Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தினம் ஒரு தகவல் | SudhaRaviNovels

தினம் ஒரு தகவல்

selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
சுட்டெரிக்கும் சூரியன்: கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகளில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர், பணி நிமித்தம் செல்வோர் என அனைவரும் அவதிப்படுகின்றனர். சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் அருகே கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பலதரப்பினர். | படங்கள்: ம.பிரபு

இப்போதே வெயில் தனது உச்சத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே சூரியன் சுட்டெரிக்கிறது. இந்த கோடைகாலத்தில் ஏற்படும் நோய்கள் என்னென்ன? அவற்றில் இருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? இதுகுறித்து அரசு மருத்துவர் அனுரத்னா கூறியதாவது:
எல்லாக் கால நிலையிலும் நோய்கள் வருவது இயல்புதான் என்றாலும் ஒரு சில நோய்கள் பூமியின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு தோன்றும். அத்தகைய நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வேர்க்குரு
உடல் தோலில் வெயில் காரணமாக வியர்வை தேங்கும். இதனால் வரும் சிறு சிறு கொப்பளங்களே வியர்க்குருவாக மாறுகிறது. இவற்றை நாம் கிள்ளக்கூடாது‌. இந்த வேர்க்குருக்கள் மீது பவுடர் பூசினால் வேர்க்குரு மறைந்து விடும் என்பது தவறு.
விற்பனைக்காக குளிர்ச்சி தரும் பூச்சுகள் (பவுடர்) சந்தையில் ஏராளமாக வருகிறன்றன. ஆனால் உண்மையில் அவற்றால் பலன் இல்லை. மாறாக இத்தகைய பூச்சுகள் வியர்வை நாளத்தின் துவாரங்களை அடைப்பதால் வேர்க்குருக்களில் சீழ் பிடிக்க சிலருக்கு வாய்ப்பு உள்ளது.

வேர்க்குருக்கள் வராமல் தடுக்க ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் இரு வேளை குளிக்க வேண்டும். இறுக்கமில்லாத, தளர்வான பருத்தித் துணிகளை அணிய வேண்டும்.
சின்னம்மை
சின்னம்மை என்பது வைரஸ் கிருமிகளால் உருவாகும் நோய் ஆகும். உடலில் நீர்ச்சத்து இன்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை இருக்கும்போது சின்னம்மை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது.
நோய் பாதித்தவரிடம் இருந்து காற்றினால் மற்றவர்களுக்கு இது பரவுகிறது. சின்னம்மை பாதித்தவர்களின் உடலில் சிறு சிறு கொப்புளங்கள் நீர் கோர்த்து காணப்படும். இதனால் உடல் அரிப்பு, உடல் வலி, காய்ச்சல் ஏற்படும். இதற்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை (தண்ணீர், இளநீர், பழங்கள், அரிசிக்கஞ்சி) எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இதன்மூலம் உடல் சூடு குறையத் தொடங்கும். இதனால் நோயின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து நோய் குணமடையும். உடல் சோர்வு இருந்தால் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மருத்துவரின் பரிந்துரை இன்றி எவ்வித மாத்திரைகளையும் தாமாக உட்கொள்ளக் கூடாது.

கோப்புப் படம்.

தலைசுற்றல், மயக்கம்
உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்பவர்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சினை தலைசுற்றல், மயக்கம். வியர்வையால் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் முழுமையாக இழக்கப்படுவதால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தமே இதற்குக் காரணம். இதனால் தலைசுற்றல் மயக்கம் ஏற்படும். மற்ற நேரங்களில் இரத்த அழுத்தம் சீராக இருப்பவர்கள் இதை ஒரு நோயாகக் கருத வேண்டாம்.
இதற்கு, உடலில் நீர்ச்சத்து குறையாத வகையில், தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவ உணவுகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயிலின் தீவிரம் அதிகம் இருக்கும்போது வெளி வேலைகளை தவிர்க்கவும். முடியாதபோது குடை, தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லுங்கள்.
கொசுக்களால் பரவும் நோய்கள்
கோடையில் நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை சேமித்து வைப்பர். இந்த நீரை முறையாக சேமிக்காவிட்டால் அதில் கொசு உற்பத்தி ஆகும். டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில்தான் உருவாகும் என்பதால் நீரை சேமித்து வைக்கும்போது அதை முறையாக மூடி வைப்பது அவசியம்.

மருத்துவர் அனுரத்னா.

