கொஞ்சும் வண்ண காதல் - கதை திரி

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....

வண்ணம் - (06)

வீட்டிற்கு முன் காரை நிறுத்தி அவன் அவளை கூப்பிடாமல் ஹாரனை அடித்தான். டக்கென கண் விழித்தவள் ஒரு நிமிடம் நாம் எங்கே இருக்கிறோம் என விழித்து பார்த்தவள் "வீடு வந்திருச்சா" எனக் கூறி கீழே இறங்கினாள். ஹாரன் சத்தம் கேட்டு ஆரத்தி தட்டுடன் வெளியே வந்த சாரதா இந்து மாப்பிள்ளையோட சேர்ந்து நில்லும்மா எனக்கூறி ஆரத்தி எடுத்து வரவேற்றவர் ," கண்ணம்மா இதை வெளில ஊத்தீட்டு வா " எனக் கூறி விட்டு "வாங்க மாப்பிள்ளை வாம்மா இந்து " உள்ள போங்க என்றார். படி இறங்கி வந்த வேதாச்சலம், "வாங்க வாங்க உட்காருங்க" .
அம்மா இந்துவும் மாப்பிள்ளையும் வந்து இருக்காங்க பாருங்க சீக்கிரம் வாங்க என்றார். பார்வதம், "இதோ வந்துட்டேன்" என்றவர் கையில் காபியுடன் வந்தார். இந்தாப்பா எடுத்துக்கோங்க என ரித்விக் இந்து கைகளில் கொடுத்தார். ரித்விக் எழுந்து என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி என கால்களில் விழுந்தான். பார்வதம், "நல்லா இருப்பா" என வாழ்த்தினார். இந்து இப்படி காலில் விழுந்தே எல்லாத்தையும் கவுத்துடுறான் .....

வேதாச்சலம், " தம்பி இந்து எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு. ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். கொஞ்சம் பிடிவாதம் கோபம் எல்லாம் அதிகம் ஆனால் மனசுல எதுவும் வச்சுக்க தெரியாது. எதுனாலும் முகத்துக்கு நேரா பேசி விடுவா ஆனால் அவளுக்கு பிடிச்சவங்களுக்காக உயிரையே கொடுப்பா. அவ ஏதாவது தெரியாம பேசிட்டா கொஞ்சம் பொறுத்துக்கோங்க அவ சின்ன பொண்ணு குழந்தை மாதிரி" .....

ரித்விக், " மாமா இதெல்லாம் நீங்க சொல்லணும் என்று அவசியமில்லை. அவ எங்க வீட்டு பொண்ணு இனிமேல் நான் பார்த்துகிறேன். அவளை பற்றி நீங்கள் கவலைப்படாதீங்க. உங்க உடம்ப நல்லா பார்த்துக்கோங்க. இந்து என் பொறுப்பு எங்க அம்மாவும் அப்பாவும் இந்துவா சொந்த பொண்ணா தான் நினைக்கிறாங்க".....வேதாச்சலம் , "அப்புறம் உங்க பிசினஸ் எல்லாம் எப்படி போகுது திரும்ப எப்ப ஆபீஸ் போக போறீங்க....

ரித்விக், " சூப்பரா போகுது மாமா அப்புறம் சென்னையில் ஒரு புது பிராஞ்ச் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கான வேலைதான் நடந்துட்டு இருக்கு இன்னும் ஒரு வாரத்துல நானும் இந்துவும் சென்னைக்கு போகலாம்னு இருக்கோம்". இன்னும் அப்பா அம்மா கிட்ட கூட சொல்லல இனிமே தான் சொல்லணும் மாமா.......
அடுப்பறையில் சாரதா, "இந்து மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கிறார ? வீட்டில் எல்லாரும் எப்படி பேசுறாங்க.இந்து, " அம்மா எனக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள்தான் ஆகுது". பார்வதம் , "இது என்னடா கொடுமையா இருக்குது எல்லா பொண்ணுகிட்டயும் கேட்கிற கேள்வி தானே கேட்கிறா அதுக்கு ஏன்டி நீ இவ்வளவு சலிக்கிற? . இந்து, "பாட்டி என்ன குறை சொல்லனைணா உனக்கு உறக்கமே வராதே" . பார்வதம், "என்னைக்காவது ஒரு வேலை சொன்னா ஒழுங்கா செய்றீயா டி? ... ஏன் எதற்கு எப்படி என்று ஆயிரத்தெட்டு கேள்வி மட்டும் கேட்க தெரியுதுல்ல ஆனா சொல்ற வேலைய செய்யுறதில்ல... இந்து , " பாட்டி எந்த வேலையும் எதுக்கு எப்படி ஆராய்ச்சி பண்ணி தான் செய்யணும் ".. சாரதா , " இந்து சரி சரி வாயடுச்து போதும் போய் உங்க அப்பாவையும் மாப்பிள்ளையும் சாப்பிட கூப்பிடு . நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.....வெளியே ஹாலுக்கு வந்தவள் தனது தந்தையும் ரித்விக்கும் சுவாரஸ்யமா பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவள், 'அப்பாவை கூப்பிடுவது ஓகே இவனை எப்படி கூப்பிடுவது' என யோசித்தவாறே அவர்கள் அருகில் சென்றாள். அவள் வாய் திறக்கும் முன் வேதாச்சலம் வாம்மா உட்காரு உன்னை பத்திதான் பேசிட்டு இருக்கோம். இந்து என்னைப் பத்தியா?....ஆமாம் மா நீ இனிமே சின்ன பொண்ணு கிடையாது உனக்கு கல்யாணம் ஆயிருச்சு. நம்ம வீட்டில நீ அடம் பிடிக்கிற மாதிரி எல்லாம் அங்க பண்ணக்கூடாது . இனிமேல் மாப்பிள்ளை தான் உனக்கு எல்லாமே. அவர் சொல்வதை நீ கேக்கணும். அப்பா எப்படி உனக்கு நல்லது மட்டுமே செய்வேனோ அதே மாதிரிதான் மாப்பிள்ளையும் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா ஒற்றுமையா வாழ்க்கையை வாழனும்........இந்துவிற்கு காதில் ரத்தம் வராத தான் ஒரே குறை. பாவம் பிள்ளை கல்யாண பேச்சு ஆரம்பத்திலிருந்து இதோ இப்போது கல்யாணம் முடிந்தும் எல்லா பக்கமும் இருந்த அட்வைஸ் மழை பொழியுது....

