காதல் களமாட வா!! - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,641
1,247
113
டீசர்!

“சக்தி! பாஸ் வந்திருக்கார். உன்னை வர சொல்றார் பா.போய் பார்த்திடு” என்று வந்து நின்றவளை கண்டு முகத்தில் எதையும் காட்டாது உள்ளுக்குள் கடுப்பாகி போனாள்.

‘பாஸாம் பாஸ்! இப்போ எதுக்கு என்னை பார்க்கணுமாம்? இவன் தான் இங்கே முதலாளின்னு தெரிஞ்சிருந்தா வேலையில சேர்ந்திருக்கவே மாட்டேன்’ என்று கடுப்படித்துக் கொண்டே சென்று அவன் அறைக் கதவை தட்டினாள்.

“எஸ் கமின்” என்று அழைப்பு வந்தது.

சிடுசிடு முகத்துடன் ‘எருமைக்கு இங்கிலீஷ் ஒண்ணு தான் குறைச்சல்’ என்று கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டே அவன் முன்னே சென்று நின்றாள்.

சுழல் நாற்காலியில் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு ஸ்டைலாக அமர்ந்திருந்தவன் எதிரே இருந்த பைலை பார்ப்பது போல தலையைக் குனிந்து கொண்டிருந்தான். அவள் வந்ததை அறிந்தும் தலையை உயர்த்தவில்லை. சற்று நேரம் பொறுத்து பார்த்தவள் லேசாக தொண்டையை கனைத்து “சார்!” என்றழைத்தாள்.

உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் சுழல் நாற்காலியில் நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு கையிலிருந்த பேனாவை உருட்டிக் கொண்டே “நானா வர சொன்னேன் மிஸஸ். கேசவன்” என்றான் கிண்டலான தொனியில்.

பல்லைக் கடித்துக் கொண்டு “கால் மீ சக்தி சார்!” என்றாள் அழுத்தமாக.

“வொய்? உங்க ஹாஸ்பேன்ட் நேம் கேசவன் தானே?” என்றவனின் பார்வை குறுகுறுவென்று அவளை ஆராய்ந்தது.

முகம் சிவந்து போக ‘இதை ஆராய்ச்சி பண்ண தான் வர சொன்னீங்கன்னா நான் கிளம்புறேன் சார்”.

“வெயிட் மிஸஸ். கேசவன். நான் எதுக்கு உங்களை வர சொன்னேன்னு நினைவில்லை. அதுவரை கொஞ்சம் நில்லுங்க” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

அவன் மீது பயங்கர கோபம் எழ, அருகே இருந்த பூஜாடியை எடுத்து அவன் மண்டையை உடைத்து விடலாமா என்றெண்ணினாள்.

அவனோ இது தான் சாக்கென்று அவளை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

‘ஹப்பா என்ன ஸ்ட்ரைக்சர்-டா சாமி. மூணு வருஷத்துல நல்ல தளதளன்னு தக்காளி மாதிரி ஆகிட்டா’ என்று உரிமையுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையை கவனித்து விட்டவள் கொதித்து போனாள்.

“சார்! நான் கிளம்புறேன். உங்களுக்கு நினைவு வரும் போது சொல்லி அனுப்புங்க” என்று கதவருகே சென்றாள்.

சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தவன் என்ன வேகமாக அவளை நெருங்கினான் என்று தெரியாது. அவனது கரங்கள் அவளது இடுப்பை அழுந்தப் பிடித்திருந்தது. காற்றுப் புகாதவாறு இறுக்கி அணைத்திருந்தான். அலுவலக அறைக் கதவின் மீது அவன் சாய்ந்திருக்க, அவள் மொத்தமாக அவன் மீது சாய்ந்திருந்தாள். சொல்லப் போனால் அவளை தூக்கி வைத்திருந்தான்.

திடீரென்று நடந்த தாக்குதலில் அதிர்ந்து போனவள் “விடு என்னை!” என்று போராட ஆரம்பித்தாள்.

அவனது பிடியோ இரும்பு பிடியாக இருக்க, அவளின் போராட்டம் அவனை மயங்க செய்து கொண்டிருந்தது. அவளோ விடாது அவனிடமிருந்து விடுபட போராட, அவளின் காதோரம் குனிந்தவன் “நான் பிடிச்சிருக்கும் போது உன் உடலில் சில பாகங்கள் தான் என்னுடலில் படுது. ஆனா நீ இப்படி துள்ளினா மொத்தமும் என் மேல தான். உனக்கு பராவயில்லேன்னா எனக்கும் ஓகே தான்” என்று கிசுகிசுத்தான்.

அவனது பேச்சில் அதிர்ந்து போனவள் அசையாது மெல்லிய குரலில் “என்னை விட்டுடு” என்றாள் கெஞ்சலாக.

அவளின் காது நுனியை லேசாகக் கடித்து “பொண்டாட்டி! மூன்று வருஷமா உனக்காக காத்திருக்கேன். இதுக்கு மேல முடியாது. உனக்காக எத்தனை வருஷம் வேணும்னாலும் காத்திருக்க நான் தயார். ஆனா என்னோட அதிரடியை நீ தாங்குவியா? நீ எங்கே போனாலும் உன்னை தொடர்ந்து வருவேன். இப்படி கட்டிபிடிப்பேன், இப்படி முத்தம் கொடுப்பேன்...இன்னும்” என்று அவன் முடிக்கும் முன் வெடுக்கென்று தள்ளிவிட்டு நின்றவளின் கணகளில் கண்ணீர் தடம்.

“எங்கண்ணனை கொலை செய்தவனை மன்னிக்க முடியாது”.

அருகே சென்று அவள் கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து வெளியே போட்டு “மன்னிக்க முடியாதவ இதை ஏன் தூக்கி சுமந்துகிட்டு இருக்க? இப்போவே கழட்டிக் கொடு” என்று கையை நீட்டினான்.

அவன் இப்படி கேட்பான் என்று எதிர்பாராதவள் அதிர்ந்து போய் தன்னையும் மீறி தாலியை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.
 

Attachments

  • Love
Reactions: Chitra Balaji