சேமித்த தண்ணீரை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் பூச்சிகள் உருவாகலாம். அவற்றைக் குளிக்கவோ, துவைக்கவோ பயன்படுத்தும்போது ஒவ்வாமைகள் ஏற்படவும் வாய்ப்புண்டு'' என்றார் மருத்துவர் அனுரத்னா.
கொதிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, சரியாகத் திட்டமிட்டு செயல்பட்டால், கோடையையும் கொண்டாடலாம்.
 
selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
பழ வியாபாரியைத் தினமும் தேடிவரும் 4 மலை அணில்கள்... நீலகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி இரண்டு ஆண்டுகளாக ஒரு மலை அணில் நாள் தவறாமல் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று அணில்கள் வந்து பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாள் தவறாது தேடி வரும் (Malabar gaint squirrel) மலை அணிலால் உள்ளூர் மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் நன்கு பரிச்சயமானவர் பழ வியாபாரி நசீமா.
மலை அணில்

மலை அணில்
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலையோரத்தில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி மலை அணில் ஒன்று நாள்தோறும் வந்து பழங்களை வாங்கிச் சுவைத்துச் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு அணில் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 4 அணில்கள் அவர் தரும் பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.
வறுமையை எதிர்கொள்ள பூங்கா வாசலில் சிறிய அளவிலான கடையை நடத்திவந்தாலும், எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ பழங்களை அணில்களுக்கு வழங்கி வரும் இவரது விலங்கு நேசம் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.
நசீமாவும் மலை அணிலும்

நசீமாவும் மலை அணிலும்
நீலகிரியில் இன்றளவும் தொடரும் இ-பாஸ், வெறிச்சோடிக் கிடக்கும் சுற்றுலாத்தலங்கள், மந்தமான விற்பனை என பூங்கா வாசல் அருகிலுள்ள பழக்கடையில் அமர்ந்திருந்த நசீமாவிடம் பேசினோம், "தாத்தா காலத்துல இருந்தே இந்த வியாபாரம்தான். பல வருசமா இங்க பழக்கடை வச்சிருக்கேன். ரெண்டு வருஷமா ஒரு‌ அணில் இங்க வந்து பழத்த வாங்கி சாப்புட்டு போகும்.

கெரோனாவால ஆறு மாசமா கடைய தெறக்க முடியல. ஆறு மாசம்‌ கழிச்சி கட ஓப்பன் பண்ணின‌ முதல் நாளே என்னய மறக்காம ஞாபகம் வச்சி தேடி வந்துருச்சு. மனுசங்க கூட சீக்கிரம் மறந்துருவாங்க. ஆனா இந்த வாயில்லா ஜீவன் என்னை மறக்காம கட‌ தெறந்த மொத நாளே வந்தத நெனச்சா மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
முன்ன ஒருத்தர்தான் வந்தாங்க (அணிலை உயர்திணையில் அழைக்கிறார் நசீமா) இப்போ கூட மூணு பேர கூட்டிக்கிட்டு நாலு பேரா வராங்க. இவங்களுக்கு சீத்தாப்பழமும் பட்டர்‌ஃபுரூட்டும் ரொம்ப புடிக்கும். பசிச்சா இங்க வந்து உக்காந்துக்குவாங்க.
நசீமாவும் மலை அணிலும்

நசீமாவும் மலை அணிலும்
இவங்களுக்கே ஒரு நாளைக்கு ரெண்டு கிலோ வரைக்கும் குடுப்பேன். காசப்பத்தி யோசிக்கல. அவங்க வந்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கும். யாரும் எந்தத் தொந்தரவும் செய்யமாட்டாங்க. ஒரு‌ நாளைக்கு ரெண்டு வேளையும் வருவாங்க. வந்து சாப்பிட்டு மரத்துக்கு போய்ருவாங்க" என அருகில் இருந்த மரத்தைக் காண்பித்தார்.
மனிதர்களைத் தவிர்க்கும் இயல்பைக் கொண்ட இந்த மலை அணில்கள், பழ வியாபாரியான நசீமாவிடம் நட்புடன் பழகும் காட்சி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
 
இயற்கையை இவங்க புரிஞ்சுக்கணும்!' - மாணவர்களுக்கு களத்திலேயே பாடம் எடுக்கும் ஆசிரியை
இயற்கை சமநிலைக்குக் காரணமான இட்டேரி வழித்தடம், உயிர்வேலி, அதையொட்டி வாழும் உயிரினங்கள் எனப் பல விஷயங்களில் மாணவர்களுக்கு, இயற்கை சார்ந்து தெளிவு ஏற்படுத்தி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.
மனிதர்களின் சுயநலம், இயற்கையை வேண்டிய மட்டும் சீரழித்துவிட்டது. அதன் விளைவு, சுவரில் அடித்த பந்துபோல், இயற்கை சீற்றம், வறட்சி, வெள்ளம், புயல் என்று பல்வேறு இயற்கை பேரிடர்களை மனித இனம் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. காடுகளை அழித்ததால், பல்லுயிர்ப் பெருக்கம் தடைபட்டிருக்கிறது. பல உயிர்கள் அருகிப்போய்விட்டன. இயற்கை சமநிலை சீர்குலைந்துவிட்டது.
மாணவர்களுடன் திலகவதி

மாணவர்களுடன் திலகவதிபடம்: நா.ராஜமுருகன்
அதேபோல், மயில் உள்ளிட்ட சில உயிர்கள் பெருகிவிட்டன. ஓர் உயிரினம் அழிவது எப்படி இயற்கை சமநிலைக்கு தீங்கோ, அதேபோல் ஓர் உயிரினம் பெருகுவதும் இயற்கை சமநிலைக்கு ஊறுசெய்யும் விஷயம்தான். அப்படி, இயற்கை சமநிலைக்குக் காரணமான இட்டேரி வழித்தடம், உயிர்வேலி, அதையொட்டி வாழும் உயிரினங்கள் எனப் பல விஷயங்களில் மாணவர்களுக்கு, இயற்கை சார்ந்து தெளிவு ஏற்படுத்தி வருகிறார், அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.
கரூர் மாவட்டம், காந்தி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிவரும் திலகவதிதான் அந்த ஆசிரியை. தனது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி, சில தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இயற்கை குறித்த பல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். நேரடியாக மாணவர்களைக் களத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு இயற்கை குறித்த பாடத்தைப் போதித்து வருகிறார்.
உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி

உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதிபடம்: நா.ராஜமுருகன்
500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!

Also Read
500 மரக்கன்றுகள், 1000 பனை விதைகள்... வறட்சி கிராமத்தை `பசுமை'யாக்கும் கரூர் இளைஞர்கள்!
கரூரில் இயற்கை சூழ்ந்த சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இயங்கி வரும் மகளிர் கலைக்கல்லூரிக்கு, தனது பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்று 30-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் திலகவதி அழைத்துப்போனார். அவருடன் நாமும் சென்றோம்.

இந்தக் கல்லூரி வளாகத்தில் ஏராளமான பறவைகள், மயில்கள், உடும்பு, காட்டுப்புறாக்கள், பசுக்கள், ஆடுகள், வாத்துகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழக்கூடிய இயற்கைசூழல் உள்ளது. அங்கு மாணவர்கள் உயிர்வேலி, இட்டேரித்தடம், பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழல் தேவைகள் ஆகியவற்றை அறியும்பொருட்டு களத்தில் நேரடிக் கற்றலில் ஈடுபட்டனர்.
சிறு உயிரினம்

சிறு உயிரினம்படம்: நா.ராஜமுருகன்
அங்கு 50-க்கும் மேற்பட்ட மயில்கள் இருந்தன. அதைப் பார்த்த ஆசிரியை திலகவதி, ``கிராமத்தில் உள்ள இயற்கையை அழித்துவிட்டோம். அதனால், மயில் உள்ளிட்ட பல பறவைகள், உணவிற்காக நகர்ப்புறத்துக்கு நகர்ந்து வருகின்றன. மரங்களை நட்டுப் பராமரிப்பது, வனங்களைப் பராமரிப்பது மட்டுமல்லாது, வன உயிர்களை பாதுகாப்பதும் நமது கடமை" என்று கூறினார். மாணவர்கள் மயில்களுக்கும் காட்டுப் புறாக்களுக்கும் அரிசி, சிறுதானியங்களை உணவாக அளித்தனர்.
 
selvipandiyan

Active member
Jul 30, 2018
215
92
28
நம்மிடம் பேசிய ஆசிரியை திலகவதி, ``காடும்,காடுசார்ந்த நிலப்பரப்பும் முல்லை. இதில் வாழக்கூடிய கோழி இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பறவை மயில். இது மனிதர்களையொட்டி வாழக்கூடிய பறவை இல்லை. ஆனால், இன்றோ மயில்கள் நாம் வாழும் இடத்திற்கும், விளைச்சல் செய்யக்கூடிய வயல்வெளிகளுக்கும் அதிகமாக வரத்தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம், மயில் இனம் கணக்கு வழக்கில்லாமல் பெருகியதுதான். இப்படி மயில்கள் பெருகுவதற்குக் காரணம் காடுகள், பல்லுயிர்கள் வாழக்கூடிய இட்டேரி வழித்தடங்கள் அழிக்கப்பட்டதே.
இட்டேரி வழிகளில் சிறு, குறுஞ்செடிகள் வளர்ந்திருக்கும். இது புதர் போன்று காணப்படும். அதை உயிர்வேலி என்றும் சொல்லலாம். இதில் பாம்பு, அரணை, பல்லிகள், ஓணான், சிறு பூச்சிகள், குள்ளநரிகள் எனப்பல்வேறு உயிரினங்கள் வாழும். ஓர் உயிரினம் மற்ற உயிரினத்தை சாப்பிட்டு, உயிர்சங்கிலியை சமநிலையில் வைத்திருக்கும். அங்குள்ள சிறு பூச்சிகளை உண்டு வாழ்ந்தன மயில்கள். மயில் முட்டைகளை குள்ளநரி சாப்பிடும். இப்படி ஒரு விலங்கின் சமநிலையை மற்றொரு விலங்கினம் அல்லது பறவையினம் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.
திலகவதி

திலகவதிபடம்: நா.ராஜமுருகன்
ஆனால், நாம் இட்டேரி, உயிர்வேலிகளை அழித்துவிட்டோம். கம்பிகளில் வேலிகள் அமைத்ததால், மயில்கள் இப்போது பெருகிவிட்டன. மனிதன் செய்த மிகப்பெரிய தவறு இது. விலங்குகளை மனிதன் பாதுகாக்க வேண்டாம். விலங்குகளை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. மனிதனின் வாழ்வியல் சூழலுக்கு முக்கியக் காரணியாக இருந்து, விலங்குகள்தான் மனிதர்களை பாதுகாத்து வருகின்றன. மனிதன் விலங்குகளை பாதுகாக்கவில்லை என்றாலும், அவற்றின் அழிவுக்குக் காரணமாக இல்லாமல் இருந்தாலே போதும்.

இயற்கையும், விலங்குகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சூழலே மனிதர்களின் வாழ்வியல் சூழலை சிறப்பாக வழிநடத்துகிறது. நாம் நம் இந்தியாவில் உள்ள விலங்கினங்களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். நம் நாட்டின் மொத்தக் காடுகளின் பரப்பளவு 6 லட்சம் ச.கி.மீட்டர். இதில் சுமார் 89,450-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்கள் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகில் காணப்படும் விலங்கினங்களில் 7.31% ஆகும். இவற்றில், 372 வகை பாலூட்டி இனங்களும், 1,330 வகை பறவை இனங்களும், 399 வகை ஊர்வன இனங்களும், 60,000 பூச்சி இனங்களும், 181 வகை நிலம் மற்றும் நீரில் வாழும் விலங்குகளும், 1,693 மீன் இனங்களும் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதி

உயிர்வேலி பற்றி மாணவர்களிடம் விளக்கும் திலகவதிபடம்: நா.ராஜமுருகன்
நாம் வாழ்வதற்கு, விலங்குகள் வாழ்வது மிக அவசியம். ஏனெனில், விலங்குகள் நம் உயிர் சூழல் தொகுப்பின் ஓர் அங்கம்'' என்றவர்,

நம் அடுத்த சந்ததிகளான மாணவர்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான், மாணவர்களுக்கு இயற்கை, உயிர்வேலி, இட்டேரி தடம், விலங்குகள், பறவைகள் என்று சூழல் சார்ந்த அறிவை போதித்து வருகிறேன். அவர்கள் மனதில் அந்த விஷயங்களை பசுமரத்தாணியாகப் பதிய வைக்க ஏதுவாக, மாணவர்களை நேரடியாகக் களத்துக்கு அழைத்துப்போய், அவர்களுக்கு இயற்கை குறித்த பலவற்றையும் புரிய வைக்கிறேன். நாம் சீரழித்த இயற்கையை, அடுத்த சந்ததியினரைக் கொண்டு மீட்க முயல வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி. மாணவர்களுக்குத் தேவையான இந்தப் பாடத்தைத் தொடர்ந்து போதிப்பேன்" என்றார்.