சாரதா, " இந்து இன்னும் அங்க என்ன பண்ற சாப்பிட கூப்பிட தானா போன இவ்வளவு நேரமா என்ன பண்ற?..
இந்து, "அப்பா உங்க ரெண்டு பேரையும் சாப்பிட கூப்பிட்டாங்க அம்மா வாங்க' என்றாள். வேதாச்சலம் சரி வாங்க மாப்பிள்ளை சாப்பிட போகலாம் என அழைத்து சென்றார்......சாரதா அனைவருக்கும் உணவு பரிமாறினார். அனைவரும் உணவு உண்டு முடித்தப்பின் ஹாலில் அமர்ந்து கதை பேசத் தொடங்கினார்கள். சாரதா, "மாப்பிள்ளை சாப்பாடு எப்படி இருந்துச்சு" . ரித்விக் , "உங்க சமையலுக்கு என்ன குறை அத்தை செம்மையா இருந்துச்சு எப்பவும் போல கலக்கிட்டீங்க".... ஆமா அத்தை இந்துவுக்கு சமைக்க தெரியுமா?......

இந்து மனதிற்குள் ஏன் தெரியலனா நீ சமைக்க போறியா வெளியே சொன்னால் தான் பாட்டி 3 மணி நேரம் அட்வைஸ் மழை பொழிஞ்சுருமே.....

சாரதா, " தெரியும்பா சொல்லிக் கொடுத்து இருக்கேன் நல்லா தான் சமைப்பா". இப்ப அவ சென்னையில் தனியா வீடு எடுத்து தங்கி தான வேலை பாக்குறா. அதனால அவளுக்கு அவளே தான் சமைத்து சாப்பிடுவ. ரித்விக், எப்படி அத்தை தனியா சென்னையில் தங்கி வேலை பாக்க அனுமதிச்சீங்க? .....

சாரதா, "நாங்க சொன்னா அவ எங்க கேட்க்குறா.. எங்களுக்கு ஆசைதான் ஒரே பொண்ணு கூடவே வச்ச அழகு பார்க்கணுமுன்னு. ஒத்தக் காலில் நின்னு அங்க போய் வேலை பாக்குற. அவங்க அப்பா விடமாட்டேன் என்று தான் சொன்னார். நான் தான் பேசி சரி பண்னேன். பொம்பள புள்ளையா இருந்தா வேலைக்கு போகக் கூடாது படிக்கக் கூடாது என்றெல்லாம் எங்க காலத்துல இருந்தது. எனக்கு ரொம்ப படிக்க வேண்டும் என்ற ஆசை. நானும் நல்லா படிப்பேன் எங்க ஊரு கிராமம் அப்ப எல்லாம் பொம்பள பிள்ளைங்க பத்தாவது போறதே கஷ்டம். பொம்பள பிள்ளைங்களுக்கு படிப்பு எதற்கு சமைக்க தெரிஞ்சா போதும்னு நினைப்பாங்க. என்னால தான் நான் ஆசைபட்டதை படிக்க முடியல. அதனால தான் என் பொண்ணு ஆசைப்பட்ட டாக்டர்க்கு படிக்க வச்சோம். அவளும் படிப்பில் ரொம்ப கெட்டிக்காரி மாப்பிள்ளை. மெரிட்லயே சீட்டு வாங்கிட்டா
அவ காலேஜே சென்னையில தான் படிச்சா. அதனால அவங்க அப்பாவும் ஒத்துக்கிட்டாரு அவ ரொம்ப தைரியசாலி கூட அதான் தனியா இருந்துகிட்டா. எங்களுக்கும் ஆசை தான் அவ கூட இருக்கனும்னு. ஆனால் எனக்கு கிராமத்தில் வாழ்ந்துட்டு இந்த ஊரு பழகவே ரொம்ப நாளாச்சு. சென்னை பார்த்தாலே எனக்கு பிடிக்காது ஒரு பயம் என்று கூட சொல்லலாம். அவளை எப்படியும் கட்டிக்கொடுக்க தானே போறோம் எப்படியும் அவளை பிரிந்து தான் இருக்கப் போகிறோம் அது அப்பவே பண்ணிட்டேன். அவன் வாழ்க்கையின் லட்சியமே நல்லா படிச்சு கஷ்டப்படுற ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கணும் என்பதுதான் அதனால் தான் இப்பவும் வாரத்தில் இரண்டு நாள் அவ ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறா. நம்மாள முடியாததை யாராவது செய்தா நாம அதை பாராட்டனும் அதான் நா அவளுக்கு சப்போர்ட் பண்ணனேன். சரி நீங்க போய் ஓய்வு எடுங்க நா பேசுனா நாள் முழுதும் பேசிட்டே தான் இருப்பேன். இந்து மாப்பிள்ளைய உன் ரூமுக்கு கூட்டிட்டு போ என்றார்.....

வண்ணங்கள்மிளிரும்....
 
Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (07)
ரித்விக் இந்துவை ஆச்சரியமாக பார்த்தான். இந்து, " என்ன லுக்கு வா போகலாம்" . ரித்விக், 'இந்த திமிர் தாண்டி நீ விலகி விலகிப் போனாலும் உன்னை நோக்கி என்னை இழுக்குது' என நினைத்தான்.....

அவனை அவள் தன் ரூமில் விட்டு விட்டு அவள் தனது தாயுடன் கதையளக்க சென்று விட்டாள். அவன் அந்த ரூமை சுற்றி நோட்டம் விட்டான். நல்ல பெரிய படுக்கை அறை முழுவதும் விதவிதமான ஓவியங்கள் புகைப்படங்கள் நிரம்பி இருந்தது. அவளது சிறுவயது புகைப்படத்திற்கு அருகில் சென்று கையில் எடுத்தவன், "ஏன்டி கொஞ்ச நாள் தான நான் உன் வாழ்க்கையில இல்ல அதுக்குள்ள எவ்வளவு மாற்றம். சின்ன வயசுல நீ அழகா தான் இருந்தா ஆனா இப்போ எவ்ளோ அழகா இருக்கடி ஆனா உன் திமிர் மட்டும் அப்பவும் சரி இப்பவும் சரி மாறவே இல்ல ". "கோபம் வந்தா நீ ஒரு முறை முறைப்ப பாரு அப்படியே சிவந்து போன உன் கன்னத்தை கடிக்கனும் போலவே தோன்றும்" எனக் கூறிக் கொண்டு அவளின் ரூமை ரசித்துக் கொண்டிருந்தான். செம டேஸ்ட் இந்து உனக்கு நிறைய வரைந்து வேற வைத்திருக்கா இன்னும் என்ன திறமை உனக்குள்ள இருக்குன்னு தெரியலையே?... எனக்கு கூறி திரும்பியவனின் கண்ணில் பட்டது அந்த டைரி. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தவனின் கண்களில் பட்டது அந்த வார்த்தை.......
என்னவனுக்காக.....

"அன்று என் விழி வழியே நான் காட்டிய
காதலை உணர்ந்தும் ஏற்க மறுத்தாய் நீ
ஆனால் இன்று உன் விழி வழியே நீ காட்டும் காதலை. ஏற்க முடியாத சூழ்நிலையில் நான்.......
இதுதான் விதியா! அல்லது கடவுள் செய்த சதியோ! ".......என்ற முதல் பக்கத்தில் உள்ளதை படித்தவன் அடுத்த பக்கத்தைத் திருப்பினான்.

சாரதா, " இந்து இந்தாம்மா மாப்பிள்ளைக்கு கொண்டு போய் இந்த காப்பியை கொடுத்துட்டு வா" என்றார். அவள் சரி எனக் கூறி படி ஏறி கதவைத் திறந்தவள் அவன் கையில் உள்ள டைரியை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். காபியை டேபிளில் வேகமாக வைத்து விட்டு ஓடிச் சென்று அந்த டைரியை பறிக்க முயன்றாள். அவளை முதலிலேயே கவனித்தவன் டைரியை தலைக்கு மேலே தூக்கிவிட்டான். அவள் எட்டி டைரியை அவனிடமிருந்து வாங்க போராடினாள்.....இந்து, "ரித்விக் உனக்கு அறிவே இல்லையா? ....... அடுத்தவங்க டைரிய அவங்க பர்மிஷன் இல்லாம படிக்கக்கூடாது என்று கூட உனக்கு தெரியாதா?....
இந்த மேனஸ் கூட தெரியல நீ என்னதான் போய் வெளிநாட்டில் படித்து விட்டு வந்தியோ?... அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம். இந்து, "நீ பேச்ச மாத்தாத பஸ்ட் டைரியை கொடு". ரித்விக், "என்ன சொன்ன என்ன சொன்ன அடுத்தவங்களா?.....யாருடி அடுத்தவங்க நீ என் பொண்டாட்டி டி என்னோட சரிபாதி எதிர்காலமும் நீ தான். இதை நான் படிப்பேன் டி உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு" எனக் கூறி கட்டிலின் மறுப் பக்கம் ஓடினான். அவளும் அவனை துரத்தி ஓடினாள். சிறிது நேரத்திற்கு பிறகு அவனை பிடித்து விட்டாள். அவனது கையை மடக்கி டைரியை பிடுங்க முயன்றாள். ஆனால் எதிர்பாராதவிதமாக ரித்விக் பெட்டின் மீது விழ அவன் மீது இந்து விழுந்து விட்டாள். அவன் கண்களை அவள் பார்க்க இரு ஜோடி விழிகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து மீள முடியாமல் சிக்கித் தவித்தன. அப்படியே சில நிமிடங்கள் கரைய முதலில் சுயநினைவு பெற்ற இந்து டைரியை அவனிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு எழுந்து ஓடிச் சென்று கதவருகே நின்று கொண்டு அவனையும் டைரியையும் மாறி மாறி பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை சிரித்தாள். அவள் எழுந்த பின்பே சுயநினைவு பெற்ற ரித்விக், டைரியை எல்லாம் தரவேண்டாம் 'ஐ லவ் யூ " மட்டும் சொல்லிட்டு போடி என்றான். அவள் கையை இடுப்பில் வைத்து தனது விழிகளை உருட்டி அவனை முறைக்க அவன் ஏன்டி நான் ஏதாவது தப்பாவா கேட்டேன். என் பொண்டாட்டி கிட்ட தான கேட்டேன் என்னமோ அடுத்த வீட்டு பொண்ணு கிட்ட கேட்ட மாதிரி இந்த முறை முறைக்குற என்றான். அவள் தன் உதடுகளை குவித்து "போடா" எனக் கூற அவன் எழுந்து அவளை பிடிக்க தன் கைகளை நீட்ட அதற்குள் அவள் கதவை அடைத்து விட்டு ஓடிவிட்டாள். ரித்விக் , "இன்னைக்கு நீ தப்புச்சுட்ட இன்னொரு நாள் மாட்டுவடி அன்னைக்கு இருக்கு உனக்கு" எனக் கூறி காபியை பருக தொடங்கினான்......அந்த டைரி உடன் ஸ்டோர் ரூமுக்குள் நுழைந்தவள் அந்த டைரியை புரட்டினாள். அவளது கண்ணீர் துளிகள் சில அந்த டைரியின் மீது விழுந்தது. அவள் அந்த டைரியில் மார்க் பண்ணி வைத்து இருந்த சில பக்கங்களை கிழித்து அதை தான் மறைத்துக் கொண்டு வந்த தீப்பெட்டியின் உதவியுடன் கொளுத்தி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அந்த டைரியை தனது முதுகுக்குப் பின் மறைத்து வைத்துத்தவள் ஹாலில் ரித்விக் இருப்பதை உறுதி செய்து கொண்டு தனது அறைக்குச் சென்றாள்......
தனது அறைக்குள் சென்று பீரோவை திறந்து டைரியை வைத்து கதவை லாக் செய்து சாவியை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள். இந்து, "மனதிற்குள் இவன் முன்னாடி நடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்லை. நான் எவ்வளவு சீக்கிரம் விலகி போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவன் வாழ்க்கையை விட்டு விலகிப் போகணும். அதான் அவனுக்கும் நல்லது எனக்கும் நல்லது. சென்னைக்குப் போன உடனே முதல்ல இதுக்கான வேலையை நாம பார்க்கனும் இல்ல நிலைமை ரொம்ப மோசமாகி விடும்" என பலவாறு சிந்தித்தாள்.......சாரதா, " இந்து ரித்விக்கை சாப்பிட கூப்பிட்டு வா" என்றார். அவளும் சென்று அவனை அழைத்து வர அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்தனர். ரித்விக் வேதாச்சலத்துடன் சிறிது நேரம் அமர்ந்து கதை பேசி விட்டு உறங்கச் சென்றான். அவனுக்கு முன்பே மேலே சென்ற இந்து நன்றாக இழுத்து போர்த்தி உறங்கி இருந்தாள்......
பொழுது புலர காலை இருவரும் உணவு உண்டுவிட்டு ரித்விக் வீட்டிற்கு புறப்பட்டனர். சாரதா இந்துவை கட்டிக்கொண்டு அழ வேதாச்சலம், "சாரதா அழாதம்மா நீ அழுதா அவளும் அழுறா பாரு . அவ வீடு என்ன ரொம்ப தூரமா நாம நினைத்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் போய் பார்த்து விடலாம். இதுக்கு போய் நீயும் சின்ன புள்ளை மாதிரி கண்ணை கசக்கி அவளை அழ வைக்கிற" என்று அவரை சமாதானப்படுத்தினார்......

"அப்பா அம்மா" போயிட்டு வரேன் எனக் கூறியவள் பார்வதத்திடம் சென்று பாட்டி என அவரை கட்டியணைத்து, "நான் உன்னையும் உன் திட்டையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்" என கூறி அழுதாள். பார்வதம் அவள் கண்ணை துடைத்து விட்டு, "அழுகாதம்மா பாத்து பத்திரமா போயிட்டு வா நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக வாழவேண்டும்" எனக் கூறி அவளை வழி அனுப்பினார். இந்துவை கைபிடித்து அழைத்து வந்த காரில் ஏற்றிய ரித்விக் காரை கிளப்பினான்......வண்ணங்கள் மிளிரும்....
 
  • Like
Reactions: lakshmi

Shobana

Member
Jun 15, 2020
43
57
18
ஹாய் பிரெண்ட்ஸ்,

நேத்ரா அவர்கள் நமது தளத்தின் புதிய வரவு. அவர்கள் தனது முதல் கதையுடன் நம்மை சந்திக்க வருகிறார்....
வண்ணம் - (08)
ரித்விக், இந்து அழாதடா என ஆறுதல் கூறி அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் வாகனம் ஓட்டுவதில் கவனமாக இருந்தான். ரித்விக் வீட்டை அடைந்தவுடன் மீனாட்சி அவர்களை வரவேற்றார். ரித்விக், "என்னம்மா வீடு ஒரே பரபரப்பா இருக்கு" . மீனாட்சி, "கல்யாணம் ஆகி மூன்றாம் நாள் நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணும் டா அதான் கோயிலுக்கு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. காலையில சீக்கிரமா புறப்பட்டு போக வேண்டும்" என்றார். சரிம்மா எனக் கூறி இருவரும் தங்கள் அறைக்கு சென்று விட்டனர்.

அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து குளித்து கிளம்பி மீனாட்சி வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்பி கிளம்புமாறு கூறிவிட்டு பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இந்து மற்றும் ரித்விக் ஜோடியாக கீழே இறங்கி வர இந்து மீனாட்சியுடன் அவருக்கு உதவி புரிய சென்றுவிட்டாள். ரித்விக் சுந்தரராஜன் உடன் ஹாலில் அமர்ந்து கொண்டான்........மீனாட்சி ரித்விக் என்றவுடன் "என்னம்மா ஏதாவது உதவி பண்ணவா?". "அதெல்லாம் தேவையில்லை எல்லாம் முடிந்துவிட்டது. இனி நாம வண்டியில் ஏறி புறப்பட வேண்டியதுதான் . இந்த அஸ்வின் பையனை எழுப்பி விட்டுட்டு வந்தேன். அவனை இன்னும் காணோம் போய் அவன் ரெடி ஆகிட்டான்னா கூட்டிட்டு மட்டும் வரியா" என்றார்.

சரிம்மா எனக் கூறி சென்று அவன் ரூம் கதவை தட்ட அது தானாக திறந்து கொண்டது. அவன் தன் கால் முதல் தலை வரை நன்றாக போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தான். ரித்விக், "அடப்பாவி நீ இன்னும் எந்திரிக்கவே இல்லையா?" எனக்கூறி அஸ்வின் அஸ்வின் என போர்வையை இழுத்தான். அவன் அசையவில்லை. ரித்விக் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் மீது ஊற்றிவிட்டான். அலறி அடித்துக் கொண்டு எழுந்தவன் டேய் எதுக்குடா தண்ணி ஊத்துன?......இப்பதான் கனவுல ஒரு நல்ல பிகரை உஷார் பண்ணி கிஸ் அடிக்கும் போது கரெக்டா எழுப்பிவிட்டுட்ட. நேர்ல தான் ஒன்னும் செட் ஆகலை. கனவுலயாவது செட் ஆச்சுனு நான் சந்தோஷப்பட்டேன். பொறாமை புடிச்சவனே அதையும் கெடுத்து விட்டுட்டியே டா" என்றான். ரித்விக், "ஏன்டா காலைல மூணு மணிக்கு எழுந்து எல்லாரும் ரெடி ஆகிட்டு இருக்காங்க. நீ என்னனா கனவுல டூயட் பாடிட்டு இருக்க. இது மட்டும் நம்ம அம்மா மீனாட்சியம்மாக்கு தெரிஞ்சது கோயிலுக்கு போய் பொங்கல் வைக்கிறதுக்கு பதிலா உன்னை இங்கேயே பொங்க வச்சிடுவாங்க . வேகமா கிளம்பி கீழ வாடா எல்லாரும் ரெடியாகி கார்ல ஏறப் போறாங்க" எனக் கூறி அவனை பாத்ரூம்குள் தள்ளி கதவை பூட்டினான். ஒருவழியாக அவன் கிளம்ப இருவரும் கீழே இறங்கி வந்தனர்....

மீனாட்சி, "டேய் அஸ்வின் உன்ன நா அப்பவே எழுப்பிவிட்டேனே? இப்பதான் நீ கிளம்பி வர " என்றார். ரித்விக், " அது ஒன்னும் இல்லம்மா அவ கனவுல டூ"........ எனக்கூற அஸ்வின் ரித்விக் வாயை பொத்தி, "தெய்வமே உன் திருவாய கொஞ்ச நேரம் அடக்கி வை. இல்லனா மேஜர் சுந்தரராஜன் எனக்கு காலையிலேயே பூஜைய ஸ்டார்ட் பண்ணிடுவார்" என அவன் காதில் கூறியவன் மீனாட்சியிடம் அம்மா டைம் ஆச்சு இன்னும் என்ன கேள்வி கேட்டுகிட்டு ? வாங்க சீக்கிரம் கிளம்புவோம் என அவரை அவசரப்படுத்தினான். மீனாட்சி, " இல்லடா அவ ஏதோ கனவுனு சொல்ல வந்தானே" . அஸ்வின் ஆமா அது ரொம்ப முக்கியம் சீக்கிரம் போய் கதவ பூட்டிட்டு வாங்க எனக் கூறி ரித்விக்கை இழுத்துச் சென்று விட்டான்.......சுந்தரராஜனின் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் சோமநள்ளி கிராமத்தை நோக்கி வண்டி புறப்பட்டது. ரித்விக் வண்டி ஓட்ட இந்து அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து தூங்கி விட்டாள். மீனாட்சியும் சுந்தரராஜனும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள அஸ்வின் கடைசி சீட்டில் கால்களை நீட்டி நேராக படுத்து உறங்கிவிட்டான்.....மாந்தோப்பு தென்னந்தோப்பு வயல்வெளி என பசுமையாக காட்சியளித்தது சோமநள்ளி கிராமம். இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளியின் அழகை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக்கொண்டு இருந்தான் ரித்விக்.....வண்டி ஒரு சிறிய கோவில் முன் சென்று நின்றது. ரித்விக் தன் தோளில் தூங்கிக் கொண்டிருந்த இந்துவை எழுப்பி விட்டு கீழே இறங்கினான். மீனாட்சி, இந்து, சுந்தரராஜன் மூவரும் பூஜைக்கான பொருட்கள் வண்டியிலிருந்து கீழே இறக்கினார்கள். சுந்தரராஜன், "ரித்விக் பின்னாடி ஒரு டில்லி எரும தூங்குது பாரு அதை எழுப்பி விடு" என கூறி கோயிலுக்குள் நுழைந்தார்.......அவர்களைப் பார்த்து வெளியே வந்த பூசாரி வாங்கம்மா வாங்கய்யா. இது பெரிய தம்பி மனைவியா? மன்னிச்சிடுங்கம்மா தம்பி கல்யாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை அதான் வரல. மீனாட்சி, "சரி பரவால்ல விடுங்க பூசாரி என்றார். என்னம்மா வழக்கம் போல பூஜைக்கு ஏற்பாடு பண்ணி விடவா என்றார் பூசாரி. மீனாட்சி , " ஆமாம் பூசாரி ஆனா இந்த தடவை ரித்விக் இந்துமதி என்ற பெயருக்கு பண்ணனும். பூசாரி சரிம்மா அப்படியே பண்ணிடலாம். நீங்க பொங்கல் வைக்க ரெடி பண்ணுங்க நான் பூஜைக்கு ரெடி பணணுறேன் எனக் கூறி உள்ளே சென்று விட்டார்......ரித்விக் , "அஸ்வின் அஸ்வின் எழுந்திருடா கோவில் வந்துருச்சு என எழுப்பினான். வேகமாக கண்ணைத் திறந்தவன், " ஏன்டா உனக்கு வேற வேலையே இல்லையாடா?.....எப்ப பார்த்தாலும் என் டூயட்ட கெடுக்கிறதே உனக்கு பொழப்பா போச்சு என்னதான்டா உன் பிரச்சனை". உள்ள வரியா?.. இல்ல நான் போய் அப்பாவ வர சொல்லவா?... ஐயோ என்னடா இதுக்குப் போய் கோச்சுகிட்டு அப்பாவை எல்லாம் கூப்டுற. உனக்கு என்ன இப்ப நான் எழுந்திரிச்சி உள்ள போகணும் அவ்வளவுதானே இந்தா வந்துட்டேன் வா போகலாம் என அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்......மீனாட்சி சாமி முன் அடுப்பை வைத்து பொங்கல் வைப்பதற்கு தயார் செய்தார். அடுப்பில் பொங்கல் பானையை தண்ணீர் நிரப்பி வைத்தவர் கற்பூரத்தை விறகின் மீது வைத்து அம்மா இந்து உன் கையால ஏற்றுமா என கூறி அவளை ஏற்ற செய்தார். பொங்கல் வைத்து அதை சாமி முன் படையலிட்டனர். மீனாட்சி, " கடவுளே என் பிள்ளையும் மருமகளும் ஒற்றுமையா சந்தோசமா வாழனும் சீக்கிரமே ஒரு பேரனோ பேத்தியோ பெற்று தரனும். என் சின்ன புள்ள நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைக்கு போகணும்" என தனது கோரிக்கைகளை விளக்கிக் கொண்டிருந்தார். ரித்விக், "கடவுளே இந்துக்கு எந்த பிரச்சனைனாலும் சீக்கிரமே சரியாகனும். அவ என்னை புரிஞ்சுக்கணும்" எனவும் இந்து, " கடவுளே நான் சீக்கிரமாக ரித்விக்கை விட்டு விலகிப் போய்டனும்" என அவரவர் வேண்டுதலை கடவுளிடம் வைத்தனர்......பூசாரி இந்துவிற்கும் ரித்விக்கிற்கும் மாலை அணிவித்து பூஜையை தொடங்கினார். பூஜை முடிந்து அனைவரும் பொங்கலை உண்டு விட்டு புறப்பட தயாரானார்கள். இப்போது அஸ்வின் வண்டியை ஓட்ட ரித்விக் அவன் அருகில் அமர்ந்து கொண்டான். சுந்தரராஜன் தனது பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு வழியாக அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டனர். இரவு உணவு முடித்து அவரவர் ரூமிற்கு சென்று விட்டனர்.......அதிகாலையில் மீனாட்சி சமையலறையில் அனைவருக்கும் காபி தயார் செய்து கொண்டிருந்தார். சுந்தர்ராஜன் ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். தூக்கம் வராமல் சீக்கிரம் எழுந்து ப்ரஷ் ஆகி கீழே வந்த ரித்விக் சுந்தரராஜன் உடன் அமர்ந்து கொண்டான். மீனாட்சி இருவருக்கும் காபி எடுத்து வந்து தர காபியை வாங்கிக் கொண்டவன் அம்மா இன்னைக்கு ஏதாவது ப்ரோக்ராம் இருக்கா? இல்ல ப்ரியா? என்றான். மீனாட்சி, "இல்லப்பா இன்னைக்கு ஒரு வேலையும் இல்லை. ஆனா அதுக்காக நீ உடனே ஆபீசுக்கு போயிடாத டா இன்னும் ஒரு வாரம் கூட லீவு சொல்லிடு. இந்துவ கூட்டிட்டு எங்கேயாவது வெளியே போயிட்டு வாடா. இன்னும் கொஞ்ச நாள் ஆன பின்னாடி குழந்தை குட்டின்னு வந்துடுச்சுனா வெளியில் போகமுடியாது. இந்த டைம் தான் நீங்க என்ஜாய் பண்ண முடியும் வாழ்க்கையில் பணம் எப்ப வேணாலும் சம்பாதிக்கலாம் ஆனால் சந்தோஷமும் இளமையும் போனா திரும்பி வராது" என்றார்....ரித்விக் சரிமா என தலையை அசைத்தான். ரித்விக், "அம்மா உட்காருங்க நான் உங்க ரெண்டு பேரையும் ஒரு விஷயம் பேசனும்"என்றான். மீனாட்சி சொல்லுப்பா என்று அமர்ந்தார். ரித்விக், "அப்பா புதுசா நான் சென்னையில ஒரு ப்ராஞ்ச் ஓபன் பண்ணலாம்னு இருக்கேன். இந்துவுக்கும் சென்னையிலிருந்து உடனே வேலைய மாற்ற முடியாது. அதனால கொஞ்ச நாள் சென்னையில் இருக்கலாம்" என்று முடிவு பண்ணி இருக்கோம் என்றான்.....

வண்ணங்கள் மிளிரும்....
 
வண்ணம் - (09)

ரித்விக் கூறியதைக் கேட்ட மீனாட்சி சிறிது நேரம் யோசித்துவிட்டு, " சரிப்பா. நீங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க. தனியா இருந்தா இன்னும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க அதிக வாய்ப்பு இருக்கு. சரி நீங்க போங்க. ஆனா கொஞ்ச நாள் தான் அப்புறம் திரும்ப வந்துவிடனும்". ரித்விக் சரிம்மா, "நானும் புதுசா பிரஞ்ச் ஓபன் பண்றதுனால உடனே யாரையும் நம்பி அதை விட முடியாது. கொஞ்ச நாள் கழிச்சு டெவலப் ஆன உடனே அதை பார்த்துக் கொள்வதற்கு ஆள் போட்டுட்டு நாங்க இங்கேயே வந்து விடுவோம் " என்றான் .....ரித்விக், அப்பா நீங்க எதுவுமே சொல்லலையே என சுந்தரராஜன் முகத்தைப் பார்த்தான். சுந்தரராஜன் அதான் எனக்கு சேர்த்து என் பொண்டாட்டியே பேசிட்டாளே அப்புறம் என்ன?....மீனாட்சி சொன்ன எல்லாமே சரியாத்தான் இருக்கும் என்றார். அப்புறம் எப்பப்பா ஊருக்கு கிளம்ப போறீங்க?... சென்னையில் வீடு எல்லாமே பார்த்தாச்சா என்றார். இன்னும் நாலு நாளுக்கு அப்புறம் கிளம்பலாம்னு இருக்ககோம்ப்பா. அங்கு என் ஃப்ரண்டு தினேஷ் இருக்கான் இல்லப்பா அவனோடு வீடு காலியா தான் இருக்கு அதனால அதை யூஸ் பண்ண சொல்லீட்டான். இன்னும் வீட்டுக்கு தேவையான கொஞ்சம் திங்ஸ் மட்டும் வாங்கனும்ப்பா. அது அங்க போனதுக்கு பிறகு இந்துவ கூட்டிட்டு போய் வாங்கலாம் என்று இருக்கேன்ப்பா. சுந்தரராஜன் சரிப்பா நீ எது பண்ணாலும் ஒரு காரணம் இருக்கும் உன் இஷ்டப்படியே செய்ப்பா என்றார். நான்கு நாட்களும் ரெக்கை கட்டி பறந்து விட இதோ அவர்கள் சென்னைக்கு கிளம்பும் நாளும் வந்தது............ரித்விக், அம்மா உங்களுக்கு எதுக்கும்மா சிரமம் நாங்களே பாத்துக்குறோம்மா என்றான். மீனாட்சி, "பரவாயில்லப்பா இதுல என்ன இருக்கு இது தான் முறை அதுவும் இல்லாம நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க அதனால நாங்க எல்லோரும் வந்து பால் காய்ச்சி உங்கள் குடி வைக்கிறோம்". சாரதாவுக்கும் போன் பண்ணிட்டேன். அவளும் அண்ணனும் கிளம்பிட்டேன் என்று சொன்னாங்க. அவங்க நேரா அங்க வந்துடுறேன்னு சொன்னாங்க. ரித்விக், சரிம்மா கிளம்பலாம். மீனாட்சி, "இந்து எங்கப்பா". ரித்விக், "மேலே கிளம்பிட்டு இருக்காம்மா இப்ப வந்துடுவா" என்றான். அந்த நேரம் சரியாக அஸ்வின் கிளம்பி கீழே வர ரித்விக், "நீ காலேஜ் போகாம என்னடா பண்ற". அஸ்வின், "ஏன் நாங்க பால் காய்ச்ச வர மாட்டோமோ?... இன்னைக்கு அந்த சொட்டை அதான்டா எங்க எச்.ஓ.டி இன்டர்னெல் வச்சிருக்கான். அவன் கையில் மட்டும் நான் மாட்டுனேன்னா என்ன வச்சு செஞ்சிடுவான். ஏற்கனவே அவருக்கு என் மேல ஒரு கண்ணு. நானே எப்படி கட் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன். தெய்வம் மாதிரி நீயே ஒரு ஐடியா கொடுத்த சரி சரி இந்த விஷயமெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும் மிஸ்டர் மேஜர் சுந்தரராஜனுக்கு மட்டும் தெரிய வேண்டாம். ரித்விக், "நீ எல்லாம் எப்பதான்டா திருந்த போற" என்று கூறி தன் தலையில் அடித்துக் கொண்டு சென்று விட்டான்.......இந்து கீழே இறங்கி வர மீனாட்சி, "இந்து எல்லாம் எடுத்துகிட்டேயா?"...என்றார். இந்து, எடுத்துக்கிட்டேன் அத்தை கொஞ்சம் திங்ஸ் மட்டும் அம்மாவை எடுத்துட்டு வர சொல்லிட்டேன். மீனாட்சி, சரி சரி வா வா கிளம்பலாம்.....கார் சென்னையை நோக்கி புறப்பட்டது. ஆள் அரவமற்ற அந்த சாலைக்குள் நுழைந்த கார் அந்த வீட்டின் முன் நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு அது. மீனாட்சி, "ரித்விக் வீடு சின்னதாக இருந்தாலும் சூப்பரா இருக்குடா" . ரித்விக், "இப்பதான் அம்மா புதுசா கட்டின வீடு". யாரோ வரும் அரவம் கேட்க இருவரும் திரும்பி பார்த்தனர் இந்து எழுந்து சென்று, "அம்மா, அப்பா வாங்க என அழைத்து அவர்களை வரவேற்றாள். மீனாட்சி, " வா சாரதா வாங்க அண்ணா" என அவரும் வரவேற்றார். மீனாட்சி, "ரித்விக் என்னடா நிறைய திங்ஸ் வாங்காம இருக்கு. ரித்விக், "இல்லம்மா எல்லாமே ஆடர் பண்ணிடேன் ஈவினிங் குள்ள டெலிவரி பண்ணிடுவாங்க". ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மீனாட்சியும் சாரதாவும் அடுப்பறையில் பால் காய்ச்சி கொண்டிருந்தனர். சாரதா , " சாக்கரையை எடு மீனாட்சி " என்றார் . அவர் அறை முழுவதும் ஆராய்ச்சி செய்துவிட்டு சர்க்கரை இல்லை என்றவுடன் நான்தான எடுத்து வச்சேன் ஆனா இப்போ காணமே என்றார். சாரதா, "சரி சரி நீ டென்ஷன் ஆகாத நான் கடையில யாரையாவது வாங்கிட்டு வர சொல்றேன் என கூற சரியாக அடுப்பறைக்குள் நுழைந்தாள் இந்து. சாரதா, "இந்து சர்க்கரையை காணோம் இங்க பக்கத்தில ஏதாவது கடை இருந்தா அஸ்வின் பையன வாங்கிட்டு வரச் சொல்லும்மா".....இந்து, "அஸ்வின் அஸ்வின்" என அழைத்தாள். அஸ்வினி, " என்ன இந்து ". இந்து, "இல்ல சர்க்கரைய மறந்து வைச்சுட்டு வந்துட்டாங்களாம் அதான் நீ போய் பக்கத்துலே எங்கேயாவது கடையில வாங்கிட்டு வா" . அஸ்வின், என்னது நானா?.... கடைக்கு போகணுமா?...என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது. நான் யார் தெரியுமா வருங்கால டைரக்டர். இந்திய சினிமாவோட வருங்கால தூணா மாறப் போறேன் என டயலாக் விட்டுக்கொண்டிருந்தான். இந்து, "மாமா" என அழைக்க அஸ்வின், " ஐயோ இந்து இதுக்கு போய் எதுக்கு அப்பா எல்லாம் கூப்பிட்டுகிட்டு இப்ப என்ன உனக்கு கடைக்கு போய் சக்கரை வாங்கணும் அவ்வளவு தானே இப்ப பாரு ரெண்டே நிமிஷத்துல சக்கரை வந்துவிடும்" என கூறி வெளியேறியவனை பார்த்து இந்துவிற்கு சிரிப்பு வந்து விட்டது. அஸ்வின், "புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் என்ன மேஜர் சுந்தரராஜன் இடம் கோர்த்து விடுவதே வேலையா போச்சு" என புலம்பிக் கொண்டு அருகில் இருக்கும் கடையை தேடி சென்றான்.....கடையைத் தேடி சென்றவன் அந்த தெருவில் கடை இல்லை என்பதால் அடுத்த தெருவில் நுழைந்து விட்டான். அங்கு உள்ள கடையில் சர்க்கரையை வாங்கி விட்டு திரும்பியவனுக்கு எல்லா தெருவும் ஒரே மாதிரி இருப்பதாக தோன்றியது. அவனுக்கு எந்த வழியில் வந்தோம் என்பது மறந்துவிட்டது. அவன் ஐயோ, அஸ்வின் இது என்னடா உனக்கு வந்த சோதனை சரி நமக்கு தான் கூகுள் ஆண்டவர் துணை இருக்கே என்று தனது பைக்குள் கையை விட அவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது பப்ஜி விளையாடி கொண்டிருக்கும் போது இந்து கூப்பிட்டதால் போனை டேபிளில் வைத்துவிட்டு வந்து விட்டான் என்பது". அவன் தன் முன் இருக்கும் இரண்டு தெருக்களில் எதற்குள் செல்லலாம் என தன் மூளையிடம் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு அருகில் யாரிடமாவது கேட்கலாம் என சுற்றும் முற்றும் பார்த்தான். மீனாட்சி, "ரித்விக் இந்த அஸ்வின் பையன சர்க்கரை வாங்கப் போக சொன்னேன் அவன் போய் 15 நிமிஷம் ஆகுது இன்னும் ஆளையே காணோம் போய் பாத்துட்டு வாப்பா". ரித்விக், " சரிம்மா நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" எனக்கூறிச் சென்றான்....
ஆள் அரவமற்ற சாலையில் எல்லா வீடும் ஒரே மாதிரியாக இருக்க யாரிடம் கேட்கலாம் என அவன் சுற்றுமுற்றும் பார்க்க அருகிலிருந்த வீட்டில் இருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்து தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள். அவளிடம் சென்றவன், "ஹாய் பியூட்டி" என்றான். அப்பெண் அவனை முறைக்க அவன், " இல்லங்க நாங்க இங்க தான் புதுசா குடி வந்து இருக்கோம்" என்றான். அவள், "வந்துட்டு போங்க அத எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?"... அவன் இல்லங்க அது வந்து என ஆரம்பிக்க அதற்குள் அங்கு வந்த ரித்விக், " டேய் அஸ்வின் வேகமா வாடா அம்மா உன்னத் தேடிட்டு இருக்காங்க" எனக் கூறி அவனை இழுக்க அஸ்வின் "பாய் பியூட்டி" என கையை அசைத்து விட்டு சென்றுவிட்டான்....

அந்த பெண் சரியான லூசா இருப்பான் போல எனக்கூறி தனது தோளை குலுக்கி விட்டு ஸ்கூட்டியில் பறந்து விட்டாள். ரித்விக், " ஏன்டா உனக்கு வேற வேலையே இல்லையாடா கடைக்கு போனா அந்த வேலையை விட்டுவிட்டு அந்த பொண்ணு கூட கடலை போட்டுட்டு இருக்க?...அஸ்வின், " அதெல்லாம் ஒன்னுமில்லடா" எனக் கூறி அவனை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்....வாசலிலேயே நின்று கொண்டிருந்த சுந்தரராஜன், "அஸ்வின் கடைக்கு போக சொன்னா எங்கடா போய் சுத்திட்டு வர்ற" என்றார். அஸ்வின், 'மனதிற்குள் வழி தெரியாம மாறி போயிட்டேன்னு சொன்னா நம்மள ரொம்ப அசிங்கப்படுத்து வாங்களே' என நினைத்து "அப்பா ஒரு பொண்ணு வழி தெரியாம முழிச்சிட்டு இருந்துச்சு அதான் நான் வழி சொல்லி ஒரு பொது சேவை செய்தேன்" என்றான். அவர் அவனை கேவலமாக ஒரு லுக் விட அவன் உள்ளே ஓடிச் சென்று விட்டான்....மீனாட்சி இந்தாடா பால் என டம்ளரை அவனிடம் தர அதை வாங்கிப் பருகியவன் சர்க்கரை இருக்கு தான அப்புறம் எதுக்கு என்னை கடைக்கு போக சொன்னீங்க என்றான். மீனாட்சி அவன் தலையில் கொட்டி அது பக்கத்து வீட்டில போய் வாங்கிட்டு வந்தது ஏன்டா நீ வந்துதான் நாங்க பால் காய்ச்சனும்னா நான் நாளைக்கு தான்டா செய்ய முடியும் எனக் கூறி அவள் சமையல் அறைக்குள் புகுந்தார்....ஒருவழியாக மதிய சமையல் செய்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டனர். மாலைப்பொழுதில் அனைவரும் கிளம்ப தயாரானார்கள். வழக்கம்போல் தாய்மார்கள் இருவரும் இந்துவிற்கு அட்வைஸ் மழை பொழிந்து விட்டு கிளம்பினார்கள்.......அனைவரும் கிளம்பி விட இருவரும் தனித்து விடப்பட்டனர். ரித்விக், " இந்து நீ எப்ப வேலைக்கு போய் ஜாயின் பண்ண போற ". இந்து, "நான் எப்ப வேணாலும் போவேன் உனக்கு என்ன?"..... என்றாள் திமிராக....ரித்விக் , "இல்ல ஒரு ரெண்டு நாள் ஹனிமூன் போலாம்னு தான்" என்றான் தனது சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு. இந்து வாட் எனக்கூறி அதிர்ந்தாள். ரித்விக், "சும்மாதான் சொன்னேன் பயப்படாத". நீ ப்ரீயா இருந்தா நாளைக்கு வீட்டுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் அதனால் ஷாப்பிங் போகலாமா என்றான். இந்து ஷாப்பிங் எல்லாம் நான் வரல நீ வேணா போயிட்டு வா என்றாள் அசட்டையாக. ரித்விக், " இந்து வீட்டுக்கு வாங்குற திங்ஸ் பத்தி எதுவுமே எனக்கு தெரியாது அதான் உன்னை கூப்பிடுறேன் ப்ளீஸ்" என்றான் மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு. இந்து, "சரி உன்னை பார்க்கவும் பாவமா தான் இருக்கு நீ இவ்வளவு கெஞ்சி கேக்குறதுக்காக வேணா நான் வர்றேன்" . ரித்விக், " என்னது கெஞ்சி கேட்டனா?".... .இந்து "என்னது என்னது". ரித்விக், "ஒன்றுமே இல்ல தாயே நீ வந்தா மட்டும் போதும்" என்றான்.......வண்ணங்கள் மிளிரும்.......
 
  • Like
Reactions: lakshmi