காதல் மெய்ப்பட - (It's all about Love) (கதை திரி)

Nagaraj

New member
Feb 3, 2020
10
8
3
காதல் மெய்ப்பட 5

இனியன் மகிழ்நிலாவுடன் பேச இரண்டு நாட்களாக எவ்வளவு முயன்றும் மகிழ்நிலா இனியனை திரும்பி கூட பார்க்கவில்லை. இனியன் பார்க்கில் தனியாக அமர்ந்து ஐஸ் சாப்பிட்டு கொண்டிருக்க அருகில் வந்த விஷ்ணு "டேய் என்னடா ஜாலியா உட்கந்து ஐஸ் சாப்பிட்டுக்கிட்டு இருக்க நிலாவ சமாதானம் பண்ண ஏதாவது யோசிச்சிய இல்லையாடா"என்று கோபமாக கேட்க இனியன் விஷ்ணுவின் முகத்தை பார்த்து "மச்சி என்னோட காதல் சேரணும்னு உனக்கு இவ்வளவு ஆசையாடா, உனக்கு என்மேல எப்ப இருந்து மச்சி இவ்வளவு பாசம்" என்று கேட்பவனை பார்த்து முறைத்த விஷ்ணு "கிழிச்ச பாசம் நீ அடிச்ச ஆப்புல என்னோட கவி என்கிட்ட பேசாம போய்ட்டா நீ நிலா கூட சேந்தாதா கவி என்னோட பேசுவா அதனாலதா சொல்லுறேன் வேகமா நிலாவ சமாதானம் பன்ற வழிய பாரு".

இனியன் "அதான பாத்தேன் என்னடா இந்த நாய்க்கு நம்மை மேல திடீருனு அக்கறை வந்துருச்சுனு, இங்க பாரு நானும் எவ்வளவோ கெஞ்சி பாத்துட்டேன் ஆனா அவ என்னை கொஞ்ச கூட மதிக்க மாட்டேங்குறா நா என்ன பண்ண" என்று கூறிவிட்டு மீண்டும் ஐஸ் சாப்பிடுவதில் மும்மரமாவனவனை பார்த்து தலையில் அடித்து கொண்ட விஷ்ணு இனியன் கையில் இருந்த ஐஸ்கிரீமை புடுங்கி தூக்கி எறிந்துவிட்டு "ஏதாவது யோசிச்சுதொலைடா எங்க அம்மா வேற கவிய வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க எனக்கு என்ன பன்றதுன்னு புரியல ஒழுங்கா ஏதாவது யோசிச்சு நிலாவ சமாதானம் பண்ணு.

தனது ஐஸ்கிரீம் பறிபோன கோவத்திலிருந்த இனியன் "டேய் உன்னை யாருடா எனக்கு சரக்கு ஊத்திவிட சொன்னது, நீயாதான சரக்க ஊத்திவிட்டு என்னோட காதலுக்கு ஆப்பு அடிச்ச நீயே எல்லாத்தையும் சரி பண்ணு" விஷ்ணுவோ "உனக்கு ஒரு பீரை குடிக்க கொடுத்துட்டு நா படுறபாடு இருக்கே சாத்தியமா இனிமே நா குடிக்கவே மாட்டேன்டா, சரி இப்போதைக்கு நிலாவோட பிரச்சனை நீ அவுங்க அப்பாகிட்ட அப்படி நடந்துக்கிட்டது அதனால நீ நிலாவ சமாதானம் பன்றதுக்கு முன்னாடி அவுங்க அப்பாவ சமாதானம் பண்ணிட்டா போதும் நிலா ஈஸியா சமாதானம் ஆகிருவா என்னடா சொல்லுற" இதை கேட்டு கொண்டிருந்த மாயதீரன் அதுக்கு நா விடணுமே தம்பி உங்களுக்கு வைக்கிறேன்டா பெரிய ஆப்பு என்று மனதிற்குள் நினைத்து கொண்டான்.

இனியன் "நீ சொல்லுறதெல்லாம் சரிதா ஆனா அது அவ்வளவு சாதாரண விஷயமில்ல நீ நிலாவோட அமைதியான முகத்தை பாத்துட்டு அவ அப்பனும் பொண்ணுங்க கைல வச்சிருக்க கரடி பொம்ம மாதிரி இருப்பான்னு நினைச்சியா, அவ அப்பேன் சரியான கருங்கரடி நல்லா ஆறடிக்கு மேல அண்டர்டேக்கர் அண்ணே மாதிரி இருப்பா ரிடைர் ஆர்மிமேன் வேற அன்னைக்கு ஏதோ நிலா பக்கத்துல இருந்ததால என்னை சும்மா விட்டான் இனியும் ஏதாவது தப்பா பண்ணி மாட்டுனா வடிவேலு சொல்லுற மாதிரி சும்மா நசுக்கு நசுக்குன்னு நசுக்கி தூக்கி எரிஞ்சிருவான் பாத்துக்கோ" இனியன் கூறியதை கேட்டு எச்சில் விழுங்கிய விஷ்ணு தன் முகத்தில் பயம் தெரிந்தாலும் அதை மறைத்து கொண்டு "என்னடா அவ அப்பேன் என்ன பெரிய ரவுடியா மச்சா நாங்களாம் ராவான ரவுடி சரியா அந்த கருங்கரடியா இல்லை நாமளான்னு பாத்துக்கலாம்".

