Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அன்றைய பாடல்கள் | SudhaRaviNovels

அன்றைய பாடல்கள்

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
படம் : உல்லாச பறவைகள்
பாடல் : தெய்வீக ராகம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: தசரதன்
பாடியவர்கள் : ஜென்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்

செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு
செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்
பாராட்ட வா…சீராட்ட வா..
நீ நீந்த வா என்னோடு..
மோகம் தீருமே…

ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்

தழுவாத தேகம் ஒன்று
தணியாத மோகம் கொண்டு
தாலாட்ட தென்றல் உண்டு
தாளாத ஆசை உண்டு..
பூ மஞ்சமும்……தேன் கிண்ணமும்
நீ தேடிவா…ஒரே ராகம்
பாடி ஆடுவோம் வா…

ம் ஹும்…ஓ ஹோ……..
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் பாடும்
ம் ஹும்…ஓ ஹோ……..
ம் ஹும்…ஓ ஹோ……..

 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
படம் : ஜானி
பாடல் : என் வானிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள் : ஜென்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என் வானிலே ஒரே வென்னிலா
என் வானிலே ஒரே வென்னிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்

என் வானிலே ஒரே வென்னிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீயாட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்தைகள் தேவையா அ

என் வானிலே ஒரே வென்னிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா அ

என் வானிலே ஒரே வென்னிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்

என் வானிலே ஒரே வென்னிலா
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
படம் : ஜானி
பாடல் : காற்றில் எந்தன் கீதம்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடதோ
கண்கள் எங்கும் நெஞ்சின் பாவம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே

நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
அலைபோல நினைவாக…
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
படம் : நானே ராஜா நானே மந்திரி
பாடல் : மயங்கினேன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஜெயசந்திரன், பி.சுசீலா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

உறக்கம் இல்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கம் இல்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடை காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம்
கொதித்திருக்கும் கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலமையோ
வந்த கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ?
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே