அந்த நொடியில் தான் தன் பெற்றோர் அந்த தேஜஸ்வின் ஆட்களிடம் கைதியாக மாட்டி கொண்டு இருப்பது புரிய வெளியே தேஜஸ்வின் இருந்த இடம் வந்தவள்..

"என்னடா உனக்கு வேணும்? என்னே எதுக்கு இப்படி சித்தரவதை பண்ற?", கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் விழும் நிலையில் அவள் கேட்க.

அதனை கண்டவன் அப்போதும் தன் விளையாட்டை விடாமல்..

"காளியாக உள்ளே போய் அழகான மோகினியாக வந்து இருக்கே. சரி சரி முதலில் இந்த தண்ணீர் குடி அப்பறம் என்ன எது பார்ப்போம்.", அவளுக்கு அப்போது இருந்த நிலையில் அந்த தண்ணீர் தேவைப்பட தன் கோபத்தை அதில் கட்டாமல் குடித்து விட்டு..

"இப்போதாவது சொல்லு. எங்க அப்பா வாங்கிய பத்து லட்சம் பணத்துக்கு.. வட்டி கிட்டி என முன்று வருடத்துக்கு ஐம்பது லட்சம் கேட்கிற, அதை எங்களால் தரவே முடியாது என்று தெரிந்து கூட இப்படி பண்ற? உண்மையில் உனக்கு என்னடா வேண்டும்"

"இந்த பேப்பர் ஏ படி உனக்கே தெரியும்?"

அதை வாங்கி படித்தவள், கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.

"என்ன இது? ஐம்பது நாள் உன் கூடவே உன் காதலியாக ஒரே வீட்டில் ஒண்ண தங்கி இருக்கணும். அதற்கு ஒரு நாள் லட்சம் ஒரு லட்சம் என ஐம்பது நாள் ஐம்பது லட்சம் சம்பளம் அதை எங்க அப்பா தரவேண்டிய கடனில் கழிக்கப்படும் என்று போட்டு இருக்கு. என்னை என்னனு நினைத்தாய்? பணம் இருக்குற திமிர் ல நீ என்னவென பண்ணுவ அதை நான் பார்த்துக்கிட்டு இருக்கணுமா?"

"இப்போ நான் என்ன பெரிசா பண்ணேன் இப்படி சொல்ற..?"

"இதுக்கு மேல் நீ என்ன பண்ணனும். அதன் இதில் தெளிவா எழுதி இருக்கே, உனக்கு ஐம்பது காதலியாக இருந்து என் உடலை விக்கணும் போட்டு இருக்கே.."

"வெயிட் வெயிட்.. அப்படி ஒன்னும் எழுதவில்லை. காதலியாக இருக்கணும் மட்டும் தான் போட்டு இருக்கு. ஒருவேளை காதலி என்றால் எல்லாமே என்பது எனக்கு தெரியாது மா, நான் இதுவரை யாரையும் காதலித்தது இல்ல. ஒருவேளை உன் முன்னால் காதலன் ஏதாவது?"

"சீ.. அப்படியெல்லாம் இல்ல. அவனின் விரல் நுனி கூட என் மேல் பட்டது இல்ல பட விட்டது இல்ல."

"அது எனக்கு தேவை இல்லாதது. எனக்கு வேண்டியது ஐம்பது நாள் என் காதலியாக இருக்க ஒரு பொண்ணு. அந்த இடத்தில் நீ இருந்து உன் அப்பனின் ஐம்பது லட்ச கடனை அடைத்து விடு போ. மற்றப்படி இந்த ஐம்பது நாள் என்னால் உன் கற்புக்கு களங்கம் வராது இது இறந்து போன எங்க அம்மா மேல் சத்தியம். ஆனால்.."

"ஆனால் என்னடா..?"

"நேற்று இரவு கொடுத்த அதே மருத்துவ முத்தம் இந்த ஐம்பது நாளில் தினம் தினம் காலை, மாலை மற்றும் இரவு என குறைந்தது ஒவ்வொரு தடவை ஒரு நிமிடமாவது நம்ம பரிமாறி கொள்ள வேண்டும்."

"சீ.."

"என்ன சீ.. முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லனு ஒரு படத்தில் பாடலவே பாடி இருக்காங்க."

"அதெல்லாம் என்னால் முடியாது."

