கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (15)
ரித்விக் மேஜையின் மீது இருந்த பூஜாடியை எடுத்து அந்த உருவத்தை திரும்பி தாக்க முயல அவன், டேய் அடிக்காதடா" என அவன் கையைப் பிடித்துக்கொண்டு கத்த ரித்விக் அப்போதுதான் கவனித்தான் அஸ்வினை.ரித்விக், "அட அறிவு கெட்டவனே! நீ எப்படா வந்த? அதுவும் இருட்டுல திருடன் மாதிரி". அஸ்வின், "சென்னையில என் ஃபிரண்டோட அக்கா கல்யாணம்டா. அதான் நான் இங்கே வந்தேன். உங்க இரண்டு பேரோட ஃபோன் எடுக்கல. அதான் ஆபீஸ் நம்பருக்கு கூப்பிட்டேன். கௌதம் அண்ணா தான் எடுத்தாங்க. அப்புறம் அவங்க தான் தினேஷ் அண்ணா கிட்ட இருந்த இன்னொரு சாவிய வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. நான் வீட்டை திறந்து சோபால வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ரொம்ப நேரம் ஆச்சு அப்படியே தூங்கிட்டேன்".


ரித்விக், "அது எல்லாம் சரிதான் டா. அதுக்கு எதுக்கு திருடன் மாதிரி சத்தம் போடாம வந்த? நான் அடிச்சு இருந்தா என்னடா பண்ணி இருப்ப?". அஸ்வின், "இல்லடா சும்மா பயமுறுத்தலாம் என்றுதான்" என சிரிக்க அவன் தலையில் கொட்டிய ரித்விக், "சரி சாப்பிட்டியா?" என்றான் .அஸ்வின், "இல்ல" என்றிட ரித்விக், "சரி இரு நான் போய் பிரஷ் ஆகிட்டு வந்து உனக்கு ஏதாவது செஞ்சு தரேன்" என்றான். அவன் சரி என தலையாட்டி விட்டு சோபாவில் சரிந்தான்.


ரித்விக் அவனுக்கு தோசை சுட்டு கொடுக்க அண்ணன் தம்பி இருவரும் கதை அளந்துகொண்டு சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றனர்.


அதிகாலையில் வேகமாக எழுந்த இந்து சோபாவில் ஒரு உருவம் தலை முதல் கால் வரை போர்வையை போர்த்தி உறங்குவதை கண்டவள் ரித்விக் ரூமையும் சோபாவையும் மாறி மாறிப் பார்த்தாள். 'ரித்விக் வெளியே தூங்க மாட்டானே' என நினைத்தவள் போர்வையை மெதுவாக விலக்க அஸ்வினை கண்டாள்.


இந்து 'இவனா? இவன் எப்போ வந்தான்?' என நினைத்தவள் சமையலறை புகுந்து காப்பியோடு வெளியே வந்தவள் அவனை எழுப்ப அவன் அசையவே இல்லை. அவள் அவன் கைகளில் நறுக்கென்று கிள்ள வலி தாங்காமல், "ஸ்ஆ......" எனக் கத்திக் கொண்டு எழுந்தவன் அவளைப் பார்த்து "எருமை எதுக்கு கிள்ளுன?". இந்து, "காபி கொடுக்க தான்" என்று நகைத்த வாறு கூற அஸ்வின், "அடேய் புருஷன் என்னனா பூஜாடியை வைத்து அடிக்க வரான். பொண்டாட்டி என்னன்னா கிள்ளியே சாவடிச்சிடுவ போல" என கூறி அவன் அருகில் இருந்த தலையணையை எடுத்து அவளை அடித்துத் துரத்த இருவரும் ரித்விக் ரூம்க்குள் நுழைந்தனர்.


ரித்விக்கை சுற்றி இருவரும் ஓட அவன் 'ஐயோ! கடவுளே ஒன்னவே சமாளிக்க முடியாதே. இப்ப ரெண்டுமே சேர்ந்துடுச்சே நீ தான் என்னை காப்பாத்தனும்' என வேண்டியவன், "ஏய் என்ன நீங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளையா? ஓடிப் பிடித்து விளையாடியது இருக்கீங்க" என அதட்ட இருவரும் ரூமை விட்டு வெளியே வந்து காபியை பருக ஆரம்பித்தனர்.வழக்கமான கலாட்டாவுடன் இருவரும் தங்கள் பணிக்கு கிளம்பிவிட அஸ்வினும் திருமணத்திற்கு கிளம்பி சென்று விட்டான்.


மாலையில் இந்துவிற்கு போன் பண்ணிய ரித்விக், "இந்து இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. கார் புக் பண்ணுறேன். நீ அதுல வீட்டுக்கு போயிடு. நான் வர கொஞ்சம் லேட் ஆகும். அஸ்வின் வந்து விடுவான்" என்றான்.


இந்து, "சரி நீ பார்த்து வா" என கூறி காலை கட் செய்துவிட்டு தனது வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.


இந்து மாலையில் வீடு திரும்பிய பிறகு சோர்வாக இருக்க சிறிது நேரம் படுத்து உறங்கி விட அஸ்வின் வந்து கதவை தட்டும் போது தான் முழித்தாள்.


கதவை திறந்தவள், "அஷ்வின் டைம் என்ன?"..." எட்டு மணி இந்து"
"ஐயோ! இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? நீ சாப்பிட்டியா?"
அஸ்வின், "இல்லை. ரித்விக் இன்னும் வரலையா?"
இந்து, "அவன் வர லேட்டாகும் என்று சொன்னான். உன் கிட்ட சொன்னேன் என்று சொன்னானே?".
அஸ்வின், "சொன்னான். ஆனா இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. அதான் கேட்டேன்".


" இந்து சரி நான் போய் சமையல் செய்கிறேன்" எனக்கூறி சமையல் அறைக்குள் புகுந்தாள். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.


இந்து ரித்விக் போனிற்கு பலமுறை முயற்சி செய்தும் பயனில்லை. எனவே கடுப்பாக வாயிலையும் போனையும் நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தை பார்த்து அஸ்வின், "நீ ஏன் இவ்வளவு டென்சனா இருக்க? அவ என்ன சின்னக் குழந்தையா? நீ போய் படு" என்று கூறியவன் சோபாவில் படுத்து விட்டான்.


இரவு 11 மணி ஆகியும் அவன் வரவில்லை. இந்து சோபாவிலே அமர்ந்து உறங்கியவள் திடீரென கண் விழித்தாள். மணியை பார்த்தவள் அஸ்வினை எழுப்ப அவன் என்னவென்று வினவினான்.


இந்து, "டைம் பாரு இன்னும் ரித்விக் வரல" எனக்கூற அஸ்வின் ரித்விக்கின் மொபைலுக்கு அழைப்பு விடுவிக்க அது ஏற்கப்படாமல் கட் ஆகியது. இந்துவின் முகம் வாடி அழ தயாராக அஸ்வின், "இரு நான் போய் பார்த்துட்டு வரேன். கொளதம் அண்ணாக்கு போன் பண்ணுறேன்" எனக்கூறி அழைப்பு விடுத்தான். கௌதம், "என்னடா அஷ்வின்? இந்த நேரம் கால் பண்ணுற?". அஸ்வின், "ரித்விக் இன்னும் வீட்டுக்கு வரலை. அவன் போனும் எடுக்க மாட்றான்". கௌதம், "ஆபீஸில் இருந்து ஈவ்னிங்கே கிளம்பிட்டானே!".


அஸ்வின், "ஆமா அண்ணா எனக்கு கால் பண்ணி வேலை இருக்கு. லேட்டா தான் வருவேன் என்று சொன்னான். ஆனா இன்னும் வரல அதான் உங்களுக்கு கால் பண்ணேன்". கௌதம், "நான் வேணா கிளம்பி வர வாடா?". அஸ்வின் "இல்லண்ணா வேணாம் நான் தேடிப்பார்க்கிறேன். முடியலனா உங்களுக்கு கால் பண்றேன்".

கௌதம், "சரிடா என்ன உதவினாலும் கூப்பிடுடா. உடனே நான் வரேன்". அஸ்வின், "சரிங்கண்ணா". இந்து, "கௌதம் அண்ணா என்ன சொன்னாங்க?". அஸ்வின், "ரித்விக் ஈவ்னிங்கே கிளம்பிட்டானாமே! ஆனால் இன்னும் வீட்டுக்கு வரல. எங்க போனான் என்று தெரியலையே . சரி நீ இரு நான் போய் தேடிப் பார்க்கிறேன். நீ வீட்டிலேயே இரு. அவன் வந்தா எனக்கு கால் பண்ணு". இந்து, "அஸ்வின் வேண்டாம். உனக்கு இந்த ஊருக்கு புதுசு. நீ தனியா என்ன பண்ணுவ? இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்".சிறிது நேரத்தில் கார் ஹாரன் சத்தம் கேட்க இந்து வேகமாக வெளியே எட்டிப் பார்த்தாள். ரித்விக் காரை கண்டவள் வெளியே செல்ல அவன் தலை மற்றும் கைகளில் கட்டுகளுடன் இறங்கினான். அதை பார்த்து பதறி அவள் வேகமாக ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.


