Mr . local
டிவி சீரியலில் நடிக்கும் ஒரு கதாநாயகியுடன் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயனின் அம்மா ராதிகா..அம்மா ஆசையை நிறைவேத்த போகும் போது வழியில் ஒரு சின்ன accident (நயன்தாரா கார் ஹீரோ பைக்கை இடிச்சு ராதிகாவுக்கு லேசா அடிபட்டுடுது)...
அப்புறம் தான் தெரியுது அந்த சீரியல் ஓட producer நயன்தாரான்னு ...
ஷிவா நயனை மன்னிப்பு கேக்க சொல்ல அவங்க மாட்டேன்னு சொல்ல அங்கிருந்து ஆரம்பிக்குது ஈகோ சண்டை..
இந்த கடுப்புல நயன்தாரா அந்த சீரியல் ஹீரோயினை சீரியலில் இருந்து தூக்கிடுறாங்க..
அதுக்கு இவர் முறைக்க, அந்தம்மா பதிலுக்கு முறைக்க.....எப்பா சாமி நாங்க யாரை முறைக்குறதுனு தோணுச்சு...
டேய் படமாடா இது...
நயன் இந்த கதையை தூக்கத்திலே கேட்டு ஓகே சொல்லிருப்பாங்களோனு ஒரு டவுட்...
படம் full ஆ ஒரே மாதிரி லுக் ...முடியல...சில நேரம் நான் யாரு தெரியுமா என் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமான்னு டயலாக் சொல்லும் போது நீ வாயை மூடிக்கிட்டு இருந்தாலே நல்லா இருக்கும், அது தெரியுமா உனக்குன்னு கேக்க தோணுது...
எரிச்சல் வர வைக்கிற டயலாக்ஸ், பாட்டு-தேவையே இல்லை...ஹிப்-ஹாப் தமிழாவுக்கு குடுத்த காசு வேஸ்ட்...
அவ்ளோ பெரிய அவார்ட் function ல ஷிவா போய் நயனை கலாய்க்கிற மாதிரி பேசுறது, அவங்க ஆபீஸ்ல போய் ஈசியா நயனை பார்த்துட்டு சவால் விடுறது,
ஷிவா ஒரு நாலு டயலாக் சொன்னவுடனே அந்த ரீட்டா ஆயுதபூஜைக்கு ஓகே சொல்றதெல்லாம் --டேய் காதுல பூ சுத்துறதுக்கு ஒரு அளவில்லையா டா???????
படத்தில் வரும் காமெடி: வந்தா தான சொல்ல முடியும்..
ஏற்கனவே சீமராஜானு ஒரு மொக்கை படத்துல நடிச்சும் திரும்பவும் இப்படி ஒரு படத்துல நடிச்ச சிவகார்திகேயனோட தைரியத்தை பாராட்டியே ஆகணும்...