"அப்பறம் உன் இஷ்டம். உனக்கு தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள் சரியா?.. அவள் பெயர் கூட இந்துமதி தானே. போன வாரம் தான் பதினெட்டு வயசு ஆச்சு, காலேஜ் முதல் வருடம், உன்னை விட அழகு தான். இப்போ ஏதோ காலேஜ் டூர் போய் இருக்கிறாள் சரியா?. எனக்கு வேண்டியது ஒரு ஐம்பது நாள் காதலி. அது நீயா இருந்தால் என்ன? உன் தங்கச்சியா இருந்தால் என்ன?. ஏதோ இப்போ தான் நீ காதல் தோல்வியில் இருக்குற அந்த கருணை அடிப்படையில் வெறும் முத்ததோடு விட்டேன். அதுவே உன் தங்கச்சி என்றால்.."

"போதும்! போதும்! நிறுத்து. சரி எனக்கு ஓகே.. பிடிக்கல என்றாலும் என் குடும்பத்தை காக்க முக்கியமாக என் தங்கச்சியை உன்கிட்ட இருந்து காக்க இதுக்கு சம்மதம் சொல்றேன்."

"மகிழ்ச்சி", ரஜினிகாந்த் ஸ்டைல் ல அவன் சொன்னான்.

பின் அவன் நீடிய பேப்பர் ல அவள் கையெழுத்து போட்டவுடன் அந்த நொடியே திரும்பி ஒரு மருத்துவ முத்தத்தை ஒரு நிமிடம் வழங்கி விட்டு அவளை விட்டான்.

அவள் அதிர்ச்சியுடன் பார்க்க. அவன் கண்ணடித்து விட்டு..

"என்ன அப்படி பார்க்கிற? இந்த பேப்பர் ல நீ கையெழுத்து போட்ட நொடி முதல் நீ என் காதலி. இன்றோடு நம்மளோட முதல் நாளில் காதல் பயணம் ஆரம்பம். அதன்படி நம்மளின் காலை முத்தத்தை கொடுத்து வாங்கிட்டேன். அவ்வளவு தான்.."

அவள் எதுவும் பேசாமல் தன் விதியை நினைத்து வருத்தம் கொண்டாள்.

அவள் இருந்த அறையை விட்டு வெளியே வந்தவன் தனக்குள்..

"சாரி பேபி. எனக்கு வேற வழி தெரியல உன் காதல் தோல்வி வலியில் இருந்து நீ வெளியே வரணும் என்றால் அதை விட பெரிய கஷ்டத்தை நீ பார்க்கணும். அதற்கு தான் இந்த ஷாக். கவலைப்படாதே பேபி இனி வர போகிற ஒவ்வொரு நாளும் என் காதலை உனக்கு பல விதத்தில் கட்டி உன் பழைய காதலை மறக்க வைக்கிறேன். ஐம்பதாவது நாள் முடிவில் நீயே உன் வாயால் ஐ லவ் டா தேஜூ என சொல்ல வைப்பேன். இது எங்க குலதெய்வம் கருப்பன் மேல் சத்தியம்.", விசில் அடித்து கொண்டே தன் காதலிக்கு காலை உணவு செய்ய சமையல் அறை நோக்கி போனான்.

இவன் என்ன டிசைன் என்பது போக போக தான் தெரியும்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 
Feb 4, 2020
49
9
8
நான் கண்ட கனவு நீயடி(டா) - 3

நான் என்ன தப்பு பண்னேன்? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை? காதல் செய்தது தப்பா? காதலில் மட்டும் இல்ல இப்ப வாழ்க்கையின் தோற்று போக போகிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. எங்கிருந்து வந்தான் , திடீர்னு வந்து ஐம்பது நாளைக்கு காதலியா நடிக்க சொல்றான். அவனோட மோட்டிவ் என்னவென்று கூட எனக்கு தெரியவில்லை. இப்படி சூழ்நிலை கைதியா அவன் கூட இருக்க போறேன் என்று நினைத்தாலே நெருப்பு மேல நிற்கிற மாறி இருக்கு.