இவர்கள் இருவரும் இங்கு பேசிக்கொண்டிருக்க மகிழ்நிலாவின் இல்லத்திற்கு சென்ற சங்கவி மகிழ்நிலாவை சமாதானம் செய்ய முயன்றாள், "நிலா நா சொல்லுறத கொஞ்சம் புரிஞ்சுக்கோடி எல்லா தப்புக்கும் அந்த விஷ்ணு தருதலைதான்டி காரணம் இனியன் அண்ணா மேல எந்த தப்புமில்லடி".. மகிழ்நிலா "ஆமாடி உங்க அண்ணாக்கு வாயில விரல் வச்சா கூட கடிக்க தெரியாது பாரு விஷ்ணு அண்ணாதா குடுத்தாங்கன்னா இந்த எருமைக்கு எங்கடி போச்சு அறிவு குடிச்சுட்டு என்னோட அப்பா மேலயே வோமிட் பண்ணிருக்கான்டி இந்த மாதிரி ஆளுக்கு யாருடி அவுங்க பொண்ணை கல்யாணம் பண்ணித்தருவாங்க சொல்லுடி" என்று கேட்கும் போதே மகிழ்நிலாவின் விழிகள் கலங்கிவிட்டன. இவர்கள் அருகிலிருந்து இதை கேட்டுக்கொண்டிருந்த மைத்ராவிற்கே இனியன் மீது சிறிது கோபம் வந்தது.

சங்கவி "நீ சொல்லுறதெல்லாம் சரிதா நிலா ஆனா அதுக்காக இனியன் அண்ணாவ மறந்துட்டு உங்க அப்பா பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்க போறியா".. மகிழ்நிலா "தெரியலடி எனக்கு என்ன பண்ணன்னு ஒண்ணுமே புரியல ஆனா கண்டிப்பா இனிமே அவனை எப்பவும் மன்னிக்க மாட்டேன்" என்று உறுதியாக கூறினாள்.

மகிழ்நிலா தனது முடிவில் உறுதியாக இருக்க விஷ்ணுவோ இவர்களை சேர்த்து வைக்க மொக்க ஐடியாக்களை கொடுத்து இனியனை கடுப்பேத்தி கொண்டிருந்தான், விஷ்ணு "என்ன மச்சி உனக்கு எவ்வளவு ஐடியா கொடுத்தாலும் நீ என்னடா குறை சொல்லிகிட்டே இருக்க ஓகே கடைசி ஐடியா நம்ம எல்லா படத்துலையும் பாக்குற மாதிரி ஒரு திருடன வச்சு உன்னோட மாமனார் கண்ணனுக்கு முன்னாடி ஒரு பொண்ணு பேக்க புடுங்கிட்டு ஓடுற மாதிரி செட்டப் பண்ணுவோம், கொஞ்ச தூரம் ஓடுனதும் அந்த திருடன்கிட்ட இருந்து நீ பேக்க புடுங்கிட்டு வந்து அந்த பொண்ணுகிட்ட கொடுத்துரு உன்னோட மாமா உன்னோட வீரத்தை பாத்து இம்ப்ரெஸ் ஆகிருவாரு எப்படி என்னோட ஐடியா" என்று கெத்தாக காலரை தூக்கிவிட்டு கூற அவனை பார்த்து துப்பிய இனியன் "டேய் இந்த சீன் சிவாஜி காலத்துல இருந்து இருக்குடா ஏதாவது உருப்புடியா சொல்லுடா".

விஷ்ணு "மச்சி இது சிவாஜி காலத்துல இல்லை ராஜராஜ சோழன் காலத்துல இருந்து வேணாலும் இருந்துட்டு போகட்டும் ஒர்கவுட் ஆகுதா இல்லையா அதை மட்டும் பாரு இதுதா பிளான் நாளைக்கு ஒரு திருடன கூட்டிட்டு வாரேன் பிளான் பண்ண மாதிரியே பன்றோம் உன்னோட மாமனார் உன்னோட வீரத்தை பாத்துட்டு உன்ன பாத்தாலே மிரள போறாரு பாரு" என்று கூறிவிட்டு எதையோ சாதித்தவனை போன்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடந்தான், விஷ்ணு செல்வதை பார்த்து தலையில் அடித்து கொண்ட இனியன் "கடவுளே இவனால நாளைக்கு என்ன பஞ்சாயத்து வர போகுதோ" என்று புலம்பி கொண்டிருக்க மாயதீரனோ "மகனே உனக்கு நாளைக்கு இருக்குடா நாளையோட உன்னோட காதலுக்கு சங்கு ஊதுறேன்டா"என்று மனதில் எண்ணி கொண்டான், விஷ்ணு சென்றவுடன் தனது சக்தி மூலம் மாயதீரன் அருகில் தோன்றிய மைத்ராவோ மாயதீரா என்ன நடந்தது இங்கு என்று கேட்க மைத்ராவை பார்த்து வில்லத்தனமான சிரித்த மாயதீரன் "நாளையோட இனியன் காதலுக்கு சங்குதான்" என்று கூறிவிட்டு மறைந்து போனான், என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் மைத்ராவும் இனியனின் வாடிய முகத்தை பார்த்துவிட்டு அவளும் மறைந்து போனாள்.

மறுநாள் மாலையில் மகிழ்நிலாவின் அப்பா வழக்கமாக வாக்கிங் செல்லும் இடத்திற்கு இனியன் விஷ்ணு இருவரும் வந்தனர், இனியன் "டேய் விஷ்ணு நீ சொன்னமாதிரி எல்லாம் சரியா நடக்கும்ல அந்த திருடன் மாட்டிக்கிட்டாலும் நம்மள கோர்த்து விடமாட்டான்ல" என்று கேட்டு கொண்டிருக்க விஷ்ணுவோ "இனியா என்னடா நீ இதுக்கெலாம் பயந்துகிட்டு நம்மாளு பெரிய திருடன்டா யாருகிட்டயும் மாட்டிக்க மாட்டான் உசேன் போல்ட் கூட வேகமா ஓடுறது எப்படினு நம்மாளுகிட்டதா காத்துக்கிட்டாருனா பாரேன், அதனால நீ பயப்படாத நா பாத்துக்குறேன் உன்னோட காதல சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு ஓகே" என்று கூறிவிட்டு தன் மொபைலில் திருடனை அழைத்தான்.

இனியன் விஷ்ணு அருகில் வந்த திருடன் விஷ்ணுவை பார்த்து "வணக்கம் தல யாரு பேக்க அடிக்கணும் வேகமா சொல்லு தல நமக்காக நிறைய கஸ்டமர் வைட்டிங் உங்களுக்கு பேக் அடிச்சு கொடுத்துட்டு இன்னும் ரெண்டு பேருக்கு பேக் அடிச்சு கொடுக்கணும்" திருடன் கூறியதை கேட்ட விஷ்ணு "பாத்தியா மச்சா நா ஏற்பாடு பண்ணிருக்க ஆள" என்று இனியனை பெருமையாக பார்த்தான்.

இனியனோ விஷ்ணுவை கண்டுகொள்ளாமல் திருடனிடம் "இங்க பாரு நீ திருடுறதை விட முக்கியமான விஷயம் யாருகிட்டயும் மாட்டிக்க கூடாது அப்படியே மாட்டுனாலும் எங்கள கோர்த்துவிட கூடாது சரியா, நீ பேக் அடிச்சுட்டு அந்த ஏரியா முனைய திரும்புனதும் எனக்காக வெயிட் பண்ணு நா வந்து உங்கிட்ட பேக் வாங்கிட்டு வந்துறேன் சரியா" இனியன் கூறியதை கேட்ட திருடன் "என்ன தல அசிங்க படுத்துற நாங்கலாம் ஓட ஆரம்பிச்சா எங்கள யாராலயும் பிடிக்க முடியாது நாங்கல்லாம் பிரச்சனைன்னு வந்தா தண்ணி மேலயே ஓடுவோம் நீ பயப்படாத ஆள மட்டும் காட்டு தல பேக் அடிச்சுட்டி உங்கிட்ட கொடுத்துட்டு அமௌன்ட்ட வாங்கிட்டு போய்கிட்டே இருக்கேன்"

இவர்களுக்கு அருகில் தோன்றிய மைத்ரா என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க மாயதீரானோ மர்மமாக புன்னகைத்தான். மாயதீரனின் புன்னகையை பார்த்த மைத்ராவோ மனதிற்குள் "ஆஹா மாயதீரன் ஏதோ செய்ய போகிறான் கவனமாக இருக்க வேண்டும்" என்று எண்ணி கொண்டாள்.

மகிழ்நிலாவின் அப்பாவோடு மகிழ்நிலாவும் வருவதை பார்த்த இனியன் வேற பொண்ணுகிட்டதா பேக் அடிக்க சொல்லலாம்ன்னு பாத்தோம் என்னோட செல்ல குட்டியே கூட வாரா அவகிட்டயே பேக் அடிச்சு அதை அவ கிட்ட திருப்பி கொடுத்தா அவளையும் இம்ப்ரெஸ் பண்ணலாம் ஜாலி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று மனதில் எண்ணிக்கொண்டு திருடனிடம் "அங்க பாரு நா அவருகிட்ட போய் பேசிகிட்டு இருப்பேன் நீ அந்த சமயத்துல அவரு பக்கத்துல மஞ்ச கலர் சுடிதார் போட்டு அவருக்கு பக்கத்துல நடந்து போகுது பாரு பொண்ணு அவகிட்ட இருந்துதா பேக் அடிச்சுட்டு ஓடணும் சரியா நீ ஏரியாவ தாண்டி ஓடுனதும் நா உங்கிட்ட பேக் வாங்கிக்குறேன்" என்று கூறிவிட்டு மகிழ்நிலாவை நோக்கி நடக்க தொடங்கினான்.

மகிழ்நிலாவும் அவளின் தந்தையும் பேசிக்கொண்டு நடந்து செல்லும் போது அவர்கள் முன் போய் நின்ற இனியன் "அங்கிள் நா உங்ககிட்ட கொஞ்ச பேசணும்" என்று கூற மகிழ்நிலாவின் தந்தையோ "உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல என்னோட பொண்ணும் உன்ன பிடிக்கலைன்னு சொல்லிட்டா இனிமே தேவையில்லாம எங்கள டிஸ்டர்ப் பண்ணாத" என்று விட்டு முன்னேறி நடந்தார்.

அவருக்கு முன்பு மீண்டும் போய் நின்ற இனியன் "அங்கிள் உங்க கோபம் நியாயம்தா ஆனா என்னோட நிலைமையும் கொஞ்ச புரிஞ்சுக்கோங்க யாரோ எனக்கே தெரியாம நா குடிச்ச கலர்ல ட்ரிங்க்ஸ் மிஸ் பண்ணிட்டாங்க நா என்ன பண்ண முடியும் பர்த்டே பார்ட்டி வேற அதனால எனக்கு ஏதும் பண்ண முடியல புதுசா குடிச்சதாலதா வாமிட் பண்ணேன் நீங்களே யோசிங்க ரெகுலரா குடுக்குற யாராவது கொஞ்ச குடிச்சதுக்கே வோமிட் பண்ணுவாங்களா எனக்கு தெரியாம கொடுத்ததாலும் முதல் முதலா குடிச்சதாலும்தா நா வோமிட் பண்ணேன். என்று வாய்க்கு வந்தவாரு பொய்களை அடுக்கி கொண்டு சென்றான், நா மகிய உயிருக்கு உயிரா நேசிக்குறேன் என்னோட உலகமே மகிதா எனக்கு அம்மா அப்பா இல்ல மகிதா எனக்கு எல்லாம் அவ விசயத்துல நா எப்படி விளையாடுவேன், மகிக்கும் நான்தா உயிர் நீங்க என்ன தவிர வேற யாருக்காவது அவளை கல்யாணம் பண்ணி கொடுத்தா அவ வாழ்வா ஆனா சந்தோசமா வாழ மாட்டா இவ்வளவு பிரச்சனை நடந்தும் நா கொடுத்த மோதிரத்தை தூக்கி ஏறிய முடியாம கைல மாட்டிருக்கவ என்னை மட்டும் எப்படி மனசுல இருந்து தூக்கிபோட்டு நிம்மதியா வாழ்வா சொல்லுங்க" என்று கேட்டு விட்டு அவரின் முகத்தை பார்க்க அவரோ மகிழ்நிலாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தார் அவளோ நடப்பது எதுவும் புரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் இவர்கள் அருகில் நடந்து வந்த திருடன் மகிழ்நிலாவின் பேக்கை புடுங்கி கொண்டு ஓட மகிழ்நிலா ஐயோ என்னோட பேக் என்று கத்த தொடங்கினாள், இனியனோ கவலைபடாத பேபி இப்ப பாரு அவனை எப்படி பிடிக்கிறேன்னு என்று கூறிவிட்டு திரும்பி பார்க்க அந்த திருடனின் அருகில் ஓடி கொண்டிருந்தார் மகிழ்நிலாவின் தந்தை இனியனோ மனதிற்குள் "யோவ் கருங்கரடி நீ எல்லாம் மனுஷனாயா இந்த வயசுல என்ன ஓட்டம் ஓடுற நா அந்த திருட்டு பயலுக்கு செலவு பண்ண பத்தாயிரம் ரூபாயும் வேஸ்ட்டா போயிரும் போலயே" என்று எண்ணி கொண்டு இனியனும் வேகமாக திருடனை நோக்கி ஓடினான்.
 

Nagaraj

New member
Feb 3, 2020
10
8
3
காதல் மெய்ப்பட 6


திருடனோ தனக்கு பின்னால் ஐம்பதுக்கு மேற்பட்ட வயதிலும் இருபத்தைந்து வயது இளைஞனை போன்று பாய்ந்து ஓடி வருபவரை கண்டு உயிரை வெறுத்து ஓட தொடங்கினான், மாயதீரனோ புன்னகையுடன் தனது மந்திர சக்தி மூலமாக திருடனுக்கு முன் ஒரு சேற்றை உருவாக்க நேராக ஓடிக்கொண்டிருந்த திருடன் சேற்று நீரில் வழுக்கி கீழே விழுந்தான், கீழே விழுந்த திருடனை மகிழ்நிலாவின் தந்தை பிடித்து அடிநொறுக்க ஆரம்பித்தார்.

இனியனோ மனதினுள் "அட பாவி திருட்டுபயலே தண்ணி மேலயே ஓடுவேன்னு சொல்லிட்டு இப்படி தண்ணி வழுக்கி விழுந்துட்டியேடா போச்சே நம்மள பத்தி ஏதாவது ஒளறுனா இந்த கருங்கரடி நம்ம கடிச்சு குதறிருமே டேய் விஷ்ணு ஐடியாவா கொடுக்குற கைல மாட்டுன செத்தடா" என்று மனதில் எண்ணிகொண்டு திருடன் அருகில் சென்றான்.

இனியன் அருகில் செல்வதற்குள் மகிழ்நிலாவின் தந்தை திருடனை மொத்தி எடுத்திருந்தார், இனியன் என்ன செய்வது என்று குழம்பி கொண்டிருக்க அதற்குள் அவர்களை சுற்றி கூட்டம் கூட ஆரம்பித்தது அதற்குள் பலர் இவன எல்லாம் சும்மா விட கூடாது போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுக்கணும் என்று கூற இனியனோ என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போனான் அப்போது அவர்கள் அருகில் வந்த விஷ்ணு ஒன்றும் தெரியாததை போல "என்ன ஆச்சு இனியா என்ன இங்க கூட்டம்" என்று கேட்க இனியனோ "இந்த திருட்டு பய நம்மை மகிகிட்ட இருந்து பேக் திருடிட்டு ஓட பாத்த நல்ல வேல மாட்டிக்கிட்டாடா இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் உனக்கு தெரிஞ்சவருதான நீயே இவனை அவருகிட்ட பிடிச்சு கொடுத்துருடா".

இனியன் கண்ணை காட்டியவுடன் விஷ்ணுவோ "சரி மச்சி நீ நிலா கிட்டயும் உன்னோட மாமனார் கிட்டயும் பேசு நா இந்த திருடனா கூட்டிட்டு போய் ஸ்டேஷன்ல ஒப்படைக்கிறேன்" என்று அருகில் இருந்த ஆட்டோவில் அந்த திருடனை ஏற்றி கொண்டு தப்பித்தாள் போதும் என்று விஷ்ணு கிளம்பிவிட்டான். மாயதீரானோ நல்ல வாய்ப்பு போய் விட்டதே என்று வருந்தினான்.

விஷ்ணுவை அந்த இடத்தில் பார்த்த மகிழ்நிலா இது அனைத்தும் இவர்களின் திட்டம்தான் என்று புரிந்து இனியனை முறைத்தாள். இனியனோ இதற்க்கு மேலும் இங்கு இருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து "அங்கிள் நா கிளம்புறேன் நீங்க மகிய பாத்து கூட்டிட்டு போங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து விட்டால் போதுமென்று தெறித்து ஓடிவிட்டான்.

அந்த சம்பவத்தின் பிறகு இனியன் மருத்துவமனையில் மகிழ்நிலாவை விளையாட்டாக கூட சீண்டுவதில்லை அவனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினான், ஒரு வாரம் கழித்து மகிழ்நிலாவின் தந்தை மகிழ்நிலாவிடம் நாளை உன்னை பெண் பார்க்க வருவதாக கூற அன்று இரவு முழுவதும் மகிழ்நிலாவிற்கு இனியனை நினைத்து தூங்கா இரவாகவே கடந்தது, இனியனை அழைக்க எத்தனை முறை மொபைலை எடுத்தாலும் வேண்டாம் என்று மீண்டும் வைத்து விட்டாள்.

ஆதவன் யாருக்கும் காத்திருக்காமல் தன் செவ்வண்ண கதிர்களை பாய்ச்சி மலர்களை வெட்கள் கொள்ள செய்து பூக்க வைக்க ஆரம்பித்தது. ஆதவனின் கதிர்பட்டு மலர்ந்த தன் தோட்டத்தின் பூக்களின் நடுவே அமர்ந்து கொண்டு தன் கவலையை அந்த மலர்களின் அழகை கண்டு ரசிப்பதில் மறக்க நினைத்து தோற்று கொண்டிருந்தாள் மங்கையவள், அவளின் பின்னால் வந்து நின்ற அவளின் தந்தை "நிலாமா என்னடா தங்கம் ஒரு மாதிரி இருக்க இன்னைக்கு உன்னை பொண்ணு பாக்க வாரங்கடா உனக்கு சம்மதம்தான செல்லம்" என்று ஆவலோடு கேட்க தன் தந்தையின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பை கண்டவள் "அப்பா இது வரை எல்லாமே எனக்கு பாத்து பாத்து செஞ்ச நீங்க என்னோட கல்யாண விசயத்துலயும் கண்டிப்பா எனக்கு நல்லது எதுவோ அதைதா செய்விங்க எனக்கு ஒரு வருத்தமும் இல்லப்பா" என்று தன் விரல் மோதிரத்தை பிடித்து கொண்டே கூறினாள்.

அவளின் மோதிரத்தை அவளது கரங்கள் பற்றி இருந்ததை பார்த்து மென்மையாக சிரித்த அவளின் தந்தை "சரிடா செல்லம் நீ வேகமா கெளம்புடா மாப்ள வீட்டுக்காரங்க வந்துகிட்டு இருக்காங்க" என்று அவளை தயாராக அனுப்பிவைத்தார்.

மாப்பிளை வீட்டிலிருந்து அனைவரும் வந்ததும் தங்கம் நிற புடவையில் மல்லிகைசரம் தலையில் தொடுத்து, தங்க ஆபரணங்கள் அணிந்து தங்க பதுமையாக வந்தவளை அங்கிருந்த அனைவரது விழிகளும் இமைக்க மறந்து பார்த்தன, எதிரில் இருக்கும் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தன் அன்னையின் கையில் இருந்த காபியை வாங்கி அனைவருக்கும் கொடுக்க ஆரம்பிக்க ஒருவரின் முன் காபியை நீட்டும் போது மாப்பிளைய நல்லா பாத்துக்கோமா என்று பின்னால் இருந்து வந்த குரல் கேட்டு தனக்கு முன்பு அமர்த்திருந்தவனை நிமிர்ந்து பார்த்த மகிழ்நிலா தனக்கெதிரில் புன்னகையுடன் அமர்ந்திருந்த இனியனை பார்த்து அதிர்ச்சியில் கையில் இருந்த தட்டை இனியன் மீது சாய்க்க தட்டில் இருந்த அனைத்து டம்ளரில் இருந்த கொதிக்கின்ற காபியும் இனியன் மீது விழுந்தது.

கொதிக்கின்ற காபியானது மேலே கொட்டியதும் பதறி துடித்த இனியன் கத்த முடியாமல் எழுந்து வலியை பொறுத்துகொண்டு சமாளிக்க விஷ்ணுவும் மாயதீரனும் விழுந்து விழுந்து சிரித்தனர், மகிழ்நிலாவின் தந்தை நிலாமா பாத்து கொடுக்க கூடாத மாப்பிளைய மேல கூட்டிட்டு போய் வாஷ் பண்ண சொல்லுமா என்று கூறியவுடன் இனியனை மாடியில் தான் அமைத்த தோட்டத்திற்கு அழைத்து சென்று குழாயில் வாஷ் செய்ய கூறினால்.

இனியன் வாஷ் செய்துவிட்டு நிலாவை பார்க்க அவளோ "டேய் பிராடு என்னடா சொல்லி என்னோட அப்பாவ ஏமாத்துன" என்று கேட்க "பேபி சத்தியமா நா ஒன்னும் பண்ணல செல்லம் மாமாதா எனக்கு கால் பண்ணி என்னை பாக்கணும்னு சொன்னாரு அது உனக்கு தெரிய கூடாதுனு வேற சொன்னாரு நா கூட என்னை ஆளு வச்சு மட்டை பண்ணதா கூப்பிடுறாருனு நெனச்சேன், ஆனா நேருல போனதும் என்னை பார்த்து நீ உண்மையா என்னோட பொண்ணை காதலிக்கிறியான்னு கேட்டாரு நானும் உன்னை உயிருக்குயிரா காதலிக்கிறேன்னு வசனமெல்லாம் பேசினேன் அப்பொறம் கொஞ்ச நேரம் பேசுனோம் என்னோட நிலைமை அன்னைக்கு நடந்தது எல்லாம் சொல்லி மாமாவ சம்மதிக்க வச்சேன் அவரும் என்னோட உண்மையான காதல புரிஞ்சுகிட்டு முழு மனசோட உன்னை எனக்கு கல்யாணம் பண்ணித்தாரேன்னு சொல்லிட்டாரு" என்று சிரித்து கொண்டே கூறினான்.

இனியன் கூறியதை கேட்ட மகிழ்நிலா "டேய் உண்மைய சொல்லு எனக்கு வேற எங்கயோ இடிக்குது என்னோட அப்பா காரணமே இல்லாம உன்னை கூப்பிட்டிருக்க மாட்டாரு அதுவும் நீ அப்படி நடந்துகிட்ட அப்பறமும் உன்னை கூப்பிட்டு பேசிருக்காருன்னா வேற என்னமோ இருக்கு என்னடா அது உண்மைய சொல்லுடா" என்று சந்தேகமாக கேட்டாள்.

இனியனோ இளித்துக்கொண்டே "அதுவா பேபி அன்னைக்கு உங்கிட்ட இருந்து ஒரு திருடன் பேக்க புதுக்கிட்டு போனான்ல".. மகிழ்நிலா "இல்லை நீங்க புடுங்கிட்டு ஓட வச்சீங்க".. இனியன் "பேபி நீ ரொம்ப அறிவாளி பேபி சரியா கண்டுபிடிச்சுட்டா அன்னைக்குதா நா உங்க அப்பா கிட்ட பேசும் போதுகூட நீ என்னை இன்னும் நெனச்சுக்கிட்டு இருக்கத்தாலதா இன்னும் நா கொடுத்த மோதிரத்தை கழட்டாம இருக்கன்னு சொன்னேன்லா அதுலதா நீ இன்னும் என்னை லவ் பன்றன்னு நம்பி நீ ஹாப்பியா இருக்கணும்னு நம்ம கல்யாணத்துக்கு உன்னோட அப்பா சம்மதிச்சாரு" என்று கூறுபவனை நிலா பத்திரகாளியாக மாறி முறைத்து கொண்டிருந்தாள்.

அருகில் இருந்த கட்டையை எடுத்தவள் "ஏண்டா டேய் நா என்னோட முதல் மாச சம்பளத்துல வாங்குன என்னோட மோதிரத்தை நீ வாங்கி கொடுத்தாதுனு வாய்க்கூசாம போய் சொல்லுற நானும் நீ என்னடா சொல்லுறன்னு முழிச்சுகிட்டு இருக்கேன் அதுக்குள்ள உன்னோட ஆளு வந்து என்னோட பேக் புடுங்கிட்டு போய்ட்டான் நீ என்னடானா அத வச்சே என்னோட அப்பாவை ஏமாத்திருக்க பிராடு பிராடு மோதிரம் வாங்கித்தார மூஞ்சிய பாரு இது வரையும் எனக்கு ஒரு குச்சிமிட்டாய் கூட வாங்கி கொடுத்ததில்ல இதுல மோதிரம் வாங்கி கொடுத்தேன்னு எங்க அப்பாவை ஏமாத்திருக்க என்று கட்டையால் அடித்தாள்".

இனியனை பார்த்த மாயதீரன் "அடபாவி நான் கூட என்னுடைய நிலா செல்லம் உனக்காக வருந்துவதாக தவறாக நினைத்து விட்டேனே ஆனால் நீ அனைவரது காதிலும் பூவை சுற்றிவிட்டாயேடா பாவி" என்று புலம்பி கொண்டிருக்க மாயதீரனை பார்த்து சிரித்தாள் மைத்ரா, மைத்ராவின் முகத்தில் புன்னகையை கண்டவன் அவளின் புன்னகையில் முழுதாய் தன்னை தொலைத்தான், மைத்ராவோ மாயதீரனின் பார்வையில் மாற்றம் உணர்ந்து பாவையவள் தலைகுனிந்தாள், இவர்களின் இந்த அழகிய தருணத்தை கலைத்தது இனியன் நிலாவின் கையில் உள்ள கட்டையால் அடிவாங்கி அலறும் சத்தம்.

தன்னால் முடிந்த அளவு இனியனை அடித்தவள் "மரியாதையா ஓடிரு எனக்கு உன்மேல கொஞ்ச கூட நம்பிக்கையில்லை வாய திறந்தாலே பொய்தா ஆனா எனக்கு ஒண்ணுதா புரியல இவ்வளவு விளையாட்டுத்தனமா பிராடா இருக்க நீ எப்படி இவ்வளவு பெரிய சர்ஜன் ஆனான்னு அது மட்டுமில்லாம எப்படி சர்ஜரி பண்ணும்போது மட்டும் அவ்வளவு பொறுப்பா இருக்கன்னு" என்று கேட்டவுடன் இனியன் கண்கள் கலங்கின.

இனியன் கலங்கிய கண்களுடன் "நா டாக்டர் ஆகணும்கிறது என்னோட கனவுயில்லை என்னோட அம்மாவோட கனவு சின்ன வயசுல இருந்து என்னை டாக்டர் ஆகணும்ன்னு சொல்லி சொல்லி வளத்தாங்க என்னோட பனிரெண்டாவது எக்ஸாம் எல்லாம் முடிஞ்சு நா லீவ்ல இருந்தப்போ ஒரு நாள் அம்மா அப்பா போன கார் ஆக்சிடண்ட் ஆகி அப்பா அந்த இடத்துலயே இறந்துட்டாங்க அம்மா மட்டும் உயிர கைல பிடிச்சுக்கிட்டு முகமெல்லாம் ரெத்ததோட உடம்பெல்லாம் அடிபட்டு என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க அவுங்களுக்கு டாக்டர் டிரீட்மென்ட் கொடுத்துட்டு ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா அம்மாவை காப்பாத்திரலாம்னு சொன்னாரு எங்க கிட்ட பணத்துக்கு குறையில்லை அதனால அம்மாக்கு உடனே ஆபரேஷன் பண்ண சொன்னேன், ஆனா ஆபரேஷன் நடக்கும் போது அந்த டாக்டர்க்கு வீட்ல ஏதோ ப்ரோப்லேம்ன்னு ஆபரேஷன்ல கவனமில்லாம தப்பா ஆபரேஷன் செஞ்சு என்னோட அம்மா இறந்துட்டாங்க அதுனாலதா, எந்த ஆபரேஷன் செஞ்சாலும் நா கவனமா பன்றேன் அந்த நேரத்துல மட்டும் எதை பத்தியும் யோசிக்காம சீரியஸா இருக்கேன்" என்று இனியன் தன் கன்னத்தில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டு கூறினான்.

இனியன் கூறி முடித்ததும் அவனை கட்டியணைத்து இனியனின் நெஞ்சின் மீது தஞ்சம் கொண்ட மகிழ்நிலா "என்னை மன்னிச்சிரு பேபி இனிமே நா உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன் நீ இனிமே அழக்கூடாது சரியா என்னோட இனி செல்லம் சிரிச்சு கிட்டே இருக்கனும்" என்று கூறி இனியனை குனிய வைத்து அவனது நெற்றியில் தன் முத்திரையை பதித்தாள்.
 

Nagaraj

New member
Feb 3, 2020
10
8
3
காதல் மெய்ப்பட 7


இனியனின் கண்ணீரில் கரைந்த மாயதீரன் அவர்களின் காதலை எண்ணி மெல்லியதாக புன்னகைத்து கொண்டே மைத்ராவை பார்த்தான் அவளது விழிகளும் கண்ணீரில் நனைந்திருக்க மைத்ராவின் கரம் பற்றிய மாயதீரன் "நீ கூறியது உண்மையே காதல் இன்னும் பலரிடம் உயிர்ப்புடனே உள்ளது தன்னவனின் விழிகளில் நீரை கண்ட பெண்ணவளின் காதல் உள்ளம் அவனது தவறுகள் யாவும் மறந்து அவனுக்கே அன்னையாகும் அதிசியம் காதலில் மட்டுமே நிகழும்" மாயதீரனின் கரத்தை மேலும் அழுத்தி பிடித்த மைத்ரா "உயிர்கள் தோன்றிய நொடி உண்டானது காதல் உலகம் மொத்தமாக அழிந்தால் மட்டுமே காதல் அழியும், உயிர்கள் யாவும் அழிந்தாலும் நினைவு சின்னங்களாக காதல் என்றும் உயிர் வாழும்."

இனியனையும் அவனது நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டிருந்த மகிழ்நிலாவையும் பார்த்த மைத்ரா "நான் வென்றுவிட்டேன் அவர்கள் இணைந்து விட்டார்கள் மீண்டும் வாய்ப்பிருந்தால் சந்தீப்போம்" என்று கூறிவிட்டு மறைய போனவளின் கரம் பற்றிய மாயதீரன் "காதலின் தேவதையே போட்டியில் வென்ற தாங்கள் தோற்ற என்னிடமிருந்து எதுவும் பெறாமல் செல்கிறீர்கள்" மாயதீரனின் கரத்திலிருந்து தனது கரத்தை விடுவித்தவள் "காதல் என்னும் உணர்வை நீ முழுதாய் உணர்ந்து கொண்டதே போதும் அதை விட எனக்கு வேறு எதுவும் தேவையில்லை" என்று கூற மாயதீரனோ "காதலை முழுதாய் உணர்ந்ததால்தான் கூறுகிறேன் உன்னிடம் ஆயுள் முழுதும் அடிமையா வாழ வேண்டுமென்று உன் அடிமையாக ஆசையடி" என்று காதலோடு கூறுபவனை பார்த்து கொண்டே தன் விழியில் கோர்த்த கண்ணீரை துடைத்து கொண்டு "மற்றவரின் காதலுக்கு ஆதாரமாக இருக்க மட்டுமே எனக்கு உரிமையுள்ளது காதலிக்க எனக்கு உரிமையில்லை" என்று கூறிவிட்டு மறைந்து போனாள் மாயதீரணும் தன் உருவத்தை ஒரு முறை பார்த்து விட்டு வலி கலந்த புன்னகையை சிந்தியவாறு மறைந்து போனான்.

இனியன் மகிழ்நிலா ஜோடிகள் காதலில் திளைத்து மகிழ்ந்திருக்க விரைவாக அவர்களின் திருமண நாளும் வந்தது, திருமணத்தின் முதல் நாள் மகிழ்நிலைவை கல்யாண மண்டபத்தின் மாடியில் திருட்டுத்தனமாக பார்த்த இனியன் "மகி பேபி வழக்கத்தை விட இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி செல்லம்" என்று அருகில் நெருங்க அவனது எண்ணம் புரிந்த மகிழ்நிலா கையில் இருந்த சிறிய அளவிலான பட்டன் கத்தியை அவன் முன்பு நீட்டி "டேய் நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும் மகனே ஒழுங்கா பின்னாடி போடா என்று மிரட்ட இனியனோ "அடிபாவி கட்டிக்க போறவேன்கிட்டயே இப்படி கத்திய நீட்டுறியேடி" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க மகிழ்நிலா இனியனின் கன்னத்தை கிள்ளி "மாமா நீ என்னதா சீன் போட்டாலும் எல்லாம் கல்யாணத்துக்கு அப்பொறம்தா" என்று கூறி சிரித்தாள்.

இவர்களின் கல்யாணத்தை காண வந்திருந்த மாயதீரனும் மைத்ராவும் இவர்களின் செல்ல சீண்டல்களை ரசித்து கொண்டிருந்தனர், அப்போது இனியனின் மொபைல் ஒலியெழுப்ப இனியனின் பாக்கெட்டில் இருந்து அவனது மொபைலை எடுத்த மகிழ்நிலா அதில் விஷ்ணுவின் பெயரை பார்த்துவிட்டு மொபைலை ஸ்பீக்கரில் போட விஷ்ணு போதையில் உளற ஆரம்பித்தான் "டேய் இனியா பசங்க எல்லாம் சரக்கு பத்தலன்னு சொல்லுறாங்கடா நீ போய் இன்னும் ஒரு பத்து பாட்டில் வாங்கிட்டுவாடா" என்று கூற இனியன் முறைக்கும் மகிழ்நிலாவை பார்த்து சிரித்து சமாளித்தான்.

இனியன் "டேய் விஷ்ணு மாடே நா மகி கூட இருக்கேன்டா அவுங்களுக்கு வேணும்னா நீ போய் வாங்கி குடுடா" என்று கூற விஷ்ணுவோ "டேய் துரோகி என்னோட சங்கவி டார்லிங்க என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு நீ மட்டும் ஹாப்பியா இருக்க என்னோட சங்கவி டார்லிங் என்னடானா உங்க கல்யாணம் நடந்ததும்தா என்னோட பேசுவேன்னு சொல்லிட்டா நீ என்னடானா நிலாகிட்ட உன்னோட அம்மா செண்டிமெண்ட் அதுஇதுன்னு பொய்யா சொல்லி நிலாவ கரெக்ட் பண்ணிட்ட உண்மைய சொல்லுடா அம்மகாகவா நீ ஆபரேஷன் பண்ணும்போது அப்படி இருக்க ஒழுங்கு மரியாதையா என்னோட சங்கவி டார்லிங்க என்னோட சேர்த்து வச்சிருடா என்று போதையில் உளறி கொண்டிருக்க" இனியன் மகிழ்நிலாவின் கையிலிருந்த மொபைலை புடுங்கி அழைப்பை துண்டித்தான்.

மகிழ்நிலா இனியனை பார்த்து முறைத்து கொண்டிருக்க மாயதீரனும் மைத்ராவும் அன்று அவன் கூறியது உண்மையில்லையா என்ற அதிர்ச்சியில் இருந்தனர், மகிழ்நிலா இனியனை முறைத்து கொண்டே "உண்மைய சொல்லுடா அன்னைக்கு சொன்னது பொய்யா" என்று கேட்க தனக்கு முன்பு பத்திரகாளியை போன்று நின்று கொண்டிருப்பவளை கண்டு அஞ்சிய இனியன் "பேபி நா சொன்ன எல்லாம் பொய்யில்ல அப்பா அம்மாக்கு ஆக்சிடன்ட் ஆனது எல்லாம் உண்மைதா ஆனா அக்சிடன்ட்ல அப்பாவோட சேர்த்து அம்மாவும் அதே இடத்துலேயே இறந்துட்டாங்க" என்று கூறுபவனை பார்த்து பாவமாக இருந்தாலும் தன்னிடம் பொய் கூறியதால் அவனை முறைத்து கொண்டிருந்தாள்.

மகிழ்நிலா முறைத்து கொண்டே "நீ சொன்னது பொய் சரி அப்பொறம் ஏன்டா ஆபரேஷன் தியேட்டர்குள்ள வரும் போது மட்டும் மொறச்சுக்கிட்டு அவ்வளவு சீன் போடுற என்னை கூட நிறைய டைம் ஆபரேஷன் தியேட்டர்ல வச்சு திட்டிருக்க" என்று கேட்டவுடன் இனியன் "அதுவா எனக்கு உண்மையா டாக்டர் படிக்க விருப்பமில்லை என்னோட அம்மாதா என்னை டாக்டர் படிக்க வைக்க ஆசைப்பட்டு என்னை மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க எல்லாம் பண்ணாங்க அந்த டைம்லதா அவுங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு வேற வழியில்லாம நா மெடிக்கல் படிக்க வேண்டியதா போச்சு ஆனா எனக்கும் பிளட்டுக்குமே சுத்தமா ஆகாது, எப்படியோ உருண்டு பெரண்டு டாக்டர் படிச்சு முடிச்சா என்னோட சித்தி வந்து உன்னோட அம்மா உன்னை பெரிய சர்ஜன் ஆக்க ஆசைபட்டான்னு சொல்லி MD படிக்க சொல்லி அவுங்களே அதுக்கான எல்லா ஏற்படும் பண்ணிட்டாங்க நானும் வேற வழியில்லாம MD படிச்சேன் ஆனா எனக்கு ரெத்தத்த பாத்தாலே அள்ளுவிடும் இதுல உடம்ப கிழிச்சு இதயத்தை ஆபரேஷன் பண்ண சொன்னா எப்படி இருக்கும் அதா ஆபரேஷன் பன்றதுக்கு முன்னாடி தியானம் செஞ்சு என்னை தயார்படுத்திகிட்டு அப்படியே பயத்த வெளிய காட்டாம கோபமா முகத்தை வச்சுக்கிட்டு சமாளிப்பேன்" என்று கூறுபவனை பார்த்து மகிழ்நிலாவிற்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை.

இனியனை பார்த்து பாவமாக இருந்தாலும் அன்று இவன் கூறியதற்காக தான் அழுதது நினைவு வர "டேய் உங்க அம்மாவை பத்தி பேசும்போது அழுகலாம் செஞ்சனேடா" என்று கூறுபவளை பார்த்து இனியன் சிரிக்க கடுப்பான மகிழ்நிலா "என்னை பாத்த உனக்கு நக்கலா இருக்க மகனே இருடா கல்யாணத்தை நிறுத்துறேன்" என்று செல்பவளை பின்தொடர்ந்தான்.

இனியனின் நிலையை பார்த்து மாயதீரன் சிரித்து கொண்டே மைத்ராவை பார்க்க அவள் மாயதீரனை பார்த்து முறைக்கவும், மைத்ரா முறைப்பதன் காரணம் தெரியாமல் மாயதீரன் மைத்ராவிடம் "காதல் தேவதையே ஏன் இப்படி முறைக்கிறீர்கள் நான் என்ன செய்தேன்" என்று குழப்பத்தோடு கேட்க மைத்ராவோ "ஒரு மானிடன் தனது காதலுக்காக எவ்வளவு போராடுகிறான் ஆனால் சில ஜென்மங்கள் இருக்கின்றன் தன் காதலை சொல்லவும் தைரியமின்றி" என்று கூறிவிட்டு விலகி நடக்க முற்பட மைத்ராவின் கரத்தினை பிடித்த இழுத்த மாயதீரன் அவளை தன் மார்போடு சேர்த்து இருக்கி அணைத்து அவளது இதழில் தன் இதழ் கொண்டு தன் காதலை கூற ஆரம்பித்தான்.

தன் காதலை தன்னவளுக்கு முழுதாக உணர்த்திவிட்டு அவளது இதழுக்கு விடுதலை கொடுக்க காதலின் தேவதையோ முதல் முறை காதலை முழுதாய் உணர்ந்தாள். இவர்கள் தன்னிலை அடைந்து திரும்பி பார்க்க இனியனும் தன்னவளின் இதழ்களில் தன் இதழ் கொண்டு தன் காதலை உணர்த்த தயாராகினான். அவ்விரு ஜோடிகளின் இந்த அழகிய நிலையை கலைக்க மனமின்றி நிலவும் மேகதின் பின் மறைந்து கொண்டது நாமும் அந்த நிலவோடு சேர்த்து இவ்விரு ஜோடிகளிடமிருந்து விடைபெறுவோம்...