என் சிலிக்கான் காதலி - கதை திரி

Feb 4, 2020
49
9
8
என் சிலிக்கான் காதலி?? - 4அவளது பாட்டு அவனை எரிச்சல் ஆக்க, அவள் மீது கொட்ட முடியாத வெறுப்பை எதிரே நின்றிருந்தவர் மீது முழுமையாக காட்டினான் கெளதம் கார்த்திக் .

கெளதம், " என்ன மாமானாரே இன்னும் எப்படி பைத்தியம் பிடிக்காமல் நல்லா இருக்கேன் என்று பார்த்து போக வந்தீங்களா?".

நந்தகோபாலன், " நீ நீயா பேசவில்லை, விஜியோட காதலனா பேசுறா. சரி விடு இப்போ நான் எது சொன்னா உனக்கு புரிய போறதுமில்லை, அதை விட நம்ப போறதுமில்லை. இந்தா இது விஜி உனக்காக எழுதிய லெட்டர் . இப்படி எதோ ஆக போது என்று முன்னாடியே தெரிந்ததோ என்னவோ உனக்காக எழுதியிருக்கா. இதை படிச்சிட்டு என் ரூம்க்கு வா " என்று அங்கிருத்து சென்றார்.

அவர் சென்றதும் கெளதமை தவிப்போடு பார்த்து கொண்டிருந்த விஜி 2.0 நந்தகோபாலனின் பின் சென்றாள்.

அவர் கொடுத்து சென்றதை பிரித்தவனுக்கு தன்னவளின் நினைவு தாக்க, கரித்து கொண்டு வந்த கண்ணை கட்டுபடுத்தி அதை படிக்க ஆரம்பித்தான் கெளதம்.

ஹாய் கார்த்திக்,

இன்னும் பத்து நாள் தான் உன்னை பார்க்க பறந்து வர போறேன். எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் என்று சொன்னா புரியாது உன்னை பார்க்கும் போது மொத்த காதலையும் என் கண்ணில் காமிக்கும் போது உனக்கே புரியும்.

அப்பறம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு, அதை பார்த்து உன் ரெண்டு கண்ணும் கோழி முட்டை மாறி விரிய போது. இப்போ நினைச்சாலும் சிரிப்பு தான் வருது.

அப்பறம் நான் வந்ததும் உனக்கும் எனக்கும் கல்யாணம் தான். இன்னொரு முக்கியமான விசயம் அது அப்பாக்கு கூட சொல்லவில்லை இன்னிக்கு நான் செய்த ரிசர்ச் சக்சஸ் ஆகிருச்சு. எனக்கு பயமா இருக்கு கார்த்திக் கொஞ்சம், ரெண்டு நாளா டிஸ்டர்பண்ஸா இருக்கு, எப்போ உன்னை பார்ப்பேன்னு மனசு தவிக்குது.

ஐ மேட்லி லவ் யூ ஜி.கே

என்று முடிந்திருந்தது.

அடுத்த பக்கத்தை திருப்பியவன் அதிர்ந்தான், காரணம் அதில் ரத்தக்கறை படிந்துள்ளது. அவசர அவசரமாக எழுதியிருப்பாள் போல் அவள் கிறுக்கி இருந்த கிறுக்கலில் புரிந்தது.

கார்த்திக் உன்னை பார்க்காமலேயே உயிர் போக போது, இது என் கடைசி மூச்சு இருக்கும் போது கடைசிய எழுதுற எழுத்து என்ற வரியை படித்ததும் நிற்காது கொட்டியது கெளதமிற்கு, மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

இதை நீ படிக்கும் போது நான் உயிருடன் இருப்பேனானு தெரியலை. என் கனவை உன்னால் மட்டும் தான் நிறைவேற்ற முடியும். அப்பறம் எனக்கு எதாச்சு ஆனால் அது வெளி உலகத்திற்கு தெரியாத மாதிரி ஒரு ஏற்பாடு செய்திருக்கேன் அதுக்கும் உன் உதவி தேவை என்பதோடு கடைசி வாக்கியம் முடிவுற்று இருந்தது.

இதை படித்ததும் எதிர் வருபவர்களை கூட கண்டுக்கொள்ளாது நந்தகோபலின் அறைக்கு கிட்டதிட்ட ஓடினான்.

மூச்சு வாங்க வந்தவனை கண்ட இருவருக்கும் நன்றாக புரிந்திருந்தது அவர் கொடுத்த கடிதத்தை அவன் படித்து விட்டான் என்று.

மாமா என் விஜி எனக்காக வருவா தான என்று ஒருவாறு திக்கி திணறி கேட்டு முடித்தான் கெளதம்.
உயிரோட இருக்கா அதை மட்டும் தான் இப்போதிக்கு எங்களால் சொல்ல முடியும்.

அப்பறம் உனக்காக ஒரு விரிச்சுவல் ரியலிட்டி விடியோ இருக்கு என்று கூறி, விஜி 2.0 வை பார்க்க தன் கண்களில் இருந்த கேமராவை உயிர்பித்தவளின் இதயம் இரும்பில் ஆனது என்றாலும் காதல் கொண்ட மனமல்லவா வலிக்க தான் செய்தது, அவன் விஜிக்காக துடிப்பதை கண்டு .

விடியோ ஆன் ஆனதும் ரத்தத்தில் நினைந்திருந்தது அவள் உடல் .
கார்த்திக் நீ எப்பவும் எனக்கு துணையா இருப்ப என்ற தைரியத்தில் ஒரு விசயம் செய்ய போறேன். என் மன்னிச்சிரு எனக்கு இதை தவிர எந்த ஆப்ஷனும் இல்லை. ஐ லவ் யூ என்று முடிப்பதற்குள் மூச்சரையானாள்.

விஜி என்று அதை தொடுவதற்குள் மறைந்தது அந்த உருவம். நேராக நந்தகோபலனிடம் திரும்பி, மாமா யாரு இதுக்கு காரணம் என்றான்.

நந்தகோபலன், " அமெரிக்க ராணுவம் , நாங்க செய்யும் ரகசிய ஆராய்ச்சி அவங்களுக்கு தெரிந்து போயிருச்சு . எங்க அவங்களை விட எங்க கண்டுபிடிப்பால் இந்தியாவின் நிலை மாறிவிடுமோ என்ற பயம். அப்பறம் இந்த கண்டு பிடிப்பு என்ன எதுவும் தெரியாது இதை நிறுத்த விஜியை கொல்ல முயற்சி செய்தாங்க".

எனக்கு இருக்கும் செல்வாக்கால் இந்திய தூதுரகத்தில் நேராக பேசி தனி விமானத்தில் விஜியை அழைத்து இங்கே வந்தேன். விஜி2.0வை அப்படியே கூட்டிட்டு வர முடியவில்லை.

அதை டிஸ்மேண்டில் செய்து எடுத்து வந்திருந்தேன். அவளை பொருத்தி என் விஜிக்காக தனி மருத்துவமனை உருவாக்கி, கை தேர்ந்த மருத்துவர்களிடம் விட்டு விட்டு இங்கே வந்தேன்.

விஜிக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்களை குழப்பவே விஜிக்கு பதில் என் கண்டுபிடிப்பை அவள் இடத்தில் கொண்டு வந்தேன். கொஞ்சம் நாள் அவள் வரும் வரை என்று கைக்கூப்பி அவர் கெஞ்ச எதுவும் பேசாது அமைதியாக தளர்ந்த நடையில் சென்றான் கெளதம்.

அவன் அறைக்கு அன்று கதவு அடைத்தவனுக்கு நினைவு தன்னவள் மேல் முதல் முறை காதல் துளிர்த்த நினைவு அழையா விருந்தாளியாக வந்து இம்சை செய்தது.

செண்பகம் ," கெளதம் விஜி கால் பண்ணா உன்க்கிட்ட பேசனும் என்று சொன்னா ".
சரிம்மா நான் பேசுறேன் என்று சொல்லியவன் அறைக்கு வந்து அவளை அழைக்காது, போனை வெறித்தான்.

சரியாக விஜியிடம் இருந்து அழைப்பு வர இரண்டு நாளாக அவளிடம் ஆடும் கண்ணாமூச்சியை இன்றும் தொடர அதில் கடுப்பாகியவள், நானும் என் பாய் பிரெண்டும் டேட் போறோம் டூ டேஸ் அதான் கால் பண்ண வேண்டாம் என்று சொல்ல போன் செய்தேன் என்று ஒரு குறுஞ்செய்தியை பார்த்தவன் பதறி அடித்து போன் செய்தான் விஜிக்கு .

கெளதம், "ஏய் யாருடி அந்த பாய் பிரெண்டு, சாவடிச்சுருவேன் வீட்ட விட்டு எங்கையாவது போனா ஒழுங்கா நல்ல பிள்ளையா இருந்தா, என்னை மாறி நல்ல பையனை கல்யாணம் பண்ணிப்ப . அதனால் ஒழுங்கா அவனுக்கு போன் பண்ணி இந்த டேடிங் கேன்ஷல் செய்".

விஜி, " அப்படியா உன்னை மாறி பையன்லாம் வேண்டாம் எனக்கு என் பாய் பிரெண்டு மாறி தான் வேண்டும் என்றதும் எதுவும் பேசாது அமைதியாக போனை வைத்தான்.
கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ , போவோம் யாரு நம்ப அத்தான் கிட்ட தானே என்று மனதில் நினைத்து தன் தந்தையிடம் சென்று தனக்கு கெளதம் மேல் உண்டான நேசத்தை கூறினாள் விஜி.

ஆசையாக சொன்ன செய்தியை இங்க பாரு விஜி , கெளதம் உனக்கு செட் ஆகா மாட்டான் என்று உறுதியாய் கூறி அங்கிருந்து சென்றார் நந்தகோபலன் .


தொடரும் . . . .

இப்படிக்கு,
உங்கள் ,
சுபாஷினி?