அவளது கண்ணீர் அவன் சட்டையை நனைக்க அவளை தன்னிடமிருந்து பிரித்தவன், "ஏய் லூசு எதுக்கு அழுகுற?". இந்து, "என்ன ஆச்சு? கட்டுப் போட்டு இருக்க". ரித்விக், "ஒன்னும் இல்லை. ஒரு சின்ன ஆக்சிடன்ட். அதான் லைட்டா காயம், வேற ஒன்னும் இல்ல".


அஸ்வின் வேகமாக வெளியே வந்தவன் "டேய் என்னடா? இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்க. சரி உள்ளே வா" என கூறி அவனை உள்ளே அழைக்க ரித்விக் காரில் இருந்த பைலை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.


அஸ்வின், "என்னடா நடந்துச்சு?". ரித்விக், "அது ஒரு பெரிய கதை. அதை அப்புறமா நான் சொல்றேன்".

இந்து கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வருவதைக் கண்ட அவன் "அவளை வா" என தன் கைகளை நீட்டி அழைக்க அவன் அருகில் அமர்ந்து நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.


ரித்விக், "ஒரு டாக்டரா இருந்துகிட்டு நீயே இப்படி பயப்படலாமா? அழாதடா" எனக் கூறி அவளது தலையை வருடினான்.

அஸ்வின் தொண்டையை செருமி, "இங்க ஒரு சின்ன பையன் இருக்கேன். உங்க ரொமான்ஸ் எல்லாம் ரூம்ல போய் வச்சுக்கோங்க" எனக்கூற ரித்விக் அருகில் இருந்த தலையணையை எடுத்து அவன் மீது எறிந்தான். ரித்விக், "ரொமான்ஸா? நானே அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். சரி சரி நீ தூங்கு காலையில பேசிக்கலாம். ஆமா நீ எப்ப ஊருக்கு கிளம்புற?".


அஸ்வின், "நாளைக்கு மார்னிங்க் கிளம்பிடுவேன். சரிடா குட் நைட்" எனக்கூறி தனது தூக்கத்தை தொடர்ந்தான்.


இந்து ரித்விக்கை கையை பிடித்து ரூம்க்குள் அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள்.இந்து, "ரித்விக் ஹாஸ்பிடல் போனியா? டாக்டர் என்ன சொன்னாங்க? எந்த டாக்டர் பார்த்த? எந்த ஹாஸ்பிடல்?" என தொடர்ந்து கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

ரித்விக், "மெதுவாடி மூச்சு வாங்கப் போகுது. எத்தனை கேள்வி கேட்கிற? நான் காலையில உனக்கு எல்லா விஷயமும் சொல்றேன். இப்ப நீ போய் தூங்கு". இந்து, "அப்புறம் நீ ஈவினிங் சீக்கிரமே ஆபீஸ் விட்டு கிளம்பிட்ட என்று கௌதம் அண்ணா சொன்னாங்க? அப்போ நீ எங்க போன ? எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு?".


ரித்விக் அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, "சரி நீ வெயிட் பண்ணு. நான் போய் ப்ரஷாகிட்டு வரேன்" என கூறி அவன் அருகிலிருந்த பேப்பரையும் பேனாவையும் அவளிடம் நீட்டினான். அவள் முழித்து எதுக்கு என வினவ அவன், "நான் வரதுக்குள்ள நீ யோசிச்சு யோசிச்சு எல்லா கேள்வியையும் பேப்பர்ல நோட் பண்ணி வை" என சிரித்தவாறே கூற அவள்," உன்னை என கழுத்தை நெரிக்க கையை அருகில் கொண்டு சென்றவள் அடிபட்டு இருக்கு அடிக்க கூடாது என்று நினைக்கிறேன். உன் கிட்ட போய் கேட்டேன் பாரு என்ன சொல்லணும்".


ரித்விக், "சரி டென்ஷனாகாத கூல் பேபி. நீ வெயிட் பண்ணு நான் வரேன்" என கூறி குளியல் அறைக்குள் புகுந்தான்.


"என்னை ஏதோ செய்தவளே
நெஞ்சை பூப்போல்
கொய்தவளே!"....என ரித்விகின் மொபைல் ஒலிக்க அதை ஒரு புன்சிரிப்புடன் கையில் எடுத்தவள் அட்டன் செய்யலாமா? வேண்டாமா? என யோசிக்க அழைப்பு துண்டானது. மீண்டும் ஒலிக்க ரித்விக், "இந்து யாரு அது?". "பேர் இல்லை நம்பர் மட்டும் தான் வருது". ரித்விக், "சரி யார் என்று பாரு" என கூற அவள் ஆன் செய்து காதில் வைத்தாள்.


எதிரில் இருப்பவன், "ஹலோ சார் நான் ஜான் பேசுறேன். உங்கள கொலை பண்ண முயற்சி பண்ண அந்த இரண்டு பேரை" எனக் கூற அழைப்பு துண்டானது. அவள் மொபைலை பார்க்க அது சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
வண்ணங்கள் மிளிரும்…..
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (16)


அவன் கூறியதில் எதுவுமே அவள் மனதில் பதியவில்லை. கொலை என்ற வார்த்தையை தவிர.


ரித்விக் குளியலறையை விட்டு வெளியே வர இந்து, "ரித்விக் ஜான் யாரு? என்றிட அவன் ஜானா?...அது யாரு?... இந்து, "இல்ல உன்ன யாரோ கொலை பண்ண ட்ரை பண்ணதா சொன்னாங்க?.. நீ பொய் சொல்லாத உண்மையை சொல்லு". ரித்விக், "என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க". அவள் விடாது மீண்டும் மீண்டும் கேள்வி கேட்க அவளின் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு அவன் தனது கையை அருகில் இருந்த டேபிளில் இடிக்க கையில் இருந்து ரத்தம் கசிந்தது. அதை கண்டு பதறி "இரத்தம் வருது பாரு" என கூறி வேகமாக வெளியே சென்று முதலுதவி பெட்டி எடுத்து வந்து அதை சுத்தம் செய்து மருந்து போட்டவள் "பார்த்து வரமாட்டீயா?. ஏற்கனவே அடிபட்ட இடத்திலே அடிப்பட்டதால் ரத்தம் வருது பாரு" எனக் கூறி காயத்தின் மீது கவனம் செலுத்தினாள். அந்த போன் அழைப்பை மறந்துவிட்டாள். தூங்கு காலையில் பேசலாம் எனக் கூறி அவனை படுக்கவைத்துவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டாள்.அதிகாலையில் வேகமாக எழுந்து சமையலை முடித்து விட்டு தனது பணிக்கு கிளம்பினாள். அஸ்வின் "நான் ஊருக்கு கிளம்பறேன். ரித்விக் உடம்பை நல்ல பார்த்துக்கோடா" எனக் கூற அவன், "சரி டா நல்லா படி. விளையாட்டுத்தனமாக இருக்காத. அரியர் எல்லாம் கிளியர் பண்ணுற வழியை பாருடா". அஸ்வின், "போதும்டா எப்ப பார்த்தாலும் அட்வைஸ் பண்ணீட்டு. நீ மேஜர் சுந்தரராஜன் விட அதிகமாகவே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டடா" என்றுக் கூறி இந்துவிடம் கிளம்புகிறேன் என்றிட அவள் சரி பார்த்து போ என்று கூற அவன் கிளம்பிவிட்டான். இந்து, "ரித்விக் இன்னைக்கு நீ ஆபீஸ் போக வேண்டாம். உடம்பு சரியானதுக்கு அப்புறம் நீ ஆபீஸ்க்கு போ". ரித்விக், "இல்லை இந்து ஏற்கனவே நிறைய லீவு போட்டாச்சு. கண்டிப்பா நான் ஆபீஸ் போகணும்". இந்து, "அதெல்லாம் முடியாது நீ போகக் கூடாது" என போராடி ஒருவழியாக அவனை சம்மதிக்க வைத்து விட்டு அவனுக்கு தேவையான சாப்பாடு மாத்திரை எல்லாம் அவன் அருகில் வைத்து விட்டு கிளம்பினாள்.மருத்துவமனைக்குள் நுழைந்து தனது வேலையை கவனிக்கத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் ரித்விக் அங்கு வர அவனை கண்டவள், 'இவன் எதுக்கு இப்ப வரான். வீட்டில் ரெஸ்ட் எடுக்கச் சொன்னால் முகம் வேறு ஒரு மாதிரி இருக்கே என்னன்னு தெரியலையே' என பலவாறு சிந்தித்துக் கொண்டு இருக்க அதற்குள் அவள் அருகில் வந்தவன், "இந்து வா நாம ஊருக்கு போகனும்" என்று கூற என்னடா திடீர்னு வந்து ஊருக்கு போகனும் என்று சொல்ற. மூஞ்சி வேற ஒரு மாதிரியா இருக்கு என்றாள். ரித்விக், "வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்" என்றிட அவள் "இல்ல நீ எதுக்கு என்று சொல்லு அப்பதான் வர முடியும்" என்றாள். அவன் வந்த செய்தியை கூற அவள் மயக்கம் அடைந்தாள். அருகில் இருந்த நீரை எடுத்து தெளித்து அவளை எழுப்ப கண் விழித்தவள் அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து "சொல்லு ரித்விக் என்ன ஆச்சு. எங்கப்பாவுக்கு என்ன ஆச்சு" என கூறி கண்ணீர் வடித்தாள்.
ரித்திக், "ஒன்னும் இல்லம்மா. கொஞ்சம் உடம்பு சரி இல்லை. வேறு எதுவும் இல்லை. வா வீட்டிற்கு போய் பேசிக்கலாம்" எனக் கூறி கைத்தாங்கலாக அவளை அழைத்து வந்து வண்டியில் ஏற்றியவன் ரோஹித் மொபைலுக்கு அழைத்து விவரங்களை கூறி விட்டு வண்டியை இந்துவின் வீட்டை நோக்கி அதிவேகத்துடன் செலுத்தினான்.


இந்து, "ரித்விக் நீ ஏதோ என்கிட்டே மறைக்கிறனு எனக்கு தோணுது. உன் முகமே சரியில்லை. என்னன்னு சொல்லு ரித்விக். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மனசு வேற ஏதோ படபடப்பா இருக்கு சொல்லு" என கூறி அழுது கொண்டே அவன் தோளில் சாய்ந்தாள்.அவன் அவளது கையை பிடித்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு "இந்து பயப்படாத ஒன்றுமில்லை" என்று மட்டும் கூறிவிட்டு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். மனதிற்குள், "ஐயோ! கடவுளே உண்மை தெரியறதுக்கு முன்னாடியே இப்படி அழுகிறாள். உண்மையை தெரிஞ்சா என்ன பண்ணுவாளோ!. இந்த கஷ்டத்தை தாங்கும் சக்தி நீ தான் கொடுக்க வேண்டும்" என இறைவனிடம் மன்றாடி கொண்டிருந்தான்.கார் வீட்டை நெருங்க நெருங்க அவளது மனது ஒருவித தவிப்பை உணர்ந்தது. அவளுக்கு அந்த உணர்வு எதனால் என்று கூற இயலவில்லை. வீட்டின் முன் காரை நிறுத்த வேகமாக இறங்கியவள் அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாள்.

"ரித்விக் ஹார்ட் அட்டாக் என்று தான சொன்ன ஆனா ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு?.. பொய் சொல்லாத ரித்விக் எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு" என கூறி தடுமாறி கீழே விழப்போனவளை தாங்கிப் பிடித்துக் கொண்டு தோளோடு அணைத்து உள்ளே கூட்டிச் சென்றான்.
உள்ளே வேதாச்சலம் உடல் கண்ணாடி பெட்டியில் வைத்திருக்க அதன் தலைப்பகுதியில் அமர்ந்து கண்ணீர் வைத்துக்கொண்டிருந்தாள் சாரதா. அந்த காட்சியை கண்டு அவள் அவன் கையை தட்டிவிட்டு வேகமாக ஓடிச் சென்று அம்மா 'அப்பாக்கு என்ன ஆச்சு" என்றுக் கூறி ஓவென கதறி அழ ஆரம்பித்தாள்...
இந்துவை கட்டிக் கொண்ட சாரதா இந்து, "அப்பா நம்மள விட்டுட்டு போய் விட்டார்" எனக் கூறி கதறி அழ ஆரம்பித்தாள். அவள் அருகில் வந்த பர்வதம், "எம்புள்ளை என்ன விட்டுட்டு போய்ட்டானே! அந்தக் கடவுள் என்னை கூட கூட்டிட்டு போய் இருக்கலாமே" என இந்துவை கட்டிக்கொண்டு அழுதாள். சாரதாவின் அருகிலிருந்த மீனாட்சி அவரை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார். வீடே சோகக் கடலில் மிதந்து கொண்டிருந்தது.ரித்வக் இந்துவின் அருகிலே நின்று கொண்டிருந்தான். இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் இப்போது பிரமை பிடித்தது போல் எதுவுமே கூறாது அவரது தலை பகுதியிலேயே அமர்ந்து அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரித்திக், "இந்து அழுடி அப்பதான் உன் மனசுல இருக்க பாரம் எல்லாம் குறையும்" எனக் கூற அவள் காதில் எதுவுமே விழாதது போல் மௌனம் ஒன்றே கடைப்பிடித்தாள். சிறிது நேரத்தில் அவரது உடலை எடுக்கவே அப்போதுதான் சுயநினைவு பெற்றவள் போல் ஓடிச்சென்று அவரது உடலை கட்டிக்கொண்டு "எங்கப்பாவை எங்கேயுமே கொண்டு போகக் கூடாது. நீ சொல்லு ரித்விக் எங்க அப்பாவை கூட்டிட்டு போக வேண்டாம்" என்று கூறி சிறு குழந்தை போல் அழுபவளை தேற்றுவதற்கு வழியறியாது தவித்துக் கொண்டிருந்தான்.
அங்கு வந்த மீனாட்சி இந்துவை பிடிக்க "அவள் அத்தை நீங்களாவது சொல்லுங்க அத்தை" என்று கதற அவளை கண்டு அவருக்கு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க அதை மறைத்துக்கொண்டு "அப்படி எல்லாம் சொல்லாதம்மா. அப்பாவுக்கு முறைப்படி எல்லாமே செய்தால் தான் அவரது ஆன்மா சாந்தி அடையும். அப்பா எங்கேயும் போகலை ஏதோ ஒரு ரூபத்தில் உன் கூடத்தான் இருக்கார்" எனக் கூறி அவளை பிடித்து இழுத்துச் செல்ல அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மகன் என்ற முறையில் ரித்விக் முன்னின்று எல்லா சடங்குகளையும் செய்தான்.


இந்து எதுவுமே சாப்பிடாமல் அறையில் விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மீனாட்சி கொஞ்சமாக சாப்பிடு என கெஞ்சியும் பயனில்லை. ரித்விக் உள்ளே வரவே அவர் அவனிடம் இந்துவை ஆறுதல்படுத்தும் படிக் கூறி கையில் உணவுத் தட்டுடை கொடுத்து விட்டு அவர் அறையை விட்டு வெளியேறினார். அவன் அவள் அமர்ந்திருக்கும் நிலையை கண்டவுடன் தன் மனதில் யாரோ அடிப்பது போன்றதொரு வலியை உணர்ந்தான்.


அவள் அருகில் சென்று நிற்காமல் வழிந்து கொண்டிருக்கும் அவளது கண்ணீரை துடைக்கவே அவனை நிமிர்ந்து பார்த்தாளே தவிர பதிலேதும் கூறவில்லை. அவன் "இந்து இந்து" என அழைத்தும் பதில் இல்லை. "வாய் திறந்து பேசுடி. உன் கஷ்டத்தை வெளியே சொல்லு அப்பதான் பாரம் குறையும்" என்றான் ரித்விக். இந்து, "என்னால முடியலை ரித்விக். எங்க அப்பா இப்ப இல்லை என்று ஏத்துக்க முடியலை. நடந்தது எல்லாமே ஒரு கனவாக இருக்க கூடாதா என்று கூட தோன்றியது" எனக் கூறி அழுபவளை தேற்றுவதற்கு வழி தெரியாமல் தவித்த அவன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு "இந்து எனக்குத் தெரியும் இழப்ப பெருசு தான். நான் இல்லைனு சொல்லல ஆனால்
இதுதான் உண்மை. அதை நம்மை ஏத்துக்கிட்டு நம்ம தான் வெளிய வர முயற்சிக்கனும். நீ இப்படியே சாப்பிடாம இருந்தா உன் உடம்பு சரி இல்லாம போகும். படிச்ச பொண்ணு நீயே இப்படி இருந்தா உங்க அம்மா நிலைமையை நினைத்து பாரு. அவங்க என்ன பண்ணுவாங்க. இனிமே நீ தான் அவங்களை பார்த்துக்கணும். என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா இப்படியே இருக்காத கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சி பண்ணு" எனக்கூறி உணவை அவர்களுக்கு ஊட்டிவிட முதலில் மறுத்தவள் பின்பு சாப்பிட ஆரம்பித்தாள். அப்படியே அவனது மடியில் படுத்து உறங்கிவிட்டாள்.


ரித்விக் மீனாட்சியிடம், "அம்மா இந்துவை நான் ஊருக்கு கூட்டிட்டு போறேன். இங்கே இருந்தா அவ இப்படி தான் இருப்பா. அங்க போனா தான் ஒரு மாறுதல் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆயிடுவா. சாரதா அத்தையும் பாட்டியையும் நீங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. உங்களால தான் அவர்களை மாற்ற முடியும்" எனக் கூற அவன் கூறுவதே அவருக்கும் சரி எனப்பட்டது.

மீனாட்சி, "சாரதா நீயும் அத்தையும் கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு வாங்க". சாரதா, "இல்ல வேணாம் மீனாட்சி. நாங்க இங்கே இருக்கோம்". மீனாட்சி, "இல்லம்மா இங்கே இருந்தா உங்களுக்கு அண்ணா ஞாபகமாவே இருக்கும். அதனால கொஞ்ச நாளைக்கு எங்க வீட்டுக்கு வா உனக்கு ஒரு மாறுதல் கிடைக்கும்". சுந்தரராஜன், "ஆமாம்மா சாரதா என்னை உன் கூடப்பிறந்த அண்ணன் மாதிரி
நினைச்சுக்கோ" எனக் கூறி அவளை அழைத்துச் சென்றார்.
ரித்விக், "அத்தை உடம்ப பாத்துக்கோங்க" எனக் கூறியவன் அனைவரிடமும் விடைபெற்று கொண்டு இந்து உடன் சென்னையை நோக்கி பறந்தான். இந்துவிடம் முன்பை விட சிறிய மாற்றங்கள் தென்பட்டது. "காலத்திற்கு எவ்வளவு பெரிய காயத்தையும் ஆற்றும் சக்தி" உள்ளது என்பதால் அவனும் அவளை எதற்காகவும் வற்புறுத்தவில்லை.அவளாகவே மாறி வருவாள் என நினைத்தான். அவளுக்கு ஒரு தாயாக மாறி பாதுகாத்தான். அவள் உண்ண மறுத்து அடம்பிடிக்கும் போது மிரட்டி உண்ண வைப்பது, அவள் அழும் பொழுது நெஞ்சில் சாய்த்து ஆறுதல், கூறுவது காமெடி சொல்லி சிரிக்க வைப்பது என அவளுக்கு எல்லாமுமாக மாறிவிட்டான். முன்பு இருந்ததைவிட அவர்களுக்கிடையேயான பிணைப்பு அதிகரித்தது.

இந்துவும் பணிக்கு செல்வது, ரித்திக் உடன் நேரம் செலவழிப்பது என தன் கவலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்தாள். ஆனாலும் தனியாக இருக்கும்போது அவளுக்கு வேதாச்சலம் நினைவு வந்து வாட்டியது.இப்படியே சில மாதங்கள் கடக்க இந்து நார்மலான வாழ்க்கைக்கு மாறி வந்தாள். அன்று வழக்கம் போல இந்துவை அழைக்க வரும் அவன் வராததால் சிறிது நேர காத்திருப்புக்கு பின் கடுப்பான அவள் அவனது மொபைலுக்கு அழைப்பு விடுக்க இரண்டு முறை அழைப்பு ஏற்கப்படாமல் துண்டானது. மூன்றாவது முறை அழைப்பு எடுத்தவுடன் "வரலைனா சொல்ல மாட்டீயா? எவ்வளவு நேரம் ஆச்சு" என கடுப்பாக பொரிந்து தள்ள ரி்த்விக், "வெயிட் வெயிட் ஒரு நிமிஷம் சொல்றதை கேளு. போன்ல சார்ஜ் இல்லை அதான் ஸ்விட்ச் ஆஃப் ஆப் உனக்கு சொல்ல இப்ப தான் போனை ஆன் பண்ணுனேன். ஒரு முக்கியமான மீட்டிங். நீ
வீட்டுக்கு போ நான் வந்துடுறேன்" என்றான். இந்து, "சரி பார்த்து பத்திரமாக வா" எனக் கூறி அழைப்பை துண்டித்தாள்.
வண்ணங்கள்மிளிரும்...
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (17)

ரித்விக் வருவதற்காக காத்திருந்தவள் சோபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். காலிங்பெல் ஒலிக்க கதவை திறக்க ரித்விக் நின்று கொண்டிருந்தான். உள்ளே வந்தவன் "நீ இன்னும் தூங்கலையா". இந்து, "இல்ல நீ வந்ததுக்கு அப்புறம் சாப்பாடு போட்டுட்டு தூங்கலாம்னு முழிச்சுருக்கேன்" என்றாள். "சரி சரி நீ இங்கேயே இரு. நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும். நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்" எனக் கூறி தனது அறைக்குள் நுழைந்தான்.இந்து 'என்னவாக இருக்கும்' என யோசித்துக் கொண்டிருக்கும் போது வெளியே வந்தவன் அவள் அருகில் அமர்ந்து தோளில் கை போட்டவன் "ஏதோ தீவிர யோசனையாக இருக்கும் போலயே" என்றான். இந்து, "ஒன்றும் இல்லை. நீ ஏதோ விஷயம் சொல்றேனு சொன்னீயே அதான் என்னவா இருக்கும்னு யோசிச்சேன்".
ரித்விக், "உன் போன் எங்க. அம்மா நிறைய தடவை கூப்பிட்டாங்களாம். நீ எடுக்கலையா?.... இந்து, "ரூம்ல வச்சு இருந்தேன். சைலன்ட்ல இருந்திருக்கும். அதான் கவனிக்கல. அத்தை என்ன சொன்னாங்க.


ரித்விக், "நம்ம குலதெய்வம் கோயிலில் கும்பாபிஷேகம் பண்ண போறாங்க. அதனால ஒரு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வரச் சொல்லி இருக்காங்க.
அதுவுமில்லாம அப்பாவோட தங்கச்சி ஒருத்தவங்க அங்க இருக்காங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. அந்த பொண்ணை என்னை கட்டிக்க சொன்னங்க. நான் மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்காக அவங்க ரொம்ப கோவமா இருந்தாங்க. அதனால என் கல்யாணத்துக்கு கூட வரவில்லை. இப்பதான் சமாதானமாகி அப்பாக்கிட்ட பேசினாங்க. அதான் அவங்க வீட்டுல போய் இருக்கலாம்னு அப்பா நினைக்கிறார்.
நாளை மறுநாள் கிளம்பனும்.உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா". இந்து இல்லை என தலையாட்ட ரித்விக், "சரி வா சாப்பிடலாம்" எனக் கூற அவள் அவனுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு அருகில் அமர்ந்து இருந்தாள். அவன் சாப்பாடு எடுத்து ஊட்ட அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். ரித்விக், " இந்து நீ முதல்ல மாதிரி இல்லை. இப்ப நல்ல பிள்ளைய மாறிட்ட. சொல்ற பேச்சையெல்லாம் கேட்குற" என்றுக் கூற இந்து ரித்விக்கை ஒரு முறை முறைத்து "அப்ப நான் முதல்ல கெட்ட பிள்ளையாவா இருந்தேன்" எனக் கூறி அவனை அடிக்க "ஹேய் வலிக்குது டி ராட்சசி" என அவன் கூற "ராட்சசியா" என மேலும் அடிகளை அவனுக்கு பரிசாக கொடுத்தாள்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ஊருக்கு புறப்படுவதற்காக இந்து எல்லா துணியையும் ரெடி பண்ணிக் கொண்டிருக்க அவளுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவளை வம்பிலுத்துக் கொண்டிருந்தான் ரித்விக். இந்து, "ரித்விக் நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா நாம இன்னும் மூணு நாள் கழிச்சுதான் ஊருக்கு போக முடியும்". ரித்விக், "எனக்கு போரடிக்குது இல்லை" என்று கூற இந்து, "போரடிக்குதா. சரி நைட்டு இன்னும் சாப்பாடு செய்யலை. போய் அதை செய்" என்றாள். ரித்விக், "நானா?... சாப்பாடா?".... என மூஞ்சியை சுருக்க இந்து, "நீதான் போ" என்று அவனை ரூமை விட்டு வெளியே தள்ளினாள்.அவனும் சிரித்துக் கொண்டே ரூமை விட்டு வெளியேறினான். அவனது மொபைல் ஒலிக்கவே அதை எடுத்து ஆன் பண்ணி "ஹலோ அம்மா. என்னம்மா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க". மீனாட்சி, கோவிலுக்கு போக ஞாபகப்படுத்ததான்டா. நேரா நீங்க ரெண்டு பேரும் கோவிலுக்கே வந்துடுங்க. முக்கியமா காலையில சீக்கிரமா வந்திடுங்க" என்றிட அவன் "சரிம்மா நான் பாத்துக்குறேன். நாங்கள் கரெக்டா வந்திருவோம்மா" எனக் கூற சரி போனை இந்துகிட்ட கொடு அவள் கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு என்று கூற அவன் இந்து இந்த அம்மா பேசணுமாம் எனக் கூறி மொபைலை நீட்டினான். அதை வாங்கியவள் "அத்தை எப்படி இருக்கீங்க?... சாப்பிட்டீங்களா?".....மீனாட்சி, "நல்லா இருக்கேன். சாப்பிட்டேன். நான் போன் பண்ணா தான பேசுவியா. நீங்களாவே போன் பண்றதே இல்லை" என்று கூற இந்து, "அதான் அத்தை நாளைக்கு நேர்ல பார்க்க போறோமே அப்ப பேசிக்கலாம் தான்" எனக் கூறினாள். மீனாட்சி, "பதில் மட்டும் கரெக்டா வச்சிருக்க. சரிம்மா நாளைக்கே சீக்கிரமா வந்திடுங்க" எனக் கூறியவர் அழைப்பைத் துண்டித்தார்.அதிகாலையில் வேகமாக எழுந்து கிளம்பியவர்கள் கோயிலுக்கு புறப்பட்டனர். ரித்விக் கார் ஓட்ட அந்த அதிகாலை பொழுதில் தென்றல் காற்று மேனியை தழுவ அந்தப் பொழுது அவளுக்கு ரம்மியமான பொழுதாக இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மிகுந்த மகிழ்வுடன் காணப்பட்டாள். கோவிலுக்கு சென்றவுடன் தன் குடும்பத்தை கண்டவர்கள் மகிழ்ச்சியுடன் அவர்களுடன் இணைந்து பூஜையில் கலந்து கொண்டனர்.
அவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்த இந்து முகம் சற்று வாட அதை கவனித்தவன் "என்ன இந்து முகம் இப்படி இருக்கு" என்று வினவ "போன தடவை வந்தப்ப அப்பாவும் நம்ம கூட வந்திருந்தார். ஆனா இப்ப அவர் இல்லை" என அவள் கூறும் போதே கண்ணீர் கன்னத்தை தாண்டியிருந்தது. அவன் "இந்து அப்பா இப்பவும் உன் கூட தான் இருக்கார். அவரோட ஆன்மா உன்ன பார்த்துக்கிட்டே தான் இருக்கு. நீ இப்படி அழுதுட்டே இருந்தா அவர் ரொம்ப கஷ்டப்படுவார்" என்று கூறி கண்ணீரை துடைத்தான். பூஜை முடிந்தவுடன் சுந்தரராஜன் தங்கையான ரங்கநாயகி வீட்டிற்குச் சென்றனர்.எல்லோரையும் அன்புடன் வரவேற்ற ரங்கநாயகி ஓடிச்சென்று சுந்தரராஜனை கட்டிக்கொண்டார். ரங்கநாயகி, "என்னண்ணா நான் தான் ஏதோ கோவத்துல பேசலைன்னா நீங்களும் அப்படியே விட்டு விடுவீங்களா?.... எனக் கடிந்து கொள்ள அவர் "சரிம்மா நானும் அப்படி நடந்து இருக்க கூடாது. இந்த அண்ணன்னை மன்னிச்சிடும்மா" என்று கூற "அப்படி பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்கண்ணா. எனக்கு ஒரு சின்ன வருத்தம் தான். உங்களுக்கு தங்கச்சியா மட்டும் இல்லாம சமந்தி ஆகணும்ற ஆசை தான் வேற ஒன்னும் இல்ல. இப்ப ரித்விக் இல்லைனா என்ன?.... அஸ்வினுக்கு பொண்ண கட்டிக்கோங்க" என்றார். சுந்தரராஜன், "கண்டிப்பாம்மா" என்றிட அப்பொழுது தான் அங்கு வந்த அஸ்வின் இந்துவின் காதில் "என்ன இந்து பாசமலர் படம் முடிஞ்சிடுச்சா". இந்து, "ம்ம்....முடிஞ்சிடுச்சு. இப்போ உன் படம் தான் ஓடிட்டு இருக்கு".
அஸ்வின், "என்னது என் படமா?"... இந்து, "ஆமா உன்னை கட்டி கொடுக்குறதை பத்தி டிஸ்கஷன்". அஸ்வின், "என்னது என்னைத் கட்டிக் கொடுக்க போறீங்களா?..
என்னடா நடக்குது இங்க?"... இந்து, "உங்க அத்தை பொண்ணை ரித்விக் கல்யாணம் பண்ணலையாம். அதான் உனக்கு கட்டி வைக்கலாம்னு பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு". அஸ்வின், "அந்த குண்டம்மாவ கல்யாணம் பண்றதுக்கு நான் சன்னியாசமே போய்டுவேனே" என்று கூற அவள் சத்தமாக நகைத்து விட்டாள்.சுந்தரராஜன், "அஸ்வின் வந்ததும் அத்தை கிட்ட பேசாம அங்க என்ன காதில் சொல்லீட்டு இருக்க" என்று வினவ அஸ்வின், "அது ஒன்னும் இல்லப்பா நம்ம குடும்பத்தோட அருமை பெருமையெல்லாம் இந்து கிட்ட சொல்லிட்டு இருக்கேன்". சுந்தரராஜன், "நீ என்ன சொல்லுவ என்று எனக்கு தெரியும். நீ வந்து இங்க உட்காரு என்று அழைக்க இந்து, "சிக்குனியா போ" என்று கூற "இரு உன்ன வந்து பாத்துக்குறேன்" என்று கூறியவன் அவர் அருகில் சென்று அமர்ந்தான்.வெகு நாட்களுக்கு பிறகு குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் மகிழ்ச்சியில் திளைத்தனர். ரங்கநாயகி தன் அண்ணன் குடும்பத்தை விழுந்து விழுந்து கவனித்தார். இப்படியே அன்றைய பொழுது கழிந்தது.

மறுநாள் வெகு விமர்சையாக நடைபெற்ற முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முளைப்பாரி எடுத்தல், தீ மிதித்தல் என திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்துவிற்கு இது புதுவிதமான அனுபவமாக இருந்தது. ரித்விக் உடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் ரசித்து கொண்டு இருந்தாள். இந்து, "ரித்விக் எனக்கு பஞ்சு மிட்டாய் வேண்டும்" என்று கேட்க ரித்விக், "நீ என்ன சின்ன பிள்ளையா" என்றிட இந்து, "இப்ப நீ வாங்கி தருவியா?..இல்லையா?... என்று வினவ அவன் சரி வா போகலாம் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு சென்றான். அவன் பஞ்சு மிட்டாய் வாங்கித் தர அவள் சிறு குழந்தை போல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் தனது தோளில் யாரோ கை வைக்க திரும்பி பார்த்தவள் முகத்தில் வியர்த்து வழிய அப்படியே மயங்கி சரிந்தாள்.
வண்ணங்கள் மிளிரும்.....
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
வண்ணம் - (18)
அவள் மயங்கியதை பார்த்து பதறியவன் "இந்து இந்து" என கன்னத்தை தட்டி எழுப்ப அவள் எழவில்லை. தூரத்திலிருந்து இதை கவனித்த மீனாட்சி வேகமாக அருகில் வந்தவர் "என்னாச்சுப்பா" என பதறி அருகில் இருந்த கடையில் இருந்து தண்ணீர் வாங்கி வந்து தெளிக்க மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. ரித்விக், "நல்லா தான இருந்த. அப்புறம் எப்படி திடீர்னு மயங்கி விழுந்த" என்று கேட்க அதை கவனிக்காதவள் போல் கூட்டத்தில் தன் பார்வையைச் சுழல விட்டாள். அவளை பார்த்தவன் " இந்து என்ன ஆச்சு. நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன். நீ அங்க வேடிக்கை பாத்துட்டு இருக்க" என்றான்.


மீனாட்சி, "நீ முதல்ல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போ. அப்புறம் நம்ம எல்லாம் பேசிக்கலாம்" என்று கூற அவன் அவளை தூக்கி கொண்டு போய் காரில் ஏற்ற அதற்குள் மொத்த குடும்பமும் காருக்கு அருகில் கூடிவிட்டது. சுந்தரராஜன், "என்னடா ஆச்சு" என்று வினவ மீனாட்சி நடந்ததை கூறினார். உடனே இரங்கநாயகி வேகமாக முன்னே வந்து "என்ன மதினி உங்களுக்கு தெரியாததா?... புதுசா கல்யாணம் ஆன புள்ள மயக்கம் போட்ட என்ன அர்த்தம். மசக்கையா தான் இருக்கும்" என்றிட மீனாட்சி "ஆமால்ல இதை மறந்துட்டேன் பாரு" என்று கூறி இந்து முகத்தை பார்க்க அவள் ரித்விக் முகத்தை பார்க்க, அவன் வேகமாக "அம்மா முதலில் வீட்டுக்கு போவோம். அப்புறம் எல்லாமே பேசிக்கலாம்" என்று
கூற சுந்தரராஜன் "ஆமாம் மீனாட்சி அவன் சொல்வது சரி தான். முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க" என எல்லோரையும் அவசரப்படுத்த ரித்விக், "அப்பா நீங்க எல்லோரும் சாமி கும்பிட்டுவிட்டு திருவிழா முடிஞ்சதுக்கு அப்புறம் வாங்க. நான் இந்துவ கூட்டிட்டு போறேன்" என்று கூற இரங்கநாயகி, "ஆமாண்ணா அவங்க போகட்டும். நாம பின்னாடி போவோம்" என்றாள். ஒரு வழியாக அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ரித்விக் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு அவளை திரும்பி பார்க்க கண்களை மூடி படுத்திருந்தாள். கார் கதவைத் திறந்தவன் அவளை தூக்கி மெதுவாக படியேறி ரூம் கதவை நெருங்கும் வேளையில் " ஏய் அதான் ரூம் வந்துருச்சு இல்ல கண்ணத்திறடி கேடி. ரொம்ப நடிக்காத" என்று கூற தனது ஒரு கண்ணை இலேசாக திறந்தவள் "கண்டுபிடிச்சிட்டீயா" எனக் கூற அவளை கட்டிலில் படுக்க வைத்தான். ரித்விக், "இந்து நீ நல்லா தான நின்று பஞ்சு மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்த. அப்புறம் எப்படி தீடீர்னு மயங்குன?..... அதுவும் உன் மூஞ்சில அப்படி ஒரு பயம் தெரிஞ்சுச்சு. நீ எதை பார்த்து பயந்த" என அவன் கேள்வி கணைகளை தொடுக்க அவள் எதுவும் கூறாது அவன் முகத்தை மட்டும் பார்த்து கொண்டு இருந்தாள். அவன் "இந்து நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ என்ன ஊமையா?.... என்று வறுத்துதெடுக்க அதற்குள் கதவை திறந்து கொண்டு ஒரு பாட்டியுடன் இரங்கநாயகி உள்ளே வந்தார். வந்தவர் ரித்விக்கை நோக்கி "ரித்விக் இவங்க தான் நம்ம ஊரு வைத்திச்சி. நாடி பிடிச்சு பார்த்தே எல்லாமே கண்டுபிடிச்சுடுவாங்க. நிறைய பிரசவம் பார்த்து இருக்காங்க. அதான் நம்ம இந்துவ நாடி பிடிச்சு பார்க்க சொல்லலாமுன்னு கூட்டிட்டு வந்தேன்" என்றார். இந்து ரித்விக்கை பார்க்க அவன் "எதுவும் பேசாதே. நான் பார்த்துக் கொள்வேன்" என்பது போல் தலையை ஆட்ட அவள் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளது நாடியைப் பிரித்துப் பார்த்தவர் "ஒன்றுமில்லைம்மா. சரியாக சாப்பிடாமல் இருக்கும் போல அதான் மயக்கம் வந்திருக்கு" எனக் கூறியவர் அவளிடம் வயசுபுள்ள நல்லா சாப்பிடணும்மா. பாத்தா படிச்சவ மாதிரி இருக்க" என்று கூற அவன் சத்தமாக சிரித்து விட்டான். அவர் "ஏம்ப்பா தம்பி சிரிக்கிற" என்றிட அவன் இந்து டாக்டர் பாட்டி என்று கூற, அவர் "ஏம்மா டாக்டரா இருந்துகிட்டு நீயே இப்படி பலவீனமாக இருந்தா எப்படி வர நோயாளியை பார்ப்ப" என்று கூற ரித்விக் மேலும் நகைக்க இந்து அவனை முறைத்தாள். அவர், "சரிம்மா உடம்பை பார்த்துக்கோ" என்று கூறி வெளியேறிவிட்டார்.
மொத்த குடும்பமும் அவள் ரூமில் கூடிவிட மீனாட்சி இந்துவின் தலையில் கை வைத்து "இந்து சரியாக சாப்பிறதில்லையா?.... உடம்பு ரொம்ப முக்கியமா" என்றவர் ரித்விக் புறம் திரும்பி "அவள் சாப்பிடுகிறால்லா, இல்லையா? என்று கூட நீ பார்க்க மாட்டியா?..என பொரிய அவன் "இல்லம்மா....." என ஆரம்பிக்க "பேசாத அவ சின்ன பொண்ணு நாமதான் பார்த்துக்கணும்" என கூற இந்து மெதுவாக சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்து விட்டான். ' இருடி உன்னை மாட்டி விடுகிறேன்' என நினைத்தவன் அம்மா "காலைல நான் சாப்பிட்டு ஊட்டி விட்டேன் அவ தான் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள்" என்று கோர்த்து விட எல்லோர் கவனமும் அவள் புறம் திரும்ப 'ஐயோ! மாட்டி விட்டானே' என முழித்தவள் "இல்ல அத்தை இனிமே நான் நல்லா உடம்ப பார்த்துக்கிறேன்" என்று கூற இரங்கநாயகி "சரி விடுங்க மதினி. அந்த பிள்ளை ஓய்வு எடுக்கட்டும். வாங்க நாம வெளியே போகலாம்" எனக் கூறி அனைவரும் அழைத்துச் சென்று விட்டார்.
ஒரு வழியாக திருவிழா முடிந்ததும் மொத்த குடும்பமும் ஊரை நோக்கிப் புறப்பட்டது. ரித்விக், "போயிட்டு வரேன்" என்று கூற சுந்தரராஜன், "அந்த பொண்ணு சின்ன பொண்ணுடா. நல்லா பாத்துக்கோ" என பல அறிவுரைகளை வழங்க அதை எல்லாம் பெற்றவன் காரை சென்னை நோக்கி செலுத்தினான்.
வழக்கம் போல் அவன் வர லேட்டாக எனக் கூறி விட வேகமாக கிளம்பியவள் வீட்டை அடைந்து தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். காலிங் பெல் அடிக்கவே 'இவன் லேட்டா தான வருவான்' இப்ப யாரு வந்திருப்பா?.... என யோசனை செய்தவள் கதவை திறக்க ரித்விக் நிற்க அவன் உடன் ஒருவன் நின்றான். அவனைப் பார்த்தவள் 'எங்கேயோ பார்த்திருக்கிறேனே! ஆனால் யாருனே தெரியலையே' என நினைக்க ரித்விக், "இந்து என்ன யோசனை. வீட்டுக்கு வந்தவங்கள வா என்று கூப்பிடாமா" என கூற இந்து, "சாரி சாரி, உள்ள வாங்க உட்காருங்க" என்றாள்.இந்து, "ரித்விக் இவங்கள நான் எங்கேயோ பார்த்து இருக்கேன். ஆனால் எங்கனு தான் தெரியலை" என்று கூற அந்த புதியவன் "என்ன பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு இல்ல. அதான் சிஸ்டர் மறந்துருப்பாங்க" என்றான். ரித்விக், "இந்து இவன் என் கூட பத்தாம் வகுப்பு வரை ஒண்ணா படிச்சவன். நீ கூட அபி அண்ணானு பின்னாடி சுத்துவியே அந்த அபிஷேக்" என்றிட இந்து, "ஏய் ஆமா, சாரி மறந்துட்டேன். அபி அண்ணா எப்படி இருக்கீங்க?...ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டீங்க. நீங்க சென்னைல தான் இருக்கீங்களா?... என்றாள்.


அபி, "ஆமாம்மா இங்கே தான் வேலை. அதான் குடும்பத்தோடு செட்டில் ஆகியாச்சு. இப்ப சென்னைல அசிஸ்டெண்ட் கமிஷனராக ஒர்க் பண்றேன்" என்றான். இந்து, "வாவ் சூப்பர் அண்ணா. கல்யாணம் ஆயிடுச்சா. பசங்க இருக்கா?"... என்றாள் அபிலாஷ், "ஆயிடுச்சு ஒரு பையன் இருக்கான். உங்க கல்யாணத்துக்கு கூட ரித்விக் கூப்பிட்டு இருந்தான். ஆனால் அப்போ ஒரு முக்கியமான கொலை கேஸ் போயிட்டு இருந்துச்சு. அதான் வர முடியலை" என்று கூற இந்து, "சரி பரவாயில்லைண்ணா அடுத்த தடவை கண்டிப்பா அண்ணியையும் பாப்பாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க" என்றாள். அபிஷேக் "கூட்டிட்டு வரேன்ம்மா. கண்டிப்பா நீயும் ரித்விக்கும் வீட்டுக்கு ஒரு நாள் வாங்க" என்றான். ரித்விக், "இந்து அவனுக்கு குடிக்க ஏதாவது கொடு" என்று கூற "இந்து இருங்கண்ணா. நான் போய் காபி கொண்டு வரேன்" என்றவள் அடுப்பறைக்குள் நுழைந்தாள்.


அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்க காபியோடு வந்தவள் அவர்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பை எடுத்துக்கொண்டு அருகில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள். ரித்விக், "அபி வேலையெல்லாம் எப்படி போகுது" என்று வினவ அபி, "அதற்கு என்ன அதுபாட்டுக்கு போகுது" என்று கூற ரித்விக், "ஏன்டா சென்னை கமிஷனரா இருந்துகிட்டு நீயே இவ்வளவு சலுச்சுக்கிற" என்று கூற அபி, "இவ்ளோ படிச்சு என்னடா பண்ண?.. இந்த அரசியல்வாதிகளுக்கு கீழே கைகட்டி நிற்கிற மாதிரி தான்டா இருக்கு எங்க நிலைமை. உனக்கு தெரியுமா மினிஸ்டர் சதாசிவம்" என்றான்.ரித்விக், "ஆமாம். தெரியும்". அபி, "அவரோட பையன கூட ரிசன்டா கொலை பண்ணிட்டாங்க. அந்த கேஸ் தான்டா இப்ப போயிட்டு இருக்கு. ரொம்ப டார்ச்சர் பண்றான்டா. அவன் புள்ள என்னமோ நல்லவன் மாதிரி, அவன் மேல ஏற்கனவே இரண்டு மூன்று கேஸ் இருக்கு. மினிஸ்டர் பையன்ற காரணத்துனால தப்பு பண்ணிட்டு ஈஸியா தப்பிச்சுட்டு இருந்தான். திடீர்னு யாரோ அவனை போட்டு தள்ளிட்டாங்க. அந்த மினிஸ்டர் எங்களை போட்டு குடையுறான். நாங்களும் தனிப்படை அமைத்து தேடிகிட்டு தான் இருக்குகோம். ஐ திங்க் குற்றவாளிய நெருங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். சீக்கிரமே கண்டுபிடித்து விடுவோம்" என்றவன் "சரி நான் கிளம்புறேன் டைமாச்சு. இந்து கண்டிப்பா நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு வரனும் " என்று கூறியவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.


வண்ணங்கள் மிளிரும்...
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
வண்ணம் - (19)
அபிலாஷை வழியனுப்பி விட்டு கதவை மூடி திரும்பிப் பார்க்க அவள் அதே இடத்தில் அமர்ந்திருக்க, அவன் அவளின் தோளை தொட்ட பிறகே சுய நினைவு பெற்றவள் "என்ன" என்றாள். ரித்விக்,
" ஏன் முகம் டல்லா இருக்கு வேலை அதிகமா?" என தலையை வருடி கேட்க, அவனது கையை தட்டி விட்டவள் "ஒன்றும் இல்லை" என்று கூறி தனது அறைக்குள் சென்று விட்டாள்.ரூம்க்குள் சென்றவள் கட்டிலில் படுத்து விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு யோசனை தன் மூளையில் தோன்றவே எழுந்து அமர்ந்தவள், அந்த நிகழ்வை நினைக்கும்போதே 'யாரோ தன் நெஞ்சில் கத்தியை வைத்து குத்துவது போல் தோன்றியது' இதை எப்படி என்னால் ஏத்துக்க முடியும். ரித்விக்கை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா?. அம்மா, அத்தைக்கு எல்லாம் என்ன பதில் சொல்லப் போறேன்" என பலவித யோசனைகளை முளையில் போட்டு குழப்பி தன் முடிவு சரியா என பலமுறை யோசித்து தவித்தவள் இறுதியாக ஒரு முடிவு எடுத்துவிட்டு, எவ்வளவு நேரம் அழுதால் என்பது தெரியவில்லை அப்படியே உறங்கியும் விட்டாள்.
அவள் மொபைல் ஒலிக்க எழுந்தவள் எடுத்துப் பார்த்து "ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க? பாட்டி எப்படி இருக்காங்க?". சாரதா, "நல்லா இருக்காங்கம்மா. நான் நல்லா இருக்கேன். நீயும் ரித்விக் தம்பியும் எப்படி தம்பி எப்படி இருக்கீங்க?.
இந்து, "ம்ம்.. நல்லா இருக்கோம்மா".
சாரதா, "இன்னைக்கு என்ன நாள் மறந்துட்டீயா?" என்று கூற அப்போது தான் காலண்டரைப் பார்த்தவள் "ஐயோ! மறந்துட்டேன்" என்று தன் நாக்கை கடித்தாள். சாரதா, "நல்ல பிள்ளம்மா நீ. உன் பிறந்த நாளையே மறந்துட்டீயா. இந்த பிறந்த நாள் மாதிரியே நீ எல்லா பிறந்த நாளுக்கும் சந்தோசமா இருக்கணும். நான் கோவிலுக்குப் போய் உன் பெயரில் அர்ச்சனை பண்ணிட்டேன். நீ பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வா" என்றார். இந்துவும் "சரிம்மா" என்றவள் அழைப்பைத் துண்டித்து விட்டு படுக்கையில் இருந்து எழுந்து குளியலறை புகுந்தாள்.

ரித்விக் வாழ்த்து கூறுவான் என எதிர்பார்த்தாள். ஆனால் அவன் நடவடிக்கை அவன் மறந்ததை போல தோன்றவே, 'நம்மளாவே சொல்லக்கூடாது அவனா சொல்கிறானா? என்று பார்ப்போம்' என நினைத்தவள் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் எவ்வித சலனமுமின்றி கார் ஓட்டினான். காரை விட்டு இறங்கியவள் அவனது முகத்தை பார்க்க அவன், "இந்து..." என்று அழைக்க அவள் மகிழ்ச்சியாக திரும்பியவுடன் "இன்னைக்கு ஈவ்னிங் வேலை இருக்கு. நீயே வீட்டுக்கு போயிடு" என்றவன் காரை எடுத்துக் கொண்டு பறந்தான்.


அவன் கிளம்பியவுடன் ஒரு ஆட்டோ பிடித்து கிளம்பியவள் கோவிலுக்கு சென்றாள். கடவுளிடம் 'நான் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தப்பு பண்ணிட்டேன். அதுக்கு எனக்கு தண்டனை உண்டு என்று தெரியும். அந்த தண்டனை என்னை மட்டுமே பாதிக்கட்டும். ரித்விக்கிற்கு எதுவும் ஆகக்கூடாது. நான் இப்ப ஒரு முடிவு எடுத்து இருக்கேன். அது சரியா தப்பா என்று கூட எனக்கு தெரியல. நீ தான் எனக்குத் துணையா இருக்கணும்' என மனமுருகி வேண்டியவள் அப்படியே கோவிலிலே அமர்ந்தாள்.


அங்கு இருந்த அமைதி அவள் மனதிற்கு இதமாக இருந்ததால் அப்படியே கடவுளை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.....அவள் மொபைல் ஒலிக்கவே அதை எடுத்து பார்க்க ரோஹித் என்று வர அதை ஆன் செய்து காதில் பொருத்தினாள். மறுமுனையில், "ஹலோ இந்து மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே" என இரு குரல்கள் கேட்க இந்து, "என்னடா வாய்ஸ் டபுளா கேக்குது?" என்றாள்.


சுஷ்மி, "இந்து நானும் லைன்ல தான் இருக்கேன். நான் நீ ஹாஸ்பிடல் வருவ வருவ என எவ்வளவு நேரம் எதிர்பார்ப்பத்தேன் தெரியுமா? என்ன
ரித்திக் கூட அவுட்டிங்கா?" என்றாள்.

இந்து, "இல்ல நான் மட்டும் தனியாதான் கோவிலில் இருக்கேன். அவனுக்கு வேலை இருக்கு என்று கிளம்பி விட்டான்" என்றாள்.


ரோஹித், "அப்போ நீ இன்னைக்கு ஹாஸ்பிட்டல்க்கு வர மாட்டீயா?"

இந்து, "ஆமா நாளைக்கு தான் வருவேன்" என்றாள்.


சுஷ்மி, "இந்து எனக்கு ட்ரீட் வேணும். நாளைக்கு வரும்போது கேக் வாங்கிட்டு வா" என்றிட இந்து, "கண்டிப்பா வாங்கிட்டு வரர்றேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.....


அவள் எடுத்த முடிவை நோக்கி புறப்பட்டு அதற்கான செயலிலும் இறங்கினாள். வேலை முடிந்தவுடன் மாலை வீட்டிற்கு சென்று கதவை திறந்தாள். கதவு திறந்தவுடன் விளக்குகள் ஒளிர வீடு அலங்காரத்துடன் ஜொலித்தது.....ரித்விக் கேக்குடன் நின்றிருந்தான். இந்து, "மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் த டே" என கை நீட்ட அவளும் கை குலுக்கினாள். அவள் இருந்த மனநிலையில் இவை எதையும் இரசிக்க தோன்றவில்லை.


முகத்தில் செயற்கையாக வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் நின்றிருந்தாள்.


அவன் கத்தியை அவளிடம் கொடுக்க கேக்கை வெட்டி அவள் அவனுக்கு ஊட்ட அவன் மீண்டும் அவளுக்கு ஊட்டினான். ரித்விக், "இந்து உன் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேளு" என்றான்.

இந்து, "என்ன கேட்டாலும் கொடுப்பியா?" என்று வினவி அவன் முகத்தை பார்க்க ரித்விக், "பிறந்தநாள் பேபி கேட்டா கொடுக்காமல் இருக்க முடியுமா? கேளு" என்றிட அவள், "எனக்கு டிவோர்ஸ் வேண்டும்" என்று கூறி தனது பையில் இருந்த டிவோர்ஸ் நோட்டீசை அவன் முன் நீட்டினாள்.....அதை வாங்கி படித்தவன் முகம் இருகியது. "உனக்கு என்னதான்டி பிரச்சனை?" எனக் கூறி கையை அவளின் கழுத்தின் அருகில் கொண்டு சென்றவன் திரும்பி சுவற்றில் ஓங்கி குத்தினான். "பதில் சொல்லுடி" என அவளை இழுக்க அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்து, "என்னை விட்டுட்டு போய் விடு. எனக்கு டிவோர்ஸ்" வேண்டும் என்று மீண்டும் கேட்க அவன் கேக்கை அப்படியே எட்டி உதைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.....


அறைக்குள் நுழைந்தவள், 'ஏன்டா இப்படி பண்ற? என்கூட இருந்தா உனக்கு தான் கஷ்டம். என்னை விட்டுப் போய் நீயாவது சந்தோசமா இருக்கணும் என்று தான் நான் அந்த முடிவை எடுத்தேன். உன்னைவிட எனக்கு தான்டா ரொம்ப வலிக்குது' எனக் கூறியவள் கதறி அழுதாள்......வீட்டை விட்டு வெளியேறியவன் காரில் ஏறி பீச்சை நோக்கி செலுத்தினான். அங்கு சென்று கடலை வெறித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான். சுற்றி இருந்த சூழல் அமைதியாக இருக்க அவனது மனது மட்டும் அனலாக கொதித்துக் கொண்டிருந்தது.


அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் டிவோர்ஸ் கேட்கிறா. இதுக்குத்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு தேடி தேடி இவளை கல்யாணம் பண்ணினேன்னா? ஆனா இவ மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்காள். ராட்சசி ராட்சசி இவ என் இந்துவே கிடையாது. என் இந்து எவ்வளவு தைரியமான துடுக்கான பொண்ணு. அவகிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட தைரியம் தான். அவளை பிரிஞ்சு என்னால எப்படி இருக்க முடியும்? என பலவாறு சிந்தித்தவன் இவ இப்படி நாம் அமைதியா சொன்னா கேக்கமாட்டாள். ஏதாவது அதிரடியா செஞ்சாதான் அமைதியாக இருப்பா என்று நினைத்து விட்டு தலையை அழுந்த கோதியவன் வண்டியை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.....


சிறிது நேரம் கழித்து ரூமை விட்டு வெளியே வந்தவள் அவன் வந்து விட்டானா? என்பதற்காக அவன் ரூமை எட்டிப் பார்க்க அது திறந்தே கிடந்தது. மணியை பார்க்க அது நள்ளிரவை தாண்டியது. 'இவ்வளவு நேரம் எங்க போய் இருப்பான்? இன்னும் வரலையே' என சிந்தித்தவள் சோபாவில் அமர்ந்து வாயிலை நோக்க ஆரம்பித்தாள். பொழுது விடிந்து விட்டது.


அவனது மொபைலுக்கு அழைப்பு விடுத்தாள். இரண்டு முறை அழைப்பு முழுவதுமாக சென்று கட்டாகியது. அது எடுக்கப்படவில்லை. வேகமாக கௌதம் எண்ணிற்கு அழைத்தாள் அது ஏற்கப்பட்டவுடன் "ஹலோ அண்ணா" என்றிட கௌதம், "சொல்லுமா என்ன இந்த நேரத்தில கால் பண்ணி இருக்க?"...." இல்ல அண்ணா ரித்விக்கிற்கு கூப்பிட்டேன். அவன் எடுக்கவே இல்ல அதான் நீங்க கூப்பிட்டு பாருங்க" என்று கூற.... கௌதம், "அவன் வீட்டில்தான இருப்பான். நேத்து கூட சீக்கிரமா கிளம்பிட்டானே?"


இந்து, "இல்ல அண்ணா. அவன் வெளியே கிளம்பி போனான். இன்னும் வரல"...

கௌதம், "சரிம்மா நீ போன வை. அவனை வீட்டுக்கு வர சொல்றேன்" என கூறி அழைப்பை துண்டித்தவன் ரித்விக்கிற்கு அழைத்து "டேய் எங்கடா இருக்க? நீ இன்னும் வீட்டுக்கு போகலையா?" என்று வினவ அவன், "ஆபீஸ்ல தான் இருக்கேன்.." என்றிட கௌதம், "நேத்து சீக்கிரமா வீட்டுக்கு கிளம்பி போன. இப்ப ஆபீஸ்ல இருக்கேன்னு சொல்ற? இந்து போன் பண்ணா எடுக்க மாட்டிறீயாமே? என்னடா ஆச்சு உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?" என்றான்.

ரித்விக், "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா. மொபைல் சைலன்ட்ல இருந்துச்சு. அதான் எடுக்கல நீ வை நான் வீட்டுக்கு போறேன்" என்று கூறி மொபைலை கட் செய்தான்.


அவன் வீட்டுக்குள் நுழைய கதவு திறந்தே கிடந்தது. அவள் சோபாவில் அமர்ந்தே தூங்கியிருந்தாள். இரவு முழுவதும் அழுததால் முகம் நன்றாக வீங்கியிருந்தது. கண்ணீர் வழிந்த தடம் பதிந்து இருந்தது. அவளின் நிலையை பார்க்கும் போது வேகமாக ஓடிச் சென்று அவளை மார்போடு அணைக்க பரபரத்த கையை அடக்கினான். அவன் அருகில் நிற்க அவள் கண்களைத் திறந்து பார்க்க இறுகிய முகத்துடன் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டான்.....


அவனை கண்டவள் எழுந்து சென்று குளித்து கிளம்பி விட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து அவன் ரூம் கதவை பார்த்துக்கொண்டிருக்க வேகமாக வெளியே வந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் காரில் ஏறி பறந்துவிட்டான்.


அவனது செய்கை கண்டு முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்கியவள் அவளும் அப்படியே சாப்பிடாமல் ஹாஸ்பிட்டல் கிளம்பிவிட்டாள்......


அதன் பின் வந்த நாட்களில் அவளுக்கு அவனை காணவே பெரும் சிரமமாக இருந்தது. அதிகாலையில் வேகமாக கிளம்பியவன் இரவிலும் நள்ளிரவைத் தாண்டிய வீட்டிற்கு வந்தான். லீவு நாட்களில் கூட அலுவலகத்திலேயே செலவழித்தான். அவன் இவ்வாறு தன்னை புறக்கணிப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படியே சில நாட்கள் கழிந்தது. அவர்களின் கண்ணாமூச்சி ஆட்டமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.....


அன்று அவள் அவனைப் பார்ப்பதற்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்க வேகமாக உள்ளே வந்தவன் அவளை கண்டுகொள்ளாமல் உள்ளே செல்ல இந்து, "ரித்விக் ரித்விக்" என அழைக்க திரும்பியவன் இறுகிய முகத்துடன், "என்ன...?" என்றான்.


இந்து, "நான் சொன்ன விஷயத்தை பத்தி என்ன முடிவு எடுத்திருக்க?"

அவன், "எந்த விஷயம்..?" என்று கேட்டு அவளை நோக்கி முன்னே வர அவள் வார்த்தைகளை திக்கி திக்கி, "டிவோர்ஸ்" என்று கூற அவளை சுவற்றில் சாய்த்தவன் தன் கைகளை இருபுறமும் ஊன்றினான்.


அவனை இவ்வளவு நெருக்கத்தில் பார்த்த அவளுக்கு பயத்தில் வேர்த்து வழிய ரித்விக் "டிவோர்ஸ் தர முடியாது. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ" எனக் கூறியவன் அவளது நெற்றியில் இதழ் பதித்து, "நீயே நினைத்தாலும் என்னை விட்டு போக முடியாது. நான் உன்னை விடமாட்டேன்" என உறுதியாக கூறியவன் "இன்னும் ரெண்டு நாள் உனக்கு டைம். அதுக்குள்ள நீ எதுக்கு டிவோர்ஸ் கேக்குற என்று எனக்கு தெரிஞ்சே ஆகணும். நீ சொல்லலனா நானே கண்டுபிடிப்பேன். உன்கிட்ட இருந்து எப்படி உண்மையை வாங்கணும் என்று எனக்கு தெரியும்" என்று கூறியவன் அவளது வியர்வையை துடைத்து விட்டு "போய் சாப்பிட்டு தூங்கு" என மிரட்டிவிட்டு தனது அறையை நோக்கி சென்றான்.....


அவள் அவன் சென்ற பிறகு மூச்சை இழுத்து விட்டவள் அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.....


வண்ணங்கள் மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi