Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript அத்தியாயம் 9: | SudhaRaviNovels

அத்தியாயம் 9:

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
நேற்று தனது நேரங்களை காதலிக்க ஒதுக்கி விட்டதால், அடுத்த நாள் காலையில் பொறுப்பானப் பிள்ளையாக மாறி சீக்கிரமே பள்ளிக்குத் தயாராகி வெளியே வந்த போது அழைத்தான்.

தன் அலைபேசியின் இனிய கானத்தில் எடுத்து பார்த்தவள், அதில் ஒளிர்ந்த ஆரிஃப் பெயரை கண்டதும், தன்னையுமறியமால் அரும்பிய புன்னகையுடன், தலை சரித்து காதுக்கும் கழுத்துக்கும் இடையில் சொருகி விட்டு கார் கதவை திறந்து,

"சொல்லுங்க சர். என்ன காலையிலேயே என் ஞாபகம் வந்துருக்கு" என்று கேட்டு விட்டு, காரின் உள்ளே அமர்ந்தாள்.

"என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா ஹர்ஷி?"

அவன் மறுமுனையில் கேட்டதும், "ஆரிஃப்ஃப்ஃப்" என்று அவன் பெயரை ராகம் போட்டு சொன்னவள், அவளையே பார்த்தபடி வாசலில் நின்றிருந்த வைதேகியிடம், "நீயும் வர்ரீயா ம்மா?" என்றாள்.

"சந்துபொந்துலயும், ஹை-வேஸ்ல மாதிரி போற உன் கூடவா?" என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டவரிடம்,

"நீயும், உன் பிஎம்டபிள்யூவும் மாட்டு வண்டிக்கு வழி விட்டு லஞ்ச்க்குள்ள வாங்க" என்று நக்கலடித்து காரின் ஸ்டியரிங்கை ஒற்றை கையால் வளைத்தவள், அலைபேசியில் ஆரிஃப்ஃபிடம்,

"ஆரிஃப்ஃப்ஃப், நீ என்ட்ட ப்ரப்போஸ் பண்ணி 36 மணி நேரம் ஆச்சு. அந்த ப்ரபோஸல நான் அக்சப்ட் பண்ணி 22 மணிநேரம் ஆச்சு. இப்போ என்ன ஃபர்ஸ்ட்ல இருந்து ஆரம்பிக்கிற?"

"இந்த 36, 22 ஹவர்ஸ் கணக்கு எல்லாம் வேணாம். இப்போ 12 நிமிஷத்துல என்னை மேரேஜ் பண்ணிக்கிறியா?" என்று தன் கோரிக்கையை அழுத்தமாக ஹர்ஷிதாவிடம் வைத்தான்.

தன் வீட்டு காம்பவுண்டின் கேட்டை தாண்டி வெளியேச் செல்லாமல், மீண்டும் ஸ்டியரிங்கை வளைத்து வீட்டை நோக்கிச் செலுத்தினாள். திரும்பவும் எதற்கு உள்ளே வருகிறாள் என்று குழப்பத்துடன் நின்றிருந்த வைதேகியின் அருகில் காரை நிறுத்தி, கார் கண்ணாடியை இறக்கியவள், தன் அலைபேசியை காட்டி,

"அம்மா! உன் மருமகன் லைன்ல. என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறியா கேட்கிறார். 1 ஹவர் பர்மிஷன் கொடுக்கிறியா? கல்யாணம் முடிச்சிட்டு வரேன்" என்று முகம் முழுவதும் குறும்புகள் நர்த்தனமாட கேட்டாள் ஹர்ஷிதா.

வைதேகி கீழே குனிந்து எதையோ தேடி விட்டு,

"இல்ல இங்கே விட்டிருந்த பாத்ரூம் ஸ்லிப்பர காணோம்" என்று சீரியஸாக சொல்ல,

"ஹாஹா" என்று சிரித்துவிட்டு, அன்னையிடமிருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஆக்ஸ்லேட்டரை மிதித்து காரை சூறாவளியாய் சுழற்றினாள்.

