கடவுள்களின் கவலைகள்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
கடவுள்களின் கவலைகள்


வார இறுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த அகால வேளையில் தங்களின் மாதாந்திர மீட்டிங்கை நடத்துவதற்கான ஏற்பாட்டில் சிவனும், விஷ்ணுவும் ஈடுபட்டிருந்தனர். சிவன் மிகவும் தீவிரமாக அனைவருக்கும் இமெயில் அழைப்பிதழ் அனுப்பிக் கொண்டிருக்க விஷ்ணுவோ தன்னுடைய மொபைலில் ஆழ்ந்திருந்தார்.

அதனை கண்ட சிவன் "மாப்பிள்ளை! என்னதான் நான் உங்க தங்கச்சி வீட்டுக்காரரா இருந்தாலும் என்னை வேலை வாங்கிட்டு நீங்க சாவகாசமா மொபைல்ல விளையாண்டுட்டு இருக்கக்கூடாது. பாவம் பாா்த்து நீங்களும் வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க", எனப் பரிதாபமாகக் கூறினார். அவரின் பேச்சை கேட்டு விஷ்ணுவோ "அட நீங்க வேற மாப்பிள்ளை! எல்லாம் நம்ம கடவுள் குரூப்ல இருக்குற சோகக்கதை, சொந்த கதையைதான் படிச்சுட்டு இருக்கேன்.

அனேகமாக இந்த மீட்டிங் ரொம்பவுமே இன்ட்ரஸ்டா போகும் போல இருக்கு", எனக் கூறியதுடன் தன் கையிலிருந்த மொபைலையும் சிவனின் கண்களுக்கு நேராகப் பிடித்தார். விஷ்ணு கூறியவுடன் ஆமாம் என்று ஒப்புக் கொண்ட சிவன்

"நானும் படிச்சேன் மாப்பிள்ளை! படிச்சேன் அப்படிங்கிறதைவிட என் கதையும் அதே நிலைமையில்தான் இருக்கு.சின்ன பையனுங்க குரூப்ல ஈசியா போடுறாங்க. என்ன இருந்தாலும் பெரியவங்க அப்படிங்கற கெத்தை மெயின்டைன் பண்றதுக்காக நான் வாயை திறக்காமல் இருக்கேன்", என தன்னுடைய நிலையை கூறினார்.

சிவன் கூறிய உடன் தன்னுடைய இரு கைகளையும் உயர்த்திய விஷ்ணு"ஹை-ஃபைவ் கொடுங்க மாப்ள, இங்கேயும் அதே கதைதான். நாம நம்ம நிலைய சொன்னா இந்த பசங்க எல்லாரும் நம்ம இமேஜை அசால்ட்டா டேமேஜ் பண்ணிட்டு போய்டுவாங்க. அதனாலதான் நான் உங்க தங்கச்சிகிட்ட கூட வாயைத் திறக்கிறது கிடையாது", எனக் கூறி தானும் தன் மாப்பிள்ளைக்கு சளைத்தவர் இல்லை என்பதை பேச்சில் நிரூபித்தார்.

இருவரும் இவ்வாறு பேசியவாறு அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பிவிட்டு அன்றைய நாளின் கடமையாற்ற சென்றுவிட்டனர். சிவனும், விஷ்ணுவும் பேசிக்கொண்டது போலவே அந்த மாதத்தின் மீட்டிங்கில் வந்து அமர்ந்தவுடன் முருகன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் முன்னரே "என்னோட பொறுமையோட அளவு குறைஞ்சிக்கிட்டே போகுது.

தலைவர், உபதலைவர், செயலாளர் போஸ்ட்ல உட்கார்ந்திருக்கிற அப்பா, மாமாஸ் நீங்க எல்லாம் இதுக்கான நடவடிக்கையை எடுக்கலைன்னா பின்விளைவுகளுக்கு நான் சுத்தமா பொறுப்பே கிடையாது", என நெய்யில்லிட்ட அப்பமாக பொரிந்து தள்ள ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே இதனைப் பற்றிப் பேச வேண்டும் என சிவனும் விஷ்ணுவும் பேசி வைத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் முன்னதாக தன்னுடைய மகன் முந்திக்கொண்டு கூறியதில் சிவனுக்கு சற்றே கோபம் வந்தது.

அதனால் வேகவேகமாக "பெரியவங்களுக்கு முதல்ல மரியாதை செலுத்து" என கோபக் குரலில் கூறினார். "பெரியவங்களுக்கு மரியாதை கொடு மரியாதை கொடுன்னு சொல்றாரு... இவங்களே முதல்ல கண்டிச்சு வச்சிருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?", என்று முணுமுணுத்துக்கொண்ட முருகனை பார்த்து கண்களை சிமிட்டிய விஷ்ணு "மாப்பிள்ளை சும்மா இருங்க", என சிவனிடம் கூறியவா் "முருக்ஸ் நீ இப்ப உட்காரு. மாமா இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்", என தன்னுடைய மருமகனுக்கு புன்னகை முகமாகவே கூறினார்.

விஷ்ணு கூறியவுடன் முருகனும் அமர்ந்து விடவே மீட்டிங் ஆரம்பமாக சிறியவர்கள் அனைவரும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்திட பெரியவர்கள் அனைவரும் அந்த மாதங்களில் வரும் அவரவருக்கான விஷேச தினங்களை உரைத்திட என ஆரம்பம் அமைதியாகவே சென்றது.

வழக்கமான நடைமுறைகள் முடிந்த உடன் சிவன் முருகனை நோக்கி "இப்ப சொல்லு முருகா! உனக்கு என்ன பிரச்சனை?", என வினவினார். முருகன் பதில் கூறுவதற்கு முன்னரே கணேசன் "முருகனுக்கு மட்டும் பிரச்சனை இல்லைப்பா. எல்லாருக்குமே இந்த பிரச்சனை இருக்கு. உங்களுக்கு நல்லாவே தெரியும். என்ன முடிவுதான் இதுக்கு எடுக்குறது?", என இடை புகுந்தார்.

இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி கூறியதில் டென்ஷனான பார்வதியும் லட்சுமியும் சரஸ்வதியை நோக்கி "என்னைக்குதான் இந்த ஆம்பளைங்க நேரடியா விஷயத்துக்கு வருவாங்களோ! எப்பப் பார்த்தாலும் சுத்தி வளைச்சி மறைமுகமாகவே பேசுறது", என அலுத்துக் கொண்டனர்.

இவர்களின் பேச்சை கேட்ட மற்ற கடவுள்களும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டாலும் தலைவரும் உப தலைவரும் என்ன முடிவு எடுக்கப் போகின்றனர் என அவர்களின் முகத்தை ஆர்வமாக எதிர்பார்த்தனர். சிவன் பேச்சினை ஆரம்பிக்கும் முன்னரே இடை புகுந்த விஷ்ணு "சரி பெரியவங்க எங்களுக்குதான் இதை எப்படி கட்டுப்படுத்துறதுன்னு தெரியலை. பசங்க நீங்க எல்லாரும் சொல்லுங்க. அது சரிப்பட்டு வந்தா நாங்க அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்றோம்",
 
  • Love
Reactions: sudharavi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
எனக் கூறினார்.

அதுவரை பிரச்சனையை பற்றி மட்டுமே கூறிக் கொண்டிருந்த மற்றவர்கள் இப்பொழுது அதற்கான வழிமுறையை கேட்ட உடன் பதில் கூறாமல் மௌனம் காத்தனர். அதனை பார்த்து நகைத்துக்கொண்ட விஷ்ணு "இப்ப நீங்க மற்ற பிரச்சனைகளை பத்தி பேசுங்க மாப்பிள்ளை", என சிவனிடம் கூறினார்.

சிவனும் தன் மகன் இன்று முந்திரிக்கொட்டையாக அனைவருக்கும் முன்னர் இப்பிரச்சனையை எழுப்பியதால் முருகனையே குறிவைத்து தன்னுடைய கேள்விக்கணைகளை வீச ஆரம்பித்தார். "முருகா! போன அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்கிட்ட வேண்டுதல் வச்சுட்டு போன அப்பாவி ஜீவன்கள் ரெண்டு பேரை இன்னைக்கு வரைக்கும் பழநிக்கு பாதயாத்திரையும் எடுக்க வைக்கிற நீ இன்னும் ஏன் அவங்க வேண்டுதலை நிறைவேத்தி வைக்காம இருக்க?", என வினவினார்.

அதுவரை அமைதியாக இருந்த முருகன் "ஆமா அவங்க பாதயாத்திரை வா்றாங்க, காவடி எடுக்குறாங்க, எல்லாம் செய்றாங்க. ஆனா என்கிட்ட வேண்டுதல் வச்சுட்டு எனக்கு பூஜை பண்றவங்க 10,000காணிக்கை போடுங்க 2,000 காணிக்கை போடுங்க அந்த முருகன்கிட்ட சொல்லி உங்களுக்கு நடத்தி வைக்கிறேன் சொன்ன உடனே அவரோட தட்டுலதான் காசை போடுறாங்க.

சரி நம்மளுக்கு பூஜை பண்றவரு வாக்கு குடுத்துட்டாரு. அவர் கேட்ட உடனே நாமளும் நடத்தி வைக்கலாம்ன்னு நான் நினைச்சுகிட்டு இருந்தா அஞ்சு வருஷமா அவங்ககிட்ட இருந்து தட்டுல மாத்தி மாத்தி காசு வாங்குறதுலதான் இருக்காங்களே தவிர யாருமே என்கிட்ட பாவம் அவங்களோட வேண்டுதலை நிறைவேத்தி வச்சுடுன்னு இதுவரைக்கும் சொல்லலை. இது எல்லாத்தையும் விட கொடுமை என்னன்னா ஒவ்வொரு நேர பூஜையும் நடக்குறப்ப எல்லா கோவிலிலயும் இன்னிக்கு வருமானம் எவ்வளவு வரும் அப்படிங்கிற பேச்சுதான் இருக்கே தவிர்த்து அவங்க வைக்கிற பிரசாதத்தை சாப்பிட்டேனானு நினைச்சு பார்க்குறதுக்கு ஆளே இல்லை.

இதைவிட கொடுமை என்ன அப்படின்னு சொன்னா பழனிமலையில் எனக்கு கட்டுற அந்த ஆண்டிக்கோல துணிகூட யாராவது வாங்கி கொடுத்தாதான் புதுசு கிடைக்குது. இல்லன்னா நான் அந்த பழச வச்சு தான் ஒப்பேத்த வேண்டியதா இருக்கு", என மனம் நொந்து கூறிய முருகன் தன்னுடைய அண்ணன் நீட்டிய கா்சீஃபை வாங்கி படபடவென பேசியதில் வியர்த்து வழிந்த தன் முகத்தை துடைத்துக்கொண்டு அமர்ந்தார்.

முருகன் அமர்ந்த உடன் எழுந்து நின்ற கணேசன் "இதுவாவது பரவாயில்லை. எனக்கு கொழுக்கட்டை செய்து கொண்டு வர்றாங்க. ஆனால் அந்த கொழுக்கட்டையில் ஒரு அரை கொழுக்கட்டை வச்சுட்டு மீதி எல்லாத்தையும் அவங்களே எடுத்துக்கிறாங்க. சரி நம்ம பக்தருகளுக்குதானே தரப் போறாங்க அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தா தட்டுல நூறு ரூபாய் போடுறவங்களுக்கு ஒரு கொழுக்கட்டையும், பத்து ரூபாய் போடுறவங்களுக்கு விபூதி கூட தர்றது கிடையாது", என நொந்து போய் கூறினார்.

கணேசன் கூறி முடித்தவுடன் அவரை பார்த்த விஷ்ணு "நீங்க வேற மருமகனே கொழுக்கட்டைக்காக சொல்றீங்க.போன வாரம் எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு பார்க்கக் கீழப் போயிருந்தேன்.

அப்ப பார்த்து பசிச்சுருச்சு.சரி நம்ம பக்தா்கள்கிட்ட கேட்போம்ன்னு வேஷம் போட்டுட்டு போய் கேட்டா திரும்பி கூட பாா்க்காம உள்ள போனாங்க.நம்மள கண்டுக்கலயேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்குறப்ப 500ரூபாய் போட்டாலும் கண் குளிர தாிசனம்ன்னு பேசிட்டு வந்ததுல காண்டாகிட்டேன்.அஞ்சு ரூபா பன்னு வாங்கி கொடுத்துருந்தா எம்புட்டு அழகான தரிசனம் கொடுத்துருப்பேன்.அதைவிட்டுட்டு ஒன்னும் சொல்றதுக்கில்லை" என நொந்து கொண்டார்.( வடிவேலு மாடுலேஷனில் படிக்கவும்)

இவர்கள் கூறி அமர்ந்தவுடன் விஷ்ணுவும், சிவனும் அங்கிருந்த பெண்கள் பக்கமாக தங்கள் பார்வையை வீசினர். அவர்களோ "இதுக்கே நொந்துகிட்டா எப்படி? உங்களுக்காவது உங்க பேரை சொல்லி காசு மட்டும்தான் வசூல் பண்றாங்க. எங்களுக்கு நாங்க கட்டியிருக்கிற புடவை டிசைன், போட்டு இருக்குற நகை டிசைன் எல்லாம் சொல்லி இந்த கடையில் வாங்கினா நல்லா இருக்குன்னு சொல்லி அந்தக் கடையிலும் கமிஷன் வாங்கிக்கறாங்க. நாங்க என்ன செய்றது?", என நொந்து கொண்டனர்.

அனைவரின் பிரச்சனையை கேட்ட சிவனும்,விஷ்ணுவும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர். பின்னர் சிவன் அனைவரையும் பார்த்து பேச ஆரம்பித்தார். "இதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான்.

மனுஷங்களுக்கு கடவுள்கிட்ட பேசுறதுக்கு இன்டர்மீடியேட்டா் தேவை இல்லை அப்படின்னு அவங்களுக்கு என்னைக்கு தோணுதோ அன்னைக்கு மட்டும்தான் இந்த நிலைமை மாறும். இது உனக்கு நடக்குது, எனக்கு நடக்குதுன்னு சொல்லி நாம வருத்தப்படுறதுல எந்தவித பிரயோஜனமும் கிடையாது. பக்தியோட வந்து நம்மளை பார்த்தவங்க குறைஞ்சு காசு கொடுத்தா நம்மளை நிமிஷத்துல பாா்த்துரலாம்னு நினைக்கிற எண்ணம் மாறாத வரைக்கும் ஒண்ணுமே செய்ய முடியாது. அதே மாதிரி நமக்கு பூஜை
 
  • Love
Reactions: sudharavi

Kripnythaa

Moderator
Mar 26, 2018
506
151
63
செய்றவங்க மனசார செய்யாம வர காசுக்காக செய்யறப்ப அதை நம்மால் ஏத்துக்க முடிய மாட்டேங்குது.

கல்லுல செஞ்சிருந்தாலும் கடவுளுக்கும் கவலை கொடுக்குறவங்களுக்கு நல்ல புத்தி கொடுக்க சொல்லி நம்மகிட்டயே நாம வேண்டிக்க வேண்டியது தான்", என பேசி முடித்தார்.

சிவன் பேசி கொண்டிருக்கும் பொழுதே விஷ்ணுவும், முருகனும் தங்களின் முகப்புத்தக பக்கத்தில் கடவுள்களின் கவலைகள் எனும் ஹேஷ்டேகை ஆரம்பித்திருந்தனர்.
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,659
1,618
113
முற்றிலும் உண்மை தீபி.....கடவுளுக்கு யார் மனதார செய்தாலும் ஏற்பார்...இவங்க தான் செய்யணும், அவங்க தான் செய்யணும்னு இல்லை....மனுஷங்களுக்கு தான் பிரிவினை கடவுளுக்கு இல்லை.....மனிதன் கடவுள் மேல பழியை போட்டு பிரிவினையை உண்டாக்குகிறான்...கடவுள் வந்து சொன்னாரா இவங்க செய்தால் தான் ஏற்பேன் மற்றவங்க பூஜை செய்தால் ஏற்க மாட்டேன் என்று....எதையுமே மனதார செய்தால் அந்த கடவுள் நமக்கு வேண்டியவற்றை செய்வார்...