குறுந்தொடர் போட்டி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,694
1,430
113
அமிழ்தம் மின்னிதழ் மற்றும் சுதாரவி நாவல்ஸ் இணைந்து நடத்தும் குறுந்தொடர் போட்டி பற்றிய அறிவிப்பு விரைவில்....
 

Priyanka Raja

Member
Feb 3, 2020
30
0
8
காதலிக்க நேரமில்லையே

பதிவு 1

குளுமையான இளங்காலைப் பொழுதினிலே அடைமழையானது வெளுத்து வாங்கியது,,, ஏசியின் குளிர் வேறு சேர்ந்து அந்த அறையையே இன்னும் இன்னும் குளுமைப்படுத்த குளிருக்கு இதமாக போர்வையை இழுத்துப் போர்த்தி முகம் மட்டும் தெரியும்படி உறங்கிக்கொண்டிருந்தாள்
வர்ணிகா,,, திடுமென்று ஒழித்த சப்தத்தில் விழித்தவளின் புருவங்கள் வளைந்தது,,, கண்கள் சுருக்கி சட்டென்று அவள் திரும்பிப் பார்க்க மூடப்பட்ட சன்னலையும் தாண்டி அந்த சத்தம் கேட்டுக் கொண்டிருப்பது புரிந்தது,,,,

"""""சனியன் சனியன்,, காலையில இவன் தொல்ல பெருந்தொல்லையா போச்சு,,, மவனே இருடி உனக்கு"""" அவசரமாக எழுந்தவள் எழுந்து சென்று சன்னலைத் திறக்க சத்தம் பெரிதாகவே கேட்டது,,,,

"""" சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓ....
குச்சுபிடி குச்சுப்புடியே உன் கண்ணு குச்சுப்புடியே நீயில்லையே நம்பும்படியே ஓ.. ஓ.. ஓ....""""" தளபதியின் பாடல் தான் பக்கத்து வீட்டிலே பெரிதாக ஒலித்தது,,, இவளுக்கு எதையாவது எடுத்து அந்த வீட்டின் சன்னலை நோக்கி வீசலாம் போல இருந்தது,,,, காரணம் வர்ணிகா தல ஃபேன்,,,, வந்த ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக வழக்கம் போலவே டீவியை ஆன் செய்து தல படப்பாடலை பாடவிட்டு சத்தத்தை அதிகமாக வைத்து ஒரு ஸ்பீக்கரை தூக்க முடியாமல் தூக்கி சென்று சன்னல் அருகினில் வைத்துவிட்டு கட்டில் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டாள்,,,,


ஏய்,,,அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி
தடபுடலா வரும் தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது,,,
கெடைக்குமடா பல கேள்விக்கு
விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது....
டானே டர்ராவான்
தவுளது கிர்ராவான்
வந்தான்டா மதுரைக்காரன்....
அலேக்கா விளையாடு
அடிச்சா கேக்க யாரு
ஏ அடிச்சிதூக்கு அடிச்சிதூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

டங்கு டங்கென்று இவள் குதித்த குதியிலும் போட்ட சப்தத்திலும் கதவை திறந்து கொண்டு அவசரமாக வந்து நின்ற அவளுடைய தாய் தெய்வானை அவள் போட்ட ஆட்டத்தை பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு கதைப்பொத்தியபடியே போய் டிவியை ஆப் செய்ய இவள் ஆடுவதை நிறுத்திவிட்டு குதித்தோடி வந்து நின்றாள்,,,,

""""""ம்ம்மாஆஆஆ,,, எதுக்கும்மா இப்போ அமத்துன,,, அய்யோ அய்யோ,, அந்த பக்கம் இன்னும் பாட்டு சத்தம் கேக்குது,, ரிமோட்டை குடும்மா தல பாட்டை வைக்கணும்"""" ரிமோட்டை அவள் பிடுங்க வர வேகமாக சென்று சன்னலை சாத்திவிட்டு கத்தினார்,,,,

