இதயம் மேவிய காதலினாலே - கதை திரி

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 24“நிஷா! கதவைத் திற?” அமுதா அதட்டலுடன் கதவைத் தட்ட, கண்களைத் துடைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள்.

“பேசறதையெல்லாம் பேசிடுறது. அப்புறம் என்ன அழுகை?” கடுகடுத்தாள் அமுதா.

“நான் ஒண்ணும் அழல…” தழுதழுத்தது அவளது குரல்.

“இதுக்கும் மேல ப்ரூஃப் வேணுமாக்கும். இந்தா டிஃபனை சாப்பிடு. அப்புறமா உட்கார்ந்து இன்னும் தெம்பா அழலாம். சாயங்காலம் அண்ணன் வந்தா எதிர்த்துப் பேச கொஞ்சம் தெம்பும் இருக்கும்.”

“ஏன் அண்ணி இப்படிலாம் பேசறீங்க? என் மனசுல இருக்கறதை நான் சொல்லக்கூடாதா?” கோபத்துடன் கேட்டாள்.

இரு கைகளையும் கட்டிக் கொண்டு, “சொல்லேன். அதுக்குத் தானே காத்திட்டு இருக்கேன்” தீவிரமான பாவத்துடன் சொன்னாள் அமுதா.

“அதான் சொல்லிட்டேனே. எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்…”

“ம், சரி. கல்யாணம் வேணாம்.”

“நான் வேலைக்குப் போகப் போறேன்…”

“சரி, அதுக்கு அப்புறம்?”

“அப்புறம்னா…?” நெற்றிச் கேட்டாள்.

“அப்புறம்னா… கல்யாணம் செய்துக்கறது எப்போன்னு கேட்கறேன்” வேண்டுமென்றே இராகம் போட்டு இழுத்தாள்.

“கல்யாணம்… கல்யாணம்னு ஏன் என் உயிரை எடுக்கறீங்க? எனக்குக் கல்யாணமே வேணாம். நான் இப்படியே இருந்துக்கறேன்…” ஆத்திரத்துடன் கத்தியவள், ஜன்னல் அருகில் சென்று நின்றாள்.

அவளது தோளைப் பற்றி தன் பக்கமாகத் திருப்பினாள் அமுதா.

“ப்ளீஸ் அண்ணி! இனி இந்தப் பேச்சையே எடுக்காதீங்க…” கெஞ்சலான பார்வையுடன் அண்ணியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“அப்போ உன் மனசுல என்னதான் இருக்கறதை என்கிட்ட சொல்லு…” என்ற அண்ணியை நிமிர்ந்து பார்த்தாள்.

“அதான் சொல்லிட்டேனே….” என்றவளை முறைத்துப் பார்த்தாள் அமுதா.

சொல்லவந்ததை பாதியில் நிறுத்திவிட்டு, மிரட்சியுடன் அவளைப் பார்த்தாள் நிஷா.

“நான் முட்டாள் இல்ல நிஷா! நான் பார்த்து வளர்ந்தவ நீ. உன்னோட பார்வையை வச்சே நீ என்ன செய்தன்னு சரியா கண்டுபிடிச்சிடுவேன்” என்ற அமுதாவை மிரட்சியுடன் பார்த்தாள்.

“சாரி அண்ணி! நான் அப்படி செய்திருக்கக் கூடாது. ஆனா, எனக்கே தெரியாமதான் அத்தானை நான் லவ் பண்ணியிருக்கேன்… அத்தானைத் தவிர வேற யாரையும் நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்… அதை இன்னைக்கே அண்ணாகிட்ட சொல்லியிருப்பேன். ஆனா, அவங்க முகத்தைப் பார்த்து சொல்ற தைரியம் எனக்கு இல்ல. அதோட நான் லவ் பண்றது அத்தானுக்கே தெரியாது” என்று கடகடவென ஒப்பித்து முடித்தாள்.

“உனக்கு வேணா புரியலைன்னு சொல்லு. அவன் உன்னை நல்லா புரிஞ்சிதான் வச்சிருக்கான். அதனால தானே நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியும் ஊருக்குக் கிளம்பற அன்னைக்கு மதியானம் உன்னோட ரூமுக்கே வந்து பேசினான்…”

நிஷா வாயடைத்துப் போனாள்.

“அப்போ அண்ணாவுக்கு…”

“அவருக்கு எதுவும் தெரியாது. அன்னைக்கு கிருஷ்ணா உனக்குப் போன் செய்தான் இல்ல. அன்னைக்குத் தான் நான் கெஸ் பண்ணின எல்லாத்தையும் உன் அண்ணாகிட்ட சொன்னேன்.

நீயும், சூர்யாவும் ஆடின கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பத்தில் தெரிஞ்சிக்கலைனாலும், உங்களை கவனிக்காமல் இல்ல. அப்பப்போ உன் கண்ணுல தெரிந்த திருட்டுத்தனத்தை புரிஞ்சிக்க முடியாத முட்டாள் இல்ல நான்.

அன்னைக்கு தோட்டத்தில் அவன் கிட்டார் வாசிச்சப்போ, உங்க அண்ணன் போன் வந்ததும் நான் எழுந்து வந்தேன். ஆனா, உங்க ரெண்டு பேரோட பாடி லேங்வேஜையும் வச்சி, கணிக்க முடியாம இல்ல.

அன்னைக்குத் தான் உங்களை கொஞ்சம் கவனிச்சிப் பார்க்க ஆரம்பிச்சேன். மறுநாளே நீ காலேஜிலிருந்து வர லேட்டாச்சேன்னு உனக்குப் போன் பண்ணேன். நீ உன் ஃப்ரெண்டோட இருக்கேன்னு சொன்ன. ஆனா, அது பொய்னு எனக்கு அப்போவே தெரியும்” என்றாள்.

நிஷா குற்ற உணர்வுடன் தலைகவிழ்ந்தாள்.

“காலேஜ்ல கேட்கற சத்தத்துக்கும், ஹோட்டல்ல கேட்கற சத்தத்துக்கும் வித்தியாசம் தெரியாதவள் இல்ல” என்றது தான் தாமதம்.

அவளை அணைத்துக் கொண்டு, “நான் உங்களை ஏமாத்தணும்னு நினைக்கல அண்ணி! உங்ககிட்ட உண்மையை மறைச்சி நான் பட்ட அவஸ்தை எனக்குத் தான் தெரியும். நான் வேணாம்னு தான் சொன்னேன். அத்தான் தான் கேட்கல…” என்று தேம்பினாள்.

“கூட்டுக் களவாணிங்க மாதிரி எல்லா வேலையும் செய்தாச்சு. கடைசில அது முடியல இது முடியலன்னு கதை வேற? என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? அவன் மேல இவ்வளவு ஆசையை வச்சிகிட்டு, எதுக்குடி என் தம்பியைப் போட்டுப் பாடா படுத்தின?” என்றபடி தன்னிடமிருந்து அவளை விலக்கி நிறுத்தினாள்.

”கடைசில உங்க தம்பிக்காக தானே பேசறீங்க… என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பாசம் தானே பெரிசு…” கோபத்துடன் கட்டிலில் பொத்தென அமர்ந்தாள்.

“அப்படியே அறைஞ்சேன்னா… உனக்காகத் தானேடி அவன்கிட்ட போராடிட்டு இருந்தேன். அறிவுகெட்டவளே!” என்றாள் கோபத்துடன்.

முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.

“நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கே தெரியல அண்ணி. அத்தானை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவர் என்கிட்ட பேச வரும்போதெல்லாம் சரின்னு சொல்லத்தான் நினைப்பேன். ஆனா, என்னால…” என்றவள் அமுதாவின் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

மெல்ல அவளது தலையைக் கோதிவிட்டவள், “இதுக்கான காரணத்தை நான் சொல்லவா.. அவ்வன் மேல உனக்கு உள்ளுக்குள்ள இருந்த கோபம் தான் காரணம். நம்மள வேணாஅம்னு சொன்னவனை நம்ம பின்னால அலைய விடணும்னு உன் ஆழ்மனசுல வந்த எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம்.

முதல்ல அந்த ஈகோவைத் தூக்கிப் போடு. நமக்குப் பிரியமானவங்ககிட்ட எதுக்கு ஈகோ பார்க்கணும்? அவ்வளவு எதுக்கு? நம்ம வீட்ல நடந்த பிரச்சனையில் சூர்யா உங்க அண்ணனை எப்படிலாம் பேசினான். அதுக்காக உங்க அண்ணன் முறுக்கிகிட்டு இருந்திருந்தா இன்னைக்கு இப்படி ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல ஒரு பிணைப்பு இருந்திருக்குமா?

யாராவது மாமியாருக்காக சொந்த தங்கையை அவங்க வீட்ல நாலு வருஷம் விட்டு வச்சிருப்பாங்களா? எல்லாம் யாருக்காக? எதுக்காக? சொந்தங்களுக்கு நடுவில எந்த மனக்கசப்பும் வரக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான். உங்க அண்ணனும் சூர்யாவுக்கு எதிரா நின்னிருந்தா, என்னால எதுவுமே செய்திருக்க முடியாது.

ஒரு விஷயத்தை நல்லபடியா பாக்கறதுக்கும், எதிர்மறையா பார்க்கறதுக்கும் மனசு தான் காரணம். சொல்லப்போனா இந்தப் பிரச்சனைக்கு மூலக்காரணமே நான் தான். ஆனா, உங்க அண்ணன் அதைப் பத்தி ஒரு வார்த்தைகூட என்னிடம் கேட்டது கிடையாது தெரியுமா. விட்டுக் கொடுத்துப் போறதுல தப்பில்லடா…” என்றாள்.

“ஆனா, அண்ணி! அண்ணாகிட்ட இந்த விஷயத்தை சொன்னா அவங்க எப்படி எடுத்துப்பாங்க? ஏற்கெனவே அத்தான் சென்னை வந்ததும் என்னை ஹாஸ்டலுக்கு அனுப்பனும்னு நினைச்சாங்க இல்ல…” என்றாள்.

“அட பைத்தியமே! நீ இப்படி நினைச்சிகிட்டியா? உங்க அண்ணன் உன்னை ஹாஸ்டலுக்கு அனுப்ப நினைச்சதுக்குக் காரணமே நீ தான். உன் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம நீ ஏதாவது பிரச்சனை பண்ணப் போறேன்னு நினைச்சித்தான் அப்படி ஒரு முடிவை எடுத்தாரே தவிர, சூர்யாவை பிடிக்காமல் இல்ல.

சொல்லப்போனா நீ எடுத்திருக்க முடிவை நினைச்சி அவர் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கார். கவலைப் படாதே உன் கல்யாணத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல. நீயா புதுசா ஏதாவது கிளப்பாம இருந்தால் சரி” என்று சிரித்தாள்.

அண்ணனின் சம்மதம் பற்றித் தெரிந்ததுமே சந்தோஷத்தில் மிதந்தவள், அண்ணியின் கேலியில் முகம் சிவந்தாள்.

“அடுத்தது என்ன…? சூர்யாவுகிட்ட பேசறியா?” என்று கேட்டாள் அமுதா.

வெட்கத்தில் தலைகுனிந்திருந்தவள் அவசரமாக நிமிர்ந்து, “அச்சச்சோ! வேணாம்…” என்றாள்.

“ஏன்? இன்னும் என்ன அதான் எல்லாம் சரியாகிடுச்சே. இப்பவாவது அவனைக் கொஞ்சம் சந்தோஷமா இருக்க விடேன்” என்றாள் சலிப்புடன்.

“ப்ளீஸ் அண்ணி! எனக்காக… நான் அத்தைகிட்ட பேசணும்” என்றாள்.

“இதென்னடி கூத்து…”

“நல்ல அண்ணி இல்ல… இதுதான் கடைசி இனி இந்த மாதிரி விளையாடவே மாட்டேன்…” என்று அமுதாவின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சி கொஞ்சினாள்.

“ம்ஹூம் நீ அவன்கிட்ட அறை வாங்காம அடங்கப் போறதில்ல…”

“அறை எனக்குத் தானே விழும். அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்…”

விடாமல் பேசிப் பேசி அமுதாவிடம் ஒருவழியாக சம்மதத்தை வாங்கினாள்.

“எனக்குத் தெரியாது தாயே! நீயாச்சு அவனாச்சு. எனக்கும் இதுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல. நாளைக்கு ஏதாவது வம்பை வலிச்சுட்டு வந்த… அவ்வளவுதான் சொல்லிட்டேன்…”

“அது போதும் அண்ணி! தேங்க்யூ” என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 25“வாங்க மாமா! வாக்கா! எப்போ வந்தீங்க?” கேள்வியை அவர்களிடத்தில் கேட்டாலும், கண்கள் வீட்டை அலசி ஆராய்ந்தன.

“நீ தேடுற ஆள் வரலை…”

அமுதாவின் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தான் சூர்யா.

“ஆ… என்னது?” என்றான்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு, “கன்யா வரல. அவளோட அத்தைக்குத் துணையா வீட்ல இருக்கா” என்றாள்.

“ஓ!” என்றவனைப் பார்க்க சற்று பாவமாகக் கூட இருந்தது அவளுக்கு.

“இந்தா சூர்யா காஃபியைக் குடிச்சிட்டுக் கிளம்பு” அவசரமாக அவனது கையில் காஃபி டம்ளரைத் திணித்தார் வசந்தாம்மா

“கிளம்பணுமா! எங்கே?”

“ஓஹ்! உனக்கு விஷயமே தெரியாது இல்ல. ஞாயிற்றுக் கிழமை நிச்சயதார்த்தம், அதுக்கு மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுக்கணும் அதுக்குத் தான் மாமா கூட போய் வந்திடு…” என்றார் வசந்தா.

“யாருக்கு நிச்சயதார்த்தம்…? அதுக்கு நான் ஏன் போகணும்?” சொல்லும் போதே அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டாலும், அதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள கேட்டான்.

“வேற யாருக்கு? நம்ம நிஷாவுக்குத் தான்பா. நீ போனா இப்போ இருக்க மாடல் தெரியும். எந்த பிராண்ட் நல்லா இருக்கும்னு பார்த்து வாங்குவ இல்லயா… அதான்” என்றார் சிவராமன்.

‘நான் காதலிக்கிற பொண்ணோட வருங்கால கணவனுக்கு நானே போய் நிச்சயத்துக்கு துணி எடுக்கணுமா?’ கோபமும், வருத்தமும் ஒருசேர எழுந்தது.

ஆயினும், எதுவும் பேசாமல் முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்பினான்.

அமுதா அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தெளிவில்லாத முகத்துடன் அவன் செல்வதை கவலையுடன் பார்த்தாள்.

சிவராமனும் சற்று வெளியே சென்று வருவதாகக் கூறி கிளம்பிச் சென்றார்.

“அமுதா! காஃபி ஆறுது பாரு. குடிச்சிட்டு சட்டுபுட்டுன்னு வா. வரிசை சாமான் லிஸ்ட் போடணும்…” என்ற அன்னையை கோபத்துடன் பார்த்தாள்.

“ஆனாலும், நீ செய்யறது ரொம்ப மோசம்மா. உன் பையன்தானே அவன். எவ்ளோ ஃபீலிங்கோட போறான். கொஞ்சமாவது இரக்கம் இருக்கா உனக்கு. அவள்தான் புரியாம விளையாடுறான்னா, நீ எடுத்துச் சொல்லாம, எல்லோரும் அவளோட சேர்ந்து ஆடுறீங்க” என்றாள்.

“தம்பி மேல அப்படியே பாசம் பொத்துகிச்சாக்கும் உனக்கு. என் மருமகள் எது செய்தாலும் சரியாதான் இருக்கும். நீ தலையிடாதே…”

“எப்படியோ போங்க. நாளைக்கு உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன முறுக்கிக்கப் போறானோ… நான் இந்த விளையாட்டுக்கே வரல…” என்றவள் பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

*************​

மருதாணியால் சிவந்திருந்த கரங்களை உயர்த்தி இப்படியும், அப்படியுமாக திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிஷா.

“போதும் போதும். மணி நாலாகுது போய் முகத்தை கழுவிகிட்டு தயாராகற வழியைப் பாரு. இப்போதான் அழுகு பார்த்துட்டு நிக்கிற.”

