என் சிலிக்கான் காதலி - கதை திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,391
895
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

சுபாஷினி மற்றும் விஜயன் அவர்கள் மீண்டும் ஒரு ரிலே ஸ்டோரியோடு உங்களை சந்திக்க வருகிறார்கள்.....
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
என் தோழி சுபாஷிணியும் நானும் மற்றோரு கதை படைக்க வந்து விட்டோம்.

கதையின் பெயர் "என் சிலிக்கான் காதலி"..

மனித பாயலுக்கும் ரோபோட் பெண்ணுக்கும் காதலோ காதல்.

கல்யாணத்தில் ஆரம்பித்த கலாட்டா எதில் போய் முடியும் பார்ப்போம்.???

*************

சின்ன teaser இதோ..???

என் சிலிக்கான் காதலி

மணமேடையில் அவனின் மாமா பொண்ணு மணப்பெண் அலங்காரத்துடன் அவனின் இதய காதலி அமர்ந்து இருக்கே அவள் அருகே மணமகன் அலங்காரத்தில் நம்ம கதையின் கதாநாயகன் அவளின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன் என பிடிவாதம் பிடித்து கொண்டு இருந்தான்.

கதாநாயகனின் மொத்த குடும்பமும் அவனை திட்டி மிரட்டல் விடுத்து தாலி கட்ட சொல்ல அவனோ..

"ஐயோ, பிளீஸ் நான் சொல்றதை கேளுங்க நான் காதலித்தது இவளை தான் ஆனால் இவளை இல்ல. இவள் என் இதய ராணி தான் ஆனால் இதய இல்லாத ராணி. நிலா நிறம் கொண்ட இவளின் கண்ணு உண்மையில் கண்ணே இல்ல. உடலில் இருக்கும் சதை எல்லாம் சதையே இல்ல அது ரப்பர் துண்டுகள். மொத்தத்தில் இவள் பொண்ணே இல்ல..", என அழத குறையாக அவன் கெஞ்ச அதை கண்டிக்காத அவளின் அம்மா

"ச்சே வாயை கழுவு. அங்கே பார் என் மருமகளின் அழகை அவளை பார்க்க நூறு கண்கள் வேண்டும். அமெரிக்கா ல படித்து விட்டு வந்தாலும் இன்னும் உன்னையே நினைத்து கொண்டு வாழும் அவளின் நிலை பார். நேற்று வரை அவள் பின்னாலே வால் போல் திரிந்ததும் இல்லாமல் இப்போ போய் கல்யாணம் வேண்டாம் என அதுவும் மணமேடையில் சொல்ற!", அவளின் அம்மா ஆதங்கம் கொண்டு சொல்ல

அவனின் அப்பாவோ, "என்னடா விளையாட்டு வேண்டி இருக்கு. நான் வேண்டாம் வேண்டாம் சொல்லி உன் மாமா பொண்ணை தான் கல்யாணம் பண்ணி கொள்வேன் என பிடிவாதம் பிடித்ததும் இல்லாமல் இப்போ எல்லாரும் குடி இருக்கும் சபையில் என் மானத்தை வாங்க பார்க்கிற போல. இங்கே இந்த கல்யாணம் மட்டும் இப்போ நடக்கல நான் பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன் உன் கழுத்தை வெட்டி தனியா எடுத்து பூசணிக்காய் உடைக்கிற மாதிரி வாசலில் உடைத்து விடுவேன் ஜாக்கிரதை.!!"

இப்படி அவனின் குடும்பம் மொத்தம் அவனை மிரட்ட அவன் அருகே இருந்த நம்ம கதாநாயகி, "அத்தான் சீக்கிரம் தாலி கட்டி என்னை மனைவி ஆகுங்கள் இல்ல நீங்க ரெண்டு மாசமா நான் வேண்டாம் வேண்டாம் சொல்லியும் கேட்காமல் செய்த சில்மிஷங்களை எல்லாம் சொல்லி விடுவேன்.."

அந்த மனித உருவில் இருந்த அந்த பெண் உருவத்துக்கு அவன் தாலி கட்டினான்.

ஆனால் அவளின் சிலிகான் மூடி அருகே ரகசிய குரலில்..

"நீ என் காதலி உருவத்தில் அவளின் நினைவு கொண்டு என்னை கல்யாணம் செய்து இருக்கலாம் ஆனால் நீ ஒரு ரோபோட் தான். மனித உருவத்தில் இருக்கும் ஹுமனாய்டு ரோபோட். எப்பவும் நீயும் நானும் சேர்வது நடக்காத காரியம்."

இவன் இப்படி சொல்லி கொண்டு இருக்கே ஐம்பது கிலோமீட்டர் தாண்டி ஒரு அறையில் இந்த பெண்ணின் மனித உடல் இயற்கை சுவாசத்தில் இயங்கி கொண்டு இருந்தது.

நினைவு கொண்டு ரோபோட் உடலில் இவள் இங்கே இருக்க. கோமா நிலையில் அவளின் மனித உடல் இன்னொரு இடத்தில் இருந்தது.

எங்களின் மற்றொரு relay விளையாட்டை காண வாருங்கள்..????

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
என் சிலிக்கான் காதலி?? 1

அந்த மண்டபமே கோலாகலம் பூண்டு குதூகலமாக இருந்தது. ஆனால் அது எந்த விதத்திலும் மணமகன் கோலத்தில் இருக்கும் நம்ம கதையின் கதாநாயகன் கௌதமை பிரதிபலிக்க வில்லை! காரணம் அவனின் காதலி சிறிது நேரத்துக்கு முன் அவன் கையில் கொடுத்து விட்டு போன சில காகிதங்களே! அதில் இருந்த தகவல்கள் அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அது பிரபல விஞ்ஞானி நந்தகோபாலன், நம்ம கதாநாயகனின் மாமாவின் ரகசிய ஆராய்ச்சி பற்றிய குறிப்புகள் அது.

அதை பார்க்க பார்க்க இத்தனை மாதங்களாக தன் ஏமாற்றப்பட்ட ஒன்றை அவனால் பொறுக்க முடியவில்லை.

நம்ம நாயகன் கௌதம் என்கிற கௌதம் கார்த்திக் இருபத்தி ஏழு வயது அழகன், மாநிறத்திற்கும் சற்று குறைந்த கருமை நிறம் கொண்ட கண்ணன், சிவப்பு உதடு உடையவன், நடுத்தர உயரம் மற்றும் தன் மாமன் பெற்ற ஒரே பொண்ணையே தன் சீதையாக நினைத்து கல்யாணம் வரை இன்று கொண்டு வந்திருப்பவன்.

தொழில்துறையில் நல்ல பிசினஸ் மேன் என பெயர் எடுத்தவன் மற்றும் தன் அறிவு கூர்மையால் சில யுக்திகளை கொண்டு, நம்பர் ஒன் பிசினஸ் மேன் என்கிற விருது கூட கடந்த வருடம் பெற்றவன்.

இப்படி பல சிறப்பு பெற்ற நான் எப்படி ஏமாந்து போனேன்! என வெட்கி போனான்.

பாவம் அவனுக்கு தெரியவில்லை காதல் எப்படிப்பட்ட மனிதனையும் தன் வசப்படுத்தி விடும். அதற்கு அறிவாளி முட்டாள் என்கிற பேதம் இல்லை என்று.

தலை சிறந்த அறிவாளி என்பவரையும் முட்டாளாக்கும்! எதுக்கும் லாயக்கு இல்லாதவன் என பெயர் எடுக்கும் முட்டாளை கூட அறிவாளி ஆகும்.

இவனோ முதல் ரகம் அதுவும் உண்மை கலந்த பொய்யால் ஆன காதலில் விழுந்தவன். உலகத்துக்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கண்டுப்பிடிப்பே இப்போ நம்ம நாயகனின் வாழ்க்கையில் விளையாடி விட்டது.

முகூர்த்தம் நெருக்க ஐயர் அழைத்ததாக சொல்லி அவனின் தந்தை அவனை அழைத்துக் கொண்டு மண மேடைக்குச் சென்றார்.

கௌதம் தனக்குள்ளேயே எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தான். கண்டிப்பாக தன்னால் இந்த உண்மையே சொல்ல முடியாது என்பதும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. பின் எப்படி? எப்படி? இந்த கல்யாணத்தை நிறுத்துவது என அவன் யோசித்து கொண்டே ஐயர் சொல்லும் மந்திரங்கள் எல்லாம் வாய் போன போக்கில் ஏதோ ஏதோ சொல்லி கொண்டும் அவரிடம் திட்டும் வாங்கி கொண்டும் இருந்தான்.

ஐயர் அழைக்க மணப்பெண் நம்ம கதாநாயகி விஜி என்கிற விஜயலட்சுமி, தன் கனவு பலிக்க போகும் சந்தோசத்துடன் அவனை நோக்கி நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.

நம்ம நாயகி, நீல நிற கண்கள் உடையவள். சிரித்தால் அழகிய பல் வரிசைகள் நடுவில் ஒரு சிங்க பல் நீட்டி இருக்கும். அதுவே அவளுக்கு தனி அழகினை சேர்க்கும்! இந்திய தந்தைக்கும் அமெரிக்கா தாய்க்கும் பிறந்த கலவை பெண். சிறு வயசில் தாயை இழந்த வேதனையில் இருந்தவளை தன் காதலால் அந்த நினைகளையே மறக்க வைத்தவன் நம் நாயகன்.

பல வருடங்கள் போன், இணையம் என்றே தொடர்ந்த இவர்களின் காதல் கடந்த ரெண்டு மாதங்களாக தான் இவன் வீட்டில் தொடர்கிறது.

கல்யாணம் செய்தால் இவளை தான் கல்யாணம் செய்வேன் என பல சண்டைகள் போட்டு இன்று கல்யாணம் நடக்கும் நாளில், கொஞ்ச நேரத்துக்கு முன் நாயகி மூலம் அறிந்த ஒரு பெரும் உண்மையில் இந்த கல்யாணமே வேண்டாம் என்கிறான் கெளதம்.

இதோ எதிர்க்க ஆரம்பித்து விட்டான்..

கௌதம், "நான் தாலி கட்ட மாட்டேன்! மாட்டேன்!! மாட்டேன்!!!" என பிடிவாதம் பிடித்து கொண்டு இருந்தான்.

அவனின் மொத்த குடும்பமும் அவனை திட்டி மிரட்டல் விடுத்து தாலி கட்ட சொல்ல அவனோ..

கௌதம், "ஐயோ, பிளீஸ் நான் சொல்றதை கேளுங்க நான் காதலித்தது இவளை தான்! ஆனால் இவளை இல்ல. இவள் என் இதய ராணி தான் ஆனா இதயமே இல்லாத ராணி. நீல நிறம் கொண்ட இவளின் கண்ணு உண்மையில் கண்ணே இல்ல. உடலில் இருக்கும் சதை எல்லாம் சதையே இல்ல அது ரப்பர் துண்டுகள். மொத்தத்தில் இவள் பொண்ணே இல்ல..", என அழாத குறையாக அவன் கெஞ்சினான்.

அதை கண்டுக்காத அவனின் அம்மா செண்பகம், "ச்சே வாயை கழுவு. அங்கே பார் என் மருமகளின் அழகை அவளை பார்க்க நூறு கண்கள் வேண்டும். அமெரிக்காவில் படித்து விட்டு வந்தாலும் இன்னும் உன்னையே நினைத்து கொண்டு வாழும் அவளின் நிலை பார். நேற்று வரை அவள் பின்னாலே வால் போல் திரிந்ததும் இல்லாமல் இப்போ போய் கல்யாணம் வேண்டாம் என அதுவும் மணமேடையில் சொல்கிறாய் !", அவனின் அம்மா ஆதங்கத்தோடு பேசினார்.

அவனின் அப்பா சண்முகம், "என்னடா விளையாட்டு வேண்டி இருக்கு அதுவும் மேடையில்?. நான் வேண்டாம் வேண்டாம் சொல்லி கூட கட்டினால் என் மாமா பொண்ணை விஜியை தன் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்ததும் இல்லாமல் , இப்போ எல்லாரும் கூடி இருக்கும் சபையில் என் மானத்தை வாங்கிற!. மவனே இப்போ மட்டும் இந்த கல்யாணம் நடக்கல நான் பெருசா ஒன்னும் பண்ண மாட்டேன். உன் கழுத்து இருக்குல கழுத்து அதை வெட்டி தனியா எடுத்து பூசணிக்காய் உடைக்கிற மாதிரி வாசலில் உடைத்து விடுவேன் ஜாக்கிரதை.!!"

இப்படி அவனின் குடும்பம் மொத்தம் அவனை மிரட்ட அவன் அருகே இருந்த நம்ம கதாநாயகி விஜி, "அத்தான் சீக்கிரம் தாலி கட்டி என்னை மனைவி ஆகுங்கள்! இல்ல நீங்க ரெண்டு மாசமா நான் வேண்டாம் வேண்டாம் சொல்லியும் கேட்காமல் செய்த சில்மிஷங்களை எல்லாம் சொல்லி விடுவேன்.."

அந்த மனித உருவில் இருந்த அந்த சிலிக்கான் பெண்ணுக்கு அவன் தாலி கட்டினான்.

ஆனால் அவளின் சிலிக்கான் காது அருகே ரகசிய குரலில்."நீ என் காதலி விஜி உருவத்தில் அவளின் நினைவு கொண்டு என்னை கல்யாணம் செய்து இருக்கலாம் ஆனால் நீ ஒரு ரோபோட் தான். மனித உருவத்தில் இருக்கும் ஹுமனாய்டு ரோபோட். எப்பவும் நீயும் நானும் சேர்வது நடக்காத காரியம் " என்றான் கெளதம்.

விஜி, "மனித உடல் இங்கே இல்ல என்றாலும் என் காதல் மனம் இந்த இயந்திர உடலில் தானே இருக்கு. அது போதும் அத்தான் நம்ம காதல் வாழ்க்கைக்கு"

இவர்கள் இப்படி பேசி கொண்டு இருக்க, ஐம்பது கிலோமீட்டர் தாண்டி ஒரு அறையில் இந்த பெண்ணின் மனித உடல் செயற்கை சுவாசத்தில் இயங்கி கொண்டு இருந்தது.

