எபிலாக்
ஐந்து வருடங்களுக்குப் பிறகு...
தந்தையும் மகனும் மாடியில் நின்று எதிர் வீட்டுப் பெண்ணை ஆராய்ந்து கொண்டிருந்தனர். சின்னவன் “பா! அந்த பாப்பாவை எனக்கு பிடிச்சிருக்கு” என்று சொல்ல மகனை தூக்கிக் கொண்ட சஞ்சய் “பிடிச்சிருக்க எல்லா பாப்பா கிட்டேயும் சொல்லக் கூடாது-டா” என்றான்.
அப்போது அங்கே வந்த ராதிகா “அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கு...ஐஞ்சு வருஷம் கழிச்சு தான் இவருக்கே புத்தி வந்திருக்காம்” என்றாள் கண்ணடித்து.
அன்று தாயும், தந்தையும் தீர்த்த யாத்திரை கிளம்புவதால் சஞ்சய் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். குழந்தைகளும் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பதால் தங்கள் இருவருக்கும் வெகுநாட்களுக்குப் பிறகு தனிமை கிடைக்கிறது என்பதில் அத்தனை மக்ழிச்சி.
அதை கவனித்த ராணி மகனிடம் வந்து “என்ன மூஞ்சியில பல்ப் எரியுது? ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா முடிவு தான் மோசமா இருக்கு. மருமக சொன்னதை கேட்டு ஒழுங்கா இரு’ என்று சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
அம்மா சொல்லியதை எண்ணியவன் “புள்ளைங்கள அம்மாக்கள் நல்லா தான் புரிஞ்சு வச்சிருக்காங்க. ஆனாலும் கோவாலு ராது கிட்ட பார்த்து பதமா இருந்துக்கனும்” என்று சொல்லிக் கொண்டான்.
இரவு நெருங்கியதும் சீக்கிரமாக உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் சென்றவன் ராதிகாவுக்காக காத்திருந்தான். அவள் வந்ததும் ஓடிச் சென்று தூக்கிக் கொண்டவன்
மாறுகோ மாறுகோ மாறுகயி அடி ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் வாடி என் கப்பக்கிழங்கே
அவளோ கிண்டலான சிரிப்புடன் “எந்தா சாரே ஈ எமோஷன்?” என்றாள் சிரித்தபடி.
“இந்த மாதிரி சான்ஸ் மறுபடியும் எப்போ கிடைக்குமோ? அது தான்” என்றவன் அவளை படுக்கையில் விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.
“ஓவர் குசும்பா தான் இருக்கு...ஆமா நம்ம ஆபிசில புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கே...ம்ம்..அது பேரு..” என்று அவள் இழுக்கவும் “சந்திரிகா” என்று முடித்தான்.
அடுத்த நிமிடம் ஒரே தள்ளு தள்ளியவள் “நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. இன்னும் மாறலையா நீங்க?” என்று முறைத்தாள்.
அதுவரை இருந்த உணர்வுகள் எல்லாம் வடிந்து போக, மனசாட்சியோ ‘நீ ஒரு லூசுப்பயடா. அவ தான் போட்டு வாங்குறான்னு தெரிஞ்ச பிறகும் பேரை சொன்ன பாரு. உன்னை எல்லாம் திருத்த முடியாது’ என்றது.
“சொல்லுங்க அந்த பொண்ணுக்கும் ப்ரொபோஸ் பண்ணியாச்சா?”
அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டவன் “அதெல்லாம் விட்டுட்டேன். யாரோ பேசுனதுல காதுல விழுந்தது அதை தான் சொன்னேன்’ என்றான் பாவமாக.
“நம்பிட்டேன்” என்று நக்கலாக சொன்னால்.
“சத்தியமாடி!”
“சரி அதை விடுங்க..எனக்கு ஏன் ப்ரொபோஸ் பண்ணல?’
அவள் கேட்டதும் வேகமாக எழுந்தவன் “உனக்கு இஷ்டமில்லேன்னா சொல்லிடு. அதுக்காக மறுபடியும் இந்த கேள்வியை கேட்காதே”.
“அப்போ பதில் சொல்ல மாட்டீங்க?”
“எத்தனை தடவை தாண்டி சொல்றது?”
அவனை கடுமையாக முறைத்தவள் “பல பேர் கிட்ட ப்ரொபோஸ் பண்ணும் போது அலுக்கல...ஆனா நான் கேட்கும் போது பதில் சொல்ல அலுத்துக்குறீங்க”.
“என்ன தாண்டி உன் பிரச்சனை?”
“ஏன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணல?”
“அடியே! என்னால முடியலடி!” என்றான் பாவமாக.
“சோ எத்தனை வருஷம் ஆனாலும் உங்க கிட்ட இருந்து எனக்கு பதில் கிடைக்கப் போறதில்லை. எனக்கு ப்ரொபோஸ் தான் பண்ணலேன்னாலும் பதிலாவது சொல்லுவீங்கன்னு பார்த்தா அதுவும் சொல்ல மாட்டீங்க” என்று கண்ணை கசக்க ஆரம்பித்தாள்.
அவனது மனமோ ‘அம்புட்டு தான் சோலி முடிஞ்சுது...இந்த அம்மா போகும் போதே சாபம் விட்டுட்டு போயிடுச்சு’ என்று புலம்பிக் கொண்டான்.
அவர்களின் இந்த சண்டை வாரம் முழுவதும் தொடர, தீர்த்த யாத்திரை போனவர்கள் திரும்பி வந்தார்கள். மகனைப் பார்த்த ராணி “ என்னடா நான் போகும் போது நாலு முடி உண மண்டையில் அதிகமா இருந்தது. இப்போ அதையும் காணும்?”.
அன்னையை முறைத்தவன் “உனக்கு என்னை பார்த்தா கிண்டலா இருக்கா? உன் மருமக என்னை ரொம்ப கொடுமை படுத்துறா அம்மா”.
அவரும் “ப்ரொபோஸ் பண்ணும் போது சந்தோஷமா இருந்துச்சில்லை. இப்போ அனுபவிக்க வேண்டியது தான்” என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
*************************************சுபம்*****************************************************