இரு மலர்கள்

Kripnythaa

Moderator
Mar 26, 2018
425
112
63
"இரு மலர்கள்"

எனக்கு இறுகிய ஓர் உறவை ஏற்படுத்தி தந்த இக்கதை என்றுமே என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது!

நான் வாசித்த கதைகளில் என்னை ரசிப்புடன் அழவைத்த ஓர் அழகிய அதிகாரமிது.... சகோதரிகளின் சலசலப்பும் ,அவர்களின் அன்பும் படிக்கும் நமக்கே ஆசையை தூண்டிடும் இது போன்ற ஓர் சகோதரி இல்லையே என்று !

ஆனால் இவர்களின் வாழ்வில் தெய்வானை செய்த சதியை என்னால் மன்னிக்கவே இயலாது?? கவின்யா, யாதவின் இடையே ஏற்படும் காதலும், பிரிவும் அவர்கள் மீண்டும் இணையும் அந்நொடியில் இலங்கையில் இன்னும் எத்தனை பேர் இந்நிலையில் உள்ளனரோ என்று கண்கலங்க செய்கிறது.....

ஆருவின் அட்டகாச முகமும், அமைதி முகமும், அவள் தன்னுள்ளே நத்தையாக சுருங்கிக்கொண்ட விதமும் வஞ்சிக்கப்பட்டவர்களின் விடியல் விதைக்கப்படவில்லையோ என்று மனதை கனக்க செய்கிறது .......

இதில் நான் மிகவும் விரும்பி ரசித்து படித்த கதாபாத்திரம் சாம் ??எவ்வித அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாக என் மனதை அலைக்கழித்தவன்.....

தன்னவளின் மனம் மாறுதலுக்காக அவன் இயல்பாக கையாண்ட செயல்கள் மிகவும் எதார்த்தமாக இருந்தது....

இருமலர்கள் எனும் பெயரில் ஒரு பூமாலையை அளித்தமைக்கு பாராட்டுகள் யாழ் சத்யா....

கடவுளின் சித்தம் கிட்டினால்சாம்ஆரு சென்ற கடற்கரைக்கு சென்று நீங்கள் விவரித்த உணவை உங்கள் கையால் சாப்பிட்டு எனது கையால் கவி வரைந்திட அவா ??
 
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா. இத்தனை நாள் கழித்தும் கதையை நினைவு வைத்து அது பற்றி அழகான பின்னூட்டம் மூலம் என்னை மகிழ்வித்ததற்கு. நிச்சயமாக நாம் ஹசூரினா கடற்கரைக்குச் சென்று ஒடியல் கூழ் காய்ச்சிக் குடிப்போம்.