கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவில்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி திருக்கோவில் வைணவத்தலம். ஆழ்வார்களால் பாடப்பெற்றது. இங்கு கோமளவள்ளி தாயார் பெருமாளுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் மேற்கு புறத்தில் பொற்றாமரைத் திருக்குளம் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவிலின் கருவறைக்கு உத்தாராயண வாசல், தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாயில்கள் உள்ளன. இந்த வாயில்கள் ஒவ்வொன்றும் ஆறு மாத காலம் திறந்திருக்கும். அடுத்த ஆறு மாத காலம் பூட்டி இருக்கும். ஒரு வாயில் திறந்திருக்கும் போது மற்றது மூடி இருக்கும். இதே மாதிரி அமைப்பு திருச்சேறை பெருமாள் கோவிலிலும் உள்ளது.

மேலும் இந்தக் கோவிலின் கருவறை தேர் வடிவத்தில் நான்கு சக்கரங்களுடன் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சாரங்கம்
என்றால் வில். ராமாவதாரத்தை நினைவூட்டும் கோவில் இது. பெருமாள் சயனித்திருக்கிறார்.

சாரங்கபாணி திருக்கோவிலில் தீபாவளி பற்றிய புராதன கல்வெட்டு ஒன்று உள்ளது. தீபாவளியன்று விசேஷ பூஜைகள் நடைபெற மானியம் வழகப்பட்டதை தெரிவிக்கின்றது.


640px-Sarangapani2.jpg