எனது கிராமம்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,694
1,430
113
எனது கிராமம்பச்சை பசேல் என்றிருந்த புல்வெளிகள்
மஞ்சள் கோடுகளால் பிரிக்கப்பட்டு
மனைகளாய் மாறிவிட்டன

தாவணிப் பெண்கள்
உச்சி வெயிலில் கூட
நைட்டியில் திரிகிறார்கள்

ஊர் பஞ்சாயத்தெல்லாம்
இப்பொழுது
டாட்டா சுமோ தாதாக்களின்
தலைமையில்தான்
நடைபெறுகிறது

ஆலயங்களில் விளக்கேற்றிய
அய்யர்களெல்லாம்
அமெரிக்காப் போய்விட்டார்கள்

குடிசைகளெல்லாம்
மாடிகளாய் மாறிவிட்டன

டீ கடைகளைவிட
மருந்து கடைகள்
அதிகமாகிவிட்டது

பத்தாண்டுகளில்
எனது கிராமத்தின்
வளர்ச்சி வியக்க வைக்கிறது
ஆனாலும்
இதயம் ஏனோ
வலிக்கிறது