காதல் களமாட வா!! - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
என்னயா nadakuthu inga paavam சக்தி ava charater ye அசிங்கம் படுத்துறங்க ava அது ethayum kavanikkum மனநிலை la illa.... Enna aaga pooguthoo...
நன்றி சித்ரா.......................................................................
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அத்தியாயம் – 17

நமீதாவிற்கு சக்தி மீது எழுந்துள்ள தவறான அபிப்பிராயத்தை கண்டு அதை எப்படி சரி செய்வது என்று டென்ஷனாகி விட்டாள். சக்தி மீது அவளுக்கு தனிப்பட்ட பகையோ, கோபமோ எதுவுமில்லை. அவள் அமர்ந்திருக்கும் அந்த பதவிக்கு பொருத்தமில்லாத ஆளாக சிபாரிசில் வந்தது மட்டும் தான் அவளது கவலை. அதனால் தான் வேலை அதிகம் கொடுக்கும் சாக்கில் அவளை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். சக்தியை பொறுத்தவரை அவளை தவறான பெண்ணாக நமீதாவால் எண்ண முடியவில்லை.

தன்னைச் சுற்றி நடப்பவற்றை கூட அறிந்து கொள்ளாமல் இருப்பவளைக் கண்டு சற்று பரிதாபமாக கூட இருந்தது. அவளை வரவழைத்து நேரடியாகப் பேசிவிட வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வந்தாள். அதன்படி மதியம் உணவு இடைவேளையின் போது அழைத்து பேசி விடலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.

அன்று மிகுந்த மனச்சோர்வோடு வேலையில் அதிக கவனம் வைக்க முடியாமல் தவித்தபடி நமீதா கொடுத்திருந்த வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சக்தி. உணவு இடைவேளைக்கான நேரம் வர, அதற்கு மேல் முடியாது என்று தோன்ற, தனது இருக்கையிலிருந்து எழுந்து அனைவரும் உணவருந்தும் அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வரலாம் என்று கதவருகே சென்றாள்.

அங்கே அவளது பெயர் அடிபட, கதவில் கை வைத்தவள் திறக்காமல் அமைதியாக நின்றாள்.

“பார்க்க பாவமா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துகிட்டு எத்தனை பேரை கவர் பண்றா பாருங்களேன்” என்று ஒரு முதிர்ந்த பெண்மணி கூறிக் கொண்டிருந்தார்.

“ஆமாம்-கா! நான் கூட வந்த புதிதில் ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா இப்போ இல்ல தெரியுது சாக்கடைன்னு. எம்டியை வளைச்சு நுழைஞ்சதுமில்லாம, கார்த்திக் சாரையும்..” என்று அவர் முடிக்கும் முன்னே கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள்.

அவள் இப்படியொரு பேச்சு தன்னைப் பற்றி போய் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்காதவள், அதிர்ந்து பின் கோவமாக அவர்களின் முன் சென்று நின்றாள்.

அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி பேச்சை நிறுத்திக் கொண்டவர்களை பார்த்து இகழ்ச்சியாக சிரித்து “ஏன் நிறுத்திட்டீங்க? சொல்லுங்க காது குளிர கேட்கிறேன்” என்றாள் அழுத்தமாக.

அவளின் பேச்சு அவர்களுக்கு கோபமூட்ட “தப்பு செஞ்ச உனக்கே பயமில்லாதப்ப நாங்க எதுக்கு பயப்படனும்?”

“நான் தப்பு பண்ணினதை நீங்க பார்த்தீங்களா?”

அவரோ அவள் எதிர்த்து பேசுவதைக் கண்டு கடுப்பாகி “அதை பார்க்க வேற வேணுமா? அது தான் இந்த ஆபிசே பார்க்குதே” என்றார் கிண்டலாக.

“என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? உங்க வீட்டு பெண் இந்த நிலையில் இருந்தா இப்படித்தான் பேசுவீங்களா?”

“சீ! சீ! எங்க வீட்டுப் பெண்ணை எல்லாம் உன்னோட சேர்க்காதே” என்றார் ஆங்காரமாக.

அவரின் இளக்காரமான பேச்சில் மனம் எரிமலையென கொதிக்க, ஒரு நிமிடம் கண் மூடித் திறந்தவள், அந்த அறையை விட்டு வெளியேறி தனது மேசைக்குச் சென்றாள்.

அவள் சென்றதும் அந்தம்மாள் “இதுங்க எந்த மூஞ்சியை வச்சுகிட்டு கேள்வி கேட்க வருதுங்க?” என்று சொல்லவும் அவருக்கு ஆதரவான சிலர் கொல்லென சிரித்தனர்.

அப்போது தனது மொபைளுடன் அங்கே சென்று நின்றவள் அவரை கூர்மையாக பார்த்துவிட்டு தனது மொபைலைத் திறந்து தானும் ஆதிகேசவனும் மாலையும், கழுத்துமாக இருக்கும் படத்தை எடுத்து அனைவரும் பார்க்கும்படி காண்பித்தாள்.

அவள் ஏதோ காண்பிக்கிறாள் என்று சுவாரசியமில்லாமல், கிண்டலாக திரையைப் பார்த்தவர்களின் விழிகள் அதிர்ச்சியில் இருக்க, அந்தப் பெண்மணியோ நாற்காலியை விட்டு எழுந்துவிட்டிருந்தார்.

அப்போது நமிதாவும் அங்கே வந்திருக்க, அவளை அழைத்து பேசிவிட வேண்டும் என்று கூப்பிட்டு விட்டிருக்க, அதற்குள் அங்கே அனைத்தும் அரங்கேரியதைக் கண்டு அவளுமே திகைத்து நின்றாள். ஆனால் அவளுக்கு மொபைலில் என்ன இருந்தது என்று தெரியாமல் அனைவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இப்போ சொல்றேன் நல்லா கேட்டுகோங்க. நான் சக்திஆதிகேசவன். இந்த கம்பனியோட ஓனர். கார்த்திக் என் அண்ணன்” என்றாள் அழுத்தமாக.

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நிற்க, நமிதாவுமே இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு விஷயம் சக்திக்குப் பின்னால் இருக்கும் என்று நினைக்கவில்லை. திகைப்புடன் சக்தியை பார்த்தபடியே நின்றிருந்தாள்.

அத்தனை நாள் இருந்த மன அழுத்தம், அவர்களின் பேச்சில் இருந்த அசிங்கம் எல்லாம் சேர்ந்து கொள்ள, சக்தியின் மென்மையான மனம் கூட அனலாக கொதிக்க ஆரம்பித்தது.

“யார் என்ன என்று எதுவுமே தெரியாமல் ஒருவரைப் பற்றி அவங்க கரெக்டரை அசிங்கப் படுத்துவீங்களா? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது? இங்கே இருக்கிறவங்கள்ள பாதி பேர் பெண்கள். நம்மள நாமே அசிங்கப்படுத்தலாமா? என் இடத்தில் வேற ஒரு பொண்ணு இருந்து தப்பே செய்யாத பெண்ணை இப்படி கேவலமா பேசி அவள் தவறான முடிவிற்கு வந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”

யாரும் பதில் பேசவே இல்லை. அதிலும் அந்தப் பெண்மணிக்கு தானே வலிய சென்று மாட்டிக் கொண்டோமே என்றிருந்தது. தனது எதிர்காலத்தைப் பற்றிய பயம் எழலாயிற்று.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
அவரைப் பார்த்தவள் “நான் உண்மை என்னன்னு சொல்லிட்டேங்க. இப்போ நீங்க எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்னோட அலுவலகத்தில் வேலை செய்வீங்க?”

அவள் பேச ஆரம்பித்ததுமே நமிதாவிற்கே ஆச்சர்யமாக இருக்க, மெல்ல அவள் அறியாமல் அனைத்தையும் ரெகார்ட் செய்ய ஆரம்பித்திருந்தாள். சகதிக்குள் இப்படியொரு பரிமாணம் இருப்பதை இன்று தான் பார்க்கிறாள். தான் எத்தனை கடினமாக நடத்தினாலும் ஒருநாள் கூட மரியாதை குறைவாக நடந்து கொண்டதில்லை. ஆனால் தனது கரெக்டரைப் பற்றி பேசியதும் பெண் புலி போல அனைவரையும் பார்த்து சீறிக் கொண்டிருப்பதை கண்டு உள்ளுக்குள் சந்தோஷமாக உணர்ந்தாள்.

அவளின் கேள்வியில் அதிர்ந்து போய் அவளைப் பார்க்க “நான் உங்கள மாதிரி இல்ல. இங்கே இருக்கிற ஒவ்வொருவர் கிட்டயும் அதிகமா நெருங்கி பழகலேன்னாலும், என் குடும்பத்தில் ஒருவரா நினைச்சேன். ஆனா வயதில் பெரியவங்களான நீங்களே இப்படியொரு நடத்தையில் இருப்பீங்கன்னு நினைக்கல. உங்களுக்கு இது தான் முதலும், கடைசியுமான வார்னிங். இனியொரு தடவை அடுத்தவங்களோட கரெக்டரைப் பற்றி தவறாக பேசினீங்கன்னு தெரிஞ்சா நீங்களா ராஜினமா கொடுத்திட்டு போயிடுங்க. உங்களை மாதிரி உள்ளவங்களுக்கு இங்கே இடம் இல்லை” என்றாள் கேசவனின் மனைவியாக.

அதை சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேற, அவசரமாக அவளைப் பின்தொடர்ந்த நமீதா “சக்தி!” என்றழைக்க, அவளை பார்த்துவிட்டு “ப்ளீஸ்! மேம்! என்னால இன்னைக்கு இதுக்கு மேல வேலை செய்ய முடியாது. இன்னைக்கு மதியம் மட்டும் ஹாப் டே லீவ் போட்டுடுங்க” என்றாள் கெஞ்சலாக.

அதைக் கேட்டு அதிர்ந்து போன நமீதா எதுவும் பேசாமல் “ஓகே சக்தி” என்று கூறிவிட்டு தனதறைக்குச் சென்று கேசவனை அழைத்தாள். அவனது எண் பிசியாக இருக்க, தான் சேவ் செய்திருந்த ரெகார்டிங்கை அவனது வாட்ஸ் ஆப்பிறகு அனுப்பி விட்டு ஓய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

சக்தியோ ரெஸ்ட்ரூமிற்குள் சென்று அழுது கரைந்தாள். அத்தனை நேரம் இருந்த தைரியம் எல்லாம் கரைய, தன்னைப் பற்றி ஒரு தவறான பேச்சிற்கு இடம் கொடுத்து விட்டோமே என்று அழுது தீர்த்தவள் முகத்தை கழுவிக் கொண்டு வெளியேறினாள்.

தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறி, வழக்கமாக தான் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். ஒரு வாரமாக கேசவனை பார்க்காதது, அலுவலகத்தில் நடந்த விஷயம் என்று எல்லாம் மனதை அழுத்த, சுற்றுப்புறத்தை ஆராயாமல் நடந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளருகே ஒரு கார் வந்து நிற்க, அவள் சுதாரித்துக் கொள்ளும் முன் அந்தக் காரிலிருந்தவர்கள் அவளை கடத்தி இருந்தார்கள்.

அவளின் முகத்தில் மயக்க மருந்தை வைத்த நிமிடமே மயங்கி விழுந்துவிட, எளிதாக கேசவனின் சக்தி கடத்தப்பட்டிருந்தாள்.

சக்தி கிளம்பியதும் கார்த்தியை அழைத்து அலுவலகத்தில் நடந்ததை கூறிவிட வேண்டும் என்று முயற்சிக்க, அவனது எண்ணும் பிசியாகவே இருக்க, நொந்து போய் விட்டு விட்டாள். அதனால் சக்தி கடத்தப்பட்டது எவருக்கும் தெரியாமலே போனது.

ஏழு மணி வரை சக்திகாக காத்திருந்து விட்டு அவள் வீடு வந்து சேரவில்லை என்றதும், கேசவனுக்கு அழைத்துப் பார்த்தார் சாவித்திரி அம்மா. அவன் எடுக்கவில்லை என்றதும் கார்த்தியை அழைக்க, அவன் எடுத்தும் சக்தி வீடு வந்து சேரவில்லை என்கிற விபரத்தை கூறி விட்டார்.

அதைக் கேட்டதும் பதட்டமானவன் உடனே நமிதாவிற்கு அழைக்க, போனை எடுத்ததுமே “மதியத்திலிருந்து அத்தனை கால் பண்ணினேன். கால் ஹிஸ்டரி பார்த்திட்டு கூட கூப்பிட மாட்டீங்களா?” என்று எரிந்து விழுந்தாள்.

அவனோ அவள் தன்னிடம் உரிமையாக பேசுகிறாள் என்றெண்ணி “நம்ம விஷயத்தை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். சக்தி எப்போ வீட்டுக்கு கிளம்பினா?” என்றான் அவசரமாக.

“அதென்ன நம்ம விஷயம்? சக்தி மதியமே கிளம்பியாச்சு. நான் உங்களுக்கு போன் பண்ணினப்பவே அந்த பிரச்னையை சரி பண்ணி இருந்தா சக்தி இந்தளவுக்கு பீல் பண்ணி இருக்க மாட்டா” என்றாள் படபடப்பாக.

“வாட் மதியமேவா? சக்தி இன்னும் வீடு போய் சேரல” என்றான் டென்ஷனாக.

நமீதாவிற்கும் அதிர்ச்சியாக “வீட்டுக்குப் போகலையா? இன்னைக்கு ஆபிசில் நடந்த பிரச்சனையினால எங்கேயாவது போய் இருப்பாளோ?”

“என்ன பிரச்சனை? நான் கேசவனுக்கு உடனே இன்பார்ம் பண்ணியாகணும்” என்றான் டென்ஷனுடன்.

“எம்டி எங்கே இருக்காருன்னு சொல்லுங்க நானும் வந்துடுறேன்”.

“ஓகே” என்றவன் அவளிடம் விவரம் கூறிவிட்டு கேசவனிடம் சொல்ல வேண்டும் என்று ஹார்பருக்கு கிளம்பினான்.

தங்களின் சரக்குகளுக்கான பேப்பர் வொர்க்கை முடித்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தவன் முன்பு சென்று நின்றான் கார்த்திக். நமீதாவும் வந்துவிட, இருவரையும் பார்த்ததும் அவர்களின் சொந்தப் பிரச்சனை எதுவோ என்று எண்ணியபடி “என்ன விஷயம்?” என்றான்.

அவனிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் “கேசவா! சக்தி இன்னும் வீட்டுக்குப் போகலையாம்” என்றான்.

அவன் சொல்லி முடிக்கவும் கேசவனின் போன் அழைக்க, யோசனையுடன் அவனை பார்த்துக் கொண்டே போனை காதில் வைக்க , அந்தப் பக்கம் வந்த செய்தியில் அவன் முகம் மாறியதைக் கண்டு நமீதாவிற்கு வியர்க்க ஆரம்பித்தது.

“யார் கிட்ட கையை வச்சிருக்கன்னு தெரியாம செஞ்சிருக்க ஹசன். என் பொண்டாட்டி மேல ஒரு கீறல் விழுந்தாலும் உன் பரம்பரையே காலி பண்ணிடுவேன்” என்று மிரட்டிய அவன் முகத்தில் தெரிந்த ரவுத்திரத்தைக் கண்டு ஓரடி பின்னால் நகர்ந்தாள் நமீதா.

கார்த்திக்கோ அவசரமாக “என்ன கேசவா?”
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,686
1,503
113
“ஹசன் சக்தியை தூக்கிட்டான்” என்றவனது முகம் இறுகிய பாறை போன்ற தோன்றத்துடன் இருந்தது.

நமீதா அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்துவிட்டு இருகைகளால் வாயை மூடிக் கொண்டு “ஹையோ சக்தியே இன்னைக்கு மதியம் நடந்த பிரச்னையை நினைச்சு ரொம்ப வேதனையில் இருந்தா.பாவம் ரொம்பவே சோர்வாக வேற இருந்தா ”.

இருவரும் அவசரமாக “என்ன பிரச்சனை எங்கே?” என்றனர்.

அவர்களிடம் மதியம் அலுவலகத்தில் நடந்த அனைத்தையும் கூறிவிட, கார்த்திக்கிடம் தான் பேச முயன்றதையும் கூறினாள். அதைக் கேட்டதும் அடுத்த நிமிடம் கார்த்திக்கின் கன்னம் பழுக்க ஓங்கி அறைந்திருந்தான் கேசவன்.

“நான் தான் சக்தி விஷயத்தை பார்த்துக்கிறேன்னு சொன்னேன் இல்ல. நீ எதுக்கு நடுவுல நாட்டாமை பண்ணின?” என்று அவன் கழுத்தைப் பிடித்திருந்தான்.

அவனோ கொலைவெறியுடன் நமீதாவை பார்த்துவிட்டு ‘இவ பூஜாடியை உடைப்பான்னு பார்த்தா இவன் கிட்ட கோர்த்துவிட்டு பல்லை தட்டிட்டா” என்று குமுறிக் கொண்டு “நான் அப்படி நினைக்கல கேசவா. நீ சக்தியை சரியாக கவனிக்காதுனால இப்படி சொல்ற. நானும் அப்படியே விட்டிருந்தா நீ சக்தியை ஹாஸ்பிட்டலில் தான் பார்த்திருக்கணும்” என்றான் முறைப்புடன்.

அவர்களின் சண்டையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பதட்டத்துடன் “சார் சீக்கிரம் போலீசுக்கு இன்பார்ம் பண்ணுங்க. சக்தி பாவம்” என்றாள்.

அவள் சொன்னதும் தன்னை நிதானித்துக் கொண்டவன் “போலீஸ் எல்லாம் வேண்டாம் நானே பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றான்.

அப்போதும் விடாது சந்தேகத்துடன் “சக்தி உயிருக்கு பிரச்சனையாகிடப் போகுது சார்” என்றாள் பயத்துடன்.

அவள் சொன்னதை கவனிக்காது அங்கிருந்து அவன் நகர்ந்துவிட, கார்த்திக் அவள் அருகில் சென்று “அதெல்லாம் எதுவும் ஆகாது நாங்க பார்த்துக்கிறோம். நீ கிளம்பு” என்றான் முறைப்புடன்.

“இங்கே இருக்கிறவங்க ரொம்ப மோசமானவங்க. அதிலும் அந்த ஹசன் பிரதர்ஸ் ரொம்பவே மோசம். ப்ளீஸ்! விளையாட்டுதனமா இல்லாம போலீசில் கம்ப்ளைன்ட் கொடுங்க” என்றாள் கெஞ்சலாக.

நன்றாக நிமிர்ந்து நின்றவன் “நாங்களும் மிக மோசமானவங்க. அவனுங்களே சக்தியை கொண்டு வந்து விட வைப்போம்” என்றவனின் முகம் கடுமையாக மாறி இருந்தது.

அதுவரை தன்னிடம் காதல் சொல்லிய கார்த்திக்கை மட்டுமே அறிந்தவளுக்கு, அந்த முகம் மிரட்டியது. அவனது கடுமையிலேயே எதையுமே செய்வோம் என்கிற தெனாவெட்டு தெரிய, தன்னிடம் அறை வாங்கிக் கொண்டு நின்ற கார்த்தியின் முகம் மின்னி மறைந்தது.
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
Ooooooo கேசவன் ninaichathu nadanthudichi...... Shakthi ye கேசவன் தான் avalodaya husband nu sollita.... பெண் galluku பெண் gal thaan எதிரி nu sollaamal sollita athu eppadi avvallavu அநாவசியமாக ஒரு பெண் oda charater ah கேள்வி குறி aakuraanga யாரு ennanu theriyaamalaye....... அவல kadathitaanga enna panna poraano... Super Super maa
 
  • Love
Reactions: sudharavi