அமுதாவின் அதட்டலில் நினைவுலகிற்கு வந்தாள் நிஷா.

“நல்லா சிவந்திருக்கு இல்ல அண்ணி! மருதாணி எந்த அளவுக்கு சிவக்குதோ அந்த அளவுக்கு அவங்களோட ஹஸ்பண்டோ, லவ்வரோ அவங்க மேல லவ்வா இருப்பாங்களாம். என் ஃப்ரெண்ட்ஸ்லாம் சொல்வாங்க…”

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவளை ஒருமாதிரியாகப் பார்த்தாள் அமுதா.

“நிஜமாத்தான் அண்ணி சொல்றேன்…”

மீண்டும் ஐயோ பாவமாக சொன்னவளை, ஆயாசத்துடன் பார்த்தாள் அமுதா.

“என் எரிச்சலைக் கிளப்பாம பேசாம போடி…” என்றாள் அமுதா.

“ம், என் அளவுக்கு உங்க கை சிவக்கலைன்னு பொறாமை…” தலையை ஆட்டிக் கொண்டு பாவனையுடன் சொன்னாள்.

“உன்னை… இரு வரேன்…” கையிலிருந்த தாம்பாளத் தட்டை டேபிள் மீது வைத்துவிட்டு அவளருகில் வர, நிஷா அவளது கைகளில் சிக்காமல் முற்றத்தைச் சுற்றி ஓடினாள்.

உள்ளே வந்த முகுந்தன் தன் மீது வந்து மோதிய தங்கையைப் பிடித்து நிறுத்தினான்.

“அண்ணா! அண்ணா! என்னைக் காப்பாத்து….” சிரித்துக் கொண்டே அவனது முதுகிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“என்ன அமுதா இது? எதுக்கு அவளைத் துரத்துற?” புரியாமல் கேட்டான்.

“அவளுக்கு வாய் அதிகமாகிடுச்சி…” மேல்மூச்சு வாங்க சொன்னவளை, புன்னகையுடன் பார்த்தான்.

“நிஷா! இப்படி வா” என்று தங்கையின் கரத்தைப் பற்றி முன்னால் இழுத்து நிறுத்தியவன், “என்ன இதெல்லாம்... கல்யாணம் ஆகப்போகுது… உனக்கு இன்னும் கொஞ்சம் கூட பொறுப்பே வரலை. எதுக்கு வயசான காலத்துல உங்க அண்ணியை இப்படி ஓட வைக்கிற? பாரு எப்படி மூச்சு வாங்குதுன்னு…” தீவிரமான முகபாவத்துடன் சொன்னான் அவன்.

‘ஆஹ்! அட்வைஸா…!’ என்ற சலிப்புடன் நின்றிருந்தவள் அண்ணனின் பேச்சிற்கு அண்ணியின் முகம் போன போக்கைப் பார்த்து, அடக்கமட்டாமல் சிரித்தாள்.

இருவரையும் முறைத்தவள், “உங்களுக்கெல்லாம் வயசே ஆகாது பாரு. அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்தாச்சு இல்ல. இனி இந்த வீடே தாங்காது…” என்றவள் கடுகடுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்.

மலர்ந்த முகத்துடன் சிரித்துக் கொண்டிருந்த தங்கையை வாத்சல்யத்துடன் பார்த்தான்.

அண்ணனின் முகத்தைப் பார்த்தவள், “ரொம்ப தேங்க்ஸ்ண்ணா!” நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“எதுக்கு உன் அண்ணியை வயசானவன்னு சொன்னேனே அதுக்கா…?” என்ரான்.

“போங்கண்ணா! உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான். இந்தத் தேங்க்ஸ் எதுக்குன்னு உங்களுக்கே தெரியும்…” என்று சிணுங்கினாள்.

”என் நிஷாகுட்டியோட சந்தோஷம் தான் எங்க சந்தோஷம். என்ன நீ ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா கிருஷ்ணாவை நடுவுல இழுத்திருக்க வேணாம். ஓகே. இப்பவும் ஒண்ணும் இல்ல. நாம அவங்களை கோயில்ல பார்த்ததால தானே இவ்வளவு தூரம் வந்தது. சரிவிடு. மணியாகுது பார். இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லோரும் வர ஆரம்பிச்சிடுவாங்க. போய் தயாராகு” என்று அவளை அனுப்பி வைத்தான்.

*********​

“வாங்க அத்தை! வாப்பா பாரதி…” என்று அழைத்த முகுந்தன், அவர்களுக்குப் பின்னால் வந்த சூர்யாவைப் பார்த்து, “வாப்பா மாப்பிள்ளை!” என்று அழைத்தான்.

“மாப்பிள்ளையா…? என்ன மாமா சொல்றீங்க?” என்று இடைபுகுந்தான் பாரதி.

“ஆமாம்டா. அடுத்தது அவனுக்குத் தானே கல்யாணம். அதான் மாப்பிள்ளை…” என்று முகுந்தனை முந்திக்கொண்டு சொன்னாள் அமுதா.

அப்படியா என்பது போல பாரதி பார்க்க, அப்படியேத்தான் என்பது போல அமுதா அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றாள்.

“கார் ஓட்டச் சொன்னா, இவனுங்க கட்டைவண்டியை ஓட்டிட்டு வர்றா மாதிரி வர்ரானுங்க… அப்பாடி!” பெருமூச்சுடன் சோஃபாவில் சாய்ந்தார் வசந்தா.

“சீக்கிரம் கிளம்புங்கன்னு சொன்னா கேட்கறீங்களா அம்மாவும், பிள்ளையும். இப்போ என்னைக் குறை சொல்லுங்க. காலைல தான், நிஷாவுக்கு புடவை எடுக்கணும்னு கடைக்குக் கூப்பிடுறாங்க. காஞ்சிபுரத்துல இருக்கவளுக்கு, டி.நகர்ல புடவை எடுக்கறாங்க… என்னத்த சொல்ல…” அலுத்துக் கொண்டான் பாரதி.

வசந்தா, அமுதாவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

இது எதிலுமே தனக்குச் சம்மந்தமில்லை என்பது போல சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தான் சூர்யா.

“காஃபி எடுத்துக்கோ சூர்யா!” என்று தம்பியிடன் பாசத்துடன் சொன்னாள் அமுதா.

“ஒரு மாத்திரை இருந்தா கொடுக்கா. ரெண்டு நாளா தலைவலி விடவேயில்ல…” என்றவனை வருத்தத்துடன் பார்த்தாள்.

“கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோடா… ஃபங்க்‌ஷன் ஆரம்பிக்கும் போது கூப்பிடுறேன்” என்றதும், மறு பேச்சில்லாமல் தமக்கையுடன் சென்றான்.

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவனை தட்டி எழுப்பிய வசந்தா, “சூர்யா! முகத்தை கழுவிகிட்டு இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு சீக்கிரம் வா” என்றவர், பாரதி அவனை சீக்கிரம் கிளப்பி கூட்டிட்டு வா” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எரிச்சலுடன் எழுந்தவன், முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். டேபிள் மீது அன்னை வைத்துவிட்டுச் சென்றிருந்த உடையைப் பார்த்துக் குழம்பியவன் நிமிர்ந்து பாரதியைப் பார்த்தான்.

“என்னை எதுவும் கேட்காதே… விஷயம் இப்போதான் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா புரியுது. ஒரு குடும்பமே உனக்கெதிரா சதி பண்ணிட்டு இருக்குடா… மாப்பிள்ள!” என்றான்.

உடையை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, மாலை அணிவித்து அமரவைத்தது முதல், நிஷாவை வரவழைத்து நிச்சயத் தட்டு மாற்றியது வரை, அனைத்தையும் நம்ப முடியாமலேயே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஓரிரு முறை அவள் ஆவலுடன் நிமிர்ந்து, அவனது முகத்தைப் பார்த்தாள். அவனோ, அவளிருந்த பக்கம் கூடத் திரும்பவில்லை.

வந்திருந்த உறவினர்கள் கிளம்பும் வரை எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தவன், மாலையை கழற்றி அங்கிருந்த இருக்கையின் மீது போட்டான்.