"ஹர்ஷி!!!" என்று அழுத்தமான உச்சரிப்புடன், மறுமுனையில் ஆரிஃப் தன் இருப்பை அவளுக்கு காட்டவும்,

"அம்மா காலையிலிருந்து ரொம்ப கூலா இருந்தாங்க. அதான் போய் டென்சன் பண்ணி விட்டு வந்தேன்"

"ஹர்ஷி, எல்லா ஃபார்மாலிட்டீஸ்ம் முடிச்சாச்சு. நீ வந்து சைன் பண்ணா போதும்" என்றதும், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு,

“ஹே என்னாச்சு உனக்கு? நேத்து ஏதோ விளையாட்டா பேசுற நினைத்தேன்”

“நீதானே நடக்குமான்னு கேட்ட? அவங்க மேரேஜ் பண்ணி வைக்க 1% கூட சான்ஸ் இல்ல”

“தர்ணா பண்ணிடலாம்”

“வாழ்நாள் முழுசும் இப்படியே இருந்தாலும் சரி, ஹிந்து பெண்ணை எல்லாம் மருமகளா ஏத்துக்கவே மாட்டாங்க என் அம்மா”

“இதெல்லாம் தெரிந்தே ஏன் லவ் பண்ண ஆரிஃப்?” சற்று மனம் கனத்து தான் கேட்டாள்.

“தெரியலயே. ஏன் எனக்கு ஹர்ஷிய இவ்ளோ பிடிக்குதுன்னு தெரியலையே. ஒருவேளை நமக்கு வர பொண்ணு இப்படிதான் இருக்கணும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமே. அப்படி இருக்கியோ? ஆமா! உனக்கு ஏன் என்னை பிடிச்சது?”

“திட்ட மாட்டீங்களே!”

“நீ பண்ற சேட்டைல திட்டறதா?” என்று சிரித்தவனிடம்,

“எங்க ஸ்கூல்ல தான் நான் படிச்சேன். இங்கே இருக்கவங்க செல்லம் கொடுத்தோ என்னவோ எனக்கு படிப்பே வரல. அதனால் படிப்பால முன்னேறி பெரிய பதவியில இருக்க ஒருத்தருக்கு என்னை பிடிக்குதுன்னு சொல்லும் போது எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா?”

“அடிப்பாவி!! அப்படீன்னா நான் ஐஏஎஸ் முடிக்கலன்னா திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டியா?” என்றான் ஆதங்கத்துடன்..

“உங்களுக்கு மட்டும் என்னவாம். பொண்ணு அழகை தானே முதல்ல பார்க்கிறீங்க அப்படிதான். அதுக்கு அப்புறம் ஸ்ட்ராங்கா மாற தான் உங்க கேரக்டர் லாம் தேவைப்படுது”

மறுபுறத்தில் அவன் அமைதியாகவே இருக்க,

“கோபமா?” என்றாள் தயக்கத்துடன்.

“உன் நேர்மை பிடிச்சிருக்கே” என்று சிரித்தவன்,

“லைஃப் ஒரு டைம் தான் இன்னொரு ஜென்ம்ம் இருக்கா. அதில் எப்படியிருப்போம். இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. நம்ம கண் முன்னாடி இருக்க லைஃபை நல்லா வாழ்ந்துட்டு போயிடணும். இப்போ என் ஹர்ஷியை மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு தோணுது” என்று சொன்னவனின் பேச்சில் வெளிப்பட்ட ஆழமான அன்பில், அவள் கண்களில் இருந்தும் ஒரு துளி வெளி வந்து அவள் கைகளில் பட்டு தெறித்தது.

இந்த உலகில் வைதேகிக்கு அடுத்து தன்னை நேசிக்கும் ஒரு ஜீவன் என்ற பெருமிதமும்.
 
Last edited:

kohila

Moderator
Staff member
Mar 26, 2018
114
32
63
நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்திருந்தாள். அவனின் அழைப்பு வந்தவுடன் சண்டையிடுவதற்காக தான். நேரம் சென்றதே தவிர அவன் அழைக்கவே இல்லை. நேரம் ஆக, ஆக, ‘அவன் ஏன் பேசவில்லை?’ என்ற அலைப்புறுதல் இருந்ததே தவிர, அவளுடைய கோபம் எங்கோ சென்று விட, அவளே அழைத்தாள்.

“ஹர்ஷி” என்ற அவனது செல்ல அழைப்பில் கொஞ்சம் ஒட்டி கொண்டிருந்த கோபமும் பறந்து விட,

“ஏன் கால் பண்ணல? சரி. நான் பண்ணது தப்புதான் சாரி” என்று இவள் சொல்ல,

“என்ன சாரியா?” என்று சிரித்தவன்,

“என் ஹர்ஷி சாரி கேட்கிற அளவுக்கு எந்த தப்பும் பண்ணல. முக்கியமான வேலைடா. நீ தூங்கு” என்று கைப்பேசியை அணைத்தும் விட்டான் .

இரவு நடந்ததை எண்ணி, சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாக இருந்தவள்,

“நேத்து நைட்டே ப்ளான் பண்ணிட்டீங்க” என்றாள்.

“ஹர்ஷி!!! ஆஃபீஸ்ல எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சு.. சோசியல் மீடியா போனால் போதும் ஸ்பரட் ஆகிடும். நாம் அதுக்கு முன்னாடி ரெஜிஸ்டர் பண்ணிடலாம்”

"கல்யாணம்ன்னா, பொறாமைபடுறவங்க, நல்ல மனசு உள்ளவங்க எல்லோரும் வந்து அட்சதை தூவி, மத்தவங்களுக்கு தெரியாமல் நம்ம இரண்டு பேரும் கைகளாலும், கண்களாலும் பேசி, வைத்ஸ கண்கலங்க வச்சு, நீ என் கழுத்தில் தாலி கட்டனும் ஆரிஃப். நம்ம விஷயத்துல இந்த ஆசை கொஞ்சம் ஓவர்தான். நீ எனக்கு வேணுன்றதால, சரி ஓகேன்னு இந்த ஆசையெல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு, உங்க டைப் நிக்காஹ்வுக்கும் ரெடி. பட் இந்த மாதிரி சைன் மட்டும் போட்டு நம்ம மேரேஜ் நடக்கக்கூடாது" என்றாள்.

மறுமுனையில் சிரித்தவன், "நிக்காஹ்ன்னா என்னன்னு முழுசா தெரியுமா உனக்கு? எனக்கு மட்டும் இந்த ஆசையெல்லாம் இல்லையா ஹர்ஷி? எல்லாமே என்னை மீறி நடக்குதுடா. அப்படியே உன் காரை அடுத்து வர லெஃப்ட்ல விடு" என்று தன் காரின் இருக்கையில் சாய்ந்து கண் மூடினான்.



இன்று இரவு 9 மணி.....


மூவருக்குமான தேநீரைக் கலந்து வந்த அஸ்வின், வாசலில் நின்றிருந்த முருகவேலிடம் சென்று ஒரு கப்பை கொடுத்து விட்டு, இன்னொரு கப்பை ஹர்ஷிதாவிடம் நீட்ட, அவள் மறுக்கவும் தோளை குலுக்கிவிட்டு, மேலும் வற்புறுத்தாமல், தான் பருக ஆரம்பித்தான்.

"உங்களுக்கும், ஆரிஃப் சார்க்கும் மேரேஜ் ஆகிடுச்சா?" என்ற கேள்வி அவளை எரிச்சல்படுத்த, பதிலளிக்காமல், "உங்களால் ஹெல்ப் பண்ண முடியுமா? முடியாதா?" என்றாள்.

அப்போது வாசலில் ஏதோ சத்தம் கேட்க, என்னவென்று பார்க்க எழுந்த அஸ்வின் அப்படியே அட்டேன்ஷன் பொஸிஸனிலேயே நிற்க, ஹர்ஷிதாவும் யாரென்று திரும்பி பார்க்க, மங்கலான ஒளியில் டார்க்ப்ளூ ஜீனும், லைட் பளூ காட்டன் சட்டையும் கண்ணில் பட, யாரோ என்று திரும்பி விட்டவள்,

மீண்டும் என்ன நினைத்தாளோ, "ஆரிஃப்" என்று திரும்பினாள்.

"இந்த மழையில அப்படி என்ன பேச போறீங்க முருகவேல்?" என்ற தீர்க்கமான பார்வை அவருக்கும் புதிது. ஒருநாள் கூட பெயர் சொல்லி அழைக்காதவன், இன்று அழைத்த விதத்திலேயே தன் தவறும் புரிந்து, அமைதியாக நின்றிருந்தார்.

அதற்குள் "ஆரிஃப்" என்று அழைத்தபடி ஹர்ஷிதாவும் அவன் அருகில் வந்துவிட, அவளை ஒரு கையால் அணைத்தாற் போல் வளைத்து பிடித்துக் கொண்டவன், இன்னும் முருகவேலை முறைத்துக் கொண்டிருந்தான்.

பின்னால் நின்றிருந்த அஸ்வினைப் பார்த்ததும் சட்டென முகம் மாறி புன்னகைத்தவன், "தேங்க்ஸ் அஸ்வின்" என்று அவனிடம் கைக்குலுக்கினான். ஹர்ஷிதாவின் மேல் முல்லைக் கொடிப் போல் படர்ந்திருந்த ஒரு கையை விலக்காமலே தான்.