நான் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், கண்டிப்பா என் தங்கச்சி டச் பண்ணிடுவானோ வேற பயம். அந்த ஒரு காரணத்திற்காக தான் அவனோட இந்த கேவலமான கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டேன். என்னால் கொஞ்சம் கூட இதை சகிச்சுக்க முடியலை, ஏதாச்சு பண்ணனும் என்று மனதிற்குள் பேசிக்கொண்டிருவளை வம்பிழுக்கும் நோக்கத்துடன் உள்ளே வந்தான் தேஜு.

பேபி இங்க என்ன பண்ணுற என் கூட வா என்று அவள் கையை பிடிக்க, தீயாய் முறைத்தாள் மதுமதி.
ரூல் நம்பர் செவன், நான் கூப்பட்டால் காரணம் கேட்காது என்கூட வரணும். டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் சரியா படிக்கலையா என்று நமட்டு சிரிப்புடன் அவன் கேட்க .
அய்யோ இன்னும் என்னலாம் இருக்கோ என்று நொந்து அவனோடு சென்றாள்.

ரூல் நம்பர் த்ரி, எப்பவும் சிரிச்ச முகத்தோட இருக்கணும் என்று அவன் கூட, கடுப்பில் முப்பத்தியிரண்டு பல்லையும் அவள் காட்ட .
ப்பா, யாருடா இந்த பொண்ணு பேய் மாறி என்று சொல்லி அவள் தோளில் கையை போட அதே வேகத்தில் அவள் தட்டி விட்டாள்.

"ரூல் நம்பர்" அவன் அரம்பித்ததும், யப்பா சாமி முடியலை கையை போடனுமா போட்டுக்கோ என்று சிடுசிடுத்தாள் மதுமதி.
தலை சாய்த்து அழகாய் சிரித்தவாறே, அவள் தோளில் கை போட்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கிருந்து ஊஞ்சலை கண்ட மதி, அவ்வளவு நேரம் இருந்த எல்லாம் மனக் கசப்பையும் மறந்து குழந்தையாய் மாறி விளையாட ஆரம்பித்தாள்.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் இன்னும் கொஞ்சமே, இன்னும் கொஞ்ச நாள் தான். அதுக்கு அப்புறம் உன்ன என் பழைய மதியா மாத்தி காண்பிக்கிறேன். அதுவரை நான் பண்ற டார்ச்சரை நீ அனுபவிச்சே ஆகணும்.

என் மனசு உனக்கு எப்போ புரியுதோ அப்போ நான் பண்ண எல்லாத்துக்கும் விளக்கம் உனக்கே தெரியும் என்று மனதில் நினைத்து குழந்தையென விளையாடும் அவனவளை ரசித்து நின்றான் தேஜு.

சிறிது நேரம் விளையாடியவள் உள்ளம் குறுக்குறுக்க நிமிர்ந்து பார்த்த போது தன்னையே விழுங்குவது போல் பார்த்திருந்த தேஜுவை பார்த்து என்ன என்று உதடசைத்து அவள் கேட்க சொக்கி தான் போனான்.

அவள் அருகே சென்றவன் சாரி மதி என்று ஆழ்ந்த முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான். அந்த முத்தத்தில் மெய் மறந்து நின்றிருந்தவளை கையில் ஏந்தி உள்ளே வந்தவன் அவளை ஷோபாவில் அமர வைத்து அவன் செய்த உணவை தட்டில் போட்டு எடுத்து வந்தான்.

அதுவரை கண்மூடியே அமர்ந்திருந்தாள். மனமும் மூளையும் மாத்தி மாத்தி சண்டையிட்டது அவளிடம்.
"அவன் என்னை நெருங்கும் போது ஏன் அமைதியா இருந்தேன்" என்று மனம் கேள்வி கேட்க.
"நகுலனை கூட நெருங்க விட்டது இல்லை, இவனை மட்டும் பக்கத்தில் சேர்க்கிற ஒரு வேளை அவன் பணத்தை பார்த்து மயங்கிட்டியோ " என்று மூளை வாதாட .
"ஒருவேளை அவன் அழகில் விழுந்துட்டியா?" என்றது மனம்.
சோர்ந்து போய்விட்டாள் இதில் தான் எந்த விதம் என்ற தெரியது அவள் தவிக்க, சரியாக தட்டுடன் வந்தான் தேஜு.

மனமும் மூளையும் மாறிமாறி வாதாட ஒரு கட்டத்தில் மனம் சொல்வது உண்மையோ மூளை சொல்வது உண்மையோ என்று தெரியாத அளவுக்கு குழம்பிப் போனாள். அவனைப் பார்த்தபோது இயலாமை மேலோங்க . அவன் மேல் ஒரு வெறுப்பு உண்டானது, கோவத்தில் தட்டு மட்டுமின்றி அவனை பிடித்து கீழே தள்ளிவிட்டு ரூமில் அடைந்து கொண்டாள் மதுமதி.

"மதி ஒபன் தி டோர்? மதி ஐ சேட் ஓபன் தி டோர்? மதி , என்ன கோப படுத்தாதே அதோட பின் விளைவு ரொம்ப மோசமா இருக்கும் " என்று அவன் கத்தியதை எதையும் காதில் வாங்காது சட்டமாக அமர்ந்திருந்தாள் மதுமதி.

உன்னை எப்படி வெளியே கொண்டு வரணும் என்று எனக்கு தெரியும் மை டியர் டார்லிங் என்று அவன் கத்திய மூன்றாவது நிமிடத்தில் வெளியே வந்தாள் மது.
"என்ன தான்டா உன் பிரச்சனை அணு அணுவா கொல்லுறதுக்கு ஒரேடியா கொன்று " என்று அழுதாள் .

நீ தான் வேணும் உன் காதல் அவ்வளவு தான் , இப்போ நீ சாப்பிடணும் அதுவும் நான் தான் ஊட்டி விடுவேன் என்று இட்லியை மறுக்காது சப்பிட்டு எழுந்திரிக்க .
செல்லக்குட்டி எங்க போற என்றவனை ஒரு தினுசாக பார்த்து ரூம்க்கு போறேன் என்றாள் .

ரூல் நம்பர் நயன் என்று எதையோ கூற போனவனை, டேய் என்ன கொலைகாரியா ஆக்கிறாதே. என்ன பண்ணனும் சொல்லி தொலை என்றாள கடுகடுத்தாள்.
சோ ஸிம்பில், எனக்கு சாப்பாட்டு நீ தான் இந்த ஐம்பது நாள் ஊட்டி விடனும் என்றவனை மேலும் கீழும் பார்த்து செய்றேன் செஞ்சு தொலையிறேன் இல்லைனால் விடவா போற என்று முணு முணுத்தவாறு கிச்சனுள் சென்றாள்.

இரண்டு நிமிடத்தில் இட்லியுடன் வந்தவள், அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள். அவன் முகத்தியே பார்த்திருந்தாள், அவனோ எந்த வித முகமாற்றமுன் இன்றி அவள் கொடுத்ததை உண்ண .
என்ன இவன் அமைதியா சாப்பிடுறான், மிளகாய் பொடிக்கு பதிலா பூஸ்ட்ட போட்டுட்டோமோ? என்று யோசிக்க.
ரொம்ப யோசிக்காத பேபி, நீ போட்டது மிளகாய் பொடி தான். உன் கையில் விசத்தை கொடுத்தா கூட சாப்பிடுவேன் இதை சாப்பிட மாட்டேனா?
ஐ லவ் யு போய் ரெஸ்ட் எடு என்று சென்றான் தேஜூ.
பட் ஐ ஹேட் யூ என்று அறையை டம்மென்று அடித்து சென்றாள் மது.


இப்படிக்கு ,
உங்கள் ,
சுபாஷினி.
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
நான் கண்ட கனவு நீயடி(டா).. 4

ஐ ஹேட் யூ.. என கேட்டவன் அவனையும் மறந்து உரக்கமாக சிரித்தான். அவனின் நெடுநேர சிரிப்பில் வெளியே வந்தவள்..

இங்கே எங்க காமெடி ஷோ நடக்குது சிரிக்கிற.. அவள் சீற்றம் கொள்ள, அவளை தன் அணைப்பில் இறுக்கமாக வைத்து..

பேபி, உனக்கு என் மேல் அளவுக்கு அதிகமான காதல் வந்தாலும் சரி? வெறுப்பு வந்தாலும் சரி? அதை நான் ரசிப்பேன். ஏன்னென்றால் நான் ஆக்டர் தனுஷ் ஃபேன். அவரின் 'குட்டி' படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்து இருக்கேன். அந்த படத்தோட கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"ஃபீல் மை லவ்

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே ஃபீல் மை லவ்

என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே ஃபீல் மை லவ்

என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ
வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
ஃபீல் மை லவ்.... ஃபீல் மை லவ்....
ஃபீல் மை லவ்.... ஃபீல் மை லவ்...."

"நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே

அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே


லவ் லவ் லவ் போட்டி இல்லா லவ்
வேஷம் போடா தேவை இல்லை one side லவ்"


"ரெண்டு பாட்டுமே என்னோட ஃபேவரைட்.. சோ பேபி நீ இந்த ஐம்பது நாளில் என் கூட நல்ல சண்டை போடு சரியா.. எப்போ பார்த்தாலும் கொஞ்சுவது மட்டுமே காதல் இல்லயே? இப்படி ரொம்ப சண்டை போடுவது கூட காதல் தான். நான் எப்போவும் கொஞ்சிக்கிட்டே இருப்பேனாம்.. நீ இதே மாதிரி என் கூட எப்பவும் சண்டை போட்டு கொண்டே இருப்பியாம் சரியா?..", பின் அவனின் நெற்றி பொட்டில் முத்தம் ஒன்று வைத்தவன்..

"போ பேபி.. போய் என்னிடம் எப்படியெல்லாம் உன் வெறுப்பை காட்டி லவ் சொல்லலாம் யோசி..", என சொன்னவன் அவள் போன பிறகும் அவளுக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாக, "ஜஸ்ட் ஃபீல் மை லவ் பேபி..", என சொன்னான்.

அறைக்குள் சென்ற அவளுக்கு தான் குழப்பம்..

"என்னடா இவன், காதலியாக நடிக்க சொல்லி உண்மையான காதலன் மாதிரி நடந்துக்கிறான். ஒருவேளை நகுலை பார்க்கிறதுக்கு முன்னாடி இவனை பார்த்து இருந்தான் இவனையே காதலித்து இருப்பேனா? இவனுக்கு என்ன குறைச்சல் ஆள் பார்க்க நல்ல இருக்கான், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி நல்ல இருக்கு, பெண்களின் கண்கள் மட்டுமே தான் அபிநயம் வசிக்கும் என்பது பொய் என்பது போல பல விஷயத்தை தன் கண்கள் மூலமே சொல்கிறான். இப்படி பெண்களின் மனசை கவரும் பல அம்சம் அவன் கிட்ட இருந்தும் எதுக்கு காதலியாக நடிக்க ஒரு பெண். அவன் நினைத்து இருந்தால் நிஜத்தில் ஒருத்தி கிடைக்காமல போய்டுவாள்?"

அப்போது தான் அவளுக்கு ஒரு விஷயம் மனதின் வந்தது.

"அவன் பாடும் போது கேட்ட குரலை எங்கையோ கேட்டு இருக்கேன். எங்கே? எங்கே? பல தடவை கேட்டது போல ஒரு ஃபீலிங். இந்த ஃபீல் கனவா? நிஜமா?. முதல் நாளே இவனின் அருகாமை என்னை ஏன் இப்படி பாதிக்குது?. இன்னும் போக போக வர போகிற நாட்களில் என்ன என்ன நடக்க போகுதோ?"

இன்னும் இந்த நாளே அவள் அனுபவிக்க வேண்டியது நிறைய இருப்பது புரியாமல் அவள் படுக்கையில் படுத்து இருக்கே.. அறைக்குள் வந்த நம்ம ஹீரோ..

"பேபி.. பேபி மா.. மை மதி குட்டி. இன்னும் என்ன பண்றீங்க தூங்காமல்..?"

"நான் என்னமோ பண்றேன் உனக்கு இப்போ என்ன வேண்டும் சொல்லு..?"

"பெருசா ஒண்ணும் இல்ல.. ரொம்ப சலிப்ப இருக்கு அதன் உன் கூட சேர்ந்து ஏதாவது படம் பார்க்கலாம் என்று தான்.."

"நான் வரல.. நீ போய் பார்."

"ரூல் நம்பர் ஒன்.. இந்த ஐம்பது நாள் யார் என்ன செய்தாலும் சேர்ந்து செய்யணும். சமையல் கூட.. என்ன காலையில் நீ சோர்வாக இருந்தாய் அதனால் விட்டேன். இப்போ எனக்கு படம் பார்க்கணும் நீயும் கூடவே வந்து உட்கார். படம் முடிந்த பிறகு மதிய சாப்பாட்டு வேற சேர்ந்து பண்ணனும்.."

"எனக்கு சமைக்க தெரியாது.."

"எனக்கு தெரியும் நான் சொல்லி தருகிறேன்."

"சரி.."

"அப்படியே மாமன் அப்போ அப்போ ரொமான்ஸ் பாடம் கூட நடத்துவேன். சரியா?"

"சீ.. அதெல்லாம் எனக்கு வேண்டாம்."

"ரூல் நம்பர் எட்டு.. இந்த ஐம்பது நாள் நான் என்ன சொன்னாலும் செய்தாலும் வேண்டாம் சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டாம். பயப்படாதே உன் கற்புக்கு எந்த களங்கமும் வராது."

அந்த பேச்சு பிடிக்காத மதுமதி.. "பேசாமல் வா போய் படத்தை போய் பார்ப்போம்."

அவளை அழைத்து போனவன் டிவி முன் இருந்த ஒரு சோபா ல உட்கார வைத்தவன்

'ஒ மை கடவுளே' படத்தை போட்டு விட்டு அவள் மடியில் தலைவைத்து படுத்து கொண்டான்.

அதற்கு அவள் முறைக்க..

"ரூல் நம்பர் டூ.. நான் எப்போ நினைத்தாலும் உன் மடியில் படுத்து கொள்ளலாம் உனக்கு கூட என் மடியில் இடம் உண்டு. தோளில் கூட சாய்ந்து கொள்ளலாம்.."

"அதெல்லாம் எனக்கு வேண்டாம்..", என சொன்னவள் அமைதியாக படத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

படம் போக போக தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள். அந்த நேரத்தில் அவளின் காதல் தோல்வி, இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் எல்லாம் அந்த நொடியில் மறந்து சிரித்து கொண்டு இருந்தாள்.

அவளுக்கு தெரியாது.. தேஜுவின் பார்வை படம் முடியும் வரை மதுமதி முகத்தில் தான் இருந்தது.

அவனின் மதி.. கொஞ்ச கொஞ்சமாக பழைய மதியாக மாறி கொண்டு இருப்பது அவன் கண்களுக்கு தெரிந்தது.

படத்தை பார்த்து முடித்தவள் அப்போது தான் தன் மடியில் படுத்து இருப்பவனை உணர்ந்தாள்.

அந்த நொடி அவள் முகத்தில் இருந்த மாற்றத்தை பார்த்தவன் மீண்டும் இன்னொரு மருத்துவ முத்தத்தை கொடுத்து வாங்கினான். ஒரு நிமிடத்துக்கு பிறகு..

"மத்தியான முத்தம் முடிந்தது. வா போய் சமையல் செய்வோம்.."

இங்கே இவளுக்கு தான் எப்போவும் போல தலை வலித்தது.

"இவன் என்னடா டிசைன்.. உண்மையில் இவனுக்கு என்ன வேண்டும். இது வெறும் நடிப்பு தானா? இல்ல வேற ஏதாவதா?", மனதில் நினைத்து கொண்டு அவனை தேடி சென்றாள்.

சமையல் அறையில் அவனுடன் சமையல் கற்றுக் கொண்டே..

"மிஸ்டர் தேஜஸ்வின்..", அவள் அழைக்க அதை கேட்டவன்..

"கால் மீ தேஜு.. இல்ல நான் உன்னை கூப்பிடுற மாதிரி பேபி.. குட்டி மாதிரி ஏதாவது செல்ல பெயர் வைத்து கூப்பிடு.."

"அதுவும் ரூல்ல இருக்கா?"

"இல்ல ஆனாலும் காதல் மனதின் ஆசை.."

என்ன நினைத்தாளோ..

"சரி தேஜூ.. எனக்கு ஒரு சந்தேகம். உண்மையில் இது ஐம்பது நாள் நடிப்பு தானே அப்பறம் எதுக்கு உண்மையான காதலன் மாதிரி ஓவர் லவ் காட்டுற?"