”என்ன சூர்யா! அதுக்குள்ள மாலையை கழட்டிட்ட? போட்டோ…” என்ற தமக்கையை முறைத்துப் பார்த்தான்.

“நீகூட என்கிட்ட சொல்லலையேக்கா!” மனத்திலிருந்த வேதனை அவனது வார்த்தைகளில் தெரிந்தது.

திணறலுடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த நிஷாவிடம், “போதுமா… இதுக்குத் தான் இதெல்லாம் வேணாம்னு தலைபாடா அடிச்சிகிட்டேன்” என்றாள்.

சூர்யாவின் செயலைச் சற்றும் எதிர்பார்க்காத நிஷாவிற்கு, அமுதாவின் வார்த்தைகள் இன்னும் பயத்தைக் கொடுத்தது.

‘அவன் கோபித்துக் கொண்டு தன்னிடம் சண்டையிடுவான் என்று நினைத்தால், கதை வேறு மாதிரி ஆகிவிட்டதே. தான் விளையாட்டாக செய்த காரியம், விவகாரமாகி விட்டதே என்ற கவலையும், அச்சமும் தோன்ற, அத்தனை நேரமும் இருந்த சந்தோஷத்தை மொத்தமாக இழந்தாள்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 26உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் நிஷா.

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு கதவைத் திறந்து கொண்டு மெல்ல பின்கட்டு படி வழியாக இறங்கி தோட்டத்திற்கு வந்தாள்.

சூர்யா தங்கியிருந்த அறைக்கதவில் கை வைத்ததுமே திறந்து கொண்டது. படபடத்த மனத்துடன் மெல்ல உள்ளே நுழைந்தவள், அறை காலியாக இருப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள்.

’எங்கே சென்றுவிட்டான்? வீட்டில் அனைவரும், நேரமாகிவிட்டது நாளைக் காலையில் கிளம்பலாம் என்று சொன்னதை ஏற்றுக்கொண்டு, இந்த அறையில் தானே தங்கினான். இப்போது எங்கே சென்றிருப்பான்?’ புரியாமல் சற்று நேரம் நின்றிருந்தவள், வந்த வழியே திரும்பினாள்.

அவனது அறையையே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்றவள், மேல் படியின் அருகில் சென்றதும் சற்று நின்று திரும்பிப் பார்த்துவிட்டு, கவலையுடன் அறைக்குள் நுழைந்தாள்.

கதவை மூடிவிட்டுத் திரும்பியவள், அங்கே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட பயந்தேவிட்டாள்.

ஆவென அலற முயன்றவளது வாயைப் பொத்தினான்.

“கத்தின கொன்னுடுவேன்…” என்று மிரட்டிய சூர்யா கையை மட்டும் எடுக்கவில்லை.

கருவிழிகள் இரண்டும் திருதிருவென விழித்தபடி இங்கும் அங்கும் அலைபாய, அவன் எதிர்பாராத நேரத்தில் நறுக்கென அவனது கையைக் கடித்துவிட்டாள்.

“ஆ! அம்மா!” என்று வலிதாங்காமல் அவன் கையை உதற, அவள் குறுஞ்சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அறிவிருக்கா…” திட்டிக்கொண்டே விளக்கைப் போட்டான்.

“எனக்கு அது நிறைய இருக்கு” என்று அலட்சிய பாவத்துடன் சொன்னவள், “ஏன் உங்களுக்கு வேணுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

நின்று அவளை முறைத்தவன், “ஏய்! என்ன கொஞ்சம் கூட பயமே இல்ல உனக்கு. நான் எவ்வளோ கோபத்தில் இருக்கேன்னு உனக்குத் தெரியாது” என்றான்.

ஒய்யாரமாக நடந்து சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.

“அப்படியா? அதையும் நான் பார்க்கிறேன்”

“ஏய்! என்னை உசுப்பிவிடாதே சொல்லிட்டேன்” என்றான்.

“ம், நீங்க என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்தப்பவே, உங்க கோபத்தோட அளவு என்னவா இருக்கும்னு புரிஞ்சிகிட்டேன். எப்படின்னு கேட்கறீங்களா… எனக்குத் தான் அறிவு அதிகமா இருக்கே” - கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்.

அவளது கிண்டல் அதிகமாகிக் கொண்டே செல்வதைக் கண்டவன் பொறுக்க முடியாமல், வேகமாக அவளை நோக்கி வர, அதைவிட வேகமாக எழுந்து, ஓடினாள்.

கட்டிலைச் சுற்றியே அந்த அறைக்குள் எவ்வளவு நேரம் ஓட முடியும்? ஒரு கட்டத்தில் வசமாக அவனது கைகளில் சிக்கிக் கொண்டாள்.

அவளது இடுப்பை வளைத்து தன்னோடு அவன் சேர்த்து அணைத்துக் கொள்ள, நிஷா கூச்சத்தில் நெளிந்தாள்.

அவள் விலக முயற்சிக்க, அவன் தனது பிடியை மேலும் இறுகினான்.

வெற்றிடையில் ஸ்பரிசித்த அவனது கரத்தால், அவளது ரோமக்கால்கள் கூச்சத்தில் சிலிர்த்தன. சிலென்ற உணர்வு அவளது முதுகுத் தண்டில் உறைக்க, கால்கள் தள்ளாடின.

கண்களின் அலைபாய்தலும், இதயத்தின் படபடப்பையும் துல்லியமாக உணர்ந்தவன் தனது இறுக்கம் களைந்து மெல்ல புன்னகைத்துக் கொண்டான்.

ஆரம்பத்தில் இறுக்கிப் பிடித்திருந்தவனது பிடியில் இப்போது வலுவில்லாத போதும், அந்த அணைப்பிலிருந்து வெளிவர விரும்பாதவளாக, அவனது நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

சூர்யாவிற்கு இந்த நிமிடம் அப்படியே உறைந்துவிடாதா என்றிருந்தது. மனத்தில் இருந்த அத்தனை சஞ்சலமும் நீங்கி, தன் இணையிடம் சேர்ந்த சந்தோஷத்தை அவனாலேயே வார்த்தைகளால் வடிக்க இயலாது.

“ஏன்டி இப்படி பண்ணின?” கண்களை மூடிக்கொண்டே கேட்டான்.

“எப்படி?” நிமிராமலேயே கேட்டாள்.

“ம், லவ்வை என்கிட்ட சொல்லச் சொன்னா… எதுவுமே சொல்லாம, உனக்கு நிச்சயதார்த்தம்னு சொல்லி பயமுறுத்தி… ஹப்பா!” என்றான்.

“ஏன் சொல்லல. நான் தான் என் லவ்வை சொன்னேனே அத்தான்!”

“எப்போடீ சொன்ன? எனக்கென்ன அம்னீஷியாவா?”

“ம்சும், உங்ககிட்ட எங்கே சொன்னேன். அத்தைகிட்ட தானே சொன்னேன்…” சலிப்புடன் சொன்னாள்.

திகைத்துப் போனான் சூர்யா.

“அத்தைகிட்ட சொன்னியா? உனக்கு ஏதாவது இருக்கா…?”

“எது அறிவு தானே?” மேற்கொண்டு பேச ஆரம்பித்தவளை, “வாயை மூடு” என்றான் கடுப்புடன்.

“ஹும்! அப்போ எதுவுமே சொல்லமாட்டேன். உங்க மேல எப்போ லவ் வந்ததுன்னும் சொல்ல மாட்டேன்.”

சிறுபிள்ளையின் பிடிவாதத்துடன் சொன்னவளை, சிரிப்புடன் பார்த்தான்.

”அதுதான் எனக்கே தெரியுமே. மரமண்டை உனக்குத் தான் ஒண்ணுமே புரியல. இதுக்குத் தான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும்…”

“ஏன் அத்தான் அப்பப்போ நூத்துக் கிழவன் மாதிரி பழமொழி சொல்லிட்டு இருக்கீங்க?” என்றவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது சூர்யாவிற்கு.

அந்த நேரம் அவனைக் காப்பாற்றுவது போல ஒலித்த மொபைலை எடுத்தான்.

“மேகி அக்கா!” அவனது முகம் மலர்ச்சியை வெளிப்படுத்த, “ஹாய் அக்கா!” உற்சாகமாக குரலெழுப்பினான்.

“சூர்யா தானே… நான் தப்பா யார் நம்பருக்கு போன் பண்ணிடலையே…” ஆச்சரியமும், அதிசயமுமாக கேட்டாள் மேகி.

“நானே தான்” என்று சிரித்தவன், போனை ஸ்பீக்கரில் போட்டான்.

“நீ அனுப்பின மெயிலை இப்போதான் பார்த்தேன். எனக்கு மனசே ஆறலை அதான் உன்கிட்ட பேசலாம்னு போன் பண்ணேன்” என்றவள் தயக்கத்துடன், “எதுவும் பிரச்சனை இல்லையே சூர்யா. உன் நிஷா ஏண்டா இப்படி பண்ணிட்டா…?” கவலையுடன் கேட்டாள்.

குறுஞ்சிரிப்பொன்றை நிஷாவைப் பார்த்துச் சிந்திய சூர்யா, அவளது தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்தபடி நின்றான்.

அவள் புரியாமல் என்ன என்று செய்கையிலேயே கேட்டாள். சொல்கிறேன் என்பதைப் போல தலையை அசைத்தான்.

அவனது மௌனத்தைத் தவறாக புரிந்துகொண்ட மேகி, “நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்… அவகிட்ட சீக்கிரமா லவ்வை சொல்லிடுன்னு. நீதான் அதெல்லாம் இல்லக்கா… ஜஸ்ட் அவளை ஒருமாதிரி பேசிட்டோமேன்னு மனசுல ஒரு சின்ன வருத்தம்னு எனக்கு சமாதானம் சொன்ன.

அப்பவே நான் சொல்லியிருப்பேன்… வருத்தப்படுறவன் வெறும் அந்த வேலையை மட்டும் செய்யலாமே… எதுக்கு ஊர்லயிருந்து வர்ற அவளோட போட்டோவை மட்டும் தனியா எடுத்து வச்சிக்கிறன்னு கேட்கலாம்னு. சரி, புரியும் போது புரியட்டும்னு விட்டுட்டேன்.

ஆனா, உனக்குப் புரிஞ்ச போது… அவளுக்குப் புரியாமல் போச்சு, அதான் கஷ்டமா இருக்கு. நான் மட்டும் அங்கே இருந்திருந்தா அந்த நிஷாவை நல்லா நாலு வார்த்தை கேட்டிருப்பேன். எங்க சூர்யா மாதிரி ஒரு ஸ்வீட் பாய் உனக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அவனை இப்படி கோட்டை விட்டுட்டியேன்னு சொல்லியிருப்பேன்” என்றவளது குரலில், ஆதங்கம் அப்பட்டமாக தென்பட்டது.

“அக்கா! ப்ளீஸ் பொறுமை. இப்போ நீங்க நிஷாகிட்ட பேசணுமா…?” புன்னகைத்துக் கொண்டே கேட்டான்.

“இந்த நேரத்துக்கா… என்ன சூர்யா…” என்று இழுத்தவளுக்கு ஏதோ விளங்கிவிட, “சூர்யா! உண்மையாவா…” துள்ளிக் குதிக்காத குறையாகக் கேட்டாள்.

சிரித்தவன், “பேசுங்க…” என்றான்.

“ஹாய் நிஷா!” என்று ஆரம்பித்த மேகி, சூர்யாவைப் பற்றி புகழ்ந்து தள்ளினாள்.

நிஷா ‘ம்’ என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர வேறு எதற்குமே வாயைத் திறக்கவில்லை.

அவள் போனை வைத்த போது நிஷா அமைதியாக சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.

சோஃபாவின் கைப்பிடியில் வந்தமர்ந்த சூர்யா, “என்ன நிஷா… சைலண்ட் ஆகிட்ட… அக்கா உன்னை மூடவுட் பண்ணிட்டாங்களா?” என்றான்.

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “ஐ லவ் யூ அத்தான்!” தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டு அவனது நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள்.

அவளது கண்களின் ஈரம் அவனது டீஷர்ட்டை நனைக்க, “ஹேய்! என்னாச்சு?” என்று அவளது முகத்தைப் பற்றி உயர்த்தினான்.

“சாரி! நான் உங்களை சுத்தல்ல விடறேன்னு நினைச்சு எவ்ளோதூரம் அலைய விட்டுட்டேன். நீங்க லண்டன்ல இருக்கும் போதே, என்னை லவ் பண்ணீங்களா?” கண்களைத் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“அது எனக்கே தெரியாது. ஆனா, ஹாஸ்பிட்டல்ல அம்மாகிட்ட நீ உரிமையா பேசிட்டு இருந்த பாரு, அன்னைக்குத் தான் நான் உன்னை லவ் பண்றேனோன்னு கொஞ்சம் டௌட் வந்தது. அப்புறம் உன்கிட்ட பேசணும்னு பார்க்குக்கு கூட்டிட்டுப் போனேனே அன்னைக்குத் தான் கன்ஃபார்ம் ஆச்சு.”

“ஓ!” என்றாள்.

“நீ எப்போடா ஃபீல் பண்ண…?” ஆசையுடன் கேட்டான்.

தெரியவில்லையே என்பதைப் போல கண்களை அகல விரித்து, உதட்டைச் சுழித்தாள்.

“சுத்தம்…” என்றான்.

“ஆனா, உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமயத்துல நானே தான் பிடிவாதமா நீங்க சொன்ன வார்த்தையை நினைவுக்கு கொண்டு வந்து என்னை கண்ட்ரோல் பண்ணிக்குவேன்” என்று சிரித்தாள்.

“போதும்டா சாமி! தெரியாத்தமனா ஒரு வார்த்தையை கோபத்துல நான் பேசிட்டு இத்தனை வருஷமா நான் படுறபாடு இருக்கே… தாங்க முடியல. இனி வாயையே திறக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்…” என்றான் சோகமாக.

“அச்சச்சோ அப்படில்லாம் திடீர்னு முடிவெடுத்துடாதீங்க. உங்ககிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த ஷார்ப்பான மூக்குக்கு மேல வர்ற அந்தக் கோபம் தான்…” என்று அவனது நாசியை வருடினாள்.

“ஹா ஹா… உனக்கு ரொமான்ஸ் பண்ணக்கூட வருமா என்ன?”

“ம், இதுக்கெல்லாம் ஸ்கூலுக்குப் போயா கத்துக்குவாங்க…” என்று பதிலடி கொடுத்தாள்.

”அடேங்கப்பா… நான் உன்னை என்னவோன்னு நினைச்சேன்டி. பம்ப்ளிமாஸ் நீ பெரிய ஆளுதான்” என்று அவளது மூக்குடன் மூக்கை உரசினான்.

நெற்றியில் துவங்கிய அவனது உதடுகளின் ஊர்வலம் மெல்ல முன்னேறி அவளது இதழருகில் சற்று தயங்கி நின்றது.

அவனது அணைப்பின் கதகதப்பிலும், காதலின் மென்மையிலும் தன்னை மறந்து கண்களை மூடி நின்றிருந்தவள் மெல்ல இமைகளைத் திறந்தாள்.

மூச்சுக் காற்று உரசிக் கொள்ள, அனுமதிக்காக காத்திருந்த அவனது கண்களின் யாசிப்பை உணர்ந்து, மலர்ந்து விரிந்த கருவிழிகளை மெல்ல இமைகள்மூடி அவளது சம்மதத்தை அவனுக்கு உணர்த்திவிட, சந்தோஷத்துடன் தனது இலக்கை ஆக்கிரமித்துக் கொண்டான்.
 

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
196
437
63
அத்தியாயம் - 26“சூர்யா இன்னும் எத்தனை முறை சாரி கேட்ப? தேங்க்ஸ் சொல்வ…”

உல்லாசமாகச் சிரித்த முகுந்தனை, பாசத்துடன் பார்த்தான் சூர்யா.

“வாழ்க்கை முழுக்கச் சொல்லலாம் மாமா! அதுக்கான தகுதி உங்களுக்கு இருக்கு. நான் பேசினதையெல்லாம் பெரிசா எடுத்துக்காம… க்ரேட் மாமா!”

நெகிழ்ச்சியுடன் தன்னை அணைத்துக் கொண்டவனை, ஆதரவுடன் தட்டிக் கொடுத்தான் முகுந்தன்.

அதே நெகிழ்ச்சியுடன் அமுதா ஒரு பக்கமாக நின்றிருக்க, அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு தோளில் சலுகையுடன் சாய்ந்திருந்த நிஷாவின் கண்களும் பனித்திருந்தன.

திரும்பி தங்கையைப் பார்த்த முகுந்தன், ‘இங்கே வா’ என்பது போல கண்களை மூடித்திறந்து ஒற்றை தலையசைப்பில் அழைக்க, அண்ணனை நோக்கிச் சென்றாள் அவள்.

பாசத்துடன் அவளது கன்னத்தைத் தட்டிக் கொடுத்தவன், “சூர்யா! உனக்கு சொல்லணும்னு அவசியமில்ல. ஆனாலும், என் மன ஆறுதலுக்காக சொல்றேன். எங்க அத்தனைப் பேரோட செல்லப் பொண்ணை உன்கிட்ட ஒப்படைச்சிருக்கோம். அவளை சந்தோஷமா பார்த்துக்குவேன்னு நம்பறேன்” என்றான்.

“நிச்சயமா பார்த்துக்குவேன் மாமா!” என்றான்.

அண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட நிஷா அதுவரை அடக்கிவைத்திருந்த உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், அவனது நெஞ்சில் சாய்ந்து குமுறி அழுதாள்.

தனது ரிம்லெஸ் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, கண்களைத் துடைத்துக் கொண்ட முகுந்தன் அவளை ஆறுதலுடன் தட்டிக் கொடுத்தான்.

“நிஷா! உன்னை முன்னபின்ன தெரியாத வீட்டுலயா விட்டுட்டுப் போறேன்…? உன்னோட வீட்ல தானே விட்டுட்டுப் போறேன். இனி நீதான் சூர்யாவையும், அத்தையையும் பொறுப்பா பார்த்துக்கணும். நான் உன்னைத் தைரியமான பொண்ணுன்னு நினைச்சா… நீ இப்படி அழுதுட்டு இருக்க…”

அவனது தேறுதல் வார்த்தைகள் எதுவுமே, அவளது அழுகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

“இங்கே இருக்க காஞ்சிபுரத்துக்கு நினைச்சா கிளம்பி வந்திடலாம். இதுக்கெல்லாம் அழலாமா… இங்கே பார் என் தங்கம் இல்ல…” அமுதா மெல்ல அவளைத் தேற்ற ஆரம்பித்தாள்.

ஆனால், அவள் நிறுத்தினால் தானே.

“அண்ணி!” என்று அவள் மீது சாய்ந்து கொண்டு பிழியப் பிழிய அழுதாள்.

முகுந்தனுக்கு இதயம் கனத்துப் போனது. இத்தனை நாள் தனக்குத் தங்கையாக மட்டுமே இருந்தவள், இப்போது இன்னொரு குடும்பத்தின் மருமகளாகச் சென்றதை எண்ணி சந்தோஷத்தையும், தவிப்பையும் ஒருசேர அனுபவித்தான்.

ஆளாளுக்கு அழுவதைப் பார்த்த சூர்யாவிற்கு ஒரு பக்கம் நெகிழ்ச்சியாக இருந்த போதும், மறுபக்கம் சிரிப்பாக வந்தது.

தமக்கையின் அருகில் சென்றவன், “நிஷா!” என்றழைத்தபடி அவளது தோள்களைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான்.

அத்தனை நேரம் மாய்ந்து மாய்ந்து அழுதவள், மெல்ல தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“அப்ப்…பாஆஆ! தாத்தா கிளம்பலாமான்னு உங்களைக் கேட்கச் சொன்னாங்க…” கத்திக் கொண்டே அவர்கள் இருந்த அறைக்குள் ஓடி வந்தாள் கன்யா.

ஆளாளுக்கு இறுகிய முகத்துடன் நின்றிருந்த கோலம் எப்படியிருந்ததோ… அதிர்ந்த பாவத்துடன் அனைவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

நிஷா கண்களைத் துடைத்துக் கொண்டு நின்றிருக்க, அருகில் சூர்யா அவளது தோளில் கைபோட்டு லேசாக தட்டிக் கொடுத்துக் கொண்டும் நின்றிருந்தான்.

என்ன நினைத்தாளோ? வேகமாக சூர்யாவின் அருகில் சென்றவள், “மாமா! எங்க அத்தையைத் திரும்பத் திட்டுனீங்களா? நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்களா?” என்று கோபத்துடன் கேட்டாள்.

அவளது வார்த்தைகளைக் கேட்ட அனைவரும் சட்டென சிரித்துவிட, சூர்யா உர்ரென்று அவளை முறைத்தான்.

“தெரியாத்தனமா ஒரு தடவை பேசின பேச்சுக்கு, இந்தச் சின்ன வாண்டுகிட்டலாம் நான் வாங்கிக் கட்டிக்க வேண்டியிருக்கு” என்று சலித்துக் கொண்டவன், “ஆனாலும், உனக்கு இவ்வளவு சாமர்த்தியம் ஆகாது சின்ன பம்ப்ளிமாஸ்!” என்றவன், கன்யாவின் குதிரை வாலைப் பிடித்து இழுத்தான்.

“ஆஆ!” வென்று அவள் அலற, சிரிப்புடன் நிஷா அவளை இழுத்துத் தன்னுடன் நிறுத்திக் கொண்டாள்.

“இனி உங்க மாமா எதுக்கு அத்தையைத் திட்டணும். அவன் வாங்கிக் கட்டிக்காம இருந்தா பத்தாதா? வாழ்க்கை ஒரு வட்டம்… அப்படின்னு இந்நேரம் அவன் புரிஞ்சிட்டு இருப்பான் பம்ப்ளி!” என்றான் அங்கே வந்த பாரதி.

“நீ ஒருத்தன்தான்டா பாக்கி வா வா” சூர்யா எரிச்சலுடன் சொன்னான்.

“சே! நீங்கல்லாம் என்ன பேசறீங்கன்னே புரியமாட்டேன்னுது…” என்றபடி அத்தையின் பிடியிலிருந்து துள்ளி நழுவி ஓடினாள்.

“சரி அமுதா! நேரமாகுது கிளம்பலாம்…” என்ற முகுந்தன், நிஷாவின் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டிவிட்டு வெளியே சென்றான்.

“பத்திரம் நிஷா…!” என்ற அமுதா, “சூர்யா…!” என்றாள்.

‘ஆ! திரும்ப ஆரம்பத்திலிருந்தா’ என்று பல்லைக் கடித்துக் கொண்டவன், “நான் பார்த்துக்கறேங்க்கா!” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையோடு.

“அக்கா! எல்லோரையும் இவன் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்றதுக்கு முன்னாடி நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கலாம். வா” என்றான் பாரதி.

அமுதா சிரிப்புடன் வெளியேற, அவளுக்குப் பின்னாலேயே பாரதியும் சென்றான்.

வெளியே செல்ல முயன்ற நிஷாவின் கரம் சுண்டி இழுக்கப்பட, தடுமாறியவள் நிதானமில்லாமல் சரிய, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சூர்யா.

“ஐயோ! அத்தான்…! என்ன பண்றீங்க…?” அவனது மீசை கன்னத்தில் ஏற்படுத்திய குறுகுறுப்பை இரசித்தும், இரசிக்காதவளாக அவனை விலக்கினாள்.

“உனக்கே ஓவரா தெரியல… கல்யாணம் ஆகி இன்னையோட முழுசா மூணு நாள் ஆகுது. ரெண்டு நாளா கிட்ட கூட வராம ஆட்டம் காட்டிட்டு இருக்க. ஒரு முத்தத்துக்குக் கூட பஞ்சமா போச்சு…” என்றவன், அவளது காது மடலை உதடுகளால் தீண்டினான்.

“யாராவது வரப்போறாங்க… ப்ளீஸ்! கொஞ்ச நேரம்…” வாயிலைப் பார்ப்பதும் அவனை முன்னேற விடாமல் தடுப்பதுமாக, தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவனது பிடி மேலும் இறுக, “சொல்லி…டே…” என்றவளது வார்த்தைகள் பாதியில் காணாமல் போக, அவளுக்கு மூச்சு முட்டியது.

அவனது கரங்கள் செய்த அத்துமீரல்களால், உடலில் ஏற்பட்ட இரசாயன மாற்றங்களைத் தாள முடியாமல், அவளது இமைகளில் மேலும் அழுத்தம் கூட, இதயத்துடிப்பின் டெசிபல் ஒலியின் வேகமும் கூடியது.

தனது ஆக்ரமிப்பின் ஆளுமையைக் குறைத்தவன் அவளிடமிருந்து விலக முயல, கண்களைத் திறக்காமல் வெட்கமும், தளர்வுமாக தனது நெஞ்சில் சாய்ந்து கொண்டவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“எனக்கு இன்னும் அரைமணி நேரத்துக்குத் தாங்கும். அங்கே எப்படி…?” என்றான் குறும்புடன்.

படக்கென கண்களைத் திறந்தவள், “சீ!” என்றபடி அவனைத் தள்ளிவிட்டு வெளியே ஓடினாள்.

நலுங்கிய சேலையை நீவியபடி அவள் ஹாலிற்கு வர, நல்லவேளையாக அங்கே யாரும் இல்லை. நிம்மதி பெருமூச்சுடன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். வசந்தாம்மாவின் அறைக்குச் சென்றவள், திகைத்துப் போனாள்.

“என்ன அத்தை நீங்க எங்கே கிளம்பிட்டீங்க?”

“ரெண்டு நாள் உங்க அண்ணி வீட்டுக்குப் போய் இருந்துட்டு வரலாம்னு இருக்கேன். அவளும் ரொம்ப நாளா கூப்பிட்டுட்டே இருந்தா இல்லயா… இப்போ நீ வந்துட்ட. அதனால சூர்யாவைப் பத்திக் கவலை இல்லாம, ஒரு நாலு நாள் இருந்துட்டு வரேன்” என்றார்.

‘அச்சச்சோ! நான்கு நாட்களா…?’ “இரெண்டு நாள் அதுக்குள்ள நாலு நாள் ஆகிடுச்சா…?” அதிர்ச்சியில் விரிந்த விழிகள், அறைக்குள் நுழைந்தவன் மீது தாவியது.

அவனது அர்த்தமான புன்னகையைக் கண்டதும், ‘ஆஹா! இது முன்னாலேயே பிளான் போலயிருக்கே… நாமதான் தெரியாம இருந்திருக்கோம். சாதாரணமாகவே இவனது அட்டகாசம் தாங்காது. இதில் நான்கு நாட்கள் இவனுடன் தனியாக இருந்தால் ஹய்யய்யோ!’ நினைக்கும் போதே அவளுக்குத் தலை சுற்றியது.

“என்னைத் தனியா விட்டுட்டுப் போனா என்ன அர்த்தம்?” சிறுகுழந்தையாகச் சிணுங்கினாள்.

“சூர்யா பார்த்துப்பான்னு அர்த்தம். ரெண்டு நாள் எங்க அம்மா என்னோட இருக்கட்டும்… நீ இங்கே பார்த்துக்கோ. சுந்தரி அக்கா வந்து சமைச்சி கொடுத்துட்டுப் போவாங்க. ஏதாவது வேணும்னா பாரதியோட அம்மாகிட்ட கேட்டுக்கோ. சரியா…”

சுலபமாக அனைத்திற்கும் தீர்வைச் சொன்ன அமுதா, அன்னையின் பொருட்கள் அடங்கிய பையைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.

அவளருகில் வந்த வசந்தா, “நான் வரட்டுமா நிஷாம்மா!” என்று அவளது கன்னத்தை வழித்தவர், “பார்த்துக்கோ சூர்யா…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

தந்தையின் பாசத்தில் சற்று திளைத்தவள், அவரது கலங்கிய விழிகளால் மீண்டும் கவலை கொண்டாள். ஆறுதல் அளித்த கணவனின் தோளணைப்பில் தன்னை மீட்டுக் கொண்டாள்.

கன்யாவிற்கு முத்த மழை பொழிந்தவள், சிறிதுநேரம் சிறு குழந்தையாக மாறிப் போனாள். கிளம்பும் நேரம் அண்ணியும், கணவனும் கண்களால் ஏதோ ஜாடை பேசிக் கொண்டதை கவனித்தவளுக்கு, இதழோரம் புன்னகை அரும்பியது.

காரின் பின் விளக்கு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள், பெருமூச்சுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் செல்வதைப் பார்த்த சூர்யா, பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்தான்.

“அப்புறம்… நீ மூணு வருஷத்துல ப்ரீகேஜி அட்மிஷனுக்காக ஸ்கூல் வாசல்ல காத்துக் கிடக்க என்னோட வாழ்த்துகள்” என்றான் பாரதி.

கேட்டிலிருந்த பூட்டைத் திறந்தபடி, “இப்போ என்னை வாழ்த்துறியா, வயிறெரியா…?” என்றான்.

“எல்லாத்தையும் ஏன்டா சந்தேகமாவே பார்க்கற?”

“அப்போ எதுக்கு இன்னும் பேச்சு கொடுத்துட்டு இங்கேயே நிக்கிற?” என்றான்.

“உனக்கு வேணும்டா… நல்லா வேணும். மனுஷ ஜென்மமா இருந்தா இனி இந்த வீட்டு வாசப்படியையே மிதிக்காத…” வடிவேலுவைப் போல சுட்டுவிரலைத் தனது முகத்திற்கு நேரே நீட்டி, தன்னையே பேசிக் கொண்ட பாரதியை சிரிப்புடன் பார்த்தான் அவன்.

“நட்புங்கறதெல்லாம் அவனவன் வேலையாகற வரைக்கும் தான்டா பாரதி. இருந்தாலும் இத்தனை வருஷ பழக்கத்தை மறக்க முடியலையே…” என்று டி.ஆரைப் போல முகத்தை அஷ்டகோணலாக்கிப் பேச, சூர்யா வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

“டேய் கிளம்புடா. நாளைக்கு மதியானம் மறந்துடாத… லஞ்ச் நமக்கு வெளியில…” மீண்டும் அவனுக்கு நினைவு படுத்தினான்.

“கண்டிப்பாடா…” என்றவன், சூர்யாவின் கையைப் பிடித்து குலுக்கிவிட்டுச் செல்ல, புன்னகையுடனேயே கேட்டைப் பூட்டினான் அவன்.

சமையலறையில் வேலை செய்வது போல நின்றிருந்தவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வீட்டின் கதவையும் பூட்டியவன், விசிலடித்தபடி மாடிக்கு விரைந்தான்.

அவன் கதவை பூட்டும் ஒலி கேட்டதும், குப்பென சொல்லவியலாத ஒரு உணர்வு தன்னைச் சூழ்வதை உணர்ந்தாள் நிஷா.

அத்தனை நேரம் இல்லாத தயக்கமும், ஒருவித பயமும் மனத்தை ஆக்கிரமிக்க தேகத்தில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் சேர்ந்தே உருவானது.

‘சமையலறையில் நிற்பதும், சோஃபாவில் அமர்வதுமாக எத்தனை நேரம் இருப்பது?’ யோசித்துக் கொண்டே நின்றிருந்தவளது போன் இரண்டு முறை ஒலித்து அடங்கியது.

டைனிங் டேபிள் மீதிருந்த போனை எடுத்தவள், அமுதாவின் கையெழுத்துடன் அதனடியில் இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அழைப்பும் அவளிடமிருந்து தான் வந்திருந்தது. படித்து முடித்தவள் புன்னகையுடன் கடிதத்தை மடித்தாள்.

அண்ணியின் சாமர்த்தியத்தை மெச்சிக்கொண்டே கடிதத்தில் குறிப்பிட்டிருந்த படி மைக்ரோவேவ் அவனில் இருந்த பாலை, வெள்ளி சொம்பில் ஊற்றி எடுத்துக் கொண்டு சூர்யாவின் அறையை நோக்கி நடந்தாள்.

கதவின் குமிழைத் திறந்ததுமே கிடைத்த இடைவெளியில் நுழைந்து வந்த ஏசியின் குளிர்ந்த காற்று அவளது முகத்தில் மோத, லேவண்டரின் வாசனை நாசியைத் தாக்கியது.

ஐபாடில் கசிந்து கொண்டிருந்த மெல்லிய கிட்டார் இசை செவிகளை குளிர்விக்க, ஒளிர்ந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் ஒலியோ கண்களை நிறைத்தது. அந்த வெளிச்சம் அவளுக்கு முழுதாக பழகியதும் அறையின் அலங்காரம் மெல்ல புலப்பட, மெய்மறந்து நின்றாள்.

‘ஐ லவ் யூ நிஷா!’ ‘யூ ஆர் மை லவ்’ ‘யூ ஆர் மை லைஃப்’ ‘யூ ஆர் மை சோல்’ (SOUL) என்று எழுதப்பட்ட வண்ண வண்ண இதய வடிவ பலூன்கள் அறையில் ஆங்காங்கே, மிதந்து கொண்டிருந்தன.

ரம்யமான சூழ்நிலையின் தாக்கத்தில் எழுந்த பிரமிப்பில் இமைகள் விரிய, சந்தோஷத்தில் இதயம் நிறைய, கண்கள் அதை மறைக்காமல் வெளிப்படுத்தியது.

சமைந்த சிலையாக அவள் நின்றிருக்க, அவனது கரங்கள் அவளது இடுப்பை பின்னாலிருந்து வளைத்தன. கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் வாசத்தை முகர்ந்தபடி, அவளது தோள் வளைவில் முகம் புதைத்தவன், கையிலிருந்த பால் சொம்பை வாங்கி டேபிள் மீது வைத்தான்.

குளிர்ந்திருந்த அறையின் சீதோஷணத்திற்கு, வெற்றிடையில் தவழ்ந்த அவனது கைகள் மூலமாக கிடைத்த கதகதப்பில், அவளது தேகம் சிலிர்த்தது.

ஒளிர்ந்து கொண்டிருந்த மெழுகைப் போல அவளும், அவனது காதலில் உருகி கரைந்து கொண்டிருந்தாள்.

பூப்போல அவளை அள்ளி எடுத்தவன், மெல்ல படுக்கையில் இருத்த, அவன் முகத்தைப் பார்க்கும் துணிவில்லாமல் மறுபுறமாக திரும்பிப் படுத்து, தனது முகத்தை மூடிக்கொண்டாள்.

நேரம் மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. இருவருக்குமே அந்த மௌன பாஷையின் ஆனந்தம் தேவைபட்டது போலும்.

ஏசியின் மெல்லிய உறுமலும், அதை அடக்கி ஆள்வதைப் போல அவர்களது நேசத்தின் அடையாளமாக ஒலித்த இசையும் மட்டுமே அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.

இருவரது மனத்திலும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் இல்லை. தயக்கமும், தடுமாற்றமும் இன்னமும் மிச்சமிருக்கத் தான் செய்தன.

அவ்வப்போது இருவருக்குள்ளும் சிறுசிறு தொடுகைகள் நிகழ்ந்த போதும், அதை முழுதாகக் கடக்க அவர்களுக்கு இன்னும் அவகாசம் தேவைப்பட்டது.

“நிஷா…!”

“ம்…”

“ஆர் யூ கம்ஃபர்டபுள் வித் மீ…”

“இதென்ன கேள்வி?”

“உன் வாயால கேட்டுக்கணும். சொல்லேன்…”

“இதுக்கு மேலேயும் ஆமாம்னு சொல்லணுமா…”

அவளது பதிலையே கேள்வியாகக் கேட்டவளை எண்ணி சிரித்துக் கொண்டான்.

“எதையுமே நேரா சொல்லமாட்டியா பாப்பா…” என்றவன் பாப்பாவில் அழுத்தத்தைக் கூட்டிக் கேலியாகக் கூறினான்.

சுண்டெலியாக சுருண்டிருந்தவள் தனது வெட்கத்தையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, வீறு கொண்ட வேங்கையாக வெகுண்டெழுந்தாள்.

“என்னை அப்படிக் கூப்பிடாதீங்கன்னு சொன்..னேன்..ல..அ”

ஆவேசமாகக் குரல் கொடுத்தபடித் திரும்பியவள், காற்றுப் போன பலூனைப் போல சட்டென அடங்கிப் போனாள்.

மேற்சட்டை இல்லாமல், உடலை இறுக்கிப் பிடித்த பனியனுடன் அவனைக் கண்டவளுக்குப் பேச நா எழவில்லை.

“ம்” என்று அவன் புருவத்தை உயர்த்த, நாணத்துடன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன சத்தத்தையே காணோம்…?” என்றவன் அவளது இடையில் கிச்சுகிச்சு மூட்ட, வேகமாக அவனது கரத்தைத் தள்ளிவிட்டாள்.

“தொடாம பேசவே தெரியாதா உங்களுக்கு…” முகத்தில் தான் சிடுசிடுப்பு. வார்த்தைகள் இன்னும் தந்தியடிக்கத் தான் செய்தது.

“என்னது…? நீ என் பொண்டாட்டிடீ!”

“அதுக்கு…” படபடக்கும் இமைகளை உயர்த்தி மையலாக அவனைப் பார்த்தாள்.

“உன்னைப் பேசவிட்டது தான் தப்பா போச்சு…” என்று எட்டி அவளது கழுத்தை வளைக்க முயல, லாவகமாக அவனிடமிருந்து நழுவி விலகினாள்.

“ஹப்பா! இன்னும் இந்த ஓடிப் பிடிச்சி விளையாடுறதை நீ விடவேயில்லயா… இன்னைக்கு நீ மாட்டின…” என்றபடி எழுந்தான்.

இருப்பது ஒரு வழி இதில் எந்தப் பக்கம் செல்வதென புரியாமல் நிஷா தடுமாறினாள்.

அதற்குள் அவன் அருகில் நெருங்கியிருக்க, கட்டில் மீது ஏறி மறுபுறமாக ஓட முயன்றவளது காலைப் பிடித்து இழுக்க, மெத்தையின் விழுந்தாள்.

அவளை நகரவிடாமல் பிடித்தவன், “இப்ப என்னடி பண்ணுவ என் பொண்டாட்டி!” என்றான்.

“வேற என்ன பண்ணுவேன்…? அப்படியே உங்ககிட்ட சரண்டர் ஆகிடுவேன்.”

“எப்படி?”

“பாட்டு பாடித்தான்…”

“பாட்டா...” புரியாமல் பார்த்தாள்.

“நீங்க கிட்டார் வாசிக்கும் போது நாங்க பாடக்கூடாதா. பாடுவேன்... இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய்…”

“ஏய்! இதென்ன இத்தனைப் பழைய பாட்டு…?”

“பழசு, புதுசா முக்கியம்… டிரெண்ட் தான் முக்கியம்.”

அவன் புரியாமல் விழித்தான்.

“உங்களுக்கு லவ் பண்ண தெரிஞ்ச அளவுக்கு வேற ஒண்ணுமே தெரியல” என்றாள்.

“லவ்வே பண்ணத் தெரியுது. இதுக்கு மேல என்ன தெரியணும்?”

“ஒரு கதை படிக்கிறோம்னா, அந்தக் கதையோட தலைப்பு கதைல நாலு இடத்திலயாவது வரணும். இல்லனா, பாட்டாவாவது வரணும். நம்ம கதைல, இன்னும் அந்தச் சிச்சுவேஷன் சாங் வரவேயில்லயே… அதான், இங்கே பாடிட்டேன்…” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தாள்.

வாய்விட்டுச் சிரித்தவனை, விழிகள் நிறைய பார்த்தாள்.

“ஐ லவ் யூ!” நிறுத்தி நிதானமாகச் சொன்னவளின் படபடத்த இமைகள் அவனிடம் கவிதை பேச, அவளது கயல் விழிகளில் தெரிந்த காதலில் அவன் மூழ்கிப் போனான்.

காதலெனும் கடலில் இருவரும் மூழ்க, அங்கே புதிய அத்தியாயம் ஒன்று உருவாக ஆரம்பித்தது.