காதல் களமாட வா!! - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,515
113
Super Super Super maa.... Semma semma episode...... ஆதி தான் அங்க MD nu kandupidichitaan... Resign letter yum ezhuthitaa avana பாக்க முடியல.... But letter ah கார்திக் வாங்கி கேசவன் kita koduthutaan... அவல paathutaan..... Ava poye ஆகனும் nu பிடிவாதம் பிடிக்கிற.... Enna aaga pooguthoo...
நன்றி சித்ரா................................................................
 
  • Love
Reactions: Chitra Balaji

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,515
113
அத்தியாயம் – 9

அவளது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை உள்வாங்கி கொண்டவனுக்கு நம்பிக்கை பிறந்தது.

கிண்டலான சிரிப்புடன் “இந்த கொலைகாரன் வேண்டாம் ஆனா அவன் கட்டிய தாலி மட்டும் வேணுமா?” .

அவனது பேச்சு மேலும் அவளை மிரட்ட “என்ன வம்பு பண்றீங்களா? ப்ளீஸ்!! என்னை விட்டுடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அவனோ இறுகிய முகத்துடனே ‘அதை தான் நானும் சொல்றேன். நான் கட்டிய தாலியை கழட்டி கொடுத்திடு. உன் பக்கமே வர மாட்டேன்”.

“இங்கே பாருங்க இந்த தாலியை வச்சு என்னை மிரட்டுகிற வேலை எல்லாம் வேண்டாம். எனக்கு உங்களைப் பிடிக்கல. இந்த மூணு வருஷமா என்னை விட்டு விலகி தானே நின்னீங்க? அப்புறம் இப்போ என்ன புதுசா?”

இருகைகளையும் சேர்த்து கட்டிக் கொண்டு அவளை நன்றாக ஆராயும் பார்வை பார்த்து “நானா உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னேன்? நீ தானே என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கேட்ட...அதுவும் நாம என்ன திருட்டு தாலியா கட்டிகிட்டோம்? எல்லோர் முன்னாடியும் தானே கல்யாணம் பண்ணினோம்? அப்போ இந்த தாலியோட மதிப்பு என்னனு உனக்கு தெரியும் தானே?”

அவனது கேள்விகள் அவளை தாக்க “அப்போ நீங்க தான் என் அண்ணனை கொன்னீங்கனு தெரியாதே” என்று முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்.

அவளது அழுகை அவனை என்னவோ செய்ய “இதையே எத்தனை நாளைக்கு சொல்வ சக்தி? நான் எதையுமே மறுக்கல, மறைக்கவும் இல்ல. நானோ நீயோ எதிர்பாராமல் நடந்தது தான் எல்லாமே. வாழ்க்கைப் பாதையில் விலகி செல்ல வேண்டிய நம்மை சேர்த்து வச்சு விளையாட்டு காட்டிட்டு இருக்கு. இதில் முடிவெடுக்க வேண்டியது நீ தான். உன்னுடைய எந்த முடிவிற்கும் நான் கட்டுப்படுவேன். ஆனா ஒரே விஷயம். என்னை விட்டு விலகனும்னு நினைச்சா தாலியை கழட்டியே ஆகணும்” என்றான் அழுத்தமாக.

இன்றைய நாகரீக உலகத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் தாத்தா, பாட்டியோடு இருந்தவளுக்கு விவாகரத்து, தாலியை எளிதாக கழட்டி தூக்கிப் போடுவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று. அவள் பார்த்த உலகம் வேறு. அவன் தாலியை கழட்டி கொடு என்று கேட்டதே அதிர்ச்சி. அவனோடு வாழவில்லை என்றாலும், தனது வாழ்வின் முதலும், முடிவாக அவன் மட்டுமே என்று எண்ணி இருந்தாள்.

ஆனால் அவன் வேறு பேசவும் பயந்து போனவள் கலக்கத்துடன் “நா...நான் என்ன பண்ணனும்?” என்றாள் பயத்துடன்.

அவள் அப்படிக் கேட்டதும் மனதிற்குள் சந்தோஷமானவன் “என்னோட வீட்டுக்கு வரணும். ஐ மீன்...என்னோட வாழ வரணும்” என்றான்.

அவன் சொன்னதும் “என்ன!” என்றாள்.

மெல்லிய சிரிப்புடன் “இப்போதைக்கு என்னோட கம்பானியனா வந்தா போதும். மற்றதெல்லாம் மெதுவாக பார்த்துக்கலாம்” என்றான் சிரிப்புடன்.

அவான் சொன்னதை எல்லாம் விட்டுவிட்டு “உங்களுக்கு எப்படி இங்கிலீஷ் எல்லாம் தெரியுது?” என்றவளை இறுக கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற மனதை மறைத்து “ஏன்? அதென்ன அவ்வளவு கம்ப சூத்திரமா?” என்றான் விஷம சிரிப்புடன் என்றபடி அவளருகே நெருங்கினான்.

அவளோ பின்னாடியே நகர்ந்து கொண்டே “நான் ரேணு வீட்டிலேயே இருக்கிறேனே. நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்!!’ என்றாள் கெஞ்சலாக.

அவனோ அவளை நெருங்கிக் கொண்டே “என் பொண்டாட்டி என்னோட தான் இருக்கணும். அதுக்கு மறுத்தா” என்றவன் கழுத்தை காட்டி கையை நீட்டினான்.

அவனது செயலில் கோபமெழ “என்ன நீங்க தாலியை கழட்டிக் கொடு கொடுன்னு கேட்குறீங்க? இதெல்லாம் நல்லது இல்ல. என்னால உங்க கிட்ட வேலை கூட பார்க்க முடியாது. நான் ராஜினாமா கொடுக்கிறேன்” என்றாள் முறைப்புடன்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,515
113
அவளது பேச்சைக் கேட்டு குறும்பு புன்னகையுடன் இடுப்பை வளைத்து தன்னருகே இழுத்து “அப்படி எல்லாம் என்னை விட்டு ஓட முடியாதுடி பொண்டாட்டி. ரெண்டு வருஷம் காண்ட்ராக்ட் போட்டிருக்கு. இங்கே தான் வேலை செய்யணும்னு” என்றவனது விரல்கள் அவளது முக வடிவை அளக்க ஆரம்பித்தது.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் கண்ணீருடன் “அப்போ ப்ளான் பண்ணி தான் எல்லாம் பண்ணி இருக்கீங்க? நாங்க பாட்டுக்கு நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருந்தோம். சென்னைக்கு வந்த எங்க அண்ணனை குத்தி கொன்னு, எங்கப்பாவையும், அப்பத்தாவையும் அந்த அதிர்ச்சியில போக வச்சு என்னை தனி மரமா ஆக்கினது போதாதா? இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் அழுகையுடன்.

மீண்டும் மீண்டும் அவள் அதையே பேச ஒருவித இயலாமையோடு “நீ என்ன பேசினாலும் நான் சொல்றது ஒரே விஷயம் தான். நீ என்னோட வந்தாகணும்” என்றான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு.

அவன் விட மாட்டான் என்பது புரிய, கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு “வந்து தொலைக்கிறேன்! ஆனா என் கிட்ட நெருங்க நினைச்சா என்னையே அழிச்சுக்குவேன்” என்றாள் கோபமாக.

அவளை கீழ்ப் பார்வை பார்த்து “நோ டென்ஷன் கூல் பேபி! நீ என்னோட வந்தா போதும்” என்றான் இதழ்களில் எழுந்த சிரிப்பை மறைத்தபடி.

அவனது சிரிப்பை கண்டு கொண்டவள் “நான் சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. சொன்னதை செய்வேன். அப்புறன் இன்னொரு விஷயம். நீங்களும் நானும் ஒரே ரூமில் தங்க முடியாது. எனக்கு தனி ரூம் வேணும்”.

அவள் சொன்னதை கேட்டதும் சத்தமாக சிரித்தவன் “பாதுகாப்பு..ம்ம்..நோ வே! இப்போவே சொல்லிட்டேன் நீ என்னோட ஒரே ரூமில் தான் இருந்தாகணும். அப்புறம் இந்த கதைகளில் வருகிற மாதிரி என் ரூமில் ஒரு குட்டி ரூம் வச்சு அதில் உன்னை தங்க வைப்பேன்னு எல்லாம் நினைக்காதே. ஒரே ரூம் ஒரே பெட்” என்று கண் சிமிட்டினான்.

அவளுக்கு வியர்த்து வழிய “ப்ளீஸ்!! எனக்கு உங்களைப் பார்த்தாலே உங்க உடம்பு முழுக்க எங்க அண்ணனோட ரத்தம் தான் தெரியுது. அப்புறம் எப்படி?” என்றாள் கண்ணீர் வழிய.

அவளது பேச்சில் கடுப்பானவன் “அழுகையை நிறுத்து! இன்னொரு முறை இது உன் வாயில் வந்தா நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்றான் மிரட்டலாக.

லேசான விசும்பலுடன் அவனை மிரள மிரள பார்த்தவளைக் கண்டு அவனுக்கு பரிதாபமாக இருந்தது. விதி இழுத்து வைத்திருக்கும் விளையாட்டில் அவள் கைப்பாவையானதை என்ன சொல்ல..

“ஓகே! மதியம் நீ கிளம்பி போயிடு. எவனிங் நான் வந்து கூட்டிட்டு போறேன்”.

சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள் “ரேணு கிட்டேயும் அண்ணா கிட்டேயும் சொல்ல வேண்டாமா?”.

“சொல்லிடலாம்...அதுக்கு தான் நான் வரேனே”.

அவனுடன் போவதை விரும்பாதவள் “இங்கே பெர்மிஷன் கிடைக்காது. நமீதா கத்துவா” என்றாள் அவன் தான் இங்கு முதலாளி என்பதை மறந்து.

சிறு குழந்தை போல் சால்சாப்பு சொல்பவளை விழுங்கும் பார்வையால் வருடிக் கொண்டே “இனி, இங்கே உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றான் சிரிப்புடன்.

அரைமனதாக மெல்ல கதவருகே சென்றவள் வேகமாக திரும்பிப் பார்த்து “கண்டிப்பா போகனுமா?” என்றாள்.

அவனோ விஷமச் சிரிப்புடன் கையை நீட்ட அடுத்த நிமிடம் அடித்துபிடித்து அங்கிருந்து ஓடினாள். அதைக் கண்டு உல்லாசமாக சிரித்தபடி நாற்காலியில் சாய்ந்தான். சக்தி கேசவனின் அறையிலிருந்து ஓடுவதை பார்த்தபடியே வந்து அவன் முன் நின்ற கார்த்தி “என்ன ஒரே சந்தோஷமா இருக்கு? சக்தி ஒத்துகிட்டாளா?” என்றான் ஆச்சர்யமாக.

அரை கண்ணால் அவனை பார்த்து “ஏன் சாருக்கு வயிறு எரியுதோ?” என்றவன் நன்றாக எழுந்தமர்ந்து “உனக்கு ஒரு ஹெல்ப் பண்ணவா கார்த்தி? நம்ம ஆபிசிலேயே நல்ல பெண்ணா பார்த்து” என்றதும் கண்களில் பளபளப்புடன் “உண்மையாவா சொல்ற கேசவா?” என்றான் எதிர்பார்ப்புடன்.

உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “ம்ம்...உனக்கு பிடிச்ச மாதிரியே” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“யாரு-யாரு” என்று பறந்தான்.

“நமீதாவை பார்க்கலாமா? உனக்கு செட் ஆகும்” என்றான் மெல்லிய சிரிப்போடு.

முகத்தை சுளித்து “நான் உன்னை கேட்டேனா? எனக்கு ஜோடி வேணும்னு? அவளை கட்டினா ரூமுக்குள்ள விட்டு வெளுத்திடுவா. நான் குடும்பம் நடத்த தான் கேட்டேன் கும்மியடிக்க இல்ல” என்று சடைத்துக் கொண்டான்.

“ஹா..ஹா..பாவம்-டா அந்த பொண்ணும் நல்ல பொண்ணு தான். வேலைல ஸ்ட்ரிக்ட்டா இருக்கா” என்றான் சிரிப்புடன்.

கையெடுத்து கும்பிட்டு “நான் சாமியாரா போகலாம்னு இருக்கேன் என்னை விட்டுடு”.

அதைக் கேட்டு விழுந்து பிரண்டு சிரித்தவன் “சரி சரி உட்காரு! சக்தி கிட்ட பேசிட்டேன்-டா. அவ ஆழ் மனசில இன்னும் அவங்க அண்ணனோட கொலையைப் பற்றி தான் நினைச்சிட்டு இருக்கா. நான் நினைக்கிற மாதிரி எல்லாம் ஈஸியா போகும்னு தோணல” என்றான் யோசனையுடன்.

“சக்தியோட இடத்திலிருந்து பார்க்கும் போது நிச்சயம் அது மறக்க கூடிய விஷயமில்லை. அதே சமயம் இந்த மஞ்சள் கயிறு மேஜிக் எல்லாவற்றையும் மாற்றும் சக்தியும் உண்டு...நல்லதே நடக்கும். எப்போ கூட்டிட்டு போகப் போற?”

““இன்னைக்கு சாயங்காலமே”

“அடபாவி! இன்னைக்கேவா?”

“ம்ம்...மூன்று வருஷம் கொடுத்தாச்சு. இதுக்கு மேல டைம் வேஸ்ட் பண்றதாக இல்ல” என்று கண்சிமிட்டினான்.

அவன் மீது பொறாமையுடன் “ம்ம்..பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிட போறான். எனகென்ன ஒரு காஜல் அகர்வாலோ ஏதோவொரு ஹீரோயினை கனவில் பார்த்திட்டு டுயட் பாடிட்டு தூங்குறேன் சாமி” என்று அங்கிருந்து சென்றான்.

“டேய்! ஓவரா போறடா” என்றான் சிரித்தபடி.

தனது இருக்கைக்கு போன சக்தியோ இதை எப்படி தடுப்பது என்று புரியாமல் யோசனையிலேயே அமர்ந்திருந்தாள். யோசனையில் வேலை இருப்பதை மறந்து கணினியை வெறித்தபடி அமர்ந்திருந்தவளை கலைத்தது நமீதாவின் சத்தம்.

“வெல் டன்!” என்று கைகளையும் உரக்க தட்டி “பாகிங் செஷன் கர்ல்ஸ் எல்லோரும் இங்கே வாங்க” என்று அழைத்தாள்.

அவளின் கூக்குரலில் அதிர்ந்து போய் எழுந்து நின்ற சக்தி தன்னைச் சுற்றி நிற்பவர்களின் பரிதாப பார்வையை தாங்காமல் தலையை குனிந்து கொண்டாள்.

சக்தியை கையை காட்டி “வேலைக்கு வந்தா இவளை மாதிரி தான் சின்சியரா இருக்கணும். அதுவும் சிபாரிசில் வேலைக்கு வந்தா இப்படித்தான் ஒண்ணுமே தெரியாம இருக்கணும்” என்றாள் கிண்டலாக.

அனைவரின் முன்பு கேவலப்படுத்தும் அவளை என்ன செய்வது என்று புரியாமல் கலங்கிய கண்களோடு நின்றாள்.

தலை குனிந்து நின்றவளின் முன்பு சொடக்கு போட்டு “மார்னிங் உனக்கு கொடுத்த வேலையை முடிக்காம என்ன பண்ணிட்டு இருக்க? எதுக்கு எம்டியை பார்க்கனும்னு சொன்ன?’ என்று அனைவரின் முன்பும் கேள்வி கேட்டாள்.

அவளுக்கு கார்த்தியின் மூலியமாக சக்திக்கு அழைப்பு வந்ததை பற்றி தெரியாது. சக்தியாக கேசவனை சென்று பார்த்திருக்கிறாள் என்கிற ஆத்திரத்தில் இருந்தாள்.

அவளின் பேச்சும் செயலும் சக்தியின் தன்மானத்தை தூண்ட “நீங்க எனக்கு மேலதிகாரி மட்டும் தான். வேலையைப் பற்றி மட்டும் கேளுங்க. நான் எதுக்கு எம்டியை பார்த்தேன்னு உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அது என்னோட பெர்சனல்” என்றாள் துணிச்சலாக.

அவளது தெனாவெட்டான பேச்சில் கடுப்பான நமீதா “என்னை மீறி நீ எம்டியை பார்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுவும் வேலை சம்மந்தப்பட்டது தான்” என்றாள் எரிச்சலாக.

அவள் மீண்டும் அனைவரின் முன்பும் கேசவனை பார்த்ததை பற்றி பேச கடுப்பானவள் “நமீதா மேடம் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன். அது ஆபிஸ் சம்மந்தப்பட்டது இல்லை. அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்றாள்.

அவர்கள் இருவரின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் சக்தியின் பேச்சு தவறான எண்ணத்தை கொடுத்தது. அதை கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கோ வேகமாக எழுந்து கொள்ள “எங்கே போற?” என்று தடுத்தான் கேசவன்.

“டேய்! சக்தி மேல தப்பான அபிபிராயம் வருது-டா. நீ போய் சொல்லு என் மனைவி தான்னு” என்றான் கோபமாக.

மறுப்பாக தலையசைத்தவன் “சொல்ல வேண்டியது நானில்லை கார்த்தி. அவள் தான்”.

“டேய்! உங்க ஈகோவில் தீயை வைக்க” என்றான் எரிச்சலாக.

“இதுக்கு பேர் ஈகோ இல்லடா. அவ மனசார என்னை கணவனா உணரனும். தைரியமா எல்லோர் கிட்டேயும் நான் ஆதித்யாவின் மனைவின்னு சொல்லணும்” என்றான்.

அவனை முறைத்து “அதுக்குள்ள உங்க ரெண்டு பேர் பத்தியும் அசிங்கமான ஒரு கற்பனை எழும். இது தேவையா?”

“தேவை தான். அந்த கற்பனை தான் அனைத்துக்குமான தீர்வாக அமையும்” என்று எழுந்து கொண்டான்.

அவர்களின் பேச்சிற்கு ஏற்ப, நமீதா சென்றதும் பெண்கள் அனைவரும் தங்கள் வேலையில் மூழ்கினாலும் சக்தி அறியாமல் தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
100
40
18
இந்த கேசவன் full ஃபார்ம் la இருக்கான் maa... ஆனா இவன் panrathu மறுபடியும் avala manasu அளவுல பாதிக்காமல் இருக்கனும் nu தான் கவலை ah இருக்கு.... எப்படியோ மிரட்டி avala avanoda vara vechitaan... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,515
113
இந்த கேசவன் full ஃபார்ம் la இருக்கான் maa... ஆனா இவன் panrathu மறுபடியும் avala manasu அளவுல பாதிக்காமல் இருக்கனும் nu தான் கவலை ah இருக்கு.... எப்படியோ மிரட்டி avala avanoda vara vechitaan... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
Thankyou Chitra.........................................................................................
 
  • Love
Reactions: Chitra Balaji