"நாய் வேஷம் போட்டால் குரைத்து தானே ஆகணும். இது காதலன் காதலி வேஷம் நான் நல்ல நடிகன் ஸ்கூல் டிராமா ல நடித்து பழக்கம் அதன் கேரக்டர் ல ஒன்றி விட்டேன். மற்றபடி நீயும் நல்ல நடித்தால் தான் என் மனசுக்கு தீப்தி."

"இந்த ஐம்பது நாளைக்கு பிறகு என்ன பண்ணுவ.."

"என்னோட அப்பா எனக்கு ஒரு அழகான அன்பான பொண்ணை பார்த்து இருக்கார். அவளை கல்யாணம் பண்ணி கிட்டு சந்தோசமாக இருப்பேன்."

"இந்த மாதிரி ஐம்பது நாள் காதலி விஷயம் அவளுக்கு தெரியுமா?"

"தெரியுமே.."

"என்ன சொன்னாள்?"

"அதை ஐம்பது நாளுக்கு பிறகு நீயே தெரிந்து கொள்வாய்."

அவளுக்குள் ஒரு ஏமாற்றம்.. காரணம் ஏன் என அவளுக்கு தெரியவில்லை. தன் என்ன மாதிரியான பதில் அவனிடம் எதிர்பார்த்தோம் என்று கூட புரியாமல் முழித்தாள்.

அவளை ரொம்ப நேரத்துக்கு யோசிக்க விடாமல் சமையல் முடித்து ஒருவர்க்கு ஒருவர் சமைத்த சாப்பாட்டை உட்டி கொண்டார்கள்.

இதே மாதிரி சாயங்காலம் ஒரு படம், இரவு ஒரு படம், சேர்ந்து இரவு உணவு சமைப்பது என நேரம் செல்ல அவளின் மனசில் மொத்தம் தேஜூ பற்றிய கேள்வி தான் நிறைத்து இருந்தது.

அவளின் முன்னால் காதலன் நகுல் இல்ல, அவளின் ஏமாற்றிய தோழி கனிமொழி இல்ல, அவளின் அப்பா அம்மா தங்கை இல்ல. முழுவதும் ஒரே நாளில் அவளை அறியாமல் அவள் மனதில் நம்ம ஹீரோ தேஜஸ்வின் அமர்ந்து விட்டான்.

அதை அவள் உணர்ந்து உணராமல் இருந்தாள் என்று தான் சொல்லவேண்டும்.

இரவு அவள் தூங்க செல்வதற்கு முன்.. அவள் படிக்கையில் இன்னொரு தலையணை வைத்து அவள் அருகே படுத்து கொண்டான்..

அதற்கு பதில் அவன் சொல்வதற்கு முன்..

"தெரியும்.. தெரியும்.. இதுக்கும் அந்த பேப்பர் ல ஒரு ரூல் நம்பர் இருக்கும்."

"அறிவாளி பேபி நீ.."

பின் இரவுக்கான மருத்துவ முத்த பரிமாற்றம் நடந்தது.. ஆனால் இந்த தடவை அது இரண்டு நிமிடத்துக்கு நிகழ்ந்தது அதற்கு முழுக்க முழுக்க காரணம் மதுமதி தான்.

பின் அவர் அவர் அதனை பற்றி பேசி கொள்ளமால்..

"குட் நைட்..", என சொல்லி விட்டு தூங்க செல்ல

தேஜஸ்வின் படுத்தவுடன் தூங்கி விட இங்கே மதுமதியோ தூங்கும் அவனின் முகத்தை பார்த்து..

"தேஜூ.. உன்னை மட்டும் அந்த நகுலுக்கு முன்னாடி பார்த்து இருந்தால் உன்னை தான் டா காதலித்து இருப்பேன். இப்போ வில்லன் மாதிரி என் வாழ்க்கைல ஏன்டா வந்தே? இப்போ கூட உன்னை அடித்து போட்டு விட்டு போலீஸுக்கு ஃபோன் பண்ணி தப்பிக்க முடியும். ஆனால் நான் ஏன் இன்னும் அதை பண்ணாமல் உன் கூடவே இருக்கணும் எப்போவும் இருக்கும் யோசிக்கிறேன்? இந்த ஐம்பது நாள் ஐம்பது வருடம் போல மாற கூடாதா என் தோன்றுகிறது?"

இப்படி தான் இவர்களின் முதல் நாள் முடிந்தது.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?