நினைவு கொண்டு ரோபோட் உடலில் இவள் இங்கே இருக்க. கோமா நிலையில் அவளின் மனித உடல் இன்னொரு இடத்தில் இருந்தது.

கோமா நிலையில் இருக்கும் மனிதர்கள் தன் சொந்தங்கள் கூட வாழ நாயகியின் தந்தை நந்தகோபாலன் கண்டுபிடித்த முறை தான் இது.

மனித மூளைக்குள் இருக்கும் நியூரல் சிஸ்டம் போல் ஒரு ஆர்டிபிஸியல் நியூரல் சிஸ்டத்தை உருவாக்கி, மூளை நரம்பில் இருக்கும் இம்பல்ஸின் உதவியுடன் நேனோ சிப்பை மனித முளையில் செலுத்தி. அங்கிருக்கும் இருக்கும் நினைவு , அதாவது தகவல்களை சிப்பில் ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் தகவல் கொண்டு அவனை போலவே உருவத்தில் ஒரு ஹுமனாய்டு ரோபோட் செய்து அதில் பொருத்தி விட்டால் கோமா நிலையில் கூட அந்த மனிதன் இந்த உலகில் வாழலாம்.

அதே கண்டுபிடிப்பு தான் இப்போ தன் சொந்த மகளின் காதலை அடைய உதவியது. இவர்கள் காதல் கதை இன்னும் முடியல, இங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது.

மனித பையனுக்கும் ரோபோட் பெண்ணுக்கும் காதலோ காதல் இனி எப்படி இருக்கும் என பார்ப்போம்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்
?
 
Feb 4, 2020
49
9
8
என் சிலிக்கான் காதலி?? - 2


காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்தவளே தன் காதலை குழி தோண்டி புதைத்து விட்டாள் என்று காதல் கொண்ட மனம் அவளை தவறாக எண்ணாது தனது விதியை நினைத்து தன்னையே நொந்துக் கொண்டிருந்தான் கெளதம்.

அதன் பின் நடந்த சடங்கை எல்லாம் கடனுக்கென்று செய்தான். வீடு வரும் வரை அமைதியாக இருந்தவனால் அதற்கு மேல் பொறுத்து கொள்ள முடியவில்லை.

ஆரத்தி எடுத்ததும் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசி உள்ளே போனவனை கண்டு சிறிது கலக்கம் ஏற்ப்பட்டாலும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.

மாலை ரிசப்சனில் என்ன செய்ய காத்திருத்திருக்கனோ எதுவாக இருந்தாலும் பேஸ் பண்ணி தான் ஆகணும், இப்படி ஆகும் என்று தெரிந்து தானே உண்மையை சொன்னோம் இப்போ நம்ம தான் இதை சரி செய்யனும். எக்காரணம் கொண்டும் என்னை பத்தி அத்தை மாமாக்கு தெரிய கூடாது. முதலில் நம்ம ஆத்துக்கார கூல் பண்ணுவோம் என்று தன் சிலிக்கான் நெற்றியை தடவியவாறு கெளதமிடம் சென்றாள் விஜி.

கொதிகலனாய் கொதிக்கும் மனதை அடக்க தெரியாது நாற்காலியில் முகத்தை காலில் புதைத்து அமர்ந்திருந்தான்.

கார்த்திக் என்று தேனை விட இனிமையாக அழைத்தவளின் குரலில் உருகியவன், சில நொடியில் தன்னை நிதானித்து சொல்லுங்க மேடம், என்ன வேணும்? உங்க கட்டளைக்கு அடிமை தேடிட்டு இருக்கும் போது காதல் பித்து பிடிச்ச நான் உங்க வலையில் விழுந்துட்டேன்.

யாருக்கு தெரியும் இது உங்க பிளானா கூட இருக்கலாம் என்று வார்த்தை என்னும் கத்தியை அவன் மேல் வீசினான் கெளதம் கார்த்திக் .
அத்தான் பிளீஸ் நீங்க என்ன ஹார்ட் பண்றிங்க என்றாள் விஜி.

உன்னை விடவா , என் இதயத்தை அப்படியே அடியோட பிடிங்கி வலிய கொடுத்துட்டு உனக்கு வலிக்குதா? நல்லா காமெடி பண்ணுற என்று கைத்தட்டி சிரித்தான் கெளதம்.
இங்க பாருங்க கார்த்திக் நீங்க என் புருசன் நான் உங்க பொண்டாட்டி இதை யார் வந்தாலும் மாத்த முடியாது அந்த யாரில் அழுத்தம் கொடுக்க .

உண்மை தெரியுற வரை தான் இப்படி நீ உளர முடியும் எப்போ என் அம்மாக்கு தெரியுதோ அப்பவே இந்த வீட்டில் இடம் இல்லை.
நான் எதுவும் சொல்ல போறது இல்லை நீயும் உன்னை உருவாக்குன தீ கிரேட் சைன்டிஸ் மிஸ்டர் நந்தகோபலனும் தான் சொல்ல போறிங்க. லேட் ஆனாலும் உண்மை ஒரு நாள் தெரியதா போகுது.

என் காதலியோட நினைவை சுமக்கிற உனக்கே இப்படி இருக்கே, அவளை காதலிக்கிற எனக்கு எப்படி இருக்கும் போ இங்க இருந்து என்னை கொலைகாரனா? மாத்திறாதே என்றவனின் கன்னத்தை தட்டி.

விஜியோட காதலை தானே பாத்திருக்க நான் விஜி 2.0 என் காதலால் திக்குமுக்காடி போக போற.
இப்போ ரெஸ்ட் எடு ஈவினிங் பார்க்கிறேன் மை டியர் அத்தான் என்று ரோபோட்டும் வெக்கப்படும் என்பதை உணர்த்தி சென்றாள் விஜி.

விழியோர நீர் கசிய, அவனவள் எங்கு? எப்படி? இருக்கிறாள் என்று அறியாது இவன் துடிக்க. அதை கண்ணாடி அறையில் சிலையாய் படுத்திருப்பவளுக்கு தெரிந்ததோ என்னவோ துடிக்கும் இருதயம் அதன் செயல்ப்பாட்டை இழக்க மருத்துவர்களும் செவிலியர்களும் அவளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தனர்.

காரணம் இன்றி கெளதம் இருதயம் படப்படக்க முச்சு முட்ட பால்கனிக்கு ஓடி காற்றி வாங்கினான். அனைவரும் மாலை ரிசப்ஷனுக்கு கிளம்ப விஜியுடன் நந்தகோபாலன் முக்கிய வேலை ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவதாக கூற கெளதமின் தந்தை சண்முகம் எதிர்க்க சில பல சமாளிப்பிற்கு பிறகு அவசரமாக கிளம்பினர்.

காரில் போக போக அவளிடம் உண்மையான விஜியின் நிலைக்கூற, அவரது பதற்றம் அவளையும் ஒட்டிக் கொண்டது. ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அதிநவீன மருத்துவமனை ஒன்றின் முன் நின்றது அவர்களது மகிழுந்து.

வேகமாக சென்றவர்களை ஆசுவாசப் படுத்தி விஜியின் நிலை சற்று நேரத்திற்கு முன் மோசமான நிலையில் இருந்ததாகவும் இப்போது நார்மல் ஆகிவிட்டதாகவும் கூறிய பிறகே இருவருக்கும் நிம்மதியாக இருந்தது.

விஜி உள்ளே சென்று உறங்கி கொண்டிருப்பவளை பார்க்க, எந்த அசைவும் இன்றி அமைதியாக இருந்தாள். ஒரு முறை தானே அவளை செக் செய்வதாக கூற மருத்துவர்கள் வெளியே செல்ல அவளிடம் வந்த நந்தகோபால் கண்ணீல் ஏக்கத்துடன் எதாவது முன்னேற்றம் இருக்குமானு தெரியலை அவள் உயிரோட இருந்தா போதும் என்று அவர் பேசி செல்ல, கெளதமின் நினைவே அவளுக்கு வந்தது.

அவனிற்காகவாது நினைவு மீண்டு எழுந்து வர வேண்டும் என்று தோன்றியது இவளுக்கு. வெறும் நினைவுகளுடன் இந்த இரண்டு மாதம் அவனுடன் பழகிய தனக்கே அவனை விட முடியாது காதலில் விழ இத்தனை வருட காதலுக்கு எவ்வளவு சக்தி இருக்கும் என்று நினைத்தவள் தலை தட்டி, நான் ஒரு ரோபோ, இந்த மஞ்சள் கயிறு கழுத்தில் ஏறுனதில் இருந்து , டிப்பிக்கல் ஹவுஸ் வொய்ஃப் மாறி பிகேவ் பண்றேன் என்று தன்னை தானே கடிந்து.

தனது ஆர்டிபிசியல் நியுரல் சிஸ்டத்தில் பதிவு செய்திருக்கும் செய்தியை அவளுக்கு செலுத்தினாள், இன்றும் எந்த பிரதிபலிப்பும் இல்லாது அமைதியாக இருந்தாள். அவள் உடலை பரிசோதித்து அவள் நன்றாக இருப்பதை புரிந்து கொண்டு நிமிர, அவள் கழுத்தில் இருந்த தாலி படுத்திருப்பவளின் ஆடையில் சிக்கியது ஒரு முறை பக்கென்று உணர்ந்து அதை விடுவித்து .

அவள் கையை பற்றி பேசினாள் விஜி 2.0 , நீ குணமாகி வருவதற்குள் உனக்கு சமமா என் கார்த்திக்கை காதலிக்க வைப்பேன் என்று சபதம் எடுத்து சென்றாள்.

இவள் இப்படி சொல்லி செல்ல அதற்கு காரணமானவனோ உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.


யார் இந்த விஜி?
என்னாச்ச அவளுக்கு ?
என்ன ரோபோட்டுக்கு காதலா?


இப்படி பல கேள்விகளுக்கு சொந்தமான பதிலை தேடி கெளதமை போல் நாமும் அவனது சிலிக்கான் காதலியை தொடருவோம். . . . .


இப்படிக்கு ,
உங்கள் ,
சுபாஷினி ?.
 

Vijayan

Member
Feb 4, 2020
63
2
8
என் சிலிக்கான் காதலி?? - 3

செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), இயந்திர வழி கற்றல் (Machine learning) மற்றும் நரம்பணுவியல் (Neuroscience) இப்படி பல தகவல்களை இணையத்தில் தேடி படித்து கொண்டு இருந்தான் கௌதம்.

அதில் அவனுக்கு தெரிய வேண்டியது சில கேள்விக்கான பதில் இருந்தது.

1. அது எப்படி இது சாத்தியம்? மனிதனை போல் ஒரு இயந்திரம் இருக்க முடியும்?
2. மனித மூளையில் இருக்கும் தகவல்களை அதாவது சில நினைவுகளை எப்படி ஒரு இயந்திரம் தனக்குள் சேமித்து கொள்ளும்?
3. மனித மூளை என்பது பல ஆயிரம் கோடி நினைவுகளை கொண்டது. அதை எப்படி பிரித்து அறிந்து இந்த விதமான நினைவுகளை மட்டும் அந்த இயந்திரம் தனக்குள் சேமித்து வைத்தது?
4. நிஜத்துக்கும் நிரலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு இந்த கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது?
5. என்னால் ஏன் நிஜ விஜிக்கும் இயந்திர விஜிக்கும் வித்தியாசம் கண்டு கொள்ள முடியவில்லை? என் காதல் எதை குறிக்கிறது முகத்தையா? மனசையா?
6. இந்த விஜி 2.0, எல்லாம் பெற்று தானே இருக்கிறாள்! முகம் மற்றும் எங்களின் காதல் நினைவுகள் அப்படியும் எது என்னை தடுக்கிறது?
7. என் காதல் உடல் அங்கத்தை எதிர்பார்த்த காதலித்தது? அப்போ உண்மையான காதல் எது? எதை பார்க்கும்?

கௌதம்,"கடந்த இந்த ரெண்டு மாசத்தில் விஜி 2.0 வின் செயலில் அவன் எங்கையுமே சந்தேகம் கொள்ளவில்லை. அவன் விஜி தான், ஆனால் காதல் நினைவுகள் சேர்த்து சில இயந்திர சக்தி பெற்றவள்.

இவளிடம் ஏதாவது ஓவரா பேச போய் தூக்கி போட்டு மிதித்து விடுவாளோ என்கிற பயமா வேற இருக்கு ?.

சீக்கிரம் இவளின் கொட்டத்தை அடக்க வேண்டும் இல்ல நம்ம நிலை மோசம் ஆகிவிடும்" என பல கேள்விகள் தந்த குழப்பத்தில் அவன் இருக்கே. தன் அம்மாவுடன் தன்னறைக்கு வந்த விஜி2.0வை பார்த்தான்.

கௌதம், "இப்போ எதுக்கு இங்க வந்த??"

விஜி 2.0 அமைதியாக இருக்க ஆனால் கௌதமின் அம்மா செண்பகம், "கௌதம்! இப்போ எதுக்கு அவளை திட்டுர? இவள் உன்னை நம்பி கல்யாணம் பண்ணதுக்கு இதெல்லாம் தேவையா! உங்க ரெண்டு பேர் நடுவில் என்ன பிரச்சினை தெரியல அதை நீங்களே சீக்கிரம் பேசி முடிக்கிற வழியை பாருங்க. புருஷன் பொண்டாட்டி சண்டை நான்கு சுவருக்குள் இருக்கும் வர பிரச்சினை இல்ல. அதுவே வெளிய வந்தால், அதை விட கேவலம் வேற எதுவும் இல்ல. இதில் உங்களோடது காதல் திருமணம் வேற பார்த்துக்கோ! அப்பறம் அவன் அவன் நாகில் நரம்பு இல்லாமல் பேசுவான்"

தன் வந்த வேலை முடிந்தது என அவர் வெளியே செல்ல அந்த அறையின் கதவை தாழ்ப்பாள் போட்டு வந்த விஜி 2.0, "என்ன அத்தான் செம்ம ஜாலி மூடில் இருக்கீங்க போல! இன்னிக்கு நைட், நமக்கு ஃபர்ஸ்ட் நைட் வேற அதை நினைத்தால் இப்போவே எனக்கு வெட்க வெட்கமா இருக்கு."

கௌதம், "சாரி விஜி 2.0, நான் வெறும் மனிதன் தான். அதே போல நான் செக்ஸ் வெறி பிடித்தவன் இல்ல! கேவலம் ஒரு இயந்திரத்தோடு புணர!"

விஜி 2.0, "என்ன அத்தான் இப்படி சொல்றீங்க! அப்போ நம்ம ஃபர்ஸ்ட் நைட் கனவு என்ன ஆகிறது? போன வருஷம் நம்ம பேசியது என்ன? இப்போ நீங்க சொல்றது என்ன?"

தன் தலையில் அடித்து கொண்டவன், "இங்க பார் நான் அப்போ சொன்னது எல்லாம் என் விஜி கிட்ட, உன் கிட்ட இல்ல நீ விஜி இல்ல நீ விஜி 2.0 ."

விஜி 2.0, "உண்மை தான், ஆனால் உங்க விஜியின் நினைவு தானே நான் இப்போ தாங்கி இருக்கேன். பாருங்க உங்களை பற்றிய ஒவ்வொரு நினைவும் அவள் மூலம் எனக்கு தெரியும்."

கௌதம், "நினைவு காதல் ஆகாது சிலிக்கான் பெண்ணே... ச்சே சிலிக்கான் இயந்திரமே! அதுக்கு மனம் வேண்டும் நினைவுகளை இழந்தவர்கள் கூட காதல் கொள்வார்கள், அதே இணையோடு! அதே மனசோடு!"

விஜி 2.0, "மனசு! மனசு!! உங்களின் மனித உடலில் அது எங்க இருக்கு? இதயம் மட்டும் சொல்ல வேண்டாம். அதன் வேலையே தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் (ரத்தம்) குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது மட்டுமே. இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது. அதனால் சொல்லுங்க மனிதனே உங்களின் காதல் எங்கே எந்த உறுப்பில் இருக்கு?"

கௌதம், "சூப்பர்! உண்மைதான் இதயத்தின் வேலை தேவையான தூய ரத்தம் வழங்குவது மற்றும் தேவையற்ற இறந்த ஆணுகளை (உடலில் தேவையான சத்துகளை வழங்கி விட்டு காலம் முடிந்த ரத்த ஆணுகள், தேவையற்ற உடல் கொழுப்புகளை ஆகற்றும் பணி) தூய்மைப்படுத்தும் பணி செய்வது தான். கவிதை எழுத அதை உவமையாக சொல்வோம் மற்றப்படி மனம் எங்க என எங்களுக்கே தெரியாது. கடவுள் பேய்கள் போல அதுவும் ஒரு புதிர் தான்."

விஜி 2.0, "பேய் பற்றி எனக்கு தெரியாது அத்தான்! ஆனால் கடவுள் என்றால் என் அப்பா நந்தகோபாலன் தான் அவர் தானே என்னை உருவாக்கி அவரின் பெண்ணின் நினைவை கொடுத்தவர்."

கௌதம், "எனக்கு இந்த கான்செப்ட் புரியல. அது எப்படி மூளை தகவல் பரிமாற்றம் நடந்தது. இணையத்தில் (ஆன்லைன்) கூட சரியான தகவல் இல்ல!"

விஜி 2.0, "அதன் அப்பவே சொன்னேன் இல்ல! இது ரகசிய ஆராய்ச்சி நல்லது இருப்பது போல பல கெட்டதும் இருக்கு.."

கௌதம், "ஆமாம்! என்னை போல ஒருத்தனை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது"

விஜி 2.0, "உங்க விஜியின் பிம்மம் தான் நான். அவளுக்கு உங்கள் மேல் காதல் இருக்க போனதால் தான் என்னை படைக்கும் உட்வேகம் உங்க மாமனாருக்கு வந்தது. அவர் என்னை படைத்தது அவருக்காக இல்ல! அவரின் ஒரே பொண்ணு உங்கள் மேல் வைத்து தூய காதலுக்காக! அப்படி இருக்க போய் தான் உங்களை பற்றி நினைவுகளை மட்டும் என் தகவல் கோப்பைகுள் சேமித்து வைத்தார். அதே போல தினம் தினம் என் மூலம் நம்ம தினசரி கெஞ்சல்! கொஞ்சல்களை! இணையத்தில் அனுப்புவது போல! என் மூலம் விஜியின் மூளையில் சுற்றும் நியூரான் செல் உதவியுடன் அவளின் மூளையில் நாங்க பொருத்திய எலக்ட்ரோ கிளிப் வழிய அன்றைய நாள் நான் சந்தித்த நிகழ்வுகளை எல்லாம் அவளுக்கு பரிமாற்றம் செய்கிறேன். உங்களுக்கு குழப்பம் வர கூடாது சொல்லி ரொம்ப ரொம்ப சிம்பிள் டெர்ம்ஸ் பயன்படுத்தி சொல்லி இருக்கேன்."

கௌதம், "எது இது சிம்பிள் டெர்ம்ஸ் ஆ? ரொம்ப ஓவரா போறீங்க விஜி 2.0!"

விஜி 2.0, "என்ன பண்றது பிரபல விஞ்ஞானி நந்தகோபாலனின் பொண்ணுடைய நினைவுகளை பரிமாற்றும் இயந்திரம் அல்லவா நான்! அப்படி தான் இருக்கும். போதாத குறைக்கு உங்க விஜி வேற குட்டி விஞ்ஞானி உங்களின் காதல் நினைவுகளை சேர்த்து மற்றவர்களை நம்ப வைக்க கூடவே சில அடிப்படை தகவல்களையும் என் சிஸ்டம் கூட சேமிக்கிறேன்."

கௌதம், "ஒண்ணுமே புரியல! சரி விஷயத்துக்கு வா, இந்த கண்டுபிடிப்பு வெளியுலகுக்கு தெரிந்தால் என்ன கெட்டது நடக்கும் சொல்ற?"

விஜி 2.0, "அப்பா உருவாக்கிய இந்த கண்டுபிடிப்பு கோமா ஸ்டேஜில் இருப்பவர்களை நிஜ உலகில் இயந்திர வடிவில் வாழவைக்க தான். ஆனால் இது அப்படி மட்டும் பயன்படுவதில்லை நல்ல நிலையில் இருக்கும் மனிதனை மயக்க நிலைக்கு செல்ல வைத்து! அவன் மூளையில் திருட்டுத்தனமாக இன்ஜெக்சன் மூலம் சிப்பை பொருத்தி நியூரோ செல்கள் மூலம் வேண்டிய தகவல்களை திருட வாய்ப்பு இருக்கு. திருடுவது மட்டும் இல்ல அந்த தகவல்களை நமக்கு ஏற்ற விதத்தில் மாற்றி அமைக்கவும் வாய்ப்பு இருக்கு. உதாரணமாக விஜி என்ற ஒரு பெண்ணே உங்கள் நினைவில் இருந்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேற ஒரு பொண்ணை வைக்க கூட முடியும். பிரதமர் போல ஒரு இயந்திரம் உருவாக்கி அதில் தீயவர்கள் சிலர் எதிர்வினை தகவல்களை செலுத்தி இந்தியா போல பல போல பல நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள கூட முடியும். இப்போ சொல்லுங்க எங்க அப்பாவின் ரகசிய ஆராய்ச்சி வெளியே வரணுமா? இணையத்தில் போடணுமா?"

கௌதம், "ஆணியே புடுங்க வேண்டாம் நான் என் வேலைய பார்கிறேன் நீ உன் வேலையை பார்.."

விஜி 2.0, "என் இப்போதைய வேலை உன் கூட ரொமான்ஸ் பண்றது தானே அத்தான்! என் ஆசை அத்தான்!!???"

அவள் நெருங்க நெருங்க அவன் பின்னாடியே பயத்தில் போனான். சுவரோடு சுவராக அவனை நகர்த்தி விட்ட அந்த சிலிக்கான் பெண் அவனின் உதடு அருகே சென்று தன் உதட்டால் ஓத்தடம் கொடுத்தாள்.

கடந்த இரு மாதங்களாக அவனே ஆரம்பித்து வைக்கும் இந்த இதழ் ஓத்தடம்! இப்போ அவள் மூலம் அதுவும் அவள் ஒரு இயந்திரம் என்ற உண்மை தெரிந்தும் கூட இது அவனுக்கு புது அனுபவமாக இருந்தது. தன்னை மறந்து அவள் அந்த விஜி இல்ல விஜி 2.0 என்கிற ஒன்றை கூட மறந்து அவன் ஆழ்ந்து இருக்கும் போது அதை கலைப்பது போல கதவு தட்டப்பட்டது. அதில் தன் மோக நிலை கலைந்தவன் கோபத்தில், "யாருடா அது? என் பொண்டாட்டிக்கு நான் முத்தம் கொடுக்கும் போது கரடி மாதிரி டிஸ்டர்ப் பண்றது!!"

தன்னை மீறி சொன்னவன் அப்போது தான் உணர்ந்து கொண்டான், தன்னையும் மீறி விஜி 2.0 என்கிற இயந்திர பெண்ணை மனைவி என மனதில் பதிய வைத்து விட்டோம்.

அவளை ஒதுக்கி விட்டு கதவை அவன் திறக்க இங்கே நம்ம விஜி 2.0 பாட்டு பாடி கொண்டு இருந்தாள்.

"இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
ஆண் பூவே உன்னோடு.."


கதவுக்கு அடுத்த பக்கம் யார் இருக்கிறார்கள் என கூட பார்க்காமல் தன் சிலிக்கான் காதலியை முறைந்தான் நம்ம கதாநாயகன் கௌதம் கார்த்திக், அவளின் கார்த்திக்.

தொடரும் . . . . . .

இப்படிக்கு,
உங்களின் கனவு காதலன்,
?விஜயன்?