இவன் வேற மாதிரி - கதை திரி

Status
Not open for further replies.

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 6

செல்வநாயகத்தின் எண்ணம் முழுவதும் கிருஷ்ணாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எண்ணிக் கொண்டிருந்தார். பத்மாவிடம் அவன் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவர் மனதிற்கு உவப்பானதாக இல்லை. ஏனோ கிருஷ்ணாவின் வளர்ப்பில் எங்கோ தவறி இருக்கிறோம் என்கிற எண்ணம் சமீப காலமாக அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது இன்று உறுதியானது.

திருமணம் செய்து கொள்ள சொன்ன பெற்றவர்களிடம் வீட்டை விட்டே போகிறேன் என்று சொல்வது நிச்சயம் நல்ல மன நிலை அல்ல. இன்று அவனிடம் பேசி எப்படியாவது காரணத்தை கண்டறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

பத்மாவோ அழுது அழுது சோர்ந்து போயிருந்தார். ‘என்ன கேட்டுவிட்டேன்? திருமணம் செய்து கொள்ள சொன்னதற்கு வீட்டை விட்டே போகிறேன் என்று சொல்வது பெரிய வார்த்தை அல்லவா? அவனுக்கு தங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் ஒட்டுதல் இல்லையா? அத்தனை எளிதாக விலகிச் செல்கிறேன் என்று சொல்லி விட்டானே’ என்று வருந்தினார்ர்.

தன் மனதில் கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டாது மனைவியை சமாதானபடுத்தினார் செல்வநாயகம்.

“அவனுக்கு தொழிலில் எதுவும் பிரச்சனை இருக்கும் பத்மா. சின்னவனாட்டம் இருந்தா நம்ம கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவான். இவன் தான் எதையுமே பகிர்ந்துக்க மாட்டானே. விடு! எல்லாம் சரியாகிடும்” என்றார்.

மாலை சரியாக நதியா கல்லூரி முடிந்ததும் நித்திக்கு தெரியாமல் பூங்காவிற்கு சென்றாள். அவளுக்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தான் விஷால். தனது காதலை சொல்லிய அதே இடத்தில் அவளுக்காக காத்திருந்தான்.

அலைப்பேசியில் அவனிடம் பேசி விட்டாலும், நேரடியாக அவனை சந்திக்க மனம் படபடத்து போனது. கைகள் எல்லாம் சில்லிட்டுப் போக, மெல்ல நடந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள். தூரத்தில் இருந்தே அவள் வருவதை பார்த்துவிட்ட விஷாலுக்கு, அவளின் நிலை புரிந்து போக இதழில் எழுந்த குறுஞ்சிரிப்புடன் “அப்படியே பார்ஸ்ட் நைட்டுக்கு வர பொண்ணு மாதிரியே இருந்துச்சு” என்றான்.

அதில் சட்டென்று நிமிர்ந்து பார்த்து முறைத்து “இப்படியெல்லாம் பேசினா நான் கிளம்பிடுவேன்” என்றாள் முறைப்புடன்.

இரு கைகளையும் உயர்த்தி “சரண்டர்! நீ நடந்து வந்ததை பார்த்ததும் எனக்கு அப்படி தோனுச்சு” என்றவன் சிரிப்புடன் பேசாமல் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

அந்த நிலை அவளுக்கு சங்கடத்தை ஏற்ப்படுத்த மெல்ல தலையை உயர்த்தி அவனது கண்களை பார்த்தவள் “என்னைப் பற்றி சொல்லவா? நான் யார்? என் குடும்ப உறுப்பினர்கள்..” என்று அவள் முடிக்கும் முன்பே “வேண்டாம் தியா! உன்னைப் பற்றி சிலது நித்யா சொல்லி இருக்கிறாள். அது போதும். எனக்கு நதியா என்கிற இந்தப் பெண்ணை பிடிக்கும். அவளோட பின்னணி, கடந்த காலம், வசதி, சொந்தங்கள் என்று பார்த்து வருவதில்லை காதல். கடந்த ஒருவருஷமாகவே உன்னை என் மனசில் வைத்திருக்கிறேன். இப்பவும் என்னுடைய காதலை சொல்லாம இருக்கணும்னு தான் நினைத்தேன்”.

அவன் அப்படி சொன்னதும் “ஏன்?”

மெல்லிய சிரிப்புடன் “என் தங்கை வயதுடையவள் நீ. என் தங்கைக்கு நல்ல ரோல்மாடலா இருக்கணும்னு நினைக்கிறேன் தியா. அப்படி நினைத்த எனக்கு ஒரே ஒரு பயம். உன் மனதில் வேறு யாருக்காவது இடம் கொடுத்திட்டா என்ன பண்றது என்று தான் சொல்லிட்டேன்”.

அத்தனை நேரம் இருந்த பதட்டமும், இறுக்கமும் விலக முகத்தில் மெல்லிய வெட்கம் படர “இனி எப்படி உங்க தங்கைக்கு ரோல்மாடலா இருக்க முடியும்?”.

அவள் எதிர்பார்க்கும் முன்பு அவளது கைகளைப் பற்றிக் கொண்டவன் “இருக்க முடியும் தியா...இதோ இந்த நிமிஷம் நம்ம ரெண்டு பேர் மனதிலும் ஒருவர் மேல் ஒருவர் பிரியம் வைத்திருக்கிறோம். இனி, அந்த ஆண்டவனே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனது கைகளில் புதைந்திருந்த தனது கையை விடுவித்துக் கொள்ள முயன்றவள் “அதெப்படி சொல்றீங்க?”

“நான் உன் மேல வைத்திருக்கும் அன்பு மாறாது. அதே போல உன்னுடைய காதலும் எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காது” என்றான் உறுதியாக.

அவனது ஆழமான நம்பிக்கையை கண்டு அசந்து போனவள் “பார்க்காமலே காதல் சினிமாவிலும், கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருக்கேன் விஷால். உங்க நேசத்தின் முன்பு என் அன்பு தோற்று போயிடும்” என்றாள் கலங்கிய கண்களுடன்.

“நீ தோற்றால் அது நான் தோற்ற மாதிரி. நீ என்னைக்கும் என்னை தோற்க விட மாட்ட” என்றவன் நன்றாக கைகளை அழுத்திக் கொடுத்து “நான் சொல்ல வந்ததை நன்றாக மனதில் வைத்துக் கொள் தியா. நாம அடிக்கடி சந்தித்து தான் நம் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றில்லை. அதோட அடிக்கடி சந்திப்பது உன்னுடைய படிப்பிற்கு கெடுதலாக முடியும். அதனால் முடிந்தளவு போனில் பேசிக் கொள்வோம். நம்ம இரண்டு பேர்ல யாருக்கு அடுத்தவரை பார்க்கணும் போல தோன்றினாலும் உடனே சந்திப்போம். இதெல்லாம் எதற்குன்னா உன்னுடைய படிப்பு இந்த காதலால கெட கூடாது. நீ படித்து முடித்த பின் நம்முடைய காதலை ரெண்டு பேர் வீட்டிலேயும் சொல்லலாம்”.

அவனது சிந்தனையும் பேச்சும் அவளை மேலும் அவன் பக்கம் சாய்த்து விட்டது. அவன் சொன்னவற்றிற்கு தலையை மட்டும் அசைத்தவள் நீண்ட நெடிய பெருமூச்சுடன் “இங்கே வரும் போது பயந்து கொண்டே தான் வந்தேன். உங்கள் காதலின் வேகத்தை தாங்க முடியுமா?அடிக்கடி சந்திக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? என்று பலவித யோசனைகளை. பொதுவாக ஆண்கள் காதல் தீவிரவாதிகள். அவர்களிடம் சிக்கிக் கொள்ளும் பெண்கள் தங்களை மீறி தான் செயல்பட வேண்டி இருக்கும். ஆனால் உங்க பேச்சு எனக்கு பெருத்த நிம்மதியை தருது”.

அத்தனை நேரம் இருந்த சீரியஸ் மோட் மாறி குறும்பு கண்ணனாக சிரித்தவன் “ஹலோ மேடம்! அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதீங்க. நானும் தீவிரவாதி தான். ஏதோ சின்ன பெண்ணாச்சே கொஞ்ச நாள் டைம் கொடுப்போம்னு தான் இருக்கேன். அதுக்காக புத்தர் ரேஞ்சுக்கு எல்லாம் கற்பனை பண்ணாதீங்க. விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” என்று கூறி கண் சிமிட்டினான்.

குப்பென்று முகம் சிவந்து விட வேறுபக்கம் திருப்பிக் கொண்டவள் “எங்க அண்ணன் நல்லவன், வல்லவன்னு நித்தி சொல்வா. அதை எல்லாம் பொய்யாக்கிட்டீங்க”.

குறுஞ்சிரிப்புடன் “அவங்க அண்ணன் அவளுக்கு நல்லவன். காதலி கிட்டேயும் பொண்டாட்டி கிட்டேயும் எவனும் நல்லவனா இருக்க முடியாது தியா பேபி”.

அவனது மென்மையான சிரிப்பும் பேச்சும் அவள் மனதில் அவனை சிம்மாசனமிட்டு அமர செய்தது. மேலும் சற்று நேரம் தங்களைப் பற்றியும், தங்கள் எதிர்காலத்தை பற்றியும் பேசி இருந்துவிட்டு அவள் கிளம்ப “ம்ம்...காதலியை பார்க்க வந்துட்டு எதுவுமே வாங்காம போறேன்” என்றான் கண்ணடித்து.

“பார்க் வாட்ச்மேனை கூப்பிடவா? நிறைய கொடுப்பார் வாங்கிகிட்டு போகலாம்” என்றாள் குறும்பாக.

“நீயா பேசியது அன்பே நீயா பேசியது” என்று மெல்லிய குரலில் பாட, அதில் வெட்கமடைந்தவள் வேகமாக வாயிலை நோக்கி ஓடி விட்டாள்.

அங்கிருந்து அவனுக்கு தலையசைத்து விடை பெற்று ஹாஸ்டலை நோக்கி செல்ல, அவனும் தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அன்னையிடம் மிரட்டிவிட்டு ஆபிஸ் வந்த கிருஷ்ணா மாலை வரை வேலையில் மூழ்கி இருந்தான். பெற்றவளிடம் அப்படி பேசி விட்டோமே என்கிற கவலையோ, வருத்தமோ சிறிதும் இல்லாமல் தனது வேலையை செய்து கொண்டிருந்தான்.

நீலா எப்பொழுதும் போல் அல்லாமல் அன்று ஓரளவு பார்க்கும் படியாக ஆடைகளை உடுத்தி அலங்காரம் செய்து கொண்டு வந்திருந்தாள். அதை பார்த்ததும் கீர்த்தி அவளை வறுத்தெடுத்து விட்டாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“நீ இன்னும் திருந்தலையா நீலா? கிடைக்காது என்று தெரிந்தும் ஆசைப்படுவதை போல முட்டாள்தனம் ஒன்றுமில்லை”.

அதைக் கேட்டதும் சட்டென்று கண்கள் கலங்கி விட “நீயும் என்னை தப்பா நினைக்கிற கீர்த்தி. என் தங்கை புதுசா வேலையில் சேர்ந்து முதல் மாசம் சம்பளம் வாங்கி இருக்கா. அதில் வாங்கி கொடுத்த டிரஸ் இது” என்றாள்.

அதைக் கேட்டதும் தன் தவறை உணர்ந்து கொண்ட கீர்த்தி “சாரி நீலா...உன்னை தப்பா நினைக்கணும்னு இல்ல. நீ தேவையில்லாம ஆசையை வளர்த்துக் கொண்டு உன் வாழ்க்கையை வீணாக்கி கொள்வாயோன்னு பயந்து தான்..”.

அவளின் முகம் ஒரு நிமிடம் பிரகாசமடைந்து பின் சட்டென்று இயல்பு நிலைக்கு திரும்பியதை கவனித்த கீர்த்தி குழம்பி போனாள். மாலை வேலை முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகு, இறுதியாக நீலாவும் சற்றே உற்சாக மனநிலையுடன் கிளம்பிச் சென்றாள்.

கிருஷ்ணாவோ சுமார் எட்டு மணியளவில் அலுவலகத்தை விட்டு கிளம்பியவன் வீட்டிற்கு செல்லவில்லை. தான் அவ்வப்போது ரெஸ்ட் எடுக்கும் அலுவலக கெஸ்ட் ஹவுசிற்கு சென்று விட்டான். இன்று காலை அன்னை பேசியதிலிருந்து அவன் மனநிலை வீட்டிற்கு செல்ல இடம் கொடுக்கவில்லை.

இரவு உணவிற்கு வீட்டிலிருந்த அனைவரும் உணவு மேஜைக்கு வர, “கிருஷ்ணா வந்தாச்சா பத்மா?”

“இல்லைங்க இன்னும் வரல”.

பொதுவாக ஏழரை மணி வாக்கில் வீடு வந்து சேர்ந்து விடுபவன் அன்று எட்டரை மணி வரை வராதது மனதை உறுத்த அவனுக்கு போனை அடித்தார். அவனோ தந்தையின் போனை பார்த்து விட்டு கடுப்புடன் கட் பண்ணினான். இரண்டு மூன்று முறை அடித்து பார்த்து ஓய்ந்து போனவர் “விஷால்! நீ அவனுக்கு அடி” என்றார்.

அண்ணன் மேல் எழுந்த கோபத்தை அடக்கியபடி அவனுக்கு அழைக்க அடுத்த நிமிடமே எடுத்தான் “என்னடா?”

“வீட்டுக்கு வரலையா?”

“இல்லடா! எனக்கு கொஞ்சம் மூட் அவுட். நாளைக்கு வரேன்”.

“அண்ணா! அம்மா வர சொல்றாங்க”.

அவ்வளவு தான் அதுவரை அழுத்திப் பிடித்திருந்த கோபத்துடன் “சும்மா படுத்த்தாதீங்கடா...அதான் நீயும், நித்தியும் இருக்கீங்க இல்ல. என்னை என் போக்கில் விடுங்க” என்றவன் போனை அனைத்து தூக்கி எறிந்தான்.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அந்தப் பக்கம் என்ன பதில் வந்திருக்கும் என்று புரிந்து போனது.

அப்படியே ஓய்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தவர் “என்னைக்கு தொழில் தொடங்கன்னு மும்பை போனானோ அப்போலருந்து அவனோட குணம் மொத்தமா மாறி போச்சு. எல்லாம் உங்களால தான்” என்று புலம்ப ஆரம்பித்தார்.

அவர் சொல்வது உண்மை என்றே அனைவருக்கும் தோன்றியது. ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு கூட கிருஷ்ணா இப்படி இருந்ததில்லை. யாரிடமும் அதிகளவு ஒட்டுதல் இல்லாவிட்டாலும், வீட்டிலிருக்கும் நேரம் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்.

கடந்த நான்கு வருடங்களாக தான் அவனது குணம் மொத்தமாக மாற ஆரம்பித்திருக்கிறது. விஷாலும் அதையே தான் எண்ணினான். அதிலும் இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோவம் வருவது போல தோன்றியது. இப்போதெல்லாம் நாள் தோறும் அவன் காரணமாக ஏதாவது ஒரு பிரச்சனை நடக்கிறது. நிச்சயம் இது நல்லதுக்கல்ல என்று நினைத்தவன் “அப்பா! நான் போய் அண்ணனை கூட்டிட்டு வரேன்” என்று கிளம்பினான்.

நித்தியோ “வேண்டாண்ணா! கோவத்துல அடிச்சிட போறாங்க. அவங்களாவே வரட்டும்” என்றாள் பயத்துடன்.

அவளை திரும்பி பார்த்து சிரித்தவன் “நீ என்ன அண்ணனை வில்லன் ரேஞ்சுக்கு சொல்ற. அதெல்லாம் நான் கூப்பிட்டா வந்துடுவான்” என்று கூறிவிட்டு சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பத்மாவும், செல்வநாயகமும் யோசனையுடன் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

சுமார் அரை மணி நேரத்தில் கிருஷ்ணா இருந்த கம்பனி கெஸ்ட் ஹவுசிற்கு சென்று விட வாயிலில் இருந்த செக்கியுருட்டி “என்ன தம்பி இந்த நேரத்துக்கு அண்ணனை சாரை தேடி வந்தீங்களா?” என்றவரின் பார்வையில் இருந்தது என்ன என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

“ஆமாண்ணே!” என்றவன் காரை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அங்கே ஹால் சோபாவில் அமர்ந்து சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.

அதை பார்த்ததுமே உள்ளுக்குள் ஜெர்காக “கிருஷ்ணா” என்றவன் அவன் முன்னே நின்றான்.

சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் “வாடா! என்ன உன்னையும் துரத்தி விட்டுடுடாங்களா?” என்றான் அசால்டாக.

“என்ன கிருஷ்ணா இப்படி பேசுற? அவங்க நம்மளை பெத்தவங்க”.

“இல்லேன்னு சொல்லலையேடா. அதுக்காக அவங்க சொல்கிறபடி தான் வாழணும்னு எதிர்பார்க்கிறது தப்பில்லையா?”

அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே “அப்படி என்ன தப்பா சொல்லிட்டாங்க? எல்லா பெத்தவங்களும் அவங்க பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுவாங்க தானே?’

“நீ அவங்க விருப்பபடி வாழ்க்கையை அமைச்சுக்க தயாராக இருக்கலாம். நான் என் வாழ்க்கையை எப்படி வாழணும்னு நினைக்கிறேனோ அப்படி தான் வாழ்வேன். அதில் தலையிட அவங்களுக்கு உரிமை இல்லை”.

“நீ யாரையும் லவ் பண்றியா?”

“ஹாஹா...லவ்வா? நானா? சான்சே இல்ல”.

“லவ் பெயிலியர் எதுவும்?”

மீண்டும் வெடிச் சிரிப்பு அவனிடமிருந்து.

“அப்போ ஏன் இத்தனை வெறுப்பு திருமணத்தைப் பற்றி?”

“உனக்கு புரியாதுடா...நீ சின்னப்பையன். அதோட என்னோட ஆசை, கொள்கை, நான் விரும்புபவை எல்லாம் உன்னால புரிஞ்சுக்க முடியாது”.

நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டு “சொல்லு நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்”.

தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் “நீ கிளம்பு! நான் நாளைக்கு வரேன்” என்றான் கடுப்பாக.

