ஹிச்கி ( ஹிந்தி திரைப்படம்)
ஹிச்கி என்பதன் அர்த்தம் விக்கல். தூரட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையையும், அதை அவர் எவ்வாறு தைரியமாக எதிர்கொண்டு ஜெயிக்கிறார் என்பதை மிக அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் சிதார்த்த் மல்ஹோத்ரா. தூரட் என்பது மரபுவழி சார்ந்து நரம்பியல் மனநல சீர்கேடு. இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவரின் தசைகள் திடீர் நடுக்கத்தால் உடலின் ஏதேனும் ஒரு பாகம் தன்னை அறியாமல் அசைவைக் காட்டும். அதோடு வார்த்தைகளும் வெளிப்படும். அதை அந்த நோயால் பாதிக்கப்பட்டவரால் கட்டுப்படுத்த முடியாது.
இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர் தான் ராணி முகர்ஜி. நைனா மாத்துராக இந்த படம் முழுவதும் வந்து நம்மை சிந்திக்க வைக்கிறார், தன்னம்பிக்கையை நம்முள் விதைத்து விட்டு செல்கிறார்.
சிறுவயதில் இந்த நோயின் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் போது சுற்றி உள்ளவர்களால் அவர் அடையும் அவமானங்கள் ஆரம்பத்தில் தனக்குள் சுருங்கிப் போக செய்கிறது. அவரின் தந்தையே தனது குழந்தையின் நோயின் தன்மையை உணராமல் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறார். நிஜத்திலும் இது போன்ற நிகழ்வுகள் நிறைய உண்டு. பல தந்தையர் தனக்கு பிறந்த குழந்தைகளின் குறைபாடுகளை அறிந்த பின் விலகிச் செல்வதை கண்டிருக்கிறோம். ஆனால் எந்தவொரு தாயும், தன்னுடைய குழந்தையை இம்மாதிரியான சூழலில் விட்டு விலகிச் செல்வதில்லை.
நைனாவின் இந்த நோய்அவர் படிக்கும் பள்ளியில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. கூட படிப்பவர்களும் சரி, வழி நடத்தும் ஆசிரியரும் சரி அவரை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். முடிவில் அவரை அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறார்கள். அவருக்கேற்ற பள்ளி இதுவல்ல, மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும் என்கிற அறிவுரையுடன்.
அந்த நிமிடத்தில் இருந்து தாயாரின் உதவியுடன் தனது வாழ்க்கைப் போராட்டத்தை துவங்குகிறார். சாதாரண பள்ளியிலேயே படித்து பட்டங்களும் பெற்று கார்டூனிஸ்ட்டாக வேலை பார்த்தாலும், தான் ஒரு டீச்சர் ஆக வேண்டும் என்றே பிரியப்படுகிறார். அதற்காக பல பள்ளிகளின் படிகளை ஏறி இறங்குகிறார். அவரின் இந்த குறைப்பாட்டைக் கண்டு வேலை கொடுக்க மறுக்கின்றனர்.
இதன் நடுவே அவரது தந்தை மீண்டும் குடும்பத்தில் இணைந்து நைனாவின் ஆசைக்கு தடை போட முயல்கிறார். ஆனால் நைனாவின் பல வருடக் கனவு நனவாகிறது. நைனா வெளியேற்றப்பட்ட பள்ளியிலேயே அவருக்கு வேலை கிடைக்கிறது. தற்காலிகமாக மட்டுமே அந்த பள்ளியில் வேலை கிடைக்கிறது.
அதுவும் எப்படிப்பட்ட வகுப்பிற்கு என்றால் அந்த பள்ளியிலேயே மிக மோசமான மாணவர்களை கொண்ட வகுப்பிற்கு ஆசிரியராக பொறுப்பேற்கிறார். தனது குறைப்படுகளையும் மீறி அந்த மாணவர்களின் மனதில் இடம் பிடித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை ரசிக்கும் வகையில் நகர்த்தி செல்கிறார்.
அந்த மாணவர்களும் பிறப்பிலேயே மோசமானவர்கள் அல்ல. அவர்கள் வளர்ந்து வரும் சூழலும், அவர்களை மற்றவர்கள் நடத்தும் முறையுமே தவறானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் சூழ்நிலையை உணர்ந்து அவர்களை அந்த பள்ளியின் முதல் மாணவர்களாக மாற்ற போராடுகிறார்.
இந்த படத்திற்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதியவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு வசனமும் நிதர்சனத்தை முகத்தில் அறைந்து சொல்லுகிறது. இது போன்று குறைபாடு உடையவர்களை நம் சமூகத்தில் எப்படி நடத்துகிறோம் என்பதை திரையில் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. எந்தவொரு உயிரும் தான் இப்படித்தான் பிறக்க வேண்டும் என்று விரும்பி பிறப்பதில்லை. அப்படி இருக்கும் போது பிற உயிரின் வேதனையை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.
படம் முடிந்த பின்பும் நைனா மாத்துரின் ஓசை காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ராணி முகெர்ஜி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மிகையான நடிப்பை காட்டாது இயல்பாக அந்த நைனாவாக நம் முன் வந்து செல்கிறார்.
காதல் இல்லாத, காமம் இல்லாத ஒரு படம் நம்மை திரையோடு ஒன்ற வைத்திருக்கிறது. வெகுநாட்களுக்குப் பிறகு ரசித்துப் பார்த்த படம்.

Last edited: