கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (10)
ரித்விக் , " இந்து நாளைக்கு காலையில் பத்து மணிக்கு ரெடியா இரு நாம ஷாப்பிங் போகலாம்". இந்து, "ஓகே என தலையசைத்தாள். ரித்விக்,"இந்து நான் உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"..... இந்து," அது நீ கேட்கிற கேள்வியா பொறுத்தது"......ரித்விக்," நீ ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன?.
.. உனக்கு வேற ஏதாவது பிரச்சனை இருக்கா? ..எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு. என்னால முடிஞ்சா நான் கண்டிப்பா சரி பண்ணுறேன்"......."என் பிரச்சனையை எனக்கு சரி பண்ண தெரியும். அதைபத்தி நீங்க கவலைப்பட தேவையில்லை மிஸ்டர் ரித்விக். இனிமே தேவை இல்லாம என்னோட சொந்த விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருந்தால் நல்லாயிருக்கும். உங்க லிமிட்ல நீங்க இருந்தா நல்லா இருக்கும்"......எனக் கூறி அறைக்குள் சென்றவள் கதவை தாழிட்டு கதவின் பின் அமர்ந்துவிட்டாள்.....அவள் மேலே விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்க அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தால் என தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே அங்கே தரையில் படுத்து உறங்கிவிட்டாள்......


ரித்விக்கிற்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தன் நெஞ்சினை யாரோ கத்தியால் குத்துவது போல் இருந்தது. தனது அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அப்படியே அமர்ந்துவிட்டான். இவளை எப்படி சரி பண்ணுவது என்றே தெரியலையே. நான் கூட ஏதாவது விளையாட்டுக்கு தான் என்னை பிடிக்கலை என்று சொன்னா என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை போல என பலவாறு யோசனையில் ஆழ்ந்தான்......அவனது யோசனையை கலைக்கும் விதமாக அவன் போன் அலறியது. போனை அட்டென்ட் செய்தவன், "சொல்லுடா கௌதம் என்றான்"........கௌதம்," என்னடா புது மாப்பிள்ளை என்ன பண்ற?... ரித்விக், "இருக்கேன்டா, இப்பதான் வீட்டுக்கு பால் காய்ச்சி குடி வந்து இருக்கோம். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடித்து உடன் இரண்டு மூன்று நாளில் நான் ஆபிஸ் வந்து விடுவேன். அதுவரைக்கும் நீ கொஞ்சம் பாத்துக்கோடா".......


கௌதம்," டேய் மச்சான், நீ இன்னும் ஒரு வாரம் கழிச்சு கூடவாடா பொறுமையா. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. ஆபீஸ் பத்தி நீ கவலை படாதே! நாங்க பார்த்துக்கிறோம். நல்லா என்ஜாய் பண்ணுடா. எப்ப பார்த்தாலும் வேலை வேலை என்று இருக்காதடா" என்றான்........ ரித்விக், "என்ஜாய் தான பண்ணிடுவோம்" என இழுத்தான்...... கௌதம்," என்னடா கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள என்னடா இவ்வளவு அலுத்துக்குற?"........ "அதெல்லாம் ஒன்னும் இல்லடா . நான் இன்னும் ரெண்டு நாளில் வந்துடுவேன். நேர்ல பேசிக்கலாம்" எனக் கூறி போனை வைத்து விட்டான்......சிறிது நேரம் கழித்து துயில் கலைந்து எழுந்த அவள் மணியை பார்த்தாள். அது ஏழு காட்ட வேகமாக எழுந்து குளியலறையில் புகுந்தாள். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தாள். அது அழுததால் சற்று வீங்கி சிவந்து இருந்தது. முகத்தை நன்றாக தண்ணீர் வைத்து கழுவி விட்டு வெளியே வந்தவள் சமையல் அறைக்குள் புகுந்து அங்கு இருக்கும் ஒவ்வொரு டப்பாவை திறந்து பார்த்தவள் கோதுமை மாவை கண்டாள். உடனே சப்பாத்தி சுட்டு குளிர்சாதன பெட்டியில் உள்ள காய்கறிகளை வைத்து குருமா செய்தவள் ரித்விக் அறைக்கதவை தட்டினாள்.....அறைக் கதவைத் திறந்த ரித்விக் அவளை ஒரு வித்தியாசமாக பார்க்க "சாப்பிட வா" என்றாள்.... ரித்விக்," எனக்கு பசிக்கல. சாப்பாடு வேண்டாம்" என்றான்..... இந்து, " இப்ப உனக்கு சாப்பாடு வேணாம்னா போ ஆனா இன்னைக்கு நீ சாப்பிடல இனிமே உனக்கு எப்பவும் நான் சேர்த்து சமைக்க மாட்டேன்". எனக்கு சாப்பாடு வீண் பண்ணுவது பிடிக்காது . அப்புறம் உன்னோட இஷ்டம்" எனக் கூறி டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்......இவ என்ன டிசைன் என்றே கண்டுபிடிக்க முடியலையே. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த பேச்சு பேசுனா. இப்ப சாப்பிட கூப்பிடுறா. சரி சாப்பாடு வாசம் வேற ஆளை தூக்குது. முதலில் சாப்பிடுவோம். அப்புறம் மத்ததெல்லாம் பார்த்துக்கலாம்......


இந்து , "என்ன யோசனை? வரியா? இல்ல நானே சாப்பிட வா?. சாப்பாடு வேற இன்னைக்கு நல்லா இருக்கு".... ரித்விக் வேகமாக சென்று சாப்பிட ஆரம்பித்தான்.........ரித்விக், " இந்து உண்மையிலேயே நீ தான் சமைச்சியா? இல்ல ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியா?.... இந்து முறைத்தாள் ரித்விக்," இல்ல சாப்பாடு ரொம்ப அருமையா இருக்கு. அதான் கேட்டேன்"... அவள் மேலும் முறைக்க அவன் சிரித்து விட்டு சாப்பாட்டை சாப்பிடத் தொடங்கினான். ரித்விக் ஒரு நிமிஷம் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.....என்ன என்பது போல் பார்த்தான் ரித்விக்.....


ரித்விக்," நீ அங்க இருக்க ரூம்ல தூங்கிக்கோ. நான் இந்த ரூம்ல தூங்கிக்றேன். நீ என்கிட்ட மனைவி என்கிற எந்த உரிமையையும் எடுத்துக்க கூடாது. என்னோட அனுமதி இல்லாமல் நீ என்னை தொடக்கூடாது. மீறி ஏதாவது பண்ணா நான் உன்கூட இருக்க மாட்டேன். வெளி உலகத்துக்குத் தான் நாம கணவன் மனைவி. இதுக்கெல்லாம் ஒகேன்னா சொல்லு. நான் உன்கூட இருப்பேன்"......


ரித்விக் ஆச்ரியத்துடன் ஒரு பார்வை பார்த்து சரி என்பது போல் தலை அசைத்தான்...... இருவரும் தனித்தனி அறையில் உறங்கச் சென்று விட்டனர்......அதிகாலையில் வேகமாக எழுந்து குளித்து முடித்தவள் சமையலறைக்குள் புகுந்து காபி போட்டு் குடித்தாள். ரித்விக் ரூம் கதவை பார்த்தாள். அது திறக்கவே இல்லை. சரி ரொம்ப டயர்டா இருப்பான் போல அதான் இவ்வளவு நேரம் தூங்குறான். அப்புறம் அவனை எழுப்பலாம் என்று நினைத்தவள் சமையல் முடித்தாள்.....மணி ஒன்பதைத் தாண்டியது. இதுக்கு மேல விட்டா இவன் சாயங்காலம் தான் எழுவான் போலயே என நினைத்தவள் அவனது ரூம் கதவை தட்டினாள். சில நிமிடங்களுக்கு பிறகு திறந்தவன்," ஏய் ராட்சசி எதுக்குடி இவ்வளவு சீக்கிரம் வந்து எழுப்புற?".... இந்து," மணி பத்து ஆக போகுதடா. சரி நானும் நீயா எழுந்திருப்ப என்று பார்த்தா நீ என்னன்னா சாயந்திரம்தான் எழுந்திருப்ப போலையே. நேற்று முழுவதும் ஷாப்பிங் போகணும் போகணும் என்று புலம்பிட்டு இன்னைக்கு இழுத்துப்போட்டு தூங்கிட்டு இருக்க"....... ரித்விக்," ஐயோ! மறந்துட்டேனே. சரி சரி வெயிட் பண்ணு பத்து நிமிஷத்துல கிளம்பி வரேன்" எனக்கூறி குளியலறை புகுந்தான்......சில நிமிடத்தில் கிளம்பி வந்தவன், "இந்து சாப்டீயா? நாம வேணா ஹோட்டல் போய் சாப்பிடுவோமா?.... இந்து," ஒன்னும் வேணாம். நானே சமைச்சுட்டேன். நீ சாப்பிட்ட உடனே நாம கிளம்பலாம்" என்றாள். அவனும் சரி என தலையாட்டி சாப்பிட அமர்ந்தான். சாப்பிட்டவுடன் இருவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பினார்கள்......


இருவரும் காரில் ஏறியவுடன்
ரேடியோவை ஆன் செய்தான் ரித்விக்.

"காதல் வந்துருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்.
பாலும் பழமும் தேவையில்லை
தூக்கம் இல்லை "......என பாடல் ஒலிக்க ரித்விக்கும் சேர்ந்து பாடினான் இந்துவை பார்த்தவாரே. வெளியே வேடிக்கை பார்த்தவள் அவனது பாட்டை கேட்டு திரும்பி அவனை முறைத்தாள். ரித்விக்," ஏன் இந்து? இந்த பாட்டு நல்லா இல்லையா? மாமா வேணா வேற பாட்டு பாடவா?".... இந்து," என்னது மாமாவா?"..... ரித்விக்," என்னடி? புருஷன எல்லாரும் மாமான்னு தான் கூப்பிடுவாங்க. நான் எது சொன்னாலும் ஏதோ வித்தியாசமான விலங்க பார்க்கிற மாதிரி பார்க்குற?. அதை முதல்ல நிப்பாட்டு. நீ என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்த மாதிரி ரியாக்சன் கொடுத்துட்டு இருக்க?".........இந்து, " டேய் நான் எதாவது சொல்றதுக்குள்ள பாட்டை நிறுத்து...... ரித்விக்," விட்டா அடிச்சுடுவா போலயே. புருஷன்னு ஒரு மரியாதை கொடுக்கிறாளா? இருக்கட்டும் இவளை சாரதா அத்தைகிட்ட போட்டுக் கொடுக்கணும். இல்ல இல்ல பாட்டி கிட்ட சொன்னா தான் கரெக்டா இருக்கும்" என புலம்பிக்கொண்டே ரேடியோ ஆப் செய்தான்.....இந்து," என்ன சொன்ன? சத்தமா சொல்லு. ரித்விக்," அட ஒன்னும் இல்லம்மா. பாட்டு வெளியே பாடினால் தான் உனக்கு பிடிக்கலை. அதான் மனசுக்குள்ளே பாடினேன். இனிமே அதையும் பண்ணல ஏன் வாய கூட திறக்கல".... இந்து," குட் பாய் இதே மாதிரியே பேசாம கடைக்குப் போ" என்றாள். அவன் சிரித்து தலையாட்டிவிட்டு வண்டி ஓட்டுவதில் கவனமானான்.......


கார் அந்த பல அடுக்கு மாடிகளை கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்குள் நுழைந்தது. வண்டியை பார்க் பண்ணிவிட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர். ரித்விக் வீட்டிற்கு தேவையான பொருட்களின் லிஸ்ட்டை இந்துவிடம் கொடுக்க இருவரும் பல மணிநேரமாக பல மாடிகள் ஏறி இறங்கி தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். ஒருவழியாக வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி விட இந்து எனக்கு பசிக்கிறது என்றாள்......இருவரும் அந்த மாலில் உள்ள ஒரு ஓட்டலில் புகுந்து மதிய உணவை முடித்தனர் . ரித்விக் சாப்பிட்டவுடன்," வா வீட்டுக்கு கிளம்பலாம்" என அழைக்க..... இந்து," வீட்டிற்கு தேவையான திங்ஸ் வாங்கியாச்சு. எனக்கு கொஞ்சம் டிரஸ் அண்ட் திங்ஸ் வாங்கணும்" என்றாள். ரித்விக், "இப்பவே கால் ரொம்ப வலிக்குதுடி. வா வீட்டுக்கு போலாம். இன்னொரு நாள் வந்து உனக்கு வாங்கிக்கலாம்".......


இந்து," நானா ஷாப்பிங் போகலாம்னு கூப்பிட்டேன்? நீ தானா கூப்பிட்ட. இன்னொரு நாள் எல்லாம் வேண்டாம். டுயூட்டி ஜாயின் பண்ணிவிட்டா ரொம்ப பிஸி ஆயிடுவேன். அதனால இன்னைக்கே வாங்கணும் என்று நடந்தாள்....


அவள் பின்னே நடந்தவன்,"கடவுளே! இனிமே இவளை ஷாப்பிங் மட்டும் கூப்பிடவே மாட்டேன்" என புலம்பிக் கொண்டு நடந்தான்.......அவள் சுடிதார் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து தனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தாள். ரித்விக்கிற்கு போன் வரவே," இந்து நான் போய் போன் பேசிட்டு வரேன். நீ இங்கேயே ஏதாவது செலக்ட் பண்ணு" என கூறி போனை காதில் வைத்துக் கொண்டு சென்றான்......தூரத்திலிருந்து இந்துவை பார்த்த ரோஹித் இந்துவிற்கு கைகாட்ட கூட்டத்தில் அவனை கவனிக்கவில்லை. கூட்டத்தை விலக்கி அவள் அருகில் வந்தவன் இந்து என அழைக்க அவனைப் பார்த்த ஒரு நொடி அதிர்ச்சியானவள், " நீயா? துரோகி. உன்ன தான் என்கிட்ட பேசாதே என்று சொன்னேன் இல்ல. எதுக்கு இப்ப நீ வந்த?" என்றவள் அங்கிருந்து நகர முற்பட்டாள்....
அவன் அவளது கையை பிடித்து நிறுத்தி "நான் சொல்றத ஒரு நிமிஷம் முதலில் கேளு டி" எனக் கூறினான்..... இந்து," நீ முதலில் என் கைய விடு" என பல்லை கடித்துக்கொண்டு கூற, அவன் "நான் சொல்றத நீ கேட்டா தான் நான் கையை விடுவேன்" என அடம் பிடித்தான்....... ரித்விக் தூரத்திலிருந்து இதை கவனித்து விட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்தான்.....

வண்ணங்கள் மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (11)

அருகில் வந்த ரித்விக் ரோஹித் சட்டையை பிடித்து ஏய் என்ன ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்து கொள்வாயா?...என அடிக்க பாய்ந்தான். ரோஹித் இந்துவின் கையை விடுவித்தான். இந்து வேகமாக ரித்விக் கையை பிடித்து இழுத்து வா போகலாம் என இழுத்துச் சென்றாள். ரித்விக் அவன் தான தப்பு பண்ணான். நீ என்னை இழுத்துட்டு வர்ற?.... என்கிட்ட மட்டும் அவ்வளவு வாய் பேசற? அங்க அவன் கையை பிடித்து இழுக்கும்போது பேசாம வாய மூடிட்டு இருக்க. அறிவில்லயா உனக்கு?. யார் அவன்?.... உனக்கு தெரிஞ்சவனா?. எதுக்கு உன் கைய புடிச்சு இழுக்குறான். இந்து வாயை திறக்காமல் அப்படியே அவனையே பார்த்தாள்......"பதில் சொல்லுடி. நீ என்ன ஊமையா? என்று திட்டினான்.....


இந்து,"நான்தான் அன்னைக்கே உன் கிட்ட சொன்னேன்ல. என் சொந்த விஷயத்தில் எதிலேயும் நீ தலையிடக் கூடாதுனு சொன்னேன்ல?. ரித்விக், அவளை அடிக்க தன் கையை ஓங்கி," பல்லை உடைச்சிடுவேன். எதுடி உன் சொந்த விஷயம்? பப்ளிக் ப்ளேஸ்ல அவன் உன் கையை பிடித்து இழுத்தப்ப நான் அவனை என்ன என்று கேட்க கூடாதா?. உங்க அப்பா அம்மா என்னை நம்பி தான் உன்னை இங்க விட்டுட்டு போய் இருக்காங்க. நாளைக்கு உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் தான் பதில் சொல்லணும்" எனக் கூறி வேகமாக கார் பார்க்கிங்கிற்குச் சென்றான்.........
அவன் தன் கார் அருகே சென்று காரின் முன்பகுதியில் தன் கையால் ஓங்கி குத்தினான். அவன் கைகளில் இருந்து ரத்தம் வழிந்தது. பின்னே வந்த இந்து, "ரித்விக் நான் சொல்றதை கேளு" என தொடங்க ரித்விக், வாயை மூடுடி, எதுவும் பேசாத போய் காரில் ஏறு எனக்கூறி கோவமாக காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தவன் தன் கோபம் முழுவதையும் கார் மீது செலுத்தினான்......
வீட்டிற்குள் வந்தவுடன் கீழே இறங்கி வேகமாக காரின் கதவை சாத்திவிட்டு உள்ளே நுழைந்தவன் தன் அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டான். அவன் பின்னே நுழைந்தவள் முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் அறைக் கதவை தட்டினாள். இந்து," ரித்விக் கதவைத் திற. ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளு ப்ளீஸ்"......
சில நிமிடத்துக்கு பிறகு கதவை திறந்து விட்டு உள்ளே சென்று அமர்ந்து விட்டான். அவன் பின்னே நுழைந்தவள் மருந்து
இடுவதற்காக அவன் கையை இழுக்க அவன் கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான். மீண்டும் கையை அவள் எடுக்க அவன் இழுக்க அவள் முறைத்தாள். அவன் கையை அவளிடம் கொடுத்தான். அவன் கையில் மருந்து வைத்துவிட்டாள்......
இந்து," ரித்விக் உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? அவன் என்னோட க்ளோஸ் பிரண்ட். காலேஜ்ல ஒண்ணா படிச்சோம். நல்ல பையன். எனக்கு பிரதர் மாதிரி. அவளுடைய தங்கச்சி இப்பதான் காலேஜ் படிக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். அவனோட தங்கை மாதிரி நான் இருப்பேன் என்று அவன் சொல்லுவான். அதனால் அவனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும் . இப்பகூட அவனோட ஹாஸ்பிடல்ல தான் நான் வேலை பார்க்கிறேன். அவன் என்னோட கல்யாணத்துக்கு வரலை என்று தான் ஒரு சின்ன சண்டை. அவன் கூட பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். அதான் என் கையை புடிச்சான்" என விளக்கம் அளித்தாள்.....
அவன் முகத்தை கோபமாக வைத்துக் இருக்க இந்து," மூஞ்சிய கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சாதான் என்னவாம்?".... எனக் கூற அவன் மெலிதாக புன்னகைத்தான். அவளும் அவனை பார்த்து புன்னகைத்தாள்......இந்து," சரி நான் போய் சாப்பாடு செய்கிறேன்" என்றவளை இழுத்து கட்டிலில் அமரவைத்தவன்......"சாரி நானும் அப்படி பிகேவ் பண்ணி இருக்க கூடாது. அவன் யார் என்று கேட்டு இருக்கணும். அவன் கிட்ட சாரி கேட்க வா?"..... இந்து," இல்ல நான் பார்த்துகிறேன்....... ரித்விக்," நீ சமைக்க வேண்டாம். நாம ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இன்னைக்கு முழுவதும் ஷாப்பிங் போய் நீ ரொம்ப டயர்டா இருப்ப"........
இந்து," இல்ல பரவாயில்ல. அரை மணி நேரத்தில் நான் சமைத்துடுவேன் என மீண்டும் எழுந்தாள். ரித்விக்," நீ சொல்றதை கேட்க மாட்டியா?. உட்காரு" என கட்டளை இட அவளும் சரி என தலை அசைத்து அமர்ந்து விட்டாள்......அவன் போன் மூலம் அவர்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்தான். இந்து," ரித்விக் நான் போய் ப்ரெஷ்ஷாகிட்டு வரேன் என எழுந்து தனது அறைக்குச் சென்ற சில நிமிடங்களில் வெளியே வந்து ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க தொடங்கினாள். காலிங்பெல் ஒலியைக் கேட்டு எழுந்து கதவைத் திறந்தவள் ஆடர் செய்த உணவு வரவே அதை பெற்றுக்கொண்டு ரித்விக் ரூம் கதவை தட்டினாள்........அவன் வரவே இருவரும் சாப்பிட அமர்ந்தனர். ரித்விக் கையில் அடிபட்டு இருக்க அவன் கரண்டி மூலம் சாப்பிட முயற்சித்து அது முடியாமல் போனது. இதை கவனித்தவள் அவனிடமிருந்து கரண்டியை வாங்கி வைத்துவிட்டு ஊட்டத் தொடங்கினாள். அவள் உணவை அவன் வாய் அருகே கொண்டு செல்ல சில நிமிடம் அவன் அவளை பார்க்க இந்து," வாயை திற" என்றாள்.அவன் எதுவுமே கூறாது வாயை திறந்து சாப்பிட துவங்கினான்......இந்து , "நான் நாளையிலிருந்து ஹாஸ்பிட்டலுக்கு போகலாம் இருக்கேன்"........ ரித்திக்,"நல்ல விஷயம் தான். "நீ எப்படி போகப் போற?" என்று கேட்டான்...... அந்த வீட்டில் இருக்கும் போது பக்கத்தில் தான் நடந்தே போய் விடுவேன். ஆனால் இப்ப பஸ்ல தான் போகணும்.....
ரித்விக்," எதுக்கு பஸ்லே போகணும்? நான் எதுக்கு இருக்கேன்? நான் டெய்லி உன்னை ட்ராப் பண்றேன்" என்றான்..... இந்து, "வேணாம் உனக்கு எதுக்கு சிரமம். நானே மேனேஜ் பண்ணிக்கிறேன்"......ரித்விக், "இதில் என்ன சிரமம்? உன்னை ட்ராப் பண்றதை விட வேற வேலை எனக்கு என்ன? முதல்ல சொல்றத கேட்டு பழகு இந்து" என்றான்...... அவள் சரி என்று தலையை அசைத்தாள்......அதிகாலையில் வேகமாக எழுந்தவள் சமையலை முடித்து விரைவாக புறப்பட தயாரானாள். ரித்விக்கும் கிளம்பி விட இருவரும் சாப்பிட்டு விட்டு காரில் புறப்பட்டனர். கார் ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன் சென்று நின்றது. காரிலிருந்து இறங்கியவள் அவனுக்கு சின்ன தலையைசைப்பை கொடுத்து விட்டு புறப்பட எத்தனிக்கையில் ரித்விக்," இந்து" என்று அழைத்தான்.......


அவள் தலையை திருப்பி புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவ ரித்விக் "எத்தனை மணிக்கு முடியும்?"என்றான்..... அவள் தன் ஐந்து விரல்களை காட்ட அவன் சரி என தலை அசைத்து சிறிய புன்னகையை பரிசளித்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்ய சரியாக ரோகித் கார் மருத்துவமனைக்குள் நுழைந்து. அவனை பார்த்து காரை விட்டு ரித்விக் கீழே இறங்கி வர ரோஹித்தும் காரை விட்டு கீழே இறங்கி வர இந்து அவனை முறைத்துக் கொண்டே வந்தாள்....வண்ணங்கள் மிளிரும்....
 

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....


வண்ணம் - (12)


ரித்விக்," ரோஹித் சாரி. நேத்து நீங்க யாரு என்று தெரியாம பேசிட்டேன்" என தனது கையை கொடுத்தான்.... ரோஹித், "பரவாயில்ல தெரியாம தானே பேசினீங்க. அத விடுங்க"...... ரித்விக்," நீங்க ஏன் கல்யாணத்துக்கு வரவே இல்ல?"..... ரோஹித்,"வீட்டுல ஒரு சின்ன பிரச்சனை. அதான் வர முடியாத சூழ்நிலை".... ரித்விக், "நீங்க கண்டிப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும் "......ரோகித்,"நான் வராமலா? கண்டிப்பா வரேன்"..... ரித்விக்," சரி நான் போயிட்டு வரேன் எனக்கு டைம் ஆயிடுச்சு"...... அருகில் இருந்த இந்து இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்தாள்.......ரித்விக் புறப்படவே இந்து ஹாஸ்பிட்டல் உள்ளே நுழைந்தாள். அவள் பின்னே ரோஹித் நுழைந்தான். அவள் டாக்டர் இந்து எம்.பி.பி.எஸ் கார்டியாலஜிஸ்ட் என்ற அறைக்குள் நுழைந்து தனது சீட்டில் அமர அவள் பின்னே வந்த ரோகித் அவளுக்கு எதிரே இருக்கும் சீட்டில் அமர்ந்தான்...... ரோஹித்," பாப்பா நான் சொல்றதை கொஞ்சம் கேளு ப்ளீஸ்...... இந்து, "நான் உன்கிட்ட எத்தன தடவ சொன்ன? எப்படியாவது கல்யாணத்தை நிறுத்து என்று. நான் சொல்றப்போ எல்லாம் தலையை தலையை ஆட்டிட்டு கடைசி நேரத்தில் காலை வாரிட்ட"....ரோஹித்," என்ன ஒரு நிமிஷம் பேசவிடு".... இந்து, " நீ பேசாத வெளியே போ"...... வேகமாக எழுந்து இந்துவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஐ.சி.யூ வின் முன்னால் நிறுத்தினான்......ரோகித்," உள்ளே யார் இருக்கா என்று பாரு".... இந்து அறையை எட்டிப் பார்த்து " "புவனா அம்மா" என்றாள்...... இந்து "ரோஹித் அம்மாக்கு என்ன ஆச்சு? எதுக்கு ஐ.சி.யூ வில் அட்மிட் பண்ணி இருக்காங்க? சொல்லுடா"......" உன் கல்யாணத்து அன்னைக்கு நான் கிளம்பிட்டு தான் இருந்தேன். அப்போது அம்மாவுக்கு திடீர்னு நெஞ்சு வலி வந்துடுச்சு அதனால தான் வர முடியல".....இந்து," சாரிடா நீ ரொம்ப கஷ்டத்துல இருந்துருப்ப. நான் வேற உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். அம்மாவுக்கு இப்போ உடம்பு எப்படி இருக்கு? ரிப்போர்ட் எங்க இருக்கு?. காட்டு நான் பார்க்கணும்"........ "இப்ப பரவாயில்ல டாக்டர் நான்சி கிட்ட தான் இருக்கு. அவங்க கிட்ட பேசிக்கோ"...... "சரி நீ சாப்டியா?"..... ரோஹித்," இல்ல பாப்பா "......இந்து ,"உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன் . கரெக்டான நேரத்துக்கு சாப்பிடலனா உடம்பு கெட்டுப் போயிடும் எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்திருக்க ஆனால் குழந்தை மாதிரி உன்னை யாரையாவது கவனிக்கணும். சரி வா சாப்பிடலாம்" என அவனை கேண்டீனுக்கு இழுத்து சென்றாள்......அவளே சென்று சாப்பாடு வாங்கி வந்து அவனை அமரவைத்து அருகிலேயே அமர்ந்து அவனை சாப்பிட வைத்தாள். ரோகித், "இந்து நீ ஏன் கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன? ரித்விக்கை பார்த்தா ரொம்ப நல்ல பையன் மாதிரி தெரியுது. நேத்து உனக்கு ஒன்னு என்றவுடனே எப்படி துடித்து போய் விட்டான். நீ ஏன் அவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைக்கிற? உனக்கு அவனை பிடிக்கும் என்றுதான் நினைக்கிறேன்".... இந்து ,"ரோகித் நான் எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் நீ அதை நம்புறீயா?"........ அவன் தலையை ஆட்ட இனிமே இந்த விஷயத்தை பத்தி பேசாத என்றாள்..... அவன்," சரி நீ எது செய்தாலும் கரெக்டாதான் இருக்கும். சரி வா போகலாம் டைம் ஆயிடுச்சு" என இருவரும் மருத்துவமனைக்குள் புகுந்தனர்......

அந்த பங்களா போன்ற வீட்டின் முன் வெள்ளை வேட்டி கட்டிய தொண்டர்கள் இருபுறமும் நின்று தலைவர் வாழ்க! தலைவர் வாழ்க! என கோஷமிட நவீன கார் வழுக்கிக் கொண்டு வந்து அந்த வீட்டின் முன் நின்றது. அந்த காரில் இருந்து இறங்கி தொண்டர்களைப் பார்த்து கையசைத்து விட்டு சிறிய புன்னகையை உதிர்த்துவிட்டு உள்ளே நுழைந்தார் மினிஸ்டர் சதாசிவம்.......வெள்ளை வேட்டி சட்டை, மாநிறம் நெற்றியில் திருநீறு கீற்று. ஆங்காங்கே தெரிந்த வெள்ளை முடி அவரை வயதானவரை போல காட்டியது. மொத்தத்தில் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரது பி.ஏ" சார் உங்கள பார்க்க கமிஷனர் அபிஷேக் வந்திருக்காரு. உள்ளே வர சொல்லவா?" ..... அவர்," வர சொல்லு" என தலையசைத்தார்.......உள்ளே நுழைந்த அபிஷேக் சதாசிவத்திற்கு சல்யூட் அடித்தார் . சதாசிவம்," இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. என் பையன் செத்து எத்தனை நாள் ஆச்சு?. இன்னும் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ஒத்த பிள்ளை அவனை நான் எப்படி எல்லாம் பாராட்டி சீராட்டி வளர்த்தேன் என்று தெரியுமா?. ஆசைப்பட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து அவனை கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்த்தேன். ஒரு தூசி கூட அவன் மேல் படாம பார்த்துக்கிட்டேன் . ஆனால் அவனை கொலை பண்ணிட்டாங்க . எப்படி எல்லாம் துடிச்சானோ? தெரியலையே! என் கொலையே பதறுது. உங்ககிட்ட சொன்னதுக்கு என் ஆளுங்களை இறக்கிவிட்டு இருந்தா இந்நேரம் யார் என்று கண்டுபிடித்து கொலையே பண்ணி இருப்பாங்க"......அபிஷேக்," நாங்க தனிப்படை அமைத்து தேடிட்டு தான் இருக்கோம். சீக்கிரமா கண்டுபிடித்து விடுவோம்".......சதாசிவம் "என்னையா இதையே சொல்லிட்டு இருக்க? எப்ப தான் நீ கண்டுபிடிப்ப?"..... என கூறி அருகில் இருந்த பூ ஜாடியை தூக்கி எறிந்தவர்," போய்யா முதல்ல அடுத்த தடவை வரும்போது குற்றவாளிகளோட தான் வரணும் இல்ல உன்ன"..... என பற்களை நறநறவென்று கடித்தார்......மீண்டும் சல்யூட் அடித்துவிட்டு வெளியே வந்த அபிஷேக் காரின் அருகில் சென்று டயரை எட்டி உதைத்து ஷிட் இவ்வளவு படிச்சு வேலைக்கு வந்து இந்த நாய்க்கு நான் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு. இவன் பையன் பெரிய உத்தமன். அவ உயிரோட இருந்தா இன்னும் நாலு பொண்ணுங்க வாழ்க்கையைச் சீரழித்து இருப்பான். மினிஸ்டர் சதாசிவம் உனக்கு இருக்கு .சீக்கிரமே உன் பதவியை காலி பண்ணுறேன் எனக்கு கறுவிக் கொண்டு வண்டியில் ஏறினான்.....
ரித்விக் எஸ்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ஆபீசுக்குள் நுழைந்தான் கௌதம் வாசலிலேயே அவனுக்கு மாலை அணிவித்து ,"வாங்க புது மாப்பிள்ளை என வாழ்த்துக்கள்" எனக்கூறி வரவேற்க அலுவலகத்தில் உள்ள அனைவரும் வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர்.......ரித்விக் அனைவருக்கும் நன்றி கூறி தனது அறைக்குள் நுழைந்தான்....கௌதம்," மச்சான் இந்த பைலை பாரு. இது தான் நமக்கு கிடைச்ச புது ஆர்டர். ஆர்.கே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு புதுசா ஒரு லேப் கட்டணும். இந்த டெண்டர் நமக்கு கிடைச்சிருக்கு. இப்போதைக்கு இதுதான் நியூ பிராஜக்ட். ஆல்ரெடி வேலையை தொடங்கியாச்சுடா. நீ கல்யாண விஷயமா பிஸியா இருந்த. அதான் நானே முடிவு பண்ணிட்டேன்"..... ரித்விக் ,"ஓகேடா நீ பண்ணுனா கரெக்டா தான் இருக்கும்".....
கௌதம்," சரி மச்சான் நீ போ சைட்ட ஒரு தடவை பார்த்துவிட்டு வந்துருடா".....ரித்விக் இந்த ஹாஸ்பிடல் நேம் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என என சிந்திக்க அவனது இதழ் தானாகவே விரிந்தது. கௌதம்," என்னடா சிரிக்கிற?".... ரித்விக் "இதுதான் இந்து ஒர்க் பண்ற ஹாஸ்பிடல்"...... கௌதம்," ஓகே ஓகே வீட்டில ரொமான்ஸ் பண்ணுவது பத்தாது என்று இனிமே வேலை பாக்குற இடத்துலயும் ரொமான்ஸ் தான் போலயே"....... ரித்விக் சிரித்துவிட்டு," சரி டைம் ஆச்சு நான் போய் சைட்ட பாத்துட்டு வரேன்"...... கௌதம்," சைட் பார்க்க போறியா? இல்ல சைட் அடிக்க போறியா?"......... ரித்விக்," ஏன்டா நீ வேற?. அப்புறம் எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் மதியத்துக்கு மேல தான் ஆபீஸ் வருவேன்" என கூறி தனது காரில் புறப்பட்டார்......இந்து மதிய உணவிற்காக தனது டிபன் பாக்ஸைத் தேட அதைக் காணவில்லை. அவள் அறைக்குள் நுழைந்த ரோகித்," என்ன பாப்பா என்ன தேடுற?".... இந்து, "இல்லடா என் டிபன் பாக்சை காணோம்"....... ரோஹித்," அது எங்க இருக்கு என்று எனக்கு தெரியும் "......என அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்......அந்த அறைக்குள் இருவரும் நுழைய டேபிளில் உணவு மட்டும் இருந்தது. அறை முழுவதும் துலாவ யாரும் இல்லை. பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்தவளை பார்த்து வேகமாக சென்ற இந்து," சுஷ்மி. எப்படி இருக்க".... என கட்டி அணைத்தாள் சுஷ்மி அவள் கையை தட்டிவிட்டு," உனக்கு இப்பதான் நான் கண்ணுக்கு தெரியுறனா?. கல்யாணத்து அன்னைக்கு பார்த்தது. அப்புறம் ஒரு போன் கூட பண்ணல".......இந்து அவளது கன்னத்தை கிள்ளி," ஐயோ! சாரி கொஞ்சம் பிஸியாக இருந்தேன். அதான்" என்றாள்...... அவள் கோபமாக," போடி ரித்விக் வந்த உடனே நீ என்ன மறந்துட்ட. காலைல இருந்து ஒரு தடவையாவது வந்து பார்த்தாயா?. டிபன் பாக்சை காணோம்னா மட்டும் என்ன தேடி வந்து இருக்க?"......" சரி சரி கோபப்படாதே! செல்லக்குட்டி வா சாப்பிடலாம்" என அவளையும் ரோஹித்தையும் அழைத்துக்கொண்டு கேண்டீனுக்குள் புகுந்தாள்.....

வண்ணங்கள் மிளிரும்......
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....


வண்ணம் - (13)

இந்து, சுஷ்மி,ரோஹித் மூவரும் கேண்டீனில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தனர்..... அந்த நேரம் சரியாக ரித்விக்கின் கார் உள்ளே நுழைந்தது. இந்து எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்க்க அவனது காரை கண்டு இவனா? இவனை ஈவ்னிங்தானா வர சொன்னேன்? இப்பவே வந்து இருக்கான்......என நினைக்க ரித்விக் அதற்குள் காரை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் வந்தவன் அருகிலிருக்கும் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து," ஹாய் ரோஹித், ஹாய் வாலு" என்றான்........இந்து," ரித்விக் இப்ப எதுக்கு வந்த?. உன்ன நான் ஈவினிங் தான வர சொன்னேன்?".... ரித்விக்,"உங்க ஆஸ்பிட்டலில் எம்.டி போஸ்டிங் காலியாக இருக்காமே! அதான் இன்டர்வியூக்கு வந்தேன்" எனக் கூற ரோஹித்தும் சுஷ்மியும் சிரித்தனர்.
இந்து ரித்விக்கை முறைத்தாள்........ரித்விக் சிரித்துவிட்டு," சரி சரி முறைக்காத. எங்க கம்பெனி தான் புதுசா லேப் கட்டுற டெண்டரை எடுத்து இருக்காங்க. அது எனக்கே இப்பதான் தெரியும். அதான் சைட் பார்க்க வந்தேன்".........


சுஷ்மி,"சைட் பார்க்க வந்தியா? இல்ல இந்துவை பார்க்க வந்தியா?"....... ரித்விக், "உன் வாய் இருக்கே...... என கூறி அவளது மூக்கை பிடித்து ஆட்டினான். சுஷ்மி," இந்து இத்தனை நாள் நீ என்கிட்ட பேசாமல் இருந்ததற்கு உனக்கு தண்டனை நீதான் பில் கட்டனும்"...... இந்து," கட்டிட்டா போச்சு"...........


சுஷ்மி," சரி வேணா வேணா. நீ இன்னைக்கு வேணாம், நாளைக்கு நீ கட்டு. ரித்விக் நீ இன்னைக்கு பில் கட்டனும்" எனக் கூற அவன் தனது கிரெடிட் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான்......ரோஹித்," ஏய் இதே வேலையா தான் திரியுறயா டி".......ரேஷ்மி," உனக்கு என்னடா? உன் வேலைய மட்டும் பாரு"...... இந்து, " சுஷ்மி அப்புறம் சண்டை போடலாம். இப்போ டைம் ஆச்சு" என அவளை இழுத்துச் சென்றாள்......


ரோஹித்," ரித்விக் எஸ்.ஆர் கன்ஸ்ட்ரக்க்ஷன் உங்களுடையதா?"....... ரித்விக்," ஆமா, எனக்கு தெரியாது இது உங்க ஆஸ்பிட்டல் தான் என்று. எனிவே உங்க கூட சேர்ந்து வேலை பாக்குறது ரொம்ப சந்தோஷம்...... எனக்கு கூறி எழுந்தவன் சரி எனக்கு டைம் ஆயிடுச்சு நாளைக்கு பார்ப்போம்"..... எனக்கூறி வேலை நடக்கும் இடத்திற்கு சென்றான்.......
டாக்டர் நான்சி அறையில் இந்து," டாக்டர் நான்சி. புவனாம்மா ரிப்போர்ட்டை நான் பார்க்கலாமா?.. அவங்க கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு?"..... நான்சி," இப்போ பரவாயில்லை. மைல்ட் அட்டாக் தான். நீங்க பயப்படாதீங்க இன்னும் ரெண்டு நாள்ல அவங்கள நார்மல் வார்டுக்கு மாற்றிவிடலாம்" என கூறி ரிப்போர்ட்டை அவளிடம் அளித்தார். அதை பெற்றுக் கொண்ட இந்து ," நான்சி அவங்களை எப்ப பார்க்கலாம்?".......

நான்சி," இன்னைக்கு ஈவினிங் போய் பார்த்துக்கோங்க"..... இந்து," ரொம்ப நன்றி"...... நான்சி," பரவாயில்லை இந்து. இது என்னோட கடமை. அதைத்தான் நான் செய்றேன்". இந்து, "சரி நான் வரேன்".......
மாலை ஐந்து மணி ஆனவுடன் இந்துவை கூப்பிட அவளது அறைக்கு வந்தான் ரித்விக். அவளை காணாமல் தேட அந்த நேரத்தில் சரியாக உள்ளே நர்ஸ் வர ரித்விக்," சிஸ்டர் டாக்டர் இந்துவ பார்க்கணும்".....அந்த நர்ஸ்," டாக்டர் இந்து ரவுண்ட்ஸ் போய் இருக்காங்க. இப்ப வந்திடுவாங்க"..... ரித்விக்," ஓகே தேங்க்யூ. நான் பார்த்துக்கிறேன்" எனக் கூறி அவளைத் தேடி கொண்டு வந்தான்......ஒரு அறையில் பார்த்துவிட அதனருகே சென்று வாயிலில் நின்றான். அறையில் ஒரு சிறுமி படுத்திருக்க இந்து அவள் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தாள். அங்கேயே நின்று கவனிக்க ஆரம்பித்தான்.......
அச்சிறுமியின் பெயர் தியா." ஆன்டி நான் சீக்கிரமா செத்துடுவேனா?. எனக்கு பயமா இருக்கு ஆன்டி"..... இந்து," உனக்கு யார் அப்படி சொன்னது?"....." இல்ல ஆன்ட்டி அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் அழுதாங்க. நான் அதை பார்த்தேன். என்னோட ஹார்ட்ல ஓட்ட இருக்காமே! நான் சீக்கிரமா சாமிகிட்ட போயிடுவேனாமே?"..........


இந்து,"நீ குட் கேர்ளா? பேட் கேர்ளா?"... தியா," குட் கேர்ள் ஆன்ட்டி"..... இந்து," அப்போ இனிமே இப்படிப் பேசக்கூடாது. ஆன்டி பொய் சொல்ல மாட்டேன். நீ கண்டிப்பா சாக மாட்ட. உனக்கு எதுவுமே ஆகாது செல்லக்குட்டி" எனக் கூறி அவளது நெற்றியை இதழ் பதித்தாள்........தனது பையிலிருந்து ஒரு சாக்லேட்டை எடுத்து அவள் கையில் கொடுத்தாள். தியா இந்துவின் கன்னத்தில் இதழ் பதித்து, "தேங்க்யூ ஆன்டி" என்றாள்.......இந்து தன் பின்னால் யாரோ தன்னை பார்வையால் துளைப்பது போல உணர்ந்து திரும்பி பார்க்க, ரித்விக் ஒரு காலை தரையில் ஊன்றி கைகளை கட்டிக்கொண்டு அவளை ரசித்துக்கொண்டிருந்தான். திரும்பி பார்த்த இந்து அவனை நோக்கி தன் புருவத்தை உயர்த்தி என்னவென்று வினவ, ரித்விக் தனது வாட்சை காட்டினான்.......


இந்து," ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணு வந்துடுறேன்"...... ரித்விக் உள்ளே வந்து," ஹாய் பேபி" என்று கூறி அவள் கன்னத்தை கிள்ளினான்............


தியா," ஹாய் அங்கிள், யார் நீங்க?"..... அவன் கையை நீட்டி," இனிமே நீயும் நானும் பிரெண்ட்ஸ்?" என் பேரு ரித்விக்"........எனக் கூற அவள் சந்தோசமாக தனது கையை நீட்டினாள்." ஐ ஜாலி! எனக்கு ஃப்ரண்ஸே இல்லை. புது ஃபிரண்ட் கிடைச்சாச்சு" என குதித்தாள். ரித்விக் எனக்கு என தன் கன்னத்தை காட்ட அதில் முத்தமிட்டு,"நீங்க டெய்லி என்ன பார்க்க வரணும். ஆமா நான் உங்களை எப்படி கூப்பிட? " என தன் கையை முகத்தில் வைத்து யோசனை செய்ய இந்து ரித்விக் இருவருமே அவளது செயலில் சிரித்துவிட்டனர்.........ரித்விக் " நீ எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு பேபி" எனக்கூற ......தியா," நான் வேணா டார்லிங் என்று கூப்பிடவா?"..... ரித்விக்," டன் பேபி" எனக் கூறி அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.......


தியாவின் அம்மா உள்ளே வர இந்துவை பார்த்து," வாம்மா" என அழைத்தார்...... இந்து வாங்க என கூறி அவரை வெளியே அழைத்துச் சென்றாள்...... இந்து," உங்களை எத்தனை தடவை சொல்லி இருக்கேன். பாப்பா முன்னாடி அழுக கூடாது. எதுவும் பேச கூடாதுன்னு சொல்லி இருக்கேன். இனிமே அப்படி பண்ணாதீங்க. அவ ரொம்ப பயப்படுறா"..... அவர்,"சரிம்மா இனிமே பேசலை" எனக் கூறும்போது ரித்விக் அங்கு வந்து சேர்ந்தான்........


அவனைப் பார்த்த தியாவின் அம்மா "தம்பி யாரும்மா? உங்க வீட்டுக்காரரா?"....... இந்து ஆமென தலையசைத்தாள்.....அவர் ரித்விக்கிடம்," தம்பி இந்து ரொம்ப நல்ல பொண்ணுப்பா. என் பொண்ணுக்கு இதயத்தில் ஓட்டை இருக்குனு சொல்லிட்டாங்க. எங்களுக்கு வசதி இல்ல. பாப்பா தான் இந்த ஹாஸ்பிட்டலில் சேர்த்து பணம் கட்டி உதவி பண்ணுது. இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும் என்றார். நீங்க ரெண்டு பேரும் புள்ள குட்டியோட சந்தோசமா ஒற்றுமையா வாழணும்" என்று வாழ்த்த........... இந்து," சரிம்மா டைம் ஆயிடுச்சு. நாங்க கிளம்புறோம். தியா குட்டியை நல்லா பார்த்துக்கோங்க" எனக் கூறி இருவரும் விடைபெற்று காரை நோக்கி வந்தனர்.......


காரில் ஏறிய ரித்விக் வண்டியை ஸ்டார்ட் செய்யாமலே இந்துவையே பார்த்துக்கொண்டிருக்க இந்து," ரித்விக் ரித்விக்....." என அழைத்தும் பயனில்லை. தன் கைகளை அவன் முகத்திற்கு முன் அசைத்தாள். அவன் வேறு உலகத்தில் கனவு கண்டு கொண்டிருந்தான். அவன் தோளில் தட்டி," என்ன கனவா?" என்றாள். அவன் சிரித்து தலையசைத்துவிட்டு ஒன்றும் இல்லை எனக்கூறி காரை ஸ்டார்ட் செய்தான்.....


இருவரும் வீட்டிற்கு சென்ற பின் இந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு சமையல் செய்ய தொடங்கினாள். வேலைகளை முடித்துவிட்டு ரூம் கதவை தட்ட கதவைத் திறந்தவன் அவளைப் பார்த்து புன்னகைக்க இந்து," எதுக்கு சிரிக்கற".......... அவன் மீண்டும் புன்னகைக்க இந்து," இல்ல நீ ஒரு மார்க்கமா தான் இருக்க. ஈவினிங் ல இருந்து வந்து மந்திருச்சு விட்ட மாதிரிதான் சுத்துற. சரி சரி சாப்பாடு ரெடி வா சாப்பிடலாம்" என்றாள்.......


ரித்விக்," ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு வந்து விடுவேன்" என்றான். இந்து தலையசைத்துவிட்டு சாப்பாட்டை டேபிளில் எடுத்து வைத்தாள். பின்பு ஹாலில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள். சேனலை மாற்றிக் கொண்டே இருந்தவள் நியூஸ் பார்க்க ஆரம்பித்தாள். நியூஸ் பார்த்துக் கொண்டே இருந்தவள் திடீரென பதற்றமாகி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. உடம்பு முழுவதும் வியர்க்க சோபாவில் மயங்கி சரிந்தாள்.......பத்து நிமிடம் கழித்து கதவை திறந்தவன் அவளைத் தேட சோபாவை பார்த்தான் . அவள் படுத்திருப்பதை பார்த்தவன் இப்பதான என்ன சாப்பிட கூப்பிட்டா? அதுக்குள்ள தூங்கிட்டாளா? என கூறி கொண்டே அவள் அருகில் சென்றவன் அவள் முகத்தில் இருந்த வேர்வை துளியை பார்த்து விட்டு இந்து இந்து என முகத்தை தட்டி எழுப்ப அவளிடம் அசைவில்லை.......


அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க திடுக்கிட்டு விழித்தவள் ரித்விக்கை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவன் பதறி போய் ," இந்து என்ன ஆச்சு? ஏன் இப்படி அழுகுற?" என வினவ அவள் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்....... ரித்விக் ஆறுதலாக கட்டியணைத்து," பயப்படாத! நான் இருக்கேன்" எனக் கூறி அவள் தலையை தடவி விட்டு அவள் கண்ணீரை துடைத்து அருகில் இருக்கும் தண்ணீரை எடுத்து பருகுமாறு நீட்டினான். அவள் கைகள் நடுங்க அவனே அவளுக்கு நீரை புகட்டினான்......


அவள் சிறிது நேரத்தில் ஆசுவாசம் அடைந்தபின் ரித்விக்," இந்து என்னடி ஆச்சு? திடீர்னு உனக்கு?"....... அவள் பதில் ஏதும் கூறாமல் அவனையே வெறிக்க அவன்," சரி விடு சாப்பிடலாம் " என அவளை அழைத்துச் சென்று பரிமாறினான்........அவள் சாப்பிடாமல் அமர்ந்திருக்க அவளுக்கு ஊட்டிவிட்டான். இருவரும் சாப்பிட்டு முடித்தனர் . இந்து தயங்கியவாறே அறையின் வாயிலில் நிற்க அவளை கண்டவன் என்னவென்று வினவ இந்து," ரித்விக் இன்னைக்கு நான் உன் ரூம்லேயே தூங்கவா?"..... ரித்விக்," சரி வா" என அவளை அழைத்துச் சென்றான்........அவள் கட்டிலில் படுத்து அவள் மேலே விடட்த்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். ரித்விக் லேப்டாப்பில் தன் வேலையைத் தொடங்கியவன் திரும்பி இந்துவை பார்த்தான். அவளின் நிலையை கண்டவன் எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தவன் அவளின் தலையை தடவி இந்து," ஆர் யூ ஆல்ரைட்?" ...... என்றிட ஆம் என தலையசைத்தவள் தலையை அவன் மடியில் வைத்தாள். அவளது சிகையைப் கோதியவன் இந்து," உனக்கு என்ன பிரச்சனை என்று வாயை திறந்து சொன்னால் தான் சரி பண்ண முடியும். ப்ளீஸ் டீ வாயை திறந்து பேசுடி" என கெஞ்ச ஆரம்பித்தான்......இந்து மனதில் ரித்விக், "நான் உன்னை விட்டு விலகி போற காலம் நெருங்கிருச்சுன்னு நினைக்கிறேன்"என யோசித்தவன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அவளது கண்ணீரை பார்த்தவன்," சரி இனிமே நான் எதுவும் கேட்க மாட்டேன். நீ தூங்கு என அவளது கண்ணீரை துடைத்தவன் அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.......


அவள் அவனைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிதுநேரத்தில் அவள் உறங்கி விட அவன் அவளது தலையை கீழே எடுத்து வைத்து எந்திரிக்க முயல அந்த அரவத்தில் அவள் முழித்து விட்டாள். அவன் கையை இறுக்கமாக பிடித்து, "என்னை விட்டு போகாதே!" எனக் கூற அவன் ,"ஒரு நிமிஷம் லைட் ஆஃப் பண்ணிட்டு வரேன்" எனக் கூறியவன் எழுந்து லைட்டையும் தனது லேப்டாப்பை ஆஃப் செய்துவிட்டு வந்து அவளருகே அவளை அணைத்தவாறே படுத்து கொண்டான். அவள் அவனது நெஞ்சில் சாய்ந்து நன்றாக உறங்கி விட ரித்விக் தூக்கம் பறிபோனது. ரித்விக் மனதில், ஐயோ கடவுளே! என்ன பிரச்சனை என்று தெரியலையே. வாயை திறந்து சொல்ல மாட்றா? என்ன பண்றது என யோசித்தவன் சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்........


வண்ணங்களமிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
41
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
. வண்ணம் - (14)வழக்கம்போல் அதிகாலையில் வேகமாக எழுந்தவளின் தலை சுள்ளென்று வலித்தது. அப்போது தான் நேற்றைய நிகழ்வுகள் மனதில் தோன்ற அருகிலிருந்த ரித்விக்கை கவனித்தாள். நேற்று அவனின் செயல்களை நினைத்து அவளின் முகத்தில் புன்னகை அரும்பியது. சிறிது நேரம் அவன் உறங்கும் அழகை ரசித்தவள் எழுந்து குளியலறை புகுந்தாள்.......


வழக்கம்போல் சமையலை முடித்துவிட்டு பார்க்க அவன் ரெடியாக கிளம்பி வெளியே வந்தான். இந்துவை நோக்க நேற்று எதுவுமே நடவாதது போல் அவள் செயல்படுவது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது......


ரித்விக்," இந்து ஆர் யூ ஆல்ரைட்?" என்றிட அவள் பேச்சை மாற்றும் விதமாக "டைம் ஆச்சு நீ சாப்பிட்டால் நம்ம கிளம்பலாம்" என்றாள். ரித்விக் இதற்குமேல் இவளிடம் பேசுவதே வீண் என உணர்ந்தவன் சாப்பிட்டு கிளம்பினான்.....அவளை ஹாஸ்பிடல் முன் இறக்கிவிட்டு அவன் கிளம்ப தயாராக இந்து," ரித்விக் இன்னைக்கு ஈவினிங் கொஞ்சம் சீக்கிரம் வர்றீயா?"....." சீக்கிரம் என்றால்?".....இந்து, "ஒரு நாலு மணிக்கு " ........ ரித்விக்," இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அது எப்ப முடியும் என்று சொல்லமுடியாது. சரி நான் சீக்கிரம் வர முயற்சி செய்கிறேன்" எனக் கூறி அவன் காரில் பறந்து விட்டான்..பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் காலை வேளையில் சென்னை மாநகரத்தில் அமைந்து இருக்கும் அந்த உயர்தர ஓட்டலில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து தனது வாட்ச்சையும் அறை வாயிலையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். ஆறடிக்கு சற்று குறைவான உயரம். கரு கருவென்று சுருண்ட தலைமுடி. கழுத்தில் பார்ப்பவரை பயமுறுத்தும் அந்த தங்க செயின். ஐந்து விரல்களில் மோதிரம் . ஒரே நேரத்தில் ஐந்து பேரைக் கூட அடித்து சாய்க்கும் உடல்வாகு.....


அந்த ஓட்டலில் புகுந்தது அந்த உயர்தர கார். அதிலிருந்து இறங்கிய மினிஸ்டர் சதாசிவத்தை கண்ட ஓட்டல் மேனேஜர் ஓடிச்சென்று அவரை வரவேற்க ஓட்டலில் உள்ளே நுழைந்தவர் அந்த புதியவன் அமர்ந்து இருக்கும் அறையில் நுழைந்தார். அவரைப் பார்த்தவன் எழுந்து," வணக்கம் ஐயா " என்க அவர் பதிலுக்கு புன்னகைத்து பதிலாக அளித்து விட்டு அமர்ந்தார். சதாசிவம்," என்ன கஜேந்திரா எப்படி இருக்க?.....


"உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் ஐயா"....." நான் சொன்ன அந்த விஷயம் என்ன ஆச்சு?"....." ஐயா நாங்களும் தேடிட்டு தான் இருக்கோம். ஆனால்".... சதாசிவம்," என்ன ஆனால்?. ஒத்த பிள்ளையை கொன்னுட்டாங்க யாருன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும் . அவனை என் கையால கொல்லனும். இந்த போலீஸ் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. அதான் உன்கிட்ட சொன்னேன்...." ஐயா ஆளு யாருன்னு தெரிஞ்சா உடனே தூக்கி விடலாம். ஆனால் தம்பி விஷயத்துல ஆளு யாரு என்றுனே தெரியல . எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நாம வேணா டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் முயற்சி பண்ணலாம் ஐயா" என்றான்.....


சதாசிவம்," நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரத்துல என் பையன கொன்னவனைக் கண்டுபிடித்து தரவேண்டும்" என மிரட்டும் தொனியில் கூற கஜேந்திரன்," கண்டிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் நான் அவனை உங்க முன்னாடி நிறுத்துகிறேன்" எனக்கூற சதாசிவம்," சரி நான் வரேன் " என கூறி கிளம்பி விட்டார்.......


மாலை 4 மணி அளவில் ஹாஸ்பிடல் அடைந்த ரித்விக் இந்து அறையை நோக்கி சென்றான் . இந்து தனியே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க உள்ளே சென்றவன் அவள் எதிரில் அமர்ந்தான் இந்து," லேட் ஆகும் என்று சொன்ன? ஆனா கரெக்ட் டைம்க்கு வந்துவிட்ட?"..... ரித்விக்,
" நீ கூப்பிடு நான் வராமல் இருப்பேனா டார்லிங்?" என கூறி அவள் கன்னத்தை கிள்ள இந்து அவனை முறைத்தாள்.....அவளது பார்வையை கண்டு கொள்ளாதவன்," சரி என்ன இப்ப சாப்பிட்டு இருக்க? கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உடம்பு கெட்டு போயிடும். கரெக்டான நேரத்துக்கு சாப்பிட பழகு" என கடிந்து கொள்ள.......இந்து "இல்லடா இன்னைக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன். அதனாலதான் லேட் ஆயிடுச்சு. சரி நீ சாப்பிட்டீயா?"..... ரித்விக்," சாப்பிட்டேன். சரி எதுக்கு என்ன வேகமா வரச்சொன்ன?".....இந்து," ஒரு முக்கியமானவங்கள அறிமுகப்படுத்த தான்"......


சாப்பிட்டு முடித்தவள் கை கழுவிவிட்டு வா போகலாம் என அவனை அழைக்க அவனும் அவள் பின்னே சென்றான். அந்த அறைக்குள் நுழைய அங்கு ரோகித் அந்த பெண்மணியிடம் போராடிக் கொண்டிருந்தான்.......


ரோஹித்," அம்மா இன்னும் கொஞ்சம்தான் இருக்கு. இத மட்டும் சாப்பிடுங்கள்"..... அவர்," போதும்டா என்னாலை சாப்பிட முடியல..... ரோஹித் "சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னா நல்லா சாப்பிடுங்க . இல்ல இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பிட்டலில் தான் இருக்கணும்"....... அவர் "சரி குடு டா நீ எவ்வளவு கொடுத்தாலும் நான் சாப்பிடுறேன். ஆனால் என்ன சீக்கிரம் வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போடா. எனக்கு இந்த ஹாஸ்பிடல்ல பார்த்தாலே பயமா இருக்குடா" என்றவர் இந்துவை கண்டு விட அவள் ஓடிச்சென்று," புவனாமா" என அவரைக் காட்டிக் கொண்டாள். அவரும் அவளை கட்டிக்கொண்டு," இந்து குட்டி எப்படி இருக்க?. உன்ன பார்த்து எத்தனை நாளாச்சு . காலேஜ் முடிஞ்சு அதற்கு பிறகு வீட்டுக்கு வரேன் வரேன் என்று மட்டும் தான் சொன்ன?. ஆனால் ஒரு தடவை கூட அம்மாவை பார்க்க நீ வரலை. உன் மேல நான் கோபமா இருக்கேன்" என கூற........ அவள் அவரது கன்னத்தில் முத்தமிட்டு ,"என்னம்மா கோபப்படுகிற மாதிரி உங்களுக்கு நடிக்க கூட தெரியல" என கூற அவரும் புன்னகைத்து விட்டார்.......புவனா," இந்து தம்பி யாரு? உன் வீட்டுக்காரரா? வாங்க தம்பி உட்காருங்க என அவனை அமரச் செய்தார். மன்னிச்சுக்கோங்க தம்பி உங்க கல்யாணத்துக்கு வர முடியல" எனக் கூற அவன் அவரின் கையைப் பிடித்துக்கொண்டு," பரவாயில்ல அம்மா. உடம்பு தான் முக்கியம் . முதல்ல உங்க உடம்பை பாருங்க. இப்ப எப்படி இருக்கீங்க?"........" நான் நல்லா இருக்கேன் பா . இந்த ரோஹித் பையன் தான் என்னை வீட்டுக்கு விட மாட்றான்" என்றார்......


இந்து "ரோஹித் அம்மாவை இன்னைக்கு கூட்டிட்டு போயிடலாம்னு நான்சி சொல்லிட்டாங்க"..... ரோஹித்," ஆமா இந்து என்கிட்ட கூட சொன்னாங்க. அதான் அவங்க சாப்பிட்டதும் கூப்பிட்டு போகலாமென்று நினைத்தேன்" என்றான்........ புவனா,' அப்போ இன்னைக்கு வீட்டுக்கு போலாமா?. சரி இந்து தம்பியும் நீயும் என்கூட வீட்டுக்கு வாங்க" என்று அழைத்தார்......


இந்து ரித்விக்கை நோக்கினாள். அவன் தலையசைக்க அவர்கள் இருவரும் ரோஹித் இல்லம் நோக்கி கிளம்ப தயாரானார்கள். இந்து புவனாவின் காரில் ஏறி அமர்ந்துகொள்ள ரிக்விக்கை அவர்களின் காரை பின் தொடருமாறு கூறினாள்.......வீட்டிற்குள் நுழைந்தவுடன் ராமநாதன் "இந்து குட்டி வா வா" என அழைக்க ஓடிச்சென்று அப்பா என கட்டிக்கொண்டாள். ரித்விக்கை அழைத்து அவரிடம் அறிமுகப்படுத்தினாள். புவனாவின் ஆணைப்படி இருவரும் இரவு உணவை அங்கேயே முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்......


புவனா," இந்து தம்பியை அடிக்கடி வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்" எனக்கூற இந்து "கண்டிப்பா வரேன்மா" என உறுதி கொடுத்து விட்டு இருவரும் காரில் ஏறிப் புறப்பட்டனர் .......


வெகுநாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருந்த இந்து ரித்விகிடம் தன் கல்லூரி கால நினைவுகளை கூறிக்கொண்டே வந்தாள். சிறிது நேரத்தில் அவனது தோளில் சாய்ந்து உறங்கிவிட காரை நிறுத்தியவன் அவள் உறக்கம் கலையாதவண்ணம் அவளை தூக்கிக் கொண்டு கதவருகே சென்று கதவைத் திறந்தவன் அவளது ரூமில் அவளை படுக்க வைத்து கதவை லாக் செய்தான்......


அவனது ரூமை திறக்க போக தன் பின்னால் ஒரு உருவம் தன்னை நோக்கி வருவதை நிழல் மூலம் கண்டு திடுக்கிட்டான்.......வண்ணங்கள் மிளிரும்......
 
  • Like
Reactions: lakshmi