ஓ பேபி.
இந்த படத்தில் லட்சுமி கலக்கியிருக்கிறார்!தமிழில் இவரை ஒதுக்கி விட்டாலும் மற்ற மொழிகளில் அசத்துகிறார்!மகன் மருமகள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்கிறார்.பால்ய கால நண்பருடன் ஒரு பேக்கரி நடத்துகிறார்.கணவனை இழந்து மகன் மீது அளவில்லா பாசத்துடன் இருப்பதும் மருமகளை அதிகாரம் பண்ணுவது பேரனுடன் செல்லம் கொஞ்சவதுன்னு படம் ஆரம்பிக்குது.மன அழுத்தத்தில் மருமகளுக்கு உடல் நலமில்லாது போகிறது.இவரை பார்க்கக் கூட மறுக்கிறாள்.மகன் தர்ம சங்கடத்தில்.பேரன் ஒரு ம்யூஸிக் ட் ரூப் ஆரம்பித்து பெரிய ஆளாய் வர முயற்சிக்கிறான்.அவன் ப்ரோக்ராம் பார்க்க செல்லும் போது ஒரு பெரியவர் குட்டி பிள்ளையாரை கையில் கொடுத்து மறைகிறார்.அதை கையில் வைத்து இருந்தால் நீ நினைப்பது நடக்கும் என சொல்கிறார்.இவருக்கு பாடல் பாடுவது ரொம்ப பிடிக்கும்.சிறு வயதில் பாடகியாக வரணும் என நினைத்து இருந்ததை பேரனிடம் அடிக்கடி சொல்வார்.இப்போது அவர் திடீரென இளம் பெண்ணாக மாறிவிடுவார்!பேரனை தேடி போகும் போது அவனுக்கே அடையாளம் தெரியாது.சமந்தா இந்த கேரக்டரில் நடிக்கிறார்.அருமையா நடிச்சுருக்கார்,வயதான பாட்டியின் உடல் மொழியும் பேச்சுமாய்!தான் வீட்டை விட்டு செல்வதாய் கடிதம் எழுதி அனுப்புவார்.மகன் தேடுவார்.இவர் பேரனுடன் சேத்ந்து அவன் ட் ரூப்பில் பாடுவார்!பேரனை கொஞ்சும் போது தன்னை மறந்து பாட்டியாகவும் இளம்பெண்ணாகவும் மாறி மாறி நடிப்பது அழகு!
ஒரு அழகான காதலும் அவருக்கு வருகிறது!அதை விரும்பவும் முடியாமல் உள்ளுக்குள் ரசிப்பதுமாய்!அவன் பின்னாலேயே சுற்றும் போது அவர் பாட்டி மாதிரி அப்போ அப்போ மாட்டுவது சிரிப்பு.பல் நல்லா இருக்கும் போது நினைச்சதை சாப்பிடணும்ன்னு சாப்பிடுவதும் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை ரசிப்பதும் ரசனை!பேரனுக்காக ரத்தம் கொடுக்க செல்லும் போது மீண்டும் பாட்டியை விடும் சூழ் நிலை!நன்பர் தடுக்க பிடிவாதமாய் செல்வார்.மீண்டும் பாட்டியானதும் இப்ப அவர் நண்பர் அந்த பெரியவர் மூலம் இளைஞனாகி வருவார்!லட்சுமியும் சமந்தாவும் கலக்கியிருப்பார்கள்.