"""""ஏன்டி ஏன்டி,,, காலையிலே ஆரம்பிச்சுட்டியா,,, அவன் எந்த பாட்டை போட்டா உனக்கு என்னடி??? அப்பனுக்கு தப்பாம அப்படியே பொறந்திருக்கு,,, முதல்ல குதிக்குறதை நிறுத்துடி தடிமாடு""""

"""""ம்மாஆஆஆ,,, அப்பாவை இந்த விசயத்துல இழுக்காத,,, அவன் வேணும்னே தான் என்னை வெறுப்பேத்தணும்னு இவன் பாட்டா வைக்குறான்,,, துக்கத்துல இருந்து எழுப்பி விட்டுட்டான் பாரு"""""

"""""வாயிலயே போடப்போறேன் பாரு,, அவன் இவன்னு சொன்ன அப்புறம் அவ்வளவு தான்,, என்ன தான் இருந்தாலும் உனக்கு அவன் அண்ணன் முறை வேணும்"""""

""""'ம்மமாஆஆஆ,, தினம் தினம் ஒரே பாட்டை பாடாத,, அவன் என் எனிமி,,, எனக்கு மட்டும் இல்ல நம்ம வீட்டுக்கே எனிமி,,, """""

"""""உதவாங்கப்போற வர்ணி,,, சத்தம் போட்டு பேசாத,,, தாத்தா காதுல விழுந்தா அப்புறம் அவ்வளவு தான்,,, ஒருநாளாவது எங்களை நிம்மதியா இருக்க விடேன்டி,,, அவங்க தான் ஆகாதவங்கன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு காலங்கார்த்தால இப்படி சிலுத்துக்குனு நிக்குற,,, இந்த வீட்டுல பெருசுல இருந்து சிறுசு வரைக்கும் எல்லோர் கூடவும் இதே தொல்லையா போச்சு,,, வீட்டு ஆளுக தான் இப்படின்னா வேலக்காரங்களும் அந்த வீட்டு வேலக்காரங்க கூடவே சண்டையை இழுத்துட்டு வருதுங்க,,, அடியேய் வேலையத்தவளே,,, முதல்ல போய் பல்ல தேய்ச்சு குளிச்சுட்டு கீழ வா,,,, காலேஜுக்கு நேரமாகுதுல்ல,,,""""" வர்ணிகாவின் தலையில் தட்டி சொல்லிவிட்டு அவர் செல்ல வர்ணிகா ஒருவித உதட்டுச்சுழிப்போடு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்,,,,

ஒருவழியாக குளித்துமுடித்து அடர்நீல நிற சுடிதாரை அணிந்து கொண்டு கீழே சென்றவளை மொத்த குடும்பமும் உணவு மேசையில் இருந்தபடியே வரவேற்றது,,, அளவான சிறிய குடும்பம் தான் அவளுடையது,,, தாத்தா தங்கவேலு பாட்டி விஜயலெட்சுமி,,, அப்பா ரங்கசாமி அம்மா தெய்வானை,,, ஒரேயொரு தம்பி அஷ்வந்த்,,,, இவ்வளவு பேரும் சாப்பிடாமல் அவளுக்காக காத்திருக்க அவளோ ஆடி அசைந்து துள்ளித் துள்ளி கீழே வந்து அமர வேலையாட்கள் பரிமாற ஆரம்பித்துவிட்டார்கள்,,,, அப்பா ரங்கசாமி தட்டில் வைத்த இட்லியை முறைத்து முறைத்து பார்த்தபடியே சாப்பிடாமல் இருக்க தங்கவேலுவோ ஒரு வாய் எடுத்து வைத்துவிட்டு ரங்கசாமியை பார்த்தார்,,,

"""""கோபத்தை சாப்பாட்டுல காட்டுறதால என்ன ஆகப்போகுது??? நான் அப்பவே சொன்னேன்,, அந்தப்பய சரியான கேடின்னு,,,"""""

"""""கேடியா இருந்தா இருந்துட்டு போகட்டும்ப்பா,,, நான் அவனை விட கேடிக்கெல்லாம் கேடி,,,, """"" இப்படி இவர் சொல்ல வர்ணிகாவிற்கு புறையேறிவிட்டது,,,, இவரோ பதறியபடி தண்ணீரை எடுத்துக்கொடுக்க பாட்டி அவளுடைய தலையை தட்டினார்,,,

"""""பார்த்தியாடா,,, அவனுங்கள பத்தி பேசுனாலே இப்படி தான்,, பாரு புள்ளைக்கு புறையேறிடுச்சு,,, யம்மா மருமகளே புள்ளைகளுக்கு தெனமும் சுத்திப் போடுன்னு சொன்னேனே செய்யுறியா????""""" தாத்தா கேட்க மனதிற்குள் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே சமத்து மறுமகளாக பதில் சொன்னாள்,,,

"""""அதெல்லாம் பண்ணுறேன் தான் மாமா"""""

"""""என்னத்த பண்ணுற போ,,, அந்த வீட்டு திருட்டுப்பய காலடி மண்ணை எடுத்து என் பேத்திக்கு சுத்திப்போடு,,, அவன் பேத்தி தொடுக்கான் தொடுக்கான்னு இருக்கு,,, அதுக்குன்னே கண்ணு வைப்பான்,,, அப்புறம் நம்ம வர்ணி கூட தானே அந்த வால்முளைக்காத குரங்கு பையன் படிக்கிறான்"""" தாத்தா சொல்ல வர்ணிகா வேகமாக சொன்னாள்,,,

"""""ஆமா தாத்தா,, அவன் கண்ணு தான் கொள்ளிக்கண்ணே,,, நான் வேணா இன்னைக்கு அவன் காலடி மண்ணை எடுத்துட்டு வாறேன்,,, நல்லா செய்வினையாவே செஞ்சுப்போடுவோம்,,, காலையிலேயே பாட்டை போட்டு எழுப்பி விட்டுட்டான்"""" அவள் அவள் பங்கிற்கு ஆதங்கத்தை கொட்ட அவள் பேச்சை கேட்டுவிட்டு உர்ரென்று இருந்த ரங்கசாமியே சிரித்துவிட்டார்,,,
 

Priyanka Raja

Member
Feb 3, 2020
30
0
8
இவர்கள் இப்படி பேசியபடியே சாப்பிட்டு விட்டு அவரவர் வேலைக்கு புறப்பட ஆரம்பிக்க அங்கே,, அதுதாங்க வர்ணிகாவின் பக்கத்து வீட்டில் ஒரே உற்சாகமாக இருந்தனர்,,,, ஒரு நிமிசம் இந்த பக்கத்து வீடு யாரு??? இவங்களை ஏன் மொத்த குடும்பமும் வறுத்தெடுக்குதுன்னு சொல்லவே இல்லையே,,, அதை இப்பவே சொல்லிடவா??? இல்லை,,, வேணாம் வேணாம் இப்போதே இரண்டு வீட்டையும் அவங்க அவங்க உறவுகளையும் புளி போட்டு விளக்கிடுறேன்,,,,

அதாகப்பட்டது என்னவென்றால் நம்ம தல அஜித்குமாரின் அதி தீவிர விசிறியான வர்ணிகாவின் தாத்தா தங்கவேலுவும் பக்கத்து வீட்டு பெரியமனுசன் அழகப்பனும் நெருங்கிய நண்பர்கள்,,, நெருக்கம்னா எந்த அளவுக்கு நெருக்கம்னா மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டான்னு பாட்டு பாடுற அளவுக்குன்னு வச்சுக்கோங்க,,, இவங்களுடைய நட்பு சிறுவயதில் இருந்தே ஆரம்பிச்சது,,, அதாவது அவர்களுக்கு முந்தைய இரண்டு தலைமுறைகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமானது,,,, தங்கவேலுவின் தாத்தாவுடைய அப்பாவும் அழகப்பனின் தாத்தாவுடைய அப்பாவும் அவரவர் சொந்த மண்ணை விட்டுட்டு அந்த ஊருக்கு பிழைக்க வந்து எப்படியோ நண்பர்கள் ஆக அவர்களுடைய மனைவிமார்களின் நகைகளை விற்று சிறிய அளவில் ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சுருக்காங்க,,,

இவர்களுடைய மனைவிமார்களின் சமையல் அங்கிருந்த சுற்றுவட்டாரங்களுக்கு பிடித்துப்போக ஹோட்டல் பெரிய அளவில் மாறியது,,, இருவரின் பிள்ளைகளும் வளர வளர தொழிலால் இலாபமும் ஹோட்டல்களும் அதிகமானது,,, அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து அருகருகே இடத்தை வாங்கி ஒரே மாதிரி பெரிய அளவில் வீட்டைக் கட்டி குடியேறினர்,,, நட்புப்பயணம் எந்த பிரச்சனையும் இன்றி அடுத்தடுத்த தலைமுறைகளாக தொடர்ந்தது ஒற்றை வாரிசோடு இருந்தது வரைக்கும்,,,, தங்கவேலுவின் அப்பாவிற்கு அவர் மட்டும் தான் வாரிசு,,, அழகப்பனின் தந்தைக்கும் அவர் மட்டுமே வாரிசு,,, ஆனால் இவர்கள் இருவருக்குமோ இரண்டு இரண்டு பிள்ளைகள்,,, ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாக பிறந்தது,,, தங்கவேலுவுக்கு ரங்கசாமியோடு சேர்த்து சிவகாமி என்ற பெண்ணும்,, அழகப்பனுக்கு தமிழரசன் என்ற மகனோடு வேதவல்லி என்ற மகளும் பிறந்தனர்,,, ரங்கசாமி தான் தங்கவேலுவுக்கு மூத்தவன்,, அடுத்தது தான் சிவகாமி,,, ஆனால் அழகப்பனுக்கோ வேதவல்லி தான் மூத்தவள்,,,

நாட்கள் எல்லாம் அழகாக தான் போய்க்கொண்டு இருந்தது,,, வேதவல்லிக்கு மட்டும் திருமணமாகி இருக்க வீட்டோடு வந்து சேர்ந்தார் ஆதவன்,,,, இருவரின் தொழிலிலும் குடும்பத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் போது தான் ஒருநாள் தங்கவேலுக்கும் அழகப்பனுக்கும் அந்த செய்தி தெரியவந்தது,,, உறவாக பழகிய குடும்பத்திலே நெருப்பு மூண்டதும் அப்போது தான்,,, சிவகாமியும் தமிழரசனும் படிக்கப் போகிறேன் என்று ஒன்றாக எங்கெங்கோ சுற்றுவதாக அவர்களுக்கு செய்தி வர என்ன ஏதென்று இருவர் குடும்பமும் விசாரித்தது,,, நட்பால் இணைந்த குடும்பத்திற்குள்ளேயே காதல் என்ற விதை விழுந்துவிட்டது,,, முதலில் உள்ளுக்குள்ளே சந்தோசித்த தங்கவேலுவும் அழகப்பனும் சாதி என்ற ஒற்றை வார்த்தையில் அவர்கள் காதலை ஒதுக்கிவைக்க தங்கள் காதல் விரைவிலேயே இறந்துவிடுமோ என்று அவசர அவசரமாக யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் விட்டனர்,, அவர்கள் காதல் என்னமோ வாழ்ந்தது தான்,, ஆனால் இவர்களின் நட்பு தான் அன்றோடு இறந்தே போனது,,, ஆதவனும் ரங்கசாமியும் ஒருவரையொருவர் எதிர்த்துக்கொண்டு நிற்க மகனுக்காக என்று தங்கவேலுவும் மருமகனுக்காக அழகப்பனும் ஒருவரையொருவர் முறைக்க அத்தோடு இழுத்துமூடப்பட்டது தொழிலும்,,, சொத்துக்கள் பாதி பாதியாக பிரிக்கப்பட்டு அதன்போக்கில் நடத்தப்பட்டது,,, பொதுவாக இருந்த வீட்டின் வழி இரண்டாக பிரிக்கப்பட்டு தனித்தனி வழியானது,,, உறவாக பழகியவர்கள் விரோதிகளாக முறைத்துக்கொண்டு திரிய அவர்கள் தலைமுறையும் அதனையே தொடர்ந்தது,

யப்பாஆஆ ஒருவழியாக இருவீட்டினருக்கும் இருக்கும் பிரச்சனையை விவரித்து விட்டாச்சு,,, ஒரு குடும்பத்தையும் அறிமுகப்படுத்தியாச்சு,,, இனி அடுத்த குடும்பத்தை பார்க்கப் போகலாம்,,, அழகப்பன் ஐயாவின் வீடு நாம் நுழையும் போதே அனைவரையும் இனிப்போடு வரவேற்றது,,, அழகப்பனும் அவர் மருமகனான ஆதவனும் உற்சாகமாக பேசிக்கொண்டிருக்க அழகப்பனின் மனைவி மீனாட்சியும் அவர் மகள் வேதவல்லியும் மிதமான புன்னகையோடு நின்றனர்,,, ஆதவன் தான் அனைவருக்கும் இனிப்பு கொடுத்தார்,,,,

"""""என்ன மாமா ஒன்னே ஒன்னு எடுத்துக்குறிங்க??? இன்னும் ரெண்டு எடுத்துக்கோங்க""""" சொன்னபடியே ஒரு லட்டை எடுத்து அவர் வாயில் திணிக்க வீடெங்கும் ஒரே புன்னகை மயம் தான்,,,,

"""""மாப்பிள்ளை,,, போதும் போதும்,,,, ஏற்கனவே உடம்புல இருக்க சர்க்கரைக்கே மாத்திரை போடணும்"""""

"""""சேர்த்து போட்டுக்கலாம் மாமா,,,
அத்தை நீங்களும் எடுத்துக்கோங்க,,, வேதா நீ ஏன் அங்கேயே நிற்குற எடுத்துக்கோ,, தர்ஷன் எங்க... இந்த டென்டர் கிடைக்க காரணமே அவன் தானே,,, தர்ஷா... தர்ஷா""""" இவர் சப்தம் போட அடர்நீல கலர் சட்டையும் அதற்கு மேட்சாக பேன்டும் போட்டபடி படிகட்டுகளின் கைப்பிடியில் அமர்ந்தபடி வழுக்கிகொண்டு வந்து நின்றான் அவன்,,, தர்ஷன்,,,

"""""என்ன டாடி,,, ஒரே கும்மாளமும் கொண்டாட்டமுமா இருக்கு,,, என்ன பேபி என்ன மேட்டராம்"""" வந்ததுமே பாட்டி மீனாட்சியின் தோளில் கைபோட்டபடி நின்று அவருடைய கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவனை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டார் அவருடைய பாட்டி,,,

"""""பாட்டியும் பேரனும் அப்புறமா கொஞ்சிக்கலாம்,,, டேய் படவா இங்க வாடா,,, கடைசி நிமிசத்துல டென்டர் அமௌண்டை மாத்திவிட சொன்னியே என்ன விசயம்,, இப்போதாவது சொல்லுறியா???"""""

"""""அதெல்லாம் காரணமா தான் தாத்தா,,, அந்த வீட்டு பெருசும் அவர் மகனும் சேர்ந்து நம்ம டென்டர் அமௌண்டை யார் மூலமோ தெரிஞ்சுட்டு நம்ம அமௌண்டை விட ஒரு ரூபா குறைச்சு சொல்லிருக்காங்கன்னு
எனக்கு என் சீபிஐக்கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்தது,,, அது தான் ஒரு நூறு ரூபாயை குறைச்சு அனுப்புங்கன்னு சொன்னேன்,, டென்டர் நமக்கு கிடைச்சுருச்சு"""" கூலாக சொல்லுவிட்டு அவன் செல்ல வேதவல்லி அவனை விரட்டிப் போய் இரண்டு இட்லிகளை தட்டில் வைத்து ஊட்டிக்கொண்டு இருக்க இங்கே மாமனும் மருமகனும் தங்கள் எதிரிகளை வென்ற சந்தோசத்தில் உற்சாகத்தோடு இருந்தனர்,,,

இறைவன் போடும் இந்த நாடகத்தில் வரப்போகும் திருப்பங்களை எவரால் மாற்ற முடியும்???? பொறுத்திருந்து பார்க்கலாம்,,,