அவன் எதுவும் சொல்ல மாட்டான் என்று புரிய, சற்றே வேதனையுடன் அங்கிருந்து வாயிலை நோக்கி நகர்ந்தவன் மெல்ல திரும்பி பார்த்து “நீ எப்போ சிகரெட் குடிக்க ஆரம்பிச்ச? சிகரெட் மட்டும் தானா?” என்றான் கண்களில் வலியுடன்.

தம்பியின் கண்களில் தெரிந்த வலியைக் கண்டு சிரித்து “என்னடா? என்னவோ தப்பு பண்ணிட்ட மாதிரி சோகமா முகத்தை வச்சுகிட்டு கேட்கிற? இதை தான் சொன்னேன் விஷால். இது நான் விரும்புவது. இப்போ புரியுதா?”

“பெற்றவங்க எப்போதும் நம்ம நன்மைக்கு தான் சொல்வாங்க கிருஷ்ணா”.

“டேய்! நல்லவனே! நீ கிளம்பு. நான் கெட்டவனாகவே இருந்திட்டு போறேன்” என்று திரும்பி மாடிப்படியில் ஏறி விடுவிடுவென்று சென்று விட்டான்.

கிருஷ்ணாவின் போக்கை எண்ணி நொந்து கொண்டே வெளியில் வந்தவன் காரை எடுக்க, வாட்ச்மன் ஏனோ தன்னை தவிப்போடு பார்ப்பது போல தோன்ற “என்னன்னே! எதுவும் சொல்லனுமா?” என்றான் காரிலிருந்து தலையை நீட்டி.

“சார் உங்க கூட வரலையா தம்பி” என்றார் மாடியை பார்த்துக் கொண்டே.

“இல்லண்ணே! நாளைக்கு வரேன்னு சொல்லிட்டான்” என்று கூறி அவர் முகத்தை பார்த்தான்.

அவரின் முகத்தில் இருந்தது என்ன என்று அனுமானிக்க முடியவில்லை. மெல்ல தலையசைத்துவிட்டு வாயிலிருந்த நாற்காலியில் சென்றமர்ந்து கொண்டார்.

விஷால் கெஸ்ட் ஹவுசை விட்டு வெளியே வந்த பிறகு, நேராக வீட்டிற்கு சென்றுவிட மனமில்லை. நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. இவன் எப்படி மாறி போனான்? சிறு வயதிலிருந்தே ஒழுக்கத்தை போதித்தே வளர்த்த அன்னைக்கு மகனாக இருந்தவன் சிகரெட் குடிக்க பழகி இருக்கிறான். அநேகமாக குடியும் பழகி இருப்பான் என்றே தோன்றுகிறது. எங்கே தவறு நேர்ந்திருக்கிறது? எது அவனை இப்படி மாற்றி இருக்கிறது என்று யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அனைவரும் வீட்டில் காத்திருப்பார்களே என்கிற எண்ணத்துடன் வேகமாக வீடு போய் சேர்ந்தான். அவன் எப்படி விட்டுவிட்டு சென்றானோ அப்படியே தான் அமர்ந்திருந்தார்கள். அம்மாவை பார்க்கும் போது பாவமாக இருந்தது. காரிலிருந்து இறங்கும் போதே அவரின் பார்வை கிருஷ்ணாவை தேடியது.

சற்றே சோர்வான நடையுடன் உள்ளே வந்தவனை எதுவும் கேட்காமல் “பத்மா! சாப்பாட்டை எடுத்து வை நாம சாப்பிடலாம்” என்றார் செல்வநாயகம்.

நித்தியோ எதுவும் பேசாமல் அமைதியாக சென்று உணவை சூடுபடுத்த ஆரம்பித்தாள். பத்மாவிற்கு கேட்காமல் இருக்க முடியவில்லை.

“என்னடா அவன் வரலையா?”

முகத்தில் வலிய வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “இல்லம்மா! அவனுக்கு முக்கியமான வேலைல பிசியா இருக்கான். அதுதான் அழுத்தி கூப்பிட முடியல” என்றான் போய் சொல்கிறோம் என்கிற குற்ற உணர்வுடன்.

அவன் சொன்னதை செல்வநாயகம் நம்பவில்லை. பத்மாவும் நம்பவில்லை என்றாலும் வேறுவழியில்லாமல் “ம்ம்...சரி வா சாப்பிடலாம்”.

யாருக்கும் கிருஷ்ணாவை பற்றி பேச அப்போது மனமில்லை. அனைவருக்கும் அவன் வேண்டுமென்றே தான் வரவில்லை என்று தெரிந்தாலும், அதை காட்டிக்கொள்ள மனமில்லாமல் உணவை முடித்துக் கொண்டு அவரவர் அறையில் சென்று பதுங்கினர்.

விஷால் தன்னறைக்கு செல்ல மனமில்லாமல் மொட்டை மாடிக்கு சென்றான். அவனது மனம் மிகவும் குழம்பிக் கிடந்தது. அண்ணனை சுற்றி என்ன நடக்கிறது? அவனது நடத்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றமென்ன? அவர்களின் குடும்பத்தை பற்றி வெளியில் இருப்பவர்கள் பேசும்போது கிருஷ்ணாவை போல பிள்ளையை பெற புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிற சொல்லும் அளவிற்கு நல்ல பெயர் வைத்திருந்தான்.

ஆனால் திடீரென்று சிகரெட் குடிப்பதும், குடும்பத்திடம் இருந்து விலகி இருக்க நினைப்பதும் அவனது எண்ணங்களின் மாற்றங்களை கூறியது.

சிறிது காலம் அவனை கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். அதன் பின்னரே தன்னையும் மீறி அங்கேயே நிம்மதியாக உறங்கி விட்டான்.

மறுநாளிலிருந்து கிருஷ்ணா அறியாமல் அவனை கண்காணிக்க ஆரம்பித்தான். வீட்டில்ருந்து கிளம்புவான் நேரே அலுவலகம் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு ஒழுங்காக திரும்பி வந்தான்.

சுமார் ஒருவாரம் வரை கவனித்த விஷாலுக்கு அவன் மீது எந்த இடத்திலும் தப்பு கண்டு பிடிக்க முடியவில்லை.

கிருஷ்ணாவை தொடர்வது மட்டுமின்றி அலைப்பேசியில் தன் காதலையும் வளர்த்தான் விஷால். நாட்கள் பறந்தோடியது. கிருஷ்ணாவின் மீது எந்த தப்பும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பா சொன்னது போல அவனது வேலை பளு காரணமாகவே அவன் அப்படி நடந்து கொள்கிறான் என்கிற எண்ணத்திற்கு வந்துவிட்டான்.

கிருஷ்ணாவின் அலுவலகத்தில் நீலா சில நாட்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். அவளது மகிழ்ச்சி கண்டு கீர்த்திக்கும் சந்தோஷமாக இருந்தது. தங்கை வேலைக்கு சேர்ந்ததினால் தனது பளு குறைந்தது என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாள் என்று எண்ணினான்.

அன்றும் உற்சாகத்துடன் வந்த நீலா, கிருஷ்ணாவின் வரவை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தாள். அதை கண்டு கொண்ட கீர்த்தி “என்ன மறுபடியும் கண்ணு அங்க போகுது? வேண்டாம் நீலா” என்றாள் கடுப்போடு.

“அதெல்லாம் இல்ல கீர்த்தி. சார் கிட்ட என் தங்கைக்கு வேலை கிடைத்ததை சொல்லலாம்னு தோனுச்சு. அது தான்”.

“ஒன்னும் வேண்டாம்...அவருக்கு என்ன வந்தது? உன் தங்கையை பற்றி எல்லாம் அவர் ஒன்னும் கவலைப்பட மாட்டார்”.

“சரி! சரி! நான் எதுவும் சொல்லல போதுமா?” என்றாள் மென் சிரிப்புடன்.

அன்றைய நாளின் இறுதியில் அனைவரும் அலுவலகத்தை விட்டு கிளம்ப ஆரம்பிக்க, கீர்த்தியும் கைப்பையை எடுத்துக் கொண்டவள் “நீலா நீ கிளம்பல?” என்றாள்.

“இதோ பைல் சேவ் பண்ணிட்டு கிளம்புறேன் கீர்த்தி. நீ கிளம்பு”

“ம்ம்..ஓகே” என்று கூறிவிட்டு அவள் வெளியேறினாள்.

அவள் வெளியில் சென்று விட்டாள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு கிருஷ்ணாவின் அறை நோக்கி சென்றாள் நீலா.

சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு முகமெல்லாம் கசங்கிப் போக, ஒருவித விரக்தியான மனநிலையுடன் வெளியே வந்தவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.

கிருஷ்ணாவோ அறைக்குள் கொதிப்புடன் நின்று கொண்டிருந்தான்.

மறுநாள் நீலாவின் ராஜினாமா கடிதம் மெயில் மூலியமாக வந்து சேர்ந்தது. அதைக் கண்டு அதிர்ந்து போன கீர்த்தி அவளது மொபைலுக்கு அழைக்க, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

முதல்நாள் உற்சாகத்துடன் இருந்தவள் மறுநாள் திடீரென்று ஏன் வேலையை ராஜினாமா செய்தாள் என்று முற்றிலும் குழம்பி போனாள்.

கிருஷ்ணாவோ அன்று மாலையே மும்பை கிளம்பிச் சென்று விட்டான்.

****************************தொடரும்*****************************************
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
அத்தியாயம் – 7

“நதி! ம்ம்...சொல்லுங்க”

“எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கே”.

“யாரோ சொன்னாங்க...படிப்பு முக்கியம் கவனக்குறைவு ஏற்படக் கூடாது...அப்படி இப்படின்னு செம டயலாக்”.

“ஹேய்! அதெல்லாம் அப்படித்தான். நீ கிளம்பி வரியா?’

“விஷு சார்! நான் இருக்கிறது ஹாஸ்டல். உங்க இஷ்டத்துக்கு எல்லாம் வெளில வர முடியாது”.

“சரி கிளம்பு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”.

“தோடா! தலைவர் செம மூடில் இருக்கார் போல”.

“ரெண்டு வாரம் ஆச்சுடி...உனக்கு தோணவே இல்லையா என்னை பார்க்கணும்னு”.

அவன் அப்படி கேட்டதும் சட்டென்று உள்ளிறங்கிய குரலில் “இருக்கு..”

அவளின் தயக்கத்தை உணர்ந்து கொண்டவன் “இங்கே பார் நதி! உனக்கு என்னை பார்க்கணும்னா தைரியமா சொல்லணும். இதில் தப்பு எங்கேயும் இல்லை சரியா”.

“ம்ம்...அப்போ நாளைக்கு பார்க்கலாமா?”

உற்சாகத்துடன் கூடிய குரலில் “பார்க்கில் வந்து வெயிட் பண்ணு. நித்தியை இறக்கி விட்டுட்டு உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன். முதல் அவர் மட்டும் கட் பண்ணிடு” என்றான்.

“நித்தி கேட்டா என்ன சொல்றது?”

“ஏதாவது சொல்லி சமாளி! ஆனா மறந்தும் என் பெயரை மட்டும் சொல்லிடாதே. பிசாசு ஒருவழியாக்கிடும்” என்றான் சிரிப்புடன்.

அதன் பின்னர் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசியபடி அன்றைய இரவை கழித்தனர். காதலர்களின் இரவுகள் பல கதைகளை சொல்லும். அது போல நதியும், விஷாலும் பேசாத கதைகள் இல்லை. தங்களின் எதிர்காலம் குறித்து பல கனவுகளை பரிமாறிக் கொண்டனர். விஷால் அவளின் வயதிற்காக எல்லைகளை தாண்டாது மிக கண்ணியமாக பேசினான்.

அது அவன் மீது அவளுக்கு மேலும் நன்மதிப்பை பெற்றுத் தந்தது.

மும்பையில் சென்றிறங்கிய கிருஷ்ணா தனது ஓய்வில்லத்தில் இருந்த பூங்காவில் மிகுந்த யோசனையோடு நடந்து கொண்டிருந்தான். அப்போது அவன் முன்னே வந்து நின்ற நதிர் “பையா!” என்றான் தலையை சொறிந்தபடி.

“என்ன நதிர்?”

“இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ண முடியாதா?”

சட்டென்று அவனை திரும்பி பார்த்தவனின் விழிகளில் இருந்த கோபத்தில் “இதை ஆரம்பித்து வைத்தது நீ. நினைவிருக்கா நதிர்”.

தலையை குனிந்து கொண்டவன் “ஓகே பையா! வெயிட் பண்ணுங்க வந்துடுறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

அப்போது சுனிதாவின் தந்தையின் கார் உள்ளே நுழைந்தது. யோசனையுடன் அதையே பார்த்தபடி நின்றிருந்தான். காரிலிருந்து இறங்கியவர் அவனை நோக்கி சிரித்தபடியே வந்தார்.

“நீ வந்திருக்கேன்னு ஆபிசில் சொன்னாங்க கிருஷ்ணா” என்றவர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

அவனும் தன்னை இயல்பாக மாற்றிக் கொண்டு “சொல்லுங்க அங்கிள் எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்ன நன்றாக இருக்கிறேன். அப்புறம் திடீர்னு இங்கே என்ன விஜயம்?”

“கொஞ்சம் ஆடிட்டிங் வொர்க் இருந்தது அங்கிள்”.

அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே இருந்தவர் “அதுக்கெல்லாம் நீ வர வேண்டிய அவசியம் இல்லையே கிருஷ்ணா”.

தனது முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்காது “இல்ல அங்கிள் இது கொஞ்சம் சீரியஸ் அது தான் நானே கிளம்பி வந்துட்டேன். என்ன அங்கிள் புதுசா குறுக்கு விசாரணை எல்லாம் பண்றீங்க?”

வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் “உன்னை சின்ன வயசில் இருந்தே தெரியும். சின்ன விஷயத்துக்கு எல்லாம் நீ அலட்டிக்க மாட்ட. அதனால தான் கேட்டேன்”.

அவரின் கேள்வியில் சந்தேகம் இருந்தாலும், அவர் சொன்ன பதிலை ஏற்றுக் கொண்டது போல் “அப்புறம் சுனிதா எப்படி இருக்கிறா?” என்றான் எதுவுமே நடக்காதது போல.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியல கிருஷ்ணா. அவ உன் மேல செம கோபத்தில் இருக்கிறா. நீ அப்படி என்ன பேசின அவ கிட்ட?”

தாடையை தடவியபடி எழுந்து கொண்டவன் “எனக்கு கல்யாணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை அங்கிள். அதை அவ கிட்ட சொன்னேன். அதை அவ ஏற்றுக் கொள்ளவே இல்லை. மேலும் மேலும் என்னை வற்புறுத்திக் கிட்டே இருந்தா. லிவிங்ல கூட இருக்க நான் ரெடினு சொன்னா. அதனால அவளோட கேரக்டரை தப்பா பேசினேன். அதனால தான் கோவிச்சுகிட்டு போயிட்டா”

“ஒ...உண்மையை சொல்லனும்னா என் மகளுக்கு ஏற்ற சாய்ஸ்னு என் மனசிலும் நீ தான் இருந்த. உனக்கு விருப்பமில்லாதப்ப அவள் உன்னை தொந்திரவு செய்தது தப்பு தான். அதற்காக அவளை நீ தப்பாக பேசியதும் தப்பு கிருஷ்ணா”.

“எனக்கு வேற வழி தெரியல அங்கிள். என்ன சொன்னாலும் என்னை வற்புறுத்தினா. அதனால தான்...சாரி அங்கிள்”.

“ம்ம்..” என்று எழுந்து கொண்டவர் “நான் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க போறேன் கிருஷ்ணா. அவ இனி கம்பனிக்கு வர மாட்டா. அதே மாதிரி உன்னாலயும் அவளுக்கு எந்த தொந்திரவும் இருக்க கூடாது”.

சட்டென்று அவரது கைகளைப் பற்றிக் கொண்டவன் “என்ன அங்கிள் என்னை போய் தப்பாக நினைக்கலாமா? தாராளமா அவளுக்கு கல்யாணம் பண்ணுங்க. அவ எனக்கு நல்ல பிரெண்ட்”.

“ம்ம்...சரி! அம்மா, அப்பாவை கேட்டேன்னு சொல்லு” என்று சொல்லிவிட்டு தன் காரில் ஏறி அமர்ந்தார்.

அவர் கிளம்பு வரை கிருஷ்ணாவின் மனம் ஒருவித பதட்டத்திலேயே இருந்தது. அவரின் கார் வெளியேறியதும் தான் மூச்சை நன்றாக இழுத்து விட்டான். அதே நேரம் நதிர் சென்ற கார் உள்ளே நுழைந்தது. அதை பார்த்தும் மனதில் உல்லாசம் பொங்க வேகமாக வீட்டினுள் சென்றான்.

சுனிதாவின் தந்தையின் கார் வாயிலைத் தாண்டி தெருமுனையை அடையும் நேரம் நதிரின் கார் அங்கே வந்தது. மும்பையிலேயே பிறந்து வளர்ந்து தொழில் செய்து கொண்டிருப்பவருக்கு, பிரபலங்களை எல்லாம் தெரிந்து வைத்திருந்தவருக்கு, தவறான தொழில் புரிபவர்களையும் அறிந்து வைத்திருந்தார்.

தனது வண்டியை கடந்து சென்ற காரில் இருந்தவனை கண்டு கொண்டார். அந்த கார் கிருஷ்ணாவின் ஓய்வில்லத்தில் நுழைவதை பார்த்ததும் அவரின் புருவங்கள் முடிச்சிட்டது. இவன் ஏன் அங்கு செல்கிறான்? கிருஷ்ணா வந்தது கம்பனி மூலியமாக நமக்கு தெரியும். ஆனால் இவன் சரியாக அங்கு செல்வதை பார்த்தால் இருவருக்கும் நெடுநாளைய தொடர்பு இருக்கும் போல் இருக்கிறதே என்று எண்ணினார்.

ஏனோ அவரின் மனம் கிருஷ்ணாவை எண்ணி வருந்தியது. நதிர் போன்ற ஒருவனின் தொடர்பு நிச்சயம் நல்லதுக்கல்ல. தனது நண்பரின் மகன் தவறான தொடர்பு வைத்திருக்கிறானோ என்று பயந்தார். ஒரு பக்கம் சுனிதாவின் மேல் அவனுக்கு ஈர்பில்லாமல் போனது நல்லதாக போயிற்று என்று எண்ணிக் கொண்டார்.

அவரின் இன்னொரு மனமோ கிருஷ்ணாவை கண்காணிக்க வேண்டும் என்று சொல்லியது. அவன் தவறான பாதையில் செல்கிற மாதிரி இருந்தால் செல்வநாயகத்திடம் சொல்ல வேண்டும். பிள்ளையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அவன் என்று நண்பனின் மீது பரிதாபபட்டார்.

இது எதையும் அறியாது, நதிர் வந்ததும் தனது மருந்திற்காக காத்திருந்தான் கிருஷ்ணா.

விஷாலை அன்று பார்க்க போகும் ஆர்வத்துடன் சீக்கிரமே கிளம்பிக் கொண்டிருந்தாள் நதியா. விஷாலும் எப்போதும் போல் அல்லாது அன்று பார்த்து பார்த்து ஆடையை உடுத்திக் கொண்டு, முகத்தில் பல்ப் எரிய வந்தமர்ந்தவனை கண்டு நித்தியா சந்தேகமாக பார்த்து வைத்தாள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
“அம்மா! இன்னைக்கு டைனிங் டேபிளே ஓவர் பிரகாசமா இருக்கே? என்ன விஷயம்?” என்று விஷாலை காட்டி கேட்டாள்.

அவரும் “உங்க காலேஜில் எதுவும் பொண்ணு ஓகே சொல்லப் போகுதோ என்னமோ” என்றார் சிரித்தபடி.

இருவரின் கேலியை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை பார்த்த செல்வநாயகம் “உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா மகனே? அவங்க ரெண்டு பேரும் இப்படி கிண்டல் பண்றாங்க. நீ கண்டுக்காம சாப்பிட்டிட்டு இருக்க?”

“உண்மையை சொன்னா எதுக்கு மறுத்து பேசணும்?”

அவன் சொன்னதை கேட்டதும் மூவரும் “ஹான்! என்னடா சொல்ற?” என்றனர் ஒரே குரலில்.

“நான் சொல்லல. நீங்க தான் சொன்னீங்க” என்றான் கிண்டலாக.

நித்தியாவோ “அண்ணே! உண்மையை சொல்லுங்க...யார் அந்த பொண்ணு?”

“அதையும் நீயே கண்டுபிடி. நேரமாச்சு கிளம்புறியா?”

பத்மாவிற்கு மகன் பொய் சொல்கிறானா உண்மையை சொல்கிறானா என்று புரியவில்லை. எப்பொழுதும் போல் தங்கையிடம் விளையாடுகிறான் என்று சமாதானப்படுத்திக் கொண்டார். செல்வநாயகத்திற்கு மட்டும் ‘இந்தப் பய சொல்றதை பார்த்தா எந்த பொண்ணு கிட்டையோ விழுந்துட்டான்னு தான் நினைக்கிறேன்” என்று சந்தேக கண்களுடனேயே பார்த்தார்.

அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டு தங்கையை அழைத்துக் கொண்டு கல்லூரியில் விட கிளம்பினான். காரில் ஏறி அமர்ந்ததும் அவனையே நோட்டம் விட்டபடி அமர்ந்திருந்தாள் நித்யா.

அவனது அசைவுகளில் தெரிந்த ஒருவித உற்சாகம், நிச்சயம் எங்கேயோ லாக் ஆகி இருக்கிறான் என்பதை உணர்த்தியது. சற்று நேரம் வரை அவளின் ஆராய்ச்சிகளை கண்டு கொள்ளாமல் விட்டவன், சிறிது நேரத்திற்கு பிறகு “என்ன மேடம் ஆராய்ச்சி பண்ணி முடிச்சாச்சா? யார் எனக்கு ஓகே பண்ணி இருக்காங்கன்னு கண்டு பிடிச்சாச்சா?”.

“ஏதோவொரு மக்கு சிக்கி இருக்குன்னு மட்டும் தெரியுது அண்ணே. அது யாருன்னு தான் தெரியல. எங்க காலேஜ் பொண்ணா இருக்க வாய்ப்பில்லை. உங்க ஆபிசிலையே சிக்கிடுச்சோ?”

இதழில் எழுந்த சிரிப்பை அடக்கியபடி “அடிங்க! அண்ணன் கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?”

அவள் பதில் பேசும் முன் அவனது அலைப்பேசி விடாது அடிக்கத் தொடங்கியது. அதை கண்டதும் அவள் எதுவும் பேசாமல் அமைதியாகி விட, அலைப்பேசியில் தெரிந்த எண்ணை கண்டு விட்டு, நித்யாவை பார்த்தவன் ஆன் செய்து காதில் வைத்தான்.

“சொல்லு தியா” என்றதும் நித்யாவின் பார்வை அவன் மீது அழுத்தமாக படிந்தது.

“விஷு! விஷு” என்றாள் அழுகையுடன்.

அதில் பதறி போனவன் “என்ன தியா? எதுக்கு அழுகுற? அழாம சொல்லு?”

“அக்கா போன் பண்ணினாங்க. மாமாவுக்கு ஆக்சிடென்ட்டாம்” என்றாள் அழுகையுடன்.

அதை கேட்டதும் அதிர்ந்து போனவன் “நீ தைரியமா இரு. எப்போ ஆச்சாம்?”

“ஆபிஸ்ல தான் நடந்திருக்கு. ஹாஸ்பிடல் கொண்டு போயிருக்காங்களாம். எனக்கு பயமா இருக்கு விஷு” என்று அழ ஆரம்பித்தாள்.

வண்டியை ஓரமாக நிறுத்தியவன் “பயப்படாதே தியா...அவங்க மட்டும் தான் தனியா இருக்காங்களா? நீ அங்க போகனுமா?”

“ஆமாம்! எனக்கு அக்கா கூட இருக்கணும் விஷு” என்றாள் கண்ணீருடன்.

“அழாதே தியா! நான் தங்கச்சியை காலேஜில் விட்டுட்டு உன்னை அழைச்சிட்டு போறேன்” என்றான்.

அண்ணன் யாரோவொரு தியாவிடம் பேசும் அழகை வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் போனை வைத்ததும் “யாருண்ணே அது? என்ன பிரச்சனை அவங்களுக்கு?” என்றாள்.

“நீ கேட்டியே அந்த பொண்ணு இவ தான். அவ பிறந்த வீட்டில் ஒரு விபத்து. அது தான் ஊருக்குப் போகணும்னு அழறா. உன்னை டிராப் பண்ணிட்டு நான் போய் அவளை ஊருக்கு அனுப்பி விடுறேன்” என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் விட்டு விட்டு “நீ எப்போ அண்ணே இவ்வளவு பொறுப்பா மாறின? நான் ஒரு கடைக்கு போகணும்னா கூட ஒரு நாள் முழுக்க கெஞ்ச விடுவ. பார்ரா! காதலி அழுதவுடனே ஓடுறார்” என்று கேலி செய்தாள்.

அதில் அவனையும் மீறி முகம் சிவந்து விட, “இந்த கதையில எல்லாம் பெண்களுக்கு தான் முகம் சிவக்கும்னு சொல்வாங்க. எங்க அண்ணனுக்கு முகம் சிவக்குது டோய்!” என்று கூறி சத்தமாக சிரித்தாள்.

“ம்ச்!...காலேஜ் வந்தாச்சு இறங்கு நித்தி. அவ காத்துகிட்டு இருப்பா”.

காரிலிருந்து இறங்கி கொண்டவள் ஜன்னலின் வழியே குனிந்து “கவலைப்பட வேண்டாம்னு சொல்லுங்க அண்ணா. எல்லாம் சரியாகிடும்னு நான் சொன்னதா சொல்லுங்க” என்று கூறி விட்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.

மீண்டும் நதியாவிடமிருந்து அழைப்பு வர, அதை எடுத்தவுடன் “விஷு! நான் ரயில்வே ஸ்டேஷன் போயிடுறேன். நீங்க அங்க வந்துடுங்க. ஹாஸ்டலில் வந்து நீங்க கூப்பிட முடியாது”.

“தியா! நீ உங்க ஹாஸ்டல் இருக்கிற தெருவில் இருக்கும் சூப்பர் மார்ர்கட்டுக்கு வந்துடு. அங்கேருந்து என்னோட போகலாம்”.

“வேண்டாம் விஷு! எனக்கு ட்ரைனுக்கு லேட் ஆகிடும்”.

“தியா! நீ அங்கே வந்துடு!” என்று மட்டும் கூறிவிட்டு போனை அனைத்து விட்டான்.

பத்து நிமிஷத்தில் அங்கு சென்றுவிட, அவளும் தனது பையுடன் அங்கு வந்திருந்தாள். காரில் ஏறிக் கொண்டதும் தன்னையும் மீறி அவன் தோளில் சாய்ந்து அழுது விட்டாள். அவளை சமாதானப்படுத்தி ட்ரைனில் சென்றால் இரண்டு நாட்களாகி விடும், என்று பிளைட்டில் போக சம்மதிக்க வைத்தான்.

“எனக்கு இன்னைக்கு நிறைய க்ளையன்ட் மீட்டிங் இருக்கு தியா...இல்லேன்னா நானும் உன் கூட வந்துட்டு வந்திருப்பேன்”.

“மாமாவுக்கு சரியாகிடும் இல்ல விஷு”

அவளது தோள்களைப் பற்றி தன்னோடு சாய்த்துக் கொண்டவன் “நீ போகும் போதே நல்ல செய்தி வரும் பார். உங்க மாமா நல்லபடியா வீட்டுக்கு வந்துடுவாங்க”.

அவனது ஆறுதல் தரும் வார்த்தைகளும், அரவணைப்பும் அவளுக்கு மேலும் அழுகையை தந்தது. கன்னங்களில் கண்ணீர் வழிந்தோட அவன் மார்பில் முகம் புதைத்தவள் “இப்படியே இருந்திடனும்னு தோணுது விஷு. இந்த அன்பு கிடைக்க என்ன தவம் செய்தேன்னு தெரியல” என்றாள்.

அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன் “லூசு மாதிரி பேசாதே தியா...உங்க மாமாவுக்கு சரியானதும் இந்த மாமாவை பார்க்க ஓடி வந்துடனும் சரியா? உன்னைப் பார்க்காம, பேசாம எனக்கு ஒரு மாதிரி இருக்கும்டி”.

“எனக்கும்”

அவளது முகம் பற்றி நிமிர்த்தியவன் நெற்றியில் இதழ் பதித்து “நல்லபடியா போயிட்டு நல்ல செய்தியோட வா. உனக்காக தினமும் காத்திருப்பேன். இறங்கினதும் கால் பண்ணு”.

ப்ளைட்டிற்கு நேரமாகிவிட, அவனிடம் விடை பெற்றுக் கொண்டு உள்ளே சென்றாள். விஷாலுக்கு அவளுடன் சென்று விட்டு விட்டு வந்தால் என்ன என்று தோன்றியது. இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டிங் இருப்பதால், அதை தவிர்க்க முடியாது. வேறுவழியில்லாமல் செல்பவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

அவளின் தலை மறைந்ததும் அங்கிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு சென்று விட்டான். சுமார் ஒன்றே முக்கால் மணி நேரம் கழித்து மும்பை விமான நிலையத்தில் சென்றிறங்கினாள் நதியா. இறங்கியதுமே விஷாலிற்கு போன் அடிக்க, அவன் எடுக்கவே இல்லை.

அன்று பார்த்து அவனது மீட்டிங் இழுத்துக் கொண்டே போனது. அவள் பைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிய பின்பும் அவனுக்கு அடித்து பார்க்க, அப்போதும் அவன் எடுக்கவில்லை. அடுத்து டாக்சியில் எறிய பின்னும் அடித்து பார்த்து ஓய்ந்து போய் விட்டாள். மாமாவை பார்த்த பின்பு அவனுக்கு அழைத்து சொல்லலாம் என்று எண்ணி விட்டு விட்டாள்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின்பு மீட்டிங்கை முடித்து விட்டு வெளியே வந்தவன் போனிலிருந்த மிஸ்டு கால்களை பார்த்து தலையில் அடித்துக் கொண்டு உடனே அவளை அழைத்தான். அவளது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

********************************தொடரும்*********************************************
 
Status
Not open for further replies.